Showing posts with label நறுக்குகள்!. Show all posts
Showing posts with label நறுக்குகள்!. Show all posts

Saturday, November 7, 2015

நறுக்குகள்!



அய்.எஸ். பயங்கர வாதிகளுடன் ஆர். எஸ்.எஸை ஒப்பிடுவது தவறு என்கிறார் - தெலங் கானா ஆர்.எஸ்.எஸ். மாநி லச் செயலாளர் சந்திர சேகர்
ஏன் ஒப்பிடக் கூடாது - பயங்கரவாதம் எந்த மதத்தில் இருந்தாலும் பயங்கரவாதம்தான் மூன்று முறை ஆர். எஸ்.எஸ். தடை செய்யப் பட்டதே அதற்குக் கார ணம் என்ன?
ஆர்.எஸ்.எஸின் மற்றொரு பிரிவான விசுவ ஹிந்து பரிஷத் பொது மக்களுக்குத் திரிசூலத்தை வழங்கி என்ன சொல்லு கிறார்கள்? சூலத்தின் ஒரு முனை கிறித்தவர்களின் குடலைக் கிழிக்கும். இன் னொரு முனை முஸ்லிம் களின் குடலைக் கிழிக்கும். மற்றொரு முனை மதச் சார்பின்மையைப் பேசும் இந்துக்களைக் கிழிக்கும் என்று வெளிப்படையா கவே வெறிப் பேச்சை நஞ்சாகச் கக்குகிறார்களே இது பயங்கரவாதம் இல் லையா!
ஆர்.எஸ்.எசும், அய். எசும் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தாம்!
அலிபாபா குகை
இந்து (தமிழ்) நாளிதழ் வெளியிட்ட தலைப்பு அலிபாபா குகைக்குள் நுழைவோமா? என்பதா கும். ஆர்வத்தோடு உள்ளே நுழைந்து பார்த்தால் அய். அய்.டி.யில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன என்ற தகவல் கொடுக் கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களுக்கு ஏன் இப்படி ஒரு தலைப்பு? அது வெளி உலகுக்குத் தெரியாதா - மேல் ஜாதி பார்ப்பனர்களின் ஏக போக ஆதிக்கக் குகை யாக இருப்பதால்தான் இப்படி ஒரு தலைப்பைக் கொடுத்துள்ளார்கள் போலும்.
தப்பித் தவறி தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இந்த அய். அய்.டி.யில் இடம் கிடைத்து, உள்ளே  நுழைந்தாலோ அங்கேகூட வர்ண பேதம்தான்; தற்கொலை செய்து கொள்வோர் எல்லாம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாண வர்கள்தாம்! சென்னை அய்.அய்.டி.யை எடுத்துக் கொண்டால் பேராசிரியர் கள், இணைப் பேராசிரியர் கள் உதவிப் பேராசிரியர் கள் பார்ப்பனர்கள் 462, பிற்படுத்தப்பட்டோர் 7, தாழ்த்தப்பட்டோர் 10,  பழங் குடியினர் ஒரே ஒருவர்.  இப்பொழுது சொல்லுங்க ஆரியக்   குகையா? இல்லையா?

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, October 27, 2015

நறுக்குகள்!


அர்ஹர் மோடி!
ஹரஹர மோடி என்று சொன்னவர்கள் இப்பொழுது என்ன அடைமொழி கொடுத் துள்ளனர் தெரியுமா?
அர்ஹர் மோடி என்று புதுப்பட்டம் சூட்டியுள்ள னர். இதன் பொருள் என்ன தெரியுமா? அர்ஹர் என்றால் பருப்பு என்று பொருள். ஆக, மோடி பருப்பு சரியாக வேக வில்லை என்று மக்கள் பேசிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது.
மம்தா
பிகார் தேர்தலில் நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சிக்கு வர அவ ருக்கு ஆத ரவு அளி யுங்கள்; அவர் ஆட்சியில் பிகார் நன்கு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா!
மோடி சகாக்கள் தேர்த லில் மோடி மஸ்தான் பணி யில் பிரச்சாரம் செய்து கொண் டிருக்கும்போது, இன்னொரு மாநில முதலமைச்சர் இப் படிக் கூறி இருக்கும் கருத்து - அரசியலுக்கு அப்பாற் பட்டவர்கள் மத்தியில் புதிய சிந்தனைக் கீற்றைக் கிளப்பி யுள்ளது.
பேச நா இரண்டு!
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கையில் மீன் பிடித்தால் அவர்களைக் கைது செய்வதோடு, ரூ.15 கோடி அபராதம் விதிக்கப் படும் என்று இலங்கை அதி காரி பேசியதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண் டாம். இந்த விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற் படாமல் இலங்கை பார்த்துக் கொள்ளும் என்று இலங்கை அமைச்சர் சென்னை விமான நிலையத்தில் ஒரு பேட்டி யில் கூறியுள்ளார்.
இது யாரை ஏமாற்றிட? அதிகாரி ஒன்று சொல்லு வார்; அமைச்சர் வேறொன்று சொல்லுவாரா? அந்த அதி காரி எந்த அடிப்படையில் பேசினார்? அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தவர் யார்? கேட்பவன் கேணய னாக இருந்தால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டு கிறது என்பான் என்ற பழ மொழிதான் நினைவிற்கு வருகிறது.
மற்றொரு கொலை
காஷ்தா கிராமத்தில் பறையா குடியிருப்பில் வசித்துவருபவர் மிதிலேஷ் பாண்டே(வயது 40). இவர் தைனிக் ஜாக்ரான் எனும் இந்தி பத்திரிகையில் செய்தி யாளராக பணியாற்றி வருப வராவார். 24.10.2015 அன்று மாலை அடையாளம் தெரி யாதவர்களால் சுட்டுக்கொல் லப்பட்டார். கயா காவல் துறை கண்காணிப்பாளர் மனு மகராஜ் கூறுகையில், தைனிக் ஜாக்ரான் செய்தி யாளர் மித்திலேஷ் பாண்டே அடையாளம் தெரியாதவர் களால் சுடப்பட்டுள்ளார். வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொள்ளப்பட் டுள்ளது. கூடிய விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம் என்றார்.
எழுத்தாளர்களையும், சிந்தனையாளர்களையும், தங்களுக்கு எதிரான வர லாற்றுச் சின்னங்களையும் கொல்லுபவர்கள் - இடித்துத் தரைமட்டமாக்குபவர்களுக்குப் பெயர்தான் பாசிஸ்டுகள் - அந்த ஆட்சிதான் இப் பொழுது நடைபெற்றுக் கொண்டுள்ளது.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, October 22, 2015

நறுக்குகள்!



விலைவாசி
விலைவாசி - குறிப்பாக துவரம் பருப்பின் விலை விண்ணைத் தொடுகிறது. 2011 இல் ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை ரூ.55.
தற்போது அதன் விலை என்ன தெரியுமா? ரூ.220.
ஓ, வளர்ச்சி, உயர்வு என்பது இதுதானோ!

தோழர் பழ.கருப்பையா
இன்றைய தினமணியில் காதலால் சொன்னேன் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் தோழர் பழ. கருப்பையா.
லிங்க வழிபாட்டைச் சிசுன வழிபாடு என்று ஆதி சங்கரர் எள்ளி நகையாடி னார்.
சிசுன வழிபாட்டைத் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுற்றிப் பரப்பிய ஆரியரான ஞானசம்பந்தரை திராவிடச் சிசு என்று பழித்தார் ஆதி சங்கரர். பெரியாரும் லிங்க வழிபாட்டைக் குறி வழிபாடு என நகையாடினார் என்று எழுதியுள்ளார் திரு.பழ.கருப் பையா.
உண்மையை வெகு காலத்திற்கு மறைக்க முடி யாது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்
கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் இல்லாமல், கலை நிகழ்ச்சிகள் நடத்திட நிபந்தனைகளுடன் அனு மதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
உண்மைதான். ஆபாசம் கூடாதுதான் - அது ஒரு வகையான பலகீன உணர்ச்சி யின் அத்துமீறலே!
அதேநேரத்தில் அந்தக் கோவில்களின் கோபுரத் திலும், தேர்களிலும் நெளி யும் ஆபாசம் குறித்து பக் தர்களும் கவலைப்படவில்லை. நீதிபதிகளும் பொருட் படுத்தவில்லையே, ஏன்?
ஆண் - பெண் உறவு என்பதில்கூட இயற்கைக்கு மாறான மனிதனும், மிருக மும் புணர்வது போன் றெல்லாம் வடிக்கப்பட்டு இருக்கிறதே - இந்தச் சாக்க டையைத் தூர் எடுப்பது எப்பொழுது?

எச்சரிக்கிறார் ஜெட்லி
மாற்றுக் கருத்துகள் உள் ளோர்மீது மை வீசுவது, தாக்குவது என்பது உகந்த தல்ல - ஆரோக்கியமான முறையில் கருத்துகள் கூற லாம்; பா.ஜ.க. இதைச் செய் வதில்லை. அப்படி நடந்து கொள்ளும் பா.ஜ.க.வினர் கண்டிக்கப்பட்டும் உள்ள னர்.
- மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி
அப்படியா? உத்தரப்பிர தேசத்தில் முசுலிம் பெரிய வர் கொல்லப்பட்ட சதியில் பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பி னரே பின்னணியில் இருந் துள்ளாரே!
ஏன், இதே மோடி கடந்த காலங்களில் நடந்து கொண்ட முறை, பேசிய பேச்சுகளின் எதிரொலி இதில் இல்லை என்று ஜெட்லியால் கூற முடியுமா?
தினை விதைத்தால் தினையைத்தானே அறுக்க முடியும்?

Tuesday, October 20, 2015

நறுக்குகள்!



எந்த முகம்?
இந்திய கிரிக்கெட் வாரிய நிருவாகிகளும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிருவாகிகளும் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி நடத் துவது குறித்து மும்பையில் பேச்சு வார்த்தை நடத்திய போது, சிவசேனைக் குண் டர்கள் அந்த அலுவலகத் திற்குள் சென்று சூறையா டியுள்ளனர்.
இந்தப் பிரச் சினை பாகிஸ்தானுக்கு எட்டி பஞ்சாப் மாநில சட்டப் பேரவையில் கண் டனம் தெரிவிக்கும் அள வுக்கு பிரச்சினை முற்றிப் போய்விட்டது. இந்தியா வில் நடக்கும் மதவாதக் கேவலங்கள் குறித்து ஏற்கனவே அமெரிக்க அதிபரே இந்திய பிரதமர் நரேந்திர மோடியைப் பக்கத்தில் வைத்தே தலை யில் குட்டினார்.
பிரதமர் மோடி எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்குச் செல்லு வாரோ?

அண்ணாமலைக்கு அரோகரா!
தீப விழாவின் போது திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்கு வோர் முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித் துள்ளது.
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது. குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட வேண்டும்; அன்னதானம் வழங்கு வோர் அவர்கள் பொறுப் பில் சம்பந்தப்பட்ட பகு தியைச் சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனை கள் வைக்கப்பட்டுள்ளன.
உண்மைதானே! கோயில் விழாக்கள் என் றாலே சுற்றுச்சூழல் பாதிப்பு தானே! இதனால் பக்தர் களும், பொது மக்களும் பாதிக்கப்படும் நிலைதான்! தீபத்தில் உணவுப் பொருள் களை நெருப்பில் கொட் டுவதும் அதனை வேடிக் கைப் பார்க்க மக்கள் கூடுவதும் இத்தியாதி இத் தியாதி நிகழ்வுகள் நாட் டுக்கு நல்லதா? ஒரு குழவிக் கல்லை வைத்து இவ்வளவுக் கேடுகளைச் செய்து கொண்டு அலை கிறார்களே - வெட்கக்கேடு!

விலையேற்றம்
சரஸ்வதி பூஜை - சாமந்திப் பூ கிலோ ரூ.150 என்று  ஒரு செய்தி வெளி யாகியுள்ளது- இது மூன்று மடங்கு உயர்வாம்!   இலட் சுமி தேவியிடம் சரஸ்வதி தேவி சொல்லி இதையெல்லாம் கட்டுப்படுத்தச் செய்யக் கூடாதா? இலட் சுமிதேவி தானே இந்து மதத்தில் பொருளாதார (செல்வக் கடவுளச்சி) கடவுள்? உழைத்துச் சம் பாதித்த பணம் மூடத் தனத்துக்குக் கரியாகிறதே - என்ன சொல்ல!

ம(மா)து செய்த வேலை!
போடி நாயக்கனூர் அருகில் வீரபாண்டி கிரா மத்தில் மதுப் போதையில் தாலி கட்டியவனை வெறுத்து மணமகள் வெளியேறினார் என்பது ஒரு நற்செய்தியே!
மதுவை வெறுக்கும் மாதுகள் வீதிக்கு வந்து போராடுவது - இதுபோல சரியான நேரத்தில் சரியான முடிவு கள் எடுப்பது பாராட்டத்தக்கது.
தமிழ்நாட்டில் பெண் ஒருவர் முதல் அமைச்சராக உள்ளார் கவனிப்பாரா?

Thursday, October 15, 2015

நறுக்குகள்!



மோடியைக் கிண்டலடிக்கும் அமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடியை அதே பிஜேபியைச் சேர்ந்த ஓர் அமைச்சர் கிண்டலடிக்கிறார் என் றால் யாரும் எளிதில் நம்ப முடியாததுதான் ஆனாலும் நடத்திருக்கிறது. கிண்டல் அடித்தவர் மத்திய அமைச்சர் அல்ல என்பது ஓர் ஆறுதல் செய்தி அவர் அரியானா மாநில சமூக நீதித்துறை அமைச்சர், பெயர் கிருஷ்ணகுமார் அப்படி என்னதான் சொல்லி விட்டார்?
பிரதமர் மோடி இன்னும் என்னவெல்லாம் செய்யச் சொல்லப் போகிறாரோ தெரியவில்லை? என்று  தன் கையிலிருந்த துடைப்பத்தைத் தூக்கிக் காட்டிக் கிண்டல் அடித்தார். பத்திரிகையாளர்கள் பக்கத்தில் இருப்பதைப் பார்த்து சுதாரித்து தயவு செய்து இதனை செய்தியாகப் போட்டுவிட வேண்டாம்! என்று கேட்டுக் கொண்டார் பத்திரிகையாளர்களா விடுவார்கள்? அல்வா துண்டு போன்ற சேதி ஆயிற்றே! விளைவு எல்லா வலைதளங்களிலும் நிரம்பி வழிகிறது.

குரங்குச் சண்டை
நாட்டில் எது எதற் கெல்லாமோ சச்சரவு நடப் பதுண்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக் கும், மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கும் ஏற் பட்டுள்ளது குரங்குச் சண்டையாம்.
அது என்ன குரங்கு சண்டை? இவர்கள் இரு வரின் அலுவலகமும் இருக் கும் இடம் டில்லி - நார்த் பிளாக்! அந்தப் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லையாம்.
இந்தக் குரங்குகளைப் பிடித்துச் செல்வதில் இந்த இரு அமைச்சர்களுக்கி டையே சேட்டையாம். அந்தச் செலவை யார் ஏற்றுக் கொள்வது என்பது தான் சர்ச்சைக்குக் காரண மாம்; குரங்கிலிருந்து பிறந் தவன் மனிதன் என்பது இதுதானோ!

விடுமுறை! விடுமுறை!!
இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் வங்கி களுக்கு 10 நாட்கள் விடு முறையாம். வரும் 21 முதல் 25 முடிய தொடர்ந்து 5 நாட்கள் தொடர் விடுமுறை.
உலகிலேயே விடு முறை அதிகம் அளிக்கப் படும் நாடு இந்தியா. மாதா மாதம் தான் மதப் பண்டிகைகள் வந்து கொண்டு இருக்கின்றனவே ஒரு கட்டத்தில் ஆவணி அவிட்டத் துக்குக்கூட விடுமுறை இருந்தது. அதை தொடர்ந்து நாம் கண்டித்து வந்ததால் விடுமுறைப் பட்டியலிலி ருந்து நீக்கப்பட்டது. மத விழா என்றால் சம்பந்தப் பட்டவர்கள் விரும்பி னால் அன்று விடுப்புப் போட வேண்டியது தானே!

சட்டம் ஒழுங்கு?
காஞ்சிபுரம் மாவட் டத்தில் கடந்த 3 மாதங் களில் மட்டும் நடத்தப் பட்ட படுகொலைகள் 23.
நேற்றுகூட நெல்லை யில் பட்டப் பகலில் நடுசாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூவரை மற்றொரு இரு சக்கர வா கனத்தில் வந்தவர்கள் வெட் டிக் கொலை செய்துள்ளனர்.
நெல்லை மாநகரம் கொலை மாநகரமாகி வருகிறதே.

Wednesday, October 14, 2015

நறுக்குகள்!


மும்பையில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில், பிஜேபியைச் சேர்ந்த சுதீந்திர குல்கர்னிமீது சிவசேனைக் காலிகள் மையை வீசி அசிங்கப்படுத்தியுள்ளனர். காரணம் அந்த நூலை எழு தியவர் பாகிஸ்தான்காரர் என்ற ஒரே காரணம்தான். அத்வானி கண்டித்துள்ளார் வழக்கம்போல மோடி கண் டிக்கவில்லை. ஆனால் மகா ராட்டிர முதல்வர் ஆதரிக்கிறார்.
இது ஒன்றும் சிவசேனா காரர்களுக்கோ, பிஜேபிக்கோ புதிதான ஒன்றல்ல. ஏற்க னவே ஓவியர் உசேன் நடத் திய ஓவியக் கண்காட்சிக் குள் புகுந்து கலகம் செய்ய வில்லையா? கிரிக்கெட்  ஆட பாகிஸ்தான் அணி வந்தபோது ஆடு களத்தைச் சேதப்படுத்த வில்லையா? பாசிஸ்டுகள் இப்படித் தானே நடந்து கொள்வார்கள்!
பிள்ளை  விளையாட்டு
சென்னை - சிட்லபாக் கத்தில் விநாயகர் உடைப்பு - காவல்துறையினர் விசா ரணை என்பது ஒரு செய்தி - சிவனேன்னு இருக்கிற விநாயகனை உடைப்பது தேவையில்லாத வேலை. கண்டிக்கத்தக்கதே - ஆனா லும் ஒரு கேள்வி இருக் கிறது; அவரோ விக்னேஸ் வரர் - விக்னம் இல்லாமல் மக்களைக் காப்பாற்றக் கூடிய சக்தி வாய்ந்தவர் என்று சொல்லுகிறார்கள்.
ஆனாலும், அவரையே விக்னப்படுத்தியுள்ளார்களே, அது எப்படி? ஓ, அது ஒரு வெறும் பொம்மை! வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் சொன்னது போல பெரியவர்கள் அந்தப் பொம் மையோடு  நடத்துவது எல்லாம் வெறும் பிள்ளை விளையாட்டே!
மது போதை
சென்னை - திரிசூலத்தில் மது போதையில் ஏற் பட்ட தகராறில் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். அவரை அடித்துக் கொன்றவர்களும் மதுப் போதையில் இருந்தவர்கள் தான்; குடி சக தொழிலாளியை அடித்துக் கொல்லுகிறது.
அடுத்த கட்டம் கொன்றவன் சிறைக்குப் போகப் போகிறான்; ஆக கொல்லப்பட்டவன் குடும்ப மும் கொன்றவன் குடும்ப மும் நடு வீதிக்கு வரப் போகும் அவலம்!
அட குடியே உன் குடித் தனத்தை ஒழிக்கப் போவது எந்நாளோ! கொசுறு: மதுரை கண்ணாபட்டியைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர், அவர்தம்பி இருவரும் குடிபோதையில் மோதிக் கொண்டதில் இருவரும் சாவு!
மயானத்தில் குடி புகுந்தனர்
சென்னையை அடுத்த கொரட்டூரில் கடந்த 40 ஆண்டுகாலமாக குடியி ருந்தவர்கள் தமிழ்நாடு அரசின்  திடீர் நடவடிக்கை யால் அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். மாற்றிடம் அளிக்கப்படாததால்  இடிப்பால் அவர்கள் எங்கே போவார்கள்? வேறு வழியின்றி சுடுகாட்டுக்குள் குடியேறி விட்டனர்.
மக்களின் அடிப்படை வசதியைக்கூட செய்து கொடுக்காத அரசு - அவர்களைத் திடீரென்று வெளியேற்றுவது என்ன நியாயம்? இந்த அரசை நம்பினால், அவர்கள் சீக் கிரம் போய்ச் சேர வேண்டிய இடம் சுடுகாடுதானோ!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...