சென்னை, ஏப்.28_ பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் மருத்துவ சிகிச்சை-_ மனிதநேய நிகழ்வில் தலையிடாத ஒரே கட்சி அதிமுகதான்_ஜெயலலிதாதான் என்று திராவிடர் கழக தலைவர் கிகி.வீரமணி அவர்கள்கூறி தோலுரித்தார். பிரபாகரனின் தாயாரைத் திருப்பி அனுப்பிய பாவிகள் யார் என்பதை விளக்கும் பொதுக்கூட்டம் 25.4.2010 அன்று சென்னை_பெரியார் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் 30.4.2010ன் தொடர்ச்சி வருமாறு: முதல் களபலி உண்மைதான் இந்தக் கூட்டத்தினுடைய நோக்கம் வெறும் கண்டனத்தைத் தெரிவிப்பது மட்டுமல்ல. உண்மை விளக்கத்தை சொல்வது மட்டுமல்ல. ஆங்கிலத்திலே ஒரு பழமொழி உண்டு. போர்க்களத்திலே முதல் கள பலியாவது யார் என்றால் வீரர்கள் அல்லர். உண்மைகள்தான் முதல் களபலியாகும். போர்க்காலத்திலே நடக்கலாம். ஆனால் இப்பொழுது மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய ஒரு நிலையிலே உண்மைகள் களபலியாவதிருக்கிறதே, அது எவ்வளவு கொடுமையான ஒன்று என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சினைபற்றி எல்லோருமே பேசினார்களே. அ.தி.மு.க நிலை என்ன? பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க நிலை என்ன? நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது நான் தமிழ் ஈழத்தைப் பிரித்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன் என்று இந்த அம்மையார் சொன்னாரே. அ.தி.மு கட்சியின் கடைசி உறுப்பினராவது பார்வதி அம்மையார் சிகிச்சை பெறுவது பற்றி பேசினாரா? ஒரு கை தொலைபேசி செய்தி வருகிறது. அ.திமுக உறுப்பினர் ஒவ்வொருவராக எழுந்து சட்டமன்றத்தை விட்டு வெளியே போய்விட்டார்கள். ஆக, தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவே இல்லை. பார்வதி அம்மையார் பிரச்சினையில் அ.தி.மு.க மட்டும் பார்வதி அம்மையாருடைய மருத்துவ மனிதாபிமானப் பிரச்சினையை அ.தி.மு.க வைத் தவிர, ஜெயலலிதா அவர்களுடைய தலைமையிலே இருக்கக் கூடிய கட்சியைத் தவிர மற்ற எல்லோரும் இதில் பேசினார்கள். இதைக் கேட்கிறவர்கள் எல்லோருக்குமே சங்கடமாக இருக்காதா? எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம் என்பவர்களுக்கு எவ்வளவு கோபம் வரவேண்டும்? எவ்வளவு ஆத்திரம் பொங்க வேண்டும்? எவ்வளவு ஆவேசம் வரவேண்டும்? ஆனால் அதை எல்லாவற்றையும் நீங்கள் வேறு பக்கம் திருப்பி விட வேண்டும் என்று நினைத்தால் என்ன அர்த்தம்? அரசியலுக்கு இதைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இதை விட உதாரணம் வேறு என்ன வேண்டும்? இங்கே எங்களுடைய பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஒரு சம்பவத்தை நினைவூட்டினாரே. ஈழத்திலே மிகப் பெரிய அளவுக்குப் போர் நடந்துகொண்டிருக்கின்ற காலகட்டத்திலே அவர்களுக்கெல்லாம் ஆதரவு புருஷராக, மதி உரைஞராக, அறிவை சொல்லித்தருபவர்களாக திகழக்கூடியவர்களைக் கேட்கிறோம். ஆண்டன் பாலசிங்கத்தைத் தடுத்தவரும் இவர்தானே ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் நீரிழிவு நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஒரு சிறுநீரகம் முழுக்க செயல்படாமல் ஆகிப்போனது. இன்னொரு சிறுநீரகம் அவருக்கு செயல்இழந்து கொண்டேயிருக்கிறது. ஆண்டன் பாலசிங்கம் தமிழ்நாட்டில் தங்கி சிகிச்சை பெற லண்டன் அரசு அனுமதி கொடுத்தது. மருத்துவ சிகிச்சைக்கு இவர் வர முயற்சித்தபொழுது இலங்கை அரசும் ஆட்சேபணை செய்யவில்லை. அப்பொழுது தமிழகத்திலே முதலமைச்சராக ஜெயலலிதா அவர்கள் இருந்துகொண்டிருக்கின்றார். அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னார். எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஆண்டன் பாலசிங்கத்தை தமிழகத்திலே சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதிக்கவே கூடாது. அவரை விடவே கூடாது என்று சொல்லி சட்டமன்றத்திலும் தெளிவாக இதைப் பேசினார். எதையாவது இடையில் பிடித்து பாராளுமன்றத்-திற்குள் நுழைந்து விடலாம் என்று நினைத்தார்கள். தமிழ்மக்கள் ஏமாறவில்லை. சில பேர் ஏமாந்தார்கள். ஜெயலலிதாவிடம் வைகோ பேசினாரா? ஆகவே உண்மையான தடை எங்கேயிருக்கிறது? உண்மையாகவே இதற்குக் காரணமானவர்கள் யார்? அ.தி.மு.க பொதுச்செயலாளர் மீது ஆத்திரப்-பட்டாலும் இதைப் பற்றி கூட்டணியில் உள்ளவர்கள் பேசவேண்டாமா? ஏப்.27ஆம் தேதி கடை அடைப்பு பொது வேலை நிறுத்தம் என்று சொல்லுகிறார்கள். நம்முடைய சகோதரர் வைகோ போன்றவர்கள் எல்லாம் அம்மாவைப் போய் பார்த்திருக்கிறார்கள். பென்னாகரம் இடைத்தேர்தலுக்குப் பிறகு போயஸ் தோட்டத்திற்கு யார் போனாலும் உட்கார வைத்துப் பேசுகிறார்கள் (சிரிப்பு_கைதட்டல்). அந்த அம்மையாரைப் பார்த்திருக்கிறார்கள். படமெல்லாம் வந்திருக்கிறது. அந்த அம்மையாரிடம் நீங்கள் கேட்டிருக்கலாமே. நீங்கள் முதலமைச்சராக இருந்தபொழுது போட்ட உத்தரவு காலாவதியாகி-விட்டதா? அப்படி இல்லை என்றால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலே நீங்கள் பேசலாமே என்று ஒரு வார்த்தை பார்வதி அம்மாள் அவர்களைப் பற்றி இவர்கள் பேசியிருக்கின்றார்களா? ஏன் பேசவில்லை? வெளியே வந்தார்கள். உடனே கலைஞர் அவர்களுக்கு எதிராக உண்ணாவிரதம் என்று அறிவித்தார்கள். கலைஞரா இதற்குக் காரணம்? உடனே தடையை நீக்கினார் கலைஞர் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது எழுதிய தடை இன்னமும் அமலில் இருக்கிறது. அந்தத் தடையை நீக்க வேண்டும். அந்தத் தகவல் தெரிந்தவுடனே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்படும் என்று அறிவித்தார். சகோதரர் நெடுமாறன் அவர்கள் ஆனாலும், நம்முடைய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆனாலும் ஜெயலலிதா அவர்கள் இவர்கள் மீது வழக்குப் போட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலமாக எந்தப் பொதுக்கூட்டத்திலும் பேசக் கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டார். இவர்கள் எல்லாம் மேடைக்கு இங்கு வந்தால் பேச மாட்டார்கள். இப்படித்தான் செய்வார்கள். பொம்மலாட்டத்தில் காட்டுகிற மாதிரிதான். வாயைத் திறக்காமல் கைகளை அசைத்துக்காட்டி நீதிமன்றம் வாய்ப்பூட்டு போட்டிருப்பதை தெரிவிப்பார்கள்_சைகை மூலமாக (சிரிப்பு_-கைதட்டல்).நாம் அதற்கு வியாக்யானம் செய்வோம். இதே மேடையில்தான் முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு ஒரு விண்ணப்பதைக் கொடுத்தோம். கோயில் பூட்டுக் கதவையே திறந்தவர் கலைஞர் கோயில் பூட்டுக் கதவையே திறந்தவர். இவர்களுடைய வாய்ப்பூட்டுகளைத் திறக்க வேண்டும் என்று நான்தான் இங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துப் பேசினேன். விடுதலையில் அது கட்டம் கட்டி வந்தது. பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன் ஆகியோருடைய வாய்ப்பூட்டையும் திறக்கிறோம் என்று நாங்கள் நம்புகிறோம் என்று சொன்னேன். அடுத்தநாள் நான் முதல்வர் கலைஞர் அவர்களை சந்தித்தவுடனே கேட்டார். என்னய்யா நீங்கள் விடுதலையில் இப்படி பேசியிருப்பது வந்திருக்கிறதே. நாம் என்ன செய்ய முடியும்? நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறதே என்று சொன்னார். நான் சொன்னேன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய காலத்தில்தான் இப்படி ஓர் உத்தரவு வாங்கியிருக்கிறார்கள். எங்களுக்கு அவர்கள் பொதுக்கூட்டத்தில் பேச எந்த ஆட்சேபணையும் இல்லை என்று அரசு வழக்குரைஞர் மூலம் நீங்கள் நீதி மன்றத்தில் தெரிவித்தால் வழக்குகள் உடனடியாக ரத்தாகிவிடும். இவர்களும் பொதுக்கூட்டத்தில் பேசக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று சொன்னேன். அப்படியா? என்று கலைஞர் கேட்டார். கேட்டவுடனே என் எதிரிலேயே தொலைபேசியை எடுத்து அரசு வழக்கறிஞருக்கு அவரே சுழற்றினார். என்னய்யா இந்த மாதிரி வழக்கு இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். உடனடியாக நெடுமாறன், சுப.வீரபாண்டியன் மீதிருக்கின்ற தடையை வாபஸ் பெறுங்கள். இதை நீதிமன்றத்தில் ரத்து செய்துவிட்டு தன்னிடம் சொல்ல வேண்டுமென்று சொன்னார். வாய்ப்பூட்டு அகற்றப்பட்டது இரண்டு நாள் அந்த நிலைமாறி வந்தது. தடை விலக்கப்பட்டது. அதன் பிறகுதான் வாய்ப்பூட்டு அகற்றப்பட்டது. அதற்குத்தான் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள். எதற்காக சொல்லுகிறேன் என்றால், கலைஞர் அவர்கள் என்றைக்கும் விரோதம் பார்த்துக் கொண்டிருப்பவர் அல்லர். எத்தனையோ பேர் விமர்சனம் செய்கிறார்கள். அதைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை. ஈழப்பிரச்சினையில் ஈடுபாடு உள்ளவரிடம் போய் எதிர்ப்பைக் காட்டலாமா? அதே நேரத்தில் வைகோ அவர்கள் 13 மாதங்கள் சிறையில் ஓய்வு எடுப்பதற்கு யார் காரணம் என்பதும் உங்களுக்குத் தெரியும். நாடாளுமன்றத்திற்குச் செல்வதைத் தடுத்தவர் அப்பொழுதும் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து எழுதினோம். அவர் சிறையில் இருந்தபொழுது ஒரு நாள் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள நீதிபதி அனுமதி வழங்கினார். உடனே இந்த அம்மையார் ஆட்சியில் தலைமை நீதிபதியிடம் மனு கொடுத்து அவர் டில்லி நாடாளுமன்ற ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்தநாள் எதிர்க்கட்சி தலைவர் அந்நாள் முதலமைச்சர் தான் அந்தத் திருப்பணியை செய்தார். இதெல்லாம் பழைய கதை. ஆனால் இன்றைக்குத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி நம் அனைவர் முன்னாலும் உள்ள பிரச்சினை என்னவென்றால் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையாரை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து வந்து அவருக்கு தக்க சிகிச்சை கொடுக்க வேண்டும் (பலத்த கைதட்டல்). அதற்கு நாம் உதவ வேண்டும். அவரை வைத்து அரசியல் நடத்தக்கூடாது. அரசியல் நடத்துவதற்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது. முதல்வர் மூலமாகத்தான் செய்ய முடியும் முதல்வர் மூலமாகத்தான் இதை செய்ய முடியும். நல்ல வாய்ப்பாக கலைஞர் முதலமைச்சராக இருக்கிறார். மனிதநேயம் உள்ள ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார் (கைதட்டல்). நாம் அவரிடத்திலே சொல்லுவோம். சட்டமன்றத்திலும் முதல்வர் கலைஞர் உறுதி மொழி கொடுத்-திருக்கின்றார். சொல்லாத வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பு அவருக்கு இருக்கும். தமிழக அரசுக்குக் கடிதம் எழுதுங்கள் எனவே, இந்தக் கூட்டத்தின் வாயிலாக பார்வதி அம்மாள் அவர்களுக்கு எங்களுடைய வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து உடனடியாக நீங்கள் உங்களுடைய விருப்பதைத் தெரிவித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதுங்கள். நான் மருத்துவ உதவி பெற தமிழகத்திற்கு வருகிறேன். உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பது தவறல்ல. ஆகவே அவர்கள் கடிதம் அனுப்ப வேண்டும். நம்முடைய முதல்வர் ஏற்கெனவே சட்டமன்றத்திலே உறுதி அளித்திருக்கின்ற காரணத்தால் மீண்டும் சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்வார்கள். செய்ய வேண்டும் என்பதுதான் இந்தக் கூட்டத்தினுடைய ஒருமனதான கருத்து என்பதை நீங்கள் எல்லோரும் ஏற்று, அதற்கு கைதட்டல் மூலமாக உங்களுடைய ஆதரவைத் தெரிவியுங்கள் (பலத்த கரவொலி). நடந்தவைகள். நடந்தவைகளாகப் போகட்டும். நடப்பவைகள் நல்லவையாக நடக்கட்டும் இனி நடப்பவைகள் நல்லவைகளாக மாறட்டும் என்று அண்ணா அவர்கள் சொன்னதையே நினைவூட்டி அந்த வகையிலே மீண்டும் மனித நேயத்தைக் காப்போம்! மருத்துவத்தை அளிப்போம் என்று கூறி முடிக்கிறேன். _இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார். | |
Wednesday, May 19, 2010
பார்வதி அம்மையார் மருத்துவ சிகிச்சை மனிதநேயத்தில் தலையிடாத ஒரே கட்சி அதிமுக-ஜெயலலிதா தமிழர் தலைவர் ஆதாரப்பூர்வமான பேச்சு
பெரியாரும் வடபுலமும்!
பெரியாரும் வடபுலமும்! தந்தை பெரியார் அவர்கள் எதையும் கண்டு, கேட்டு, படித்து, ஆராய்ந்து, சிந்தித்துத் தெளிவான கருத்துகளை வெளியிட்டவர். வட நாட்டுப் பயணமாக காஷ்மீர் வரை சென்றவர். எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் என்ற இந்துத்-துவாகோட்டையிலேயே தனது கருத்துகளைப் பலத்த எதிர்ப்புக்களைச் சமாளித்து எடுத்துச் சொல்லி எதிரி-யாக நினைத்தவர்களையும் சிந்திக்கத் தூண்டி-யவர். பேரறிஞர் அண்ணா தந்தை பெரி-யாரின் பேச்சை அப்படியே மொழி பெயர்த்துச் சொல்-லச் சொல்லி அங்குள்ள இந்து மதவாதிகளின் மனதிலே ஒரு கேள்-விக்குறியை உண்டாக்கினார். பல முறை பம்பாய், கொல்கத்தா என்றும் சென்று பங்கேற்-றுள்ளார். வடபுலத் தலைவர்கள் பலர் பெரி-யாரின் கொள்-கைகளில் பலவற்றை ஏற்றுக் கொண்-டாலும், கடவுள் மறுப்பு என்பதே பெரிய எதிர்ப்புக்-குள்ளாகி-யிருந்தது. எங்களுக்கு ஒரு பெரியார் இல்லையே என்று தனது ஏக்கத்தை முதுபெரும் அரசியல்வாதி பாபு ஜகஜீவன் ராம் வெளியிட்டார். தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமை, கல்வி_வேலை வாய்ப்பு உரிமைகள், மடமை ஒழிப்பு,- மூடப்பழக்கங்கள் ஒழிப்பு என்பன இருட்ட-டிக்கப்பட்டு ராமர் படம் எரிப்பு, பிள்ளையார் உருவ பொம்மை உடைப்பு என்பன மட்டுமே வட நாட்டில் திட்டமிட்டுப் பரப்பட்டன. ராமரும்,பிள்ளையாரும் வட நாட்டில் இந்து மதத்தின் அடி வேர்கள் ஆகும். இந்து மத வெறியர்கள் பார்ப்பனரல்லாதாரை மயக்கி வைத்துள்ள பெரும் போதைப் பொருள்களாகவே ராமரும், பிள்ளையாரும் வடக்கே பயன் படுத்தப்படுகின்றனர்.இஸ்லாமிய எதிர்ப்பின் மூல காரணமாகவே அவை பயன்படுத்தப்படுகின்றன.. என்னதான் படித்தவர் என்றாலும் வடக்கே இந்த இரண்டிற்கும் அடிமையாக இல்லாதவர்கள் மிகக் குறைவே! இதையெல்லாம் எதிர்த்து பல்லாண்டுகளாகப் போராடி, கடும் முயற்சிகள் பல செய்து கடவுள் மறுப்பாளர்கள் இல்லையென்றாலும் சில வடநாட்டுத் தலைவர்கள் பெரியாரின் அவசியத்தை வடக்கு உணரவேண்டும் என்பதில் முக்கியப் பணி ஆற்றச் செய்த ஆளுமை நமது தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களைச் சாரும் மறைந்த சமூகப் பேராளி சந்திரஜித் யாதவ் பல எதிர்ப்புகளைச் சமாளித்துச் சமூகநீதிக்காகக் குரல் கொடுத்துப் பெரி-யாரை நன்கு அறிமுகம் செய்து வைத்தார்.-சமூகநீதிக்காகத் தனது அரசையே இழக்கத் துணிந்த மாமேதை மாண்புமிகு வி.பி.சிங் ஆவார். இவர்களது அன்பான ஆதரவுடன் பெரியார் பெருந்தொண்டர்கள் பலரின் ஆதரவுடன் கட்டப்பட்டதுதான் பாம்நோலி பெரியார் மய்யம். அங்கே அருகேயுள்ள கிராமத்தவர்களுக்குக் கல்வி,கணினி, உடல்நலம் என்று பல ஆக்கப் பணி-களைச் செய்து வந்தது அந்த மய்யம். பல தலைவர்கள் வந்து நேரிலே பார்த்துப் பாராட்-டினர். தமிழகத்துத் தலைவர்கள் கருப்பையா மூப்-பனார் போன்றவர்களும் நேரிலே பார்த்துப் பாராட்-டினர். அந்த மய்யத்தின் தொண்டு மற்றவர்களிடம் பரவ ஆரம்பித்தது அங்குள்ள இந்து மத வெறியர்களின் கண்ணையுறுத்தி மனதில் பெரும் புகைச்சலை உண்டாக்கியது. திட்டமிட்டு சில மணி நேரத்திலே அந்த அழகுரு மய்யத்தைத் தரை மட்டமாக்கினர். பலர் கொந்தளித்தனர். எந்த சந்தர்ப்பத்திலும் நமது முன்னேற்றமே முக்கியம் என்ற தந்தை பெரியாரின் மூளையைக் கணினியாகக் கொண்டுள்ள ஆசிரியர் அவர்கள் பல நல்ல உள்ளங்களின் ஆதரவுடன் அப்போதைய பிரதமர் வாஜ்பேயியிடம் வாங்கிய இடந்தான் இப்-போது புதுடில்லியின் முக்கிய இடத்திலே அமைக்-கப்பட்டுள்ள புதுடில்லி பெரியார் மய்யம். எப்-போதும் போல பல பெரியார் தொண்டர்களின் அன்பளிப்பே இந்தமய்யத்தின் அடித்தளம்.பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் ஆசிரியப் பெருமக்கள், துணைவேந்தர் நல். இராமச்சந்திரன் இவர்களது அறிவாற்றல் அங்கே புதிய கட்டுமானத் திட்டங்கள், கட்டடப் புதுமைகள்,புது நூற்றாண்டின் புது வழி முறைகள். இந்த மய்யம் ஏற்றமிக உருவாக உதவிய அத்துணை நல் உள்ளங்களுக்கும் உல-கெங்கும் உள்ள பெரியார் தொண்டர்களின் இதயத்-தின் நன்றிகள். திறப்பு விழாவைச் சிறப்பு செய்ய வரும் அத்துணைப் பெருந்தலைவர்கள்,-தொண்டர்கள்,-நல்லுள்ளங்கள் பெரியாரின் தாக்கத்தால் தங்கள் வாழ்-வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் என்பது உலகத்திற்கு இந்த மய்யத்தின் பெருமையைப் பறை சாற்றும். இந்த மய்யத்தின் முதல் நிகழ்வே "சமூக நீதிக் கருத்தரங்கு ".இந்தியாவின் ஆற்றல் மிகு செயல் வீரர்கள் இதிலே பங்கு பெறுகிறார்கள்.-அவர்-களின் கூடல் சமூக நீதியின் செயல் பாடுகளாகப் புதுடில்லியில் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக சமூக நீதிக் குடையின் கீழே மழைக்காலத்தில் மட்-டும் ஒதுங்கும் அரசியல்வாதிகளையும், எப்போதும் இயங்கும் ஆக்கமிகு தொண்டர்களையும்,-உணர்வாளர்களையும் இணைக்க இந்த மய்யம் பயன்படும். சமூக நீதியின் மூளை ஆற்றலாக இந்த மய்யம் பயன்பட சமூகநீதியின் உயிர்த் துடிப்பாக இயங்கும் தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் திட்டங்கள் தீட்டப்படட்டும்! செயல்கள் தொடரட்டும்! பெரியார் வட புலத்தில் வாழ்கின்றார். எதிர்கால இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்-பட்டோரும் உண்மையான விடுதலை பெற்று ஆட்சியில் உண்மையான பங்கையும் பெற்று வாழ, பெரியார் வடக்கே சென்றுள்ளார் என்பதே இந்த மய்யத்தின் செயல் பாடாகட்டும்! வாழ்க பெரியார்! டாக்டர் சோம.இளங்கோவன் இயக்குநர், பெரியார் பன்னாட்டு மய்யம், சிகாகோ | |
டில்லி பெரியார் மய்யம் ஒரு பார்வை!
டில்லி பெரியார் மய்யம் ஒரு பார்வை!
டில்லி, மே 2_ டில்லி ஜெசோலாவில் கட்டப்பட்டுள்ள பெரியார் மய்யம் தரைதளம் மற்றும் நான்கு மேல் தளங்களைக் கொண்டுள்ளது. ரூபாய் 10 கோடி செலவில் 63,400 சதுர அடி கட்டடம், ஒரு ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த இடம் டில்லி பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினரால் அளிக்கப்பட்டு, கட்டடப் பணிகள் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த கட்டடம் பசுமைக் கட்டடம் 50 சதவிகித தரை தளத்திற்காக வெட்டி எடுக்கப்பட்ட 50 சதவிகித மண் இந்தக் கட்டடம் கட்டுவதற்கான கற்கள் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவ்வளவு மண்ணையும் வெளியே அனுப்பும் செலவு மிச்சம். மேலும் செங்கற்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எரிசக்தி கிட்டத்தட்ட 200 னீஷ் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. காடுகள் அழிக்கப்பட்டு எரிபொருளாக பயன்படுத்தப்படும் சுமார் 6 லட்சம் டன் மரங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் இக்கட்டடத்தில் புத்தாக்க எரிசக்திக் கலன்கள், லிணிஞி பல்புகள், சூரிய கொதிகலன்கள் மூலம் பெறும் சக்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ஒரு வருடத்தில் 25000 கிலோ வாட் மின்சார சக்தி இதன்மூலம் பெறப்படுகிறது.
தற்போது இம்மய்யத்தில் அய்.ஏ.எஸ் பயிற்சி தரப்படுகிறது. மற்றும் SAP (india), CIDC, CRD போன்ற வை மூலம் உயர்திறன் கல்வி பயிற்சியும் தொழிற்பயிற்சி கல்வியும் தொடங்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பெரியார் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்பாக உள்ளது.
மேலும் AICTE டில்லி அரசு, குருகோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக் கழகங்களுடன் சேர்ந்து விஙிகி மற்றும் விசிகி போன்ற மேலாண்மைப் படிப்புகள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வட இந்திய ஆலோசனை மய்யமாக விளங்குகிறது.
இந்த பெரியார் மய்யம் பெரியாருடைய சிந்-தனைகளை உலக அளவில் எடுத்துச்செல்ல இந்திய தலைநகரில் ஒரு முக்கிய மய்யமாக செயல்பட உள்ளது. மேலும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தும் மய்யமாகவும் இருக்கும்.
இதை எல்லாம் விட இந்த நூற்றாண்டில் தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்து, வெற்றி பெற்ற சமூக புரட்சிகளை உலகமெங்கும் எடுத்துச்-செல்லும் நோக்கத்துடன் செயல்படும்.
இந்த பெரியார் மய்யத்தினை மிகச்சிறந்த அளவில் உருவாக்க உதவிய திராவிடர் கழகத்தினரின் உழைப்பு, தமிழர்கள் கொடுத்த நன்கொடை, அனைத்திற்கும் மேலாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும், டில்லி மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும், அனைவருக்கும் திராவிடர் கழகம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைத்து செயல்களுக்கும் மிகப்பெரிய வடிவமைப்பாளராக செயல்பட்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களை காலச்சரித்திரத்தில் மறக்க இயலாது.
Sunday, May 2, 2010
நன்றியைப்பற்றி வைகோ பேசலாமா?
நன்றியைப்பற்றி வைகோ பேசலாமா?
மதிமுக பொதுச் செயலாளர் சகோதரர் வைகோ அவர்கள் _ டெல்லியில் இன்று மாலை தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களால் திறக்கப்பட உள்ள பெரியார் மய்யம் குறித்துப் பேசியிருக்கிறார்.
பெரியார் மய்யம் அமைவதற்குக் காரணமான முன்னாள் பிரதமர் வாஜ்பேயியையும் என்னையும் வீரமணி மறந்து விட்டார். நன்றி மறப்பது நல்லதல்ல (தினமணி 2.5.2010)
திராவிடர் இயக்க வரலாற்றிலும், தமிழர்கள் வரலாற்-றிலும் குறிப்பிடத்தக்க ஒரு பெரும் நிகழ்ச்சி டெல்லி பெரியார் மய்யத் திறப்பு விழா!
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், பகுத்தறி-வாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும் நிலை-யில், திரு வைகோ அவர்கள் மட்டும் வேறு வகையில் சிந்திப்பது வருந்தக் கூடிய ஒன்றாகும். முதல் அமைச்சர் கலைஞர் திறக்கிறார் என்கிற ஆத்திரத்தில் நிதானமிழந்த முறையில் வார்த்தை ஒன்றைப் பயன்படுத்தியிருக்கிறார்.
நன்றியைப் பற்றி திராவிடர் கழகத் தலைவருக்கா இடித்துரைப்பது?
அவசர வைகோ!
இப்பொழுது மட்டுமல்ல; டில்லி பெரியார் மய்யம் மீண்டும் தொடங்குவதற்கான விழா நடைபெற்றதாகவும் அந்த விழாவில் வைகோ பெயர் உச்சரிக்கப்படவில்லை-யென்றும் குறை கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்ட-வர்தான் இவர் (சங்கொலி 12.9.2003 பக்கம் 41 இடிக்கப்-பட்டது 2001-_இல் வைகோ சொல்லியிருப்பது போல 1998_இல் அல்ல). அப்படி ஒரு விழாவே, நடைபெறவில்லை _ அவசரப்பட்டு வைகோ அறிக்கை வெளியிட்டாரே என்று விடுதலையில் (7.9.2003) மறுப்பு வெளி-யிட்டோம்.
வைகோ செய்த உதவிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் எப்பொழுதுமே நன்றி கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் (16.12.2001)வில் தீர்மானம் வாயிலாகவே நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வளவு முன்கூடப் போக வேண்டாம்; 22.4.2010 அன்று பத்து நாள்களுக்குமுன் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுதலையில் வெளி-யிட்ட அறிக்கையில்கூட அன்றைய பிரதமர் வாஜ்பேயி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பங்களிப்பை மறக்காமல் பதிவு செய்திருக்கிறார். இவரது அவசரமும் ஆத்திரமும்தான் இவரை அரசியலில் பரிதாபப் பள்ளத்தாக்கில் தள்ளி விட்டிருக்கிறது போலும்!
முன்னாள் பிரதமர் வாஜ்பேயி அவர்களுக்கு பெரியார் மய்யம் திறப்பு விழா அழைப்பிதழதோடு தனிக் கடிதம் வைத்தும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதே (26.4.2010)
அடுத்த இலைக்குப் பாயசம் போடுங்கள் என்கிற பாணியில் வைகோ பேசியிருப்பதாகத் தெரிகிறது.
திரு வைகோ அவர்களுக்கு அவரின் அலுவலகத்-திலேயே டில்லி திறப்பு விழா அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
பண்பாட்டுத்தளத்தில் தாழ்வானதாகும்!
உண்மை இவ்வாறு இருக்க, நாநடுங்க வேண்டிய ஒரு சொல்லை தாய்க் கழகத்தின் தலைவர்மீது பயன்படுத்தியிருப்பது பண்பாட்டுத் தளத்தில் மிகவும் தாழ்வானதாகும். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் 5ஆவது முறையாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருக்கக் கூடிய மானமிகு மாண்புமிகு முதல் அமைச்-சர் கலைஞர் அவர்கள் பெரியார் மய்யத்தை திறப்பது எல்லா வகையிலும் பொருத்தமானதுதான்.
இதனைப் புரிந்து கொள்ளாதவர் எப்படி ஒரு அரசி-யல் கட்சியை நடத்தப் போகிறார் என்று தெரிய-வில்லை.
நன்றியைப்பற்றியெல்லாம் திரு. வைகோ அவர்கள் பேசுவது தகுதியானதல்ல; கலைஞர் அவர்களின் காலடியில் உட்கார்ந்து கசிந்துருகியவர் கடைசியில் அவர் காலையே வாரியதையெல்லாம் நாட்டு மக்கள் அறிய மாட்டார்களா?
கலைஞர் இன்னும் எத்தனையோ ஆண்டுகள் உயிரோடு இருப்பார்; அதுவரை நான் பொறுத்துக் கொண்டு இருக்க முடியுமா? (இந்தவுரையாடல் வைகோ அவர்களுக்குப் புரிந்திருக்குமே!) என்று சொல்லும் அளவுக்கு வைகோ நன்றியுணர்ச்சியின் சின்னமாவார்.
யாரை திருப்திபடுத்த!
யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்பதற்-காகவும் அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைக் குறி வைக்க வேண்டும் என்பதற்காகவும், பகுத்தறிவாளர்களும், உண்மைத் திராவிட இயக்கத்தவர்களும், தமிழுணர்வாளர்களும் மகிழ்ந்து கொண்டாடும் தந்தை பெரியார் மய்யத்தின் திறப்பு விழா குறித்து வயிற்றில் குத்திக் கொள்வது (மகா-பாரதக் கதைகளைச் சொல்லுவதில் கெட்டிக்காரரா-யிற்றே) வடிகட்டிய மனக்கிலேசமாகும் (ஷிணீபீவீனீ). இதுதான் தந்தை பெரியார் பற்றியும், திராவிட இயக்கம் குறித்தும் வைகோ அவர்கள் வைத்திருக்கும் மதிப்பும், பற்றுதலுமா? பரவாயில்லை; டெல்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவுக்கு வாழ்த்துகள் சொல்ல மனம் இல்லா விட்டாலும் தான் யார்? தம் இயல்பு என்ன? குணாம்சம் என்ன? என்பதை அறிவித்து விட்டார் _ அதற்காகவாவது நம் நன்றி சொல்லலாம் _ அல்லவா!
- கலி. பூங்குன்றன்
சென்னை பொதுச் செயலாளர்
2.5.2010 திராவிடர் கழகம்
சென்னை பொதுச் செயலாளர்
2.5.2010 திராவிடர் கழகம்
நன்றியைப்பற்றி வைகோ பேசலாமா?
நன்றியைப்பற்றி வைகோ பேசலாமா?
மதிமுக பொதுச் செயலாளர் சகோதரர் வைகோ அவர்கள் _ டெல்லியில் இன்று மாலை தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களால் திறக்கப்பட உள்ள பெரியார் மய்யம் குறித்துப் பேசியிருக்கிறார்.
பெரியார் மய்யம் அமைவதற்குக் காரணமான முன்னாள் பிரதமர் வாஜ்பேயியையும் என்னையும் வீரமணி மறந்து விட்டார். நன்றி மறப்பது நல்லதல்ல (தினமணி 2.5.2010)
திராவிடர் இயக்க வரலாற்றிலும், தமிழர்கள் வரலாற்-றிலும் குறிப்பிடத்தக்க ஒரு பெரும் நிகழ்ச்சி டெல்லி பெரியார் மய்யத் திறப்பு விழா!
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், பகுத்தறி-வாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும் நிலை-யில், திரு வைகோ அவர்கள் மட்டும் வேறு வகையில் சிந்திப்பது வருந்தக் கூடிய ஒன்றாகும். முதல் அமைச்சர் கலைஞர் திறக்கிறார் என்கிற ஆத்திரத்தில் நிதானமிழந்த முறையில் வார்த்தை ஒன்றைப் பயன்படுத்தியிருக்கிறார்.
நன்றியைப் பற்றி திராவிடர் கழகத் தலைவருக்கா இடித்துரைப்பது?
அவசர வைகோ!
இப்பொழுது மட்டுமல்ல; டில்லி பெரியார் மய்யம் மீண்டும் தொடங்குவதற்கான விழா நடைபெற்றதாகவும் அந்த விழாவில் வைகோ பெயர் உச்சரிக்கப்படவில்லை-யென்றும் குறை கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்ட-வர்தான் இவர் (சங்கொலி 12.9.2003 பக்கம் 41 இடிக்கப்-பட்டது 2001-_இல் வைகோ சொல்லியிருப்பது போல 1998_இல் அல்ல). அப்படி ஒரு விழாவே, நடைபெறவில்லை _ அவசரப்பட்டு வைகோ அறிக்கை வெளியிட்டாரே என்று விடுதலையில் (7.9.2003) மறுப்பு வெளி-யிட்டோம்.
வைகோ செய்த உதவிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் எப்பொழுதுமே நன்றி கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் (16.12.2001)வில் தீர்மானம் வாயிலாகவே நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வளவு முன்கூடப் போக வேண்டாம்; 22.4.2010 அன்று பத்து நாள்களுக்குமுன் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுதலையில் வெளி-யிட்ட அறிக்கையில்கூட அன்றைய பிரதமர் வாஜ்பேயி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பங்களிப்பை மறக்காமல் பதிவு செய்திருக்கிறார். இவரது அவசரமும் ஆத்திரமும்தான் இவரை அரசியலில் பரிதாபப் பள்ளத்தாக்கில் தள்ளி விட்டிருக்கிறது போலும்!
முன்னாள் பிரதமர் வாஜ்பேயி அவர்களுக்கு பெரியார் மய்யம் திறப்பு விழா அழைப்பிதழதோடு தனிக் கடிதம் வைத்தும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதே (26.4.2010)
அடுத்த இலைக்குப் பாயசம் போடுங்கள் என்கிற பாணியில் வைகோ பேசியிருப்பதாகத் தெரிகிறது.
திரு வைகோ அவர்களுக்கு அவரின் அலுவலகத்-திலேயே டில்லி திறப்பு விழா அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
பண்பாட்டுத்தளத்தில் தாழ்வானதாகும்!
உண்மை இவ்வாறு இருக்க, நாநடுங்க வேண்டிய ஒரு சொல்லை தாய்க் கழகத்தின் தலைவர்மீது பயன்படுத்தியிருப்பது பண்பாட்டுத் தளத்தில் மிகவும் தாழ்வானதாகும். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் 5ஆவது முறையாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருக்கக் கூடிய மானமிகு மாண்புமிகு முதல் அமைச்-சர் கலைஞர் அவர்கள் பெரியார் மய்யத்தை திறப்பது எல்லா வகையிலும் பொருத்தமானதுதான்.
இதனைப் புரிந்து கொள்ளாதவர் எப்படி ஒரு அரசி-யல் கட்சியை நடத்தப் போகிறார் என்று தெரிய-வில்லை.
நன்றியைப்பற்றியெல்லாம் திரு. வைகோ அவர்கள் பேசுவது தகுதியானதல்ல; கலைஞர் அவர்களின் காலடியில் உட்கார்ந்து கசிந்துருகியவர் கடைசியில் அவர் காலையே வாரியதையெல்லாம் நாட்டு மக்கள் அறிய மாட்டார்களா?
கலைஞர் இன்னும் எத்தனையோ ஆண்டுகள் உயிரோடு இருப்பார்; அதுவரை நான் பொறுத்துக் கொண்டு இருக்க முடியுமா? (இந்தவுரையாடல் வைகோ அவர்களுக்குப் புரிந்திருக்குமே!) என்று சொல்லும் அளவுக்கு வைகோ நன்றியுணர்ச்சியின் சின்னமாவார்.
யாரை திருப்திபடுத்த!
யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்பதற்-காகவும் அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைக் குறி வைக்க வேண்டும் என்பதற்காகவும், பகுத்தறிவாளர்களும், உண்மைத் திராவிட இயக்கத்தவர்களும், தமிழுணர்வாளர்களும் மகிழ்ந்து கொண்டாடும் தந்தை பெரியார் மய்யத்தின் திறப்பு விழா குறித்து வயிற்றில் குத்திக் கொள்வது (மகா-பாரதக் கதைகளைச் சொல்லுவதில் கெட்டிக்காரரா-யிற்றே) வடிகட்டிய மனக்கிலேசமாகும் (ஷிணீபீவீனீ). இதுதான் தந்தை பெரியார் பற்றியும், திராவிட இயக்கம் குறித்தும் வைகோ அவர்கள் வைத்திருக்கும் மதிப்பும், பற்றுதலுமா? பரவாயில்லை; டெல்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவுக்கு வாழ்த்துகள் சொல்ல மனம் இல்லா விட்டாலும் தான் யார்? தம் இயல்பு என்ன? குணாம்சம் என்ன? என்பதை அறிவித்து விட்டார் _ அதற்காகவாவது நம் நன்றி சொல்லலாம் _ அல்லவா!
- கலி. பூங்குன்றன்
சென்னை பொதுச் செயலாளர்
2.5.2010 திராவிடர் கழகம்
சென்னை பொதுச் செயலாளர்
2.5.2010 திராவிடர் கழகம்
Subscribe to:
Posts (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
கொள்கைகள், லட்சியங்களைக் கொண்ட எந்த ஓர் இயக்கமும் வரலாற்றில் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் வெற்றி வாகை சூடிட முடியும். அதிலும் மிகவும் கடி...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...