Showing posts with label பெண்கள் நிலை. Show all posts
Showing posts with label பெண்கள் நிலை. Show all posts

Friday, July 10, 2015

வணிகத்துறை நிறுவனங்களில் நிருவாகப் பொறுப்புகளில் பெண்களை நியமனம் செய்வதில்லை

வணிகத்துறை நிறுவனங்களில் நிருவாகப் பொறுப்புகளில் பெண்களை நியமனம் செய்வதில்லை

அரசும் இப்பிரச்சினையில் அக்கறையோடு இருப்பதில்லை

மத்திய அமைச்சர் மேனகா குற்றச்சாட்டு!

கூட்டத்தை விட்டு கோபமாக வெளியேறினார்

புதுடில்லி, ஜூலை 10_ அசோசெம், எப்அய்சி சிஅய், சிஅய்அய் உள் ளிட்ட வணிகத்துறை களின் பல்வேறு பிரிவு களாக உள்ளவர்களி டையே நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பாஜக அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறைக்கான அமைச்சரான மேனகா காந்தி பங்கேற்றபோது, கொஞ்சம்கூட அக் கறையே இல்லாத கூட்ட மாக இருக்கிறது, கால விரயம்தான் என்று கோப மாகக்கூறிவிட்டு கூட்ட அரங்கைவிட்டு வெளியேறி விட்டார்.

நாட்டை கட்டமைப் பதில் போதிய அக்கறை யுடன் அவர்களில் எவ ருமே இல்லை என்று அவர் குற்றம் சாட்டியுள் ளார். மேனகா காந்தி கூட் டத்தில் பாதியிலேயே வெளியேறிய சம்பவத்தால் கூடியிருந்த பார்வையா ளர்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. கால விரயமானது
வணிக அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்பது என்பது மிகுந்த கால விரயமானது என்று மேனகா கூறியுள்ளார்.

நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ப தற்காகத்தான் இந்தக் கூட்டம் கூட்டப்படு கிறது. ஆனால், செயலாற் றுவதைக் காட்டிலும், அவர்களிடையே பேச்சு தான் பெரிதாக இருக் கிறது.

மேலும் அவர் கூறும் போது, நாடுமுழுவதும் பெண் களுக்கான 300 கழிப் பிடங்கள் மட்டுமே சிஎஸ்ஆர் மூலமாக கட் டப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறும் போது,

நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளின்படி, தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் இருக்கின் றன. நிறுவனங்களில் பாலி யல் புகார்களை பெற்று விசாரணை செய்து நட வடிக்கை எடுத்திட குழு அமைக்கப்பட்டு குறைந்த பட்சம் நிர்வாகத் தில் இயக்குநர்களாக ஒரு பெண்ணைக்கூட நிய மிக்காமல் உள்ளனர். அவர்கள் ஏராளமாக பேசுகிறார்கள். ஆனால் சிறிய அளவில் மட்டுமே அவர்களின் செயல்பாடு கள் உள்ளன. அரசு என்றாலும் வேண்டு கோளாகத்தான் கடமைக் காக செயல்பட்டுவரும் நிலை உள்ளது என்றார்.

பொதுவாக உள்ள குற்றச்சாட்டாக இருப்பது என்ன வென்றால், நிறு வனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் உறவினர் களை, குடும்பத்து உறுப் பினர்களையே இயக்கு நர்களாக நியமித்துக் கொள்கின்றனர்.

உங்களில் (நிறுவனத் தாரில்) எத்தனைபேர் உறவுமுறைக்கு அப்பாற் பட்டவர்களாக இருக்கும் பெண்களை நிர்வாகங் களில் நியமனம் செய்து வருகிறீர்கள்? அக்கறையு டன் கூடிய நிர்வாகிகளை நீங்கள் (நிறுவனத்தார்) நியமனம் செய்வதில்லை. அதேபோலவே நாங் களும்(அரசும்) கடமைக் காக வேண்டுகோளை முன்வைத்துவருகிறோம். அனைவரும் கூடுகிறோம், ஏற்கெனவே தயாரிக்கப் பட்ட பேச்சைப் பேசிவரு கிறோம் என்று கூறினார்.

பதில் அளிக்க வேண்டும்

மேலும் அவர் குறிப் பிடும்போது, உண்மையிலேயே அக் கறையுடன் பேசுபவர் களாக பேசுவதாக இருந்தால்தான், இங்கு கூடி விவாதிப்பதிலும், எதையாகிலும் செய்வதி லும் ஓர் பொருள் இருக்க முடியும் என்றார்.

உறவுப்பெண்களைத் தவிர்த்து நிர்வாகப் பொறுப்புகளில் பெண்  கள் நியமிக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து அனைத்துப் பன்னாட்டு நிறுவனங்களும் பதில் அளிக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்போகி றேன் என்றார் மேனகா.

Sunday, February 1, 2015

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை உச்சநீதிமன்றம் கண்டனம்

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க  மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி, பிப்.1 பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான வன்முறை சமீப காலமாக அதிகரித்து வருவது குறித்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.தேவ் தலைமையிலான அமர்வு மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளது.  குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது, குழந்தைகள் கடத்தலையும், அவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாவதையும் தடுப்பது தொடர்பாக மேற்கொள் ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கடந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி பிறப்பிக்கபட்ட உத் தரவை, மாநில அரசுகளுக்கு டிசம்பர் 12-ஆம் தேதிதான் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த மெத்தனப்போக்கு கவலையளிப்பதாக உள்ளது.

மேலும் இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலை யிடாமல் இருக்கிறது. பாலியல் வன்முறைகள் மற்றும் குழந்தைகடத்தல் போன்ற குற்றங்கள் மீது மத்திய அரசு மாநில அரசுகளின் மீது பழியைப் போட்டு தனது கட மையில் இருந்து ஒதுங்கி விடுகிறது; இது நாட்டை வழி நடத்திவரும் அரசுக்கு அழகான செயலல்ல. பெண் களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு இதைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரி வித்துள்ளனர்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, January 28, 2015

குழந்தைத் திருமணங்களால் சிதையும் எதிர்காலம்

உலகம் முழுவதும் நடக்கும் குழந்தைத் திருமணங் களால் பாதிக்கப்படும் சிறுமிகளில், மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்த சிறுமிகள் என்கிறது யுனிசெஃப் நிறுவனம்(அய்க்கிய நாடு களின் சிறுவர் நிதியம்). குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படா விட்டால், 2050-க்குள் நூறு கோடி சிறுமிகள் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சித் தகவலைத் தருகிறது அந்த நிறுவனம்.

2009ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஜனவரி 24ஆம் தேதி, தேசிய பெண் குழந்தைகள் நாள் கடை பிடிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு தேசிய பெண் குழந்தை நாளை முன்னிட்டு இந்தியத் தொழிற் கூட்டமைப்பும், யுனிசெஃப் நிறுவனமும் சென்னைப் பல்கலைக் கழகத் துடன் சேர்ந்து வளரிளம் பெண் களுக்கான ஒருநாள் கருத் தரங்கிற்கு ஏற்பாடு செய் திருந்தன.

இந்தியா மட்டு மல்லாமல் சர்வதேச அளவில் பெண்களும், பெண் குழந்தைகளும் சந்திக்கும் பிரச் சினைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் பெண்களின் நிலை உயர்ந்திருக்கிறது என்று யுனிசெஃப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் சமூக, பொருளாதாரக் காரணிகளில் குறிப் பிடத்தக்க முன்னேற்றத்தைத் தமிழகப் பெண்கள் அடைந் திருக்கின்றனர் என்று சொல்லலாம். ஆனால், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக் கையில் பெரிய மாற்றம் எதுவும் நடக்கவில்லை.

கிருஷ் ணகிரி இதில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் தருமபுரி, சேலம், நாமக்கல் போன்ற மாவட் டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் 24 சதவீதப் பெண்களுக்கு பதினெட்டு வயதுக்கு முன்னால் திருமணம் செய்யப் படுகிறது என்று தெரிவிக்கிறது யுனிசெஃப்பின் அறிக்கை.

மேலும் தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் நடக்கும் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 25.5 சதவீதம் என்றால், நகரங்களில் அது 21.4 சதவீதமாக இருக்கிறது  என்கிறார் பேராசிரியர் ரீட்டா ஜான்.

குழந்தைத் திருமணத்தால் வளரிளம் பெண்கள் பாதிக்கப்படுவது உலகளவிலும் அதிகமாகவே இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டுமல்லாமல் அய்ரோப்பிய நாடுகளிலும் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப் படுத்துவது சவாலாகவே இருக்கிறது. இந்தியாவில் 27 சதவீத பெண்களுக்குப் பதினைந்து வயதுக்குள் திருமணம் முடிந்து விடுகிறது.

இந்தப் பெண்கள் குடும்ப வன்முறை, குழந்தைப் பேறு சிக்கல், பிரசவகால மரணம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக் கின்றனர். சமீபத்தில், தருமபுரியில் நிகழ்ந்த சிசு மரணங் களுக்கு இந்தச் சிறுவயதுத் திருமணமும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்கிறார் தமிழகக் குழந்தைகள் உரிமை ஆய்வகத்தின் மாநிலத் தலைவர் ஆண்ட்ரூ சேசுராஜ்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Tuesday, April 16, 2013

கணவனே ஆனாலும் குற்றம் குற்றமே!


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு  சட்டமுன் வரைவு மக்களவையில் 19.3.2013 அன்று நிறைவேற்றப்பட்டது. இதன்படி பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொந்தரவு செய்யும் நோக்கில் பெண்களைப் பின்தொடர்வது, பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது, அமிலம் வீசுவது உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டனைகள்   கடுமையாக்கப்பட்டுள்ளன. இருவரும் சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான வயது வரம்பு 16 ஆக குறைக்கப்படவில்லை. 18 ஆகவே நீடிக்கிறது.

ஏற்கெனவே பாலியல் வன்முறை வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் அதே போன்ற குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். தொந்தரவு தரும் நோக்குடன் பெண்களைப் பின்தொடர்வது, பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது போன்ற குற்றங்களில் இரண்டாவது முறையில் ஈடுபடுவோர் ஜாமீனில் வெளியே வர முடியாது.
அமிலம் வீசுவது மிகக் கடுமையான குற்றம், இதில் பாதிக்கப்படுபவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எதிர் நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு என்று சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.  பாலியல் வன்முறைக்கு உள்பட்டவர்கள், அமிலத் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவமனைகள் முதல் உதவி மற்றும் சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள வேண்டும். சிகிச்சை அளிக்க மறுத்தால் தண்டனை அளிக்கப்படும். பெண்களைப் பின் தொடர்வது, பாலியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது போன்றன முதல்முறையாக தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளன. இப்படி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள சூழ்நிலையில், பெண்களின் மீதான வன்முறை எப்படி இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. மாறிவரும் சமுதாயச் சூழ்நிலையில், பாலுறவு பற்றிய கருத்துகள் பலதரப்பட்டவையாக உள்ளன.
வன்புணர்வு மட்டும் அல்லாமல், மனைவியுடன் கொள்ளும் உறவுகூட அவள் சம்மதத்துடன்தான் நடைபெற வேண்டும்; இல்லையேல், அது குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்ற குரல்களும் உரத்துக் கேட்கின்றன.
பெண்ணானவள் தனித்து ஆண் துணையில்லாமல் வாழ முடியாது; மனுநீதியின்பால் வகுக்கப்பட்ட எல்லாச் சட்டங்களும் ஒழிக்கப்பட வேண்டும். அவளது கணவனுடன்கூட பாலுறவிற்கு மறுத்துரைக்கும் உரிமைகள் அவளுக்குண்டு. அவளது மனக்குமுறல்களை எடுத்துரைக்க அவளுக்கு உரிமை உண்டு. அவள் மதிக்கப்பட வேண்டும். இந்தியர்கள் பெண்களை ஒரு பொருளாகத்தான் நடத்துகிறார்களேயொழிய, ஒரு மனித உருவாக நடத்துவதில்லை. அவளால், தந்தை, கணவன் அல்லது மகன் ஆகியோரது பாதுகாப்பின்றி சுதந்திரமாக வாழமுடியும் என்று முன்னாள் பெண்களுக்கான அமைப்பின் தலைவரான (Former Chairperson Womens’ Commission) ஆர். ராமாத்தாள் கூறியுள்ளார்.
வன்புணர்வு என்றால் என்ன? இந்திய தண்டனைச் சட்டம் 375ஆவது பிரிவு வன்புணர்வு பற்றிச் சொல்கிறது.
1. அவளுடைய விருப்பத்திற்கு மாறாக,
2. அவளுடைய சம்மதம் இன்றி,
3. அவளுக்குப் பிடித்த ஒருவரின் மரண பயம் காட்டியோ, துன்புறுத்தியோ சம்மதம் பெறுதல்,
4. அவள் சட்டப்படி மணந்து கொண்டுள்ள கணவன் அல்ல என்று தெரிந்திருந்தும், அவள் அவனைக் கணவன் என்று நம்பி இருக்கும் சமயத்தில், அவளுடைய சம்மதத்துடன்,
5. அவள் சரியான மனநிலையில் இல்லாதிருக்கும்போதோ அல்லது போதை வயப்பட்டிருக்கும்போதோ அவளது சம்மதத்துடன்,
6. அவள் 16 வயதுக்குட்பட்டிருக்கும் பட்சத்தில், அவளது சம்மதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்,
அவை வன்புணர்வாகக் கருதப்படும்.
ஆனால், பதினைந்து வயது நிரம்பாதிருக்கும் மனைவியுடன் அவள் கணவன் கொள்ளும் உறவானது, வன்புணர்வாக மாட்டாது-. (இந்தக் கருத்தானது மறுதளிக்கப்பட வேண்டும்; மாற்றப்பட வேண்டும்.)
ஒரு மனிதன் யாரையாவது தாக்கினால், அது, தண்டனைக்குரிய குற்றமாகும். அவன் அதே செயலை மனைவியிடம் செய்யும்போதும், அது கொடுஞ்செயல்தானே!
ஒரு மனிதன் ஒருவரைக் கடும் வார்த்தைகளால் வைது, காயப்படுத்தினால், அது தண்டனைக்குரியது.
அதேபோலத்தான் ஒருவன் தன் மனைவியைப் பொதுஇடத்திலோ அல்லது வீட்டிலோ வையும்போது அது கொடுஞ்செயலாகிறது.
குடும்பக் கொடுமைச் சட்டத்தின் கீழ் (Domestic Violence Act) தண்டனைக்குரியதே.
ஒரு மனிதன் ஒருவரை சைகையின் மூலம் அச்சுறுத்தினால், அது குற்றமாகும். அதுபோலவே, அவன் மனைவியைப் பயமுறுத்தினாலும் அது குற்றமே.
அதைப்போலவே, மற்றொரு பெண் அல்லது சிறுமியுடன் உறவுகொள்வது தண்டனைச் சட்டம் 376ஆவது பிரிவின்படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். அதைப்போலத்தான் மனைவியைக் கட்டாயப்படுத்தித் தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு கணவன் செய்தலும் ஆகும்.
சம்மதத்துடன் உறவு கொள்ளும்போது, எதுவும் குற்றமல்ல; சம்மதம் இல்லாதபோது அச்செயல், அந்த நபர் சிறுமியாகவோ, வேறொரு பெண்ணாகவோ அல்லது மனைவியாகவோ இருந்தாலுமே, குற்றமாகி விடுகிறது. அதுவே நாட்டின் சட்டம். உடலுறவின்போது, பெண் அதில் தன்னைத் தொடர்புபடுத்திக்  கொள்ளாதபோது, அது கணவனேயாக இருந்தாலும், அவளைத் துன்புறுத்தி, அதன் காரணமாக கட்டாயத்தினால் அவள் இணங்கியிருந்தாலும்கூட அச்செயலின் விளைவாக அவளுக்கு வலி, கேடு மற்றும் விருப்பத்துக்கு மாறாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது காரணமாக அது வன்புணர்ச்சிபாற் கொண்டு வரப்பட வேண்டும்.
உடலுறவிற்கு அணுகும்போது, மனைவி மறுதளித்தால் அதற்கான மாற்று, அவளிடமிருந்து தள்ளி இருத்தல் அல்லது மணமுறிவு பெறுதலே ஆகும். அதற்காக அவன் அவளை எவ்வழியிலும் கட்டாயப்படுத்தக் கூடாது.
திருமணமென்பது ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல்தான். அதற்கு அப்பால் யாதொன்றுமில்லை. திருமணமென்பது ஒரு வளர்ச்சி பெற வேண்டிய இணக்கம் (Sense)  தான். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வதற்குத்தான். ஒருவரை அடக்கித் துன்புறுத்த அல்ல. பல அவமானங்களையும், அடக்குமுறைகளையும் சந்திக்கும் பெண்ணிற்குத் திருமணம் ஒரு தண்டனையாக அமையக் கூடாது. அதுவும் வன்புணர்ச்சிக்கு இணையான வல்லுறவாக அது அமையக் கூடாது. ஆனால், இஸ்லாமியச் சட்டம் என்ன சொல்கிறது?
இஸ்லாமியச் சட்டப்படி (The Muslim Personal Law) பெண்ணிற்குத் தரவேண்டிய சீதனம் (மெகர்) கேட்கப்பட்டும்கூட கொடுக்கப்படாவிட்டால், மனைவி அவனைப் புறக்கணிக்கலாம்; சமைக்க மறுக்கலாம்; துணி துவைக்க மறுக்கலாம்; ஏன் எதையும் செய்ய மறுக்கலாம்; ஆனால், அவள் பாலுறவு வாழ்வை மறுக்க முடியாது. கணவன் அழைக்கும்போது அவள் போய்த்தான் ஆகவேண்டும்.
இது குறித்து தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் மீனா கந்தசாமி, ஒரு பெண்ணுக்குப் பாலியல் விருப்பம் உண்டு என்று ஒப்புக்கொள்ளும்  சமுதாயம் மட்டுமே, அவளுக்குச் சில  நேரங்களில் அந்த விருப்பங்கள் இல்லை என்று ஒப்புக்கொள்ளும்.
இங்கே பெண்ணுக்கு அவள் ஆசையை வெளிப்படுத்தும் இடமும் இல்லை, வேண்டாம் என்று சொல்லிவிடக் கூடிய வாய்ப்பும் இல்லை என்று நடப்பு உண்மையை உடைத்துப் பேசுகிறார். இது குறித்த தனது கட்டுரை ஒன்றில் தான் குறிப்பிட்டுள்ள கருத்தைப் பின்வருமாறு எடுத்து வைக்கிறார். ஓர் இரவு நேரத்தில் கட்டாயப்படுத்தப்பட்ட உறவின் காரணமாக இரத்தப் போக்கு ஏற்பட்டு நீங்கள் மருத்துவமனைக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
உங்கள் கணவர் அவரது ஆண் தன்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்ததற்காக வாழ்த்துக் கூறும் புன்னகையை மருத்துவர் உதிர்ப்பதை எதிர்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு வேண்டியிருக்கும். இதற்காக நீதிமன்றம் செல்ல இயலாது. இந்திய குற்றவியல்/ஆண் குறியியல் சட்டத்தில் (Indian Penal/Penile Code) திருமண உறவில் பாலியல் வன்முறையின் மீது நடவடிக்கை எடுக்க பிரிவே இல்லை.  கடந்த டிசம்பரில், தில்லி மாவட்ட நீதிபதி ஜே.ஆர்.ஆர்யன் என்பவர் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், இந்திய குற்றவியல் சட்டம் திருமண உறவுக்குள் பாலியல் வன்முறை என்ற பார்வையையே ஏற்றுக் கொள்ளவில்லை. கட்டாயத்தினாலோ, தனது விருப்பத்திற்கு மாறாகவோ தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டார் என்று கணவன் மீது மனைவி புகார் தெரிவித்தாலும் அது குற்றமாகாது என்று தெரிவித்துள்ளார். சட்டபூர்வமாகச் சொல்வதானால் உன் கணவன் உன் உடலின் உரிமையாளன். திருமணம் என்பது இலவசப் பாலுறவுக்காக ஆணுக்குக் கிடைத்த லைசன்ஸ் மற்றும் திரும்பத் திரும்பச் செய்யப்படும் பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்கும் வழி! என்கிறார் மீனா கந்தசாமி.
திருமணத்தை கிரிமினல் குற்றம் ஆக்க வேண்டும் என்ற பெரியார், பெண்ணின் பாலியல் தேர்வையும் 80 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தினார். பெரியாரின் சிந்தனையை இன்று உலகம் பேசுகிறது.

Saturday, October 6, 2012

இந்து மதத்தில் பெண்கள் நிலை



- தந்தை பெரியார்

இந்து மத தருமத்தில் பெண்கள் ஈனப் பிறவி, கடவுளாலேயே விபச்சாரிகளாகப் பிறப்பு-விக்கப்பட்டார்கள். சுதந்திரத்திற்கு அருகதை-யற்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் தன்னு-டைய தாய் விபச்சாரம் செய்திருப்பாள் என்கிற நம்-பிக்-கையோடுப் பிரா-யச்சித்தம் செய்து- கொள்-ளக் கூடியவன். பெண்கள் கலியாணம் செய்து கொள்ளும் வரையில் தகப்பனுடைய பந்தோபஸ்தில் இருக்க வேண்டும். கலியாணம் செய்து கொண்ட பிறகு புரு-ஷ-னு-டைய பந்-தோபஸ்திலிருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒழுக்க வீணர்களாய்ப் போய்விடுவார்கள். பெண்களுக்குச் சொத்து இருக்கக் கூடாது. அவர்களிடத்தில் புருஷர்கள் உண்மை பேசக்கூடாது, ரகசியம் சொல்ல கூடாது. இன்னும் இவைபோன்ற எத்தனையோ நிபந்-தனைகள் தரும சாஸ்திரத்திலும் கலியுகத்திற்கு, ஆதாரமான பராசரஸ்-மிருதியிலும் மற்றும் அவைகளை ஆதரிக்கும் இதிகாசப் புராணங்-களிலும் சொல்லப்-பட்டிருக்கிறது.
இவைகளை (இந்த புஸ்தகங்களையும் சாதிரங்-களையும்) ஒப்புக் கொள்ளுகிறவனும் உண்மையான சநாதன ஹிந்து என்று சொல்லிக் கொள்ளுகிற எவனுக்கும் பெண்கள் சுதந்திரத்தைப் பற்றி பேச உரிமை இல்லை என்பதே தான் எனது அபிப்-பிராயம்.
இந்த விஷயத்தில் திராவிட தர்மமோ, சமண தருமமோ எல்லாம் ஒரேவித யோக்கி-யதைக் கொண்டதே என்பது எனது அபிப்பி-ராயம். தெய்வத் தன்மை பொருந்தியவரென்று சொல்லும் திருவள்ளுவர் என்பவர் கூட தம் பெண் சாதியை விபச்சாரியா பதிவிரதையா என்று பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டு மணலை சோறாகச் சமைக்கச் சொல்லி அந்த அம்மாளும் அது போலவே சமைத்துப் போட்ட பிறகே தான் கலியாணம் செய்து கொண்ட-தாகச் சொல்லப்-படுகிறது. இந்தப் படி பரீட்சை செய்து பார்த்தால் இன்றையதினம் உலகத்திலுள்ள பெண்கள் எல்லாம், இங்கு இருக்கிற பெண்கள் எல்லாம் விபசாரிக-ளென்று தான் நாம் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் ஒரு சகோதரியாலும் மணலை அரிசிச் சாதமாக சமைக்கவோ மழை பெய்ய சொல்லவோ, பச்சை வாழைத்தண்டுவைக் கொண்டு சமையல் செய்யவோ முடியாதென்று சொல்ல வேண்டியிருக்கிறது. வேறு எந்தக் காரியத்துக்காக-வும் இந்து மதத்தை ஒழிக்காமல் தாட்சண்யம் பார்ப்ப தாயிருந்தாலும் பெண்களுடைய சுதந்திரத்தை உத்தேசித்தாவது இந்து மதமென்-பது அழிய வேண்டியது மிக்க அவசியமாகும். இந்து மத புராண இதிகாசங்களில் புருஷன் தாசி வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போனதாக-வும், புருஷன் குஷ்டரோகியாகி விட்ட-தால் அவனைக் கூடையில் சுமந்து கொண்டு போன-தாக நளாயினி முதலிய கதைகள் சொல்லப்-படுகிறது. எவ்வளவு அக்கரமும் கொடுமையு-மானக் கொள்கை இது என்பதை யோசித்துப் பாருங்கள். என்னுடைய மகள் நளாயினியைப் போல் இருப்-பாளானால் கட்டாயம் அவளை நான் விஷம் வைத்துக் கொன்று விடுவேனே-யொழிய குஷ்ட ரோகியை சுமந்து கொண்டு தாசி வீட்டிற்குக் கொண்டுபோய் விடும்படிப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். பெண்கள் விபச்சாரிகள் என்பதை ஆதரிக்க எழுதி வைத்த ஆதாரங்களில் ஒன்று தான் பாரதம் என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் பாரதத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான திரவுபதை என்பவள் தனக்கு அய்ந்து புருஷன் மார்கள் உண்டு என்றும் அவ்வளவும் போதாமல் ஆறாவது புருஷன் ஒருவன் மீது தனக்கு ஆசையிருந்தது என்றும், ஆதலால்தான் விபாச்சாரி என்றும் உலகத்தில் பெண் தன் புருஷனைத் தவிர வேறு ஆண்களே இல்லா-மலிருந்தால்தான் பெண்கள் பதிவிரதையாய் இருக்க முடியுமென்றும் ஓர் உயர்குலப் பெண்ணேத் தன் வாயினால் சொன்னதாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அரிச்சந்திர புராணத்தில் தன் பெண் ஜாதியை பல சொத்துகளில் ஒன்றாகக் கருதி வேறு எவனுக்-கோ விலைக்கு விற்றதாகவும், அவளும் தன்னை ஒரு உண்மையான அடிமை என்பதை ஒப்புக் கொண்டு வாங்கப் பட்டவனிடம் தொண்டு செய்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. வேறு புண்ணிய புராணங்களில் அடியார்கட்கு பெண்சாதிமார்களைக் கூட்டிக் கொடுத்ததாக-வும் அந்தப் பெண்களும் அப்புருஷர்கள் வாக்கைத் தட்டக்கூடாது என்று கருதி அடியார்-களிடம் போய் படுத்துக் கொண்டதாகவும் சொல்லப்-பட்டிருக்கிறது. மற்றும் சில நீதிக் கதைகளில் தங்கள் புருஷன்மார்களுடைய வைப்பாட்டி-களுக்குத் தொண்டு செய்ததாகவும் சொல்லப் பட்டிருக்கிறது. இராமாயணம் என்கிற இதிகாசத்தில் ஒருவன், ஒரு நீதியான சக்கரவர்த்தி அறுபதினாயிரம் பெண்சாதிகளை மணந்து கொண்டதாகவும் பட்டத்துக்கு தன் சொந்த அரண்மனையில் வேறு மூன்று பெண்டாட்டிகளை மணந்து கொண்டிருந்ததாகவும், யாகத்தில் அவர்களைப் பார்ப்பனர்களுக்குத் தன்னுடைய சொத்துவைப் போல கருதித் தருமமாக கொடுத்து விட்ட-தாகவும் அவர்களாலே பெண்களை வைத்து நிர்-வகிக்க முடியாமல் திரும்பவும், பணம் வாங்கிக் கொண்டு ராஜாவுக்கே கொடுத்து விட்டதாகவும், இம்மாதிரி பண்ட மாற்றுதலுக்கு பெண்களை உபயோகப் படுத்தினதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் நம்முடைய பழைய அரசர்கள் ஒருவராவது ஒரு பெண்சாதியுடன் இருந்த-தாகவோ, பெண்சாதிகளை சமமாகவோ காண் பதற்கில்லை. அப்படி எங்காவது காணப்படுவ-தாயிருந்தாலும் அது ஒருக்காலும் மேற்படி மததர்மங்கட்கு முரணானது என்று தான் சொல்ல வேண்டும். இது வரையிலும் மக்கள் பெண்கள் சுதந்திரம் என்று பேசிக் கொண்டு வந்ததெல்லாம் வெறும் புரட்டும் முன்னுக்குப் பின் முரணுமாய் முடிந் திருக்கிறதே தவிர காரியத்தில் உண்மையாகப் பெண்கள் விடு-தலைக்கு மார்க்கங்கூட கண்டுப்பிடிக்கப்பட-வில்லை என்பது தான் எனது அபிப்பிராயம். பெண்கள் விடுதலைக்கு வெளியில் வருபவர்கள் பெண் சம்மந்தமான இந்துமத தர்மத்தையும், சாஸ்திரத்தையும், புராணத்தையும், இதிகாசத்-தையும் நீதிக் கதையையும் ஒதுக்கி வைத்து விட்டுத்தான் வர வேண்டும். அப்படிக்கில்லாமல் மேற்கண்ட அழுக்கு மூட்டைகளைச் சுமந்து கொண்டு யார் எங்கு போய் பெண்கள் சுதந்திரம் பேசினாலும் அது கட்டுப்பாடு உள்ள அடிமை பிரகாரமாகத்தான் முடியுமே தவிர அது சிறிதும் விடுதலையை உண்டாக்காது. மற்றும் பெண்-களைப் படிக்க வைக்க வேண்டும் என்று சொல்லி எழுத்து வாசனையுண்டாக்கி அவர்-கட்கு அரிச்சந்திர புராணத்தையும், நளாயினி கதையையும், இராமாயணத்தையும், பாரதத்-தையும் படிக்க வைத்தால் பின்னும் அதிக-மாக அடி-மைகள் ஆவார்களா? சுதந்தர-மடைவார்களா? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள்.
(31.5.1930இல் கள்ளிக்கோட்டையில் நடைபெற்ற S.N.D.P. யோகம் என்று சொல்லப்படும் தீயர் மகாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது-8.6.1930 குடிஅரசு இதழில் வெளியானது).

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...