102 வயதான முதியவரிடம் சான்றிதழ் கேட்கிறது பாஜக
கருநாடக மாநி லம், விஜயபுராவை சேர்ந்த
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த எம்எல்ஏ., பசனகவுடா பாட்டீல் யட் னல்,
சுதந்திர போராட்ட தியாகியான எச்.எஸ்.துரைசாமியைப் பார்த்து இவர் ஒரு
போலியான சுதந்திர போராட்ட தியாகி என்றும் இவர் பாகிஸ்தான் ஏஜென்ட் போன்று
நடந்து கொள்கிறார் என்று தெரிவித்தார். இந்த கருத்து பெரும் சர்சையை
கிளப்பியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய
சுதந்திர போராட்ட தியாகி யான எச்.எஸ். துரைசாமி, நான் எனது பயோ டேட்டாவை
தயாரித்து வருகிறேன். நான் சுதந்திர போராட் டத்தில் பங்கேற்றதற்கான ஆவணங்
களை சேகரித்து கொண்டிருக்கிருறேன் என்றார்.
கருநாடக மாநிலம், ராமநகரம் மாவட்டம்,
ஹாரோஹள்ளி கிராமத் தில், 1918ஆம் ஆண்டு ஏப்.10ஆம் தேதி சிறீனிவாசம் மற்றும்
பர்வத்தம்மாவின் இளைய மகனாகப் பிறந்தார் பெங் களூரு, சென்ட்ரல்
கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார்
ஆசிரியராகப் பணியாற்றி வந்த துரைசாமி,
வெள்ளையனே வெளி யேறு போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில், அவர்
மீது வெடிகுண்டு தயாரித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சிறையில்
அடைக்கப்பட்டார்
காங்கிரஸிலிருந்து விலகல்:
1975ஆம் ஆண்டு அன்றைய பிரத மர் இந்திரா
காந்தி, அவசர நிலையை பிரகனப்படுத்திய போது அதை எதிர்த்து துரைசாமி
போராட்டங் களை நடத்தினார். மேலும் இந்திரா காந்தியை கடுமையாகச் சாடிய
துரைசாமி,‘ஜனநாயகவாதியாக நீ தேர்ந்தெடுக்கப்பட்டால், சர்வாதி காரியாகச்
செயல்படுகிறாயே. இதையே (இந்திராகாந்தி) தொடர்ந்தால், வீடுவீடாகச் சென்று
மக்களிடம் பிரச்சாரம் செய்வேன்‘ என்று கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்
இதனால் துரைசாமி கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை
விசாரித்த நீதிமன்றம்,‘ பிரதமரை விமர்சிக்க அவருக்கு முழு உரிமை உள்ளது.
அவர் இந்தியாவின் எதிரி அல்ல‘ என்று கூறி, 4 மாதங்களாக சிறையில் இருந்த
துரைசாமியை விடுதலை செய்தனர்.
அதன்பிறகு, காங்கிரஸ் கட்சியை துறந்த
துரைசாமி, அன்றுமுதல் மக் கள் பிரச்சினைகளுக்காக மக்களோடு மக்களாக நின்று
போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி,
பி.வி.நரசிம்மராவ், மன்மோகன் சிங் உள்ளிட்டோரின் ஆட்சிக் காலங் களில்
மக்கள் நலனுக்கு எதிராக எடுக் கப்பட்ட முடிவுகளைக் கண்டித்து போராட்டங்களை
நடத்திவந்திருக் கும் எச்.எஸ்.துரைசாமி, கருநாடக அரசுக்கு எதிராகவும்
போராட்டங் களை நடத்தி வருகிறார். முந்தைய சித்தராமையா ஆட்சியில் பெங்களூ
ரில் 800 மரங்களை வெட்டி ஸ்டீல் மேம்பாலம் அமைக்க முற்பட்ட போது, அதை
எதிர்த்து போராட்டம் நடத்தினார்.
இதேபோல, பெலகாவியில் சுவர்ண விதான சவுதா
முன் நில மில்லா விவசாயிகளுக்கு நிலம் வழங்கக் கோரி தொடர் போராட்டம்
நடத்தினார் ஏரிகளின் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி போராட்டங் களை
நடத்தினார். அண்மைக்கால மாக, குடியுரிமை திருத்தச் சட்டத் துக்கு எதிராக
தீவிரமாக போராட் டத்தில் ஈடுபட்டு வருகிறார்
கருநாடக அரசின் காந்தி சேவை விருது,
பசவண்ணர் விருது, ராம்நாத் கோயங்கா விருதுகளைப் பெற்றிருக் கும் துரைசாமி,
போராட்டத்தில் ஈடுபட்டு மக்களின் உரிமைகளின் வென்றெடுப்பதே தனது லட்சியம்
என்கிறார்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியை
சேர்ந்த மூத்த சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் , இவர் ஒரு போலி
சுதந்திர போராட்ட தியாகி என்றும், பாகிஸ்தான் ஏஜென்ட் என்றும்
தெரிவித்தார். மேலும் இவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்
றதற்கான ஆவணங்களையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இவரது
கருத்துக்கு சில சீனியர் பாஜக தலைவர்களும் அதா வது மத்திய அமைசார் பிரபுல்
ஜோசி ஆகியோர் பின்னால் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கடந்த செவ்வாய்க் கிழமை
காங்கிரஸ் கட்சி 1971-ஆம் ஆண்டு, சுதந்திரப் போராட்ட தியா கியான எச்.எஸ்.
டோரெஸ்வாமி பெங்களுர் மத்திய சிறையில் இருந்த தற்கான ஆவணங்களை வெளியிட்
டது. திருமணம் ஆகாத 25 வயது துரைசாமி 1942-ஆம் ஆண்டில் டிசம்பர் 18-ஆம்
தேதி முதல் சிறையில் இருந்தார் என்றும் அதற்கு பின்னர் 1943-ஆம் ஆண்டின்
டிசம்பர் 8-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வா ளர் ராமசந்திர
குஹா தெரிவிக்கையில், இவர் நாட்டுக்காக உழைத்தவர். இவர் மீது போலி
சுதந்திரப் போராட்ட தியாகி என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது
அதிர்ச்சியளிக்கிறது என்றார்.
No comments:
Post a Comment