Showing posts with label சிலைக் கடத்தல் வழக்கு. Show all posts
Showing posts with label சிலைக் கடத்தல் வழக்கு. Show all posts

Wednesday, June 5, 2019

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு கலைப்பு

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு களை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு கலைக்கப் பட் டுள்ளது. தமிழகத்தில் புராதன மற்றும் பழமை யான கோவில்களில் உள்ள சிலைகள் கடத்தப் பட்டது.  சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அதிகாரிகள் கடத்தி, சர்வதேச கடத்தல் கும்பலிடம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், அய்.ஜி. பொன்.மாணிக்க வேல் தலைமையில் சிறப்பு படையை உருவாக்கினார்.
பின்னர் கும்பகோணம் தலைமை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தை சிறப்பு நீதிமன்றமாக அறிவித்தார். தமிழகம் முழுவதும் காணாமல் போன சிலைகள் குறித்து இந்த தனிப்படை விசாரிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமித்து உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி உத்தரவிட்டது.
அதன்படி, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோரை கொண்ட அமர்வை நியமித்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார். சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அமைர்வை கலைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை நியமித்ததற்கான அறிவிப்பாணையை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜோதிராமன் மாற்றியமைத்துள்ளார். இனிமேல் சிலைக்கடத்தல் தொடர்பான பொதுநல வழக்குகளை, பொதுநல வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளே விசாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சிலைக்கடத்தல் வழக்கில் கைதாகும் நபர்களின் ஜாமீன் மனுக்களை பிற வழக்கின் ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் நீதிபதிகளே விசாரிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...