Showing posts with label ஜம்மு-காஷ்மீருக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. Show all posts
Showing posts with label ஜம்மு-காஷ்மீருக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. Show all posts

Monday, November 9, 2015

ஜம்மு-காஷ்மீருக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு மக்களை கேலி செய்யும் அரசியல் நாடகம்: காங்கிரஸ் விமர்சனம்

ஜம்மு-காஷ்மீருக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
மக்களை கேலி செய்யும் அரசியல் நாடகம்: காங்கிரஸ் விமர்சனம்
ஜம்மு, நவ.9_ ஜம்மு_-காஷ்மீர் மாநில வளர்ச் சிக்காக மத்திய அரசு சார்பில் ரூ.80,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது மக்களை கேலி செய்யும் அரசியல் நாடகம் என்று காங்கிரஸ் கட்சி விமர் சித்துள்ளது.
இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ.மீர் கூறியதாவது:
காஷ்மீரில் தங்கள் கூட்டணிக் கட்சியை திருப்திப்படுத்துவதற்காக பிரதமர் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது ஒரு அரசியல் நாடகம். அவரது அறிவிப்பில் எவ் வித தெளிவும் இல்லை. வெறும் கண் துடைப் புக்காக இதனை அறிவித் துள்ளார்.
காஷ்மீரில் கடந்த அரசு ரூ.44 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் கோரியது. அப்போது ரூ.8 ஆயிரம் கோடியை மட் டும் வழங்கிவிட்டு, இப் போது 80 ஆயிரம் கோடி தருவதாக அறிவித்துள் ளார். இது காஷ்மீர் மக் களை கேலி செய்வது போல இருக்கிறது.
முந்தைய காங்கிரஸ் அரசு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப் பதற்கு மட்டும் ரூ.34 ஆயிரம் கோடி ஒதுக்கி யது என்றார் அவர்.
ஒமர் அப்துல்லா
இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில்,
நிதி அறிவிப்பதால் காஷ்மீரில் உள்ள பிற பிரச்சினைகள் தீர்ந்து விடாது. பிரதமரிடம் இருந்து மக்கள் வேறு அறிவிப்புகளை எதிர் பார்த்தார்கள். ஆனால் பிரதமரின் அறிவிப்பு ஏமாற்றம் அளித்துள்ளது.
பிரதமரின் பேச்சில் புதிய விஷயங்கள் ஏது மில்லை. மோடியின் வரு கையால் புதிதாக ஏதும் நிகழும் என்ற நம்பிக்கை யையும் நான் வைத்திருக்க வில்லை என்று கூறினார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...