Showing posts with label ஜாதி. Show all posts
Showing posts with label ஜாதி. Show all posts

Tuesday, March 29, 2016

ஜாதி தீண்டாமை ஒழிப்பு திராவிடர் கழகத்திற்கு மட்டும் தானா?


கரூர் அருகே உள்ள ராமா கவுண்டன்புதூரை சேர்ந்த சுரேஷ் ஆரோக்கிய சாமி என்பவரை (வயது 28). கரூர் - ஈரோடு சாலையில், ஆத்தூர் பிரிவு என்னு மிடத்தில் கையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த நான்கு பேர் அவரை சரமாரியாக வெட்டினர். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை, பொதுமக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுரேஷ் ஆரோக்கியசாமி இறந்தார்.

இந்த கொலை நடந்த சில மணி நேரங்களில் ஒருவர், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், சுரேஷ் ஆரோக்கியசாமியை நான் தான் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, கொலை செய்யப்பட்ட சுரேஷ் ஆரோக்கியசாமி எனது தங்கையை கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்.

அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எனது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி சுரேஷ் ஆரோக்கியசாமி எனது தங்கையை திருமணம் செய்து கொண்டார். அவர் மீதுள்ள ஆத்திரத்தில் கொலை செய்தேன் என்றும் கூறியுள்ளார்.

சுரேஷ் ஆரோக்கியசாமிக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பிறகு அந்த பெண்ணை சுரேஷ் ஆரோக்கிய சாமியிடம் இருந்து வலுக் கட்டாயமாகப் பிரித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

இதனால் சுரேஷ் ஆரோக்கியசாமி மனைவியை கண்டுபிடித்து ஒப்படைக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆஜரான அந்த பெண்ணிடம், சுரேஷ் ஆரோக்கிய சாமி தன்னுடன் சேர்ந்து வாழ வரும்படி கூறினார். ஆனால் அந்த பெண் சுரேஷ் ஆரோக்கியசாமியிடம் செல்ல மறுத்து தனது பெற்றோருடன் வாழ விரும்புவதாக கூறிவிட்டார். (இப்படிதான் தருமபுரி இளவரசன் விடயத்திலும் நடந்தது)

ஆனாலும் சுரேஷ் ஆரோக்கியசாமி காதல் மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்வதில் குறியாக இருந்தார். இந்த நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுரேஷ் ஆரோக்கிய சாமியை கொலை செய்த கொலையாளிகளின் உருவம் அங்குள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கலாம் என தெரிகிறது.

இதையடுத்து கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரர் சிவநேசன் உள்பட 4 பேர் மீது கரூர் நகரக் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

உடுமலைப்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாதி மறுப்பு திருமணம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர், அவரது காதல் மனைவி கவுசல்யா கண் எதிரிலேயே கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் கரூரில் சுரேஷ் ஆரோக்கியசாமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர் கொலை என்ற பட்டியலில் இது 82 ஆவது என்று சொல்ல வேண்டும்.

இதுவரை இந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது தமிழகக் காவல்துறை எந்த இலட்சணத்தில் செயல்படுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

ஜாதி வெறிக் கண்ணோட்டத்தில் நடக்கும் இந்தக் படுகொலைக்கு ‘கவுரவக் கொலை’ என்று பெயர் சூட்டுவது வெட்கக் கேடாகும்.

இதுதான் சந்தர்ப்பம் என்று திராவிட இயக்கம் தோற்றுவிட்டது. பெரியார் கொள்கை தோற்றுவிட்டது என்பது போல பிரச்சாரம் செய்வது ஒரு வாடிக்கையாகி விட்டது.

திராவிடர் கழகம் தன் பணியை முழு வீச்சில் செயல்படுத்திக் கொண்டுதான் உள்ளது. ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளையும், பிரச்சாரத்தையும் முழு வேகத்தில் செய்து கொண்டுதானிருக்கிறது.

தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் பகுதிகள் கொளுத்தப்பட்டபோதுகூட, அந்த இடத்திற்கு உடனடியாக திராவிடர் கழகத் தலைவர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்ததோடு அல்லாமல் உடனடியாக தருமபுரியில் ஜாதி ஒழிப்பில் நம்பிக்கையுள்ள அனைவரையும் கூட்டி ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஜாதி ஒழிப்புப் பணியில் மற்றவர்கள் எந்தளவுக்கு ஒத்துழைப்பைக் கொடுக்கிறார்கள் என்பது முக்கியமானதாகும். வீணாக அபவாதம் பேச வேண்டாம். திராவிடர் கழகத்தின் சமூக புரட்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்புக்கொடுக்க முன் வரட்டும்!

ஜாதி கட்சிகளை ஒன்று சேர்த்து தலித் அல்லாதார் அமைப்பு உருவாக்கப்பட்ட போது இந்த ஊடகத்தார்களும் ‘மேதாவிகளும்‘ அதனை ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்வி முக்கியமானதாகும். அப்பொழுதே அதனைக் கடுமையாகக் கண்டித்ததும் விமர்சனம் செய்ததும் திராவிடர் கழகமே

- தலையங்கம் 28-03-2016

Tuesday, November 27, 2012

சென்னையில் சாதி மறுப்பு வாழ்க்கை துணைதேடும் நிகழ்ச்சி


சென்னையில் சாதி மறுப்பு வாழ்க்கை துணைதேடும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர் 2 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது
பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில் நடந்த சாதிமறுப்பு தேடல் பெருவிழாவில் இணைந்த ஜோடிகளுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திருமணம் நடத்தி வைத்தபோது எடுத்த படம். அருகில், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பாலாஜி உள்ளனர்.

சென்னை, நவ.26- சென்னை பெரியார் திடலில் நடந்த சாதிமறுப்பு இணை தேடல் பெருவிழாவில் சுயமரியாதை திருமணம் செய்து கொள்வதற்காக வாழ்க்கை துணையை தேடி மாற்றுத்திறனாளிகள், அரசு பள்ளி ஆசிரியை, ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 291 பேர் விண்ணப்பித்தனர். மாலையில் 2 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
சுயமரியாதை திருமணம்
பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில், முற்போக்கு சிந்தனையுள்ள குடும்பத் தினருக்கு பயன்படும் வகையில், தமிழகம் தழுவிய அளவில் சாதிமறுப்பு இணை தேடல் பெருவிழா மன்றல் 2012 என்ற பெயரில், சென்னை பெரியார் திடலில் நேற்று நடந்தது. இதற்காக சாதி மறுப்பு, மதமறுப்பு, மாற்றுத்திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தோர் என்று தனித்தனியாக 5 அரங்குகள் அமைக்கப்பட்டி ருந்தன. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வர்கள் இந்த அரங்குகளில் தங்கள் பெயர்களை நேற்று காலை பதிவு செய்தனர். பின்னர் ஆண், பெண் இருவரும் 21 வயது நிரம்பியதற்கான சான்றுகள், தனித்து வாழ்க்கை நடத்துவதற்கான பொருளாதார வாய்ப்புகள் குறித்த சான்றுகள் சரிபார்க்கப்பட்டது.
தொடர்ந்து திருமணத்திற்கு தயாராகுதல், மருத்துவம், மனநல ஆலோசனைகள் குறித்த மருத்துவ முகாமும் நடந்தது. திருமணம் செய்து கொள்ள விரும்புவோரிடம் மருத்துவம், மன வளர்ச்சி சோதனைகள், உயரம், எடை மற்றும் ரத்த சோதனையும் செய்யப்பட்டது. பின்னர் பெரியார் திடலில் உள்ள ஹாலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், திருமணம் செய்து கொள்பவர்களின் விருப்பங்களை கேள்வி பதில் மூலம் கேட்கப் பட்டது. இரட்டையர்களை
தேடிவந்த இரட்டையர்கள்
ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழாவில் கலந்துகொண்ட இரட்டையர்கள் கீதா, சீதா ஆகியோரை படத்தில் காணலாம்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்தவர் மருதகாசி. இவருடைய மகள்களான இரட்டையர் கள் எம்.கீதா, எம்.சீதா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இவர்கள் சென்னை காமராஜர் நகரில் தங்கியிருந்து இருதய நோயாளிகளுக்கு ஈ.சி.ஜி. எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் கூறியதாவது: ஒன்றாகவே பிறந்தோம், ஒன்றாக படித்தோம், ஒன்றாகவே வளர்ந்தோம், ஒன்றாகவே ஒரே நிறுவனத்தில் வேலையும் பார்க்கிறோம்.
நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்லவேலை பார்க்கும் இரட்டை சகோதரர்களை மண முடிப்பதற்காக தேடிவந்துள்ளோம். அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் அண்ணன், தம்பிகளாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரே வீட்டில் இரு வரும் மருமகள்களாக செல்ல ஆசைப்படுகிறோம். நன்றாக சம்பாதிப்பதால், மாப்பிள்ளையும் நன்றாக சம்பாதிப்பவராகவும், அழகாகவும் இருக்க வேண்டும். எந்த சாதியாக இருந்தாலும் பரவா யில்லை, மதம் இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பாகும்.-இவ்வாறு இரட்டை சகோதரிகள் கூறினர்.
புதுச்சேரி பெண்
புதுச்சேரியை சேர்ந்த சேகர் மகள் அமுதா. எம்.பார்ம். பட்டமேற்படிப்பு படித்து விட்டு தனியார் மருத்துவ நிறுவனத்தில் புதுச்சேரி அலுவலக மேலாளராக வேலைபார்த்து வருகிறார்.
இவர் கூறுகையில், என்னுடைய பெற்றோர்கள் சுயமரியாதை திருமணம் செய்தவர்கள். அவர் களைப்போல் சாதி, பார்க்காமல் சுயமரியாதை யுடன் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.
என்னுடைய பெற்றோருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், வரவிருக்கும் மாப் பிள்ளை எங்கள் வீட்டு பிள்ளையாகவும், என் னுடைய பெற்றோருக்கு மகனாகவும் இருக்கும் மனநிலை படைத்தவரை தேடி வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர்
சென்னை தலைமைச்செயலகம் குடியிருப்பை சேர்ந்தவர் வி.கே.ராமச்சந்திரன். ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். தனக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருந்தும், சொந்தமாக வீடு இருந்தும், குழந்தைகள் என்னை கவனிக்காததால் சாப்பாட்டிற்காகவும், என்னை கவனித்துக் கொள்வதற்காகவும் 62 வயதில் திருமணம் செய்து கொள்வதற்காக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், சாதி, மதம் பார்க்காமல், விவாகரத்து பெற்றவர்கள், வாழ்க்கை துணையை இழந்தவராகவும் இருந்தாலும் திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரெயில் விபத்தில் கணவனை இழந்த பெண் தமிழரசி, திருமணமாகி 3 மாதம் மட்டுமே கணவருடன் வாழ்ந்துள்ளார். திருப்பத்தூரில் உள்ள பாலிடெக்னிக்கில் டைப்பிஸ்டாக வேலை பார்க்கும், இவர் சமுதாயத்தில் தனிபெண்ணாக வாழ முடியாது என்பதால், தன்னை கண் கலங் காமல் பார்த்து கொள்ளவும், மனதுக்கு பிடித்த மணமகனை தேடிவந்ததாக கூறினார்.
அரசுபள்ளி ஆசிரியை
நெற்குன்றம் மேட்டுக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஜெயந்தி. இரண்டு கால்களும் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட இவர், எம்.ஏ., எம்.பில். படித்தவர். தன்நிலையை உணர்ந்து வாழ்நாள் முழுவதும் தன்னை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள ஒரு துணையை தேடி வந்ததாக ஜெயந்தி கூறினார்.
சென்னையை சேர்ந்தவர் வெற்றிமணி. எம்.டெக். படித்த இவர், சென்னையில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலைபார்த்து வருகிறார். கல்வியில் சிறந்த பகுத்தறிவு சிந்தனை கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தெரிவித்தார். இரண்டு கால்களையும் இழந்து தவழ்ந்து வந்தவர் தாம்பரத்தை சேர்ந்த மகேந்திரன். இவர் பழ வியாபாரம் மூலம் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக் கிறார். இவர் தன்னை கவனித்துக்கொள்ள பெண் தேவை. சாதி, மதம் பார்க்கமாட்டேன். வரதட் சணையும் தேவையில்லை என்றும் கூறினார்.
சென்னை அடையாறு தரமணி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 32). இவர் தன்னுடைய தாய் செண்பகத்துடன் வாழ்க்கை துணை தேடி வந்தார். இவர் கூறும் போது, காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட நாங்கள் பிராமணர் வகுப்பை சேர்ந்தவர்கள். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மண்பரிசோதனை ஆய்வு செய்யும் பணி செய்து வருகிறேன். வாழ்க்கை துணையை தேடுவதற்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன். துணையாக வரவிருக்கும் பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால் எந்த சாதியாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளேன் என்றார்
2 ஜோடிகளுக்கு திருமணம்
சாதிமறுப்பு தெரிவித்த காரைக்குடியை சேர்ந்த அறிவரசுக்கும், மதுரையை சேர்ந்த ஜான்சி ராணிக்கும் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன், தமிழ்செல்வி ஆகிய இரண்டு ஜோடியினரையும் உறுதிமொழி வாசிக்க வைத்து திருமணங்களை திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி  நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசிய தாவது: சாதி, மதம் மறுப்பு மற்றும் காதல் திருமணங் களை ஊக்குவிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் 291 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 25 திருமணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, ஒரு நல்லதொடக்கம் தான், முடிவு அல்ல. இன்று இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன. மணமக்கள் அன்போடும், பண் போடும், விட்டுக்கொடுத்து வாழ்ந்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும்.
-இவ்வாறு கி.வீரமணி பேசினார்.
விழாவில், திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றனார், செயலவைத் தலைவர் அறிவுக்கரசு, பொதுச்செயலாளர்கள் ஜெயக்குமார், டாக்டர் பிறைநுதல் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள் உட்பட நிர்வாகிகள் பலர் செய்திருந்தனர்.
-(நன்றி: தினத்தந்தி 26.11.2012)

Saturday, November 17, 2012

விளம்பர ஜாதி!


ஸ்ப்ளெண்டர் மோட்டர் சைக் கிளை விளம்பரப்படுத்திட இப்படி ஒரு முறையைக் கையாண்டுள்ளது இந்த நிறுவனம்.
ஷிவ்ராம் அய்யர் சௌம்யா அய்யர் குடும்பத்தில் இன்னொருவரும் இணைந்துள்ளார் அவர்தான் ஸ்ப்ளெண்டர் அய்யராம்.
இதே பாணியில் கேரளாவில் நாயர் என்றும், மும்பை மற்றும் புனேயில் படேல் என்றும், டில்லியல் சௌகான் என்றும் கொல்கத்தாவில் மிஸ்ரா என்றும் இப்படியாக விளம்பரம் செய்து வருகின்றனர்.
வியாபாரம் செய்வதற்கு எத் தனையோ வழிமுறைகள் உள்ளன.
ஜாதிப் பெயர்களை முன்னிறுத்தி விளம்பரங்களைச் செய்ய வேண்டுமா? இதன் பின்னணி என்ன?
இன்னொரு தகவலும் இது தொடர்பாக உண்டு. மூன்று மாதங் களுக்கு முன்பு இதே சென்னையில் தான் - தரமணி பகுதியிலே உள்ள ஓர் அமெரிக்க நிறுவனம் அதன் பெயர் பேபால் (Paypal)
அந்த நிறுவனத்தின் ஆண்டு விழா! (நடத்தட்டும்! நடத்தட்டும்! மகிழ்ச்சி தான்!)
விளையாட்டுப் போட்டிகள் எல்லாம்கூட! திறமைகளை வெளிப் படுத்த வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டாமா?
விளையாட்டுப் போட்டிகள் என் றால் குழுக்கள் (Teams) பிரிக்கப்பட வேண்டாமா?
ஆமாம்! ஆமாம்!! அதில் என்ன சந்தேகம்? நம் பள்ளிக்கூடத்திலே கூட பிரிப்பார்களே! காந்தி அவுஸ், ஜவகர் அவுஸ், நேதாஜி அவுஸ் அல்லது  வண்ணப் பெயர்கள் சிகப்பு, மஞ்சள், நீலம் என்று கூடப் பிரிப்பார்களே!
சில பள்ளிகளில் பூக்களின் பெயர் களைக்கூட சூட்டுவதுண்டு. முல்லை, ரோஜா, சாமந்தி என்று போகும்.
பேபால் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட விழாவுக்கான  விளை யாட்டுக் குழு எந்தெந்த பெயர்களில் பிரிக்கப்பட்டு இருந்தன? படேல் ஆஃப் குஜராத், பேனர்ஜீஸ் ஆஃப் பெங்கால், சிங்ஸ் ஆஃப், பஞ்சாப், டிசோசாஸ் ஆஃப் கோவா; - என்ன தமிழ்நாட்டைக் காணவில்லையே என்று அவசரப்படாதீர்கள். அய்யர்ஸ் ஆஃப் தமிழ்நாடு.
எப்படி இருக்கிறது? படித்தவர்கள் அல்லவா! அவர்களில் மூளை வித்தியாசமாகச் செயல்பட்டால்தானே பெருமை?
ஆமாம் அமெரிக்க கம்பெனி யாயிற்றே - அவர்களுக்கு இதெல்லாம்....
சொல்லப் போவது புரிகிறது! புரிகிறது!! ஆனால் ஆங்கே பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் யார்? அவர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமானால் “Brahmins! Brahmins”
ஓகோ! கதை அப்படிப் போகிறதா!
பிரச்சினை வெடித்ததும் வியாக்கி யானங்களை சொல்ல ஆரம்பித் தார்கள்.
அய்.பி.எல். கிரிக்கெட்டுக்குப் பெயர் வைக்கவில்லையா? இதெல்லாம் கொஞ்சம் தமாஷ்! எதையும் சீரியஸாகப் பார்த்தால் எப்படி? ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு அடையாளம் - அவ்வளவு தான்.
ஒண்ணும் இல்லாத விஷயத்தை எல்லாம் துருவித் துருவிப் பார்க்கக் கூடாது - என்று வெண்டைக்காய் விளக் கெண்ணெய் வியாக்கி யானங்கள்! பிரச்சினை  பெரிதாக வெடித்ததும் ஊற்றி மூடி விட்டார்கள் - காரணம் தமிழ்நாடு அல்லவா!
இப்பொழுது ஒரு முக்கியமான இடத்துக்கு நாம் வந்தாக வேண்டும்.
இப்படி எல்லாம் யாருடைய மூளை வேலை செய்கிறது?
நுட்பமான கேள்வி இது! ஏன் அவசியமான கேள்வியும்கூட!
தனியார் நிறுவனங்கள் எல்லாம் இப்பொழுது பெரும்பாலும் அக்கிர காரமாகி விட்டன. அதிலும் முக்கிய பதவிகளில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் இடத்தில் எல்லாம் பார்ப் பனர்கள் அட்டாணிக் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு விட்டார்கள்.
(இன்றைக்கு இந்தியாவில் தனியார்த் துறைகளில் இயக்குநர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை 9052; இதில் பார்ப்பனர்கள் உள்ளிட்ட முன்னேறிய ஜாதியினர் 8367 (92.6%) பிற்படுத்தப்பட்டோர் 34.6 (3.8%) தாழ்த்தப்பட்டோர் 319 (3.5%) (Economic And Political Weekly - 11.8.2012)
இப்படிப் பார்ப்பனர்கள் தனியார் நிறுவனங்களில் படை எடுத்து, படம் எடுத்து ஆக்கிரமித்துக் கொண்டார்கள் அல்லவா!
தனியார் நிறுவனங்கள் எல்லாம் அவாளின் ஆதிக்க புரியாகி விட்டால் அதன் பின் கேட்க வேண்டுமா?
அந்த வேலைதான் மோட்டர் பைக் விளம்பரத்திலும் அய்யர், பானர்ஜி மிஸ்ரா - விளையாட்டுப் போட்டிகளிலும் குழுக்களுக்கும் ஜாதிப் பெயர்கள்.
பார்ப்பனர்களாவது வெங்காய மாவது! அதெல்லாம் பழைய காலம்.
இப்பொழுதெல்லாம் அந்தப் பேச்சுக்கே வேலையில்லை என்று நமது பார்ப்பனர்  அல்லாத மக்கள் அதிலும் கொஞ்சம் படித்தவர்கள் அடுத்தவர்களின் வாய்களையும் கடன்வாங்கி இடக்கு முடக்காகப். பேசுவதுண்டு.
அத்தகைய அதிகப் பிரசங்கிகள் இந்தத் தகவல்களையும் உண்மை களையும் கண்களை அகல விரித்தும், மூளையைக் கொஞ்சம் கசக்கிவிட்டு, வெளிச்சத்தில் குளிப்பாட்டியும் பார்த்தால் தெரியும். உண்மையான சங்கதி.
2012லும் பிராமணாள் ஓட்டல் வைக்க வந்து விட்டாளே தெரிய வில்லையா?
அதிகாரப் பலமும், நம் மக்களில் அப்பாவித்தனம் என்ற பலகீனமும் பார்ப்பனர்களுக்குக் கிடைத்த தெம்பான இரண்டு கால்கள்!
நாட்டில் எவ்வளவோ நடக் கின்றன. இந்தக் கறுப்புச் சட்டைக் காரர்களுக்கு இதுதான் பிரச் சினையா? என்று மிகப் பெரிய விசால மனசுக்குச் சொந்தக்காரர்கள் போல கதைப்பார்கள்.
நாம் திருப்பிக் கேட்க வேண்டும்; நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது - இன்னமும் ஏன் இந்த அய்யர் பிராமணாள் விளம்பரம்?
இதற்கு மட்டும் பதில் சொல்ல மாட்டார்கள். ஏன், பதில் சொல்ல முடியாது - அதனால்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, November 16, 2012

நத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குடியிருப்பு கொளுத்தப்பட்டது - கண்டனத்துக்குரியது


நத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குடியிருப்பு கொளுத்தப்பட்டது - கண்டனத்துக்குரியது!


அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!!
தருமபுரி அருகே நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இரு வேறு ஜாதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்களுக் கிடையே ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதை ஏற்காமல், நத்தம் தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்புகள் ஜாதிவெறி கொண்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன.
நத்தத்தையடுத்துள்ள கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்டோர் குடியிருப் புகளையும் கொளுத்தியுள்ளனர். உயிர்ப் பலி இல்லை என்றாலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 35 பேர் தீக் காயங்களுக்கு ஆளாகி தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.
கலவரம் ஏற்பட்டு நீண்ட நேரத்திற்குப் பிறகு தான் காவல்துறை செயல்பட்டுள்ளதாகத் தெரிகிறது. திருமணம் நடந்து பல நாட்கள் ஆன நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து காவல்துறை உளவுத்துறை என்ன செய்தது என்று தெரியவில்லை. செய்தியாளர்கள் கிராமத்திற்குள் செல்ல முடியாது தடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த 2012லும் ஜாதிவெறித்தனத்தோடு நடத்தப் பட்டுள்ள இந்தக் கொடிய செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஜாதியின் பெயரால் அரசியல், ஜாதி தீவிரவாதப் பேச்சுகள் - ஜாதி மறுப்புத் திருமணத்தைக் கண்டிக்கும் வெளிப்படையான போக்குகள்தான் இவற்றிற்கு முக்கிய மூல காரணமாகும்.
இந்தக் கொடுமைக்குப் பிறகாவது சம்பந்தப்பட்டவர்கள் திருந்த வேண்டும்; சம்பந்தப்பட்ட பகுதிகளில் கழகம் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
இத்தகைய அநாகரிகமான கலவரங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
8.11.2012 சென்னை


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, July 17, 2012

உண்ணும் உணவில் மதமும் ஜாதீயமும்


இந்து மதமானது மனித வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் தீண்டாமையை புகுத்தியுள்ளது. உண்ணும் உணவு, உடுக்கும் ஆடை, உறைவிடம், பொரு ளாதாரம், கல்வி  போன்றவைகளில்  இந்து மதத்தின் ஆளுமை  எவ்வாறு இருந்தது என்பதை மத ஆராய்ச்சி யாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். மே ஒன்றாம் நாள் இந்து நாளேட்டில் கல்பனா  கண்ணபிரான் அவர்கள் நாம் உண்ணும் உணவில் மதங்கள் மற்றும் சாதீயத்தின் ஆளுமையை விளக்கி யுள்ளார்.
கல்பனா கண்ணபிரானின் கட்டுரை சுருக்கமாகக் கீழே.
இந்தக் கட்டுரையை அவர் வெளியிட நேர்ந்ததின் காரணம் சில நாட்கள் முன்பு  ஹைதராபாத்தில்  உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகம் மாட்டிறைச்சி உணவுத் திருவிழா நடத்தியதும்   அதனை எதிர்த்து சில இயக்கங்கள் கூக்குரல் எழுப்பியதும்.
பன்முகத்தன்மைக்   கொண்ட நம் நாட்டில் உணவுப் பழக்கமும் பன்முகத் தன்மை வாய்ந்தது. உண்ணும் உணவுக்கும் புனிதத்துவம் கொடுக்கப் பட்டு சமூகத்தில் மேலோர் உண்ணும் உணவு கீழோர் உண்ணும் உணவு என்று வேறுபடுத்தப்பட்டுள்ளது. காலங்காலமாக தலையில் திணிக்கப் பட்ட  நம்பிக்கைகள் மற்றும் புனிதத் துவம்  என்ற கருத்துகள் உண்ணும் உணவிலும் வெளிப்படும்.
என்ன காய்கறி உண்ணலாம் , மாமிசம் உண்ணலாமா வேண்டாமா, எந்தெந்த மாமிசங்களை  உணவாகக் கருதலாம், மாமிசங்களில்  சைவ மாமிசங்கள் எவையெவை.
விலங்குகளிலிருந்து பெறப்படும் பொருட்கள் சைவமா அசைவமா என்பவைகளை மத நம்பிக்கைகள் தான் முடிவு செய்யும்.
உண்ணுதல்  உணவைப் பற்றி பார்த் தோம். உண்ணுதலைப் பார்ப்போம்
யார் யார்  யாருடன் சேர்ந்து உண்ணலாம்.
உணவாக்கப்பட்ட விலங்கின் எந் தெந்த பகுதியை யார் யார் உண்ணலாம்.
உண்ணுதலில்  வரிசை முறை  --ஆண்/பெண், பெரியோர்/சிறியோர்,  சமூக அமைப்பில் உயர்ந்தவர்/ தாழ்ந்தவர் ஒரு பல்கலைக்கழக துணை வேந்தர், ஒரு  நீதியரசர்,  ஒரு கடைநிலை ஊழியர் யாவரும்  ஒன்றாக அமர்ந்து  உண்ணலாமா,  அதுவும் ஒரே உணவு வகைகளை உண்ணலாமா.
ஒரு தாழ்த்தப்பட்டவர்  எச்சில் உணவுக்கு பதிலாக சூடாக பரி மாறப்படும் உணவினை உயர் ஜாதி வர்க்கத்தினரிடம் தைரியமாகக் கேட்க முடியுமா?  இத் தருணத்தில் தலித் எழுத்தாளர் ஓம்பிரகாஷ் வால்மீகி படைத்த நூல் "ஜூதன் " நினைவுக்கு வருகிறது. மேலும் இந்த ஜாதீய  அமைப்பில் ஒரு பார்ப்பனன் உணவை விழுங்கும் போது - சூத்திரன், மாதவிலக்கு உள்ள பெண்,  பன்றி மற்றும் நாய் அவன் கண்ணில் படக் கூடாது.  மதச்சார்பு உண்ணும் உணவிலும் புகுத்தப் பட்டுள்ளது. எந்தெந்த நாட்களில், நேரங்களில் மாதங்களில் என்னென்ன உணவு உட்கொள்ளவேண்டும் என்பதை, தான் சார்ந்துள்ள மதம் அறிவுறுத்தும். மாமிசத்துக்காக விலங்குகளை வெட்டுவதற்கும் மதம் சில வழிமுறைகளை கூறுகின்றது.
அழுகிய மாமிசத்தையே உண்ண வேண்டும் என்று சில ஜாதியினருக்கு விதிக்கப்பட்டுள்ளது. சில சமூகத்தினர் மத விழாக்களில் மாமிசத்தை புறக் கணிப்பர், சில  சமூகத்தினர் விழாக் களில் மாமிசத்தை சேர்த்துக் கொள்வர்.
ஆந்திர மாநிலத்தில் சில ஜாதியினர் காடுகளில் புலி  விட்டுச் செல்லும் மிச்ச மாமிசத்தை உணவாகக் கொள் வர். புலி அவர்களுக்கு தேவையான உணவை விட்டுச் செல்லும் என்று நம்புகின்றனர். இப்பொழுது என் (கட்டுரையாளருக்கு அல்ல) நினைவுக்கு வருவது தந்தை பெரியார் கூறியது. நாட்டில் வாழும் பார்ப்பனனை விட, காட்டில் வாழும் கடும் புலி மேல் என்று. உணவில் மனப்பாங்கு உணவின்  தூய்மை, வீரியம்,  ஊறு நிகழும் வாய்ப்பு,  சுவை போன்றவை   ஒரு சமூகத்தின்   பார்வையை ஆட்கொள் ளுகின்றது. விலங்குகளைக் கறிக்காக  வெட்டுவதை பார்க்க நேரிட்டால்  கறி உண்ணும்  பார்ப்பனர்கள் மற்றும் பயந்தாங்குளிகள் அருவருப்படையலாம்.
மேலும் விலங்குகள் உயிரிழக்கும் சூழல் --விலங்கின் தலை கால் ரத்தம் போன்றவை  பரவிக் கிடப்பது  மேலும்  வெறுப்பூட்டும்.. இந்து மத ஜாதிகளில் பல படித் தட்டுகள் இருப்பது போல காய்கறிகளிலும் உள்ளன. உயர்ந்த ஜாதி காய்கறிகள்  தாழ்ந்த ஜாதிக் காய்கறிகள். என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.  புடலங்காய், பாகற்காய் போன்றவை தாழ்ந்த ஜாதிக் காய்களாக பார்க்கப் படுகின்றன.  உண்பதிலும் சிலர் துறவறத்தை கடைப் பிடிக்கின்றனர். தான், மிகவும் அன்பு செலுத்திய யாரேனும் இறக்க நேரிட்டால் அவர் நினைவாக  தனக்குப் பிடித்தமான உணவை விட்டு விடுவதுண்டு.
மாறிய உணவுப் பழக்கம்
மாறிய உணவுப் பழக்கங்கள் பற்றி பல சரித்திரச் சான்றுகள்  உண்டு. எடுத்துக்காட்டாக பண்டைய வேதகால பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்டு வந்தனர். பிற்காலங்களில் தவிர்த்தனர்.
நம் நாட்டில் உண்ணப்படும் மாமிச வகைகள்
ஆடு, கோழி, மீன், சில கடல் வாழும் உயிரிகள், தவளை, வயல்எலி,  நாய், மான், பன்றி,  குரங்கு,  மாடு, எருமை,  சில பூச்சி வகைகள், சில பறவைகள், மேலும் பல  ஊர்வன மனிதர்களுக்கு தங்கள் உடல்களை மாமிசமாக வழங்குகின்றன.
பிடித்த மற்றும் பிடிக்காத விலங்குகள் என்று  மத, ஜாதி, இன  சமூக அடிப்படையில் நிச்சயிக்கப் படுகின்றன
நம் நாட்டில் விருந்தோம்பலிலும்  அதன்  பன்முகத் தன்மை வெளிப்படுகிறது. உணவில் காணப் படும் பன்முகத்தன்மையில்   சில பண்பாட்டளர்கள்  மதரீதியான  அரசியலை புகுத்துகின்றனர். இதனால் மனக் கசப்பும் கலவரங்களும் உருவாகின்றன. அவரவர் மத அல்லது ஜாதி வழக்கப்படி சமைக்கப்படும்  உணவானது  எல்லா மதத்தைச் சார்ந்தவர்களுக்கும்  பரிமாறப் படுகிறது. நம் நாட்டில் மதக் கலவரத்துக்கு பயன் படும் மாமிசங்கள் --பன்றிக் கறியும், மாட்டுக் கறியும். இவை இரண்டும் பெரும்பாலானவர்களால் பன்னெடுங்காலமாக உண்ணப்படு கின்றன. மாட்டுக் கறியினை இந்து அல்லாதவர்கள் உண்டு வருகின்றனர். ஆனால் இந்து மதத்தின் பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ள  பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களும் நீண்டகாலமாக உண்டு வரும் வழக்கம் உண்டு. இது மறுக்க முடியாத உண்மை . ஆனால் பெரும்பான்மை மதம் இந்த உண்மையை மறைக்க முயல்கின்றது.
பெரும்பான்மை  மதம் அதன் உட்பிரிவுகளில் உணவு பற்றிய தனது ஆளுமைக் கருத்துகளைத் திணித்தால் எதிர்ப்பும், வெறுப்பும் கிளம்பும். உணவு பன்முகத் தன்மையில் பாதிப்பை விளைவிக்கும்.
ஒரு விருந்தை ஏற்றுக் கொள்வதோ மறுப்பதோ தனி மனிதரின் உரிமை. அங்கு பரிமாறப் படும் உணவை ஏற்பதும் மறுப்பதும் கூட அவரின் தனி உரிமை..
சமீபத்தில் உஸ்மானியா பல்கலை கழகத்தில் நடந்த மாட்டுக் கறி விழா வில் யார் மீதும் மாட்டுக் கறி உண்ணும் படி கட்டாயப் படுத்தல் நிகழவில்லை. அந்த விருந்துக்குச் சென்றவர்களுக்கு மாட்டுக் கறி ஒன்றும் விலக்கப் பட்டதான உணவு என்ற உணர்வு இல்லை. விரும்பியே சென்றனர். விரும்பியே உண்டனர் அது சுய சிந்தனை மற்றும் ஒருங்கிணைப்பு நோக்கம் உள்ளவர்கள் கலந்து கொண்ட  விருந்தாகவே  அமைந்தது.
வெறுப்பை வளர்க்கின்றனர் என்று பெரும்பான்மை மதத்தினர் வழக்குத் தொடுப்பதில் அர்த்தம் ஒன்றுமில்லை. மேலும் பேராசிரியர்கள் மாணவர் களைத் தூண்டிவிடுகின்றனர் என்ற குற்றச் சாட்டுக்கும் பொருளில்லை. விருந்து படைப்பதை  வழக்காடு மன்றத்துக்கு எடுத்துச் செல்ல எந்த முகாந்திரமும் இல்லை. வழக்காடு மன்றமும் இதில் குறுக்கீடு செய்யவோ விசாரணை செய்யவோ அவசியம் இல்லை. ஏனெனில்  நீதி மன்றத்தில் மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய ஏராளமான வழக்குகள் அவர்களின் பார்வைக்காக ஏங்கிக் கொண்டி ருக்கின்றன..
கல்பனா கண்ணபிரான் அவர்கள் தற்போது ஹைதராபாத்தில் உள்ள " சமூக மேம்பாட்டுக் குழு" (Council for social Development) வின் முனைவ ராகவும் இயக்குநராகவும் பணியாற்று கிறார்.
இந்து நாளேடு 01.05.2012 தகவல்: சி. நடராசன்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...