Monday, March 16, 2020

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி போன்ற மாநில சட்டமன்றத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அந்த வகையில் டில்லி சட்டமன்றத்தில் நேற்று தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா வைரஸ் பரபரப்பு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் இதற்காக டில்லி சட்டமன்றத்தின் சிறப்பு ஒரு நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது பேசிய முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் மத்திய அரசு இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது அவர் எனக்கு, எனது மனைவி மற்றும் அமைச்சரவை சகாக்களுக்கும் பிறந்தநாள் சான்றிதழ் இல்லை. எங்களை மத்திய அரசு தடுப்புக்காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்குமா? மத்திய அமைச்சர்கள் தங்களது பிறப்பு சான்றிதழை காட்ட முன்வருவார்களா? என கேள்வி எழுப்பினார்.
பின்னர் சபையில் உள்ள 70 உறுப்பினர்களிடம் உங்களிடம் பிறப்பு சான்றிதழ் உள்ளதா? என கெஜ்ரிவால் கேட்டார். அதற்கு 9 பேர் மட்டுமே பிறப்பு சான்றிதழ் இருப்பதாக கூறினர். 61 பேர் பிறப்பு சான்றிதழ் இல்லை என தெரிவித்தனர். அவர்களை மத்திய அரசு தடுப்பு காவல் நிலையத்துக்கு அனுப்புமா? என்றார்.

முகநூல் பயன்பாட்டைக் குறைத்தால் உடல் நலம் கூடும்: ஆய்வில் தகவல்


முகநூல் பயன்பாட்டைக் குறைப்பவர் களுக்கு, உடல் நலனை மேம் படுத்துவதற்கான பழக்க வழக் கங்கள் அதிகரிக்கும் என்று ஜெர்மனியில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட் டின் பாஷும் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்தவர்கள் உள் ளிட்ட ஆய்வாளர்கள் மேற் கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாவது:
முகநூலைப் பயன்படுத்தி வரும் 286 பேரைக் கொண்டு, அந்த சமூக வலைதளப் பயன் பாட்டுக்கும், உடல் நலனுக் கும் இடையிலான தொடர்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
அந்த ஆய்வுக்கு உள்படுத் தப்பட்டவர்கள் இரண்டு பிரி வுகளாகப் பிரிக்கப்பட்டனர். அவர்களில் 146 பேர் வழக்க மான அளவில் முகநூலைப் பயன்படுத்தினர்; 140 பேர் இரண்டு வாரங்களுக்கு தின மும் 20 நிமிடங்கள் மட்டுமே முகநூலைப் பயன்படுத்தினர்.
அந்த ஆய்வு தொடங்குவ தற்கு முன்னரும் பிறகு ஒரு வாரம் கழித்தும் அதனைத் தொடர்ந்து சோதனையின் முடிவிலும் சோதனையில் உள்படுத்தப்பட்டவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
அவர்களது முகநூல் பயன்பாடு, உடல் நலனைப் பேணுவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக் கைகள் உள்ளிட்ட விவரங் கள் சேகரிப்பட்டன.
இதன் மூலம், முகநூலை குறைவாகப் பயன்படுத்துபவர் கள், புகைப்பிடித்தலைக் குறைத் தல், உடல் நலனை அதிகரிக் கும் நடவடிக்கைகளில் ஈடு படுல் போன்றவற்றை அதிக ரித்தனர். ஆனால், முகநூலை வழக்கம் போல் பயன்படுத்து பவர்கள், சுறுசுறுப்பாக இயங்குவதை முடிந்த அளவு தவிர்த்து வந்தனர். முக நூலைப் பயன்படுத்தும் பிறரு டன் தங்களை ஒப்பிட்டுக் கொள்ளும் அவர்கள், அதன் காரணமாக பொறாமை, மன உளைச்சல் ஆகியவற்றையும் அனுபவித்தனர். ஆனால், முகநூல் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டவர்க ளுக்கு இதுபோன்ற உளவியல் ரீதியிலான பிரச்னைகள் குறைந்து மன நலனும் அதிக ரித்தது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன ஆச்சு தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு?

தமிழ்நாட்டில் மேலும் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்களாம்

கூறுகிறார் மத்திய அமைச்சர்
 
தமிழகஅரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கும் நோக்கில் டெல்டா மாவட்டங்களை வேளாண் மண் டலமாக மாற்றி சட்டம் இயற்றியுள் ளது. ஆனால், தமிழகத்தில் மேலும்  3 ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல் படுத்தப்பட இருப்பதாக நாடாளுமன் றத்தில் மத்திய அமைச் சர் கூறி உள்ளார். இது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத்தின் நிதிநிலைக் கூட் டத்தொடரின் 2-ஆவது அமர்வு நடை பெற்று வருகிறது. கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் நிறை வேற்றப்படும் ஹைட்ரோ கார்பன் திட் டங்கள் குறித்து  கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்  தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசின் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ஒரு திட் டமும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத் திற்கு 2 திட்டங்களும் வழங்கப்பட் டுள்ளது.
அதன்படி,  தமிழ்நாடு, புதுவை யில் 2337 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும், ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் திட்டங்களை நிறை வேற்றிக் கொள் ளலாம். இதில் இந்தியன் ஆயில் கார்ப் பரேஷன் நிறு வனம் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் 477 சதுர கிலோ மீட்டரிலும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தனது 2 திட்டங்கள் மூலமாக கட லூர், நாகப்பட்டினம், காரைக்கால், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய வற்றிலும்  நிறைவேற்றிக் கொள்ள லாம்.
இதில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் 1259 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் திட்டங்களை நிறைவேற்ற அனுமதி அளிக்கப்பட் டுள்ளது என்று தெரிவித்தார் மேலும் இதுதொடர்பாக தமிழக அரசிற்கு கடிதம் எழுதப்பட்டுள் ளது, தமிழக அரசு விரைவில் முடிவெ டுக்கும் என்று தெரிவித்தார்.
தமிழக அரசு பிப்ரவரி 20-ஆம் தேதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங் களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, அதற்கான சட்டமும் தாக்கல் செய்யப்பட்டது, அதன் படி இந்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஹைட்ரோகார்பன், மீத் தேன் உள்ளிட்ட இயற்கை எரி வாயு களுக்கான ஆய்வு, பிரித் தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.
துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. ஒருங் கிணைந்த எஃகு ஆலை, இலகு இரும்பு உருக்காலை, தாமிர உருக் காலை, அலுமினிய உருக் காலை களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவையும் இப் பகுதிகளில் தொடங்க அனுமதி கிடை யாது. சட்டத்தின் இரண்டாவது பட்டி யலில் இடம் பெற்றிருக்கும் இந்தத் தடை செய்யப் பட்ட தொழில்களின் பட்டியலில் எதையாவது சேர்க்கவோ, நீக்கவோ அரசால் முடியும்.
இந்த சட்டத்தின் கீழ் பாதுகாக் கப்படும் பகுதிகளில் மேலே சொன்ன தொழில்களைத் துவங்கி நடத்தினால் அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், குறைந்த பட்சமாக 6 மாதங்களும் சிறைத் தண்டனையும், 50 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். என்று கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு தமி ழகத்தில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவ தாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘யெஸ்’ வங்கி மீதான கட்டுப்பாடுகள் மார்ச் 18-ஆம் தேதி நீக்கப்படும்

மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
 யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் மார்ச் 18ஆ-ம் தேதி மாலை 6 மணிக்கு நீக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
'யெஸ்' வங்கியின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள ரிசர்வ் வங்கி, அதை மீட்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் யெஸ் வங்கி மீட்பு திட்டத்தில், பாரத ஸ்டேட் வங்கி ஒரு பங்கு மதிப்பு 10 வீதம் ரூ.725 கோடி பங்குகளை ரூ.7,250 கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளது. இந்த நிதி திரட்டலுக்கு யெஸ் வங்கி 1,200 முதல் 1,300 கோடி பங்குகளை வெளியிட்டுள்ளது.
இதில், பாரத ஸ்டேட் வங்கி உட்பட 7 முதலீட்டாளர்கள், யெஸ் வங்கியில் மொத்தம் ரூ.11,750 கோடி முதலீடு செய்ய உள்ளனர். அய்சி அய்சிஅய் மற்றும் எச்டிஎப்சி ஆகி யவை தலா ரூ.1,000 கோடி முதலீடு செய்து 6 சதவீத பங்குகளை வாங்க உள்ளனர்.
ஆக்சிஸ் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, மிகப்பெரிய பங்கு முதலீட்டா ளர்களான ராதாகிருஷ்ணன் தமானி, ராகேஷ் ஜூன்ஜூன் வாலா மற்றும் அஜித் பிரேம்ஜி ஆகியோர் தலா ரூ.500 கோடி முதலீடு செய்து 3 சதவீத பங்குகளை வாங்க உள்ளனர்.  இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘யெஸ் வங்கியில் ஸ்டேட் பாங்க் மற் றும் சில முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கி வகுத்த திட்டத்தின் அடிப் படையில் முதலீடு செய்ய முன்வந் துள்ளனர்.
யெஸ் வங்கியின் வாடிக்கையா ளர்கள் வைப்புத் தொகை மற்றும் அவர்களது பணத்திற்கு பாதுகாப்பு அளிக்கவும் வங்கி மீண்டும் சிறப்பாக செயல்படவும் ரிசர்வ் வங்கி துரித மாக நடவடிக்கை எடுத்தது. இதன் யெஸ் வங்கி சீரமைப்பு திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது’’ என்றார்.
இந்நிலையில் யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் மார்ச் 18ஆ-ம் தேதி மாலை 6 மணிக்கு நீக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
எஸ்பிஅய் வங்கி சார்பில் குறைந்தபட்சம் 3 உறுப்பினர்களை கொண்ட நிர்வாகக் குழுவும் 7 நாளில்  பதவி யேற்கும். தற்போதைய நிர்வாகி பிரஷாந்த் குமார் சிஇஓ -ஆக செயல் படுவார் எனவும் மத்திய நிதிய மைச்சகம் அறிவித்துள்ளது.

சமூகநீதி மீது மற்றொரு பேரிடி!

மாணவர்கள் ‘ஸ்காலர்ஷிப்' பெறுவதற்கும் நுழைவுத் தேர்வு தேவையாம்!
தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பயில நிதி உதவி பெற்று வந்த ‘ஸ்காலர்ஷிப்' திட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மாற்றிட இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அளவும் குறைந்துகொண்டே வருவதற்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெரும் எதிர்ப்பினைக் காட்டிவரும் வேளையில், மேலும் நிதி உதவி கிடைக்கக்கூடிய வாய்ப் பினைக் குறைக்கின்ற வகையிலே, உயர்ஜாதி யினரும் ‘ஸ்காலர்ஷிப்' பெறுகின்ற வகையில் திட்டம் மாற்றப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்படும் இந்த திட்டத்திற் கான நிதி ஒதுக்கீட்டை இதுநாள் வரை மத்திய அரசும், மாநில அரசுகளும் செய்து வந்தன. மத்திய அரசு அளித்துவந்த நிதி அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டு, மாநில அரசின் நிதிப் பளு அதிகமாகிக் கொண்டுடே வருகிறது. நிதிப் பளு என்று காரணங்கூறி, மாநில அரசுகள் திட்டத்தின் மூலம் பயன்பெறுவோர் எண் ணிக்கையையும், பெறும் நிதி அளவையும் குறைத்துக்கொண்டு வரும் சூழல்களும் நிலவி வருகின்றன.
நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்ட மத்திய அரசு, ‘‘குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழிபறித்த கதையாக'', நிதி உதவித் திட்டத்தை ‘‘பிரதம மந்திரி இளைஞர் கல்வி நிதி உதவித் திட்டம்'' (PM - YASASVI) என்பதாக மாற்றியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், உயர்ஜாதி மாணவர்களும் ‘ஸ்காலர்ஷிப்' பெற்றிட முடியும் என்பதாக அறிவிப்புகள் வந்துள்ளன.
 
ஸ்காலர்ஷிப் பெறுவதற்குத்

தகுதி தேர்வாம்!
நிதி உதவி என்பதே ஒடுக்கப்பட்ட மாண வர்களுக்கு - ஆண்டாண்டு காலம் கல்வி மறுக்கப்பட்டு வந்தவர்களுக்கு என்பதுதான் திட்டத்தின் அடிப்படை நோக்கம். அந்த நோக்கத்தில்  பயன்பெறும் மாணவர்களின் குடும்ப வருமானத்தைப் பொறுத்த அளவில் வரம்பு விதிக்கப்பட்டு (ஆண்டு வருமானம் முறையே ரூ.1.5 லட்சம் அல்லது ரூ.2.5 லட்சம் வரம்பு)  ‘ஸ்கலர்ஷிப்' வழங்கப்பட்டு வந்தது. இந்த முறை அடியோடு நீக்கப்பட்டு, ‘ஸ்காலர்ஷிப்' பெறுவதற்கு தகுதித் தேர்வு என்ற பெயரில் ‘நுழைவுத் தேர்வு' நடத்தப்படுமாம். உயர்ஜாதிப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் நுழைவுத் தேர்வு எழுதிடலாமாம். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கே ‘ஸ்காலர்ஷிப்' கிடைத்திடும் வகையில் கல்வி நிதி உதவித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இதுகாறும் வழங்கப்பட்ட நிதி உதவியானது - பராமரிப்புச் செலவு, திருப்பி அளிக்கப்படாத கட்டாய கல்விக் கட்டணம்,  அஞ்சல் வழிக் கல்வி பெறுவதற்கான புத்தகச் செலவு என பல வகையிலும் பயன் அளித்தது. இதன்மூலம் தனியார் பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம்பெற்று பயிலும் ஒடுக்கப்பட்ட மாணவர் அதிகபட்சமாக ஓர் ஆண்டுக்கு ரூ.87,000/- என்ற அளவில் கல்வி நிதி உதவி பெற முடிந்தது.
இனிவர இருக்கின்ற உயர்ஜாதி மாணவர் களுக்கும் கல்வி நிதி உதவி வழங்கப்படும் திட்டத்தில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.30,000/- மட்டுமே வழங்கிடும் வகையில், நிதி உதவி வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய திட்டத்தின்கீழ் மத்திய அரசு, மாநில அரசு ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய நிதி ஒதுக்கீடு அளவுபற்றிய குறிப்பு எதுவும் வெளிவரவில்லை. கடந்த கால நிதி ஒதுக் கீட்டால் மாநிலங்களின் நிதிப்பளு அதிகரித்து பாதிக்கப்படக் கூடிய சூழல்கள்தான் உரு வாகின. சில மாநில அரசுகள் சமூகநீதி அடிப் படையில் நிதிப் பளு கூடினாலும், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பலன் பெறுகிறார்கள். அவர்களின் உயர்வு கருதி செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களும் இனி முடக்கப்படும்; முடிவு பெறும்.
உயர்கல்வி பெறுவதற்கு, உயர்ஜாதி மாண வர்களும் நிதி உதவி பெறுவதற்கு உருவாக் கப்பட்டுள்ள பா.ஜ. அரசின் புதிய கல்வி நிதித்திட்டம் மாநில அரசின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையில்தான் அமையும் என்பது உறுதியாகத் தெரிகிறது என சமூகநீதியில் அக்கறை உள்ளவர்கள், அமைப்புகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.
புதிய கல்விக் கொள்கை, உயர்ஜாதியி னருக்கும் கல்வியில், வேலை வாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என இதுவரை அரசமைப்புச் சட்டம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதி உரிமைகளை படிப்படியாகப் பறித்துக்கொண்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசு, சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ‘பிரதம மந்திரி இளைஞர் கல்வி நிதி உதவி' திட்டம், ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பினை உருவாக்கிடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Saturday, March 14, 2020

8 மாநிலங்களுக்கான காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 8 மாநிலங்களில் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்களை அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்து உள்ளார். இது தொடர் பான செய்திக் குறிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் கே.டி.எஸ். துல்சி, புலே தேவி நேதம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஷசாதா அன்வர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் திக் விஜய் சிங், பூல் சிங் பரியா ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்குவர் என்று கூறப்பட்டுள்ளது. மகாராட்டிராவில் ராஜிவ் சடவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேகாலயா மாநிலத்தில் கென்னடி கொர்னிலியஸ் கேஹியம் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநி லத்தில் கே.சி. வேணுகோபால், நீரஜ் டாங்கி ஆகிய இருவரும் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக் கப்பட்டு உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் ஷக்திசின்ங் கோஹில், பாரத்சின்ங் சோலங்கி ஆகியோர் வேட் பாளர்களாக களம் இறங்க உள்ளனர். அரியானாவில் தீபந்தர் சிங் ஹூடா போட்டியிடுவார் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் தங்கத்திலேயே கை வைத்து நாட்டை திவாலாக்கும் மோடி அரசு


கடந்த 30 ஆண்டுகளில் முதன் முதலாக இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் இருப்பு வைத் துள்ள தங்கத்தை விற்பனை செய் துள்ளது.
நரேந்திர _ மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு ஏற்கெனவே 1.76 கோடி லட்சத்தை ரிசர்வ் வங்கி வழங்கியும் நிதிப் பற்றாக்குறை சீரடையவில்லை. இதனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தை விற்பனை செய்து அதன் மூலம் வரும் லாபத்தை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதன் படி ஏற்கனவே 1.15 பில்லியன் டாலர் அளவுக்கான தங்கம் விற்பனை செய்யப்பட்டு விட்டது.
ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப் பட்டுள்ள தங்கத்தின் அடிப்படையிலேயே உலக வங்கியிடம் கடன் வாங்க முடியும். தற்போது தங்கம் விற்கப்படுவதால் மேற் கொண்டு கடன் பெறுவது மற்றும் கடனை அடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கெனவே நாட் டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்து கொண்டிருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பும் கரைந்து வருவதால் இந்தியப் பொரு ளாதாரத்தின் எதிர்காலம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
2019ஆ-ம் ஆண்டு இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை பட்டவர்த்தனமாக தெரியவந்தது. எனவே, நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மூடி மறைக்க முடியாத நரேந்நிர மோடி தலைமையிலான அரசு நிதிச்சுமையை சரிசெய்ய பிமல் ஜலான் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
தற்போது இந்த ஜலான் குழு தான் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை விற்கும் ஒரு ஆலோசனையை வழங்கி நாட்டை திவாலாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. ஜலான் குழு ஆலோசனைப்படி ரிசர்வ் வங்கி 1.987 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை விற் பனை செய்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கட்சி வேறுபாடுகளின்றி நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு செயல்பட வேண்டும் என்று முன் னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி இருந்தார். மேலும், நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பல முறை சுட்டிக் காட்டினார்.
ஆனால் எதற்குமே செவி சாய்க்காத மோடி அரசு, பொருளாதார மந்த நிலைக்கு ஊபர், ஓலா நிறுவ னங்கள் தான் காரணம் என்று சப்பை கட்டு கட்டி தங்களுடைய பொருளா தாரக் கொள்கையின் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்தது. இதன் விளைவாக தற்போது நாட்டின் அடிப்படை ஆதாயமான ரிசர்வ் வங்கியின் தங்கத்திலேயே கை வைத்து நாட்டை திவலாக்கும் நிலைக்கு மோடி அரசு இட்டுச்சென்றுள்ளது.

3000 புள்ளிகள் இறக்கம்: வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி


நாட்டின் பொரு ளாதார மந்த நிலை, கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பங்குசந்தை கடு மையான வீழ்ச்சியை சந்தித் துள்ளது. இன்று சுமார் 3200 புள்ளிகள் சரிந்து வரலாறு காணாத சரிவை சந்தித் துள்ளது.
புதனன்று சென்செக்ஸ் 35,697 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. ஆனால், வியாழன் காலை 34,472 புள் ளிகளில் வர்த்தகம் தொடங் கியது. ஆனால், அன்றைய வர்த்தகம் மேலும் குறைந்து, தற்போது 32,750 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.  அதுபோல, இன்று காலை முதலே சென்செக்ஸ் இறக்கத்தில்தான் வர்த்தக மாகி வருகிறது.
ஏற்கெனவே  2020-ஆம் ஆண்டு, ஜனவரி 20ஆ-ம் தேதி அதிகபட்சமாக 42,273 புள்ளிகளைத் தொட்டது. ஆனால், அதன் பிறகு, இன்று மிகக் குறைந்த புள்ளியாக  32,493 புள்ளிகள் அளவே வர்த்தகமாககி உள்ளது. சுமார் 9,780 புள்ளிகள் சரிந்து உள்ளது.
புதன் மாலை நிஃப்டி 10,458 புள் ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை நிஃப்டி 10,039 புள்ளி களில் வர்த்தகமாகத் தொடங்கி 9,540 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
நிஃப்டி தற்போது சுமா ராக 917 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
மேலும் இன்றைய பங்கு வர்த்தகத் தில்,  சென்செக்சின் 30 பங்குகளில் ஒரு பங்கு கூட ஏற்றத்தில் வர்த்தகமாக வில்லை என்பது தெரிகிறது.
மேலும், பங்கு சந்தையில் உள்ள  30 பங்குகளும் இறக்கத் தில் தான் வர்த்தக மாகிக் கொண்டு இருக்கின்றன.
பிஎஸ்இ-யில் 2,519 பங்குகள் வர்த்தக மாகின்றன. அதில் 184 பங்குகள் மட் டுமே ஏற்றத்திலும், 2,233 பங்குகள் இறக்கத்திலும், 102 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த் தகமாகின்றன.
இதனால் பங்கு சந்தையுயில் 11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட் களில் மேலும் வர்த்தகத்தில் சரிவு ஏற்படலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

‘வரிபாக்கியை வசூல் செய்ய பள்ளிக்கூட வாசலில் குப்பைத்தொட்டி வைப்பதா? : உயர்நீதிமன்ற கிளை கடும் கண்டனம்


வரி வசூல் செய்வதற்காக பள்ளிக்கூட வாசலில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றக் கிளை, ராஜபாளையம் நகராட்சிக்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளை யத்தை சேர்ந்த ராமராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
ராஜபாளையம் நகராட்சியில் அதிகப்படியான வரி வசூலிக்கப்படு கிறது. இந்த வரியை வசூலிப்பதில் கடும் கெடுபிடி காட்டப்படுகிறது.
இதை எதிர்த்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வரி வசூல் செய்வதற்காக கழிவுநீர் வடிகால் வசதியை முறையாக செய்யாமலும், குப்பைகளை அகற்றா மலும் விட்டு விடுகின்றனர்.
வரிபாக்கிக்காக ஒரு தனியார் பள்ளிக்கூட வாசலிலும், மழலையர் பள்ளி முன்பும் குப்பைத்தொட்டியை வைத்துள்ளனர். இதனால் மாண வர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைத் தொட்டியில் கொட்டப்படும் கோழி இறைச்சி, மீன் இறைச்சி கழிவுகளால் பள்ளியின் சுகாதாரமான நிலை பாதிக்கிறது.
மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. வரி செலுத்தா விட்டால் சட்டப்படி ஜப்தி போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால், குப்பைத் தொட்டியை வைத்து ஒட்டுமொத்த சுற்றுப்புறத் தையும் பாதிப்பை ஏற்படுத்துவது ஏற்புடையதல்ல. எனவே, வரி பாக்கிக்காக பள்ளிகள் முன் வைக்கப் பட்டுள்ள குப்பைத்தொட்டிகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன்  விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், ‘‘உள்ளாட்சி அமைப்புகளில் வரி வசூல் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. அதைத் தவிர்த்து மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூட வாசலில் நோய் பரப்பும் வகையில் குப்பைத்தொட்டியை வைப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. நகராட்சியின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது ’’ என கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
பின்னர் நீதிபதிகள், ‘‘வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைக்கிறோம். அப்போது பள்ளிகள் முன் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளை அகற்றி, படத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர். பிற்பகலில் மீண்டும் விசாரணை தொடங்கிய போது, வரி செலுத்தாத பள்ளிகள் முன் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி கள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வரி வசூலிப்பதற்காக இதுபோன்ற நட வடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.

அலைபேசி இணைய கட்டணங்கள் 10 மடங்கு வரை அதிகரிக்குமா?

இந்திய அலைபேசி இணையக் கட்டணங்கள் 5 முதல் 10 மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்புள்ள தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலைபேசி மூலம் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து தற்போது இந்த வசதியைப் பயன்படுத்தாதோர் மிகவும் குறைந்துள் ளனர்.
இதற்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் ஜியோ வந்த பிறகு அலைபேசி இணையக் கட்டணங் களைக் குறைக்கப்பட்டது ஆகும்.   போட்டி காரணமாக மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் கட்டணங் களைக் குறைத்தன.
உலகிலேயே மிகவும் குறைவான கட்டணத்தில் அலைப்பேசி மூலம் இணைய வசதி இந்தியாவில் அளிக்கப் படுகிறது.   அதிக பட்சமாக ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ.3.50 மட்டுமே வசூ லிக்கப்படுகிறது.
அதாவது ரூ.599க்கு 84 நாட்களுக்குத் தினமும் 2 ஜிபி என்னும் கணக்கில் இணையச் சேவை வழங்கப்படுகிறது.   இந்த குறைந்த கட்டணம் காரணமாக ஏர்செல் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டன.
கடும் கடன் தொல்லையில் சிக்கி யுள்ள வோடபோன் அய்டியா நிறுவனம் அடிப்படை கட்டணங்கள் ஒரு ஜிபிக்கு ரூ.35 என அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.  மற்றொரு தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் ஒரு ஜிபிக்கு ரூ.30 எனக் கட்டண உயர் வையும், ரிலையன்ஸ் ஜியோ ஒரு ஜிபிக்கு ரூ.20 என அதிகரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளன.
தற்போதைய நிலையில் அடிப்படை கட்டணங்களைத் தொலைத் தொடர்பு நிறுவனங்களே நிர்ணயம் செய்கின்றன.  இதைத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறைஆணயம் நிர்ணயம் செய்யவேண்டும் என நிதிஅயோக் தெரிவித்துள்ளது.
தற்போது தொலை தொடர்பு நிறுவ னங்கள் கடும் கடன் சுமையால் தத்தளிப்பதால் இந்த யோசனைகளை நிதி அயோக் தெரிவித்துள்ளது.
இது குறித்து தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கலந்தாய்வு செய்து வருகிறது.
ஆணையம் தொலை தொடர்பு நிறுவனங்களின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்டால் ஒரு ஜிபிக்கான கட்டணம் ரூ.20 முதல் ரூ.35 வரை இருக்கும்.  அது தற்போதைய கட்ட ணத்தைப் போல் 5 முதல் 10 மடங்கு அதிகம் ஆகும்.
இந்த தகவல்களால் தற்போது குறைந்த கட்டணத்தில் சேவை பெறும் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பாதிப்பு அடைவது உறுதி ஆகும்.

டில்லி வன்முறையில் 60 பேரைக் காப்பாற்றிய டில்லி நாயகன்

டில்லி கோகுல்பூரியில், 53 வயதான மோகிந்தர் சிங், அவரது 28 வயது மகன் இந்தர்ஜீத்துடன்  60 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்ட பல முஸ்லீம் குடும்பங்களுக்கு அவர்கள்  தங்குவதற்கு பாதுகாப்பான இடங் களைக் கொடுத் தும், பாதுகாப்பான இடங்களுக்கு வழிகாட்டியும் உதவியுள்ளார்கள்.
டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் சம்பந்தமாக நடந்த கலவரத்தில் 50க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி யுள்ளன. இந்த சம்பவங்கள் உள்ளூர் மக்களின் நினைவில் நீண்ட காலமாகப் பதிந் திருக்கும். ஆனால் தைரியம், உயிர் வாழ்வு மற்றும் சகோதரத்துவம் பற்றிய கதைகளும் அவர்கள் நினைவில் நீங்காமல் நிறைந்திருக்கும்.
"1984 ஆம் ஆண்டில், நான் 16 வயதில் இருந்தேன், கொடூரமான நினைவுகள் கொண்ட நிகழ்வு அது. வன்முறை இங்குப் பரவியபோது, முப்பது ஆண்டுகளுக்கு  முன்னர் நடந்த கலவ ரங்களை அது எனக்கு நினைவூட்டியது. இது மனித வாழ்க்கையின் முக்கியத் துவத்தை எனக்கு நினைவூட்டியது" என்று மொஹிந்தர் சிங்  தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யில் தெரிவித்தார்.
பிப்ரவரி 24 அன்று, மொகிந்தர் சிங் தனது வீட்டிற்கு அருகிலுள்ள தனது கடையில் இருந்தபோது, ஒரு கும்பல் அக்கம்பக்கத்துக்குள் நுழைந்தது.
மொகிந்தர், அவரது மகன் இந்தர்ஜீத்துடன் சேர்ந்து, அவர்களின் இரு சக்கர வாகனங்களை வெளியே எடுக்க முடிவு செய்தார் - ஒரு ஸ்கூட்டி மற்றும் ஒரு பைக். அவர்கள் சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்தாம்பூரிக்கு, கலவரத்தில் சிக்கிய 60 பேரை ஏற்றிச் சென்றனர்.
"முஸ்லிம்கள் கூடி, அவர்கள் அக்கம் பக்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவு செய்தனர், ஆனால் அவர்கள், கும்பல்களில் சிக்கினர். அப்பாவி குழந்தைகளின் முகங்களில் அச்சத்தைக் காண என்னால் தாங்க முடியவில்லை" என்று மொகிந்தர் சிங் நினைவு கூர்ந்தார்.
"எங்களிடம் அதிக வாகனங்கள் இல்லை, ஆனால் நாங்கள் எங்கள் இருசக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு மக்களை அழைத்துச் செல்லத் தொடங்கினோம். 1984 கல வரத்தின்போது, இந்து குடும்பங்களே எங்களைக் காப்பாற்றின, ஆனால் இந்த கலவரங்களின் போது எந்தெந்த சமூகத்தின் மக்களை நாங்கள் பாது காத்துக்கொண்டிருக்கின்றோம் என்று நாங்கள் சிந்தித்துக் கொண் டிருக்கவில்லை. பாதிக்கப்பட்ட அனைவரையும் நாங்கள் காப்பாற்ற முயன்றுகொண்டிருந்தோம். மனிதர்களை அவர்கள் எந்த மதம் என்பதனைப் பொருட்படுத்தாமல் காப்பாற்ற விரும்பினோம், "என்று அவர் கூறினார்.
அவரது மகன் இந்தர்ஜீத்தும் இதேபோன்ற கருத்தினை கூறினார். "நான் மக்களைக் கொண்டு செல்லும் போது பயப்படவில்லை. அந்த நேரத் தில் நான் நினைத்துக் கொண்டிருந்தது எல்லாம் சிக்கலில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பது மட்டும்தான்" என்று கூறினார். இந்தர்ஜீத்தின் பக்கத்து வீட்டுக்காரர் - 30 வயதான முகமது நயீம் - அவர் தனது தந்தையுடன் உதவி பெற்றவர்களில் ஒருவராவார். நயீமின் வீடு சூறை யாடப்பட்டது. அவரது கடை அழிக் கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கும்பலால் வீடு ஒன்று குறி வைக்கப்பட்டபோது அந்த வீட்டில் 10  சமையல் எரிவாரு உரு ளைகள் இருந்தன.
தீ மிகவும் பெரியதாக இருந்தி ருக்கலாம், ஆனால் அந்த எரிவாயு உருளைகளில் பலவற்றை வெளியே எடுத்து, அருகிலுள்ள குழாயிலிருந்து தண்ணீரைக் கொண்டு தீயை அணைத்தவர் இந்தர்ஜீத் தான்.
கும்பல் தாக்குதலின் கொடூரத்தை நினைவு கூர்ந்த நயீம் கூறினார்: " எங்கள் வீடு மற்றும் கடை மீது தாக்குதல் நடத்திய கும்பலில் குறைந்தது 1,000 பேர் இருந்தனர். அவர்கள் முழக்கங் களை எழுப்பினர், அவர்களில் பலர் கைகளில் வாள்களைக் கூட ஏந்தியி ருந்தனர். வீட்டிலுள்ள நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப் பட்டன."
"குடும்பத்தில் உள்ள பெண்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக பின் பாதை வழியே ஓடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். நாங்கள் பயந்தோம். ஆனால் மொகிந்தர் சிங்தான் எங்களை தங்கள் ஸ்கூட்டியில் உட்கார வைத்துப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று விட்டார்கள்," என்று அவர்கூறினார்.
"அவர்கள் சமையல் எரிவாயு உருளைகளை வெளியே எடுக்கா விட்டால், முழுப் பகுதியும் அருகி லுள்ள வீடுகள் மற்றும் கடைகள் அனைத்தும் தீப்பிழம்பாகப் போயி ருக்கும். இது அனைத்தும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்" என்று நயீம் கூறினார்.
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மோதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் நான்கு நாட்களில் வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில் வன்முறை உருவாக்கப்பட்டது.
இதில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் அனு மதிக்கப்பட்டதற்கு பெரிய அளவிலான  எதிர்ப்புக்கள் தேசம் முழுவதும் நடந்து வருகின்றன.
நாட்டில் முதன்முறையாகக் குடியுரிமைக்கு மதத்தைச் சோதிக்கும் சட்டத்தின் மூலமாக, மூன்று முஸ்லீம் பெரும்பான்மையான அண்டை நாடுகளின் சிறுபான்மையினருக்குக் குடியுரிமையை வழங்கும் என்று அரசாங்கம் கூறினாலும், விமர்சகர்கள் இச்சட்டத்தினை "முஸ்லிம் எதிர்ப்பு" என்றே கூறுகின்றனர்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்குப் பதில் - மதவெறியைத் தூண்டும் திட்டங்களைத் தீட்டும் இந்திய பிரதமர்: ஜப்பான் பத்திரிகை சாடல்


பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் வெற்றி பெற்றிருக் கலாம்; ஆனால் அவரது கொள்கை களால் இந்தியாவின் பொருளா தாரம் முடங்கியுள்ளது என்று ஜப் பான் நாட்டைச் சேர்ந்த ‘நிக்கி ஆசியன் ரிவியூ’ ஏடு,விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக மார்ச் 11 அன்று முகப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த ஏடு மேலும் குறிப் பிட்டிருப்பதாவது:
“2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடிஆட்சிக்கு வந்ததும், குஜராத் மாநிலத்தில் ஏற்படுத்திய பொருளா தார முன்னேற்றத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்துவேன்'' என்று வாக்குறுதி அளித்தார்.
ஆனால், முதல் 5 ஆண்டுகால ஆட்சியிலேயே, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட நடவடிக்கை களால் நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி நிலைகுலையச் செய்துவிட்டார். இதனால் நாடு பல நெருக்கடிகளுக்கு  உள்ளானது என் றாலும், 2019-இல் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இப்போதும், பொருளாதார மேம் பாட்டுக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாறாக, 2002-இல் குஜ ராத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் உயிர்போன தற்கு காரணமான, மத வன்முறையை மீண்டும் செயல்படுத்தத் தொடங்கி விட்டார். தனக்கிருக்கும் மிகப் பெரிய பெரும்பான்மையைப் பயன் படுத்தி பொருளாதார நெருக்கடி களுக்கு தீர்வு காண்பதற்கு பதில், மதவெறியைத் தூண்டும் திட்டங் களைத்தான் மோடி அரசு இரட்டிப் பாக்கி வருகிறது.
காஷ்மீரின் சிறப்பு உரிமை பறிப்பு, இஸ்லாமியர்களை பாகு படுத்தும் குடியுரிமை திருத்தச் சட் டம்போன்ற ஆர்எஸ்எஸ்-ஸின் திட்டங்களை செயல்படுத்தி வரு கிறது. இந்த மதவெறி செயல்பாடுகள் மூலம், இந்தியாவின் பொருளாதா ரத்தை பிரதமர் மோடி செயலிழக்கச் செய்துவிட்டார்'' என்று ‘நிக்கி ஆசியன் ரிவியூ’ ஏடு சாடியுள்ளது.

Thursday, March 12, 2020

98 வயதிலும் படிக்க விரும்பும் மூதாட்டி


இன்னும் படிக்க வேண்டும் என்று 4ஆம் வகுப்பு தேர்வையெழுதி தேர்ச்சி பெற்றவரும், குடியரசுத் தலைவரிடம் "பெண்கள் சக்தி"க்கான விருதைப் பெற்றுள்ளவருமான 98 வயதான கார்த்தியானி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வயது முதிர்ந்தவர்கள் தேர்வை எழுதி வெற்றி பெற்று வருவது கேரளாவில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் 105 வயதான பாட்டி பகீரதி அம்மாள் 4ஆம் வகுப்புத் தேர்வை மாநில அறிவொளி இயக்கத்தின் சார்பாகப் பயிற்சி பெற்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் மற்ற பெண்களுக்கும் ஊக்கம் அளித்ததற்காக பாட்டி கார்த்தியானிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் "பெண்கள் சக்தி" விருதை வழங்கி கவுரவித்தார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பாக ஆண்டுதோறும் "பெண்கள் சக்தி" விருது வழங்கப்படுகிறது.
பெண்களுக்கு ஊக்கமாக இருப்பவர்களுக்கு, அவர்களை ஆற்றல் படுத்துவோருக்கு ஆண்டுதோறும் பெண்கள் தினமான மார்ச் 8ஆம் தேதியையொட்டி குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். 'இன்னும் படிக்க வேண்டும்' என்பது 4ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 98 வயது பாட்டி விருப்பம்!!

ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டம் புதுப்பிப்பு விளாடிமிர் புதின் போட்டியிட தடையில்லை


ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் கேஜிஎப் எனப்படும் உளவு அமைப்பில் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் விளாடிமிர் புதின் (67). 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி ரஷ்யா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது அப்போதைய அதிபர் எல்ட்சின் பொறுப்பு பிரதமராக விளா டிமிர் புதினை முதல் முறையாக நியம னம் செய்தார்.
அந்த சமயம் அந்நாட்டில் கிளர்ச் சியாளர்கள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக கருதப்பட்ட பகுதிகளில் வான்வெளி மூலம் குண்டுகள் வீசப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கைகளால் புதின் ரஷ்ய மக்களிடையே புகழ்பெற்றார்.
இதையடுத்து, பல காரணங்களுக்காக அதிபராக இருந்த எல்ட்சின் தனது பொறுப்பிலிருந்து விலகி 1999ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி விளாடிமிர் புதினை ரஷ்யாவின் பொறுப்பு அதிப ராக நியமனம் செய்தார்.
அப்போது முதல் ரஷ்யாவின் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய இரண்டு பதவி களில் ஏதேனும் ஒன்றில் தன்னை நிலை நிறுத்திவந்த புதின் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்றார்.
இதனால் 2024-வரை ரஷ்யாவில் புதினின் ஆதிக்கம் இருக்கும். இந்த வெற் றியின் மூலம் தொடச்சியாக இரண்டா வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், ரஷ்யாவில் உள்ள சட்டத்தின்படி ஒரு நபர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபர் தேர் தலில் போட்டியிட முடியாது.  இதனால், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் புதின் போட்டியிட முடியாத சூழல் இருந்து வந்தது.
இந்நிலையில், ஆளும் அய்க்கிய ரஷ்யா கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் வாலண்டினா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை மீண் டும் புதுப்பிக்கவேண்டும் என்ற மசோ தாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவின் படி பழைய நடைமுறைகள் அழிக்கப்பட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான சட்டம் மீண்டும் முதலில் இருந்தே அம லுக்குவரும்.
அதாவது, ஏற்கெனவெ தொடர்ச்சி யாக இரண்டு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் சட்டம் புதுப்பிக் கப்பட்டதால் மீண்டும் முதலில் இருந்தே அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்.
சுருக்கமாக கூற வேண்டுமானால் தற்போது அதிபராக உள்ள புதின் அடுத்துவரும் 2024ஆம் ஆண்டு மற்றும் 2030ஆம் ஆண்டு ஆகிய இரண்டு தேர் தல்களிலும் எந்தவித தடையும் இன்றி போட்டியிடலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர் வாலண் டினா தாக்கல் செய்த இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. இந்த மசோதா அதிபர் புதினின் ஒப்புதலுடன் சட்டமாக இயற்றப்பட்டது. இந்த சட்டம்  ஏற்கெனவே பின்பற்றப்பட்டுவந்த விதிமுறைகளை மீறினால் மட்டுமே நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியும்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை பூஜியத்தில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளதால் 2024 மற்றும் 2030 ஆகிய இரண்டு தேர்தல்களில் விளாடிமிர் போட்டியிட எந்தவித சட்டசிக்கலும் இல்லை.
ஒரு வேளை இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றால் 2036ஆம் ஆண்டுவரை அதாவது தனது 83 வயது வரை ரஷ்யா வின் அதிபராக விளாடிமிர் புதின் செயல் படலாம் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர போராட்ட தியாகியா இருந்தால் என்ன?

102 வயதான முதியவரிடம் சான்றிதழ் கேட்கிறது பாஜக

கருநாடக மாநி லம், விஜயபுராவை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த எம்எல்ஏ., பசனகவுடா பாட்டீல் யட் னல், சுதந்திர போராட்ட தியாகியான எச்.எஸ்.துரைசாமியைப் பார்த்து இவர் ஒரு போலியான சுதந்திர போராட்ட தியாகி என்றும் இவர் பாகிஸ்தான் ஏஜென்ட் போன்று நடந்து கொள்கிறார் என்று தெரிவித்தார். இந்த கருத்து பெரும் சர்சையை கிளப்பியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுதந்திர போராட்ட தியாகி யான எச்.எஸ். துரைசாமி, நான் எனது பயோ டேட்டாவை தயாரித்து வருகிறேன். நான் சுதந்திர போராட் டத்தில் பங்கேற்றதற்கான ஆவணங் களை சேகரித்து கொண்டிருக்கிருறேன் என்றார்.
கருநாடக மாநிலம், ராமநகரம் மாவட்டம், ஹாரோஹள்ளி கிராமத் தில், 1918ஆம் ஆண்டு ஏப்.10ஆம் தேதி சிறீனிவாசம் மற்றும் பர்வத்தம்மாவின் இளைய மகனாகப் பிறந்தார் பெங் களூரு, சென்ட்ரல் கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார்
ஆசிரியராகப் பணியாற்றி வந்த துரைசாமி, வெள்ளையனே வெளி யேறு போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில், அவர் மீது வெடிகுண்டு தயாரித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்
காங்கிரஸிலிருந்து விலகல்:
1975ஆம் ஆண்டு அன்றைய பிரத மர் இந்திரா காந்தி, அவசர நிலையை பிரகனப்படுத்திய போது அதை எதிர்த்து துரைசாமி போராட்டங் களை நடத்தினார்.  மேலும் இந்திரா காந்தியை கடுமையாகச் சாடிய துரைசாமி,‘ஜனநாயகவாதியாக நீ தேர்ந்தெடுக்கப்பட்டால், சர்வாதி காரியாகச் செயல்படுகிறாயே. இதையே (இந்திராகாந்தி) தொடர்ந்தால், வீடுவீடாகச் சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்வேன்‘ என்று கடிதம் மூலம் தெரிவித்திருந்தார் இதனால் துரைசாமி கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,‘ பிரதமரை விமர்சிக்க அவருக்கு முழு உரிமை உள்ளது. அவர் இந்தியாவின் எதிரி அல்ல‘ என்று கூறி, 4 மாதங்களாக சிறையில் இருந்த துரைசாமியை விடுதலை செய்தனர்.
அதன்பிறகு, காங்கிரஸ் கட்சியை துறந்த துரைசாமி, அன்றுமுதல் மக் கள் பிரச்சினைகளுக்காக மக்களோடு மக்களாக நின்று போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, பி.வி.நரசிம்மராவ், மன்மோகன் சிங் உள்ளிட்டோரின் ஆட்சிக் காலங் களில் மக்கள் நலனுக்கு எதிராக எடுக் கப்பட்ட முடிவுகளைக் கண்டித்து போராட்டங்களை நடத்திவந்திருக் கும் எச்.எஸ்.துரைசாமி, கருநாடக அரசுக்கு எதிராகவும் போராட்டங் களை நடத்தி வருகிறார். முந்தைய சித்தராமையா ஆட்சியில் பெங்களூ ரில் 800 மரங்களை வெட்டி ஸ்டீல் மேம்பாலம் அமைக்க முற்பட்ட போது, அதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.
இதேபோல, பெலகாவியில் சுவர்ண விதான சவுதா முன் நில மில்லா விவசாயிகளுக்கு நிலம் வழங்கக் கோரி தொடர் போராட்டம் நடத்தினார் ஏரிகளின் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி போராட்டங் களை நடத்தினார். அண்மைக்கால மாக, குடியுரிமை திருத்தச் சட்டத் துக்கு எதிராக தீவிரமாக போராட் டத்தில் ஈடுபட்டு வருகிறார்
கருநாடக அரசின் காந்தி சேவை விருது, பசவண்ணர் விருது, ராம்நாத் கோயங்கா விருதுகளைப் பெற்றிருக் கும் துரைசாமி, போராட்டத்தில் ஈடுபட்டு மக்களின் உரிமைகளின் வென்றெடுப்பதே தனது லட்சியம் என்கிறார்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் , இவர் ஒரு போலி சுதந்திர போராட்ட தியாகி என்றும், பாகிஸ்தான் ஏஜென்ட் என்றும் தெரிவித்தார். மேலும் இவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற் றதற்கான ஆவணங்களையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இவரது கருத்துக்கு சில சீனியர் பாஜக தலைவர்களும் அதா வது மத்திய அமைசார் பிரபுல் ஜோசி ஆகியோர் பின்னால் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கடந்த செவ்வாய்க் கிழமை காங்கிரஸ் கட்சி 1971-ஆம் ஆண்டு, சுதந்திரப் போராட்ட தியா கியான எச்.எஸ். டோரெஸ்வாமி பெங்களுர் மத்திய சிறையில் இருந்த தற்கான ஆவணங்களை வெளியிட் டது. திருமணம் ஆகாத 25 வயது துரைசாமி 1942-ஆம் ஆண்டில் டிசம்பர் 18-ஆம் தேதி முதல் சிறையில் இருந்தார் என்றும் அதற்கு பின்னர் 1943-ஆம் ஆண்டின் டிசம்பர் 8-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வா ளர் ராமசந்திர குஹா தெரிவிக்கையில், இவர் நாட்டுக்காக உழைத்தவர். இவர் மீது போலி சுதந்திரப் போராட்ட தியாகி என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்றார்.

யெஸ் வங்கி தொடர்பாக இதுவரை நடந்தது என்ன?

6 மாதத்தில் ரூ.18,000 கோடி எடுக்கப்பட்டது...

யெஸ் வங்கியுடன் நிதி தொடர்பான செயல்பாடு களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் பெரிய அளவில் இடையூறுகளை சந்திக்க நேர்ந்துள்ளது.
யெஸ் வங்கியின் அடுத்த நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் நிலவி வருகின்ற நிலையில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாத காலம் வரையில் ரூ. 18 ஆயிரம் கோடி வரை நிதி வைப்புதாரர்கள் இந்த வங்கியில் இருந்து எடுத்துள்ளனர் என்று அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அக்டோபர் 2019 முதல் பிப்ரவரி 2020 வரையில் மேலும் 20% வரை வாடிக்கையாளர்கள் தங்களின் பணத்தினை திரும்பப் பெற்றிருப்பார்கள் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பண மோசடி வழக்கில் மும்பையில் அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூர், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட் டார். மார்ச் 11ஆம் தேதி வரை விசாரணைக் காவலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார்.
அந்த வங்கியின் ஆண்டு அறிக்கையின் படி, மார்ச் 31ஆம் தேதி 2019ஆம் ஆண்டு அவ்வங்கியின் வைப்பு நிதி ரூ. 2,27,610 கோடி ஆகும். ஆனால் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி அந்த வங்கித் தொகை 2,09,497 கோடியாக குறைந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மற்ற வங்கிகளிலோ, ரெப்போ விகிதம் 135 அடிப் படை புள்ளிகள் குறைக்கப்பட்ட பின்னர், 2019-20 ஆம் ஆண்டில், வைப்புத்தொகைகளில் 9.2 உயர்வு கண்டுள்ளது. யெஸ் வங்கியில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு வங்கியில் இருந்து எடுக்கப்படும் பணத்தின் அளவு மேலும் மேலும் அதிகரிக்கத் துவங்கியது. வங்கியில் பிரச்சினை இருப்பதால் டிசம்பர் மாதத்துடன் முடிவுற்ற மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வைப்புத் தொகையின் அளவு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு மேலும் 10 முதல் 20 சதவீதம் குறைந்திருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் தொழில் நிறுவனம் ஒன்று தங்களின் வைப்பு நிதியை மொத்தமாக திரும்ப எடுத்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது. அவர்களைப் போலவே திருப்பதி தேவஸ்தானம் ரூ. 1300 கோடியை திரும்ப எடுத்துள்ளது. வதோதரா முனிசிபல் கார்ப்பரேசனால் நிர்வகிக்கப்படும் வதோதரா ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் கம்பெனி தங்களின் ரூ. 265 கோடியை ஆர்.பி,அய். அறிவிப்பிற்கு ஒரு நாள் முன்பு எடுத்தது குறிப்பிடத்தக்கது. பிட்ச் ரேங்கிங்ஸ்  என்ற பொருளாதார கணக்கீட்டு நிறுவனம் வெளியிட் டுள்ள அறிக்கை ஒன்றில் ”யெஸ் வங்கியை கையகப்படுத்தும் முறை.பணம் செலுத்தியவர்களின் நம்பிக்கையை பெறுவதாக அமைந்திருக் கிறது ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு எதிர்பார்க்காத விளைவு களையும் ஏற்படுத்தலாம். தங்களின் வைப்பு நிதியை பாதுகாப்பான இடங்களில் சேமிக்க வேண்டும் என்று மற்ற வங்கிகள் தூண்டினால் விளைவுகள் வேறுவிதமாகவே அமையும். இது பணப் புழக்கக் குறைவை ஏற்படுத்தும். குறிப்பாக பலவீனமான  வைப்பு நிதியுடன் இயங்கும் சிறிய தனியார் வங்கிகளுக்கு இது பெரும் பாதிப்பினை ஏற் படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி விதித்த தடையால் பல நிறுவனங்களின் முதலீடுகள் வங்கியில் சிக்கியுள்ளது. மார்ச் 31, 2019 அன்றைய கணக்கின் படி 20 வாடிக்கையாளர்களின் மொத்த மதிப்பானது ரூ. 24,673 கோடியாகும். இது யெஸ் வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் மொத்த பணத்தின் 10.84%-த்தை கொண்டது. செப்டம்பர் 2017ஆம் ஆண்டு முதல் மார்ச் 2019ஆம் ஆண்டு வரை இந்த வங்கியில் வைக்கப்பட்ட வைப்புத் தொகையின் அளவு 1,57, 989 கோடியாக உயரத் துவங்கியது. இந்த காலகட்டத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. ரிசர்வ் வங்கியானது யெஸ் வங்கியின் மறுகட்டமைப்பிற்கான திட்டங்களை வெளியிட்டதுடன் எஸ்.பி.அய். வங்கி, யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்கியது தொடர்பாகவும் அறிவித்தது.

1985ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு: குற்றம்சாட்டப்பட்ட 30 பேர் விடுதலை

வட இந்தியாவில் கடந்த 1985-ஆம் ஆண்டு நடை பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் குற்றம்சாட்டப் பட்ட 30 பேரை, டில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை விடுதலை செய்தது.
கடந்த 1985-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி டில்லி மற்றும் உத்தரப் பிரதேம், அரியாணா மாநிலங்களையொட்டிய பகுதிக ளில் தொடர் குண்டுவெடிப்பு சம் பவங்கள் நடைபெற்றன. பேருந்து கள் மற்றும் பொது இடங்களில் வானொலியில் பொருத்தி வைக் கப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்து டில்லியில் மட்டும் 49 பேர் உயிரி ழந்தனர். 127 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு, 59 பேர் மீது குற்றம்சாட்டி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அவர் களில் 5 பேர் தலைமறைவாகிவிட்ட னர். மேலும் 5 பேருக்கு எதிராக போதிய சாட்சியம் இல்லை எனக் கூறி, அவர்களை கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை மாதம் விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. மீதமுள்ள 49 பேரில் 19 பேர் நீதிமன்ற விசா ரணையின்போது உயிரிழந்த நிலை யில், இதர 30 பேர் கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் பிணையில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை டில்லி கூடுதல் குற்றவியல் நீதிபதி சந்தீப் யாதவ் திங்கள்கிழமை வழங்கினர். அந்த தீர்ப்பில், ‘இந்த வழக்கு விசாரணையின்போது சில சந்தர்ப்பங்களில் காவல்துறையின ரால் விசாரிக்கப்பட்ட சாட்சிகளி டம், நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவில்லை.
இந்த வழக்கில் பொதுமக்களில் பலரை வதைத்து, அழுத்தம் தந்து வலுக்கட்டாயமாக அவர்களை சாட்சிகளாக காவல்துறையினர் ஆஜர்படுத்தியுள்ளனர் என்பது சாட்சியங்கள் மூலம் தெளிவாக புலப்படுகிறது. சாட்சிகளாக ஆஜ ராகவிடில், அவர்களும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவர் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தவறான விசா ரணை முறையால் திரட்டப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் வழக் கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக அறிவிக்க முடியாது.
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட வர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்வதில் அரசு தரப்பு தோல்வியடைந்துள்ளது. எனவே குற்றம்சாட்டப்பட்ட 30 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேந்திர வித்யாலயாவின் வேலை வாய்ப்பு விளம்பரம்

தமிழ்நாட்டில் மட்டும் தமிழும் - ஆங்கிலமும் இருட்டடிப்பு செய்யப்படுவதின் மர்மம் என்ன?

மத்திய அரசுக்குச் சொந்தமான திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்புக்கான விளம்பரத்தில் பெரும்பாலும் இந்தியும், கொஞ்சம் ஆங்கிலமும் கலந்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களில் வெளியிடப்பட்டுள்ளதில் அந்தந்த மாநில மொழிகளும் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தாய்மொழியான தமிழ் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கேந்திர வித்யாலயாவின் 2020-2021 ஆண்டு ஆசிரியர்கள் பணிக்கான அறிவிப்பு,
தகுதியானவர்கள் கவனத்திற்கு!

 
முதுநிலை பட்டயப்படிப்பு(பிஜிடி) ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு(டிஜிடி) மற்றும் டிப்ளமா கம்யூட்டர் புரோகிராமர், மேற்பார்வையாளர், செவிலியர், யோகா ஆசிரியர், தமிழ் ஆசிரியர், கைவினைப் பொருள் தயாரிப்பு பயிற்சியாளர், பி.டி. ஆசிரியர் போன்றோர் தேவைப் படுகிறது, மேலே கூறியவற்றிற்கு தகுதியான நபர் கள் தகுந்த சான்றிதழ்களோடு 15.3.2020 மற்றும் 16.3.2020 அன்று கீழ்க்கண்ட முகவரியில் நேரடியாக வரவும்
நேர்முகத்தேர்விற்கு வரவேண்டிய நேரம் காலை 8 மணி முதல் 10 வரை
இடம் கேந்திரிய வித்யாலயா, சி யு டி என், திருவாரூர்
இப்படி ஒரு  விளம்பரம் திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிக்கான கேந்திர வித்யாலயாவிற்காக  நாளிதழ்களில் வெளியாகியுள்ளது,
அதில் கேந்திரவித்யாலயா என்ற பெயர் மட்டுமே தமிழில் உள்ளது. மற்றவை அனைத்துமே பெரிய எழுத்துக் களில் இந்தியில் உள்ளது.
அதன் கீழே பெயரளவிற்கு ஆங்கி லத்தில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது இதைப் படிக்கும் இந்தி தெரியாத நபர்கள் தமக்கான விளம்பரம் இல்லை என்று நினைக்கும் நோக்கில் திட்டமிட்டே இந்த விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா ஜம்மு, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங் களில் ஆங்கிலத்தில் தனியாகவும், இந்தியில் தனியாகவும், மேலும் அந்தந்த மாநில மொழிகளில் தனியாகவும் விளம்பரம் கொடுக்கும்போது, தமிழகத்தில் இந்தியை முக்கியப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விளம்பரங்களைப் பார்க்கும் போது தமிழாசிரியர்களும் இந்தி கற்று இருக்க வேண்டும் என்ற ஒரு மறைமுக எண்ணத்தையும் உருவாக்கி யுள்ளார்கள் என்று தெரிகிறது.
இதன் மர்மம் - சூழ்ச்சி புரிகிறதா?
மத்திய அரசின் நிறுவனம் ஒன்றின் இத்தகு விளம்பரம் எதைக் காட்டுகிறது? தமிழ்நாடு என்றால் வஞ்சிக்கப்படத்தான் வேண்டுமா? மத்திய அரசு என்பது இந்தியா முழுவதுக்குமானது இல்லையா? இந்த விளம்பரம் எல்லா மொழி களிலும் வெளிவர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் - அத்தோடு இட ஒதுக்கீடுபற்றியும் குறிப்பிட வேண்டும்.
கி.வீரமணி,

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை,

11.3.2020

Wednesday, March 11, 2020

தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு

கணக்கீட்டாளர், உதவியாளர் பணிக்கு

தமிழ் வழியில் இணையவழி தேர்வு

கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு தமிழ்வழியிலும் இணைய வழித் தேர்வு நடத்தப்படும் என்றும் இத்தேர்வுக்கு மார்ச் 23ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்பகிர்மான கழகத்தில் இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவியில்500 காலியிடங் களும் கணக்கீட்டாளர் பதவியில் 1,300 காலியிடங்களும் உள்ளன. இவை போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. முதலில் இணையவழி தேர்வு ஆங்கில வழியில் மட்டும் நடத்தப்படுவதாக இருந்தது. இதற்கு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இணையவழி தேர்வை தமிழ்வழியிலும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவிகளுக்கான இணையவழி தேர்வானது தமிழ் வழியிலும் நடத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதன்தலைமை பொறியாளர் (பணியமைப்பு) வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு ஆங்கில மொழியில் நடைபெறும் என ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அவர்களின் நலன் கருதி மேற்கண்ட தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கணினி வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க கால அவகாசம் மார்ச் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கணக்கீட்டாளர் பதவிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும், பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 32 ஆகவும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், இளநிலை உதவியாளர் பதவிக்கு பி.காம். பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகும்.
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது. உரிய கல்வித் தகுதியும், வயது தகுதியும் உடைய பட்டதாரிகள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தை பயன்படுத்தி மார்ச் 23ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதள தேர்வு நடைபெறும் நாள், நேரம் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

பள்ளியில் இடைநின்றவர் இன்று டி.எஸ்.பி.


சிவகாசி அருகிலுள்ள மல்லி ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காமாட்சி. அவருடைய அப்பா பாலகிருஷ்ணன் பெட்டிக்கடை ஒன்றை நடத்திவருகிறார். பத்தாம் வகுப்பு முடித்த பிறகு 2005இல் காமாட்சிக்குத் திருமணம் நடந்தது. கணவர் மகாலிங்கம் பட்டாசு ஏஜென்சியை நடத்திவருகிறார்.
இவர்களுக்கு 12 வயதில் மகனும் எட்டு வயதில் மகளும் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு தையல் பழகுவது,  படிப்பது எனத் தனக்கெனச் சிறு அளவு நேரத்தை ஒதுக்கினார். பத்தாவதுடன் முடிந்துவிட்ட கல்விப் பயணத்தை மீண்டும் தொடர நினைத்தார் காமாட்சி. 2013இல் தனித்தேர்வராகப் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதினார்.
முதல் முயற்சியிலேயே 1070 மதிப் பெண்களை எடுத்து அனைவரையும் வியக்க வைத்தார். அந்த வெற்றி அவரது கனவையும் லட்சியத்தையும் விசாலமாக்கியது. போட்டித் தேர்வெழுதி அரசு வேலையில் சேர விரும்பினார். கிராமத்துச் சூழலில் வளர்ந்த நம்மால் அது முடியுமா என்ற தயக்கம் தோன்றினாலும் நொடிப்பொழுதில் அந்தத் தயக்கத்தை விரட்டினார்.
சிவகாசியிலுள்ள சுப்புராம் என்பவரை அணுகினார். அவரது வழிகாட்டுதலில் 2014இல் குரூப்-4 தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சிபெற்றார். மதுரையின் வேளாண்மைத் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.
தமிழ் வழியில் வெற்றி
அடுத்தடுத்து இரு வெற்றி, உடனே அரசுப் பணி போன்றவை காமாட்சியின் தன்னம்பிக்கையை அதிகரித்தன. தேர்வு குறித்த புரிதலுடன் நம்பிக்கை வலுத்தது.
அஞ்சல் வழியில் 2018இல் பி.ஏ. தமிழ் இலக்கியம் முடித்தார். குரூப்-1 தேர்வெழுத நினைத்தார்.  குரூப் -1 தேர்வைத் தமிழில் எழுதி முதல்நிலைத் தேர்வில் வென்றார். முதன்மைத் தேர்வுக்குக் குறுகிய காலமே இருந்தது. பயிற்சி மய்யத்தில் சில மாதங்களே படித்தார். ஆனால், அந்தப் பயிற்சி காமாட்சியின் தேடலைச் செம்மையாக்கியது. 2019இல் நடந்த
குரூப்-1, குரூப்-2 தேர்வுகளில் ஒரே முயற்சியில் தேர்வானார். நேர்காணலிலும் வென்றார்.
தேர்வில் வென்றபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எந்தப் பணியைத் தேர்வு செய்வது என்ற நிலை. பெண்களுக்குத்தான் இங்கே ஆபத்து அதிகம்.
நானும் பெண் என்ற முறையில் பெண்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவலாம் என்ற நம்பிக்கையில் காவல் துறைப் பணியைத் தேர்ந்தேடுத்தேன்.
நான் டி.எஸ்.பி.யாகத் தேர்வானதில் என் கிராமத்துக்கே பெருமை. நான் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருப்பதாக என் கிராமத்தினரும் உறவினர்களும் நினைத்திருந்தனர்.
நான் டி.எஸ்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். நிச்சயம் அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பர் என்று சிரிக்கும் காமாட்சி, தன் வெற்றிக்குத் தன் கணவர் மகாலிங்கமே காரணம் என்கிறார்.

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை


அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர் மானங்களை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வந்தது.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வட கொரியா மீது பொருளாதார தடைகள் விதித்தன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா வுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற் பட்டது.
இந்த பிரச்சினையை முடி வுக்கு கொண்டு வரும் வகை யில் அமெரிக்க அதிபர் டிரம் பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் 2 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அணு ஆயுத தயாரிப்பை முழுமையாக கைவிடுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக் கையை வடகொரியா ஏற்க வில்லை. இதனால், அந்த நாட் டின் மீதான பொருளாதார தடைகளை விலக்கி கொள்ள டிரம்ப் மறுத்துவிட்டார்.
இதனால் இருநாட்டு தலைவர்களிடையே நடந்த 2 பேச்சுவார்த்தைகளும் தோல் வியில் முடிந்தன. இதையடுத்து வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது.
உலகமே கரோனா வைர சால் கடும் அச்சத்தில் இருக் கும் சூழலில் வடகொரியா கடந்த வாரம் குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவு கணைகளை ஏவி சோதித்தது.
இது கரோனாவால் பெரும் அச்சுறுத்தலை எதிர்க்கொண்டு வரும் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு கடும் அதிர்ச்சி அளித்தது.
இந்த பரபரப்பு அடங்குவ தற்குள் வடகொரியா நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை சோதித்தது கொரிய தீபகற்பத்தில் பதற் றதை அதிகப்படுத்தி இருக்கிறது.

கரோனா வைரஸ்: சீனாவில் சமூக நலப்பணியாளர்கள் 53 பேர் பலி


சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, இங்கி லாந்து போன்ற வல்லரசு நாடு கள் உள்பட 101 நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
சீனாவில் கரோனா வைர சுக்கு மேலும் 22 பேர் பலி யாகி விட்டனர். இதன்மூலம் அங்கு மொத்த பலி எண் ணிக்கை 3,119 ஆனது. அங்கு 40 பேர் புதிதாக இந்த தொற் றுக்கு ஆளாகி இருக்கின்றனர். அங்கு கரோனா பாதித்த பகு திகளில் பணியாற்றிய 53 சமூக நலப்பணியாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இது மக்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 80,735 ஆக இருந்தாலும், புதிய நோயா ளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. எனவே அங்கு இந்த நோய்க் காக அமைக்கப்பட்ட தற்கா லிக மருத்துவமனைகள் மூடப் பட்டு வருகின்றன. அந்தவகை யில் இந்த வைரசின் பிறப் பிடமான உகான் நகரில் 11 மருத்துவமனைகள் மூடப் பட்டு உள்ளன.
அதேநேரம் சீனாவுக்கு வெளியே இந்த வைரஸ் மிக வும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் கரோனா வுக்கு பலியானவர்கள் எண் ணிக்கை 21 ஆக உயர்ந்து விட்டது. வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக் கையும் 545அய் எட்டிவிட் டது. வைரஸ் பரவலின் வீரி யத்தால் நியூயார்க், வாசிங் டன், கலிபோர்னியா உள் ளிட்ட 8 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் குடியரசு கட்சி எம்.பி.யான டெட் குரூஸ்,  கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்த நபர் ஒருவ ருக்கு கரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே டெட் குரூ சும் தன்னைத்தானே தனி மைப்படுத்தி கண்காணிப்பில் இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே கரோனா நோயாளிகளுடன் சான் பிரான் சிஸ்கோவில் நிறுத்தப்பட்டு உள்ள அமெரிக்க கப்பலில் இருந்து பயணிகளை வெளி யேற்றும் நடவடிக்கைகள் நேற்று தொடங்கின. இந்த கப்பலில் இருக்கும் கனடா நாட்டவர்களை மீட்டு வர அந்த நாடு சிறப்பு விமானங் களை ஏற்பாடு செய்ய முடிவு செய்து உள்ளது.
தென்கொரியாவில் புதிதாக 248 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 7,382 ஆக உயர்ந்தது. அங்கு கரோனா வைரசுக்கு பலியா னோர் எண்ணிக்கையும் 51 ஆக அதிகரித்து உள்ளது.
இத்தாலியில் இருந்து சமீ பத்தில் அல்பேனியா திரும் பிய தந்தை, மகன் இருவருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டு இருப்பதன் மூலம், அங் கும் கரோனா வைரஸ் கால் பதித்துள்ளது. பாகிஸ்தா னின் கராச்சியை சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மொத்த எண்ணிக்கை 7 ஆனது.
இங்கிலாந்தில் 273 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அங்கு முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்ததன் மூலம் பலி எண்ணிக்கை 3 ஆகி விட்டது. போலந்தில் வைரஸ் பாதித்தவர் எண் ணிக்கை 11 ஆக உயர்ந்திருப்ப தாக சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இவ்வாறு உலக அளவில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத் துக்கும் மேற்பட்டோர் இந்த வைரசின் பிடியில் சிக்கியிருக் கும் நிலையில், பலியானவர் களின் எண்ணிக்கையும் 3,800 அய் எட்டியுள்ளது.
இவ்வாறு வேகமாக பரவும் கரோனா வைரசின் பீதியால் பல்வேறு நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை எடுத்து வரு கின்றன. அந்தவகையில் பிரான் சில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சி களுக்கு அரசு தடை விதித்து உள்ளது. அங்கு கரோனா பலி 19 ஆக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கத்தார் நாடு இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் நாட் டுக்குள் நுழைய தடை விதித்து உள்ளது. இதைப்போல சவுதி அரேபியாவும் இங்கிலாந்து, குவைத் உள்ளிட்ட 9 நாடுக ளுக்கு பயணத்தடை விதித்து உள்ளது. இஸ்ரேல் அரசு தங்கள் நாட்டுக்குள் வரும் வெளிநாட்டினரை தனிமைப் படுத்த பரிசீலித்து வருவதாக பிரதமர் பெஞ்சமின் நேட் டன்யாகு தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் இதுவரை கரோனா தொற்று கண்டுபிடிக்காத நிலையிலும், அங்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இத னால் ஏராளமான வெளி நாட்டு தூதர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டதால், பல தூதரகங்கள் நேற்று மூடப் பட்டு இருந்தன.
வங்காளதேசத்தில் 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் வருகிற 17ஆம் தேதி பிரமாண்ட முறையில் நடத்த திட்டமிட்டு இருந்த வங்காளதேச நிறுவ னர் ஷேக் முஜிபுர் ரகுமானின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளது.

அலைப்பேசிகளில் இணையதள பக்கங்களை எளிதில் படிக்க 'ரீட் இட்' வசதியை கூகுள் அறிமுகம்


நீங்கள் கையில் வைத்திருக்கும் அலைப்பேசிகளில் இணையதள கட்டுரைகளைப் படிப்பது என்பது இனி மிகவும் எளிதான காரியமாக இருக்கும். ஆன்ட்ராய்டு செல் போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் அசிஸ்டென்ட் பகுதி யில் ரீட் இட் என்ற வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனை க்ரோம் புரவுசர், கூகுள் சர்ச் அல்லது நியூஸ் ஆப் போன்ற தேடுதல் பிரிவு களில் திறக்கப்படும் இணைய தள பக்கங்களை ரீட் இட் வசதி கொண்டு பயன்படுத் தலாம்.
இந்த புதிய வசதி குறித்து கூகுள் பொறியியல் பிரிவின் துணைத் தலைவர் யோசி மாட்டியஸ் கூறுகையில், கூகு ளில் உள்ள அம்சங்களை பயன்படுத்த உலக நாடுகளில் உள்ள மொழிகள் தடையாக இருக்கக் கூடாது. இதைக் கருத்தில் கொண்டு பல புதிய தயாரிப்புகளை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடு பட்டு வருகிறோம். இணைய தளத்தில் உள்ள புதிய தகவல் கள், கருத்துகளையும் உலகின் அனைத்துத் தரப்பு மக்களும் மிகவும் எளிதாக அறிந்திடும் வகையில் அதற்கான உதவிக ளைச் செய்கிறது. உலகெங்கும் உள்ள பல்வேறு தரப்பினருக் கும் இப்போது அறிமுகப்படுத் தப்பட்டுள்ள கூகுள் அசிஸ் டென்ட் அம்சமானது மிகுந்த உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வசதியை பொது மக்கள் பயன்படுத்துவ தற்காக இணையதளங்கள் தங்களது பக்கங்களில் வேறு எந்த சிறப்பு  அம்சத்தையும் சேர்க்க வேண்டிய அவசிய மில்லை. ஆக்ஷன்ஸ் ஆன் கூகுள் என்ற கூகுள் அசிஸ் டென்ட் அம்சத்தை பயன் படுத்தும் வகையில் மொபைல் செயலில் அதனை ஏற்கும்படி செய்தாலே போதும்.

மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

இலாபத்தில் இயங்கும் பாரத் பெட்ரோலிய

நிறுவன பங்குகள் விற்பனை செய்யப்படுவதேன்?
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்று, பாரத் பெட்ரோலிய நிறுவ னம். இந்த நிறுவனம் லாபத் தில் இயங்கி வருகிற நிறுவனம் ஆகும். கடந்த டிசம்பர் மாதத் துடன் முடிந்த காலாண்டில் இந்த நிறுவனம், நிகர லாப மாக ரூ.2,051.43 கோடி ஈட்டி யது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப் பிடுகையில் இந்த லாபம் 3 மடங்கு ஆகும். ஆனால் இந்த நிறுவனத்தில் தனக்கு உரிய 52.98 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை கடந்த நவம்பர் மாதமே அளித்துவிட் டது. அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் கீழான நுமலி கார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் (அசாம்) மட்டும் மத்திய அரசின் கட்டுப்பாட் டில் இருக்கும். இப்போது பாரத் பெட்ரோலிய கழகத் தின் 52.98 சதவீத பங்குகளை வாங்குவதற்கு விருப்பத்தை வெளிப்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பங்குகளை வாங்க விரும்பு வோருக்கு 10 பில்லியன் டாலர் (சுமார் ரூ.73 ஆயிரம் கோடி) சொத்துகள் இருக்க வேண்டும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாரத் பெட் ரோலிய நிறுவன பங்குகள் விற்பனை செய்ய உள்ளது தொடர்பாக, மத்திய அர சுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பா ளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது சுட்டுரையில், “கடந்த டிசம்பர் மாதத்தில் பிபிசிஎல் மூலம் அரசுக்கு ரூ.2051.53 கோடி லாபம் கிடைத்துள் ளது.
இந்த அளவிற்கு லாபகர மாக இயங்கும் நிறுவனத்தை அரசு விற்க வேண்டிய கட் டாயம் என்ன வந்தது. தனது நண்பர்களான பெரு நிறுவன அதிபர்களுக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் பிரதமர் மோடி இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது” என்று பதிவிட்டு உள்ளார்.

பா.ஜ.க. முன்னாள் முதல்வர் மீது குற்றச்சாட்டு

முத்ரா கடன்களில் ரூ.25,000 கோடி ஊழல்..?

மகாராட்டிரா வில் தேவேந்திர பட்னாவிஸ் காலத்தில் விநியோகிக்கப் பட்ட ரூ. 25,742 கோடி மதிப் புள்ள முத்ரா கடன்களின் நம்பகத்தன்மை குறித்து என் சிபி கேள்வி எழுப்பி இருக்கிறது.
மகாராட்டிரா சட்ட சபையில் பொருளாதார கணக்கெடுப்பு தாக்கல் செய் யப்பட்டது. அந்த கணக் கெடுப்பின்படி, 2018-19ஆம் ஆண்டில் 43 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முத்ரா திட்டத்தின் கீழ்
ரூ. 25,742 கோடி கடன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில், இந்த கடன் களை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மை இருப்பது குறித்து சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் அரசு கேள்வி எழுப்பியது. இது குறித்து என்சிபி தலைவரும், திறன் மேம்பாட்டு அமைச் சருமான நவாப் மாலிக் கூறி யதாவது:
இந்த பயனாளிகளின் தரவு எங்கே? பயனடைந்த வர்கள் மற்றும் அவர்களில் எத்தனை பேர் பணத்தை சரியான பயன்பாட்டிற்கு  பயன்படுத்தியிருக்கிறார்கள்? இந்தத் தரவு மாநில வேலை வாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புக்காக அளிக்கப்பட வில்லை.உண்மையில் பணம் தேவைப்படும் நபர்கள் பயன டைந்தார்களா என்பது எங் களுக்கு எப்படித் தெரியும்? அல்லது அரசு தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு லஞ்சமாக விநியோகிக்கப்பட் டதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
முன்னதாக, 2019ஆம் ஆண்டின் போது நடைபெற்ற கூட்டங்களில், மகாராட்டி ராவின் கூடுதல் தலைமைச் செயலாளர் அப்போதைய முதல்வர் பட்னாவீசின் உத்த ரவைப் பெற்றும் பாஜக மாற் றும் அவர்களுக்கு ஆதரவா னவர்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு மறைமுகாக உதவினார் என்ற குற்றச்சாட் டும் உள்ளது,  கடன்வழங் குவதில் முன்னாள் முதல்வர் மற்றும் தலைமைச்செயலா ளரின் தலையீடு இருப்பதால் இதில் ஊழல் நடைபெற்று இருக்கும் என்று தேசிய வாத காங்கிரஸ் தொடர்ந்து குற் றம் சாட்டி வருகிறது

பெண் சிசு கொலையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை

மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மதுரை மாவட்டத்தில் சில பெற்றோர்கள் ஆண் குழந்தை வேண் டும் என்ற விருப்பத்தினாலும், வறுமை போன்ற குடும்ப சூழ்நிலை காரணமாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பிறந்தால் அதனை வளர்க்க விருப்பம் இல்லாமல் கள்ளிப்பால் போன்ற விஷ மருந்தினை கொடுத்து கொலை செய்கின்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
இந்த கொடிய பெண் சிசு கொலை போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் மதுரை மாவட்ட காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வரு கிறது. மேலும் பெற்றோர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைகளை வளர்க்க இயலாத சூழ்நிலையின்போது தமிழக அரசின் சார்பில் “தொட்டில் குழந்தைகள் திட்டம்” என்ற சிறப் பான திட்டத்தை அரசு மருத்துவமனையில் செயல்படுத்தி வருகிறது.
மேலும் தமிழக அரசு குழந்தைகள் நல அமைப்பு என்ற அமைப் பினை ஏற்படுத்தி அதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக திட்டங்கள் வகுத்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வரு கிறது. அதோடு மட்டுமின்றி அரசு, தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் பல குழந்தைகள் நல காப்பகங்கள் மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டால் அவர்கள் பெண் குழந்தைகள் காப்பகத்தில் வளர்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள். எனவே பொதுமக்களில் எவரும் பெண் சிசுக்கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தெற்கு


கரோனா வைரஸ் மனித குலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது, இதனால் பாதிப்பை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்த நிலையில் இந்த நோய் குறித்து அறிவியல் பூர்வமான நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளைப் பெற்று அரசு மக்களுக்கான நோய்த் தீர்ப்பு மற்றும் தொற்று பரவல் தடுப்பு  முறைகளைக் கையாண்டு வருகிறது. இந்த நேரத்தில்  கடவுள் சக்தி, இன்ன பிற நாட்டு மருந்துகள் மற்றும் மாட்டுச்சாணி, மாட்டு மூத்திரம் போன்றவை களால் இந்த நோய் தீரும் என்று சிலர் கூறிக்கொண்டு வருகின்றனர். இதை மக்கள் நம்பவேண்டாம், நோயிலிருந்து காப்பதற்கு அறிவி யல் அடிப்படையிலான மருத்துவ ஆலோசனை மட்டுமே தேவை!
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

இது வடக்கு


‘‘மாட்டுச்சாணி, மாட்டு மூத்திரம், காயத்திரி மந்திரம், யோகா மூச்சுப்பயிற்சி போன்றவைகளால் கரோனா குணமாகிவிடும்'' உத்தரப்பிரதேச சாமியார் முதல்வர் ஆதித்யநாத் முதல் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை கூறிய உளறல்!

என்ன படித்தாலும் அவா குலத்தொழில்தானே - பேஷா செய்யட்டுமே! -பார்ப்பனரின் புத்தி


கோவை மாநகராட்சி துப்புரவு பணி ஆட்தேர்விற்கு வேலையில் சேருவதற்கு முதுநிலைப் பொறியாளர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்ட பலர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் பலருக்கு வேலையும் கிடைத்தது. அப்படி வேலை கிடைத்த ஒருவர் எம்.எஸ்சி., படித்த பெண்.
இது தொடர்பாக தொலைக்காட்சியில் செய்திவந்த போது ஒரு பார்ப்பனர் இவ்வாறு ஆங்கிலத்தில்  சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
‘‘அவளைப் பார்க்க சக்கிலியச்சி போல் தான் தெரிகிறது. அது அவர்களது குலத்தொழில் தானே, இதில் என்ன தப்பு? அவர் அந்தத் தொழிலை தேர்ந்தெடுத்துதானே மகிழ்ச்சியோடு விண்ணப்பித்திருக்கிறார். இப்போது எல்லாம் அரசு குப்பை அள்ள கையில் கையுறை உள்பட பல உபகரணங்களைத் தருகிறது'' என்று பதிவிட்டிருந்தார்.
நாடி நரம்பு எல்லாம் ஜாதிவெறியேறிய பார்ப்பன இனத்தினருக்கு மட்டுமே இது போன்ற எண்ணங்கள் ஏற்படும்.

Tuesday, March 10, 2020

கரோனா அச்சம் ; சென்னையில் 10 விமானங்கள் ரத்து

கரோனா வைரஸ் தற்போது இந்தியா உள்ளிட்ட ஏராளமான உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரசால் 39 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கரோனா வைரஸ்  அச்சம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசுபிக் ஆகிய நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளன.

அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து கமலா ஹாரிஸ் திடீர் விலகல்


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து இந்திய வம்சாவளி செனட் எம்பி.யான கமலா ஹாரிஸ் விலகி னார்.
இதில் தற்போதைய அதி பர் டிரம்ப்பை எதிர்த்து கள மிறங்க உள்ள ஜனநாயக கட் சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்யும் நியமன தேர்தல் அடுத்த ஒரு வாரத்தில் தொடங்க உள் ளது. இம்முறை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாள ராக களமிறங்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர்னியா செனட் எம்பி.யான கமலா ஹாரிஸ், இண்டியானா முன்னாள் மேயர் பேட்டி புட்டிச், நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளோயம்பெர்க், வெர்மன்ட் செனட் எம்பி சான்டர்ஸ், அமெரிக்காவின் முதல் இந்து எம்பி.யான துளசி கப்பார்ட்,  எமி கிளோபச்சர் ஆகியோர் போட்டியிட்டனர்.
கடந்த சில மாதங்களாக இவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில், ஜோ பிடென், சான்டர்ஸ், கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனாலும், ஜோ பைடனுக்கே மக்கள் ஆதரவு அதிகளவில் உள்ளது. இந்நிலையில், அதிபர் வேட் பாளர் போட்டியிலிருந்து கமலா ஹாரிஸ் நேற்று விலகினார்.

பன்னாட்டு மகளிர் தினத்தையொட்டி சாதனை பெண்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை சுட்டுரை தளத்தில் பகிரும் வகையில் பிரச்சாரம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. ‘அவள் நமக்கு உத்வேகம் அளிக்கிறாள்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த பிரச்சா ரத்தில் இணையுமாறு மணிப் பூர் மாநில பருவநிலை மாற்ற ஆர்வலரும், இந்தியாவின் கிரேட்டா என அழைக்கப்படு பவருமான 8 வயது லிசிபிரியா கங்குஜமுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்த அழைப்பை லிசிபிரியா நிராகரித்து விட் டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த கவுரவத் துக்காக முதலில் நான் மகிழ்ச் சியும், துக்கமும் அடைந்தேன். பின்னர், பருவநிலை மாற் றத்தை அரசியல்வாதிகள் தீவி ரமாக எடுத்துக்கொள்ளாத தால், இந்த கவுரவத்தை நிரா கரிப்பது என முடிவு செய் தேன்’ என்று கூறினார். பருவநிலை மாற்றம் தொடர் பாக ஆயிரக்கணக்கான குழந் தைகள் மற்றும் இளைஞர்க ளுடன் நாடாளுமன்றத்துக்கு முன்பும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆண்டு முழு வதும் போராட்டம் நடத்தி யும் யாரும் அவற்றை கண்டு கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

சீனாவின் பீஜி யான் மாகாணத்தின் குவான்சு நகரில் 5 மாடிகளை கொண்ட ஓட்டல் ஒன்று கரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டு, கரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப் படும் நபர்கள் அதில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த ஓட் டல் திடீரென இடிந்து விழுந் தது. அதில் அங்கு தங்கியி ருந்த 71 பேர் இடிபாடுகளுக் குள் சிக்கிக்கொண்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் 100-க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேர போராட் டத்துக்கு பிறகு 38 பேர் படு காயங்களுடன் மீட்கப்பட்ட னர். அதனைத்தொடர்ந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியி ருக்கும் மற்ற 33 பேரை மீட் பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு விடியவிடிய மீட்பு பணிகள் தொடர்ந்தன.
இந்த நிலையில் நேற்று காலை இடிபாடுகளில் இருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 23 பேர் மாயமாகி இருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் மீட்பு குழுவினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின் றனர்.

மோடியின் அழைப்பை நிராகரித்தது ஏன்?

8 வயது சிறுமி

லிசிபிரியா விளக்கம்

  
பன்னாட்டு மகளிர் தினத்தையொட்டி சாதனை பெண்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை சுட்டுரை தளத்தில் பகிரும் வகையில் பிரச்சாரம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. ‘அவள் நமக்கு உத்வேகம் அளிக்கிறாள்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த பிரச்சா ரத்தில் இணையுமாறு மணிப் பூர் மாநில பருவநிலை மாற்ற ஆர்வலரும், இந்தியாவின் கிரேட்டா என அழைக்கப்படு பவருமான 8 வயது லிசிபிரியா கங்குஜமுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் இந்த அழைப்பை லிசிபிரியா நிராகரித்து விட் டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த கவுரவத் துக்காக முதலில் நான் மகிழ்ச் சியும், துக்கமும் அடைந்தேன். பின்னர், பருவநிலை மாற் றத்தை அரசியல்வாதிகள் தீவி ரமாக எடுத்துக்கொள்ளாத தால், இந்த கவுரவத்தை நிரா கரிப்பது என முடிவு செய் தேன்’ என்று கூறினார்.
பருவநிலை மாற்றம் தொடர் பாக ஆயிரக்கணக்கான குழந் தைகள் மற்றும் இளைஞர்க ளுடன் நாடாளுமன்றத்துக்கு முன்பும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆண்டு முழு வதும் போராட்டம் நடத்தி யும் யாரும் அவற்றை கண்டு கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.



கோயிலுக்கு வர வேண்டாம் - எச்சரிக்கை

கேரளாவில் 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறுகையில், ‘‘ஆற்றுகால் கோயில் பொங்கல் விழா இன்று நடக்கிறது. கொரோனா அறி குறி இருப்பவர்கள் கோயிலுக்கு வரவேண் டாம். பொங்கல் நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். யாருக்காவது கரோனா பாதிப்பு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் அருகில் இருப்பவர்களை கண் டறியத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படு கிறது’’ என்றார் இதேபோல், சபரிமலைக்கும் கரோனா பாதிப்பு இருப்பவர்கள் வரவேண் டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்றொரு கோயிலான திருமலைக்கும், இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் திருமலைக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூடுதல் இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.

சிறுநீரக கற்களை அகற்றும் சிறுகீரை

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட சிறுகீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது.
சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் ஒருமுறை சிறுகீரை சமைத்து சாப்பிடுவது நல்லது.

மாரடைப்பு என்றால்....


மாரடைப்பு  (Heart Attack) என்பது என்ன?

இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்து, ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது, மாரடைப்பு (Heart Attack) உருவாகிறது. அதாவது, ரத்த ஓட்டம் தடைபடுவதால் அல்லது ரத்த ஓட்டம் இல்லாமல் போவதால் இதயத்துக்குத் தேவை யான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், ரத்த செல்கள் அழியத் தொடங்கும். இதனால், இதயம் பாதிக்கப்பட்டு, தனது துடிப்பை நிறுத்திக்கொள்வதே மாரடைப்பு.
 
திடீர் இதயத்துடிப்பு முடக்கம்(Sudden Cardiac Arrest) என்பது என்ன?

நம் இதயத்துக்கு மத்திய நரம்பு மண்டலத்தில் இருந்து மின்னோட்டம் வருகிறது. சில காரணங்களால் இந்த மின்னோட்டத்தில் ஏற்ற இறக்கங்கள் (Fluctuations) ஏற்படும்போது, இதயத் துடிப்பு திடீரென  அதிகரித்தும் குறைந்தும் தாறுமாறாக செயல்படுகிறது. இதனால், ஒரு கட்டத்தில் எரிந்துகொண்டிருக்கும் பல்பு ணஃபீஸ் போவதைப் போல நமது இதயம் சட்டென தன் துடிப்பை நிறுத்திக்கொள்கிறது. இந்த நிலையையே திடீர் இதயத் துடிப்பு முடக்கம் (Sudden cardiac arrest) என்பார்கள். இதயத் துடிப்பின் திடீர் நிறுத்தத்தால், உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டம், ஆக்ஸிஜன் தடைபடுகிறது. தொடர்ச்சியாக 10 நிமிடங்களுக்கு மேல் மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் தடை ஏற்படுவதால் மயக்க நிலைக்குச் சென்று,  சுயநினைவு இழக்கும் நிலை ஏற்படுகிறது.

வேறுபாடு  அறிவது எப்படி?

மாரடைப்பு ஏற்படும்போது முதலில் நெஞ்சுப் பகுதியில் ஒரு விதமான வலி (நெஞ்சைப் பிசைகிற மாதிரியோ, அழுத்துகிற மாதிரியோ வலி) ஏற்படுவது போல தோன்றும். இந்த வலி கழுத்து மற்றும் இடது கை பகுதிகளில் பரவும், ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். இதயத்துடிப்பு இருக்கும்,  மூச்சுத் திணறல் உண்டாகும். வியர்த்துக் கொட்டி, மயக்கம் வரும். இதுபோன்ற அறிகுறிகளை வைத்தே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அறியமுடியும். அதாவது மாரடைப்பு வந்தவர்கள் நெஞ்சுவலியைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு சுயநினை வோடுதான் இருப்பார்கள். எனவே, உடனடியாக ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆஸ்பிரின் போன்ற மாத்தி ரைகள் எடுத்துக்கொண்டு  இதய அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்கு வசதி உள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கே மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகள் அளித்து உயிரைக் காப்பாற்றுவர்.
திடீர் இதயத்துடிப்பு முடக்கம். மாரடைப்பைவிடவும் அபாயகரமானது, ஏனெனில் எந்தவித அறிகுறியும் இல்லாமல், திடீரென ஒருவர் நிலைகுலைந்து, மயக்க நிலையில் தரையில் சாய்ந்தால் அது திடீர் இதயத் துடிப்பு முடக்கமாக இருக்கலாம். இதயத் துடிப்பு நின்றுவிடுவதால், இதயத்தின் உள்ளிருந்து ரத்தத்தை உந்தித் தள்ளும் பணியை இதயம் நிறுத்திவிடுகிறது. எனவே, இதயத்திலிருந்து பிற உறுப்புகளுக்கு ரத்தம் செல்ல, நெஞ்சுப் பகுதியில் வேகமாக அழுத்தம் கொடுத்து, வாயோடு வாய் வைத்து செயற்கை  மூச்சு  அளிக்கும் முதலுதவி அளிக்க வேண்டும். இதற்கு  சி.பி.ஆர் (Cardiopulmonary Resuscitation) முத லுதவி என்று பெயர். தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் கொண்டுசென்றால் டிஃபிப்ரிலே ஷன் (Defibrillation) கருவி மூலம் மின் தூண்டல் ஏற்படுத்தி, இதயத்துக்கு உயிரூட்ட முடியும். திரைப் படங்களில் நெஞ்சுப் பகுதியில் அயன் பாக்ஸ் போல ஒரு கருவியை வைத்து வைத்து எடுப்பார்களே அதுதான் டிஃபிப்ரிலேஷன் கருவி.

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட கொய்யாப் பழம்


எளிமையாகக் கிடைக்கக்கூடிய சிறந்த பழங்களில் ஒன்று கொய்யாப் பழம். இந்தப் பழத்தில் ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள், வைட்டமின் சி, லைக்கோபின், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன. கொய்யாப் பழம், பல நன்மைகளை உள்ளடக்கியிருக்கிறது.
கொய்யாப் பழம் மட்டுமல்லாமல் கொய்யாவின் இலையும் மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. கொய்யாப் பழத்தில் இருக்கும் எண்பது சதவீத நீர்ச்சத்து மனிதத் தோலை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
கொய்யாப் பழம்

அளிக்கும் நன்மைகள்
ஜீரணத்துக்கு உதவுகிறது

கொய்யாப் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால், அன்றாடம் கொய்யாப் பழத்தைச் சாப்பிட்டுவருவது ஜீரண மண்டலத்தைச் சீராக்குவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. ஒரு கொய்யாப் பழத்தில் அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டிய 12 சதவீத நார்ச்சத்து உள்ளது.

குறையும் ரத்தச்

சர்க்கரை அளவு

கொய்யாப் பழம் சாப்பிடுவதால் ரத்தச் சர்க்கரை அளவு குறைவதாகப் பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொய்யாப் பழ இலைத் தேநீர் அருந்துவது நீண்டகால அடிப்படையில் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், கொய்யாப் பழத்தையும் கொய்யா இலைத் தேநீரையும் தொடர்ந்து அருந்தலாம்.

மாதவிடாய் வலியைக் குறைக்கிறது

மாதவிடாயின் போது பல பெண்கள் வயிற்று வலியை எதிர்கொள்கின்றனர். கொய்யாப்பழம் மாதவிடாயின்போது ஏற்படும் வலியைக் குறைக்கிறது. மாதவிடாயின் போது கொய்யாப் பழ இலைகளை உட்கொண்ட பெண்கள், மாதவிடாய் வயிற்றுவலியிலிருந்து பேரளவு நிவாரணம் பெற்றதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பேறுகாலத்துக்கு நல்லது

கொய்யாப் பழத்தில் இருக்கும் ஃபோலேட் ஊட்டச்சத்து பேறுகாலத்துக்கு அத்தியாவசியமானது. இந்த ஊட்டச்சத்து வயிற்றிலிருக்கும் குழந்தையின் மூளை, தண்டுவட வளர்ச்சிக்கு உதவுகிறது.

இதய நலம்

கொய்யாப் பழத்தில் இருக்கும் ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள், வைட்டமின்கள் இதயம் பாதிக்கப்படாமல் தடுக்க உதவுகிறது. அத்துடன், கொய்யாவில் அதிக அளவில் இருக்கும் பொட்டாசியம்,
கரையும் நார்ச்சத்து ஆகியவை இதய நலனைப் பேணுகின்றன. ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, கொழுப்புச் சத்தைக் குறைத்து இதய நோய்கள் உருவாவதிலிருந்து இந்தப் பழம் தடுக்கிறது.


மன அழுத்தத்தைக் குறைக்கும்

கொய்யாப் பழத்தில் இருக்கும் மக்னீசியம், உடலில் இருக்கும் நரம்புகள், தசைகளைத் தளர்த்துவதற்கு உதவுகிறது.
இது மன அழுத்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துகிறது. மக்னீசியம் மன அழுத்தத்தைக் குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

தோல் நலன்

கொய்யாப் பழத்தில் இருக்கும் ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள் மனிதத் தோல் பாதிப்படைவதிலிருந்து தடுக்கின்றன. அத்துடன், வயதான தோற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இந்தப் பழம் உதவுகிறது.

கொய்யாப் பழ இலைகளை அரைத்து முகத்தில் தடவி வந்தால், பருக்களைக் குணப்படுத்த உதவும். பருக்களை உருவாக்கும் பாக்டீரியாவைக் கொய்யாப் பழ இலைகள் கட்டுப்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
நோய் எதிர்ப்பு ஆற்றலை

அதிகரிக்கிறது

வைட்டமின் சி ஊட்டச்சத்து குறைவாக இருப்பதால் தொற்றுகளும் நோய்களும் ஏற்படுகின்றன. வைட்டமின்  சியை எடுத்துகொள்வதற்குச் சிறந்த வழியாகக் கொய்யாப் பழம் இருக்கிறது.

ஒரு கொய்யாப் பழம், அன்றாடத் தேவைக்கான வைட்டமின் சி சத்தை வழங்குகிறது. ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி அளவைவிட இரண்டு மடங்கு கூடுதலான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் இருக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்குவதில் வைட்டமின் சி முக்கியமான பங்கை வகிக்கிறது.

நாமம் வடகலையா? - தென்கலையா?


'எஸ்' வங்கி இயக்குநர்களில் ஒருவர் ரவி ராகவேந்திரா. நடிகர் ரஜினி யின் மைத்துனர், பிரபல இசை யமைப்பாளர் அனிருத்தின் தந்தையும் இவர் தான்!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது நிரந்தர வைப்புத் தொகையான ரூ.1500 கோடியை கடந்த மாதம் 'எஸ்‘ வங்கியிலிருந்து திரும்பப் பெற்றது. அடுத்த மாதம் வங்கி திவாலாகும் என்பது இவர்களுக்கு எப்படி தெரியும் என்பது "ஏழுமலை யானுக்கே வெளிச்சம்!"
'எஸ்' வங்கி, ரிசர்வ் வங்கி யின் கட்டுப்பாட்டிற்கு வருவ தற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் குஜராத்தில் உள்ள ஒரு நிறுவனம், தன் கணக்கில் உள்ள சுமார் 250 கோடி ரூபாயைத் திரும்ப பெற்றது. எப்படி என்பது மத்திய பெரி யவாள்களுக்கே வெளிச்சம்!
மற்ற வங்கிகள் முன் வராத நிலையில் காத்திருந்த கொக்கு போல எஸ்பிஅய் வங்கி, 'எஸ்' வங்கியின் பெரும்பாலான பங்குகளை வாங்க முன் வந்தது எப்படி என்பதும் யாருக்கு வெளிச்சம்?
இன்னும் உண்மைகள் வெளி வந்தால் அதில் கணக்கு வைத்திருக்கும் அப்பாவி மக்களுக்கு மாரடைப்பு என்பது நிச்சயம்! எல்லா பெரிய அமைப்புகளும் சேர்ந்து மக்களுக்கு போட்ட நாமம் வடகலையா? தென்கலையா? என்பதே கேள்வி!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...