Showing posts with label நரேந்திர மோடி. Show all posts
Showing posts with label நரேந்திர மோடி. Show all posts

Friday, July 3, 2015

பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்

பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்

குஜராத் கலவரம் - 1999ல் இந்திய விமானம் கடத்தப்பட்ட விவகாரம்
பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்

காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூலை 4_ 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக்கலவரம் நடைபெற்றது இதற்கு  அன்று முதல்வராக இருந்த மோடி பொறுப் பேற்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் கூறியதாக  ரா உளவுத்துறை முன்னாள் அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.துலாத் செய்தி தொலைக்காட்சி யில் நடந்த நேர்காணலில் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக மோடி விளக்கம் தரவேண்டும் என்று காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்கட்சிகள்  குர லெழுப்பியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய்குமார் முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் வார்த்தைகளை மதிப்பவர் என்றால், பிரதமர் மோடி குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க வேண் டும் என்று கூறினார்.
காங்கிரஸ்  கட்சியின் மற்றொரு செய்தி தொடர் பாளர் டாம் வடக்கன் 1999ஆம் ஆண்டு இந்திய விமானம் கடத்தப்பட்ட தற்கு தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததற்காகவும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு சாதகமாக நடந்து கொண்டதற்காக வும் பா.ஜ.க.வும் பிரதமர் மோடியும் நாட்டு மக்களி டம் நிபந்தனையற்ற மன் னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
ரா உளவுத்துறை அமைப்பின் முன்னாள் தலைவர் தன்னுடைய பதவிக்கால நினைவுகள் என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூல் தொடர்பாக இந்தி தொலைக்காட்சி ஒன்று அவரிடம் நேர் காணல்  நடத்தியது. அதில் பல திடுக்கிடும் உண்மை களை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
குஜராத் கலவரம்
2002-ஆம் ஆண்டு 27 பிப்ரவரி அன்று, அயோத்தி யிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி தொடர்வண்டி சில சமூக விரோதிகளால் தீவைத்து எரிக்கப்பட்டது  இதில் அய்ம்பதிற்கும் மேற்பட் டோர் மரணமடைந்தனர். பிரச்சினைக்குரிய இந்தச் சம்பவம் பெரும் கலவ ரத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் மாநில அரசு தடுப்பு நடவடிக்கை எது வும் எடுக்காமல் எரிந்த தொடர்வண்டிப் பெட் டியை கழற்றி தொடர் வண்டி மீண்டும் பயணம் செய்ய அனுமதித்தது. இந்தி செய்தி பத்திரிகை ஒன்று மோடி அரசின் இந்தச் சம்பவம் கலவ ரத்தை குஜராத் முழுவதும் பரப்பும் சூழ்ச்சியாக அமைந் தது என்று எழுதியி ருந்தது. அதுபோலவே அந்த வண்டி சென்ற ஒவ்வொரு ஊரிலும் கலவரம் வெடித்தது. அந்த தொடர்வண்டிக்கு எந்த ஒரு பாதுகாப்பும் அளிக் காமல் மோடி அரசின் கீழ் இயங்கும் காவல்துறை வேடிக்கை பார்த்தது. அந்த தொடர்வண்டி வடோதரா சென்றடைந்ததும் அங்கு கூடியிருந்த இந்து அமைப்பைச் சேர்ந்தவர் கள் ரயிலில் வந்தவர்கள் அனைவரையும் தாக்க ஆரம்பித்தனர். இதில் 4-பேர் மரணமடைந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் இந்துக்கள் ஆவர். இந்த நிலையில் மதக்கலவரம் குஜராத் முழுவதும் பரவியது. அகமதாபாத், சூரத் என பல இடங்களில் இஸ்லாமி யர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டனர்.
குழந்தைகளை தீயில் எரித்தனர்
இது குறித்து ஆஜ் தக் தொலைக்காட்சியும், தெஹல்காவும் இணைந்து நடத்திய புலன் விசார ணையில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த குழந்தையை தீயில் தூக்கி போட்டு எரித்ததையும், இவைகளுடன் முஸ்லீம் பெண்களை அநியாயமாக கூட்டு வன்புணர்வு செய்த கலவரக் காரர்களுக்கும், அகமதா பாத்தில் உள்ள நரோடா எனும் இடத்தில சுமார் எழுபது பேர்களை கொன்ற பா.ஜ.க தலைவ ருக்கு மோடி ஆதரவு தெரிவித்ததையும் அவரது அமைச்சர் பாதுகாப்பு அளித்ததையும் பகிரங் கமாக வெளிப்படுத்தியது.
மேலும் கலவரக்காரர் கள் முஸ்லிம்களை எவ் வாறு திட்டமிட்டு இன அழிப்பு செய்தார்கள் என்று குஜராத் பெண் அமைச்சர் ஒருவரும் பஜ் ரங்தள் தலைவர் ஒரு வரும் பேசிய காணொளி வாக்குமூலம்  நாடு முழு வதும் பரபரப்புக்குள்ளா கியது.  இந்தக்கலவரத்தில் 3000 முஸ்லீம்கள் கொல் லப்பட்டனர். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஜாவேத் ஜாவ்ரியும் அடங்குவர். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தக் கலவரம் தொடர்பான அனைவரும் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட காவல் துறை முன்னிலையில் 3 இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்துக் கொலைசெய்த பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர்,  சாட்சிகள் யாரும் இல்லை என்ற காரணத் தால் விடுதலை செய்யப் பட்டனர்.
கலவரத்திற்கு மோடி  காரணம் - வாஜ்பாய் வருத்தம்
இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் ஆட்சி யாளர்களும் சேர்ந்து நடத்திய இந்தக் கொடூரச் சம்பவம் அனைத்தும் மோடி அரசுக்குத் தெரிந்தே நடைபெற்றது என்றும் மோடி தனது அதிகாரத் தில் உள்ள காவல் துறையை இயங்க விடாமல் செய்தார் என்றும் குற்றச் சாட்டுயுள்ளது.  இந்தக் கலவரம் குறித்து இதுவரை மோடி எந்த ஒரு பதிலும் கூறாமல் மவுனம் சாதித்து வருகிறார். இந்தக் கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அப்போதைய பிரதமர் அடல்பிகாரி வாஜ் பாய், குஜராத் கலவரத் திற்கு மோடி அரசே கார ணம் என்று கூறி வருத்தப் பட்டார் என்று அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்த போது  கலவரம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிந்தும் குஜராத மாநில அரசு தடுப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை, மேலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பல அரசியல்வாதி கள் நேரடியாக இந்தக் கலவரத்தில் தொடர்புடை யவர்களாக இருந்தனர். இதைக் கட்டுப்படுத்த இயலாமல் போனது எங் களது மிகப்பெரிய தவறு என்று வாஜ்பாய் வருத்தம் தெரிவித்தார். அப்போது குற்ற உணர்வையும், வருத்தத்தையும் அவரது முகத்தில் காண முடிந்தது என பதிலளித்தார்.
கந்தகார் விமான கடத்தல் 1999ஆ-ம் ஆண்டில் கந்த கார் விமான கடத்தல் தொடர்பாக கருத்து தெரிவித்தபோது அப்போ தைய வாஜ்பாய் அரசு  இந்திய விமானத்தில் கடத்தப்பட்ட பயணிகளை விடுவிக்க மூன்று தீவிர வாதிகளை விடுதலை செய்ய முடிவு செய்தது. மேலும் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானத்தை மீட்க நட வடிக்கை எடுக்க நல்ல வாய்ப்பிருந்த நிலையில் மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக் காமல் அமைதியாக இருந்து விட்டது. அமிர் தசரஸ் விமான நிலை யத்தில் பயணிகளை மீட்க இந்திய கமாண்டோ பிரிவினர் தயாராக இருந் தனர். ஆனால் மத்திய அரசின் மவுனம் காரண மாக சந்தேகமடைந்த தீவிரவாதிகள் விமானத்தை பாகிஸ்தானில் உள்ள லாகூர் அதன்பிறகு துபாய் கொண்டு சென்று இறுதி யில் கந்தகாரில் தரை யிறக்கினார்கள்.  மத்திய அரசின் இந்த  நடவ டிக்கை மிகவும் மோசமா னது  என்று அப்போதைய ஜம்மு காஷ்மீர் முதல் அமைச்சர் பரூக் அப் துல்லா பதவி விலகப்  போவதாக கூறினார்.  எட்டு நாள்களுக்குப் பிறகு கந்தகாரில் இருந்த விமானம் மற்றும் 180-க்கும் மேற்பட்ட பயணிகள் விடு விக்கப்பட்டனர்.
பயணி களை விடுவிக்க 3 தீவிர வாதிகளை மத்திய அரசு விடுதலை செய்தது, என்று அந்த நூலில் குறிப்பிட் டுள்ளார் இது தொடர் பான கேள்விக்கு பதில ளித்த போது கூறியதாவது: விமானம் டிசம்பர் 24-ஆம் தேதி கடத்தப்பட்டபோது, அரசு மிகப்பெரிய தவறு செய்து விட்டது,  விமா னம் அமிர்தசரஸில் நிறுத் தப்பட்டபோது அங்கி ருந்து விமானத்தை வெளியே கொண்டுசெல்வதை தடுக்க உடனடியாக முடிவு எடுக்கப்படவில்லை. விமா னம் கடத்தப்பட்டதை தொடர்ந்து உடனடியாக முடிவு எடுக்க அரசுத் தரப்பில் யாரும் முயற்சி செய்யவில்லை.  விமா னத்தை மீட்க தயாராக இருந்த பஞ்சாப் மாநில காவல்துறையின ருக்கு எந்த ஓர் ஆணை யும் வழங்கப்படவில்லை. மத்திய அரசின் இந்தச் செயல்களால் இந்தியாவை விட்டு விமானம் பறந்து சென்றுவிட்டது. மத்திய அரசு உடனடியாக செயல் பட்டிருந்தால் நமது நாட் டிலேயே இந்தப் பிரச் சினையை முடிவிற்கு கொண்டு வந்து பயணி களை மீட்டிருக்கலாம் என்று கூறினார். தீவிரவாதியின் மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்   பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன்  தலைவர் சையது சலா ஹுதீன், அப்போது அய்..பி. உளவு அமைப்பின் தலை வராக இருந்த கே.எம்.சிங் ரகசியமாகச் சந்தித்தார்.
அந்தச் சந்திப்பின்போது தனது மகன் ஷயத் அப் துல்வாகித்திற்கு மருத் துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருமாறு கூறி னார். அதைத் தொடர்ந்து, முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லாவை கே.எம்.சிங் சந்தித்தார்.   ஷயத் அப்துல் வாகித் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது.  இந்த விவகாரம் அனைத் தும் அப்போதைய வாஜ் பாய் அரசுக்குத் தெரிந்தே நடந்தது என்று அந்த நூலில் எழுதியுள்ளார்.
மேலும் தற்போது ஜம்முகாஷ்மீரில் பாஜக கட்சியுடன் கூட்டணி ஆட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் முஃப்திமுகமது வின் மகள்  மெஹ்பூபா வுக்கு ஹிஸ்புல் முஜாஹி தீன் அமைப்புடன் தொடர் புகள் இருந்தன என்று எ.எஸ்.துலாத் தெரிவித்தார்.
ரா அமைப்பின் தலை வர் இந்த தொலைகாட்சி நேர்காணல் மற்றும் நூல் மூலம் முந்தைய பாஜக அரசு தீவிரவாதிகளுடன் இணக்கமாக இருந்தது மற்றும் கலவரத்திற்கு முக்கிய காரணமாக இருந்த  விவகா ரங்கள் நிரூபணமாகி யுள்ளன.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, February 23, 2015

திருமண வீடு - சாவு வீட்டில்கூட - சந்திக்க மறுக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் வடநாட்டைப் பார்க்கட்டும்!

திருமண வீடு - சாவு வீட்டில்கூட - சந்திக்க மறுக்கும்

தமிழ்நாட்டுத் தலைவர்கள் வடநாட்டைப் பார்க்கட்டும்!

பிரதமர் மோடியும் - லாலுவும் - முலாயமும் கூடிக் குலவும் காட்சியைப் பார்த்த பிறகாவது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் புதிய நாகரிகத்தை வளர்க்கட்டும்



வடநாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலை மறந்து ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அன்பு பாராட்டி அளவளாவும் நாகரிகத்தைப் பார்க்க முடிகிறது; அதே நேரத்தில் துக்க வீட்டில்கூட ஒருவரை ஒருவர் சந்திக்க மறுக்கும். தயங்கும் நிலை அல்லவா இங்கு இருக்கிறது. உ.பி. திருமணச் சடங்கு ஒன்றில் பிரதமர் மோடியும், லாலு பிரசாத்தும், முலாயம்சிங் யாதவும் கூடி மகிழ்கின்றனர். வடநாட்டில் நிலவும் இந்த நனி நாகரிகத்தை தமிழ்நாட்டின் தலைவர்களும், பிரமுகர்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:

தமிழ்நாடும் தென் மாநிலங்களும் மிகவும் பண்பட்டவை நனி நாகரிகம் படைத்தவை. வடநாட்டவர்களைவிட பல துறைகளில் முன்னேறியவர்கள் என்று பெருமைபேசி மகிழுபவர்கள் என்ற நிலை அரசியல் கட்சிகளின் தவறான அணுகுமுறையால் ஒரு கட்சித் தலைவரோ, அல்லது வேறு பொறுப்பாளர்களோ, திருமணம், வரவேற்பு மற்றும் துக்க, இரங்கல் நிகழ்ச்சிகளில் கூட ஒருவரை மற்றொருவர் சந்திப்பது, குறைந்தபட்ச மரியாதையை, விசாரிப்புகளை ஒருவருக்கொருவர் இன்முகத்தோடு பரிமாறிக் கொள்ளுதல் போன்றவைகூட, - காணாமற் போனவையாக ஆகி விட்டன! இது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய கூடா ஒழுக்கம் ஆகும்!

தலைவர்களே, வடநாட்டைப் பாருங்கள்!

வடநாட்டைப் பார்த்து தமிழ்நாட்டவர் கற்றுக்கொள்ளும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் எவ்வளவு கடுமையாக கட்சித் தலைவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ பேசித் தாக்கிக் கொண்டாலும் மத்திய அரங்கம் (Central Hall Parliament) என்ற நாடாளுமன்ற அரங்கில் நுழையும்போது, தோள் மேல் கைபோட்டு, நட்புறவும் நயத்தக்க நனி நாகரிகமும் பொங்கி வழிவது போல் பேசிக் கொள்ளும் நடைமுறை வெகு சர்வ சாதாரணம் ஆனால் - தமிழ்நாட்டில்....? இந்நிலையை மாற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நடப்பது என்ன?

சட்டமன்றம் கூடுகிற நிலையில், ஒருவரைப் பார்த்து மற்றொரு கட்சியினர் வணக்கம் கூறும்போது மறுபுறம் அதற்கு பதில் வணக்கத்தை புன்னகையோடு கூறும் நிலைகூட அருகிப் போய் விட்ட அவலம் உள்ளது!

தலைவர்கள் எதிர்பாராமல், ரயில் நிலையம், விமான நிலையம் - விமானப் பயணம் போன்றவைகளில் அடுத்தடுத்த பகுதிகளில் - ஒரே பெட்டியில் - பயணம் செய்யும்போதுகூட, ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து விடக் கூடாது என்று ஓடோடி அறைக் கதவைச் சாத்திக் கொள்வது, அல்லது சந்திப்பைத் தவிர்க்க இரயில் நிற்பதற்கு முன்பேகூட குதித்து ஓடுவதுபோல கீழே இறங்கி குடுகுடுவென்று காரில் ஏறிக் கதவை அடைத்துக் கொள்வது எல்லாம் கசப்பான நிகழ்வுகள் அல்லவா!

பிறந்த நாளிலாவது வாழ்த்து கூறக் கூடாதா?

திராவிடர் இயக்கத்தின் பிறப்புக்குப் பின் இந்நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதனை நாம் வெட்கத்தோடும், வேதனையோடும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

எவ்வளவு கருத்து வேறுபாடு, கொள்கை மாறுபாடு இருந்தாலும், பிறந்த நாள்களுக்கு வாழ்த்து அனுப்பியோ; நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறுவதோ, மனித நேயத்தையும், மக்கள் பண்பையும் வளர்த்து, தொண்டர்கள் மத்தியில் வெறுப்புக் குறைய, அல்லது மறைய வாய்ப்பை ஏற்படுத்தும்.

அந்தக் காலத்துத் தலைவர்களின் அன்பும், பண்பும் அகிலம் அறிந்தவை. (ஒரு பெரிய புத்தகமே எழுதலாம்).

பிரதமர் மோடி - லாலு - முலாயம் - சந்திப்பும் அளவளாவலும்
நேற்று (22.2.2015) ஒரு படம் பல நாளேடுகளில் வந்துள்ளது.

உ.பி. மாநிலத்தில் ஒரு ஊரில் (சைபை) திருமணச் சடங்கு விழா ஒன்று.

லாலு பிரசாத் மகளுக்கும், முலாயம் சிங் பேரனுக்கும் மணவிழா; அதில் பிரதமர் மோடி சென்று ஒரு மணி நேரம் - எதிரும் புதிருமாக இருக்கும் தலைவர்களுடன் - கலகலப்பாக சிரித்துப் பேசி மகிழ்ந்துள்ள செய்தி எவ்வளவு வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க, பின்பற்றப்பட வேண்டிய முறை!

பிரதமரைச் சந்தித்த கெஜ்ரிவால் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தேர்தல் முடிந்த நிலையில் பிரதமரைச் சந்திக்கச் சென்றபோது அவரது இல்லத்தில் பிரதமர் மோடி அவர்கள் கெஜ்ரிவால் இருமல் - ஆஸ்தமாவிலிருந்து விடுபட தனது மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்தி உதவுவதாகக் கூறி, தமது பண்பைக் காட்டியுள்ளார்.

வடநாட்டுத் தலைவர்கள் பலரிடமும் நான் பழகியுள்ளேன் - எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகுபவர்கள் அவர்கள்.

தமிழ்நாட்டில் தான் இப்படி ஒரு வெறுக்கத்தக்க நோய் எப்படியோ கடந்த 30 ஆண்டுகளாகப் பரவி விட்டது. யார்மீதும் குற்றம் சுமத்தி புண்ணைக் குடைய விரும்பவில்லை நாம்.

தமிழர்களை உலக அரங்கில் உயர்த்தும்

நம் நாட்டில் கட்சி, கொள்கை வேறுபாடுகளைத் தள்ளி வைத்து (தற்காலிகமாக) பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளில் தயங்காமல் சந்தித்து அன்புடனும், பண்புடனும் தலைவர்கள், பொறுப்பாளர்கள் நடத்து கொள்ளுவது தமிழர்களை உலக அரங்கில் உயர்த்திட, திராவிடத்திற்கு ஏற்றம் தேடிடச் செய்ய அணுகுமுறை மாற்றம் அவசரம் அவசியம் என்று கனிவுடன் வேண்டுகோளாக வைக்கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

23-02-2015

Saturday, January 3, 2015

தீவிரவாத ஒத்திகைக்குக் கிடைத்தவர்கள் முஸ்லீம்கள் தானா?


இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக இந்துத்துவா ஆட்சி என்று அறிவிக்கவில்லையே தவிர, மற்றபடி பிஜேபியும் சரி, அதன் சங்பரிவாரங்களும் சரி ஓர் இந்து ஆட்சி இந்தியாவில் அமைந்துவிட்டதாகவே கருதி, ஆட்டம் போட ஆரம்பித்து விட்டனர்!

இந்த உண்மை அம்மணமாகத் தெரிந்திருந்தும் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் சீப்பை ஒளிய வைத்து கலியாணத்தை நிறுத்துவது என்பது போல நடந்து கொள்வது மிகக் கேவலமான வெட்கக் கேடாகும்.

ஊடகங்கள் உயர் ஜாதி பார்ப்பனர்கள் கைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளிலும் குவிந்து கிடப்பதால் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியே!

ஊடகங்களில் பெரும்பாலும் பணியாற்றுபவர் களாகப் பார்ப்பனர்களாகவே இருக்கின்ற காரணத்தால் இந்துத்துவாவைத் தூக்கிப் பிடிக்கத்தானே செய் வார்கள். உண்மையைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு அதன்மீது பொய்களான குரோட்டன்ஸ்களை வளர்க்கவே செய்வார்கள். அதுதான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

பிஜேபியில் ஏதோ அனாமதேயங்கள் அல்ல; பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திரமோடியே எப்படி நடந்து கொண்டு வருகிறார் என்பதைக் கவனித்தால் ஒளிவு மறைவு என்பதை எல்லாம் கடந்து, பச்சையாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள மதச் சார்பின்மையைத் தூக்கிப் போட்டு மிதித்து விட்டு, ஒளிந்திருந்த இந்துத்துவாவை ராஜ நடை போட வைத்து விட்டார்.
ஜப்பானுக்குச் சென்ற பிரதமர் நரேந்திரமோடி இந்தியர்கள் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் என்ன பேசினார்?

I brought Gita for gifting (the Japanese Emperor) I do not know what will happen in India after this. There may be a TV debate on this. Our secular friends will create ‘typhoon’ (storm).

ஜப்பான் நாட்டுப் பேரரசருக்கு கொடுக்கக் கீதையைக் கொண்டு   போன இந்தச் செய்தி இந்தியாவை அடைந்தால் அங்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. தொலைகாட்சிகளில் விவாதங்கள் அனல் பறக்கும்; எனது மதச் சார்பற்ற நண்பர்கள் புயலையே கிளப்புவார்கள் என்று பேசினார் என்றால் பார்த்துக் கொள்ளலாமே.

தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்பார்களே அதுபோலதான் செய்யும் தவறு என்ன என்று அவருக்கு மிக நன்றாகவே தெரியும்; இருந்தாலும் அவரைப் பீடித்து ஆட்டும் இந்துத்துவா வெறி அதனையும் கீழே தள்ளி மேலே எழுந்து நிற்கிறது. மதச் சார்பின்மை என்பதை எப்படியெல்லாம் எள்ளி நகையாடுகிறார். இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இவ்வளவுப் பச்சையான மதவெறியரைத் தேடினாலும் எளிதில் கிடைக்கப் போவதில்லை.
குஜராத் மாநிலத்தை இந்துத்துவாவின் பரிசோ தனைக் கூடமாக உருவாக்கினார். மத அடிப்படையில் மக்களைக் கூறு போட்டு, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். அதையே இந்தியா முழுமைக்கும் பரவலாக்கும் எண்ணம் நொடிதொறும், நொடிதொறும் அவரை உசுப்பி எழுப்பிக் கொண்டு இருக்கிறது. குஜராத்தில் அவரைத் தொடர்ந்து வந்த முதல் அமைச்சர் மோடிக்குச் சளைத்தவரல்ல என்பதைக் காட்டிக் கொண்டு இருக்கிறார்.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் தீவிர வாதிகளை எப்படி முறியடிப்பது என்பதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.

தீவிரவாதிகளாக நடித்தவர்கள் அத்தனைப் பேரும் முசுலிம் உடை அணிந்து, தலையில் குல்லாய் அணிந்து காணப்பட்டனர். அவர்கள் வன்முறையில் ஈடுபடுவது போல குஜராத் காவல்துறையால் ஒத்திகை நடத்தப் பட்டது.

வன்முறையில் ஈடுபடுவதுபற்றி பிஜேபி.யோ அல்லது சங்பரிவார்க் கும்பலா பேசுவது? பாபர் மசூதி இடிக்கப்பட்டதை விடவா அராஜகத்துக்கும் பயங்கர வாதத்துக்கும் நிர்வாண வன்முறைக்கும் இன்னொரு எடுத்துக் காட்டுத் தேவை?

மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் யார்? ஒரிசா சட்டப் பேரவை வளாகத்துக்குள்ளேயே புகுந்து வன்முறை வெறியாட்டம் போட்டவர்கள் யார்? காவி பயங்கரவாதம் என்ற புதுமொழியை அன்றைய உள்துறை அமைச்சர் புதிய பட்டத்தைச் சூட்ட வில்லையா?

விசுவ ஹிந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் பொது மக்களுக்குத் திரிசூலங்களை வழங்கி கிறித்தவர் களையும், முசுலீம்களையும் மதச் சார்பின்மை பேசும் இந்துக்களையும் குத்திக் கிழிக்கத் தூண்டிட வில்லையா?

அரியானா மாநிலத்தில் ஜாஜா பகுதியில் இறந்து போன பசுவின் தோலை உரித்ததற்காக அய்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த கொடியவர்களால் கொல்லப்படவில்லையா?

விசுவ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான கிரிராஜ் கிஷோர் என்பவர் பசுவின் உயிர் (அதுவும் செத்துப் போன) மனித உயிரைக் காட்டிலும் புனிதமானது என்று அப்போது கூறியது எவ்வளவுப் பெரிய காட்டுவிலங்காண்டித்தனம்!

ஏன்? காவல்துறை ஒத்திகை நடத்திக் கொண்டு இருக்கும் குஜராத்தில் நடக்காத வன்முறையா? அரச பயங்கரவாதமாக அல்லவா நடந்தது.

 முசுலிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்து அந்தக் கருவை நெருப்பில் தூக்கி எறிந்து வெறிக் கூச்சல் போட்டுக் கூத்தாடவில்லையா? அடுக்கிக் கொண்டே போகலாம்.

 ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலின் வன்முறையைப் பட்டியல் போட்டால் நாட்டில் காகிதங்கள் போதாது.

இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் தீவிர வாதத்தை முறியடிக்கும் பயிற்சிக்கான ஒத்திகைக்காக முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாக ஒப்பனை செய்து நிறுத்தியுள்ளனர்; இந்தியாவிற்கு இப்படி ஓர் ஆட்சியா? மகா மகா வெட்கக் கேடு!

Wednesday, February 19, 2014

மோடி ஸ்வாமிகளின் தனிமை உபதேசம்


இமாச்சல பிரதேசத்தில் பேசிய மோடி, தனக்கு குடும்ப வாழ்க்கை இல்லாததால், தான் ஊழல் செய்து பணம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், குடும்ப சூழல் இல்லாதவர் மட்டுமே,ஊழலை ஒழிக்க முடியும் என ஊழல் ஒழிப் புக்கு புதிய இலக்கணத்தை உதிர்த் துள்ளார் மோடி ஸ்வாமிகள்.

மோடி ஸ்வாமிகளிடம் சில கேள் விகளை கேட்கும் விரும்புகிறோம்.

1. ஊழலை ஒழிக்க குடும்ப ஸ்தர்களால் முடியாது என்பதால் தான், அத்வானியை பிரதமர் வேட் பாளராக பாஜக அறிவிக்கவில்லையா?

2. பிரதமர்  மட்டுமே முடிவு செய்து, ஊழலை ஒழிக்க முடியுமா?
 
3. ஏனைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், என அனைவரும் குடும்ப சூழல் இல் லாதவர்களாக இருக்க வேண்டுமா?

4.மோடி ஸ்வாமிகளின் கருத்தை, பாஜக ஏற்றுக் கொள்கிறதா?

5. இல்லற வாழ்க்கை இல்லாத வர்களுக்குத்தான் இம்முறை பாஜக சார்பில் வேட்பாளராக வாய்ப்பு தரப்படுமா?

6. அத்வானி, சுஸ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி  போன்றோர் இம்முறை வேட்பாளர்களாக போட் டியிடுவார்களா?

7. எந்த ஆய்வின் அடிப்படையில் மோடி ஸ்வாமிகள் இந்தக் கருத்தை உபதேசிக்கிறார்?

8. எனக்கு குடும்ப வாழ்க்கை கிடையாது, முதல்வர் பதவியில் மாத ஊதியமாக ஒரு ரூபாய் தான் பெறு கிறேன் எனக் கூறியவர் தான்,கடந்த பதினேழு ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றப் படிகளில் ஏறி வருகிறார். அதற்கு மோடி ஸ்வாமிகளின் விளக்கம் என்ன?

9. யோகேந்திர யாதவ் மோடி ஸ்வாமிகளிடம் கேட்ட கேள்வியான, அதானி  குழுமத்திற்கு அதிகப்படி யான சலுகைகள் அளிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதற்கு மோடி ஸ்வாமிகளின் பதில் என்ன?

அண்மையில் ஒரு திரைப் படத்தில் ஒரு வசனம் வரும். வெள் ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று வசனம் வரும். அது போலத்தான் இருக்கிறது மோடி ஸ்வாமிகளின் பேச்சு.

- குடந்தை கருணா

Monday, February 17, 2014

மோ"டீ"யில் பாசிசம்

- குடந்தையான்

தேநீருடன் அரட்டை என்கிற முறையில் இந்தியா முழுவதும் ஆயிரம் இடங்களில் தேநீர் கடைகளின் வாயிலாக மோடி பிரச்சாரம் துவக்கினார். ஆனால், தமிழ் நாட்டில் அதற்கு எந்தவித வரவேற்பும் இல்லை என டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் குடி அரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட் பாளர்கள் ஆங்காங்கே விவாதம் செய்வதைப்போல், இங்கேயும் அது போன்ற ஒன்றை தனியார் ஏஜென்சி மூலம் பாஜகவும் மோடியும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் செய்யத் துவங்கி உள்ளனர். இதற்கு யாரிடமிருந்து பணம் வருகிறது என்ற தகவலை பாஜகவும் சொல்வதில்லை; மற்றதற்கு எல்லாம், கேள்வி கேட்கும் ஊடகங்கள், இதைப் பற்றி எந்த கேள்வியும் கேட்பதும் இல்லை.

இந்த தேநீர் அரட்டையில், மோடியிடம் காணொலி மூலம் கேள்வி கேட்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், எந்த மாதிரியான கேள்வி கேட்கப்பட வேண் டும் என்பதை, அந்த கடையில் உள்ள பாஜகவினர் தேர்வு செய்த பின்னர் தான், கேட்க முடியும்.

இது மட்டுமல்ல; ஊடக நிருபர்கள், மோடியை சங்கடப்படுத்தும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்றும், மீறி கேட்பவர்கள் உரிய வகையில் கவனிக் கப்படுவர் என்றும், அத்தகையவர்களின் பெயர் களங்கப்படுத்தப்படும் என்றும் மிரட்டப்பட்டுள் ளார்கள் என மத்திய அமைச்சர் மனீஸ் திவாரி செய்தி வெளியிட்டுள்ளார்.

அண்மையில் வெண்டி டோனிகர் எழுதிய புத்தககம் இந்துக்கள்; ஒரு மாற்று வரலாறு எனும் ஆங்கில நூல் (Wendy doniger’s the hisdus an alternative history) பென்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்பட் டது. அந்த நூல் இந்துக்கள் மனதைப் புண்படுத்துவ தாக ஆர்ப்பாட்டம் செய்து, புத்தகத்தை திரும்பப் பெற வைத்துள்ளனர்.

மோடிக்கு எதிராக கட்டுரைகளை எழுதும் கட்டுரையாளர்கள், அந்த நிறுவனங்களிலிருந்து விலக்கப்பட்டு வருகின்றனர். வித்யா சுப்ரமணியன், சித்தார்த் வரதராஜன், சகரிகா கோஸ், நிகில்வாக்லே, ஹர்தோஸ் சிங் போல் என சிறந்த செய்தியாளர்கள், சிலர் நீக்கப்பட்டுள்ளனர்; சிலர் மிரட்டப்பட் டுள்ளனர்.

தங்களது கருத்துக்கு மாறான கருத்தை கூறுபவர் களுக்கு, பதில் கருத்து சொல்லாமல், அவர்களை தாக்குவது, கொல்வது என்பது ஆர்.எஸ்.எஸ். வழிமுறை. இந்த பாசிச முறையைத் தான் மோடியின் தேநீர் அரட்டையும் செய்து வருகிறது.

Friday, February 14, 2014

கேள்விக்கென்ன பதில்?


பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி எல்லோரையும் கேள்வி கேட் கிறார். ஆனால் மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தராமல் இருப்பது சாமர்த்தியம் என நினைக்கிறார். யோகேந்திர யாதவ், சமூக இயலாளர்; தற்போது ஒரு அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். சில கேள்விகளை தனது டிவிட்டர் வாயிலாக அவர் மோடியை நோக்கி, 10.2.2014 அன்று தொடுத்துள்ளார்.     

1. அதானி குழுமத்திற்கு, மோடி அரசில் நிறைய சலுகைகள் தரப்பட் டுள்ளன. மோடிக்கும், அதானி குழுமத்திற்கும் உள்ள உறவு என்ன?  

  2.  தற்போது மோடி மேற்கொள் ளும் கோடிக்கணக்கான ரூபாய் விளம் பர செலவுகளுக்கு யாரிடமிருந்து பணம் பெறப்பட்டது? இது குறித்து பிஜேபியிடம் வெளிப்படையான தன்மை இல்லையே?     

3. நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட பாபுலால் பொகாரியா இன்னமும் மோடியின் அமைச்சர வையில் நீடிக்கிறாரே.

மோடி எப்படி அரசியலில் குற்றவாளிகள் நுழை வதை தடுப்பேன் எனக் கூற முடியும்.    

 4. விவசாயிகள் தற்கொலை, குழந்தைகள் இறப்பு விகிதம், பள்ளி கல்வி தரம் இவற்றில் குஜராத் மாநி லம் பின் தங்கியுள்ளதே?  இந்த கேள்விகளுக்கெல்லாம், மோடியிடமிருந்து எந்த பதிலும் வரப் போவதில்லை.  2007ஆம் ஆண்டு ஆங்கிலத் தொலைக்காட்சியில் கரன் தபார் கேட்டகேள்விக்கு பதில் தர முடியாமல் மோடி வெளியேறினார்.

தற்போது, அகமதாபாத்தில் தேநீர் கடையினை உருவாக்கி, அதில் காணொலி காட்சி முறையினை மிகுந்த பொருட் செலவில் உருவாக்கி உள்ளார் மோடி. நாடு முழுவதும் பல இடங்களிலிருந்து அவரிடம் கேள்வி கேட்டு பதில் பெறலாம் என விளம்பர யுக்தியை புகுத்தியுள்ளார். இந்த முறையில் எந்த ஊரிலும் தேநீர் கடை யாரும் நடத்தவில்லை. மோடி போன்ற கார்ப்பரேட் ஏஜெண்டுகள் தான் இம்மாதிரி கடையை நடத்த முடியும் என்பது வேறு செய்தி. முதலில் யோகேந்திர யாதவ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லட் டும். பிறகு தேநீர் சாப்பிடலாம்.

- குடந்தையான்

Wednesday, February 12, 2014

மோடியின் நல்லிணக்க கார்ப்பரேட் கூட்டணியை இஸ்லாமியர்கள் நம்பி ஏமாற மாட்டார்கள்



அகமதாபாத், பிப். 12- நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதை கருத்தில் கொண்டு இஸ் லாமியர்கள் மீது அக்கறை யுள்ளவர் போல் மோடி கபட வேஷமிட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக சில சுயநலம் கொண்ட பணக் கார இஸ்லாமியர்கள் இயங்கி வருகின்றனர். இவர் களை ஒட்டு மொத்த இஸ்லா மியர்களும் நம்புவதற்கு தயாராக இல்லை. மோடியின் கார்ப்பரேட் கூட்டணியை அவ்வளவு எளிதாக நம்பி ஏமாற மாட்டோம் என்று குஜராத்தில் வாழும் இஸ்லா மிய மக்கள் தெரிவித் துள்ளனர்.

குஜராத்தில் பிப்.7ஆம் தேதி உம்மத் வர்த்தகக் கண் காட்சி மற்றும் வர்த்தகர்கள் மாநாடு துவங்கியது. குஜராத்தில் இப்படியொரு கண்காட்சி நடப்பது இதுவே முதன்முறையாகும். குஜராத் தில் தொழிலதிபராக இருக் கக்கூடிய ஜாபர் சரேஷ்வாலா என்பவர் இந்தக் கண் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந் தார். உள்நாடு மட்டுமன்றி துபாய் உள்ளிட்ட வெளி நாடுகளிலிருந்தும் பல நிறு வனங்கள் இந்தக் கண் காட்சியில் கலந்து கொள்ள வுள்ளதாக அறிவிக்கப் பட்டது. சமுதாயங்களுக் கிடையே நல்லிணக்க வர்த்தகம் என்ற மய்யக்கருத் தை அடிப்படையாகக் கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாக மாநாட்டு அமைப் பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மோடியின் நெருக்கத்தை பெறுவதற் காகவே இந்த மாநாடு நடத் தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த மாநாட்டின் மூலம் இந்து - முஸ்லிம் வர்த்தகர் களிடையே எவ்வித மாற்ற மும் ஏற்படப்போவதில் லை என்றும், 2002ஆம் ஆண்டு தாங்கள் (முஸ்லிம்) தாக்கப்பட்டதை மக்கள் மறக்கமாட்டோம்.
யார் இந்த ஜாபர்?

 இந்த மாநாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கக் கூடிய ஜாபர் சரேஷ்வாலா என்பவர் குஜராத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக உள்ளார். இவர் பர்சோலி மோட்டார்ஸ் என்ற பெயரில் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்களை விற்பனை செய்து வருகிறார். அதேசமயம், தொழிலில் பல்வேறு முறை கேடுகளில் அவர் ஈடுபட் டுள்ளார். இதனை இந்தியப் பங்குச்சந்தை வாரியமான செபி கண்டுபிடித்து, கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி,பர் சோலி கார்ப்பரே சன் லிமிடெட்டுக்கு வழங் கப்பட்ட அங்கீகாரத்தை தேசிய பங்குச்சந்தை வாரி யம் மற்றும் மும்பை பங்குச் சந்தை வாரியத்திலிருந்து ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த தகவல் வாட்ச்அவுட் இன்வெஸ்டார்ஸ் என்ற வலைதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

இதேசெய்தி, குஜராத் டெய்லி மற்றும் குஜராத் சமாச்சார் ஆகிய செய்தித் தாள்களில் மாநாடு துவங் கும் நாளன்று வெளியிடப் பட்டது.இப்படியொரு களங்கம் கொண்ட நபர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி, முஸ்லிம் களை பூரிப்பில் ஆழ்த்தும் வகையில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், இந்துக் களும், முஸ்லிம்களும் வளர்ச்சியின் இருசக்கரங்கள். முஸ்லிம்கள் பெரிய தொழில்களை கொண்டுள் ளனர். அவர்கள் மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளனர். முஸ்லிம் இளைஞர்களும், பெண் களும் மிகப்பெரிய திறமை யைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு பொருத்த மான தளம் வேண்டும்.

வேலையைத் தேடுவ தற்குப் பதிலாக பிறருக்கு வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய நிலைக்கு வர வேண் டும். நாட்டின் வளர்ச்சிக்கு ஒற்றுமை மிகவும் அவ சியம். முஸ்லிம் இளைஞர் களின் திறமையை வளர்க்க தனது அரசு உதவி செய்யும் என்று திடீர் கரிசனத்தோடு பேசியி ருக்கிறார்.

2002இல் மோடி


ஆனால், இதே மோடி கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மிகப்பெரிய கலவரத்தில் இஸ்லாமிய மக்கள் கொன்று குவிக்கப்பட்டு உறவுகளை, உயிர்களை இழந்த நேரத்தில் பேசியது வேதனையின் உச்சம். கலவரத்திற்குப் பிறகு மோடி நடத்திய கவுரவ் யாத்திரையின் போது, மெக்சானா மாவட்டத்தின் பகுசார்ச்சியில் 2002ஆம் ஆண்டு செப்.9ஆம் தேதி அவர் பேசியதாவது, சகோ தரர்களே, நிவாரண முகாம் களை நாம் தொடர வேண்டுமா? குழந்தைகளை உற்பத்தி செய்யும் மய்யங் களை நான் திறக்க வேண்டு மா? குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கடைப்பிடிப் பதன் மூலம் நாடு முன் னேற்றத்தை அடைய வேண்டும். நாம் அய்ந்து பேர், அவர்களோ 25! குஜராத் தில் குடும்பக் கட்டுப் பாட்டை அமல்படுத்த முடி யாதா? நம்முடைய வழியில் யார் தடை போடுவது? எந்த மதப்பிரிவு நம் வழியில் குறுக்கிடுகிறது? உதவிகள் ஏழைகளுக்குச் சென்று சேரா தது ஏன்? சிலர் குழந்தை களை உற்பத்தி செய்தால், அவர்களது பிள்ளைகள் சைக்கிளுக்கு பஞ்சர் போடு வதையே செய்வார்கள் என்று பேசி னார்.

அவரது தற்போதைய பேச்சைக் கேட்கும்போது, இஸ்லாமியர்கள் மீதான திடீர் கரிசனம் ஏன் என்று கேட்காமல் இருக்க முடிய வில்லை. இப்படியான ஒருவருடன் சேர்ந்துள்ள ஜாபர் போன்றோருக்கு, சிறுபான்மையினரின் கண் ணியமும், உறுதியும் புரியப் போவதில்லை .சிறுபான் மையினர்களின் கேள்வி களுக்கு அரசுகளால் ஒரு போதும் தீர்வு காணப்பட்ட தில்லை. மேலும், நாடாளு மன்ற ஜனநாயகம் என்பது முரண்பாடுகளை அதிகரிக்க மட்டுமே செய்திருக்கிறது. சில அரசியல் கட்சிகள் முதலாளிகளுக்கு ஆதரவாக வும், சில கட்சிகள் பெரும் பான்மையினருக்கு ஆதர வாகவும் உள்ளன. 2002ஆம் ஆண்டு மோடி பெரும்பான் மையினரின் உதவியுடன் சிறுபான்மையினரைக் கொன்றுகுவித்து வெற்றி கண்டார். இதுபோன்ற துரோகிகளை சரேஷ்வாலா போன்றோர் தூக்கிப் பிடித்து வருகின்றனர்.

மிகப்பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட இந்த மாநாட்டில், சொற்ப அளவி லான வர்த்தகர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இதற்கு காலியாக இருந்த நூற்றுக்கணக்கான இருக்கை கள் சாட்சி. மேலும், முஸ்லிம்களின் வர்த்தகக் கண்காட்சியை குஜராத்தில் ஏற்படுத்தி, தன்னை இஸ்லாமிய மக்கள் மீது அக் கறையுள்ளவனாகக் காட்டிக் கொள்ளும் மோடி மற்றும் அவரது கைக்கூலிகளாக மாறி வரும் ஜாபர் சரேஷ் வாலா போன்றோரின் கபட நாடகத்தையும், 2002ஆம் ஆண்டு அனுபவித்த வலி களையும் இஸ்லாமியர்கள் ஒருபோதும் மறக்கமாட் டார்கள் என்று குஜராத்தின் உண்மை என்ற இணைய தளம் தெரிவித்துள்ளது.

(நன்றி: தீக்கதிர் - 12.2.2014)

11 ரூபாய் முதல்வர்!

11 ரூபாய் முதல்வர்!
மோடி மோசடியை வெளுத்துவாங்கும் புதிய இணையதளம்
http://www.rs11.in/

குஜராத்தில் மோடி அரசு சார்பில் கடந்த டிசம்பர் மாதம் அரசின் இணையத்தில் உணவுப்பொருட்களுக்கான மானியம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்கிற அறிவிப்பு வெளிவந்தது. அதன் படி,  நாள் ஒன்றுக்கு ரூபாய் 10.80க்குள் வருமானம் இருப்பவர்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்கான அளவு என்று கருதப்பட்டு மானியத்தில் உணவுப்பொருள் பெற தகுதி உள்ளவர்கள் என்கிற குஜராத் மாநில அரசின் அறிவிப்பு வெளிவந்தது.
    இந்த அறிவிப்பின்மூலம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஏழை மக்களின் ஏழ்மையைக் கேலி செய்வதாக காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் கண்டித்ததும் விவாதங்கள் நடந்ததும் நாம் அறிந்தது.
    இது தொடர்பாக தற்போது புதிதாக  தொடங்கப்பட்டுள்ள www.rs11.in என்கிற இணையதளத்தில் நரேந்திர மோடியின் படத்துடன் கேள்வி பதில் பாணியில் கருத்துப்படம் வெளியாகி உள்ளது. நீங்கள் எந்த அளவில் பணக்காரன் என்பதை கேட்டு, மோடி அரசின் அளவுகோலின் படி, ”சிப்ஸ் பாக்கெட் ஒன்று வாங்க முடிந்தால் அவன் மிகப்பெரிய செலவாளி” என்றும், ”மாதம் ஒருமுறைக்குமேல் சிப்ஸ் தின்றால் அம்பானியுடன் தொடர்பில்லாதவர் என்று சொல்லிவிட முடியுமா?” என்று கேட்பதுடன், ”சிப்ஸ் தின்னும்போது குளிர்பானம் அருந்தினாலும், ஒரே நாளில் இரு வேளை உணவு உண்டாலும் குஜராத்திலேயே அவன்தான் பணக்காரன்” என்றும் கூறுவதாக உள்ளது.
    மேலும், அவ்விணையத்தில் குஜராத் மாநிலத்தில் உண்மையான வாழ்வாதார நிலை என்பது ரூ.11க்கு ஒரு பாக்கெட் நொறுக்குத்தீனி, ஒரு குவளை தேனீர், பெண்கள் தலையில் போடும் ரப்பர் பேண்ட் மட்டுமே வாங்க முடியும் என்றும், ரொட்டி குருமா, குளிருக்கு சால்வை, மருந்து மாத்திரைகள் என்று மற்ற அத்தியாவசியப்பொருட்கள் எதுவும் வாங்க முடியாது என்றும் விளக்கப்படத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
    குஜராத்தில் கடும் உழைப்பிற்குப் பிறகு என்னதான் பெற முடியும் என்றால் 250கிராம் சர்க்கரை, இரண்டு முட்டைகள், இரண்டு ரொட்டிகள், 3கி.மீ.தூரத்திற்கு பேருந்தில் பயணம் என்கிற அளவில்தான் முடியும். ஒரு கிலோ சர்க்கரை, ஆறு முட்டைகள், ஒரு முழு சாப்பாடு ஆகியவற்றை வாங்க முடியாது. கலுப்பூர் முதல் கன்கானியா ஏரி வரை 4 கி.மீ. கூட பயணம் செய்ய முடியாது என்பதுடன் அப்படி வாங்க முடியாத ஏழைகளை குஜராத்திலிருந்து விரட்டிவிடு என்கிற பாணியில், உண்மை குஜராத்தின் நிலையைச் சொல்லி நிறைவடைகிறது இணையத்தின் தகவல்.

Saturday, December 14, 2013

சொல்லுங்க மோடி சொல்லுங்க!




 - எஸ்.ஜி.ரமேஷ்பாபு

1. 2004 ஜூன் 15 அன்று அகமதாபாத் - காந்தி நகர் நெடுஞ்சாலையில் தீவிரவாதி என பட்டம் சூட்டி 19வயது இளம்பெண் இஷ்ரத் ஜகானை மற்ற நான்கு இளைஞர்களுடன் டி.ஐ.ஜி வன்சரா என்கவுண்டர் செய்தது சட்டபடி தவறு என 2009ல் அகமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், 2011ல் சி.பி.ஐ சிறப்பு புலனாய்வுக் குழு என்கவுண்டர் நாடகத்திற்கு முன்தினமே அவர்கள் கொல்லப்பட்டதை கண்டறிந்து வெளிகொண்டு வந்தது மோடிக்கு தெரியாதா?

2. 2005 நவம்பர் 23ஆம் தேதி பேருந்தில் பயணம் செய்த ஷொராபுதீன் அவரது மனைவி கவுசர்பீயும் குஜராத் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு, மூன்று தினங்கள் கழித்து அகமதாபாத் அருகே துப்பாக்கியால் துளைக்கப்பட்ட ஷொராபுதீன் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதுவும் சட்டவிரோத என்கவுண்டர்தான். பிறகு டிஜிபி வன்சரா கிராமத்தில் கவுசர்பீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டதும் மோடிக்கும் சம்பந்தம் இல்லையா?

3. இந்த என்கவுண்டர் படுகொலைகளை நடத்திய டிஜிபி வன்சரா இப்போது சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்து இந்த கொலைகளை முதல்வர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அனுமதி கொடுத்த பிறகுதான் செய்தோம் என சொன்னது மோடியின் லட்சணத்தை காட்டவில்லையா?

4. குஜராத் மாநிலம் பிரிக்கட்ட 1960 முதலே ஜவுளி, உரம், இரும்பு போன்றவை அங்கு பிரபலம். பிஜேபி கட்சியே துவக்கபடாத காலத்தில் துவக்கப்பட்ட குஜராத் மாநில பெட்ரோலிய கழகமும், மோடி பிறக்காததன் முன்பே துவக்கபட்ட அமுல் கம்பெனியும் குஜராத் வளர்ச்சியில் மக்களுக்கு சேவை செய்வதும், மோடியின் ஆட்சிகாலத்தில் புதுப்புது முதலாளிகள் வளர்ந்ததும், அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்ததும் யாருக்கும் தெரியாது என நினைக்கிறாரா மோடிஜி?

5. எஸ்ஸார், ரிலையன்ஸ், எல்.டி, போர்டு இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு அடுமாட்டு விலைக்கு தண்ணீர், மின்சரம், சாலை வசதி ஆகியவை கொடுக்கப்படுகிறது.

மோடிக்கு நெருக்கமான அம்பானி குழுமத்திற்கு 7500 கோடி மதிப்புள்ள 5 கோடி சதுர மீட்டர் நிலத்தை வெறும் 160 கோடிக்கு கொடுத்து கார்ப்பரேட் சேவை செய்ததும், அந்த இடத்தை அந்நிறுவனம் பிளாட் போட்டு விற்பனை செய்ததும் அனைவரும் அறிந்ததுதான். ஆக மோடியின் குஜராத் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான மாடல் என்பது சரிதானா?

6. இரண்டே ஆண்டுகளில் இப்படி பன்னாட்டு, உள்நாட்டு பெரும் முதலாளிகளுக்கு மோடி காட்டிய சட்டவிரோத சலுகைகளால் அங்குள்ள மக்களுக்கு சேரவேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் கஜானாவில் சேரவில்லை என மத்திய தணிக்கைக்குழு சுட்டிகாட்டியதை தீர்க்கதரிசியானமோடியின் கள்ள மவுனம் செரித்துவிடவில்லையா?

7. கடந்த 8 ஆண்டுகளில் குஜராத்துக்கு 87 ஆயிரத்து 800 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு பெற்றதாக மோடி புளுக, இல்லை இக்காலத்தில் வந்த முதலீடு வெறும் 720 கோடிதான் என அந்த புளுகு எட்டே நாளில் ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் வெளுத்ததை காவிக் கூட்டம் சொல்ல மறந்தது ஏன்?

 8. நர்மதா ஆற்றின் தண்ணீரையும், நிலத்தடி நீரையும் பெருமுதலாளிக்கு தாரை வார்க்கும் மோடி அரசை எதிர்த்து அங்கு விவசாயிகள் போராடுவதையும், அங்கு நடக்கும் விவசாயிகள் தற்கொலைகளையும் ஊடகங்கள் மூடி மறைப்பதும், பல லட்சம் விவசாயிகள் பலனடையும் சர்தார் சரோவர் அணை திட்டத்தை அமலாக்காமல் ஏமாற்றுவதை எழுதாமல் இருப்பதும் மோடி அரசின் விளம்பரங்களுக்காகதானே?

9. ஆண் பெண் விகிதாசாரத்தில் மிகவும் மோசமான இடத்தில் குஜராத் இருக்கிறது. 1000க்கு 919 பெண்களே உள்ளனர். ஊட்டசத்து குறைந்த பெண்கள் நிறைந்த மாநிலமும் இதுவே. இதற்கு மோடி சொன்ன காரணம் என்ன தெரியுமா? “நகர் புறத்து பெண்கள் சாப்பாட்டைவிட மேக்கப்பில்தான் கவனம் செலுத்துகிறார்கள் அதற்குதான் செலவு செய்கிறார்கள்” என்று நக்கல் அடித்ததும், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது பல்டி அடித்ததும் மோடியின் குரூர புத்தியின் ஒரு துளி அல்லவா?

10. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மின்மிகை மாநிலமாய் இருக்கும் குஜராத்தில் இன்றுவரை 11 லட்சம் வீடுகள்மின் இணைப்பு இல்லாமல் இருகிறது. அதுமட்டுமா 1 கோடியே 20 லட்சம் குடும்பங்களில் 63 லட்சம் குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாமல் இருப்பதும், பல லட்சம் மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் அலைவதும் வளர்ச்சியின் குறியீடா மிஸ்டர் மோடி?

11. மனுநீதியை அமலாக்க ஆர்.எஸ்.எஸ் கொடுத்த பயிற்சியை குடிநீர் கொடுப்பதில்கூடவா காட்டவேண்டும். பாவ்லா தாலுகா தன்வாடா கிராமத்தில் எந்த எந்த சாதியினருக்கு எப்போது தண்ணீர் விடப்படும் என பம்பு செட்டு சுவற்றில் பட்டியல் எழுதிவைக்கும் அளவுக்கு மோசமாக இருக்கிறது.

கடைசியாக தண்ணீர் இருந்தால் தலித் மக்களுக்கு கிடைகும் நிலைதான். வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய இதை ரசித்தபடியே மோடி பவணி வருவது நியாயமா?

12. “பூரண மதுவிலக்கு அமலாக்கப்பட்ட குஜராத்தில் போன் செய்தால் சாராயம் வீடுதேடிவரும்” இது தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு.. சட்டமன்ற பதிவேட்டில் உள்ளது. அங்கு காங்கிரஸ் ஆட்சியில் குழாய் மூலம் சாரயம் விற்றவர்கள் இப்போது டோர் டெலிவரி செய்கிறார்கள். மோடி அவர்களே தாங்கள் வித்தியாசமான தலைவர்தானா?

13. வறுமை ஒழிப்பில் குஜராத் மிகவும் பின்தங்கி இருக்கிறது. பழங்குடியினர், இஸ்லாமிய சமுதாயத்தினர் வறுமையை ஒழிப்பதிலும் நாட்டில் மிகவும் பின்தங்கிய மாநிலம் குஜராத்தான். குழந்தை இறப்பை தடுப்பதில் தோல்வி, பொதுவிநியோக முறை சீரழிந்த நிலை.மக்களின் சுகாதார நலன் புறக்கணிக்கப்படுவது அதாவது கிராமப்புறத்தில் 67 சதவீத மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை போன்றவை திட்ட கமிஷன் அறிக்கையின் ஆதாரங்கள். வெறும் வாய் சவடால் மூலம் இதை மூட முயற்சிப்பது நியாமதானா மோடி?

14 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு 2 லட்சம் வேலை வாய்ப்புகளை வெட்டிச் சுருக்கிவிட்டது., அனைத்து துறைகளிலும் 2500 ரூபாய் சம்பளத்தில் அத்துக்கூலிகளாக இளைஞர்களை அலையவிடுவதுதான் இந்தியாவுகான முன் மாதிரியா?

 15. ஐசோதாபென் என்கிற பெண்ணை உங்களுக்கு தெரியுமா? 14 வயதான சிறுமியை 17 வயதில் திருமணம் செய்த தாங்கள் இன்றுவரை அவரை நிம்மதியாய் வாழவிடாமல், கண்காணிப்புடன் வெளியே பேசவிடமல் வைத்திருப்பது யாருக்குத் தெரியும்? ஓப்பன் என்கிற பத்திரிகை இச்சம்பவத்தை வெளியே சொல்லும் வரை. ஏனெனில் நீங்கள் பிரம்மச்சாரி என்ற பிம்பத்தை கட்டிக்காத்து வருகிறீர்கள் அப்படிதானே? தன்னை நம்பிவந்த பெண்ணை காப்பாற்றாத எந்த ஒரு மனிதனும் தன் நாட்டை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை எப்படி வரும்?

16. ஆசிஷ் கேத்தானை தெரியுமா மோடி? எப்படி மறப்பீர்கள்! உங்கள் அமைச்சரவையில் இருந்த மாயா கோட்னானிக்கு 28 வருட சிறைத் தண்டனையும், பாபு பஜ்ராங்கிக்கு ஆயுள் தண்டனையும் வாங்கிக் கொடுத்த தெகல்கா நிருபர் அவர்.

2002 ல் நீங்கள் செய்த இன அழிப்பில் உங்கள் கையில் படிந்த இரத்த கரையின் சாட்சி அவர். நீங்களும் சிறைக்கு செல்லும் காலம் நெருங்குகிறது. ஆகவே கார்ப்ரேட் கைகளில்தஞ்சம் அடைந்து, அவர்களுக்கு சேவகம் புரிந்து, இந்த நாட்டின் உட்ச பதவியை அடைய கனவு காண்கிறீர்கள். கனவு காண்பது அனைவருக்கும் உரிமை! உங்களுக்கு என்ன தடை?

17. நவீன ஊடகங்களான இணையத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப கூலிப்பட்டாளத்தை வைத்து உங்களை பின்தொடர்பவரகள்

18 லட்சம் பேர் என ஆகாசபுளுகை அள்ளிவிட்டுக்கொண்டிருந்தீர்கள், கூலிக்கு மார் அடிக்கும் ஐ.டி கம்பெனிகளை நீங்கள் வாடகைக்கு வைத்துதான் இணைய உலகை ஏமாற்றுகிறீர்கள் என்பதை கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்திவிட்டது. உண்மையை ஒருநாளும் நீங்கள் நம்பப் போவதில்லையா மோடி அவர்களே?18 உங்கள் காவி கட்சியில் அகில இந்திய தலைவராக இருந்த பங்காரு தொலைகாட்சியின் மூன் லஞ்சம் வாங்கியது பழைய சம்பவமாக இருக்கட்டும். சமீபத்தில் லைம்டோன் சுரங்க வழக்கில் 54 கோடி கொள்ளையடித்த பாபு போக்கிரியாவுக்கு மந்திரி பதவி கொடுத்ததாகட்டும் எதற்காகவாவது வெட்கப்பட்டிருக்கிறீர்களா? சொல்லுங்க மோடி... சொல்லுங்க!

(கேள்விகளுக்கு உதவிய ஆதார நூல்: நரேந்திர மோடி நாமம் - கோவி.லெனின்)

- நன்றி : தீக்கதிர் - 14-12-2013

Friday, October 18, 2013

மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா?


 ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர். குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் காவல்துறையும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை விலகல் செய்துவிட்டார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.


பயங்கரமும் படுகொலையும் தாண் டவமாடிய குஜராத்திலிருந்து வருகி றேன். வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட் டது. குற்றவுணர்வையும் அவமானத் தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.

அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக் கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள். அவர்களது முகத்தில் ததும்பும் துயரம் இப்படியொரு துக் கத்தை நான் இதுவரை கண்டதில்லை. வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர் களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும் உடைமை.

அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால், காயம் பட்டவர்களுக்கு மருந்து என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக் கிறார்கள் மற்றவர்கள்.

ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சி யடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது..

இருப்பினும், கண்டவை கேட்டவை களில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.

ஓர் எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக் கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெ டுத்து, அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றி ருக்கிறார்கள். இதற்கென்ன சொல் கிறீர்கள்?

உயர் அழுத்த மின்கம்பியால்...

19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சி யடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக் கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?

தன்னுடைய அம்மாவும், அக் காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.

மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்து ஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது. 3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை. எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம் என்று அங்கிருந்த காவல்துறையினிடம் அவள் வழி கேட்டாள். அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண் ணெண்ணெய் ஊற்றிக் கொளுத் தியது. பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை. குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் பாலியல் வன்முறை செய்திருக்கிறார்கள். பாலியல் வன்முறை முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக் கிறார்கள்; சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.

அமன் சவுக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங் களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணிய வைத்திருக்கிறது.

அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக் குதல், திட்டமிட்ட இனப் படுகொலை. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல் லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

வெறியூட்டும்படியான முழக்கங்களை ஒலிபரப்பியபடியே முதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற் றியில் காவித்துணியும் கட்டிய ஆட் களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும். வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில் களையும் அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன. கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள் இந்து  முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.

வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன. பிறகு லாரிகளில் கொண்டு வந்த எரிவாயு சிலிண்டர்களை கட்டடத்திற்குள் வைத் துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டடம் தீப்பிடித்து எரியும்.

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட் டுள்ளன. அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது. இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

காவல்துறை மற்றும் அரசு எந்திரத் தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத் தையும் எல்லோரும் குற்றம் சாட்டு கிறார்கள். பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்க வில்லை.கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைக்குத்தான் அவர்கள் பாது காப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக் குப் பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் காவல்துறையும் துப்பாக் கிச் சூடு நடத்தியிருக்கிறது. பல செய்தி கள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையின ரும் முசுலீம்கள்தான்.

இருபது ஆண்டுகளாக அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டி ருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப் படுகிறேன். அரசியல்வாதிகளின் உத்தர வுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப் படுத்தவில்லை. சுயேச்சையாகவும், நடு நிலையாகவும், அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர் களைக் கோருகிறது.

அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரி யாவது நேர்மையாக நடத்து கொண்டி ருந்தால் இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்க முடியும். உள்ளூர் காவல்துறை மற்றும் அதிகாரி களின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.

கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்.

இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்! கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?

இதோ இன்னொரு பெருத்த அவமானம்!

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கெனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம். இதோ இன்னொரு பெருத்த அவமானம்! பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம் இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படு கின்றன. முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம் கள் தான் கவலைப்பட வேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனர மைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லைஎன்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை.
குஜராத்தின் கொலைகாரக்கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது. அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெரு மிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:

சாரே ஜஹா ஸே அச்சா
இந்துஸ்தான் ஹமாரா

இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.

குஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 11 ஆண்டுகள் முடிந்துவிட்டன.கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, பாலியல் வன்முறை செய்த இந்து மதவெறி யர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப் படவில்லை. இந்தியா ஒரு மதச்சார் பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப் படவேண்டும், வேதனைப் படவேண்டும்.

இந்த இனப்படுகொலையின் நாயக னான நரேந்திர மோடி வரும் பாராளு மன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரய த்தனம் செய்து வருகிறார். குஜராத் மாநிலத்தை ஆஹா .ஓஹோ ..என்று வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளார் என்ற வெறும் மாயக் கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு இவர் தகுதியானவர் என்று சிலர் கூவிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் நாட்டிலேயே அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் குஜராத் மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியது. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் நபர்கள் அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்து கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கி கொண்டுள்ளனர். இவரை போன்றவர்கள் நாட்டை ஆண்டால் என்னவாகும்! நாட்டின் பிரதமர் பதவிக்கு இவர் தகுதியானவரா என் பதை மக்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆகவே வருங் கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசியம்.

Thursday, October 17, 2013

அந்தரங்கம் புனிதமல்ல

இந்து ஆங்கில ஏட்டில் வெளிவந்த ஒரு கட்டுரை சங்பரிவார்க் கும்பலைக் கொஞ்சம் வெலவெலக்கச் செய்து விட்டது; வித்யா சுப்பிரமணியம் என்பவ ரால் எழுதப்பட்ட கட்டுரை அது (8.10.2013 நடுப்பக்கக் கட்டுரை).
2005ஆம் ஆண்டில் அத்வானிக்கும், ஆர்.எஸ்.எசுக்கும் இடையே நடைபெற்ற வரலாற்றுப் புகழ்மிக்க மோதலின்போது, தன்னைப் பதவி நீக்கம் செய்ததால் ஏற் பட்ட கோபத்தை அத்வானியால் அவ் வளவு எளிதாகக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் வெளியிட்டதை அவரது சொற்களிலேயே பார்க்கலாம். 2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் பேசும்போது ஆர்.எஸ்.எஸின் அனுமதி இல்லாமல் தனது கட்சியினால் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ளப்பட முடியாது என்ற எண்ணத்தை இந்த நிகழ்ச்சி உறுதிப்படுத்தி விட்டது என்று கூறினார். நாம் கொண்டி ருக்கும் இந்தக் கண்ணோட்டத்தினால், பா.ஜ.க.வுக்கோ அல்லது ஆர்.எஸ்.எசுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது. ஒரு நாட்டை மறு கட்டமைப்புச் செய்ய இயன்ற ஒரு தலைவரை உருவாக்குவதற்குப் பதிலாக இத்தகைய கண்ணோட்டம் அவரது நல் தோற்றத்தைக் குலைத்து விடும் என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். கவலைப்பட வேண்டும். மக்களிடையே நிலவும் இந்த எண்ணத்தைச் சிறிது சிறிதாகப் போக்கு வதற்கு ஆர்.எஸ்.எசும்., பா.ஜ.க.வும் உண்மையாகப் பாடுபட வேண்டும் என்று எல்.கே. அத்வானி பேசியதை - இந்து கட்டுரை எடுத்துக்காட்டி பிஜேபி யின் லகான் ஆர்.எஸ்.எஸின் கையில் தான் வலுவாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியது.
அபாயகரமான ஆர்.எஸ்.எஸ்.தான் பிஜேபியின் கர்த்தா; ஆர்.எஸ்.எஸ். காலை ஆட்டினால் பிஜேபி தலையாலேயே நடக்கும் என்கிற சங்கதி ஊருக்குத் தெரிந்தால் அரசியல் கட்சியான பி.ஜே.பி.க்கு மக்கள் மத்தியில் பெரும் சேதாரம் ஏற்படும் என்பதால், இந்து ஏட் டின் கட்டுரையை - _ தகவலை சங்பரிவார் -_ பிஜேபி வட்டாரத்தால் இரசிக்க முடியாது. இந்து ஏடு எழுதுவதற்கு முன்பே -_ மோடி ஆர்.எஸ்.எஸின் கட்டளைக் காரண மாகவே முன்னிறுத்தப்பட்டார் என்பது மலிவாகவே தெரிய ஆரம்பித்து விட்டது.
மற்றவர்களைவிட அதிகாரப் பூர்வமில்லாத பிஜேபியின் _ மோடியின் பேச்சாளரான திருவாளர் சோ ராமசாமி அவர்களுக்கு இதன் பாரதூர விளைவு கள் என்னவென்று தெரியும் அல்லவா! அதனால் தமக்கே உரித்தான வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டு மோடியின் கன்னத்தில் விழும் அறையைத் தம் கன் னத்தில் தாங்கிக் கொள்வதுபோல் எழுது கோலைத் தூக்கியுள்ளார்.
கேள்வி: பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். தான் வழி நடத்துகிறது. என்பது உண்மையா?
பதில்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா.ஜ.க.வை வழி நடத்துகிறது என்ற சொல்ல முடியாது.
அப்படிப்பட்ட நிலை இருந்தால், பா.ஜ.க. சுயமாக எந்த தீர்மானமும் செய்ய முடியாமல் திணறும். நிலைமை அப்படி இல்லை. பா.ஜ.க., வீட்டுப் பெரியவர் ஆர். எஸ்.எஸ்.
அவருடைய மனம் கோணாமல் நடந்து கொள்ள பா.ஜ.க., முயற்சிக்கும். சில சமயங்களில் உரசல் வருவதால் உறவு விட்டுப் போகாது (துக்ளக் 11.9.2013 பக்கம் 20).
எப்படியெல்லாம் நெளிந்து வளைந்து சப்பைக் கட்டுக் கட்டுகிறார் இந்த அய்யர்.
1976 நெருக்கடி நிலையைத் தொடர்ந்து ஜனசங்கத்தைக் கலைத்து விட்டு ஜனதாவில்  அய்க்கியமானதே _ ஆட்சி யில் மாஜி ஜனசங்கத்தவர்களான வாஜ் பேயியும் அத்வானியும் அமைச்சர்களாகக் கூட இருந்தனரே _ -அந்த அய்க்கியம் குலைந்து போனதற்கு என்ன காரணம்?
ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர், ஜனதா விலும் உறுப்பினர் என்னும் இரட்டை உறுப்பினர் தன்மை தானே _ - ஜெயப் பிரகாஷ் நாராயணன் போன்றவர்களால் அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட ஜனதா உருக்குலைந்து போனதற்குக் காரணம்?  பல முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., உறவைத் துண்டிக்க மறுத்தது ஏன்? ஆர்.எஸ்.எஸின் இந்து வெறி மதக் கொள்கை தானே அதற்குக் காரணம்.
ஓர் ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவா யில்லை; ஆர்.எஸ்.எஸ்.தான் எங்களுக்கு மிக மிக முக்கியம் என்று மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதற்கு என்ன காரணம்?
ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளராக இருந்த எச்.வி. சேஷாத்திரி இதோ பேசுகிறார்:
4.4.1998 இரவு 11 மணிக்கு தொலைக் காட்சி அலைவரிசை 1-இல் அவர் அளித்த பேட்டி இதோ!
கேள்வி: பி.ஜே.பி. ஆட்சியின் ரிமோட் கண்ட்ரோலாக ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகக் கூறுவதுபற்றி..
சேஷாத்திரி: வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி இவர்கள் எல்லாம் யார்?
ஆர்.எஸ்.எஸ். தானே? அப்படியிருக்க இன்னொரு ரிமோட் கண்ட்ரோல் எதற்கு?
கேள்வி: ஆர்.எஸ்.எஸின் லட்சியங் களையும், கனவுகளையும் பி.ஜே.பி. நிறை வேற்றும் என்று நம்புகிறீர்களா?
சேஷாத்திரி: நிச்சயமாக ஒவ்வொரு பிரச்சாரர் அல்லது ஸ்வயம் சேவக்கின் தகுதியையும், திறமையையும் பொறுத்து சில கடமைகளை ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு அளித்துள்ளது. வாஜ்பேயி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை பி.ஜே.பி.க்கு ஜனசங்கிற்கு அனுப்பினோம். ஆர்.எஸ்.எஸின் பெருமை மிக்க தொண் டர்களான அவர்கள் நிச்சயம் தங்களின் பணிகளை நிறைவேற்றுவார்கள். அதே போல, தமிழ்நாட்டு பி.ஜே.பி.க்கு எங்கள் தகுதி வாய்ந்த தொண்டரான இல. கணே சனைத் தந்துள்ளோம். அவரும் சிறப்பான பணி ஆற்றி வருகிறார் என்று கூறினாரே!
பிரதமர் வாஜ்பேயிலிருந்து மத்தியில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் ஆர்.எஸ். எஸ்.காரர்கள்.
அவர்களை பி.ஜே.பி.க்கு நாங்கள்தான் அனுப்பினோம். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். கனவுகளை நிறைவேற்றுவார்கள் என்று வெளிப் படையாக சொல்லவில்லையா?
ஆர்.எஸ்.எஸில் முழு நேர ஊழியராக உள்ள ஒருவரைத்தான் பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளராக நியமிக்க வேண் டுமென்று பி.ஜே.பி.யின் அமைப்பு விதியி லேயே திருத்தம் செய்யப்பட்டு விட்டதே! (The Hindustan Times 29.6.1997).
ஆர்.எஸ்.எஸ். தலைவரான ராஜுபையா என்ற இராஜேந்திர சிங் இடுப்பு எலும்பு முறிந்து ஜண்டேவலான் நகரில் மருத்துவ உதவி பெற்று ஓய்வில் இருந்தார். அவரை பிரதமர் வாஜ்பேயி சந்திக்கச் சென்றார்.
அது வெறும் உடல்நல விசாரிப்புக்கான நிகழ்ச்சி மட்டுமல்ல; பல அரசியல் முக்கி யத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது.
1) ஆர்.எஸ்.எஸின் நம்பிக்கை இல்லாத எவரையும் பி.ஜே.பி. வேட்பாளராகத் தேர்தலில் நிற்க வைக்கக் கூடாது.
2) ஆர்.எஸ்.எஸ். அமைத்துள்ள ஏழு உறுப்பினர் கொண்ட கொள்கை வகுப்புக் குழுதான் வேட்பாளர்களை இறுதி செய்யும். (ஆர்.எஸ்.எஸ். தலைவரான இராஜேந்திர சிங், பொதுச் செயலாளர் எச்.வி. சேஷாத்திரி முதலியோர் அக்குழுவில் முக்கியமாக இருப்பர்).
3) சென்ற 12ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 70 பி.ஜே.பி. உறுப்பினர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்.பற்றி சரியாகத் தெரியவில்லை என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடு என்றாரே சேஷாத்திரி.
பி.ஜே.பி. என்கிற அரசியல் கட்சிக்கு ரிமோட் கண்ட்ரோலாக இருப்பது சூப்பர் அரசியல் கட்சியான ஆர்.எஸ்.எஸ். தான் என்பது இன்னுமா விளங்கவில்லை?
5.2.1998 நாளிட்ட இந்து ஏட்டுக்கு எல்.கே. அத்வானி சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸின் சர்சங்சலக் (உயர் தலைவர் இராஜேந்திர சிங்) உட்பட யாரையும் கேட்காமலேயே வாஜ்பேயிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று அறிவித்தேன் என்றாரே!
பிரதமர் பதவிகூட ஆர்.எஸ்.எஸ். தலைவரைக் கேட்டுத்தான் முடிவு செய் யப்பட வேண்டும் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?
தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று நிகரற்ற சக்தியாக விளங்கும் காலத் தில் இவர்கள் எப்படி நடந்து கொள்வார் களாம்?
இதோ வாஜ்பேயி கூறுகிறார்:
பாரதீய ஜனசங் கட்சியாக இருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸுடனான எங்கள் தொடர்பு வெறும் கருத்தியல் மட்டத் தோடும் வரலாற்று ரீதியானதாகவும் ஆகியது. இத்தகைய இறுக்கமான தொடர்போடு பத்தாண்டுகளைக் கடந்து விட்டோம். பி.ஜே.பி.க்குள் இருந்து வேலை செய்கின்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எங்களின் கருத்தியல் அடித்தளத்தை எல்லோருக்கும் புரிய வைப்பதற்கு விருப்பப் பூர்வமான முயற்சிகளை செய்து வருகிறார்கள். சகோதர அமைப்புகளாகிய விஸ்வ இந்து பரிஷத், வித்யார்த்தி பரிஷத், பாரதீய மஸ்தூர் சபா, சேவாபாரதி, கல்யாண ஆஸ்ரம் ஆகிய வற்றோடு எங்களுக்குள்ள தொடர்பையும் அவர்கள் புரிய வைக்கிறார்கள். இந்த அமைப்புகள் அத்தனையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து பெற்ற உந்துதலின் அடிப்படையில் இயங்குபவை. எங்களது முயற்சிகளை இன்னும் நாங்கள் தீவிரப் படுத்த வேண்டும். அரசியலில் பாரதீய ஜனதா கட்சிக்குள்ள கூடுதல் வாய்ப்புகளின் அடிப்படையில் இவற்றுக்கான ஏற்பு அதிகமாகும்.
(டெலிகிராம் ஏடு 17.5.1990).
மேற்கண்ட ஆதாரங்கள் எதைத் தெரிவிக்கின்றன? ஆர்.எஸ்.எஸ்தான் அவர்களின் அடிப்படை ஆதாரச் சுருதி என்பது அப்பட்டமாக விளங்கி விட்டதே!
பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர்கூட ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்ற முழு நேரப் பேர் வழியாக இருக்க வேண்டும் என்று கட்சியின் அடிப்படை விதியிலேயே பாதுகாப்பாக வைத்துள்ளார்களே.
ஆர்.எஸ்.எஸ். அமைத்துள்ள ஏழு பேர் கொண்ட குழுதான் தேர்தலில் போட்டி யிடுபவர்கள் யார் யார் என்பதை முடிவு செய்யும் என்கிற அளவுக்கு நிலைமை இருக்கும்பொழுது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வை வழி நடத்துகிறது என்று சொல்ல முடியாது என்று முழு யானையைப் பிடி சோற் றில் மறைக்கப் பார்க்கிறார் மனு குலத்தாரான சோ.
6.3.1978 அன்று நாக்பூர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் தேவரசும், பொதுச் செயலாளர் ராஜேந்திர சிங்கும் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
ஆர்.எஸ்.எஸ்., நடவடிக்கைகள் ஓர் அரசியல் நோக்கம் கொண்டதுதான். நாங்கள் அதிகார அரசியலில் தீவிரம் காட்டாவிட்டாலும்கூட! அது மட்டுமல்ல; தற்போதுள்ள இதன் சட்ட திட்டங்களின்படி உறுப்பினர்கள் அரசியலில் பங்கெடுக்க முடியும். பல ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், மாநில அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். (குஜராத்தில் ஒரு வெள்ளோட்டம் என்ற தலைப்பில் ஆதவன் - தீட்சண்யா எழுதிய கட்டுரை தினமணி 18.2.2000 பக்கம் 4).
ஆர்.எஸ்.எஸ். வெறும் கலாச்சார அமைப்புதான்; - அரசியலில் ஈடுபடாது என்று பேசுவது - எழுதுவது எல்லாம் பம்மாத்து வேலை என்பது நீதிமன்றத்தில் அவர்கள் கொடுத்த வாக்குமூலமே காட்டிக் கொடுத்து விட்டதே!
மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்த போது நடந்த ஒன்றை நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும். மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்த போது புதுடில்லியில் கல்வி அமைச்சர்கள் மாநாடு கூட்டப்பட்டது (1998 அக்டோபர் 22).
அந்தக் கூட்டத்தில் சரஸ்வதி வந்தனா பாடப்பட்ட போது தமிழ்நாடு அரசின் சார்பில் அதில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் வெளி நடப்புச் செய்தார்.
அந்த மாநாட்டில் அளிக்கப்பட்ட கல்வித் திட்டத்தைத் தயாரித்தவர் ஆர்.எஸ்.எஸ். நிபுணர் என்று கூறப்பட்ட சிட்டியங்லா. மூன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரைக்கும் சமஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்க வேண்டும். சரஸ்வதி வணக்கம் வந்தே மாதரம் பாடல்கள் அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம். உபநிஷத்துகள் வேதங்கள் முதலியன பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த  ஆர்.எஸ்.எஸின் கல்வித் திட்டம்; கடுமையான எதிர்ப்பின் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது.

ஆட்சியின் பரம இரகசியம்கூட ஆர்.எஸ்.எசுக்குத் தெரிவிக்கப்பட வேண் டும் என்பது எழுதப்படாத சட்டமாகும்.
1999 மே 11,13 ஆகிய இரு நாள்களில் மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு இராஜஸ் தான் மாநில பொக்ரான் பாலைவனத்தில் அய்ந்து அணு குண்டுகளை வெடித்துச் சோதனை செய்தது. அரசாங்கத்தின் மிக முக்கியமான இரகசியம் இது. குடியரசுத் தலைவருக்குக்கூட முதல் நாள் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வளவு பரம இரகசியமான செயல் ஆர்.எஸ்.எஸ்சுக்குத் தெரிவிக்கப்பட்டுள் ளதே!
எந்த நாளில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்யப்பட்டதோ அந்த நாளி லேயே ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் அணு ஆயுத இந் தியா என்ற தலைப்பில் ஒரு சிறப்பு இதழே வெளியிட்டது என்றால், இது எப்படி சாத்தி யமாகும் என்பதைச் சிந்திக்க வேண்டும்!
அணுகுண்டு வெடிப்புத் தகவல் முன் கூட்டியே ஆர்.எஸ்.எஸுக்குத் தெரிந்திருந் தாலொழிய இந்தச் சிறப்பிதழைக் கொண்டு வந்திருக்க முடியுமா? குடியரசுத் தலைவருக்கே தெரியாத அரசு இரகசியம் ஆர்.எஸ்.எஸுக்குத் தெரிகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் பா.ஜ.க.வின் ஆட்சி லகான் அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸிடம் தான் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
அமைச்சர் பதவியேற்கும்போது அரசு இரகசியங்களைக் காப்பாற்றுவோம் என்றுகூறி உறுதி எடுத்தவர்கள். அதற்கு மாறாக அணுகுண்டு சோதனை போன்ற அரசு இரகசியங்களைக்கூட ஆர்.எஸ். எசுக்குத் தெரிவித்துள்ளார்களே.
1995 மே 7 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசரில் ஒரு கட்டுரை வெளி வந்தது. அதற்குரியவர் ஏ.பி. வாஜ் பேயிதான். அந்தக் கட்டுரையின் தலைப்பு Sangh My Soul
என்பதாகும். அதுதான் பாரதீய ஜனதா கட்சியின் வெப்சைட்டிலும் இடம் பெற்றதாகும்.
ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா என்ற அந்தக் கட்டுரையில் நல்லவர் என்ன சொல்லுகிறார்?
முஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டுமாம்? இதோ அவர் எழுதுகிறார்:
1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (Organising)
2) முஸ்லிம்களை உட்கொள்ளுவது (Assimilation)
(இதன் பொருள்: முஸ்லிம்க ளுக்கென்று உள்ள அடையாளங்களை அழித்து அவர்களை இந்து மயமாக்குவது).
அப்படி முஸ்லிம்களை உட்கொள்ளு வதற்கு அவர் கூறும் வழிகள் மூன்று:
1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.
2) முஸ்லிம்களை நமது வழியில் கொண்டுவர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் - இது காங்கிரசின் அணுகுமுறை.
3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல்.
இம்மூன்று வழிகளில் முதல் மற்றும் மூன்றாம் வழிகள்தான் நம் வழி என்றார் வாஜ்பேயி.
பி.ஜே.பி.க்கு ஆர்.எஸ்.எஸ். வெறும் உடம்பு அல்ல அவர்கள் நம்பும் ஆன்மா! சொல்பவர் சாதாரணமானவரல்லர் - பிஜேபியின் மிகப் பெரிய தலைவர் வாஜ்பேயி.
இவர்கள் ஆர்.எஸ்.எஸில் சேரும்போது ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி என்ன?
எனது புனிதமான இந்து மதத்துக்கும், இந்து சமுதாயத்துக்கும், இந்துக் கலாச் சாரத்துக்கும் பாடுபட்டு பாரத் வர்ஷத்தில், அதுவே உயர்ந்தது என்பதை நிலைநாட்ட இந்த ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கில் (ஆர்.எஸ்.எஸ்.) நான் உறுப்பினராகிறேன் என்பதை எல்லாம் வல்ல இறைவன் முன்னாலும், எனது மூதாதையர் முன்பும் பிரமாணம் எடுக்கிறேன்.
இந்தச் சங்கத்தின் பணிகள்  அனைத் தையும் இதய பூர்வமாக ஏற்று வாழ்நாள் முழுவதும் செயல்படுவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் டிராயர் போட்டால் ஆர்.எஸ்.எஸ்., வேட்டி கட்டினால் பிஜேபி.
ஏற்கெனவே நரேந்திரமோடியைப் பற்றி நிலவும் கணிப்பு - ஊரும் உலகமும் அறிந்ததே!
ஆர்.எஸ்.எஸ். என்கிற முத்திரை அதிகாரப் பூர்வமாக விழுந்து விடக் கூடாது என்பது அவர்களின் வியூகம்.
என்னதான் கம்பிமேல் ஏறி நின்று சாமர்த்தியம் காட்டினாலும் அத்வானியை உதாசீனம் செய்ததும் மோடியை முன்னிறுத்தியதும் ஆர்.எஸ்.எஸ்.தான் என்பது ஊர் சிரித்த ஒன்றே!
ஆர்.எஸ்.எஸைப்பற்றி அறிந்தவர் களுக்கு ஒன்று நன்றாகவே தெரியும்; குஜ ராத்  மாநில இனப்படுகொலையாளர்கள் தான் ஆர்.எஸ்.எசுக்குத் தேவைப்படுவர். அந்த வகையில் அவர்கள் மோடியைத் தவிர உறுதியாக வேறு யாரைத் தேர்வு செய்ய முடியும்?
அந்தரங்கம் புனிதமானது என்பார்கள். பி.ஜே.பி.யைப் பொறுத்தவரை அவர்களின் அந்தரங்கமான ஆர்.எஸ்.எஸ். புனித மானதல்ல -_ அசிங்கமானது _- ஆபத் தானது! - அருவருப்பானது!! - எச்சரிக்கை! எச்சரிக்கை!!


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>

அக்டோபர் 16-31 - 2013

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...