கிரேக்கப் புராணத்தின்படி குரோ ணோஸ் என்ற ஆகாய தேவனுக்கும் கே என்ற பூமி தேவிக்கும் இடையே நடை பெற்ற உடலுறவின் காரணமாகத்தான் உயிரினங்கள் உருவாயின. குரோ ணோசின் மகனான ஸ்யூஸ், தந்தையின் பிறப்புறுப்பை வெட்டித்தான் இரண்டையும் பிரித்தான்.
ரிக்வேதம் இதை மற்றொரு வடிவில் கூறுகின்றது:
வருணன் ஆகாயத்தை மேலே உயர்த்தினான். சூரியன் ஆகாயத்தில் ஒளி வீசுவது வருணனின் பெருமையினால்தான். சமுத்திரம் கரை கவிழாமல் இருப்பதும் அதனால்தான். பைபிளிலுள்ள ஆதியாகமும் இதையே கூறுகின்றது:
பின்பு தேவன்: நீரின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும், அது நீரினின்று நீரைப் பிரிக்கக் கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாய விரிவுக்குக் கீழே இருக்கிற நீருக்கும் மேலே இருக்கிற நீருக்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாய விரிவுக்கு வானம் பெயரிட்டார்.
குர்ஆன் அதையே மீண்டும் கூறு வதைப் பாருங்கள்:
ஆகாயமும் பூமியை (அவற்றைப் படைத்த ஆதிநாளில்) ஒன்றுக்கொன்று ஒட்டிச் சேர்ந்தே நின்றன. பிறகு நாம் அவற்றை ஒன்றுக்கொன்று பிரித்து வைக்கவும் எல்லாப் பொருள்களையும் தண்ணீரிலிருந்து படைக்கவும் செய்தோம்
பண்டைய பாபிலோனியாவின் நம்பிக்கையின் படி உலகம் மர்துக் தேவனின் கட்டளைப்படி தண்ணீரிலிருந்து தோன்றியது. அமைப்பு வழிபட்ட மதங்கள் உருவாவதற்கும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூகத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்த நம்பிக்கைகளே இந்தக் குறிப்புகளில் அலையடிக்கின்றன. அவற்றை அமைப்பு வழிப்பட்ட மதங்கள் ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் அளித்தன.
இன்று செயற்கை உயிரையே அறிவியல் கண்டுபிடித்துவிட்டதே!
அண்மையில் தி இந்து (16.9.2005) இதழில் மக்கள் எந்த அளவுக்குக் கடவுள், மத
நம்பிக்கைக் கொண்டுள்ளனர் என்பது பற்றிய ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது.
அதில்,
நீங்கள் எந்த அளவு மதப் பற்றாளராக இருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, ஓரளவு
பற்று கொண்டுள்ளேன் என 49 சதவிகிதம் பேரும், எனக்கு மதப் பற்றறு இல்லை என
14 சதவிகிதம் பேரும், அதிக பற்று கொண்டுள்ளேன் என 45 சதவிகிதம் பேரும்
பதிலளித்துள்ளனர்.
வழிபாட்டிடத்திற்கு அவ்வப்போது செல்வீர்களா?
என்ற கேள்விக்கு, வாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செல்வேன் என 31
சதவிகிதம் பேரும், வாரம் ஒருமுறை செல்வேன் என 38 சதவிகிதம் பேரும்,
மாதத்திற்கு ஒரு முறை செல்வேன் என 18 சதவிகிதம் பேரும் மாதம் ஒருமுறையாவது
செல்வேன் என 9 சதவிகிதம் பேரும் இருவாரத்திற்கு ஒரு முறை செல்வேன் என 4
சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.
இன்றைய நாட்களில் இளைஞர்களுக்கு
கடவுள் நம்பிக்கை உள்ளதா? என்ற கேள்விக்கு, சிலருக்கு உள்ளது என 45
சதவிகிதம் பேரும், அதிகமானவர்களுக்கு உள்ளது என 34 சதவிகிதம் பேரும் மிகச்
சிலருக்கே உள்ளது என 21 சதவிகதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
18 வயது
முதல் 45 வயது வரையுள்ள இருபாலரையும் சேர்த்து 220 பேர்களிடம் கேட்கப்பட்ட
கேள்விக்கான பதில் இது. (ஆதாரம்: தி இந்து 16.9.2005)
புதுடில்லி, அக்.22- இந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை நதியின் நீரில் புற்றுநோயை உண்டாக்கும் மாசுக்கள் கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கங்கை ஆற்றுப் படுகையில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலகோடி இந்தியர்களின் ஜீவநதி கங்கை. இந்த நதியில் நீராடினால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்பது பலரின் நம்பிக்கை. இதற்காகவே நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடுகின்றனர்.
கங்கையில் இறந்தாலே அங்கே இறந்தவர்களை எரியூட்டினாலோ சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்பது நம்பிக்கை. இதன்காரணமாக இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுகின்றனர். இறந்தவர்களின் அஸ்தியை இங்கு கொண்டுவந்து கரைக்கின்றனர். இதனால் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து, மாசுபட்டு வருகிறது.
புனிதநதியாம் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டு களாகி விட்டது. இந்த கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கங்கையில் உள்ள மாசுக்கள் குறித்து தேசிய புற்றுநோய் பதிவு மய்யம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் தெரியவந்தன.
கங்கை நீரில் மிக அதிக உலோகத்தன்மையும், நச்சு ரசாயனம் காணப்படுகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள கங்கை நதி படுகை பகுதிகளில் இது அதிகமாக காணப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கங்கை நதியையொட்டிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, நாட்டின் பிறபகுதிகளில் வசிப்பவர்களை காட்டிலும் மிக எளிதில் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புனித நதியாக போற்றப்படும் கங்கை நதியைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் நாட்டில் உள்ள முக்கிய நதிகளை ஆய்வு செய்தால் என்னென்ன அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகுமோ?
திக்குவாய் குறை தீர்க்கும் திருப்பந்துறை முருகப் பெருமான் - (மதுரை மணி, 10.11.2007)
கணித அறிவை மேம்படுத்த வேண்டுமா? இன்னம்பூர் இறைவனை நாடுங்கள் - (குங்குமம், 3.5.2007)
குழந்தைப் பேறு அருள மருதூர் சிறீநவநீதி இருக்கிறார் (நெல்லை)
திருமணம் கை கூட வைக்கும் திருவீழிமிழலை அழகிய மாமுலையம்மை (திருவாரூர்) - (தினத்தந்தி, இலவச இணைப்பு, 27.7.2010)
திருமணம் கை கூடும் திருநீர்மலை பெருமாள் (சென்னைக்கு தென்மேற்கே) - (ராணி, 16.5.2010)
வழக்குகளில் வெற்றி பெற கொல்லங்குடி வெட்டுடையாள் காளி கோயில் (சிவகங்கை) - (ராணி - 7.3.2010)
வீடு கட்ட உதவும் கடவுள் திருப்புகளூர் அக்னீஸ்வரர் (குங்குமம், 16.7.2009)
இழந்த பொருளைப் பெற வேண்டுமா? தஞ்ச புரீஸ்வரர் கோயில் (திருவையாறு அருகில்) - (தினத்தந்தி, ஆன்மீகப்பகுதி, 26.2.2010)
கல்யாணம் நடக்க வேண்டுமா? கடன் தீர வேண்டுமா? வழக்கில் வெற்றி பெற வேண்டுமா? திக்குவாய் தீர வேண்டுமா? குழந்தை பேறு வேண் டுமா? வீடு கட்ட வேண்டுமா? இவைகளுக்கெல்லாம் ஒவ்வொரு கோயிலும், அதில் குடி கொண்டிருக்கும் சாமியும் துணை இருப்பது உண்மையானால் நாட்டில் அரசாங்கமே தேவைப்படாதே!
பக்தர்கள் உண்மையில் இவற்றை நம்பினால் அரசிடம் மனு போடுவார்களா? அரசாங்கத்தின் 108 எண்ணை கூப்பிடுவார்களா?
யாரை ஏமாற்ற இந்த விளம்பரப் பட்டியல்?
மக்களுக்கு தன்னம்பிக்கையையும், செயல் திறமையையும், புத்தறிவையும் ஊட்ட வேண்டிய ஊடகங்கள் மக்களை மண் புழுவாக ஆக்க நினைக்கிறார்களே - இது நியாயமா?
தந்தை பெரியார் அவர்களின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளிட்ட தினமலர் ஏட்டில் ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது.
கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் தந்தை பெரியாரை வணங்குகிறேன் என்று தலைப்பிட்டு தந்தை பெரியார் உருவப் படத் துடன் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் கீழ் இடம் பெற்றுள்ள வாசகமும் முக்கியமானது.
ஆன்மீகம் இல்லா மல் அறிவியல் இல்லை. அறிவியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என்பதுதான் அந்த வாசகம். தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரம் அது.
விளம்பரம் என்பதால் தாங்கள் வெளியிட்டுள் ளோம் என்று தினமலர் தப்பித்துக் கொள்ளப் பார்க்கும். அது எப்படியோ தொலையட்டும்!
ஆனால் அதில் வெளி வந்துள்ள வாசகங்கள் சரியானதுதானா?
பெரியார் கறுப்புச் சட்டை அணிந்த விவேகா னந்தர் என்பது எப்படி சரி ஆகும்?
இந்து என்று சொல் லாதே, இழிவைத் தேடிக் கொள்ளாதே என்று சொன்ன தந்தை பெரியார் எங்கே? இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பிய விவேகானந்தர் எங்கே?
ஒரு முறை அமெரிக்கர் ஒருவர் தந்தை பெரியாரைச் சந்தித்தார். அப்பொழுது விவேகானந்தரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று தந்தை பெரியார் அவர்களிடம் அந்த அமெரிக்கர் கேட்டபோது, பட்டென்று அளித்த பதில் - அந்த ஆள் ஒரு கிறுக்கன் மாதிரி. இப்படியும் அப்படியு மாகப் பேசியவர் என்று பதில் சொன்னார்.
அப்படிச் சொல்லாதீர் கள். எங்கள் அமெரிக்கா விலேயே விவேகானந்த ரின் நூற்றாண்டு விழா வைக் கொண்டாடுகிறோமே? என்றார்.
அவ்வளவுதான், முட்டாள்தனம் என்பது இந்தியாவுக்கு மட்டுமே தான் சொந்தமா? என்று செவுளில் அறைந்தாற் போல் தந்தை பெரியார் சொன்னாரே பார்க்கலாம் - பொறி கலங்கிப் போனார் அந்த அமெரிக்கர்!
உண்மை இவ்வாறு இருக்க, தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் பெரியாரின் படத்தைப் போட்டு, கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் என்று விளம்பரம் செய்தி ருப்பது அசல் திரிபுவாத மாகும்.
பார்ப்பனர்கள் பற்றி தந்தை பெரியார் சொன் னது போல ஒன்றிரண்டு விவேகானந்தர் சொல்லி யிருக்கலாம். அதை வைத் துக் கொண்டு பெரியாரும் விவேகானந்தரும் ஒன்று என்ற முடிவுக்கு வந்துவிட முடியாதே!
அந்த விளம்பரத்தில் இடம் பெற்ற இரு வாச கங்கள் கோணிப் பைக் குள்ளிருந்து பூனை வெளியில் வந்துவிட்டதைக் காட்டக் கூடியதாகும்.
ஆன்மீகம் இல்லாமல் அறிவியல் இல்லையாமே! ஏதாவது புரிகிறதா? சூடான அய்ஸ் கிரீம் என்று சொல்வது போல் இல்லையா?
அறிவியல், சந்திரனை பூமியின் துணைக் கோள் என்கிறது. ஆனால் ஆன் மீகமோ குரு பத்தினியின் கற்பினை அழித்தவன் சந் திரன் என்கிறது. குருவின் சாபத்தால் சந்திரன் தேய்கிறான் - ராகு, கேது என்கிற பாம்பு சந்திரனை விழுங்குகிறது. அதுதான் கிரகணம் என்கிறது ஆன்மீகம்.
பூமியின் சுழற்சியால் சூரியனின் ஒளி சந்திரனில் விழாமல் தடுக்கப்படுவ தால் கிரகணம் ஏற்படு கிறது என்கிறது அறிவி யல். முரண்பட்ட இரண்டும் எப்படி ஒன்றாகும்?
அறிவியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என் பதை இப்படி எடுத்துக் கொள்ளலாம்.
அறிவியலை வைத்துத் தானே ஆன்மீகத்தின் பிழைப்பு நடக்கிறது! அறி வியல் நன்கொடையான தொலைக் காட்சியில் காலையிலிருந்து சோதி டம், வாஸ்து, எந்த நிறத்தில் உடை, எந்த நிறத்தில் மோதிரக் கல் அணிவது உட்பட எல் லாம் பிரச்சாரம் செய்யப் படுவது இல்லையா?
கம்ப்யூட்டர் சோதிடம் என்கிற அளவுக்கு வயிற் றுப் பிழைப்பு நடக்க வில்லையா?
ஆரிய மதத்தின் ஆணி வேரை அசைத்த புத்தரையே மகாவிஷ்ணு வின் பத்தாவது அவ தாரம் ஆக்கிய பார்ப் பனர்கள் கொஞ்சம் நாம் அசந்தால் தந்தை பெரியாரையும் அவதாரப் புருஷர் ஆக்கி விடுவார் கள். அதன் ஒரு முன் னோட்டம்தான் (Feeler) இந்தத் தினமலர் விளம்பரம்!
எச்சரிக்கை!
Adobe Flash Player not installed or older than 9.0.115!
விஷ்ணு - கிருஷ்ண அவதாரத்தில் நடத்திய அசுத்தங்களையும், கோபியர்களுடன் செய்த லீலைகளையும், அவர்களுடன் கூடிச் செய்த அக்கிரமங்களையும் மனித மனதைக் கெடுத்து கறையாக்கிய அழுக்குச் செயல்களும் எத்தனை, எத்தனை.
பாகவதம் பத்தாவது ஸ்கந்தம் கோபியரைப் புணர்ந்த அத்தியாயம் 22ஆம் பாடலைக் காணுங்கள்.
பொங்கினர் காவுதோறும் புதுமணற் குன்றுதோறும்
பங்கயச் செங்கண்மாயன் பானிலாப் பயன்கொண்டோங்கு
கங்கயந்திரை வாயுற்ற கனியிள வண்ணம் போலும்
கொங்கை வீழ கோதை மாதர் குழாத்தொடு பாடினானே.
மேய தோகையினமென மயிலான
சாயலார் முலைதழீஇ விளையாடிப்பின்
மாயன் வைகறையில் வண்குளர் தண்டார்
ஆயர் பாடியில்ல டைந்தனன் மன்னோ
(அத்தியாயம் - பாடல் 15 - பாகவதம்)
மயிலின் சாயலொத்த மங்கையருடைய தனங்களைக் கிருஷ்ணன் தழுவி விளையாடிக் கொண்டிருந்து, காலையில் ஆயர் பாடியிற் சேர்ந்தான் என்பதாம்.
இதுதானா ரட்சகனாய்க் கருதப்பட்ட கிருஷ்ண பகவானுடைய அரும்தொழில்? இது காமிகளுக்கேற்றதா? சாமிகளுக்கேற்றதா?
வெள்ளி வெண்முல்லையம் மெல்லினர் துன் றுவிரைக் கோதைக்
கள்ள விழோதியரிற் றோறும் வெண்ணெய் கவர்ந்துண்டோன்
அள்ளிலை வேல்விழியாரமுதம் யுரையஞ்சாயல்
ஒள்ளிழை பச்சிள வேய்புரை தோணல முண்டானே.
(பாகவதம் -39ஆம் பாட்டு)
கோபிகா பெண்களுடன் வீடுகளெல்லாம் வெண் ணெய் திருடிச் சாப்பிட்ட கண்ணன், வேலையொத்த கண்களையும், அழகான சாயலையும், ஒளிமிக்க பூசணங்களையும் உடைய கூனி எனும் பெண்ணோடு புணர்ச்சி செய்தானாம். அடுத்து, தன் குருவான இராயன் கோசு என்றவரின் மனைவி இரதை என்பவளைக் களவாடிப் போய், அவ ளுடன் காட்டில் கூடிப் புணர்ந்தும், பிருந்தாவனத்தில் பல இடச்சியரை ஆலிங்கனம் செய்து, வடமதுரையில் பதினாறாயிரம் பெண்களுடன் லீலை புரிந்தானாம் கிருஷ்ணன்.
இப்படி கண்ணன் செய்த காமுகச் செயல்கள் எத்தனை? கோகுலாஷ்டமி கொண்டாடும் கிருஷ்ணனின் பக்தர் களே சிந்தியுங்கள்!