Showing posts with label ராஜபக்சே. Show all posts
Showing posts with label ராஜபக்சே. Show all posts

Tuesday, January 27, 2015

இதோ ராஜபக்சேயின் வாரிசுகள்!














கேள்வி: இலங்கை அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவது இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும், இலங்கைத் தமிழர் களுக்கும் நல்லது என்று நீங்கள் நினைக் கிறீர்கள்?

பதில்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரி பால சிறீசேனா ராஜபக்சே போல் அல்லாமல், சமஷ்டி அமைப்பு ஏற்பட வழி செய்ய முன் வருவார் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் இருந்தது. ஆனால், அவரோ, அப்படி எண்ணம் இல்லை என்பதைத் தெளிவாக்கி விட்டார்.

இது தவிர, அவர் எது செய்ய நினைத் தாலும் தன்னை ஆதரிக்கிற பல கட்சிகளின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்ய முடியாது.

தமிழர்கள் விஷயத்தில் அந்த மாதிரி ஒப்புதல், பல கட்சிகளிடம் இருந்து சுலப மாகப் பெறக் கூடியது அல்ல. ராஜபக்சே நிலை இப்படிப்பட்டது அல்ல. ஆகையால் அவரிடம் காரியம் சாதித்துக் கொள்ள முயல்வதே மேல். அந்த வகையில் பார்த்தால் அவர்  வெற்றி பெறுவது இந்தி யாவிற்கு ஓரளவுக்காவது நல்லதாக இருக்கக் கூடும்.

(துக்ளக் 24.12.2014 பக்கம் 11)
சோ மட்டுமல்ல; ஒட்டு  மொத்தமான பார்ப்பனர்களின் நிலைப்பாடும் இதுதான்.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல நடக்கவில்லை; ராஜபக்சே தோல் வியைத்தான் தழுவினார்.

ஒன்றை இந்த இடத்தில் குறிப்பிடுவது முக்கியம்; வெற்றி பெற வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்த்த அந்த ராஜபக்சே எத்தகையவர் என்பது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எவ்வளவுக் குரூரமான மனிதர் இவர்! இந்த குடும்பமே பெரிய கொள்ளைக்காரக் குடும்பமாக அல்லவா இருந்திருக்கிறது.

ராஜபக்சேயின் தம்பி கோத்தபாய ராஜபக்சே தனது பினாமி பெயரால் ஆயுதக் கப்பலே வைத்திருந்தார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு எதிரானவர்களைப் படு கொலை செய்ய மரணப் படை ஒன்றைக் கையில் வைத்திருந்தார் இவர். வெள்ளை நிற வாகனங்கள் இதற்குப் பயன்படுத்தப் பட்டன என்கிற தகவல்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகப் புற்றீசல் போல வெளி வரத் தொடங்கி விட்டன.

சர்வாதிகாரி போல் ஆடம்பரமாக வாழ்ந்த மகிந்த ராஜபக்சேபற்றி ஏராளமான தகவல்கள் வெளி வந்துள்ளன; அவற்றில் சில வருமாறு:

1. மகிந்தா அணியும் ஸன்கிளாஸின் மதிப்பு  35 லட்சம் ரூபாய்

2. மகிந்தா அணியும்கைக்கடிகாரத்தின் மதிப்பு 9 லட்சம் ரூபாய்; அவரிடம் அவ் வாறான 9 கைக்கடிகாரங்கள் உள்ளன

3. மகிந்தாவின் 2 ஆம் மகன் தன் காதலியின் பிறந்தநாளுக்குக் கொடுத்த பரிசு இங்கிலாந்து அரண்மைனையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி பெறுமதியான வெண் குதிரை.

4. உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த லம்போகினி கார் ரூ.1000 கோடி மதிப்புக்கு 9 கார்களை இறக்குமதி செய்தார். இதற்காக நமால் ராஜபக்சேக்குக் கிட்டத்தட்ட ரூ.500 கோடி வரிவிதிவிலக்கு வழங்கப்பட்டது. இதற்கு வரிவிலக்கு பாராளுமன்றத்தால் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

5. 100 மில்லியன் டொல் 5000 ரூபா தாளில் மத்தியவங்கியிலிருந்து மாற்றிச் சென்றுள்ளார்கள். அதாவது 1300 கோடி ரூபாய் தேர்தல் நடவடிக்கை களுக்கு லாரிகளில் எடுத்துச் சென்றுள் ளார்கள்.

6. தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஞிவீணீறீஷீரீ  நிறுவனத்திலிருந்து 500 கோடி ரூபாய் பெற்றுள்ளார்கள்

7. மகிந்தா சிறீ லங்கா டெலிகொம் மூலம் ரூ.150 மில்லியன் பணம் தேர்தல் நடவடிக் கைக்காக எடுத்துள்ளனர்

8. நாடாளுமன்ற மந்திரி ஒருவரை விலகிப் போகாமலிருக்க வைப்பதற்காக  ஒன்றரைக் கோடி ரூபாய் கை மாறியுள்ளது

9. பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினரை தமது பக்கம் இழுக்க 500 கோடி ரூபாய் செலவழித்திருக்கின்றனர்.

10. அநுராதபுர மகிந்தாவின் கூட்டத் துக்கு 1100 பேருந்துகள் கொண்டு வரப் பட்டன இதற்காக கொடுக்கப்பட்ட செலவு 250 லட்சம் ரூபாய். அனுராதபுர கூட்டத் திற்கு மாத்திரம் ரூ.70 கோடிகளுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.

11.  கோத்தபய ராஜபக்சவின் மகளின் திருமணத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பூக்கள் 2 கன்டெய்னர்களில் இந்தோனே சியா விலிருந்து வரவழைக்கப்பட்டன.

12.  சிரானி பண்டாரநாயக்கசட்டமா அதிபராக இருந்த போது 2 தீர்ப்புக்களை அரசுக்கு எதிராக வழங்கியதால் அவரை போலி குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பதவி யிலிருந்து துரத்திவிட்டு, இதுவரை எந்த வழக்கிலும் ஆஜராகாத நீதித்துறையில் எந்த ஆழமான சட்ட நுணுக்கமும் தெரியாத மொஹான்பீரிஸை இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக  ஜனாதிபதி நியமித்தார்

13.  பொதுவிடத்திலேயே மதுபானம் அருந்தி பெண்களுடன் பாலியல் குற்றத் தில் ஈடுபட்ட பாலசூரியவை இலங்கை காவல்துறைத் தலைவராக தனது நிறை வேற்றும் அதிகாரம் மூலம் நியமித்தார்.

மஹிந்தா பற்றிய மேலும்  தகவல்கள் உண்டு.

1. மகிந்தாவின் மனைவி இலங்கையி லேயே அதிக  வசதிகளைக் கொண்ட கால் டன் என்ற மொன்டசூரியின் (கேளிக்கை விடுதி) உரிமையாளர்.

2. நமால் ராஜபக்ச 5 ரேடியோ  2 தொலைக்காட்சிகளுக்கு சொந்தக்காரர்.

3. மகிந்தாவின் இரண்டாம் மகனுக்கு ரக்பி போட்டியில் போட்டியாக இருந்த துவான் என்றதிறமையான முஸ்லிம் இளைஞனை நாரஹேன்பிட்டியில் வைத்து இரவு வேளையில் உயிருடன் தீ வைத்து எரித்துக் கொலை செய்தனர்.

4. மியான்மாவில் பலரை உயிருடன் எரித்துக் கொலை செய்து மியான்மா படுகொலைகளுக்கு தலைமை தாங்கிய விராது என்ற பிக்குவுக்கு உலகில் எந்த நாடும் இதுவரை விசா வழங்கவில்லை. ஆனால், மகிந்தாவின் அரசு வழங்கியது. விராது  தனது உரையை மகிந்தாவுக்கு நன்றி செலுத்தி விட்டே தொடங்கினான்.

5. யாழ்ப்பாணத்தில் யுத்தத்தின்பின் கைப்பற்றிய பல பில்லியன் மதிப்பான தங்கங்களை 6கண்டெய்னர்கள் மூலமாக திருப்பதி ஏழுமலையானுக்குத் தானமாக கொடுத்தார்.  6. மகிந்தாவுக்கு எதிராக செயற்பட்ட பல ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தான். நூற்றுக்கணக்கான ஊடகவிய லாளர்கள் நாட்டை விட்டே போய் விட்டார்கள்

7. மகிந்தாவுக்கு எதிரான இன்னும் ஆயிரக்கணக்கானோர் வெள்ளை வேன் களில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட் டார்கள்; இவர்கள் இறந்தார்களா? உயிருடன் இருக்கிறார்களா? என்று கூடத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக் கிறார்கள் இவர்களின் குடும்பத்தார்கள்.

8. பவுத்த பிக்குகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி எதனால் இறக்குமதிக்கு அனுமதிகொடுத்து மக்களை - இலங்கைத் தீவை மதுவிற்கு அடிமையாக்கி வைத்தார்.

9. மாசடைந்த குடிநீரினால் அவரது சொந்தத் தொகுதியான அனுராதபுரத்தில்  சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த மருத்துவ உதவியும் கொடுக்காமல், தனது ஓர் ஆண்டு செல வுக்காக ரூ.942 கோடிகளை ஒதுக்கிக் கொண்டார்.

10. நாட்டு மக்களிடமிருந்து வரி என்றபெயரில் சூதாட்டவிடுதிகளுக்கு அதீத உரிமைகளை வழங்கினார்.

11. பல்வேறு பாலியல் குற்றச்சாட்டு மற்றும் பெண்களை அயல்நாடுகளுக்கு கடத்தும் குற்றவாளிகளான மதுமிந்த சில்வா போன்றவர்களுக்கு முக்கிய பிரமுகர் களுக்கு நிகரான பாதுகாப்பு வழங்கினார்

12. நாட்டின் உச்சநீதிமன்றத்தையே முடக்கி நீதி, நியாயத்தையே கொலை செய்தவர்
இப்படிப்பட்ட ஒரு கொடூரனைத் தான் சோ உள்ளிட்ட பார்ப்பனர்கள் தோளில் தூக்கி வைத்து ஆடினார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இவரே மீண்டும் வர வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் ஆசைப்பட்டது - இவர்கள்  ராஜபக்சேயின் இன்னொரு வகை வாரிசுகள் என்பதை மறந்து விட வேண் டாம்! தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அக்கிரகாரவாசிகளுக்கு அவல் பாயசம் சாப்பிட்டது மாதிரிதானே!

- மின்சாரம்


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, October 17, 2013

வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும்!

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது!
தமிழக மீனவர்கள் காக்கப்பட வேண்டும் சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்

சென்னை, அக்.15-  வருகின்ற 23 ஆம் தேதி சட்டமன்றம் கூடவிருக்கின்ற நிலையில், அக்கூட்டத்தில், ஒருமித்த கருத்தோடு,  மத்திய அரசு - இந்திய அரசு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்குச் சென்று கலந்துகொள்ளக்கூடாது என்கிற தீர்மானத்தை முதலமைச்சர் அவர்கள் கொண்டுவர வேண்டும்; அதை ஒரு மனதாக அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்பதை மாநில அரசிற்கு வேண்டுகோளாக வைக்கின்றோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்கக்கூடாது என்றும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையாலும், இலங்கை மீனவர்களாலும் தாக்கப் படுவதையும், சிறையில் அடைக்கப் படுவதையும் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் 61 இடங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை வருமாறு:
இலங்கையில் எந்தவிதமான உரிமைகளும் இல்லாமல் செய்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற பெயராலே அவர்களு டைய விடுதலைப் போராட்டத்தை - இன அழிப்பு வேலையை செய்து அதிலே வெற்றிகரமாக ஆக்கி விட்டேன் என்று தோள் தட்டி, அந்தச் சின்னங்கள்கூட இருக்கக் கூடாது என்று அழித்துக் கொண் டிருக்கக்கூடிய ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி என்று அய்.நா. தெளிவாகக் கூறியிருக்கிறது.
மனித உரிமை மீறல் என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது போர்க்குற்றவாளி என்று பிரகடனப்படுத்தப்பட்டு, மனித உரிமைகள் மீறல் என்பது தெளி வாக்கப்பட்டிருக்கிறது; அய்.நா. வின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை போன் றவர்கள் அங்கு சென்று திரும்பிய நேரத்தில்கூட தெளிவாக்கி இருக் கிறார்கள்.
இந்தச் சூழலில், இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறு கின்றது என்று சொன்னால், அந்த மாநாட்டிற்கு ராஜபக்சே தலைமை தாங்கக்கூடிய சூழல் ஏற்படும்.  இன்னும் இரண்டு ஆண்டுகள் அதற்குத் தலைமை தாங்கக்கூடிய ஒரு மிகப்பெரிய வேதனையான, வெட்கப்படத்தகுந்த சூழ்நிலை ஏற்படக்கூடும். இதைக் கருதித் தான், ஏற்கெனவே டெசோ அமைப்பின்மூலமாகவும், தலைவர் கலைஞர் அவர்களின் தலைமை யில், திராவிடர் கழகம் உள்பட, விடுதலைச் சிறுத்தைகள், திராவிட  இயக்கப் தமிழர் பேரவை மற்ற அனைத்து இயக்கங்களும் சேர்ந்து குரல் கொடுத்து, காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந்து கொள்ளக்கூடாது; இன்னுங் கேட்டால், இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடைபெறுவதே விரும்பத்தக்கதல்ல; அந்தச் சூழ் நிலையில், இதையும் மீறி அந்த மாநாட்டை அங்கே நடத்து கின்றனர்.  இங்கிலாந்து ராணி அங்கே செல்வதே சந்தேகமாக இருக்கிறது - மனித உரிமை ஆணையம் பச்சையாகச் சொன்ன தையெல்லாம் வைத்துக்கொண்டு, அங்கே நடைபெற்ற இனப்படு கொலைக்குப் பிறகு, அந்த மாநாட் டிலே கலந்துகொள்வது, சிறிதுகூட மனிதாபிமானம் ஆகாது என்று, கனடா நாட்டினுடைய பிரதமர் முடிவு செய்து, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட் டில் கலந்துகொள்ளமாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
இதுபோல, பற்பலரும் யோசிக் கின்ற இந்தக் காலகட்டத்தில், நம்முடைய தமிழினத்தை அழித்து, பல லட்சக்கணக்கான தமிழர்களை - தமிழ்த் தாய்மார்களை விதவை களாக்கி, அவர்கள் இன்னமும் வாழ்வுரிமையைப் பெற முடியாத நிலைக்கு உள்ளாக்கி, ஏதோ ஒப்புக்கு ஒரு தேர்தல் நடைபெற்று, அதை ஒரு பொம்மை அரசாக ஆக்கிக் காட்டவேண்டும் என்ற முயற்சி எடுத்து, அரசியல் தீர்வுக்கு இடமில்லாமல் செய்திருக்கிறார்கள். 61 இடங்களில் போராட்டம்!
எனவேதான், எங்களுடைய முதல் வேண்டுகோள், காமன் வெல்த் மாநாட்டில், இந்திய அரசு, இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றோம். இது திராவி டர் கழகத்தினுடைய குரல் மட்டு மல்ல; டெசோ அமைப்பின் குரல் மட்டுமல்ல; ஆங்காங்கு எங்க ளோடு இணையாதவர்களும்கூட தனித்தனியே இதனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் மாணவர்கள் போராட்டம்; இன் னொரு பக்கம் தியாகு போன்றவர் களின் பட்டினிப் போராட்டம்; மற்றொரு பக்கம் விவசாயி களுடைய போராட்டம்; எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை யிலே, எல்லோரும் ஒருமித்த குரலிலே, காமன்வெல்த் மாநாட் டில் இந்திய அரசு கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலி யுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனை அலட்சியப்படுத்தக் கூடாது; ஏனென்றால், இதனை அலட்சியப்படுத்தினால், நீதியின் குரலை, நியாயத்தின் குரலை அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள் - வெறும் தமிழர்களை மட்டும் அலட்சியப்படுத்தவில்லை என்றாகிவிடும். ஆகவேதான், அதனை வலியுறுத்துவதற்காகத் தான் இன்றைய இந்தப் போராட் டம்; முதல்கட்டமாக தமிழகம் முழுவதுமிருக்கின்ற முக்கிய பகுதி களில் 61 இடங்களில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் தீர்மானம் தேவை!
ஆகவே, இந்தப் போராட்டம் மட்டுமல்ல; மாணவர்கள், மற்ற வர்கள், அவரவர்களுக்குத் தோன் றிய வகையில், இதனை செய்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு இந்தச் சுவரெழுத்தைப் படிக்கவேண்டும்; மத்திய அரசு உடனடியாக இன்னும் காலம் தாழ்த்தாமல், தங்களுடைய நிலையை தெளிவுபடுத்தவேண்டும்.
இந்த நேரத்தில், மத்திய அரசுக்கு அதனை வேண்டுகோளாக வைக் கின்ற நேரத்தில், மாநில அரசுக்கும் ஒரு வேண்டுகோளை வைக்க விரும் புகிறோம். அது என்னவென்று சொன்னால், இதுவரையில் இந்தப் பிரச்சினைக்காக நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, எத்தனையோ தலைவர்கள் சொன்ன பிறகும்கூட, கூட்ட வில்லை என்றாலும், பரவா யில்லை; அதேநேரத்தில், வருகின்ற 23 ஆம் தேதி சட்டமன்றம் கூடவிருக்கின்ற நிலையில், அக் கூட்டத்தில், ஒருமித்த கருத்தோடு, இதே தீர்மானத்தை, மத்திய அரசு - இந்திய அரசு இலங்கையில் நடை பெறும் காமன்வெல்த் மாநாட்டிற் குச் சென்று கலந்துகொள்ளக் கூடாது என்கிற தீர்மானத்தை முதலமைச்சர் அவர்கள் கொண்டு வர வேண்டும்; அதை ஒருமனதாக அனைவரும் நிறைவேற்றவேண்டும் என்பதை மாநில அரசிற்கு வேண்டு கோளாக வைக்கின்றோம்.
அதுபோலவே, நண்பர் தியாகு அவர்கள், இன்றைக்கு 14 நாள்களுக்கு மேலாக, உண்ணாவிரதம்  இருக் கிறார்; பொதுவாக கலைஞர் வேண்டு கோள் விடுத்தார்; எங்களைப் போன் றவர்கள் வேண்டுகோள் விடுத்தோம். அவரை மருத்துவமனைக்கு அழைத் துப் போய், மீண்டும் வெளியே வந்து, உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்; இப்பொழுது அவரை மருத்துவ மனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் வைத்திருப்பதாக நாங்கள் அறிகின் றோம்.
தோழர் தியாகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும்
எனவே, தோழர் தியாகு அவர் களுக்கு எங்களுடைய அன்பான வேண்டுகோள், இதற்காக கலைஞர் அவர்கள் முயற்சி எடுத்து, டில்லியில் பிரதமரைப் பார்த்து, கடிதத்தின் மூலமாக வலியுறுத்தி, பிரதமரும் இதைப்பற்றி நாங்கள் இணக்கமாக சிந்திக்கின்றோம் என்கிற ஒரு வாக் குறுதியை, தோழர் டி.ஆர்.பாலுவி டம் கொடுத்திருக்கின்ற காரணத் தால், அருள்கூர்ந்து, தோழர் தியாகு அவர்கள் தன்னுடைய உண்ணா விரதத்தினை நிறுத்திக் கொள்ள வேண்டும். அத்தகைய போராளி களின் உயிர் என்பது மிகமிக முக் கியம்; இந்த ஒரு கட்டத்தோடு இந்தப் போராட்டம் முடிவதல்ல; எனவே தான், போராளிகள் மிக முக்கியம். இலட்சியத் தலைவர்கள் மிக முக்கியம். எனவே, அவர்களுடைய உயிர் என்பது மிக முக்கியமானது. அது மிகப்பெரிய அளவிற்கு ஈர்த் திருக்கிறது; மத்திய அரசு வரையில் அதனைக் கொண்டு போய் கலைஞர் போன்றவர்கள் சேர்த்திருக்கிறார்கள். எதிர்பார்க்கிற விளைவுகள் நல்ல விதமாக இருக்கும். ஆகவே, தோழர் தியாகு அவர்கள் அருள்கூர்ந்து தன்னுடைய உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழக மீனவர்களுடைய உயிர் மிக முக்கியம்!
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது என்பது ஒரு அன்றாட வாடிக்கை யான நிகழ்வாக ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் அவர்களைப் பிடித்து சிறையில் வைக்கிறார்கள். நேற்று குஜராத்தில் ஒரே ஒரு மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று சொன்னவுடன், குஜராத் மீனவருக் காக, பாகிஸ்தானில் இருக்கின்ற அந்தத் தூதுவரை அழைத்து, அலுவ லகத்தில் அவரை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பியிருக்கிறார்கள் என்று சொன்னால், குஜராத் மீனவ ரின் உயிர் எவ்வளவு முக்கியமோ, அதுபோலதான், தமிழக மீனவர்களு டைய உயிரும் அதைவிட மிக முக் கியம் என்பதை நாங்கள் உணரு கிறோம்.
அதுபோலவே, ஏற்கெனவே கேர ளாவில் நடைபெற்றது எல்லோருக் கும் நன்றாக நினைவிருக்கும். அந்த வழக்கும் நன்றாக நினைவிருக்கும். ஆகவே, மற்ற மாநிலங்களில் நடை பெற்றால் ஒரு நியாயம்; தமிழகத்தில் நடைபெற்றால் வேறொரு நியாயமா? தமிழக மீனவர்களுக்கு அன்றாடம் இந்தக் கொடுமைகள் ஒரு தொடர் கதையாக இருந்தால், இதனை வேடிக்கை பார்ப்பதா? வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்குச் சென்று தேநீர் அருந்திவிட்டு வந்தால் போதுமா? இதனால் என்ன விளை வுகள் ஏற்பட்டன?
ஜனநாயக அரசின் கடமை!
எனவே, தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத் தனைப் பேரும் உடனடியாகச் சென்று இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும்; மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்த ஆர்ப் பாட்டத்தினுடைய நோக்கம். இதனை அவர்கள் தெளிவாகச் செய்யவேண்டும். இல்லையென்றால், தமிழகமே இப்பொழுது கொதி நிலையில் இருந்துகொண்டிருக்கிறது. கொதி நிலையில் இருக்கின்ற தமிழ கத்தை மேலும் மேலும் சீண்டிப் பார்க்கக்கூடிய எண்ணம் நம்முடைய எதிரிகளுக்கு இருக்கக்கூடாது; அது போல, மத்திய - மாநில அரசுகளுக்கு இருக்கக்கூடாது. மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அந்த உணர்வுகளைப் பிரதிபலிப்பது தான் ஜனநாயக அரசின் கடமை யாகும்.
ஆகவே, அதற்காக ஒருவருக் கொருவர் விமரிசிக்காமல், அவரவர் களுக்கு ஏற்பட்டதை, ஈழப் பிரச் சினையில் எல்லோரும் தனித்தனியாக இருந்தாலும், எல்லோரும் ஒத்தக் குருலில், ஒரு குரலில் ஒரே கோரிக்கை வைக்கிறோம். அதுதான் இலங் கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக் கணிக்கவேண்டும் என்கிற கோரிக்கை. ஆகவே, இந்தக் கோரிக்கையி னுடைய முதல் கட்டம் இப்பொழுது நடைபெற்றிருக்கிறது. அடுத்த கட்டம் இன்னும் வேகமாக, விரை வாக இருக்கும்.
புயலுக்கு முன் இருக்கின்ற அமைதி!
அமைதியாக இருக்கின்ற கார ணத்தினால், புயல் எழாது என்று பொருளல்ல; புயலுக்கு முன் இருக்கின்ற அமைதிதான், இப்பொ ழுது தமிழகத்தில் இருக்கின்ற அமைதி என்பதையும் மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும் என்று கேட்டு முடிக்கின்றேன்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


அக்டோபர் 16-31 - 2013

Wednesday, April 17, 2013

தோண்டத் தோண்ட தமிழர் எலும்புக் கூடுகள்! தமிழர்களை உயிரோடு புதைத்த கொடுமை!!

கோத்தபாய ராஜபக்சே பொறுப்பென்று சாட்சியம் அளித்த சிங்களப் பெண்!



கொழும்பு, ஏப். 16- சிங் களவர் அதிகம் வசிக்கும் மாத்தளை பகுதியில் நூற்றுக் கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மகிந்த ராஜ பக்சேவின் தம்பி கோத்தபாய ராஜபக்சேவை குற்றம்சாட்டி சிங்களப் பெண்மணி ஒருவர் அளித்துள்ள வாக்கு மூலம் அதிர வைத்திருக்கிறது.

மாத் தளைபகுதியில் மருத்துவமனை கட்ட மண் தோண்டிய போது தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள் வெளிவந்தன. இந்த எலும்புக் கூடுகள் 1980-1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் புதைக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இந்தக் கால கட்டத் தில் அப்பகுதியில் லெப்டினன்ட் கர்னலாக பதவி வகித்தவர் கோத்தபாய ராஜபக்சே. அத னால் அவர்தான் இந்தப் படு கொலைக்கு காரணமாக இருக் கலாம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இந்நிலையில் சிங்கள தாய் கமலாவதி என்பவர் மாத்தளை மனித புதை குழி தொடர்பாக அளித்திருக்கும் வாக்குமூலம் கோத்தபாய ராஜபக்சேவின் கோர முகத்தை வெளிப்படுத்து கிறது. அவர் தமது வாக்குமூலத் தில் கூறியுள்ளதாவது: 1989ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி மாத்தளையில் உள்ள விஜய வித்தியாலயா என்னும் பள்ளிக் கூடத்துக்கு அருகே இருந்த வீடுகளை, இராணுவம் சுற்றி வளைத்தது. அப்போது எனது இரண்டு மகன்களுக்கு மதிய உணவைக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். வீட்டுக் குள் நுழைந்த ராணுவத்தினர், மகன்கள் இருவரையும் பலவந்த மாக இழுத்துக்கொண்டு சென் றனர். அருகில் உள்ள ரெஸ்ட் ஹவுஸ் என்ற முகாமுக்கு முதலில் சென்றனர்.

இராணுவத்தின் வாகனத் துக்கு பின்னால் நான் ஓடிச் சென்று அவர்கள் அந்த முகா மிற்குள் செல்வதனை பார்த் தேன். மீண்டும் மறுநாள் அங்கு சென்று மகன்கள் இருவரையும் பார்க்கவேண்டும் என்று மன் றாடினேன். ஆனால் முகாமுக் குள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. இதனைத் தொடர்ந்து அவர், உள்ளூர் அரசியல்வாதி யான எக்கநாயக்கவை தொடர்பு கொண்டேன்.

அவர் தமது செயலாளரை அந்த முகாமுக்கு அனுப்பி விசாரித்து விட்டு, லெப்டினன்ட் கர்னல் கோத்தபாயவிடம் பேசிவிட்ட தாகவும் இனி நீங்கள் உங்கள் மகனைப் பார்க்கலாம் என்றும் கூறினார். இதனை நம்பி நானும் அந்த முகாமுக்கு மீண்டும் சென்றேன். ஆனால் என்னைப் பார்க்க கோத்தபாய மறுத்துவிட்டார். மேலும் உங்களது இரண்டு மகன்களும் வேறு முகாமுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறி அலைய வைத்தனர்.

இதுவரைக்கும் எனது மகன்கள் வீடு திரும்பவில்லை. மாத்தளையில் அவர்களோடு சிறையில் இருந்த சிலர் விடுதலையாகி வெளியே வந்த போது என் மகன்கள் ரெட் பானா சித்திரவதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. ரெட் பானா முகாமில் ஜேவிபியினர் எனக் கருதி மகன்கள் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு மாத்தளையில் புதைக்கப்பட்டி ருக்கலாம். தற்போது கண்டெ டுக்கப்பட்ட 150 எலும்புக் கூடுகளுக்குள் எனது மகன் களின் எலும்புக் கூடும் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால் டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
1989ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை ராணுவத்தில் இருந்து விலகிய கோத்தபாய ராஜபக்சே அமெரிக்கா சென்று விட்டார். அங்கே கிரீன் கார்ட்டை எடுத்துக்கொண்ட அவர், தனது சகோதரரான மகிந்த ராஜபக்சே தீவிர அர சியலில் இறங்கிய பின்னரே இலங்கைக்கு திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, October 31, 2012

போர் சின்னமா?


இலங்கைத் தீவில் உண்மையான பூர்வ குடிகளான தமிழர்களை முற்றாக அழித்துத் விட்டு, அது சிங்கள இன நாடாக முற்றாக மாற்றும் ஒரு வன்முறை வெகு காலமாகவே நடந்துவருகிறது.
அதில் ஒரு உச்சக் கட்டம்தான் மூன்றாண்டு களுக்கு முன் ராஜபக்சே தலைமையில் அமைந்த சிங்கள இனவாத அரசின் அரச பயங்கரவாதத்தின் உச்சக்கட்ட போர் ஆகும்.
வாழ்வுரிமைக்காக இலங்கைத் தீவில் சுதந்திரப் போர் நடத்தி வந்த அந்தத் தீவுக்குரிய மக்களை அழிக்கும் வேலையைச் செய்தது -  சிங்கள இனவாத அரசு!
சீனா, ருசியா, பாகிஸ்தான், இந்தியா முதலிய நாடுகளின் இராணுவ உதவி, ஆயுதங்களைத் துணையாகக் கொண்டு தமிழின அழிப்பு வேலையில் (Genocide)
இறங்கி அதில் பெரும் அளவு முடிந்தும் விட்டது.
அழிக்கப்பட்ட தமிழர்கள்போக எஞ்சியிருக்கும் தமிழர்கள் வாழ்வுரிமை சுயமரியாதையுடன் காப்பாற்றப்படுவதற்கான முயற்சிகள் உலகெங்கும் முகிழ்த்துள்ளன.
அதில் ஒரு முக்கியமானது இரண்டாவது கட்டமாக தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது தான் டெசோவாகும்.
இன்றைய நிலையில் இந்தத் திசை நோக்கி தான் காய்கள் நகர்த்தப்பட வேண்டியுள்ளன.
இதனைத் திசை திருப்பும் வகையில் தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டில் இயங்கும் சில அமைப்புகள், டெசோமீது விமர்சனக் கணைகளைத் திருப்பியுள்ளன.
சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை, திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி  அவர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும், கடமை உணர்ச்சியுடனும் அனைத்துத் தரப்பினருக்கும் கனிவான வேண்டுகோள் ஒன்றை வைத்தார். முதலில் நம்மிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை உறுதியாகச் செய்து கொள்வோம் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காகக் குரல் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு டெசோவையும், அதன் தலைவரையும் பலகீனப் படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பல அமைப்புகள், அவற்றின் தலைவர்கள் நடந்து கொண்டு வருவது, டெசோவைக் கேலி செய்வது என்பதெல்லாம் சிங்கள இனவாதத்தின் ஊற்று ராஜபக்சேக்குக் கூடுதல் பலத்தை கொடுக்கவே பயன்படும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியலைக் கொண்டு வந்து திணித்து, காழ்ப்புணர்ச்சியோடு மேடைகளைப் பயன்படுத்தினால், நமது நாட்டில் உள்ள பரம்பரை எதிரிகள் சிண்டு முடியும் வேலையில் இறங்குவார்களே - அதற்கு இடம் கொடுக்கலாமா என்கிற பொருள் நிறைந்த ஆழமான கருத்தை நினைவூட்டினார் தமிழர் தலைவர்.
டெசோவின் தலைவரை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு ஈழத் தமிழர் பிரச்சினையில் இரும்பு மனப்பான்மையோடு எதிர்வாதம் செய்து கொண்டிருந்த - அதிகாரம் கிடைத்ததும் ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்களைப் பல வகைகளிலும் ஒடுக்கிய ஒருவருடன் நெருக்கம் காட்டியது - மன்னிக்க முடியாத, சீரணித்துக் கொள்ளவே முடியாத கீழான போக்கே!
ராஜபக்சே எந்த எல்லைக்குப் போயிருக்கிறார்? ஏதோ இன்னொரு நாட்டோடு யுத்தம் மேற்கொண்டு வெற்றி பெற்றதற்காக போர் நினைவுச் சின்னம் நிறுவியதுபோல சொந்த நாட்டு மக்களான தமிழர்களைக் கண் மூடித்தனமாக - பல நாட்டு இராணுவ உதவியுடனும், ஆயுதங் களுடனும் அழித்தொழித்ததற்காக போர் நினைவுச் சின்னம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதை உலகம் ஏற்குமா?
கொலைக் குற்றவாளியாக அய்.நா.வால் நிறுத்தப்பட வேண்டும் என்ற குரல் உலகில் ஓங்கி ஒலிக்கும் கால கட்டத்தில் ராஜபக்சே இன்று நிறுவியுள்ள வெ(ற்)றிச் சின்னம் அவருக்கு எதிராக அமையப் போகும் என்பதில் அய்யமில்லை.
சென்னையில் நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டம் அதற்கு மேலும் அடி எடுத்துக் கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...