முத்ரா கடன்களில் ரூ.25,000 கோடி ஊழல்..?
மகாராட்டிரா வில் தேவேந்திர பட்னாவிஸ்
காலத்தில் விநியோகிக்கப் பட்ட ரூ. 25,742 கோடி மதிப் புள்ள முத்ரா
கடன்களின் நம்பகத்தன்மை குறித்து என் சிபி கேள்வி எழுப்பி இருக்கிறது.
மகாராட்டிரா சட்ட சபையில் பொருளாதார
கணக்கெடுப்பு தாக்கல் செய் யப்பட்டது. அந்த கணக் கெடுப்பின்படி, 2018-19ஆம்
ஆண்டில் 43 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முத்ரா திட்டத்தின்
கீழ்
ரூ. 25,742 கோடி கடன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில், இந்த கடன் களை ஒதுக்கீடு
செய்வதில் வெளிப்படைத்தன்மை இருப்பது குறித்து சிவசேனா, என்சிபி, காங்கிரஸ்
அரசு கேள்வி எழுப்பியது. இது குறித்து என்சிபி தலைவரும், திறன் மேம்பாட்டு
அமைச் சருமான நவாப் மாலிக் கூறி யதாவது:
இந்த பயனாளிகளின் தரவு எங்கே? பயனடைந்த
வர்கள் மற்றும் அவர்களில் எத்தனை பேர் பணத்தை சரியான பயன்பாட்டிற்கு
பயன்படுத்தியிருக்கிறார்கள்? இந்தத் தரவு மாநில வேலை வாய்ப்பு மற்றும் சுய
வேலை வாய்ப்புக்காக அளிக்கப்பட வில்லை.உண்மையில் பணம் தேவைப்படும் நபர்கள்
பயன டைந்தார்களா என்பது எங் களுக்கு எப்படித் தெரியும்? அல்லது அரசு
தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு லஞ்சமாக விநியோகிக்கப்பட் டதா? என்று கேள்வி
எழுப்பி இருக்கிறார்.
முன்னதாக, 2019ஆம் ஆண்டின் போது நடைபெற்ற
கூட்டங்களில், மகாராட்டி ராவின் கூடுதல் தலைமைச் செயலாளர் அப்போதைய
முதல்வர் பட்னாவீசின் உத்த ரவைப் பெற்றும் பாஜக மாற் றும் அவர்களுக்கு
ஆதரவா னவர்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு மறைமுகாக உதவினார் என்ற
குற்றச்சாட் டும் உள்ளது, கடன்வழங் குவதில் முன்னாள் முதல்வர் மற்றும்
தலைமைச்செயலா ளரின் தலையீடு இருப்பதால் இதில் ஊழல் நடைபெற்று இருக்கும்
என்று தேசிய வாத காங்கிரஸ் தொடர்ந்து குற் றம் சாட்டி வருகிறது
No comments:
Post a Comment