Showing posts with label கோயில். Show all posts
Showing posts with label கோயில். Show all posts

Monday, March 30, 2015

மதுரை வைத்திய நாதய்யரும் கோயில் நுழைவும் உண்மை வரலாறு என்ன?

- கி.தளபதிராஜ்


தினத்தந்தி நாளிதழ் மதுரை வைத் தியநாத அய்யரைப்பற்றிய கட்டுரை யொன்றை 8.7.14 அன்று வெளியிட்டி ருக்கிறது. மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை யும் நாடார்களையும் அழைத்துக்கொண்டு 75 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முறை யாக 8.7.1939இலேயே ஆலயப்பிரவேசம் செய்தவர் வைத்தியநாத அய்யர் என்று அக்கட்டுரை அவருக்குப் புகழாரம் சூட்டு கிறது.

யார் இந்த வைத்தியநாத அய்யர்?   

  1923ல் மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார் தந்தை பெரியார். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் உள்ளூர் ஆசாமி வைத்தியநாத அய்யர்.     "மாலை 6 மணிக்கு காங்கிரஸ் கமிட் டியின் ஆதரவில் வக்கீல் சீமான் வைத் தியநாதஅய்யர் அக்கிராசனத்தின் கீழ் மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு மாநாடு கூடிற்று.அக்கூட்டத்தில் சீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கர் அவர்கள் ஆலயச் சுதந்திரம் எனும் விஷயத்தைப்பற்றி பேசிய முக்கிய சாராம்சம்" எனக் குறிப் பிட்டு "நாடார்குல மித்திரன்" பத்திரிக்கை 11.8.1923இல் தந்தை பெரியார் அவர்க ளுடைய உரையை வெளியிட்டிருந்தது.

"நாடார் சகோதரர்களை உண்மையான காரணமின்றி ஆலயத்திற்குள் பிரவேசிக்கத்தடுப்பதானது முட்டாள்தனமான காரியம். மதுரைக் கோவிலானது கிழக்கேயிருந்து மேற்கே செல்லவும், மேற்கேயிருந்து கிழக்கே வரவும் ஒரு பாதையாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. அம்மாதிரி செல்வதில் இதர மதத்தினர் செல்லவும் நாம் சம்மதப்படுகிறோம் இதர மதத்தினருடன் இவ்வளவுதூரம் சமத்துவம் கொண்டாடும் நாம் நமது நாடார் சகோதரருடன் சமத்துவம் கொண்டாட வெறுப்படைவது எவ் வளவு தூரம் பைத்தியக்காரத்தனமும், அயோக்கியத்தனமும் முட்டாள்தனமும் பொருந்திய தென்பதை யோசித்துப் பாருங்கள்.   நாடார் சகோதரர்களின் பாதம் பட்ட தும் சுவாமி மறைந்துவிடுமென்றால் சக்தியற்ற அக்கல்லை கட்டித் தொழு வதால் என்ன பிரயோஜனம் அடை வீர்கள்? அவர்கள் கொடுக்கும் காணிக் கையை, கட்டளையை வாங்கிக் கொள்கிறோம். 

அவர்கள் பணம் அக் கடவுளுக்கு ஆகும். அவர்கள் மட்டும் ஆகாதென்றால் என்ன நியாயம்? உங்களுக்கு சுயராஜ்ஜியதாகம் உண்டு என்றால், நாடு நல்ல நிலைமையடைய பிரியம் உண்டு என்றால், எல்லோரும் சமத்துவமடைய சம்பந்தம் உண்டு என்றால்,  இன்றே நாடார் சகோதரர் களை ஆலயத்திற்கு அழைத்துச்செல்லத் தயாராயிருக்கவேண்டும். எந்தத் தடைவரினும் நாம் எதிராடத் தயா ராயிருக்கவேண்டும். இல்லாது போனால் நாடார் சகோதரர்கள் ஆலயத்தில் நுழையாதிருக்கும் வரை நாமும் செல்வ தில்லை என்று கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்" என்று ஆலயப்பிரவேசத்தின் அவசியத்தை வலியுறுத்தி தந்தை பெரியார் அவர்கள் நீண்ட உரையாற்றி யிருந்தார்.   

  கூட்டத்திற்குத் தலைமை யேற்ற வைத்தியநாத அய்யரோ தனது தலைமையுரையில் நாடார் என்கிற வார்த்தையைக்கூட, மறந்தும் உச்சரிக் காதது நாடார் சமூகத்தினரிடையே பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

"முடி வுரையில் அக்கிராசனர் சாதுரியமாய் வக்கீல் சம்பிரதாயப்படி நாடார் என்னும் சொல்லையே சொல்லாது இந்திய சகோதரர்கள் என்று பொதுவில் பேசி கூட்டத்தைக் கலைத்தார்" என்று நாடார்குல மித்திரன் எழுதியது.    1922 லேயே தாழ்த்தப்பட்டவருக்கான கோவில் நுழைவு உரிமைப் போராட் டத்தை கடுமையாக எதிர்த்தவர்தான் மேற்படி வைத்தியநாத அய்யர் என்பது "திரு.வி.க வின் வாழ்க்கை குறிப்புகள்" நூலிலேயே இடம்பெற்றிருக்கிறது.

திடீர் ஆலயப்பிரவேசம் ஏன்?  

 எம்.சி.ராஜா கொண்டுவந்த ஆலயப் பிரவேச மசோதாவை அமல்படுத்த தயங்கிய ராஜகோபாலாச்சாரியாரை கடுமையாக எதிர்த்து குடியரசு, விடுதலை இதழ்களில் தொடர்ந்து எழுதினார் பெரியார்.

1939இல் எந்தவித முன்னறிவிப்பு மின்றி யாருக்கும் தெரியாமல் கடைசி நேர இரவு  பூஜைக்குப்பிறகு  சில தாழ்த்தப்பட்டவர்களோடு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந் ததன் மூலம் அகில இந்தியப் பத்திரிக் கைகளில் தன்னை விளம்பரப்படுத்தி கொண்டு ராஜாஜி, காந்தி போன்றவர் களின் பாராட்டை பெற்றவர் வைத்திய நாத அய்யர்.அய்யர்வாளின் திடீர்  ஆலயப்பிரவேசத்திற்கு அவசியம் என்ன?     தமிழகமெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் தலை தூக்கமுடியாமல் கிடந்தது காங்கிரஸ் கட்சி. அதோடு கோவில் நுழைவு மசோதாவை அமல்படுத்தாத ராஜாஜி அமைச்சரவை பார்ப்பனரல்லாதாரின் கடுங்கோபத்திற்கு ஆளாகியிருந்தது. அப்படி ஒரு மோசமான சூழலில் நடை பெற இருந்த மதுரை, இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் மண்ணைக்கவ்வாமல் இருக்க ஏற் படுத்தப்பட்ட ரகசியத்திட்டம்தான் வைத்தியநாத அய்யரின் திடீர் ஆலயப்பிரவேசம் என்று "பெரியார் சுயமரியாதை சமதர்மம்" நூல் வரலாற்று ஆதாரங்களோடு விளக்குகிறது.    மதுரை வைத்தியநாத அய்யர்தான் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்து கொண்டு முதன்முறையாக ஆலயப் பிர வேசம் செய்ததாக அக்கட்டுரை குறிப் பிட்டிருப்பதிலாவது உண்மையிருக்கிறதா?

1921 லேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பார்ப்பனரல்லாதாரை அழைத்துகொண்டு ஜே.என். இராம நாதன், டி.வி.சுப்ரமணியம், ஜே.எஸ். கண்ணப்பன் ஆகியோர் போராட்டம் நடத்த முயன்றனர். பெரும் கல்லடிக்கு ஆளாகியதோடு அவர்கள் மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டிருக் கின்றன.

திருச்சி தாயுமானவர் மலைக்கு ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்ட வர்களை அழைத்துகொண்டு நுழைந்த போது ரவுடிகளால் தாக்கப்பட்டு மலையில் உருட்டிவிடப்பட்ட செய்தியை கேசரி இதழ் பதிவுசெய்திருக்கிறது. திருவண்ணாமலை கோவிலுக்குள் நுழைந்த ஜே.எஸ்.கண்ணப்பரை கோவிலுக்குள்ளேயே வைத்துப் பூட்டிய தகவல் குடியரசில் வெளிவந்திருக்கிறது. 1927ல் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் 1000க்கும் மேற்பட்ட பார்ப்பனரல்லாதாருடன் கி.ஆ.பெ.விசுவ நாதன் கோவில் நுழைவுப்போராட்டம் நடத்தியதை அறிவோம்.

மேலும் 1928இல் திருவானைக்கோவிலிலும், திருச்சி மலைக்கோவிலிலும் கோவில் நுழைவுப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. இவற்றையெல்லாம் திரு எஸ்.வி.ஆர் அவர்கள் தனது நூலில் வரிசைப்படுத்தி யுள்ளார்.     கோவில் நுழைவுப்போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாறு இப்படியிருக்க "குள்ளநரி" என்று பெரியாரால் அழைக்கப்பட்ட வைத்தியநாத அய்யரை தூக்கிப் பிடிக்கும் ஒரு கட்டுரையை தினத்தந்தி வெளியிட்டு மகுடம் சூட்டியிருப்பது வேதனையளிக்கிறது.

Wednesday, December 5, 2012

கோவில்கள் பேதங்களின் உறைவிடங்களே!


பேதங்களை வளர்க்கும், ஊக்குவிக்கும் ஜாதிகளை நிரந்தரப்படுத்தும் முக்கியமான இன்றைய நிறுவனங்கள் கோவில்கள்தான்.
இந்தக் கோவிலுக்குள் எந்தெந்த ஜாதி யினர், எந்தெந்த இடம்வரை செல்லலாம் என்பதுகூட வரையறுக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட ஜாதியினர் அறவே கோவிலுக் குள் நுழையக்கூடாது என்ற நிலை இருந்த துண்டு. இவையெல்லாம் பல்வேறு போராட்டங் களின் காரணமாக அதனைத் தொடர்ந்து அரசின் ஆணைகள், செயல்பாடுகள் காரண மாக மாற்றப்பட்டுள்ளன.
இருந்தாலும் கோவில் கருவறைக்குள் பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியினர் செல்லக் கூடாது; அர்ச்சகராகக் கூடாது என்ற நிலை இன்றுவரை பாதுகாப்புடன் இருந்து வருகிறது.
இதனை எதிர்த்துத்தான் தந்தை பெரியார் மரண சாசனம்போல போர்க்களத்தில் நின்றார்.
தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு அன்னை மணியம்மையார் தலைமை யிலும், அதனைத் தொடர்ந்து தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமை யிலும் தொடர்ந்து பல்வகைப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன.
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலும், தந்தை பெரியார் மறைந்த பின்பு, தமிழர் தலைவர் காலகட்டத்திலும் இரண்டு முறை இதற்கான சட்டங்கள் தி.மு.க. அரசால் மானமிகு கலைஞர் அவர்களின் தலைமை யிலான அரசால்  இயற்றப்பட்டும், பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்று சட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் முடக்கி யுள்ளனர்.
தமிழ்த் தேசியம் பேசுவோர், ஜாதியவாதம் பேசுவோர் இவற்றைப்பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. ஒட்டுமொத்தமாக எல்லா ஜாதி தமிழர்களையும் சேர்த்துத்தான் சூத்திரன் (கீழ்ஜாதி மகன், வேசி மகன்) என்று சொல்லும் கேவலம் இன்றுவரை நீடிக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கிட்டும் போது, ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் உள ரீதியான பெரிய மாற்றம் நிகழும் - இதனை சென்னையில் கடந்த முதல் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆழ்ந்த பொரு ளோடு சுட்டிக்காட்டுகிறது. தாழ்த்தப்பட்டவர் களை கீழ்ஜாதியினர் என்று நோக்கும் பார்வை அடிபட்டு வீழும்.
இன்னொரு கொடுமையை தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை ஒரு சுற்றறிக்கையின்மூலம் செய்துள்ளது.
மாற்றுத் திறனாளிகள் தோல் செயற்கை உறுப்புகளுடன் கோவிலில் வழிபட உரிமை இல்லை என்பதுதான் அந்தச் சுற்றறிக்கை.
சிவபெருமானே புலித்தோலை இடுப்பில் அணிந்துள்ளான் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு, மாற்றுத் திறனாளிகள் தோல் செயற்கை உறுப்புகளுடன் செல்லக் கூடாது என்பது முரண்பாடு அல்லவா என்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானத் திற்கு என்ன பதில் சொல்ல முடியும்?
இந்தச் சுற்றறிக்கை உடனே விலக்கிக் கொள்ளப்படவேண்டும். இல்லையெனில், இந்தப் பிரச்சினையை திராவிடர் கழகம் கையில் எடுத்துக்கொள்ளும் என்பதை எச்சரிக் கையாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Sunday, October 28, 2012

கழிப்பறையா? கோவிலா?


சென்னை அண்ணா சாலை,பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை, கடற்கரைக் காமராஜர் சாலை, தியாகராயர் நகர் தியாகராயர் சாலை, உஸ்மான் சாலைகள், சவுந்திரபாண்டியனார் அங்காடிச் சாலை, உயர்நீதிமன்ற பிராட்வே சாலை .... இப்படி சென்னையின் மக்கள் நெருக்கம் மிகுந்த சாலைகளில் நீங்கள் ஒரு கழிப்பறையையாவது பார்த்திருக்கிறீர்களா? ஆனால்,
சாலையோரங்களில் நடைபாதையை மறைத்துக்கொண்டிருக்கும் கோவில்களை நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.

நெருக்கடி மிகுந்த சென்னையின் கிட்டத்தட்ட எல்லாத் தெருக்களிலும் ஒரு இந்துக் கோவிலாவது இருக்கும். அதுவும் போக்குவரத்தை தடை செய்வதாக இருக்கும், அல்லது நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சில இடங்களில் இந்தக் கோவிலுக்குப் போட்டியாக மாதா சிலைகள் அமைத்து சிறு வழிபாட்டுத்தலங் களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இது தமிழகத் தலைநகர் சென்னையின் நிலை. மாநிலம் முழுதும் உள்ள நிலைகளை வாசகர்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். உங்கள் ஊர்களி லேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
முதலில் இந்தக் கோவில்கள் எல்லாமே சட்டவிரோத மானவை. எந்தவித நில உரிமையும் இல்லாதவை. ஆங்காங்கே சிலரால் சுய நலத்துக்காக அரசின் நிலத்தில், பொதுச் சொத்தினை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பவை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மதுரையில் பொது இடத்தில் ஆக்கிர மித்துக் கட்டிய கோவில்களை அகற்ற உத்தரவிட்டது. அப்போது சில கோவில் கள் அகற்றப்பட்டன. அதன்விளைவாக சாலைகள் விரிவாயின. போக்குவரத்து சீரானது.
அதனைத் தொடர்ந்து சில ஆண்டு களில் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் பொது இடங்களில் ஆக்கிரமித்து அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கோவில்களை அகற்றவும் ஆணையிட் டது. மாநில அரசுகளுக்கு தாக்கீது அனுப்பியது. குறிப்பிட்ட நாட்களுக்குள் அகற்றவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. ஆனால், அது இன்னமும் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வில்லை.
மதச்சார்பற்ற இந்திய அரசின் சட்டமும் அதனை செயல்படுத்தும் நீதிமன்றங்களும் இந்த விஷயத்தில் நடுநிலையோடு தீர்ப்புக் கூறுகின்றன என்பது ஆறுதலான செய்திதான். ஆனால், மதத்தை வைத்தே பிழைத்துவரும் சங்பரிவார்கள்தான் சட்டத்தையும் மதிப்பதில்லை, நீதிமன்றத்துக்கும் மதிப்பளிப்பதில்லை. பொது ஒழுக்கத் தையும் பேணுவதில்லை.
பாபர் மசூதியை இடித்த சங்பரிவார்கள் இந்துக்கோவிலென்றால் கொதித்துப் போகிறார்கள்.
அண்மையில் இப்படித்தான் குய்யோ...முறையோ என்று குமுறினார்கள்.மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ். இவர் ஒன்றும் நாத்திகரோ அல்லது இந்து மதத்தினைச் சாராதவரோ அல்ல. இவர் இந்துதான் என்பதை அவரது பெயரே சொல்லும். நெற்றியில் குங்குமம் இட்டபடியே இவர் தெரிவித்த ஒரு கருத்துக்குத்தான் சங்பரிவார்கள் சாடித்தீர்த்தன. அக்டோபர் 6 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பொது சுகாதாரத்தை வலியுறுத்திப் பேசியபோது "நமது நாட்டில் கழிப்பறைகளை விட கோவில்களே அதிகமுள்ளன.
கோவில்களை விட கழிப்பறைகள் மிக முக்கியம். நாட்டில் எத்தனை கோயில்கள் உள்ளன என்பது முக்கியமல்ல. கழிப்பறைகளுக்கும், சுகாதாரத்துக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசிவிட்டார்.
இந்த உரையை தொலைக் காட்சிகள் ஒளிபரப்பின.அதைப் பார்த்தபோது அவர் திட்டமிட்டுப் பேசவில்லை என்பதை உணரமுடிகிறது. பொதுச் சுகாதாரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர் இயல்பாக நாட்டு நடப்பை எடுத்துக் காட்டும் விதமாக கழிப்பறைகளைவிடக் கோவில்கள் அதிகமுள்ளன என்ற உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். அவ்வளவுதான் சங்பரிவாரின் அரசியல் முகமாக பா.ஜ.க.வின்செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி,`` மத நம்பிக்கையின் அடிப்படையில் கோயில்களைக் கட்டுவது என்பதும், கழிவறைகளை அமைப்பது என்பதும் வெவ்வேறு விஷயங்கள்.
இந்தியா பல்வேறு மதங்களை உள்ளடக்கிய நாடு. கோயில், மசூதி, குருத்வாரா, தேவாலயம் ஆகிய மக்களால் புனிதமான இடங்களாகக் கருதப்படுகின்றன. ஒன்றுக்கொன்று தொடர் பில்லாத விஷயங்களை தொடர்புபடுத்தி அமைச்சர் பேசியிருப்பது பெரும் தவறுஎன்று கூறியுள்ளார்.
வழக்கம்போல காங்கிரஸ் வழவழா மறுப்பைக் கூறியுள்ளது. அதன் தொடர்பாளர் மணீஷ் திவாரி, ``எங்கள் கட்சி அனைத்து மதங்களின் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளது. எந்த சூழ்நிலையில், எதை வலியுறுத்துவதற்காக ஜெய்ராம் ரமேஷ் அப்படி பேசினார் என்பது சரியாகத் தெரியவில்லை. நாங்கள் அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கின்றோம், என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜெய்ராம் ரமேஷ் வீட்டுக்கு முன்பாக விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து, தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்தினார்களாம்.
எதற்காக ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்புக் கேட்கவேண்டும்? அவர் சொன்னதை துணிவோடு மறுக்க சங்பரிவார்களால் முடியுமா?அது உண்மையில்லை என்றுதான் அவர்களால் கூறமுடியுமா? நாட்டில் சரி பகுதிக்கு மேல் ஒரு வேளை உணவே உண்ணும் மக்களைப் பற்றிக் கவலைப் படாமல், கடவுளையும் மதத்தையும் பற்றி மட்டுமே கவலைகொள்ளும் காவிகளுக்கு மக்களின் பொதுச்சுகாதாரம் பற்றிப் பேசத்தான் அருகதை உண்டா?
இதற்கு முன் நாட்டை ஆண்ட பா.ஜ.கவுக்குத் தெரியாதா இந்தியாவின் பொதுச் சுகாதார நிலை? புள்ளிவிவரங்கள் என்ன கூறுகின்றன?  நாட்டில் 18 விழுக்காட்டினருக்கு தண்ணீருடன் கூடிய அய்ரோப்பிய மாதிரிக் கழிப்பறைகளும்,11.5 விழுக்காட்டினருக்கு சாதாரண குழிக் கழிப்பறைகளும், 6.9 விழுக்காட்டினருக்கு பிறவகைக் கழிப்பறைகளும் மட்டுமே உள்ளன.எஞ்சிய 63.6 விழுக்காட்டினருக்கு கழிப்பறைகள் கிடையாது. இதில் கிராமப்புரங்களில் வாழும் மக்களே அதிக அளவில் கழிப்பறைகள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்த தகவல்.
அதாவது இந்தக் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 70 கோடி மக்கள் திறந்தவெளிகளில், வயல்வெளிகளில், சாலை ஓரங்களில் மற்றும் நகர்ப்புரங்களில் உள்ள மக்கள் நகராட்சிப் பூங்காக்களில் மலம் கழிக்கின்றனர். தொற்றுநோய் பரவுவதற்கு இவையே முக்கியக் காரணியாக உள்ளதாக சுகாதாரம் குறித்த ஆய்வு கூறுகிறது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 49.8 விழுக்காட்டினர் திறந்தவெளிகளிலும், 3.2 விழுக்காட்டினர் மட்டுமே பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துபவர் களாகவும் இருக்கின்றனர்.
இதுபோக பள்ளி செல்லும் 3 கோடி குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் கிடையாது. இந்நிலையில் பள்ளிகளில் கட்டாயம் கழிப்பறைகளும் குடிநீர்வசதிகளும் செய்துதரப்பட வேண்டும் என்றும் அது மாணவர்களின் உரிமை என்று 2011 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது.
-இந்தக் கணக்கோடு நாட்டில் உள்ள கோவில்களின் கணக்கையும் ஒப்பிட்டுப்பாருங்கள். தெருவுக்குத் தெரு கோவில்கள் உண்டு. ஆனால், எல்லாத்தெருக்களிலும் கழிப்பறைகள் உண்டா? கோவில்களைக் கட்ட ஒரு கூட்டம் எப்போதும் வசூல் நோட்டைத்தூக்கிக் கொண்டு காசு பார்ப்பது உண்டு.
ஆனால், சாலையோரங்களில், சந்துபொந்து களில், வெட்டவெளிப்பொட்டல்களில் மலம்-_ சிறுநீர் கழிப்பதை நிறுத்தி, பொதுக்கழிப்பிடம் கட்ட வசூல்நோட்டைத்தூக்கியதுண்டா? கோவிலுக்காக சண்டைபோடும் பக்த சிரோன்மணிகள் கழிப்பறைகளுக்காக வாய் திறந்த துண்டா? அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் கட்டிக்கொடுத் துள்ள கழிப்பறைகளைத் தூய்மையாகப் பராமரிப் பதுதான் உண்டா? சாலைப் போக்குவரத்தை ஆக்கிரமித் துள்ள கோவில்களை இடிக்க அரசு முனையும் போது அதனை எதிர்த்து மறியல் செய்யும் மதவெறி மாக்கள், எங்கள் தெருவுக்கு கழிப்பறை வேண்டும் என மறியல் நடத்தியதுதான் உண்டா? நாட்டின் நிலை இவ்வாறிருக்க அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியது சரிதானே!
அன்றாடம் இரண்டு வேளை ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தேவைப்படும் கழிப்பறை அவசியமா? மனித அறிவை மழுங்கடித்து  பணத்தையும் பறிக்கும் கோவில்கள் அவசியமா?
* நாத்திகக் கலைஞானி கமல்ஹாசனின் `நம்மவர் என்ற படத்தில் ஒரு காட்சி.கமல் அவர்களே அக்காட்சியில் பேசுவார்.``எனக்கு அவசரமா பக்தி வந்திருச்சு;பக்கத்தில கோவில் எங்க இருக்கு ன்னு யாராவது கேக்குறாங்களா?அவசரமா யூரின் வருது;கக்கூஸ் எங்க இருக்குன்னுதானே கேக்குறாங்க...
அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசுனது ஒரு வகையில இதுமாதிரிதானே!
* இந்துத்துவ சோதனைக் களமான குஜராத்தில் நவீன ஹிட்லர் நரேந்திரமோடி சாலைகளை அகலப் படுத்த முனைந்தார். அப்போது சாலைகளில் உள்ள கோவில்களை அகற்றவேண்டிவரும் என்று அதிகாரி கள் கூறினார்கள்.சத்தமில்லாமல் அதற்கு ஒப்புதல் கொடுத்தார் மோடி. அங்கு இந்துத்துவ வியாபாரத் தலங்களான கோவில்கள் பலநூறு இடிக்கப்பட்டன. அங்குமட்டுமல்ல,இந்தியாவின் வேறு எங்கும் இந்துத்துவாக்கள் இதுபற்றி மூச்சுவிடவில்லை. மோடி இடித்தால் குட்டிச்சுவர்; மற்றவர் இடித்தால் கோவிலோ?


* 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஒரு வினோத யதார்த்தம் இது. இந்தியாவில் 49.8 விழுக்காட்டினருக்கு கழிப்பறைகள் இல்லை. ஆனால், 63.2 விழுக்காட்டினர் தொலைப் பேசியும், 53.2 விழுக்காட்டினர் செல்பேசியும் வைத்துள்ளனர்.
- மணிமகன்-

Thursday, October 25, 2012

கடவுள் சக்தி - நம்பிக்கை - சீட்டுக் கிழிந்தது!

குடந்தையில் 11 அய்ம்பொன் கோயில் சிலைகள் கோவிந்தா!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பெருமாள் கோவிலில் 11 அய்ம்பொன் சிலைகள் புதன்கிழமை திருட்டு போயின.
கும்பகோணம் அருகேயுள்ள பாபுராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட புளியஞ்சேரி அக்ரஹாரத்தில் ருக்மணி சத்யபாமா சமேத வேணு கோபாலசுவாமி (பெருமாள்) கோவில் உள்ளது. தனியாருக்குச் சொந்த மான இந்தக் கோவிலை ஒரு பிரிவைச் சேர்ந்த பரம்பரையினர் மட்டும் வழிபட்டு வருகின்றனர்.
ஏறத்தாழ நூறு ஆண்டுகள் பழைமையான இந்தக் கோவிலில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அர்த்த மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் சுவரும், மண்டபமும் இடிந்து உள்ளே விழுந்தன.
இந்தக் கோவிலை திருப்பணி செய்ய அறங்காவலர்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அக்டோபர் 22-ஆம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த ரவிச்சந்திர குருக்கள் இந்தக் கோவிலில் பூஜை செய்து, பின்னர் பூட்டிவிட்டுச் சென்றார். செவ்வாய்க்கிழமை பகல் முழுவதும் மழை பெய்து கொண்டிருந்ததால், குருக்கள் கோவிலுக்கு வரவில்லை.
புதன்கிழமை காலை 10 மணிக்கு கோவிலுக்கு வந்த குருக்கள் அர்த்த மண்டபத்துக்கும் கருவறைக்கும் இடையே உள்ள கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், பூட்டும் காணாமல் போனது தெரியவந்தது.
மேலும், கோவில் கதவு உடைக்கப் பட்டு, கருவறையில் இருந்த 5 ஆழ் வார்கள் சிலைகள், வேணுகோ பாலன், ருக்மணி, சத்யபாமா, கிருஷ் ணன், நரசிம்மன், ஆஞ்சநேயர் ஆகிய 11 சிலைகள் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் எனக் கூறப் படுகிறது.
காளஹஸ்தி கோவில் கோபுரம் கற்கள் இடிந்து விழுந்தன நகரி:  காளஹஸ்தி சிவன் கோவி லில், விமான கோபுரத்திலிருந்து கற்கள் இடிந்து விழுந்தன.
சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி வாயுலிங் கேஸ்வர சுவாமி கோவிலில், ஞான பிரசூனாம்பிகை தாயார் சன்னதி விமான கோபுரத்தில், மூன்று கலசம் அமைந்து உள்ளது. இந்த கலசம் அருகே, கற்கள் திடீரென இடிந்து கீழே சரிந்தது. கடந்த நான்கு தினங்களாக காளஹஸ்தி பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் விமான கோபுரத்தின் மீது தண்ணீர் இறங்கியதால், கலசத்தின் அடிப்பகுதி சேதமடைந்து, கற்கள் இடிந்து விழுந்துள்ளன. அப்போது, பக்தர்கள் யாரும் அருகில் இல்லாத தால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை.
நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்த பக்தர்கள், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தாயார் சன்னதி விமான கோபுரத்தின் மீது உள்ள கலசங்கள் அருகே செடிகள் முளைத்துள்ளன. இதை அகற்றி, பராமரிக்க தவறியதால் கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. விமான கோபுரத்தை உடனடியாக பழுது பார்க்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என, கோவில் அதிகாரி தெரிவித்தார்.  கடந்த ஆண்டும், கோவில் முகத் துவார கோபுரத்தில் கலசம் ஒன்று சரிந்து விழுந்தது.
அதற்கு முன்பு ராஜகோபுரமே தலைகுப்புறக் கவிழ்ந்ததே!
திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பக்குளம் சுவர் இடிந்தது
திருவாரூர்: திருவாரூர் தியாக ராஜர் கோயில் கமலாலய தெப்பக் குளத்தின் 66 அடி நீள சுவர் மழையால் இடிந்து விழுந்தது.
திருவாரூரில் தியாகராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான கமலாலயம் தெப்பக் குளம் பிரமாண்டமானது. தொடர்ந்து 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. கன மழையால் கமலாலய தெப்பக் குளத்தில், துர்காலயா சாலை வடக்கு பகுதியில் 66 அடி நீள சுற்றுச்சுவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் திடீரென இடிந்து குளத்துக்குள் விழுந்தது. எப்போதும் பரபரப்பான துர்காலயா சாலையில் தெப்பக்குளத்தின் சுவர் இடிந்ததால் தடுப்பு வைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தெப்பக்குளத்தில் நடைபெற்று வந்த படகு போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தகவலறிந்த இந்து அறநிலையத் துறை இணை ஆணையர்  ஆர்டிஓ,  தாசில்தார்,  நகராட்சி தலைவர்  மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சாட்டையால் அடித்து பேய் விரட்டலாம்!
என்று ஒழியும் இந்த மூடப் பேய்?
நாமக்கல்: நாமக்கல் அருகே நடந்த, அச்சப்பன் கோவில் திரு விழாவில், பக்தர்களை சாட்டையால் அடித்து, பேய் விரட்டும், "வினோத' நிகழ்ச்சி நடந்து.
நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமத்தில், அச்சப்பன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில், ஆண்டுதோறும், ஆயுதபூஜைக்கு மறுநாளான விஜயதசமியன்று, திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதில், குரும்பா இன மக்கள் மட்டும் பங்கேற்பர். விழாவின், முக்கிய
நிகழ்ச்சியாக, பக்தர்களைச் சாட்டை யால் அடித்து பேய் விரட்டுதல், சேவை நடனம் உள்ளிட்டவை நடக் கும். இதில், திருமணமாகாத பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மற்றும் துஷ்ட ஆவி பிடித்தோர் பங்கேற்பார்களாம். அவர்கள், தரையில் மண்டியிட்டபடி, கைகளை மேலே தூக்கியிருப்பர். கை தூக்கியுள்ள பக்தர்களை, அச்சப்பன் கோவில் பூசாரி மற்றும் கோமாளி வேடம் தரித்த நபர், பிரம்மாண்ட சாட்டையைச் சுழற்றி, நடனமாடியபடி அடிப்பது வழக்கம்.
அதன் மூலம், தங்களைப் பிடித்த துஷ்ட ஆவி உள்ளிட்டவை நீங்கும் என்பது, விழாவில் பங்கேற்கும் பக்தர் களின் நம்பிக்கையும் இந்தாண்டுக்கான, அச்சப்பன் கோவில் திருவிழா, விஜய தசமியான, நேற்று நடந்தது. சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குரும்பா இன மக்கள், கோவிலில் குவிந்தனர். மாலை, 3 மணியளவில், பிரசித்தி பெற்ற பேய் விரட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. அதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் ஈர ஆடையுடன் வரிசையாக மண்டியிட்டு, கைகளை மேலே உயர்த்தியவாறு காத்திருந்தனர்.
கோவில் பூசாரி மற்றும் கோமாளி வேடம் தரித்த நபரும் மேள தாளம் முழங்க சாட்டையை சுழற்றியபடி வந்தனர். பின், கைகளை மேலே உயர்த்தி மண்டி யிட்டிருந்த பக்தர்களை சாட்டையை சுழற்றி அடித்தனர். ஒரே அடியில் சிலர் எழுந்து சென்றனர். ஒரு சில பக்தர்கள் இரண்டு, மூன்று அடிகளுக்கு பின் எழுந்து சென்றனர்.அச்சன் கோவில் திருவிழாவையொட்டி, 40-க்கும் மேற் பட்டோர் நேர்த்திக் கடனாக, தங்களது தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டனராம்.
உடலில் ரத்தம் பீறிட கத்திபோடும் விழாவாம்!
பொள்ளாச்சி: நவராத்திரியை ஒட்டி, பொள்ளாச்சி அருகே அம்மன் கோவிலில், உடலில், "கத்தி போடும்' நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டம், நெகமத்தில், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது.
இங்கு, நவராத்திரி விழா, அக்., 15இல் துவங்கியது. கடந்த, 19ஆம் தேதி மாலை,  திருவிளக்கு வழிபாடும், நேற்று முன்தினம் இரவு, 8 மணிக்கு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும் நடந்தது.
விஜயதசமி தினமான நேற்று காலை, 9 மணிக்கு, விநாயகர் கோவிலில் அலகு சேவை செய்து, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
அங்கிருந்து, சக்தி அழைத்து வரப்பட்டது; உடன், மாவிளக்கு மற்றும் முளைப்பாரி ஏந்தி பக்தர்கள் வந்தனர்.
இதன் பிறகு, பக்தர்கள், "கத்தி போடும்' நிகழ்ச்சி, காலை 11:30 மணியளவில் துவங்கியது. இதில் பங்கேற்றவர்கள், "வேசுக்கோ தீசுக்கோ' என்ற முழக்கமிட்டவாறு, இரு கத்திகளை கொண்டு கைகளை கீறிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராம மக்கள் கண்டு களித்தனராம்.
துர்க்கா சிலை கரைப்பில் இளைஞர் சாவு
சென்னை: தசரா திருவிழா வையொட்டி சென்னையில் துர்க்கை அம்மன் சிலைகளை வைத்து வழி பாடு செய்தனர். வழிபாடு செய்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நேற்று மாலை கடலில் கரைத்த போது இளைஞர் ஒருவர் பெரும் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்துபோனார்.
விநாயகர் சதுர்த்தி திருவிழாவை யொட்டி, விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து, பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்ததுபோல, தசரா திருவிழாவை யொட்டி சென்னையில் சவுகார்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் 80 துர்க்கை அம்மன் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
வழிபாடு செய்த துர்க்கை அம்மன் சிலைகளை நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் மற்றும் நீலாங்கரை பல்கலைநகர் கடற்கரைப் பகுதிகளில் துர்க்கை அம்மன் சிலைகளை கடலில் கரைத்தனர். நீலாங்கரை பல்கலை. நகர் கடலில் சிலைகளைக் கரைத்தபோது, மணி கண்டன் (வயது 27) என்ற இளைஞர் கடலில் மூழ்கினார்.
அவரை மிகப் பெரிய அலை இழுத்துச் சென்றது. அவரோடு மேலும் ஒரு இளைஞரும் கடலில் மூழ்கி னார். ஆனால், அவரை அங்கிருந் தவர்கள் காப்பாற்றிவிட்டனர். இறந்த  மணிகண்டன் கிழக்கு தாம் பரத்தை சேர்ந்தவர். திருமணமாகாதவர். சென்னை விமான நிலையத்தில் சரக்கு பொருட்களை ஏற்றி, இறக்கும் பிரிவில் ஊழியராக வேலை பார்த் தார். இவரது உடல் நேற்று இரவு அதே பகுதியில் கரை ஒதுங்கியது.
நீலாங்கரை காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத் தினார்கள்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...