Showing posts with label ஊசி மிளகாய். Show all posts
Showing posts with label ஊசி மிளகாய். Show all posts

Monday, March 7, 2016

இதுதான் “பார-தீய - (ஜனதா - ஆர்.எஸ்.எஸ்.) கலாச்சாரம் - புரிந்து கொள்வீர்!

 -  ஊசி மிளகாய்
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உள்ள முற்போக்குக் கருத்தாளர் களை - பெரியார் - அம்பேத்கர் - காரல் மார்க்ஸ் சிந்தனை வயப்பட்ட மாணவர்கள், பேராசிரியர்களை அறவே அழித்து விரட்டிட, ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ABVP (ஏ.பி.வி.பி.) என்ற அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் திட்டமிட்டே ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கில் - மாணவர் தலைவர் கன்னையாகுமார், பேராசிரியர் கிலானி போன்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
அடக்கு முறைகளால் லட்சியவாதிகள் அழிக்கப்பட முடியாதவர்கள், மாறாக, எரியும் நெருப்புக்கு எண்ணெய் - அதுவும் பெட்ரோல் ஊற்றியதுபோல மாட்டிக் கொண்டு விழிக்கின்றனர் இந்த ‘கோயபெல்ஸ்சின் குருநாதர்கள்’!
1. வெளிநாட்டு இஸ்லாமிய தீவிரவாதக் குழு கன்னையாகுமாரை வாழ்த்தியதாக பொய்க் குற்றச்சாட்டு உடனடியாக கிழிந்து தொங்கியது; அந்த இணையதளமே தன்னுடையதல்ல - போலி என்று பதில் வந்தது.
2. போடப்பட்ட தேச விரோத முழக்கங்கள் Super Imposed on that video என்று ஆய்வில் நிருபிக்கப்பட்டு விட்டது.
செய்தியாளரும் முன்பே அது தன்னால் கொடுக்கப் பட்டதல்ல, திட்டமிட்டே சேர்க்கப்பட்டது என்று கூறி விட்டார்!
உள்துறை அமைச்சர், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பலரும் இதற்குப் பொறுப்பேற்று சீரிய ஜனநாயக மரபு காக்க என்ன செய்திருக்க வேண்டும்? தாங்களே முன் வந்து பதவிகளை விட்டு விலகி இருக்க வேண்டாமா? - சொரணையிருந்தால்!
பா.ஜ.க.வின் பாரதீய கலாச்சார தூதுவர்கள் அறிவிக்கிறார்கள்.
“கன்னையாகுமார் நாக்கைஅறுத்தால் ரூ.5 லட்சம்“
“கன்னையாகுமார் தலையை வெட்டினால் ரூ.11 லட்சம்“
- இது என்ன ஜனநாயக நாடா? காட்டு மிராண்டிகள், காபாலிகர்கள் ஆளுமையின்கீழ் நடக்கும் காட்டு நிர்வாகமா?
இது எந்த, யாருடைய தைரியத்தில் நடை பெறுகிறது?
இவர்கள்  குண்டர் தடுப்பு சட்டம், தேசப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறைக்குள் அடைக்கப்பட்டு இருக்க வேண்டாமா?
இதற்கு முன், ஆட்டுக்கறி சாப்பிட்டவரை, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று  அக்லக் என்ற முஸ்லிம் உ.பி.யில் கொல்லப்பட்டுள்ளதும், பலவிடங்களில் வன்முறை - ஒடுக்கப்பட்டோரை செருப்புக்கும், நாய்களுக்கும் ஒப்பிட்ட அமைச்சர்கள் எவ்வித பதவிப் பறிப்புக்கும் ஆளாகாமல் பவனி வந்து ராஜ்ய பாரம் நடத் துவது தான் - மோடி  கொடுத்த வளர்ச்சியா? முன்னேற்றமா? மாற்றமா? மக்கள் கேட்கத் துவங்கிவிட்டார்கள்.
ஓய்வு பெற்ற நீதிபதி சாவந்த் தொடங்கி பல காவல்துறை தலைவர்கள், நிர்வாகிகள் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் எல்லாம் நேற்றுகூட ஒரு கண்டன அறிக்கை- இந்த சட்டம் செயல்படாதுள்ள அவலத்தைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளனரோ!
இந்த கலாச்சாரம் பரவினால் மீண்டும் காட்டுத் தர்பார் (Jungle Raj) ஆட்சிக்குத்தானே செல்லும் சிந்தியுங்கள்.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, February 13, 2015

டில்லி யூனியன் பிரதேசத்தில் இராமனுக்குப் பிறக்காதவர்கள் இவ்வளவு அதிகமா?

டில்லி யூனியன் பிரதேசத்தில்
இராமனுக்குப் பிறக்காதவர்கள் இவ்வளவு அதிகமா?

டில்லி சட்டமன்றத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் அமைப்புகளுக்கும், பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசுக்கும், அக்கட்சிக்கும் படுதோல்வியைப் பரிசாக, டில்லி வாக்காளர்ப் பெரு மக்கள் வழங்கி, விட்டனர். மதவெறி அரசியலும், அதிகாரப் போதை, ஆணவ உளறலும், இனிமேல் செல்லாது என்று உணர்த்தி உள்ளனர்.

அமித்ஷா - மோடி கூட்டு ஏதோ பெரிய அற்புத அதிசயங்களை யெல்லாம் தரக்கூடிய அலாவுதீனின் அற்புத விளக்கு என்பதைப் போன்ற (மாய்மாலப் பிரச்சாரப் புரட்டு என்ற) பெரிய பலூனை - கெஜ்ரிவால் என்ற சின்ன குண்டூசியைக் கொண்டு குத்தி ஒன்று மில்லாமல், பரிதாபத்திற்குரிய நிலையில் எதிர்க்கட்சித் தகுதியைக்கூடப் பெறாது வீழ்த்திப் பாடம் புகட்டி யுள்ளனர்!

நாடாளுமன்றத் தேர்தலில் மோடியால் இளைஞர் களுக்கும், ஏனையோருக்கும் தரப்பட்ட குளோரோபாம் - மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவில்லை; மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவும் கூடாது; அது மரணத்தில்தான் போய் முடியும்!

ஆகவே நாடு அழிவை நோக்கி - மதவெறி பழைய வர்ண தர்ம வெறி, சிறுபான்மையினரை மிக மோசமாக சித்தரித்து நடத்திய வன்கொடுமைக்கு வாக்கு பெட்டி வழியே இப்படி ஒரு மவுனப் புரட்சியை டெல்லி வாக்காளர்கள் நடத்திப் பாடம் போதித்துள்ளனர்.

5 முறை தேர்தல் பிரச்சாரத்தினை மும்முரமாக நடத்திய மோடி பிரச்சாரம் பரிதாபத்திற்குரிய நிலையில் 5 இடங் களைக்கூட பெற முடியாமல், வெறும் 3 இடங்களையே பெற்றுள்ளது!

கிரண்பேடி என்ற ஒரு பச்சோந்தி பதவி ஆசைப் பெண்ணை -விளம்பர வியாதியால் வீணே அலைந்த ஒரு பெண்ணை - ஒரே நாளில் கட்சித் தாவ வைத்து, எடுத்த எடுப்பிலேயே முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்து பெண்கள் வாக்குளைப் பெற இந்த மாயமான் காட்சியை நடத்தியும்கூட கை கொடுக்கவில்லை.

அவரே தோற்றுப் போனார்!

கூடு விட்டுக் கூடு பாயும் குணவதிக்கு வாக்குகளால் பாடம் கற்பித்துள்ளனர்!
அவருக்குத் திடீர் பிரோமோஷன் கொடுத்த ஷாவின் வித்தைகளின் விலா எலும்பு முறிக்கப்பட்டுள்ளது!

அதைவிட டில்லி வாக்காளர்கள் இந்தப் பெருத்த தோல்வியை பா.ஜ.க.  அணிக்குத் தந்து, நன்றாகக் கரி பூசி விட்டனர்.

எவ்வளவு கேவலமான பேச்சு! - தேர்தல் பிரச்சாரத்தில்? ஒரு ஆர்.எஸ்.எஸ். கதாகாலட்சேப பெண்ணைக் கொண்டு வந்து மத்திய இணை அமைச்சராக்கியதோடு, அவரை டில்லி தேர்தல் பிரச்சாரத்திலும் களம் இறக்கினர் - பிரதமர்.

அந்தப் பெண் அமைச்சர்  உதிர்த்த நாகரிகமான கருத்து - தேர்தல் பிரச்சார வரலாற்றில் எங்கே தேடினாலும் கிடைக்காது.

அருவருக்கத்தக்க ஆணவப் பேச்சு! பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லாம் இராமனின் பிள்ளைகள். மற்றவர்களுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லோரும் முறை தவறிப் பிறந்தவர்கள்

- எத்தகைய கேவலமான இழி நிலைப் பேச்சு! இப்படிப்பட்டவர் மோடி அரசில் இன்னமும் மந்திரியாக தொடருவதும், பிரதமர் மவுனமாக இருப்பதும் சரிதானா?

67 இடங்களைப் பெற்று வியக்கத்தக்க வெற்றி பா.ஜ.க.வுக்கு எதிராகக் கிடைத்துள்ளது. பா.ஜ.க. வெறும் மூன்றே இடங்களைத்தான் பெற்றுள்ளது! அப்படியானால்

ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பிரச்சாரகரான அந்தஅமைச்சர் அம்மாவின் கணக்குப்படி டில்லி யூனியன் பிரதேசத்தில் இராமனுக்குப் பிறந்தவர்கள் வெறும் மூன்று தொகுதிகளில்தான் உள்ளனர்.

மற்றவர்கள் எல்லாம்....? நமக்கே எழுதிடக் கை கூசுகிறது!
 
இப்படிப்பட்ட கழிசடைகளையெல்லாம் துடைப்பத் தால் கூட்டி வாரிக் குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டார்கள்!

வார்த்தைகளால் பதில் கூறாமல் வாக்குகளால் செயலில் காட்டி, மூக்கறுத்துள்ளனர்.

கெட்டிக்காரன் புளுகுக்கேகூட உச்ச வரம்பு எட்டு நாள்கள்!

ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் புளுகுக்கு எட்டு மாதங்கள் போலும்!
இனியாவது ஆர்.எஸ்.எஸ். பல குரல்  மன்னர்களின் ஆணவம் குறையுமா?
எங்கே பார்ப்போம்!


- ஊசி மிளகாய்



Saturday, December 20, 2014

பயிரையே மேய்ந்த பார்ப்பன நீதிபதி வேலிகள்!

நீதி கெட்டது யாரால்?
பயிரையே மேய்ந்த பார்ப்பன நீதிபதி வேலிகள்!

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தி


டில்லி, டிச.18- சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து உச்சநீதிமன்றத் தின் நீதிபதியாக பணி புரிந்து, ஓய்வு பெற்றவர், கொல்கத்தா பார்ப்பன நீதிபதி கோகலேயாவார்.

எப்போதும் நடை முறையில் இல்லாத நடை முறையாக ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தி கடந்த திங்கள் அன்று (15.12.2014) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நீதிபதி எச்.எல். கோகலே  பணி ஓய்வு பெறுவதற்கு முன்ன தாக ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கினார். விசாரணை நீதிமன்றம் பெற்றுத்தராத வாடகை உரிமையை நீதி பதி எச்.எல்.கோகலேவின் தீர்ப்பு அவர்  சகோதரிக்கு பெற்றுத்தந்தது.

பொதுவாக தீர்ப்புகளி லிருந்து சட்டரீதியான உரிமை கோரும் மனுவா கவே மறு ஆய்வு கோரும் மனுவை உச்சநீதிமன்றம் எடுத்துக்கொள்வதுதான் வழக்கமாக உள்ளது.

இவ்வழக்கில் மறு ஆய்வு விசாரணை மூடிய அறையில் இரு தரப்பு வழக்குரைஞர்கள் துணை இல்லாமல் நீதிபதிகளுக் குள்ளாக நடைபெற்றது.
நீதிபதி கோகலேவின் பணிக்காலத்தில் 11.2.2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் அத்தீர்ப்பு வழங்கப்பட்ட காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுமாறு கோரி ஆயுள் காப்பீடு கழகத்தின் சார்பில் மறு ஆய்வு மனு அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான மூவர் கொண்ட அமர்வு மறு ஆய்வு கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

எல்.அய்.சி.சார்பில் ஆஜரான மூத்த வழக் குரைஞர் விகாஸ் சிங் தீர்ப்புக்கு முன் உள்ள முழுமையான நிலையை விரிவாக எடுத்துரைத்துக் கொண்டிருக்கும்போது, விரிவாக வேண்டாம் என்று நீதிபதி கூறிய துடன், கேள்வியே சட் டத்தின்படி ஏற்புடை யதா? என்பதுதான். எல் அய்சி சார்பில் இவ்வழக் கில் எதிர் மனு தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றார்
11.2.2014 அன்று அளிக் கப்பட்ட தீர்ப்பில் இருந் துள்ள பின்னணிகுறித்து எல்அய்சி மனுவில் கூறி உள்ளது.

17.4.2000 அன்று எல்அய்சி எஸ்டேட் மேலாளருக்கு நீதிபதி கோகலே கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் மும்பை மாகிம் மன் மாலா டேங்க் சாலையில் உள்ள குட்வில் அஷ்யூ ரன்ஸ் பில்டிங் பகுதியில் உள்ள 41 மற்றும் 42 ஆகிய எண்ணுள்ள பிளாட்டுகளுக்கான வாடகை உரிமை குறித்த பிரச்சினையில் லக்ஷ்மண் தாமோதர் கோகலே (நீதிபதி கோகலேவின் தந்தை)யின் பெயரிலிருந்து அவர் சகோதரி பத்மஜா நீல்கந்த் தாம்ளே பெய ருக்கு மாற்றம் செய்யுமாறு அவர் கடிதத்தில் குறிப் பிட்டிருந்தார்.

அவர் தந்தையுடன் 20 ஆண்டுகளாக அவர் சகோதரி வசித்து வந்துள் ளார். ஆகவே, சட்டப்படி வாரிசு உரிமைப்படி வாடகை உரிமையை அவர் சகோதரிக்கு அளிப் பதில் அவர் உள்பட வேறு எவருக்கும் ஆட்சே பனை இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

2012 ஆம் ஆண்டில் பத்மஜா தாம்ளே மும்பை சிறுவழக்குகளுக்கான நீதிமன்றத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் வாடகை உரி மையை அளிக்குமாறு மனு செய்தார். அம் மனுவை நிராகரிக்குமாறு எல்.அய்.சி. எதிர்மனு தாக்கல் செய்தது. பொது இடத்தில் கட்டப்பட்ட கட்டடம் குறித்த சட்டத் தின்படி சிறு வழக்குகளுக் கான நீதிமன்றம் விசா ரணை மேற்கொள்ள முடியாது என்றும், அந் நீதிமன்ற எல்லைக்குள் இல்லை என்றும் கூறி மனுவை ஏற்கவில்லை.

31.8.2013 அன்று பத்மஜா மனு நிராகரிக் கப்பட்டு, எல்அய்சி நிலைப்பாடு தக்கவைக்கப் பட்டது. இரண்டு வாரங் களுக்குப் பிறகு, 13.9.2013 அன்று நீதிபதி கோகலே தலைமையிலான உச்சநீதி மன்றத்தின் அமர்வு இதே வழக்கு போன்ற வழக்காக இருந்த சுகாஸ் போபலே என்பவரின் வழக்கின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்தது. பொது இடத் தில் வாடகைதாரராக இருப்பது என்பது பொது இடத்துக்கான சட்டத் திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு பாம்பே வாட கைச் சட்டம் உரிமையை ஏற்படுத்தி ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதிலிருந்து தடுக்கிறது.

27.9.2013 அன்று பத்மஜாவுக்கு எதிராக கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து 11.2.2014 அன்று மனுத் தாக்கல் செய்திருந்தார். போபலே வழக்கில் நீதிபதி கோகலே தீர்ப்பை வழங்கினார். பொது இடங்களுக்கான சட்டம் வருவதற்கு முன்னதாகவே பொது இடத்தில் வாடகைதார ராக இருப்பவர்கள் இருக்கும் சொத்து பாம்பே வாடகைச் சட் டத்திற்குள் வந்துவிடுகிறது.

எல்.அய்.சி. அதன் மனுவில் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்ட போது, (நீதிபதி கோக லேவால்) அமர்வு ஏராள மான அரசமைப்பு அமர்வின் தீர்ப்புகளைக் காட்டி இந்தப் பிரச் சினையைத் தீர்த்துக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. ஆனால், அவர் சகோதரியின் வழக்கு போன்றது அல்ல. அசோக் மார்கெட்டிங் [1990(4) ஷிசிசி406]  வழக்கில் இரண்டு வாடகை தாரர்கள் இருந்தனர். அரசமைப்பு அமர்வு மூலம் அறிவிக்கையின் மூலம் பொது இடங் களுக்கான சட்டம் நடை முறைக்கும் முன்பாகவே இருந்தும், வாடகைச் சட்டம் அவர்களைப் பாதுகாக்கவில்லை. என்று கூறப்பட்டுள்ளது.

பத்மஜா அவர் சகோதரர் 11.2.2014 அன்று அளித்த தீர்ப்பைக்காட்டி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 2.4.2014 அன்று அவருக்கு சாதக மான தீர்ப்பைப் பெற் றுக்கொண்டார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, July 8, 2014

புரிந்து கொள்ளுங்கள் சூத்திர அறிவு ஜீவிகளே!

 

மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திரர், விழுப்புரத்திலிருந்த பழைய திருவாளர் சாமிநாதய்யர் அவர்கள் ஆவார்! திண்டிவனம் கிறித்துவப் பள்ளியான ஆல்காட் மிஷன் பள்ளியில் படித்தவர். பிறகு சங்கராச்சாரியாராக அவர் சென்றபோது சந்திரசேகரேந்திர சாமிகள் ஆனார்!

கல்கி வார ஏடு தனது இன உணர்வை மறக்காமல் பார்ப்பன குலத் தலைவரான அச்சங்கராச்சாரியின் அறிவுரை என்ற பெயரால் ஒரு பக்கத்தை வாரா வாரம் தவறாமல், தலையங்கத்திற்கு முன்பே போட்டு பய பக்தியோடு, ஹிந்து மத (ஆர்.எஸ்.எஸ்.) பிரச்சாரத்தை சற்று சர்க்கரைப் பூச்சுப் பூசி தருகின்ற அரும்பணியை (திருகுதாள) செய்து வருகிறது. (நன்றி கெட்ட தமிழர் ஏடுகள் பெரியார்பற்றி அவர் பிறந்த நாளில்கூட செய்தி வெளியிடுவது கிடையாது)

இவ்வாரம் வந்த கல்கி  (6.7.2014) இதழில் தவறான நாகரிகப் பிரிவினை என்ற தலைப்பில் சந்திரசேகரேந் திரரின் கருத்துக்களை எடுத்துப் போட்டுள்ளார்கள்.

அதன் துவக்கம் இது.

இந்தக் காலத்தில் தமிழ்ப் பண்பாடு வேறே, வைதிக நாகரீகம் வேறே என்று தப்பாக அபிப்ராயப்பட்டுக் கொண்டு முடிந்த மட்டில் தமிழ் தேசத்தில், முன் காலத்தில் உசந்ததாக எந்த விஷயம் இருந்தாலும், அல்லது எந்த விஷயங்கள் இருந்தாலும், அந்த விஷயம் அல்லது மநுஷ்யம் வைதிக நாகரிகத்தில் வராமல், தமிழினம் என்று ஏதோ ஒன்றை இவர்கள் பிரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அதில் வந்ததாகவே ஜோடனை பண்ணிக் காட்டுவதாக ஏற்பட்டிருக்கிறது.

நல்ல அறிவும் ஆராய்ச்சித் திறமையும் உள்ளவர்கள், நாவல் எழுதுகிறவர்கள் எல்லோருமே இப்படித்தான் தமிழ் நாகரிகமென்று ஏதோ ஒன்று தனியாக இந்தத் திராவிட தேசத்தில் வைதிகத்துக்கு வித்யாஸமாக, அதை அமுக்கிக் கொண்டு, பிரகாசமாக இருந்ததாக ஜோடித்து எழுதுகிறார்கள். ஆனால் அந்த அந்தக் காலத்துக் கல்வெட்டுகளைப் பார்த்தாலும் சரி, கவிகளும் புலவர்களும் பாடி விட்டுப் போயிருக்கும் தமிழ் நூல் களைப் பார்த்தாலும் சரி, இந்தப் புது அபிப்பிராயத்துக்கு ஒரு ஆதாரமும் இல்லை.

இதிலே ஒரு பக்கம் வேடிக்கையாகவும் இருக்கிறது. (வேடிக்கைக் கஷ்டம்).
(கல்கி 6.7.2014)

முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது என்பதைவிட மிக மோசமான புரட்டு - வாதம் அல்லவா இது?

தமிழ்ப் பண்பாடும், வைதிக நெறியும் எண்ணெயும் நீரும்போல ஒன்றுக்கு ஒன்று வேறானது. வெண்ணெயும் சுண்ணாம்பும் போல எதிரும் புதிருமானது நேர் மறையும் எதிர்மறையும் போன்ற வேறுபட்டவைகள்.

எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பண்பாடு என்று கூப்பாடு போடுகிறார்களே, அப்படி ஒரு பண்பாடு உண்டா என்று ஆசிரியர் வீரமணி அவர்களிடம் குமுதம்  மூலம் பால்யூ ஏற்பாடு செய்த பேட்டியில் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் கேள்வி கேட்டார்.

பெற்ற தாயையும் மகளையும், தங்கை, தமக்கையையும் வாடி, போடி என்று கேவலமாக அழைக்கத் தெரியாத பண்பாட்டுக்குப் பெயர்தான் தமிழ்ப் பண்பாடு என்று பதில் சொன்னவுடன் அவர் வேறு கேள்விக்குச் சென்று விட்டார்!

சங்கராச்சாரி முதல் சிவசங்கரி, கல்கி வரை ஓர் நேர்கோட்டுச் சிந்தனை எப்படி என்பது நம்மண்டூகங் களுக்குப் புரிந்தால் நல்லது.

இரண்டும் இரு துருவங்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ ஆதாரங்களை இலக்கியம், புராணம், வரலாறு என்ற மும்முனைகளிலும் எடுத்துக்காட் டலாமே!

1) யாதும் ஊரே, யாவரும் கேளிர் இது தமிழ்ப் பண்பாடு,
நாடோடிகளாக வந்து குடியேறிய ஆரியர், வர்ணதர்மத்தையும், ஜாதி படிக்கட்டு பேதத்தையும் (Graded Inequality) உருவாக்கி நிலை நாட்டி யது வைதிக நாகரிகம்!

2) சந்தியாவந்தனம், ஜபதம் செய்துவிட்ட பிறகு நீச்சபாஷை  தமிழில் பேச மாட்டார் இதே சங்கராச்சாரியார். சங்கராச்சாரியாரின் ஆப்த நண்பர், வித்துவான் சீடர் பலராமய்யரிடம்கூட காரைக்குடியில் உரையாட சங்கராச் சாரியார் தயாராகயில்லாததால் சந்திக்காமல் வெளி யேறியதை வித்துவான் பலராமன் அவர்களின் மகன் வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியம் (மதுரைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை முன்னாள் பேராசிரியர்) தன் வரலாறு எனும் நூலில் எழுதியுள்ளாரே! தமிழ்ப் பண்பாடு சமஸ்கிருதத்தை சகித்து மந்திர மொழி, கல்யாணம், கருமாதி,  பிரார்த்தனை, அர்ச்சனை என் றெல்லாம் ஏற்றதே - அதுபோல ஏன் வைதிகம் தமிழை ஏற்கவில்லை? வேறு வேறு என்பது தானே!

3) வேளாண்மைக்கு முன்னுரிமை, முதலிடம் தருவது தமிழ்ப்பண்பாடு.
உழுவோர் உலகத்தோர்க்கு அச்சாணி..

ஆனால், விவசாயம் பாபகரமான தொழில் ஏர் பிடிப்பது மகாபாவம் என்று கூறுவது வேத வைதீக நாகரிகம் அல்லவா?

மறுக்க முடியுமா?

4) பிராயச்சித்தம் வேத நாகரீகம் குற்றத்திற்கு தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்பது தமிழ்ப் பண்பு.

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று               குறள் (655)

5. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் இது தமிழ்ப் பண்பு தாயைப் புணர்ந்து, தட்டிக் கேட்ட தந்தையாரைக் கொன்ற பார்ப்பனப் பிள்ளைக்கும் பாவ மன்னிப்பு வழங்குவது வைதிக நெறி (திருவிளையாடற் புராணம் மாபாதகம் தீர்த்த படலம்) இப்படி உள்ளதை விதி விலக்காத சில பார்ப்பனர்கள் - தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாளர்கள் ஆனபடியோர் கூறுவதைக் கண்டு அப்போதே வெகுண்டெழுந்தார் இந்த சங்கராச்சாரியார்.

(இவை நல்லவை என்று கூறிடும் நம்மவர்களும் உள்ள பரிதாபத்தை என் செய்வது கீழே படியுங்கள்).

என்னவென்றால், வைதிகம் வேறே, த்ராவிடம் வேறே என்ற தப்பான அபிப்ராயம் பொது ஜனங்கள் மனஸில் அசைக்க முடியா மல் வேரோடி விட்டதாக நினைத்துக் கொண்டு, அவர்களுடைய ஆதர வைத் தாங்கள் ஸம்பாதிக்க வேண்டுமென்று பிராம்மணர்களி டையே அறிவாளிகளாக இருக்கப் பட்ட சில பேர் இந்த பேதத்துக்கு பலம் கொடுத்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

தமிழ் தேசத்தில் பூர்வத்தில் ஆட்சி  செலுத்தி வந்த மூவேந்தர்களும் ஸரி, பல்லவர்களும் ஸரி, வேத வித்யைகளுக்கும் வேத கர்மாக்களுக்கும் வேத ப்ராம்மணர்களுக்கும் பண்ணியிருக்கும் பெரிய தொண்டுகளை அடியோடு மறைத்துவிட்டு, அவர்கள் தமிழ் நாகரிகம் என்ற ஏதோ தனியாக இருந்த ஒன்றைப் போதித்த மாதிரியே எழுதுகிறார்கள். பேசுகிறார்கள்.

வரலாற்று ஆய்வாளர்களாக உண்மைகளைக் கூறும் பார்ப்பனர்கள் (விதி விலக்காகக்) கூறினாலும் எவ்வளவு ஆத்திரப்படுகிறார் பார்த்தீர்களா?

இந்த சங்கரமடம் ஏன்? எதற்காக? சங்கராச்சாரிகளின் பணி ஆன்மீகம் பரப்புவதா?

திராவிட இனவுணர்வை, அழிப்பதற்காகவா?

தமிழ்ப் பண்பாட்டைபற்றி உண்மைகளைக் கூறினால் அதைத் தடுப்பதுதான் எங்கள் வேலை என்பதுதானே!

கல்கியார் திரு(குதாள)ப்பணி இன்றும் தொடரு கிறதே ஏன்?

 புரிந்து கொள்ளுங்கள் சூத்திர அறிவு  ஜீவிகளே!

- ஊசி மிளகாய்

Monday, June 24, 2013

இதுதான் பாரத புண்ணிய கலாச்சாரமா?

- ஊசி மிளகாய்
பாரத நாடு பழம் பெரும் நாடு - நீர் அதன் புதல்வர் என்று பாடிய பாட்டு - புண்ணிய பூமி, ஞான பூமி, என்று தனக்குத் தானே புகழ்மாலை சூட்டிக் கொண்டுள்ள நம் நாட்டில் வாழும் மனிதர்கள் எவ்வளவு கேவலமான மனிதர்களாக - ஏன் மனசாட்சியே இல்லாத மனித மிருகங்களாக வாழுகின்றனர் என்பதற்கு நேற்றும் இன்றும் தொலைக்காட்சி, ஊடகங்கள் - ஏடுகளில் வருகின்ற நெஞ்சை உலுக்கும் செய்திகளாக வருவன எல்லாம் செந்தேள் கொட்டுவதாக அல்லவா இருக்கின்றன!
உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் உள்ள கேதார்நாத், பத்திரிநாத் போன்ற இடங்களுக்கு புண்ணிய புனித யாத்திரை கடவுள் அருள் கிட்டும்; தெய்வத் தின் கிருபையை மொத்தமாகச் சம்பாதித்து புண்ணியத்தை பிக்செட் டெப்பாசிட்டில் போட்டு மோட்சத்தில் முன் இடம் பிடிக்கலாம் என்று  பக்தர்கள் நம் நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் சென்றனர். பரிதாபத் திற்குரிய நிலையில் சுமார் ஒரு லட்சம் பேர்கள் என்றால் இதில் - கடும் மழை, வெள்ளம் - இமாலய சுனாமி காரணமாக திடீர் வெள்ளத்தில் அடித்துச் சென்றோர், காணாமற் போனவர்கள் சுமார் 13 ஆயிரத்திற்கு மேல் இருக்கக் கூடும் என்ற சோகச் செய்தி - நம் போன்ற நாத்திகர்கள் உட்பட அனைவரையும் நெஞ்சுருகச் செய்கிறது!
எஞ்சிய மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவரவர் வீடு திரும்பி, கதறி பதறிடும் உற்றார் உறவினருடன் மீண்டும் சந்தித்து, நிம்மதியான வாழ்வைப் பெற வேண்டுமே என்று நாம் கவலைப்படுகிறோம்.
தமிழ்நாட்டின் ஒரு பெண்மணி - கவளம் சோறுகூட கிடைக்காமல் பட்டினியால் உயிர் விட்டார்; வேறு வழி இன்றி என்ற செய்தி நம் உள்ளத்தில் இரத்தக் கண்ணீர் வழியும்படிச் செய்துள்ளது!
நாடே - ஏன் உலகமே திரண்டு இச்சோகத் திலிருந்து பாதிக்கப்பட்ட அம்மக்களை - பக்தர்களை - காப்பாற்றிட வேண்டும் என்று விரும்புகின்றனர்!
ஏராளமான நிதி உதவிகளும் நிவாரணப் பணிகளுக்கு பல தரப்பிலிருந்தும் அளிக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட ஒரு பரிதாபச் சூழலில் அங்கிருந்து வரும் சில செய்திகள் - இப்படியும் பணத்தாசை பிடித்த மனிதத்தைக் கொன்ற - கொல்லுகின்ற மனித உரு மிருகங்களா? என்று வேதனையும் வெட்கமும் படக் கூடிய நிலை உள்ளதாக அல்லவா இருக்கிறது!
வெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள், மீட்புக் குழுவினர் வருகைக்காகக் காத்திருக் கின்றனர். அவர்களது சொத்துக்கள் மற்றும் கொண்டு வந்த பொருள்கள் எல்லாம் பறி போன நிலையில், உயிரோடு திரும்பினோமே என்று அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் அவர்களை தண்ணீர்த் தாகத்துடனும் கடும் பசியுடனும் ஜீவ மரணப் போராட்டம் நடத்திடும் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் அங்கு தற்காலிகக் கடைகள் வைத்திருக்கும் சிலர்; தங்களது பேராசை விஸ்வரூபம் எடுத்து ஆடுவதுபோல,
ஒரு பரோட்டா    - 250 ரூபாய்
ஒரு பாட்டில் தண்ணீர்    -    200 ரூபாய்
ஒரு சிறிய சிப்ஸ் பாக்கெட்    -    100 ரூபாய்
ஒரு சிறிய சப்பாத்தி    -    150 ரூபாய்
ஒரு சிறிய ரொட்டி (சிலைஸ்)    - 100 ரூபாய்
ஒரு சிறிய கப் சாதம்    - 40 ரூபாய்
என்று விற்பதைவிட, வெட்கப்படத் தகுந்த வேதனை வேறு உண்டா?
மனிதம் இவர்களிடத்தில் மரித்தே விட்டதோ!
இப்படி மனசாட்சியைக் கொன்று சம்பாதிக் கும் பணத்தை இவர்களுடன் சேர்த்துப் புதைக் கப் போகிறார்களா? எரிக்கப் போகிறார்களா?
பக்தி வியாபாரம் என்ற பெயரால் சுரண்டலை ஒரு புறம்; மறுபுறம் இப்படி செத்த பிணங்களைத் தான் கழுகுகள் கொத்தித் தின்கின்றன.
உயிரோடு உள்ளவர்களை - இந்தச் சுயநலப் பேராசைக் கழுகுகள் குத்திக் குத்தி உயிரையும் போக்க அனுமதிக்கலாமா? இவர்களைவிட அந்தப் பிணந் தின்னிக் கழுகுகள் மேலானவை அல்லவா!
பாரதக் கலாச்சாரமாம்! வெங்காயமாம்!
கடவுளுக்கு,
அவதாரங்களுக்கு
முனிபுங்கவர்களுக்கு
காவிச் சாமியார்களுக்கு
கோயில்களுக்கு பஞ்சமே இல்லை!
அன்றாடம் கோடிக்கணக்கில் வசூல்களும் கூட? கோயில் உண்டியல்களுக்குப் பஞ்சமில் லாத நாடு அல்லவோ இது! பூமியின் பொது ஒழுக்கமோ எவ்வளவு சீர்கேடடைந்து விட்டது பார்த்தீர்களா?
பக்தி வந்ததே தவிர,
மனிதநேயம் மறைந்து விட்டதே!
இது நாடா? உயிருடன் சக மனிதர்களைக் கொத்தித் தின்னும் மனிதக் கழுகுகள் உலவும் காடா?

Friday, June 14, 2013

ஆர்.எஸ்.எஸ். என்ற சத்திய கீர்த்திகளைப் புரிந்துகொள்வீர்!

- ஊசி மிளகாய்
பா.ஜ.க. என்ற பாரதீய ஜனதா கட்சிக்கு வயது 33. ஆம்; பழைய பாரதீய ஜனசங்கம் - ஷியாம் பிரசாத் முக்கர்ஜி - தீனதயாள் உபாத்தியாயா போன்ற வர்களால் உருவாக்கப்பட்ட அந்த அமைப்பு முடிந்து, புதிய அரசியல் கட்சியாக அவதரித்தது பா.ஜ.க. 1980 இல்!
இந்தக் கட்சி 13 நாள் ஆட்சியை ஒரு கட்சி துணையோடு வாஜ்பேயி அவர்கள் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்து, அதன் ஆயுள் அற்பாயுளாக முடிந்தவுடன், அவர்கள் ஒரு உறுதியான முடிவுக்கு வந்தனர்.
இனி கூட்டணிதான்; வருகின்ற கட்சிகளையெல்லாம் இழுத்துப் போட்டு கூட்டணி அமைத்தால், மாநிலக் கட்சி களின்மூலம் வெற்றிபெற டில்லிக்கு வருபவர்களை நாம் கூட்டணிமூலம் சுவீகரித்துக்கொள்ளலாம்; அப்போது ஆட்சி நீடிக்கும் என்று முடிவு எடுத்து அதன்படி நாட்டின் பல முக்கிய மாநிலக் கட்சிகளையெல்லாம் ஒன்று திரட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (சூனுஹ) என்று உருவாக்கி ஒரு பத்தாண்டு காலம் ஆட்சி செய்தனர்.
அப்போதும் சரி, இப்போதும் சரி, ஏன் எப்போதும்கூட, தங்களை பா.ஜ.க. ஒரு வித்தியாசமான கட்சி என்று கூறிக் கொள்வதுண்டு. அதற்கு உண்மையான பொருள் என்ன தெரியுமா?
எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஒரே ஒருவர்தான் தலைவர் என்று இருப்பார்; ஆனால், பா.ஜ.க.வோ அப்படி அல்ல; இதற்கு வெளிப்பார்வை தலைவர்; உள்ளே இருந்து ஆட்டிப் படைத்து அரசியல் நடத்திடுவது ஆர்.எஸ்.எஸ். என்ற ராஷ்டிர சுயம் சேவக் அமைப்புதான்!
அதுதான் இந்த அரசியல் கட்சியின் மூக்கணாங்கயிறு! அது என்னென்ன கட்டளை இடுகிறதோ அதன்படிதான் காய்கள் நகர்த்தப்படும்.
ஆட்சியை பா.ஜ.க. பிடித்தால், அதில் யார்? யார்? அமைச்சர்களாக இருக்க வேண்டும்; எந்தெந்த இலாகாக்கள் யார் யாருக்கு அளிக்கப்படல் வேண்டும் என்பதை நிர்ணயிப்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமைதான்!
இவ்வளவும் செய்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ். தன்னுடையது ஒரு அரசியல் கட்சி அல்ல; கலாச்சார அமைப்பு என்று கூசாமல் பொய் கூறும்.
பா.ஜ.க.விற்கு வேலை செய்வதே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தால் தான் அமைச்சரவையில் பதவியேற்பதற்கு முக்கிய தகுதி - யோக்கியதாம்சம் என்பதெல்லாம் உண்டு.
என்றாலும், தங்களுக்கும், அரசி யலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் கூறிடுவர்!
அத்வானியை, அவர் பாகிஸ்தான் சென்று திரும்பிய நிலையில், முகமது அலி ஜின்னாவைப் புகழ்ந்தார் என்பதற்காக, அவரது பொறுப்புகளிலிருந்து விலகும் அழுத்தத்தைத் கொடுத்தவர்கள் யார்? ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தானே!
உலகறிந்த உண்மையல்லவா அது?
பா.ஜ.க.வின் தலைமையில் யார் இருப்பது என்பதுகூட ஆர்.எஸ். தலைமைப்பீடம்தானே நிர்ணயிக்கிறது?
அது நிதின் கட்காரியாக இருந் தாலும், ராஜ்நாத்சிங்காக இருந்தாலும், மெயின் சுவிட்ச் ஆர்.எஸ்.எஸ். மூலம்தான் தலைவர்களின் செயல்பாடு உள்ளது என்பதை ஏன் மறைக்க வேண்டும்?
இரண்டு நாள்களுக்குமுன் அத் வானி கொளுத்திப் போட்ட அதிர் வெடியை, புஸ்வாணம் ஆக்கியது ஆர்.எஸ்.எஸ். அல்லவா?
அத்வானிகளால் ஆர்.எஸ்.எசை மீற முடியாதே!
இப்படி ஒரு அரசியல் கூத்து. இவர்களை நம்பினால் பொய் ராஜ்ஜியம்தானே உருவாகும்?
ஒப்பனையே உன் பெயர்தான் அரசியலா?


 
 
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...