Showing posts with label பெட்டிச்செய்திகள் - விடுதலை. Show all posts
Showing posts with label பெட்டிச்செய்திகள் - விடுதலை. Show all posts

Friday, January 11, 2013

மனுதர்மவாதிகள் இன்னும் சாகவில்லை



மனுதர்மவாதிகள் இன்னும் சாகவில்லை

பெண்களைப்பற்றி ஆண்கள்தான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆள் ஆளுக்கு அறிவுரைகளை அள்ளி விடுகிறார்கள்.
பெண்கள் ஜீன்ஸ் போடக் கூடாது; குட்டைப் பாவாடை அணியக் கூடாது என்கிறார்கள். புதுச்சேரியிலோ பெண் கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என்று அருள் வாக்குத் தருகிறார்கள். பெண்கள் பற்றி ஆண்கள் பேசும் மட்டும் பெண்கள் பெண்ணுரிமை எங்கிருந்து குதிக்கப் போகிறது?
அதைத்தான் தந்தை பெரியார் திருப்பித் திருப்பி வலியுறுத்திக் கொண்டுள்ளார்.
இந்து சமூக அமைப்பில், சூத்திரர் கள், பஞ்சமர்கள், பெண்கள் எல்லாம் பேசக் கூடாதவர்கள். தங்கள் உரிமை களைப்பற்றி வாய்த் திறக்கக் கூடாதவர்கள்.
பெண்களையும், சூத்திரர்களையும் கொல்லுவது பாவமல்ல என்கிறது மனுதர்மம். பாவ யோனியில் பிறந்த வர்கள் என்கிறது கீதை.
பெண்கள்  தங்கள் உரிமைகள் பற்றிப் பேச வேண்டிய முக்கியமான இடம் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த இடம்!
ஆம், சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும்,  பெண்களின் உரத்த குரல் உக்கிரமாக  வெடித்தாக வேண்டும். மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்களுக்கு,  50 விழுக்காடு இடங்கள் கிடைப்பது தான் நியாயம்.
ஆனால் நிலைமை என்ன 33 விழுக்காட்டுக்கே தாளம் போட வேண்டி இருக்கிறதே.
1996ஆம் ஆண்டு முதல் இந்த மசோதா தத்தளித்துக் கொண்டு இருக்கிறதே!
1952 முதல் தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 10 விழுக் காட்டு எண்ணிக்கையை பெண்கள் தாண்டவில்லையே! அதிகபட்சம் 2009 நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் சதவிகிதம் இந்தியாவில் 10.7 ஆகும்.
முசுலிம் நாடுகளில் பெண்களுக்கு உரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவார்கள். உண்மை என்ன வென்றால் முசுலிம் நாடுகளைவிட இந்தியா பின் தங்கியே உள்ளது. உலக வரிசையில் இதில் இந்தியா வுக்குள்ள இடம் 104; பாகிஸ் தானுக்கோ 42 ஆம் இடம் போதுமா!
இந்தியாவில் அனைத்து மாநிலங் களிலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர் கள் 4030 என்றால், பெண்கள் வெறும் 311 பேர் மட்டுமே!
இந்த நிலை நீடிக்கு மட்டும் பெண் கள் குரல் பிரதிநிதித்துவ சபைகளில் ஒலிப்பதெங்கே?
பெண்கள் எந்த ஆடையை அணிவது என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் ஆண்கள் என்பது எவ்வளவு கேவலம்?
மருமகளை மாமியார் எட்டி உதைத்தால் அது ஒன்றும் குற்றமல்ல; என் மகன் உன்னை விவாகரத்து செய்து விடுவான் என்று மாமியார் மிரட்டுவதும் குற்றமல்ல.  இந்தியக் குற்றவியல் பிரிவு 498 அவை தண்டனைக்குரியதல்ல என்று சொல் லுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி. சின்கா, சிரியாக் ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு கறாராகத் தீர்ப்புக் கூறி விட்டதே! சென்ற நூற்றாண்டில் அல்ல - இந்த நூற்றாண்டில்தான் 27.7.2009இல் வந்த தீர்ப்புதான்.
முதல் இந்தியன் நீதிபதி என்று பெருமை சாற்றும் ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர் கணவன் மனைவியை அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்புச் சொல்லவில்லையா?
காலம் மாறினாலும் மனுதர்ம வாதிகள் வாழையடி வாழையாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இன்னும் அவர்கள் சாகவில்லை! அதன் அடிப்படையில்தான் சர்சங் சலாக் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) மோகன் பகவத்  எனும் சித்பவன் பார்ப்பனர் பகருகிறார்.

வீதிக்கு வாருங்கள் வீராங்கனைகளே!


பெண்களை இழிவுபடுத்துவது - கொச்சைப்படுத்துவது என்பது பார்ப் பனர்களின் குருதியில் கலந்துவிட்ட கேவலமான சமாச்சாரம்.
பெண்களுக்கு வேதம் ஓத உரிமை கிடையாது என்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண்ணை மேடையிலிருந்து விரட்டிய பூரி சங்கராச்சாரியாரின் கொடும் பாவியைத் தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத் தோழர்கள் எரித் ததுண்டு. (17.2.1994) தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி உட்படத்  தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கில் ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக இப்பொழுது அலைந்து கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன இலேசுப்பட்ட பேர் வழியா?
விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்குச் சமமானவர்களே என்று தினமணி தீபாவளி மலருக்குப் பேட்டி கொடுத்தவர் தானே!
வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று கெட்ட வார்த்தை பேசியவர்தானே!
காஞ்சிபுரம் மடத்தின்முன் சகோதரி திருமகள் தலைமையில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதே!
மகளிரணி சகோதரிகள் புலிவலம் இராசலட்சுமி மணியம், ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், கு. தங்க மணி, அ. சித்ரா காஞ்சி ஜெயச்சுந்தரி, மு. மாலதி என்று பெரிய மகளிர் பட்டாளமே கிளர்ந்து எழுந்ததே! (9.3.1998).
விதவைப் பெண்களை தரிசு நிலத்திற்கு ஒப்பிட்டதற்காக தினமணியில் (12.1.1998) பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் கண்டித்து சிறப்புக் கட்டுரை எழுதி னாரே.
ஹிட்லரும், சங்கராச்சாரியாரும் என்று தலைப்பிட்டு இந்தியா டுடே! இதழில் கண்டித்து எழுதினாரே பிரபல எழுத்தாளர் வாஸந்தி.
பிரதமர் இந்திரா காந்தி கணவரை இழந்தவர் என்பதற்காக மறைந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கிணற் றுக்குப் பக்கத்தில் (தோஷம் கழிப்ப தற்காகவாம்!)  உட்கார வைத்துப் பேசவில்லையா?
திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரை அவ்வப்பொழுது சாட்டையடி கொடுத்துக் கொண்டு தானிருக் கிறது.
ஆனாலும் அவாளின் குருதியில் கலந்துவிட்ட இந்துமதச் சாக்கடை என்னும் துரு நாற்றத்திலிருந்து வெளியேறத் தயாராக இல்லை.
ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருந்த குப்பஹள்ளி சீத்தாராமையா  சுதர்ஸன் (சுருக்கமாக கே.எஸ். சுதர்ஸன்) பி.ஜே.பி.யின் அனல் பேச் சாளர் என்று கூறப்படும் உமாபாரதி, அக்கட்சியிலிருந்து விலகிய நேரத் தில் என்ன சொன்னார் தெரியுமா?
அந்தப் பெண்ணின் குடும்பம் - வளர்ப்பு முறை சரியில்லை என்று ஜாதி உணர்வுடன் கூறவில்லையா?
அதனைக் கண்டித்து உமாபாரதி யின் உடன்பிறப்பு கன்யாலால் கருத்துச் சொல்லவில்லையா? (தி இந்து 12.4.2005 பக்கம் 11)
சுதர்சனையடுத்து  ஆர்.எஸ். எஸின் தலைவராக இப்பொழுது இருக்கக் கூடிய மோகன்பகவத் அதே பாணியில் பெண்கள் வீட்டு வேலைக் குத்தான் லாய்க்கு - அதிலிருந்து பிறழ்வதால்தான் பெண்கள் மீதான வன்முறை நடக்கிறதாம் - சொல் கிறார் அரை டவுசர்!
இந்த அறிவுரையை அவாளின் அக்ரகாரத்துப் பெண்மணிகளிடம் சொல்ல வேண்டியதுதானே!
நீதிபதிகளாகவும், டாக்டர்களாக வும், அய்.ஏ.எஸ்.களாகவும், ஏ.ஜி. அலுவலகத்திலும், வருமான வரித்துறையிலும், சுங்கத் துறையிலும் - மிக முக்கியமான அலுவலகங்களி லும், அய்.டி.அய்.களிலும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் அக்கிரகாரப் பெண்களே - வெளியில் வாருங்கள் - ஒழுங்காக வீட்டுக்குள்ளிருந்து புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும்  சமைச்சிக் கொட்டுங்கள் - கரண்டி பிடிக்க வேண்டிய கைகள் ஏன் பேனா பிடிக்க வேண்டும் என்று கேட்க வேண்டியதுதானே!
அக்கிரகாரப் பெண்களிடம் கேட்டால் தெரியும் சேதி அப்பொழுது!
ஒருக்கால் தாழ்த்தப்பட்ட, சமூகப் பெண்களும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் இப்பொழுதெல்லாம் படிக்கிறார்களே. உத்தியோகம் பார்க்கிறார்களே என்ற ஆத்திரத்தில் அக்கிரகார ஆர்.எஸ். எஸ்., தலைவரின் பூணூல் துடிக் கிறதோ!
கருஞ்சட்டைக் குடும்பங்கள் (இரு பாலரும்) நாளை மறுநாள் (12.1.2013) வீதிக்கு வாருங்கள்! வாருங்கள்!! வேதியர் கூட்டத்தின் வீண் வம்புக்குப் பதிலடி கூறுங்கள்! கூறுங்கள்!! (ஆர்ப்பாட்ட முழக்கம் 3ஆம் பக்கம் காண்க)

Wednesday, January 2, 2013

செய்திச் சிதறல்கள்


விலையில்லாததா?
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தேர் தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி விலையில்லா ஆடுகளைப் பொது மக் களுக்குக் கொடுத்தது. விலையில்லா, ஆடுகள், விலையுள்ள ஆடுகளாகி விட்டன. அவை கசாப்புக் கடைக்குச் சென்று விட்டன என்ற புகார் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது.
இப்பொழுது கால்நடை வளர்ப்புத் துறைக்குப் புதிய வேலை என்ன தெரியுமா? அப்படிக் கொடுக்கப்பட்ட ஆடுகள் இருக்கின்றனவா? விற்கப் பட்டனவா? என்று விவரம் சேகரிப்பது.
இது மாதிரி செய்வதைவிட அனைவருக்கும் இலவசக் கல்வி எல்லா நிலைகளிலும் என்பதைக் கொண்டு வந்தால் இந்தத் தலை முறைக்கு மட்டுமல்ல; அடுத்துவரும் தலைமுறைக்கும் பயன்படுமே!
####
மதிப்பெண்தான் மதிப்பா?
+2 தேர்வு மற்றும் 10ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் மதிப்பெண்கள் பெறுவது தொடர்பாக ஒரு சுற்ற றிக்கை தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையிலிருந்து வெளி வந்துள்ளது.
எழுத்துத் தேர்வில் +2 தேர்வில் 150-க்கு 70 மதிப்பெண்கள் பெற வேண்டும்; செய்முறைத் தேர்வில் 50-க்கு 30 மதிப்பெண்கள் பெற வேண்டுமாம். எழுத்துத் தேர்வில் உரிய மதிப்பெண் பெற்று செய்முறைத் தேர்வில் 30 மதிப்பெண் பெறா விட்டால் தோல்வி தானாம். 10ஆம் வகுப்பிலும் இதுபோன்ற குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை எப்படி இருந்தது? அதில் என்ன குறைபாடு? ஏனிந்த மாற்றம் என்பது விளக்கப்படவில்லை.
குறிப்பாக செய்முறைத் தேர்வில், தேர்வாளர் மனப்பான்மையைப் பொறுத்து மதிப்பெண்கள் மாறக் கூடும்.
கிராமப்புறங்களில் இன்னும் சோதனைச் சாலைகள் (டுயடிசயவயசல) எந்த அளவுக்கு முன்னேறியிருக்கின் றன என்பது தெரிந்த ஒன்றே!
டாக்டர் அம்பேத்கர் கூட 35 மதிப்பெண் பெற்று தான் தேர்வில் வெற்றி பெற்றார். அப்படி வெற்றி பெற் றவர்தான் இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கே சிற்பியானார் என் பதை மறந்து விட்டு, மதிப்பெண்களைப் பிடித்துத் தொங்க வேண்டாம்! உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரனே இதனைச் சுட்டிக் காட்டினார்.
மதிப்பெண் மதியை அளக்கும் மதிப்பெண்ணா? தேவையில்லாமல் கிராமப்புறப் பிள்ளைகளின் எதிர் காலத்தோடு விளையாட வேண்டாம்.
#####
கடலைத் திருவிழாவாம்!
ஓசூர் ராஜகணபதி நகர் ஆஞ்ச நேயர் கோயிலில் ஒரு முட்டாள்தன மான விழா, ஆங்கிலப் புத்தாண்டுத் தினத்தன்று; அந்தக் குரங்குக் கட வுளுக்கு (ஆஞ்சநேயருக்கு) வேர்க் கடலை தூவி தேர்த்திக் கடனாம். இப்படி செய்தால் வேர்க் கடலை மகசூல் பிரமாதமாக இருக்குமாம்.
நாட்டில் தண்ணீர்த் தட்டுப்பாட் டால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகி இருக்கின்றன.
ஆஞ்சநேயருக்கு நேர்த்திக் கடன் செய்தால் மாதம் மும்மாரி பொழிந்து விவசாயம் கிடுகிடு என்று விண்ணை முட்டி கொழிக்கும் என்றால் இந்தச் சுலபமான வழியை டெல்டா பகுதி களிலும்கூட நடத்தலாமே!
இதுதான் விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்கும் வழியா? மதத்தை முதலில் ஒழித்தாலே நாடு சுபிட்சம் அடையும் என்க!
@@@@@
பலே பஞ்சாப்!
பாலியல் தொடர்பான வழக்கு களில் பாதிக்கப்படும் பெண்களை காவல் நிலையங்களுக்கு அழைத்து விசாரிக்கக் கூடாது;
பெண்கள் வீட்டுக்கே சென்று விசாரிக்க வேண் டும் என்று பஞ்சாப் முதல் அமைச்சர் பிரகாஷ்சிங் பாதல் ஆணை பிறப் பித்துள்ளார்.
நியாயமான ஒன்றே! டில்லியில் பேருந்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் கூடத் தெரிவிக்கக் கூடாது என்கிற நாகரிகம் பாராட்டத்தக்கதே. அதே கண்ணோட்டத்தில் இதை அணுக வேண்டியதுதான் சரியானது.
வேலியே பயிரை மேய்வதுபோல இரவு நேரத்தில் பெண்களைக் காவல் நிலையத்திற்கு அழைக்கக் கூடாது என்ற நிலை
ஆணைகளையும் மீறி, அழைத்துச் சென்று பாலியல் வன் முறைகளை நடத்துவது சர்வ சாதார ணமாக நடக்கவில்லையா!
(விழுப்புரத்தில் ரீடாமேரிக்கு என்ன நடந்தது?)
இந்த நிலையில் பஞ்சாப் முதல் வரின் ஆணையை மத்திய அரசின் உத்தரவாகக் கூட வெளியிடலாமே! இதை மற்ற மற்ற மாநில அரசுகளும் பின்பற்றலாமே!

Thursday, December 6, 2012

முதலில் படியுங்கள்!


திராவிடர் இயக்கத்தின் சாதனைகள் என்பவை அடிப்படையானவை - மேலோட்டமாக அதனைப் பார்க்கக் கூடாது. எடுத்துக் காட்டாக கல்லூரிப் படிப்பைப் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால் சென்னைக்குத் தான் வரவேண்டும் என்ற நிலை.
சென்னைக்கு வந்தால் எங்கே தங்கிப் படிப்பது. விடுதிகள் எல்லாம் பார்ப்பனர்களிடத்தில். பார்ப்பனரல்லாதார் அங்குத் தங்கி உணவருந்த முடியாது. வேண்டுமென்றால் எடுப்புச் சாப்பாடு வாங்கிக் கொள்ளலாம். இந்த நிலையில்தான் டாக்டர் சி. நடேசனார் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக திராவிட சங்க விடுதி  (Dravidian Association Hostel) என்ற பெயரில் விடுதியைத் தொடங்கினார். (1916)
இன்றைக்கு அதன் அருமையை உணர முடியாமல் இருக்கலாம். அந்தக் கால கட்டத்தில் பாலை வனத்தில் ஒரு சோலைவனம் என்றே அதனைச் சொல்ல வேண்டும். டாக்டர் நடேசனார் அன்று தோற்றுவித்த திராவிடர் சங்கம், ஆண்டுதோறும் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற பார்ப்பனர் அல்லாத மாணவர்களை அழைத்துப் பாராட்டியது.
டாக்டர் டி.எம்.நாயர், ஆர்.கே.சண்முகம் போன்றவர்கள் எல்லாம் அத்தகு கூட்டங்களில் பங்கு கொண்டு பார்ப்பனர் அல்லாத மாணவர்களைப் பாராட்டுவார்கள் - ஊக்கப்படுத்துவார்கள்.
டாக்டர் டி.எம். நாயர் ஒரு முறை மாணவர்களைப் பாராட்டியபோது கீழ்க்கண்ட உணர்ச்சி மிகு சொற்களைப் பயன்படுத்தினார்.
“Awake, Arise or  Be For Ever Fallen”
விழித்துக் கொள்ளுங்கள்!  எழுச்சி பெறுங்கள்!! இன்றேல் என்றும் நீவிர் வீழ்ந்து பட்டோராவீர்!!!
என்பதுதான் அந்த எழுச்சியூட்டும் வீரம் செறிந்த வரிகள்.
டாக்டர் நடேசனார் அவர்களால் உண்டாக்கப்பட்ட விடுதியில் படித்த மாணவர்கள்தாம் - பிற்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக வந்த எஸ்.ஜி.மணவாள ராமானுஜம், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார் போன்றவர்கள்.
திராவிடர் இயக்கம் என்ன செய்து சாதித்துக் கிழித்தது என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறும் பொறுப்பற்றவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
எந்த ஒரு சமூகமும் முன்னேற வேண்டுமானாலும் அந்தச் சமூகத்திற்குக் கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதனைச் செய்து கொடுத்தது திராவிடர் இயக்கம். (சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக்கூடாது என்று பார்ப்பனர்கள் சாத்திர மயமாக்கி வைத்திருந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.)
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) இரு முறை ஆட்சிக்கு வந்த போதும் செய்த முதல் செயல் என்ன? 1937-1939 இல் 2,500 கிராமப் பள்ளிகளை மூடினார் என்றால் அதன் தன்மை என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டாமா?
ஒரு காலத்தில் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றால் மாணவர்களைத் தேர்வு செய்து சேர அனுமதிக்கும் அதிகாரம், உரிமைகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்களுக்குத் தான் உண்டு. அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர்கள்தான்  பெரும்பாலான கல்லூரிகளின் முதல்வர்களாக  இருந்ததால் பார்ப்பனர் அல்லாதார் கல்லூரி களுக்குள் கால் பதிக்க முடியாத நிலை இருந்தது.
இந்த ஆதிக்கக் கதவடைப்பிலிருந்து பார்ப்பனர் அல்லாத மாணவர்களை மீட்டெடுக்க கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குக் குழுக்களை நீதிக்கட்சி ஆட்சி ஏற்படுத்தியது.
பிற்காலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ராஜாஜி அத்தகைய குழுக்களைக் கலைத்துவிட்டார்.
இப்படி பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டக் களமாகத்தான் கல்வித் தளம் அமைந்திருந்தது.
முரசொலி மாறன் அவர்களால் எழுதப்பட்ட திராவிட இயக்க வரலாற்று நூலில் ஏராளமான தகவல்கள் தாராளமாகக் கிடைக்கும்.
தமிழ்த் தேசியம் பேசுவோர் இது போன்ற நூல்களை முதலில் படிக்கட்டும்!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, November 2, 2012

மாணவர்களே, இளைஞர்களே உங்களைத்தான்.


அருமை மாணவச் சிங்கங்களே !
இளைஞரணி ஏறுகளே!

பதவிப்பக்கம் போகாத பாசறையின் சொந்தங்களே! தமிழர்களுக்கு பதவிகளும் பட்டங்களும் கிடைத்தன என்றால் அதற்குக் காரணம் நாம் பதவிப் பக்கம் தலைவைத்து படுக்காததால்தான். தந்தை பெரியார் நினைத்திருந்தால் எவ்வளவு பெரிய உயர்ந்த பதவிக்கும் சென்றிருக்கலாமே இருமுறை.

தேடி வந்த முதலமைச்சர் பதவியை கூட முகவரி தெரியாமல் வந்து விட்டீர்களே! என்று விரட்டியடித்த விவேகத்திற்கும் வீரத்திற்கும் சொந்தக்காரர் நமது வெண்தாடி வேந்தர். அவர் வழியில், அம்மா காட்டிய பாதையில், தமிழர் தலைவர் கைநீட்டிய திசையில் எவ்வித சபலத்திற்கும் ஆளாகாத தொண்டர்களாக இருப்பது பெருமை! பெருமை!! பெருமைக்கு மேலும் அணிகலன்.

இத்தகைய பட்டாளத்தில் தான் சமுதாயத் தொடர்புடைய சாதனைகளை நிகழ்த்திக் காட்ட முடியும். முதற்கட்டமாக சகல பரித்தியாகத்திற்கும் தயார் என்னும் ஆயிரம் இளைஞர்களை என் முன் நிறுத்துங்கள் என்று கட்டளையிட்டுள்ளார் நமது தமிழர் தலைவர் - தானைத் தலைவர்.

நமது மாணவரணி பொறுப்பாளர்களும், இளைஞரணி பொறுப்பாளர்களும், ஈட்டியாய் பாய்ந்து கொண்டுள்ளனர். நாம் பட்டியலிடும் பணியின் பக்கம் மற்றவர்கள் பராக்குக் கூட  பார்க்கமாட்டார்கள்.

 இன்னும் ஜாதி இழிவு இன்னும் வருணாசிரம பாதுகாப்பு

இன்னும் இடஒதுக்கீட்டில் ஏகப்பட்ட குளறுபடிகள்

இன்னும் மூடநம்பிக்கையின் முடைநாற்றம்

இன்னும் பக்தியின் பெயரால் பகற் கொள்ளைகள்

பகுத்தறிவு என்ஜினை பூட்டிப்பார்த்து பயணம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை முன்னேறும். புதிய அத்தியாயம் பூக்கும் என்றார் உலகத் தலைவர் பெரியார்.

மதவாதம் மக்களை மாசுபடுத்துகிறது. அறிவை நாசப்படுத்துகிறது. வெறியை விசிறி விடுகிறது. உலகம் பூராவும் மதச்சண்டைகள் - கலவரங்கள்! ஆம். மதமற்ற உலகே ஒரேத் தீர்வு!! அதனைக் கொடுக்கவல்லம் தத்துவத் தந்தை பெரியார் இயலே! வாருங்கள், தோழர்களே வரும் 4ஆம் தேதி காலை திருச்சி பெரியார் மாளிகையில் நடக்க இருக்கும் கழக மாணவரணி, இளைஞரணி, கலந்துரை யாடலுக்கு. கூடிப் பேசுவோம்!

குவலயம் விளக்க குன்றெனத் திட்டங்கள் வகுப்போம்.

ஃ உறுப்பினர் சேர்க்கை

ஃ இதழ்களுக்கு சந்தா சேர்க்கை

ஃ தமிழர் தலைவர் தம் 80ஆண்டு பிறந்தநாள்

இவை அடிப்படையானவை.  இந்த கட்டமைப்பின் மீது தான் நமது சவாரியே இருக்கிறது.  வாருங்கள் - திருச்சியில் சந்திப்போம்.

குறிப்பு: நமது தமிழர் தலைவர் கருத்துரை வழங்க வாய்ப்பும் உள்ளது.

Thursday, November 1, 2012

செய்திச் சிதறல்கள்!



பேனா இல்லை!

புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக  -தேவை யான நிவாரணப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை - மற்றும் வழிகாட்டும் கருத்துக்களைக் கூற வந்த திருவள் ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நடைமுறைக் கண்ணோட்டத் தோடு சிலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

பணிகளைச் செய்யாமல் இருப் பதற்குச் சாக்குப் போக்குகள் சொல்லக் கூடாது; பேனா இல்லை, பேப்பர் இல்லை என்றெல்லாம் கதையளக்கக் கூடாது என்று கூறிய ஆட்சியர், எந்த நேரத்திலும் கைப் பேசியை அணைத்து வைக்கவும் கூடாது என்றும் உத்தர விட்டுள் ளார்.

பரவாயில்லை; அடி மட்டத்தி லிருந்து பணியாற்றி வந்திருப்பாரோ - அரசு அதிகாரிகளை இந்த அளவுக்குப் புரிந்து வைத்துள்ளாரே!

#####

இல்லை... இல்லை...

இந்த ஆட்சியில் அடிக்கடி உணரக் கூடிய ஒன்று உண்டு என்றால், அது இல்லை இல்லை என்கிற பாடம்தான்.. மாமல்லபுரம் சதுரங்கப்பட்டினத்தில் நேற்று காலை முதல் மின்சாரம் கிடையாதாம். வேறு வழியில்லாமல் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கேட்டால் முதல்வர் சொல்கிறார். மின்சாரத்தைப் பற்றிக் கவலைப் படுகிறவர்களைவிட லட்சம் மடங்கு கூடுதலாக  முதல் அமைச்சர் கவலைப்படுகிறாராம். பொது மக்கள் கவலைப்படலாம்; ஆட்சியில் உள்ள வர்களும் அதேபோல சொல்லி விட் டால் போதுமா? கவலையோடு காரியத்தைச் செய்து காட்ட வேண் டாமா?

#####

தினமலர்

யாரைப் பற்றிப் பேசினாலும், எழுதினாலும் தினமலருக்கு அவ்வளவு கோபம் வராது; ஆனால் பிஜேபியைப் பற்றி ஏதாவது சொல்லி விட்டால் போதும்; அக்கணமே மூக்கைப் பொத்துக் கொண்டு சுருக்கென்று கோபம் வெடித்துக் கிளம்பி விடும்.

பி.ஜே.பி. ஒன்றும் ஊழலுக்கு எதிரான கட்சியல்ல; எங்களை எதிர்ப்பதற்கு ஊழலைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா சொல்லி விட்டாராம். விட்டேனா பார் என்று வில்லெடுத்துப் புறப்பட்டு விட்டது வேதியமலர்.

காங்கிரசும், ஊழலும் பிரிக்க முடியாத ஒட்டிப் பிறந்த இரட்டை யர்களாக ஆகி விட்டதால் உங்களை எதிர்க்கிறதும், ஊழலை எதிர்க் கிறதும் ஒண்ணுதான்!னு பா.ஜ.க. நினைச்சிருக்கலாம் என்கிறது தினமலர்.

அதுசரி, பி.ஜே.பி. ஒன்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியில் லேன்னு சோனியா சொல்லியிருக் கிறாரே - அதற்கு  ஏன் மறுப்புக் கூற முடியவில்லை தினமலரால்!

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? பி.ஜே.பி.யை ஊழல் குட்டையிலிருந்து கரையேற்ற முடியாதே!

எடியூரப்பா இருக்கட்டும்; பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் நிதினே நிலை குலைந்து போய் விட்டாரே, ஊழலில் சிக்கிய பி.ஜே.பி. தலைவர் குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரக்கூடாது என்று தடை உத்தரவு போடப்பட்டுள்ளதே.

ஆற்றுமணல் அள்ளுவதில் முறை கேடாக நடந்து கொண்டதாக டவுட் தனபாலே சிக்கியிருக்கிறதே - இந்த லட்சணத்தில் அடுத்தவர்கள் மீது ஊழல் புகாரரா?

#####

மம்...தா!


மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பேனர்ஜி அதிரடி அரசியல்காரர் என்று பெயரெடுத் தவர். அது எப்படியோ போகட்டும்.

கொல்கத்தாவில் காளி துர்கா பூஜை விசேடம்! அரசு ஊழியர் களுக்குப் பண்டிகைப் பணம்கூட இந்தக் காளி பூஜை விழாவுக்குத் தான். இதில் இடதுசாரிகளும் விதிவிலக்கல்ல. 6 நாட்கள் விடுமுறையை நான்கு நாட்களாகக் குறைத்ததுதான் முதல் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா செய்த ஒரு நல்ல காரியம்.
விடுவாரா மம்தா? இடது சாரி என்று நினைத்தாலே நெருப்பில் விழுந்ததுபோல துடி துடிப்பாரே!

அவர்கள் என்ன நான்கு நாட்களாகக் குறைப்பது! நான் உத்தரவிடுகிறேன். அரசு ஊழியர்களே துர்கா பூஜைக்காக உங்களுக்கு 10 நாட்கள் அரசு விடுமுறை என்று வரம் தந்துள்ளார்.

10 நாட்கள் அரசு விடு முறை என்றால், அம்மாநிலத்தில் அரசு என்ற ஒன்றே இல்லை - அரசு ஊழியர்களுக்கு அல்ல -அரசுக்கே விடுமுறை (ளுரளயீநளேடி) என்று பொருளாகாதா? பொருளாதாரப் பிரச்சினையி லிருந்து சட்டம் - ஒழுங்குப் பிரச் சினை வெடித்துக் கிளம்பாதா?

இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால், அரசு ஊழியர்கள் அங்கு என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? எங்களுக்குப் பத்து நாட்கள் விடுமுறை எல்லாம் வேண்டாம். எங்களுக்கு அளிக்கப் படாமல் நிலுவையில் உள்ள அகவிலைப் படியை கொடுத்தால் போதும் (மம்...தா!) என்று கொடி பிடிக்கின் றனர். அதனைத் திசை திருப்ப தானே இந்த வேலை என்பது அரசு ஊழியர்கள் தெரிந்து கொள் ளட்டும்.

@@@@

ஹெல்மட்...டு



ஹெல்மட் அணிந்தவர்களுக்குத் தான் பெட்ரோல் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேசத்தில் அரசு உத்தரவிட்டுள்ளது. சபாஷ், சரியான ஆணை. நாடு தழுவிய அளவில் இப்படி ஒரு சட்டம் வந்தால் கூட வரவேற்கத்தக்கதுதான்.

ஏதோ யாருக்காகவோ ஹெல்மட் அணிவதாக இரு சக்கர வாகனக்காரர்கள் நினைக்கிறார் களே தவிர தங்கள் உயிர் பாது காப்புக்காகத்தான் என்பதை மறந்து விடுகிறார்களே - அதுதான் பரிதாபம்.

அதுசரி, அப்படி எல்லாம் சரியாக உணர்ந்து கொள்வார்கள் என்றால் நாட்டில் சட்டம் எதற்கு? ஆட்சி முறைதான் எதற்கு?

மதிமயக்கம் என்பது இதுதானோ?


- ஊசி மிளகாய் -


தினமணி நாளேட்டின் கார்ட்டூனிஸ்ட் மதி அவர்கள் உளுந்தூர்பேட்டை அருகில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு கிளைபோல நடத்தப்பட்டு வருகிற ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தில் பேசும்போது பெரிய பெரிய தத்துவங்களையும், அருளுபதேசங் களையும் கூட உதிர்த்திருக்கிறார்! தினமணியில் (23.10.2012) படத்துடன் வெளிவந்துள்ளது.


தாய்மையின் பெருமையை இந்து மதம் எவ்வளவு உயர்த்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது என்று சிலாகித்திருக்கிறார் - கேலி சித்திரக்காரர்.

பெண்களைப் பாப யோனிகள் என்று வர்ணித்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த மதம் எது மதி அவர்களே? கண்ணனின் கீதை தானே அதைச் சொல்லுகிறது?

அதுமட்டுமா? பாரதத்தில் இன்னும் எப்படி யெல்லாம் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதைப் படிக்கவேண்டாமா?

தாய்மையை ஹிந்து மதம் மதித்திருந்தால் அவதார புருஷன் இராமன் தனது மனைவியை தீக்குளிக்க வைத்திருப்பானா? இவன் கால் பட்டவுடன் கற்பைப் பறிகொடுத்த அகலிகைக்கு சாப விமோசனம் வரும்போது, இன்னொரு காலின்மூலம் எளிதில் சீதையை கற்பு திரும்பிய வராக சந்தேகத்திற்கு அப்பால் ஆக்கியிருக் கலாமே - நெருப்பில் குளித்துவரக் கட்டளை தேவையில்லையே!

நிறைமாத கர்ப்பணி சீதையை காட்டுக் கனுப்பிய இராமனைக் கடவுள் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் இராமாயணம் தானே இந்து மத இதிகாசம் எல்லாம்?

இதுமட்டும் பழைய காலத்தைவிட்டுத் தள்ளுங்கள் எங்கள் மாதாஜிக்களை பாருங்கள் என்று ஹிந்து மத இதோபதேசம் செய்யும் மதி மன்னர்களே!

இராஜஸ்தானத்தில் கணவன் இறந்தவுடன் 26 வயது கூட நிரம்பாத ரூப்கன்வார் எனும் பெண்ணை கணவனுடன் வலுக்கட்டாயமாகக் கட்டி, எரித்துக் கொன்று, தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கனவு காணும் பா.ஜ.க. ஆட்சியில் - சதிமாதா கோவில் கட்டி  வழிபடும் ஸ்தலமாக்கியுள்ளார்களே, அதுதான் ஹிந்து மதம் தாய்மையைப் போற்றுவதற்கான அடையாளமா?

திருவிளையாடல் புராணத்தில் தன் தாயையே மனைவியாக அனுபவித்த (அருவருப்பான கதை) பார்ப்பனனுக்கு மோட்சம் கொடுத்த மாபாதகம் தீர்த்த படலம் பற்றி படித்துள்ளீர்களா?

அதையும் தாங்கள் ஓவியமாக்கலாமே! இன்னொரு கருத்திலும் சர்வமதவாதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ள முயன்றுள்ளார்.

கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் சொன்னாராம், தமிழ் இறைமொழி; ஆங்கிலம் வர்த்தக மொழி என்று. இறைமொழியான தமிழ், வர்த்தக மொழியான ஆங்கிலம் இரண்டையும் நாம் புறக்கணித்துவிட முடியாது!

நாம் இறைவனிடம் தாய்மொழியான தமிழில் வேண்டுகிறோம். கீதையில் கிருஷ்ணன் கூறியதுபோல், கடமையைச் செய்யவேண்டும்; அதற்கான பலனை இறைவன் கொடுப்பான் என்று கூறுபவர்; கிருஷ்ணன் எந்தக் கடமையைச் செய்ய இப்படி உபதேசித்தான் என்பதை கீதையின் மறுபக்கம் புத்தகம் ஒன்றை வாங்கிப் படித்தால் புரியும்!

இறைமொழியாக தமிழில் கோவிலில் மந்திரங்கள் சொல்லக் கூடாது என்று கூறி உங்கள் தினமணி ஏட்டில் - 20.10.2012 (நான்கு நாள்களுக்கு முன்பு) கோவில்களில் தமிழ்; காந்திஜி கூறியதென்ன? என்று ஒரு கட்டு ரையை நடுப்பக்கத்தில் வெளியிட்டு, சமஸ் கிருதத்தில் மந்திரம் கோவில் வழிபாடு இருக்க வேண்டும்; தமிழ் வேண்டும் என்று கூறுவது கூடாது.

கோவில் பூஜைகள், குட முழுக்கு, வாழ்வியல் சடங்குகள் அனைத்தையும் தமிழ் மயமாக்கும் முயற்சியில் இப்போது ஆத்திகத் தமிழ்ப் பெருந்தகைகள் தமிழ் வழிபாட்டு வெற்றி விழா என்ற பெயரில் இறங்கியுள்ளனர்!

சங்ககாலத் தமிழ்ப் புலவர்களோ, சைவ சமயத் திருக்குரவர்கள் நால்வருமோ அல்லது வேறு யாருமோ வடமொழி வழிபாட்டை ஆட்சேபித்த தாகக் கூட தகவல்கள் இல்லை. பிற மாநிலங் களில் தாய்மொழி அபிமானிகளோ, மலை யாளிகளோ, கன்னடியர்களோ, தெலுங்கர்களோ கூட தாய்மொழியில்தான் வழிபாடு வேண்டும் என்று வாதாடவில்லை என்று கூறி, காந்திஜியைத் துணைக்கு அழைத்தனர். கோவில்களைப்பற்றி அவை விபச்சார விடுதிகள் என்று சொன்னவர் காந்தியார் என்பதை வசதியாக மறைத்துவிட்டு, அதை உங்கள் ஏடு மகிழ்ச்சி பொங்க - தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மறுத்து மகிழ்ந்ததைப்போல வெளியிட்டுள்ளது!

மதி அவர்களே, நீங்கள் தினமணியில் எந்தக் கட்சி? தமிழா, சமஸ்கிருதமா? அல்லது இறைவன் விட்ட வழியா?

மதியை மதிக்கலாம்; ஆனால், பரிதாபத்திற் குரிய மதியின் மதி, மதிக்கக் கூடிய நிலையில் இல்லையே!

அந்தோ பரிதாபம்!!

Saturday, October 27, 2012

செய்திச் சிதறல்கள்!


சூர சம்ஹாரம்!
தூத்துக்குடி மாவட்டக் குலசேக ரன் பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில் சூரசம் ஹாரம் நடந்தது.
அது என்ன சூரன்? அது என்ன சம்ஹாரம்? புராணங்களில் சூரன், அசுரன், ராட்சதன், அரக்கன் என்று கூறப்படுபவர்கள் எல்லாம் யார்? வரலாற்று ஆசிரியர்கள் (பார்ப்பனர் கள் உட்பட) என்ன சொல்லு கிறார்கள்?
ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் எதிரிகளான திராவிடர்களைத் தான் இவ்வாறு அழைத்தார்கள், எழுதினார்கள் என்று எழுதியுள்ளார் களே - நரகாசூரன், இரண்யாட் சதன் சூரபத்மன், கோமுகாசுரன் என்பதெல்லாம் இந்த அடிப்படையில் தானே?
மகாவிஷ்ணு அவதாரம் எடுத்து இந்த அசுரர்களை அழித்ததாக அல்லவா எழுதி வைத்துள்ளனர் -
இந்த நிலையில் ஆரியப் பார்ப் பனர்கள் திராவிடர்களாகிய அசுரர் களை அழித்ததைத் தமிழ்நாட்டில் விழாவாகக் கொண்டாடலாமா? சிந்தித்துப் பாரீர்!
இரணியன் - யாகம் நடத்தும் பார்ப்பனர்களை அந்தத் தீயில் போட்டே பொசுக்குங்கள் என்று கூறியதாகப் பாகவதம் கூறுகிறதே - அப்படியானால் அந்த இரணி யனுக்காக நாம் விழா எடுக்கலாமா? எடுக்க வேண்டுமா என்பது இன மான தன்மான கேள்வியல்லவா!
******
50 சதவிகிதம் தேவையா?
எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத் துவப் படிப்புகளில் ஒவ்வொரு தேர் விலும் 50 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சியாம்.
பெரும்பாலும் முதல் தலை முறையாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த - தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட - கிராமப்புறங்களைச் சேர்ந் தவர்கள்தான் இதில் பாதிக்கப்படு வார்கள்.
பரீட்சையில் வாங்கும் மார்க் தான் தகுதியை நிர்ணயிக்கக் கூடியதா? இல்லை என்று கல்வி நிபுணர்களே கூறியதுண்டு. கணித மேதை என்ற சொல்லுகிறார்களே அந்த ராமானுஜம் ஆங்கிலத் தேர்வில் பல முறை தோல்வி காணவில்லையா? அதற்காக அவரின் கணித அறிவைக் குறைத்து மதிப்பிட முடியுமா?
மருத்துவக் கல்லூரியில் தங்கப் பதக்கம் வாங்கியவர்கள், தேர்வுக் கும் பிறகு தொழிலில் முதன்மை யானவராக ஜொலிக்கிறார் என்ப தற்குப் புள்ளி விவரம் உண்டா? இந்தக் கேள்வியை தந்தை பெரியார் எழுப்பியதுண்டே!
எட்டாம் வகுப்பில் பல முறை தோல்வி கண்டவர் கள்கூட பிற்காலத் தில் துணைவேந்தர் ஆகிடவில்லையா?
சென்ற ஆண்டே இந்தப் பிரச்சினை வந்த போது மருத் துவக் கல்லூரி மாண வர்கள் போராட்டத் தில் குதித்தனர். மீண்டும் மாணவர் கள் அந்த நிலைக் குத் தள்ளப்பட்டால் அதற்குப் பொறுப்பு 50 விழுக்காடு என்ற நிபந்தனையை ஏற்படுத்தியவர்களே!
டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக இருக்கக் கூடிய பார்ப்பனர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் என்றால் வேறுபாடாக நடத்துகிறார்கள் என்று 54 எம்.பி.களே பிரதமரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இத்தகைய ஜாதிய மனப்பான்மை படித்த பார்ப்பனர்களிடத்திலேயே இருக்கும் பொழுது  - அங்கு படிக்கும் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களின் கதி என்னாவது?
சமூக நீதிக் கண்ணோட்டத்தில் இது எதிர்க்கப்பட்டே தீர வேண்டும்.
போராடி போராடிப் பெற்ற சமூகநீதி உரிமைகளை இப்படி கொல்லைப்புறம் மற்றும் தந்திர ரீதியாக தட்டிப் பறிக்கும் பார்ப்பனர் சூழ்ச்சியை முறியடிக்க முயலுவோம்!
******
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு
பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 30 பைசா என்றும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 18 பைசா என்றும் மீண்டும் உயர்கிறது. இப்படி விலையை நிர்ண யிக்கும் உரிமையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டால் இந்தநிலை தொடர்ந்து கொண்டே தானிருக்கும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றால் இதன் பொருள் அனைத் துப் பொருள்களும் விலை உயர்வு என்பதாகும். கத்தரிக் காயிலிருந்து கார் விலைவரை உயரும் இன் றைக்கு மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு - பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயராலே வெகு மக்களின் கடும் எதிர்ப்பை வலிய சென்று சம்பாதித் துக் கொண்டு இருக்கிறது என்பது வெளிப்படை.
வறுமைக்கோட்டுக்குக் கீழ் 60 விழுக்காடு மக்கள் வாழும் ஒரு நாட்டில் வாக்குகளை விலை வாசியைப் பொறுத்தே வழங்குவார் கள் என்று அரிச்சுவடி கூடத் (பொருளாதாரப் பு(ளி)லி களாக இருந்து என்ன பயன்?) தெரியாத வர்களாக இருக்கிறார் களே என்பதை நினைத் தால் பரிதாபகரமாக இருக்கிறது.
மதவாத சக்திகளிடம் மடிப்பிச்சை ஏந்தியாவது ஆட்சியை ஒப்படைத்து விடு வார்கள் போல் இருக்கிறது.
******
கோயில் இடிப்பு
மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அத்துமீறிக் கட்டப்பட்ட கோயிலை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டதன் பேரில் அதிகாரிகள் கோயிலை இடிக்கச் சென்றபோது இருவர் தீக்குளிக்க முயன்றதால் இடிப்பு கைவிடப்பட்டதாம்.
இதில் வெட்கக்கேடு என்ன வென்றால், அத்துமீறி அரசு இடத் தில் கோயிலை எழுப்பியவர்களே காவல்துறையினர்தாம் ஆம், வேலியே பயிரை மேய்கிறது.
அந்தக் கோயிலை இடிக்கா விட்டால் அது நீதிமன்ற அவமதிப்பே! சட்டத்தின்முன் எல்லாம் சமம் என்றால் கோயிலுக்குமட்டும் விதி விலக்கா?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...