Showing posts with label இன்று ஒரு புதிய தகவல். Show all posts
Showing posts with label இன்று ஒரு புதிய தகவல். Show all posts

Monday, January 26, 2015

விருதுகள் பார்ப்பனரின் ஏகபோகமா?

https://www.facebook.com/viduthalaidaily/photos/a.108670655853554.22641.101804026540217/809193122467967/?type=1&theater

ஜனவரி 26  - இந்தியக் குடிஅரசு நாளை யொட்டி, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ முதலிய விருதுகளுக் குரியவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள்

1) என்.கோபால்சாமி (அய்யங்கார்) ஓய்வு
2) சுதா இரகுநாதன்
3)    எம்.ஆர். சீனுவாசன்
4)    பி.வி. இராஜராமன் (அய்.ஏ.எஸ்.) ஓய்வு

அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் தேடித் தேடிப் பார்த்தாலும் தமிழ்நாட்டிலிருந்து பெரிதும் பூணூல் திருமேனிகளே தகுதி பெற்றவர்களாக உள்ளார்கள்;

தடவித் தடவிப் பார்த்தால் ஒன்று வெறும் முதுகு கிடைக்குமோ என்ன?

யாருக்கு வந்த சுதந்திரம் இது?
புரிகிறதா?

Saturday, January 24, 2015

முதல் பெண் அய்.எப்.எஸ்.


பெண்களில் முதல் அய்.எப்.எஸ். அதிகாரி இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளராகவும் இருந்தவர். அதுவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் (கருநாடகம்) என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம் - இந்தத் தகவல் சிலருக்குப் புதிதாகக் கூட இருக்கக் கூடும்.

அவர் பெயர் சி.பி. முத்தம்மா (1924-2009) 1949இல் இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த போது அவர் சந்தித்த சவால்கள் சாதாரணமான வையல்ல!

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தபோது, சட்ட விதிகள் சல்லடம் கட்டி எதிர் நிலையில் நின்றன. திரு மணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் வெளி யுறவுத்துறை செயலாளர் பதவியில் இருக்கக் கூடா தாம்! பாரத மாதாவின் மடியில் குடி கொண்டிருந்த  விதிகளைப் பார்த்தீர்களா?  அய்.எப்.எஸ். படித்து வெளியுறவுத்துறை செயலாளராகவும் ஒளி விட்டவர் அல்லவா? விடுவாரா? உச்சநீதிமன்றம் சென்றார்; நல்ல வாய்ப்பாக அந்த வழக்கை விசாரித்தவர் வி.ஆர். கிருஷ்ணஅய்யர்.

விதி எண் 8(2) தடைச் சுவர் எழுப்புவதைக் கண்ட நீதிபதி ஏளனமாகச் சிரித்தார்.
தனது சிந்தனைக் கூட்டி லிருந்து சில அம்புகளை எடுத்து வீசினார். ஒரு பெண் அதிகாரி திருமணத்துக்கு முன்னர் அரசின் அனு மதியைப் பெற வேண்டு மென்றால், ஓர் ஆண் அதிகாரியும் அத்தகைய அனுமதியைப் பெற வேண்டாமா!? தமது குடும்பப் பொறுப்பு காரணமாக ஒரு பெண் தன் அலுவலகப் பணிகளைச் சரி வர செய்யாத நிலை என்றால், அதே காரணம் ஓர் ஆணுக் கும் பொருந்த வேண்டாமா? என்று வினா தொடுத்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய் யர் - அரசமைப்புச் சட்டத் தின் முரண்பாட்டையும் ஒரு மொத்து மொத்தினார்.

இந்த விதி அரசியல் சாசனத்தின் 16ஆம் பிரிவுக்கு முரணானது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

பெண்கள் பலவீனமான வர்கள் என்ற மனோ நிலை கொண்ட ஆணாதிக்கக் கலாச்சாரத்தின் தொடர்ச்சி தான் இந்த பாகுபாடு சுதந்திரமும், நீதியும் - ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதே! அரசியல் சாசனம் கூறும் சம நீதித் தத்துவத்திற்கு இந்த விதி முறைகள் எதிரானவை என்றும் இடித்துக் கூறினார் நீதிபதி.

35 ஆண்டுகள் அரசு பணியில் சிறப்பாகப் பணி யாற்றி முத்திரை பொறித்தார் முத்தம்மா.

நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் முன்னிலையில் இந்தவழக்குச் செல்லாமல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவி ருந்த ரெங்கநாத் மிஸ்ரா போன்றவர்களிடம் சென்றி ருந்தால் என்னாகும்?

பெண்கள் வீட்டு வேலை செய்வதில்தான் திறமையானவர்கள்; ஆண்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு அரசுப் பணிகளுக்கு வர ஆசைப்படக் கூடாது என்று பிரம்ம குமாரிகள் மாநாட்டில் பேசிய துண்டே!  (8.11.1996)

- மயிலாடன்

குறிப்பு : முத்தம்மா அவர் களின் பிறந்த நாள் இந்நாள் (1924)

Friday, January 23, 2015

இண்டர்நெட் இல்லாமலேயே 'வாட்ஸ்-ஆப்'பை பயன்படுத்தும் புதிய சிம் அறிமுகம்

whats app

இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்-ஆப் ஒரு தகவல் தொடர்பு முறையாகவே மாறிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்ட பிறகு ஒவ்வொருவரும் 'வாட்ஸ்-ஆப்'பை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இதை பயன்படுத்த முடிவதில்லை. ஏனென்றால், டேட்டா கனெக்ஷன் வவுச்சர் லிமிட் தீர்ந்துவிட்ட பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது.

உலகம் முழுவதும் படுபாப்புலராகிவிட்ட இந்த வாட்ஸ்-ஆப்பை இண்டர்நெட் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம்மை தயாரித்து அசத்தியிருக்கிறது இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறுவனம். இந்த சிம்மை பயன்படுத்தி வை-ஃபை, டேட்டா கனெக்ஷன், ரோமிங் இல்லாமல் மெசேஜை அனுப்பலாம். இந்த சிம்மிற்கு 'வாட்ஸிம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அபூர்வ சிம்மை 'ஜீரோமொபைல்' நிறுவனத்தின் இயக்குனர் மானுவேல் ஜனிலியா கண்டுபிடித்திருக்கிறார்.

இந்த சிம் எப்படி வேலை செய்கிறது?

'வாட்ஸிம்' உலகம் முழுவதிலுமுள்ள 150 நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட மொபைல் ஆபரேட்டர்களுடன் இணைந்து சேவையை வழங்குகிறது. நீங்கள் ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு சென்றாலும் உடனடியாக சர்வீஸ் புரொவைடரை ஆட்டோமேட்டிக்காகவே மாற்றிக் கொள்கிறது 'வாட்ஸிம்'. ஒருவேளை அருகில் ஏதாவது ஒரு நெட்வொர்க்கில் 'சிக்னல்' நன்றாக இருந்தால் தானாகவே அந்த நெட்வொர்க்கில் 'கனெக்ட்' ஆகிவிடும். இந்த சிம் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அதைவிட, அவர்கள் தங்களுக்கு அன்பானவர்களுடன் எந்த தடையும் இல்லாமல் 'வாட்ஸ்-ஆப்'பில் எப்போதும் இணைந்திருக்க முடியும். இதற்கு எந்த ரோமிங் கட்டணங்களும் கிடையாது என்பது கூடுதல் 'பெனிபிட்'.

'வாட்ஸிம்' வாங்க எவ்வளவு செலவாகும்?

இந்த சிம்மின் விலை வெளிநாட்டு பண மதிப்பில் 10 பவுண்டுகள் செலவாகும். அதாவது, இந்திய பண மதிப்பில் ரூ.714. இது ஒரு மாதத்திற்கு மட்டுமல்ல, வருடம் முழுவதும் உலகெங்கிலும் உள்ள நண்பர்களுடன் 'சாட்' செய்து மகிழலாம். 'வாட்ஸிம்'முக்கு மாதாந்திர கட்டணங்களோ, பிக்ஸட் கட்டணங்களோ, எதுவும் கிடையாது. அதுமட்டுமல்ல இது ஒருபோதும் எக்ஸ்பைரி ஆகவே ஆகாது.

போட்டோ, வீடியோ, பாடல்களை இலவசமாக அனுப்ப முடியுமா?

மெசேஜை போல மல்டிமீடியா கண்டென்ட்டு (போட்டோ, வீடியோ, ஆடியோ) பைல்களை இலவசமாக இதில் அனுப்ப முடியாது. அதற்கு தனியாக நாம் ரீசார்ஜ் செய்துதான் ஆக வேண்டும். எனினும், சில கிரெடிட் பாயிண்டுகளை கலெக்ட் செய்து கொண்டால் அதற்கு ஏற்றவாறு இலவசமாக அனுப்ப முடியும். இது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும். குறிப்பாக, இந்தியாவில் 150 கிரெடிட்டுகளை கலெக்ட் செய்தால் போட்டோக்களையும், 600 கிரெடிட்டுகளை பெற்றால் வீடியோ மெசேஜ்களையும், 30 கிரெடிட்டுகளை பெற்றால் வாய்ஸ் மெசேஜ்களையும் இலவசமாக அனுப்பலாம். 

ஆனால், கான்டாக்ட் மற்றும் லொகேஷன் ஷேரிங் செய்வதற்கு எந்த கட்டணமும் இல்லை. அதற்கு கிரெடிட்டுகளும் தேவையில்லை.

Wednesday, January 21, 2015

மாணவர்களுக்கான இணைய தளங்கள்

தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும்.

பொதுத்தளங்கள்: அனைத்துப் பாடங்களுக்குமான குறிப்பேடுகள், பவர் பாயின்ட், வீடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத்தளத்தில் கிடைக் கின்றன.

www.waytosuccess.com
www.padasalai.net
www.Kalvisolai.com

தமிழ்

www.tamilpalli.wordpress.com
www.tamilasiriyarthanjavur.blogspot.com
www.ttkazhagam.com

இவ்வலைப்பூவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடத்திட்டம், வினாத்தாள் அமைப்பு, கற்றல் குறைவான மாணவர்களுக்கான வினா-வங்கி, ஒரு மதிப்பெண் கேள்விகள் ஆகியவை இடம்பெறுகின்றன. பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட் , வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.

English

www.jeyaenglish.com
www.dhilipteacher.wordpress.com

இத்தளத்தில் ஆங்கிலப் பாடக் குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட், வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.

Maths

www.tnkanitham.in

இத்தளத்தில் கணிதப் பாடக்குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட் கிடைக்கிறது.

Science
www.tnteachers.com

இத்தளத்தில் அறிவியல் பாடக் குறிப்புகள் கிடைக்கும்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, January 6, 2015

குளிர்காலத்தில் உடல் நலத்தைப் பாதுகாக்க!


வெயில் காலத்தைவிட பனி காலங்களில் நமக்கு அதிக அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. மனிதர்களுக்கு காது, மூக்கு, தொண்டை பகுதிகளைத்தான் பனி தாக்குவ தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரவு முதல் அதிகாலை வரையிலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சுத் திணறல், சளி என பிரச்சினைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறவும் வாய்ப்புள்ளது. பின்னர் அது மூக்கடைப்பு, காதுவலி போன்ற நோய்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளும். குளிரால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி காய்ச்சல் மற்றும் குளிர்கால பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில இயற்கை மருத்துவ வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

1. பனிகாலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். அதற்கு எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். வெந்நீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்கவைத்து அருந்தினால் தொண்டைவலி, மூக்கடைப்பு, காதுவலி, சளி போன்ற நோய்கள் நம்மை அண்டாது.

2. குளிருக்கு இதமாக கற்பூரவல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்து அருந்தலாம். அல்லது 2 வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு பச்சையாக சாப்பிட்டாலும் உடலில் குளிரின் தாக்கம் ஏற்படாது.

3. குளிர்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது தோல்தான். சிலருக்கு தோலில் வெள்ளை படர் அல்லது தோல் சுருக்கம் ஏற்படும். எனவே, அதைத் தடுக்க குளிக்கும் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து குளிக்கலாம். தோல் பாதுகாக்கப்படும். தோல் வறட்சியும் நீங்கும்.

4. பனி காலத்தில் குளிப்பதற்கு சோப்புகளை பயன் படுத்துவதைவிட கடலை மாவு, பயத்தம் பருப்பு மாவு ஆகியற்றை தேய்த்து குளிக்கலாம்.

5. தொண்டைவலி, வறட்டு இருமலுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் ஒரு சிறுதுண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும்போது, அரை தேக்கரண்டி மிளகுப்பொடி போட்டு சற்று ஆறியதும் அதை உருட்டி வாயில் போட்டுக்கொண்டால் இதமாக இருக்கும். வறட்டு இருமலும் அடங்கும்.

6. மூக்கு, தொண்டை, காதுகளில் ஏற்படும் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, காலில் பாத வெடிப்புகள் வேறு ஏற்படும். பாதவெடிப்புக்கு பயப்படவே தேவையில்லை. சிறிதளவு விளக்கெண்ணெயுடன், தேங்காய் எண்ணெயை சம விகிதத்தில் கலந்து, அதில் சிறிது மஞ்சள் பொடியை போட்டு குழைத்து, பேஸ்ட் போல் செய்து, அதை வெடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகிவிடும்.

7. முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க பாதாம் எண்ணெய் பயன்படுத்துவது உகந்தது.


குளிர் காலத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவு வகைகள்

1. பனி காலங்களில் எண்ணெய்கள் மூலம் செய்யப்பட்ட பலகார வகைகளை அறவே ஒதுக்கிவிடவேண்டும். காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிக்கு இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசியால் செய்யப்பட்ட கஞ்சி, பிரெட் போன்றவற்றை சாப்பிடலாம்.

2. பழங்களில் சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களைச் சாப்பிடவேண்டும். புளிப்புச்சுவை நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, சீத்தாப்பழம் போன்ற பழவகைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளக்கூடாது. வெயில் காலங்களில் நம் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளும் இப்பழங்கள் குளிர்காலங்களில் ஒத்துக்கொள்ளாது. விரிவாக கூறினால், வெயில் காலங்களில் நமக்கு அதிகம் வியர்க்கும். அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரைட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக நாம் புளிப்புச் சுவைமிக்க பழங்கள், மோர் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வோம். ஆனால், குளிர்காலத்தில் இவற்றை நாம் எடுத்துக்கொள்ளும்போது, நம் உடலில் அதிக அளவு அமிலச்சத்து சேர்ந்து சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். பழங்களில் பச்சை திராட்சையும், பச்சை வாழைப்பழத்தையும் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.

3. முக்கியமாக இந்தப் பனிக்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். சுண்டல் வகைகள், முளைக்கட்டிய தானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் சமையலில் மிளகு கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

4. ஒரு நாளில் 2 வேளை உணவில் இரும்புச்சத்து நிறைந்த காய், கீரை, பழ வகைகள் எடுத்துக்கொள்ளலாம். முருங்கை, பேரீட்சை, திராட்சை உள்ளிட்டவற்றையும் சாப்பிடலாம். பழரசங்கள், இளநீர், தர்ப்பூசணி, அய்ஸ் கிரீம்கள் உள்ளிட்ட குளிர்ச்சியான உணவு வகைகளை அறவே தவிர்த்தல் நல்லது.

5. ஊட்டச்சத்துகள் முகுந்த பசலைக்கீரை, வேர்க்கடலை, கேரட், கோழிக்கறி ஆகியவற்றை சாப்பிடலாம். குறிப்பாக கோழி சூப் குளிருக்கு ஏற்ற இதமான ஒன்று என்பது யாவரும் அறிந்ததே.

6. நீர்ச்சத்து நிறைந்த பூசணி, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கன்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.
மேலும் நோய் எதிர்ப்புச்சத்து மிகுந்த உணவுகளான கீரை, கோதுமை உட்கொள்ளுங்கள்.

Friday, July 20, 2012

கண்கள் பல நிறங்களில் ஏன்?


கண் கருவிழியின் நிறம் மனிதர் களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்து களின் செயல்பாடுகளை மனிதர் களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு (Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறு பாடுகளால் நிர்ணயம் செய்யப் படுகிறது. கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வெவ்வேறாக வேறுபடுகிறது.
உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரணமாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது கண் நிறம் ஒரு பல ஜீன (Polygenic) கூறு ஆகும். கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில் (Pigments) அளவை வைத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனிதர்களிடத்திலும் விலங்குகளிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது.
மனிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றன. மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழிவெண்படலம் (cornea) முன்னாலும், அதற்குப் பின்னால் கருவிழிப் படலம்(iris) என்ற தசையாலான திரையும் உள்ளன. கருவிழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது; மெலனின் என்ற நிறமிப் பொருளுடன் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலனின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும்.
இதற்குக் காரணம் கண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக் கும் இடையேயுள்ள கண்முன்நீர் (aqueous humour) என்ற திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டாக் குதலேயாகும். வானம் நீல நிற மாகக் காட்சியளிப்பதற்கும் இவ்விளைவே காரணம் எனலாம். நிறமிப் பொருள் அடர்த்தியாக இருக்குமானால் கண் பழுப்பு நிறமாயும், மிகவும் அடர்த்தியுடன் இருப்பின் கருமை நிறமாகவும் இருக்கும்.
இந்நிறமிப் பொருள் கருவிழிப்படலத்தில் இல்லாமல் இருப்பதும் அல்லது குறைந்தோ, கூடவோ இருப்பதும் மரபுவழிப்பட்ட பரம்பரை இயல்பாகும். இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்தில் நீல நிறக் கண்களும், வளர வளரக் கண்கள் பழுப்பு நிறமாக மாறுவதும் உண்டு; கருவிழிப் படலத்தில் நிறமிப் பொருள் வயது கூடக் கூட, அடர்த்தியாகச் சேருவதே இதற்குக் காரணம்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


அய்ஏஎஸ், வங்கி, அரசு பணிகளுக்கான தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன


நெல்லை, ஜூலை 19-அய்ஏஎஸ், அய்பிஎஸ், வங்கி, அரசுப் பணிகளில் சேருவதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்காக 6 லட்சம் வினாக்களை தயாரிக்கும் பணியில் பேராசிரியர்கள் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர்.
அய்ஏஎஸ், அய்பிஎஸ், அய்எஃப்எஸ், வங்கிப் பணிகள், மாநில அரசு பணிகளில் திறமை யானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக நடத்தப்படும் தேர்வுகளின் தரம் உயர்த்தப் படுகின்றது. இதற்காக மத்திய அரசின் மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் கண்காணிப்பில் மைசூரை தலைமையிடமாகக் கொண்டு இந்திய தேசிய தேர்வுப்பணி மற்றும் மதிப்பீட்டு மய்யம் செயல் படுகிறது. இந்த மய்யத்தின்கீழ் நாடு முழுவதும் 250 மண்டல களப்பணி மய்யங்கள் உள்ளன. தமிழகத்தில் 8 களப்பணி மய்யங்கள் உள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள 300 பல்கலைக் கழகங்கள், 17 ஆயிரம் கல்லூரிகள், 20 லட்சம் பள்ளி களில் ஒரு மொழிக்குள்ளேயும் பல மொழிகளுக்கு இடையேயான மொழி பாடத்திட்டத்தை உரு வாக்குவது, வினாக் களை உருவாக்குவது போன் றவை இதன் முக்கிய பணிகளாகும்.
இந்த மய்யங்கள் மூலம் கல்லூரி பேரா சிரியர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலமாக மிகத்தரமான போட்டி தேர்வு வினாக்களை தயாரிக்கும் பணி நடக்கிறது. பாட வாரியாக சுமார் 6 லட்சம் வினாக்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த வினாக்கள் மைசூரில் மதிப்பீட்டு மய்ய வினா வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேர்வு நடத்தும் துறைகளுக்கு அல்லது மாநிலங்களுக்கு தேவைப்படும் போது தேவைப்படும் வினாக்களை வழங்கும்.
தனித் திறமைசாலிகளை உருவாக்குவது எப்படி என அய்க்கிய நாடுகளுடன் இணைந்து இந்த மய்யத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
தரமான கடினமான வினாக்களை தயாரித்து வழங்குவதால் வரும் காலங்களில் அரசுப் பணிகளில் மிகவும் திறமையானவர்கள் பணியாற்றும் வாய்ப்பு உருவாகும் என்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும். இதன் பலன் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக கிடைக்கும் என அதன் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் சேவியர் தெரிவித்தார்.
நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய மய்யம் நெல்லை சேவியர்ஸ் கல்லூரியில் செயல்படுகிறது. இங்கு தமிழ், ஆங்கில வினாக்கள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்த 20 கல்லூரிகளின் தமிழ், ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் பங்கேற்ற பயிற்சி முகாம் மற்றும் வினாக்கள் தயாரிப்பு பணி நடந்தது.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, July 13, 2012

`ஸ்டெதாஸ்கோப்' வரலாறு!


இதயத் துடிப்புகளை அறிய உதவும் கருவியே `ஸ்டெதாஸ்கோப்'. இன்றைய மருத்துவர்களுக்கு இது மிகவும் இன்றியமையாதது. ரெனி தியோபைல் ஹயாசின்த்யேனக் என்ற பிரெஞ்சு மருத்துவர் 1816-ம் ஆண்டில் ஸ்டெதாஸ் கோப் கருவியை முதன் முதலாக உருவாக்கினார். அது மரத் தினால் செய்யப்பட்டதாக இருந்தது.
அது, ஓர் அடி நீளம் உள்ள துளை போடப்பட்ட உருளையே ஆகும். குழந்தைகள் ஒரு மரக்குச்சியின் ஒரு முனையில் குண்டூசியால் குத்தித் துளை போட்டனர். பின்னர் அவர்கள் ஒருபுறமாக இருந்து ஒலி எழுப்பினர். மறுமுனையில் காதை வைத்து அந்த ஒலியைக் கேட்டனர். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பிரெஞ்சு மருத்துவருக்குச் சிந்தனை ஓடியது. அந்தச் சிந்தனையின் விளைவாகவே அவர் ஸ்டெதாஸ்கோப் கருவியை உருவாக்கினார்.
தியோபைல் தனது ஸ்டெதாஸ் கோப்பை பயன்படுத்தி நோயாளி களைச் சோதித்தார். அவர் தனது ஸ்டெதாஸ்கோப் குழாயின் ஒரு முனையை நோயாளியின் நெஞ்சில் வைத்து, அவருடைய இதயமும், நுரையீரல்களும் எழுப்பிக் கொண்டிருந்த சப்தங்களைக் கேட்டார். இப்படிப் பல நோயாளிகளைச் சோதனை செய்து, அவர்களின் உடலில் ஏற்பட்ட சப்தங்களையும் அறிந்தார்.
முதல் நோயாளியின் இதயத்தில் இருந்து எழுந்த சப்தங்களையும், பிறகு சோதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் இருந்து எழுந்த சப்தங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, அவர் ஆய்வு நடத்தினார்.
முதல் நோயாளியின் இதயமும், நுரையீரல்களும் எழுப்பிய சப்தங்களின் பொருள் என்ன என்பதை ஆதாரப் பூர்வமாக அறிந்துகொள்வதற்காகவே அவர் இந்த ஒப்புநோக்கும் ஆராய்ச் சியை நடத்தினார். அந்தக் காலத்தில், இதயத் துடிப்புகள் உண்டு என்பதை யும், அவை ஒலியை எழுப்பும் என்ப தையும் விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ளவில்லை.
இதயத் துடிப்புகளை அறிந்து கொள்வதற்காக தனது ஸ்டெதாஸ்கோப் மூலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட தியோபைல், 1818ஆ-ம் ஆண்டில் ஒரு புகழ்பெற்ற மருத்துவ நூலை எழுதினார். அந்த நூலில், தனது ஸ்டெதாஸ்கோப் ஆய்வு முடிவுகளை அவர் வெளியிட்டார். தியோபைலின் நூலின் தலைப்பு, `ஆஸ்கல்டேஷன் மெடியேட்' என்பதாகும்.
`ஆஸ்கல்டேஷன்' என்றால் என்ன? உடலில் எழும் சப்தங்களைக் கேட்பது என்று பொருள். இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களைக் கண்டுபிடித்து அறிந்துகொள்வதற்கு `ஆஸ்கல்டேஷன்' முறை இப்போது பயன்படுத்தப்படுகிறது.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

மகுடிக்கு மயங்குமா பாம்பு?


மகுடிக்கு மயங்குமா பாம்பு?

உண்மையில் சொல்லப் போனால் பாம்புக்குச் சுத்தமாகக் காது கேட்காது. இது ஒரு செவிட்டுப் பிராணி என்பதே உண்மை. ஊர்வன வகையைச் சார்ந்த எந்த உயிரினத்திற்கும் பாலூட்டிகளைப் போல புறக்காது கிடையாது. ஆனால், மாண்டிபுளார் வழி எனப்படும் காதுத் துளை உண்டு. இத்துளைகள் மூலம் இவை ஓசையை நன்கு கேட்டு அறிய முடியும். ஆனால், பாம்புக்கு மாண்டிபுளார் செவியும் கிடையாது.
அதேசமயம் பாம்பு மிகவும் அருகில் ஏற்படும் அதிர்வு களை அறிந்துகொள்ளும் திறன் பெற்றது. இதைத்தான் பாம்புக்கு கூர்மையான செவி அமைப்பு உடையதாக தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். இருப்பினும் ஒரு கூடுதல் செய்தி என்னவென்றால், பாம்பாட்டிகள் மகுடி ஊதும்போது, மகுடி ஓசை மென்மையாக பூமியில் தவழ்ந்து ஓடுகிறது. அவ்வாறு தவழ்ந்தோடும் இசை பூமியின் தரை மீது இருக்கும் பாம்பின் உடலில் பட்டு அதிர்கிறது. அந்த அதிர்வுக்கு ஏற்பவே பாம்பு படமெடுத்து ஆடுகிறது.


கி.மு. 600 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய மம்மியின்

செயற்கை உறுப்பு கண்டுபிடிப்பு இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தை சேர்ந்த தலைமை ஆராய்ச்சியாளர் ஜாக்கி பின்ச் எகிப்து நாட்டின் புகழ் பெற்ற மம்மிகள் பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார். அதில் மனித உடலின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள மம்மி ஒன்றின் வலது கால் பெருவிரல் ஒன்று உறுப்பு மாற்று சிகிச்சையின்படி ஒன்றிணைக் கப்பட்டு உள்ளதாக கின்ச் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கார்பன் ரேட்டிங் அடிப்படையில் அதன் காலம் கி.மு. 600 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இது பற்றி பின்ச் கூறுகையில், 3 பங்கு மரத்தாலும் மற்றும் தோலாலும், ஒரு மனிதனின் 40 சதவீத உடல் எடையை தாங்க கூடிய அளவில் அந்த வலது கால் பெருவிரல் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது உலகின் மிக பழைமையான செயற்கை உறுப்பு என்ற பெருமையை பெறுகிறது என்றார். எனினும், இந்த செயற்கை உறுப்பு குறிப்பிட்ட அந்த மனிதனால் பயன்படுத்தப்பட்ட ஒன்றா அல்லது மம்மியாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டதா- என்ற அடிப்படையில் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். இதுவரையில், சில நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ரோமானிய செயற்கை கால் மிகப் பழைமையான செயற்கை உறுப்பு என்ற பெருமையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...