Showing posts with label தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள். Show all posts
Showing posts with label தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள். Show all posts

Friday, May 10, 2019

ஏழு பேர் விடுதலை: ஆளுநருக்கு இருந்த தடையும் நீங்கியதால் "உடனே விடுதலை செய்க!''

ஏழு பேர் விடுதலையில் ஆளுநருக்கு இருந்த தடையும் நீங்கியதால், உடனே அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அறிக்கை வருமாறு:
மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தீர்ப்பின்படி 27 ஆண்டுகாலம் ஏழு பேர் சிறையில் வாடி வருகின்றனர். இவர்களை விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருந்தும், பல்வேறு அரசியல் மற்றும் சட்ட சித்து விளையாட்டுகளால்'' தள்ளிப் போடப் பட்டு வந்துள்ளது.
கடைசியாக தமிழ்நாடு அரசின் அமைச்சரவை விடுதலை செய்யத் தீர்மானித்து அனுப்பிய கடிதம் - ஆளுநர் கையில்தான் பத்திரமாக'' இருக்கிறது.
ராஜீவ் காந்தியோடு உயிரிழந்த குடும்பத்தினரால், இவர்களின் விடுதலையை எதிர்த்து தொடுக்கப்பட்ட அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தால் இப்பொழுது தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இனி இதனைக் காரணம் காட்ட முடியாது - இருந்த தடையையும் அதிகாரப்பூர்வமாக உச்சநீதி மன்றமே நீக்கிவிட்டதால், வேறு காரணங்களைத் தேவையின்றி சொல்லி, தமிழ்நாடு ஆளுநர் ஏழு பேர்களின் விடுதலையை, மேலும் காலதாமதம் செய் யாமல் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடுமாறு வலியுறுத்துகிறோம்.
இதற்குமேலும் மத்திய அரசு முரண்டு பிடிக்கக் கூடாது என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்.
- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...