Showing posts with label திறனாய்வு. Show all posts
Showing posts with label திறனாய்வு. Show all posts

Sunday, September 23, 2012

தமிழ்ச் சங்கம் - ஓர் எச்சரிக்கை! (2)


தமிழ்ச் சங்கங்கள் நாட்டிற்குத் தேவையானவை. இதன் மூலம் தமிழ் மொழியின் மீது ஓர் ஈர்ப்பு -அயல் ஆதிக்கத் தகர்ப்பு என்பது போன்ற தாக்கங்கள் ஏற்பட வேண்டும். அதை விட்டு விட்டு அயல் ஆதிக்கங்கள் புழக்கடை வழியாகப் புகுந்திட இடம் கொடுத்துவிடக்கூடாது.
குறிப்பாக தினமணியின் ஆசிரியராக திரு. வைத்தியநாதய்யர் என்பவர் வந்திருக்கிறார். இவருக்கு முன்  ஆசிரியராக இருந்தவர் தினமணியை உண்மையான தமிழ் ஏடாக நடத்தி சாதனை படைத்தார்; தினமணியில் தமிழர்களும் கணிசமான அளவுக்கு நுழையவும் வழி வகுத்தார்.
இப்பொழுது வந்துள்ளவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியைக் கொண்டவர். துக்ளக் குழுமத்தில் சுத்தமான நெய்யில் பொரிக்கப்பட்ட பண்டம் இவர்.
தமிழ் ஆர்வம் உள்ளவர் போல காட்டிக் கொள்வார். செம்மொழி மாநாட்டுக் குழுவில் இடம் பெறுவதற்குக் கூட அன்றைய முதல் அமைச்சர் கலைஞர், அய்யர்வாளுக்கு மிகவும் அழுத்தம் கொடுக்க நேர்ந்தது. அவ்வளவுக் கிராக்கிப் பண்ணினார்.
தினமணிக்கு எத்தனையோ பேர் ஆசிரியர்களாக வந்து இருக்கிறார்கள். அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள் என்றோ, அப்படியே கலந்து கொண்டாலும் அவர்களின் நிழற் படங்கள், பேச்சுகள் எவையும் தினமணியில் இடம் பெற்றது என்றோ கூற முடியாது.
இவர் ஆசிரியராக வந்த நாள் முதல் இவர் நிழற்படம் பெரும்பாலும் இடம் பெறும். இவர் சொற்பொழிவும் இடத்தை அடைத்துக் கொள்ளும்.
தினமணி வைத்தியநாதய்யரை நிகழ்ச்சிக்கு அழைத்தால், அந்தச் செய்தி நிழற்படங்களுடன் பிரமாதமாக தினமணியில் வரும் என்று நினைக்கிற தமிழ் அமைப்புகள், சங்கங்கள் தினமணி ஆசிரியரை அத்தகைய விழாக்களுக்கு அழைக்க ஆரம்பித்து ள்ளனர். இது டில்லிவரை நீளுகிறது.
இந்த விளம்பர வெளிச்சத்தில் விட்டில் பூச்சிகளாகத் தமிழ் அன்பர்கள் விழுந்து விட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.
சென்னை மாநகரில் வணிக விளம்பரப் பலகைகளில் தமிழ் முதல் இடத்தைப் பெற வேண்டும் என்று ஓர் இயக்கத்தையே நடத்தினார்- _ அன்றைய மாநகராட்சித் தந்தை மானமிகு மா. சுப்பிரமணியம் அவர்கள்; அதற்கெல்லாம் இந்தத் தினமணிகள் எந்த அளவு கை கொடுக்க முன் வந்தன என்பதை ஒரே ஒரு நிமிடம் நினைத்துப் பார்க் கட்டும்!
அதனை மொழி நக்சலிசம் என்று வருணித்தவர் தினமணி ஆசிரியரின் குருநாதரான திருவாளர் சோ.
பார்ப்பனர்கள் எதைச் செய்ய முன் வந்தாலும் அதில் தமிழர்கள் எச்சரிக் கையாகவும், விழிப்பாகவும் இருக்க வேண்டும்!  எச்சரிக்கை! எச்சரிக்கை!!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, July 20, 2012

இந்து திருமண மந்திரமும் அதன் பொருளும்


மந்திரம்:
ஸோம ப்ரதமோ விவித கந்தர்வ விவிவத உத்தர!
த்ருதியோ அக்னிஷ்டே பதி துரியஸ்தே மநுஷ்ஐயா!!
ஸோமோ ததத் கந்தர்வாய
கந்தர்வோ ததத் அக்னயே!
ரயிம்ச புக்ராம் சாசாத் அக்னிர் மஹ்யம்
அதோ இமாம்
பொருள்: அதாவது மணப்பெண்ணை சோமன் முதலில் மனைவியாக அடைந்தான். பிறகு கந்தர்வன் அடைந்தான். இவளுடைய மூன்றாவது கணவன் அக்னி, நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன்.
சோமன் உன்னை (மணப்பெண்ணை) கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னிதேவன் இவளுக்குச் செல்வத்தையும் குழந்தையையும் கொடுத்த பிறகு எனக்குத் தந்தான்.... என்பதே புரோகிதர் கூற அதை திருப்பி மணமகன் கூறும் மந்திரத்தின் பொருள்.
இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தம் என்ன? இந்து மதப்படி திருமணம் செய்து கொள்கின்ற ஒருவரின் மனைவி பலரால் அனுபவிக்கப்பட்ட ஒரு பரத்தை (விபச்சாரி) என்றும், இந்த பெண் (மணப்பெண்) வேறொருவனிடம் குழந்தை பெற்றுக் கொண்டே அவனுக்கு மனைவியாகிறாள் என்றும் இந்து மதம் கூறுகின்றது.
ஆதாரம்: காஞ்சி சங்கராச்சாரியார் எழுதிய தெய்வத்தின் குரல் - பாகம் 2 - பக்கம் 874
எனவே இந்துமதப்படி திருமணம் செய்துக் கொண்டால் உன் மனைவி ஒரு விபச்சாரி என்று பொருள்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Saturday, November 19, 2011

நேருவை நினைக்கும் நாளில் குழந்தைகளின் சிந்தனைக்கு


மு.வி. சோமசுந்தரம்

இந்தியாவின் முடிசூடா மன்னர்
ஆசிய ஜோதி
விடுதலை இந்தியாவின் முதல் பிரதமர்
அணைக் கட்டுகளும், தொழிற் சாலைகளுமே நாட்டின் கோவில்கள் என்றவர்
நட்புக்கும், நாடுகளின் அமைதிக்கும் வழிவகுக்கும் பஞ்சசீலக் கொள்கையை உலகுக்கு வழங்கியவர்.
பகுத்தறிவுக் கொள்கையின்பால் பற்று கொண்டவர்
குழந்தைகளின் நலனே நாட்டின் வளம் என்ற நம்பிக்கை கொண்டவர்.

பண்டிதர் ஜவகர்லால் நேருவின் 123ஆம் ஆண்டு பிறந்த நாள், நவம்பர், 14,2011. இந்த நாளை குழந்தைகள் நாளாக நாடு கடைப் பிடிக்கிறது.

நேரு அவர்கள், டிசம்பர் 3, 1949இல் உலகக் குழந்தைகளை விளித்து, தன் எண்ணங்களையும், விழைவையும் ஒரு கடிதம் வாயிலாக ஒரு வெளியீட்டை உலகுக்கு வழங்கினார். அந்தக் கடிதமாவது:

அன்புக் குழந்தைகளே!

நான்குழந்தைகளுடன் ஒன்றி யிருக்க விரும்புகிறேன். அவர் களுடன் பேசி மகிழ விரும்புகிறேன். இவற்றிற்கு மேலாக அவர்களுடன் சேர்ந்து விளையாட விரும்புகிறேன். நீங்கள் என்னுடன் இருந்தால், நான் இந்த அழகிய உலகைப் பற்றி பேச விரும்புகிறேன்.

இந்த உலகில் நம்மைச் சூழ்ந்துள்ள, மலர்கள், மரங்கள், பறவைகள், விலங்குகள், விண்மீன்கள், மலைகள், பனிப் பாறைகள் பற்றி பேச விரும்புகிறேன். இந்த அழகிய காட்சிகள் நம்மைச் சுற்றி உள்ளன. ஆனால்,  பெரிய வர்கள், இவற்றை மறந்து விடுகின் றனர். வீணான விவாதத்திலும், வாய்ச் சண்டைகளிலும் காலத்தை கழிக் கிறார்கள். நாங்கள் அலுவலகங்களில் அமர்ந்து கொண்டு, முக்கியமான வேலைகளைச் செய்வதாக நினைக் கிறோம்.

ஆனால் நீங்கள் சிறந்த அறிவு படைத்தவர்கள் என்று நம்புகிறேன். அதனால் நீங்கள் உங்கள், கண்களைத் திறந்து, காது மடுத்து இந்த எழில் காட்சிகளை உணருங்கள். மலர்களின் பெயர்களை அறிந்து கொள்ளுங்கள். பறவைகளின், ஓசை, பாடல்களிலிருந்து அவற்றை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

இவற்றுடனும், இயற்கையுடனும் நட்பை வளர்த்துக் கொள்வது எவ்வளவு எளிது என்று எண்ணிப் பாருங்கள். இவற்றுடன் அன்பாகவும் பாசத்துடனும் அணுகுவ தன்மூலம் அவற்றின் நட்பு எளிதில் கைகூடும்.

வளர்ந்த பெரியவர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் முறைமையும், தனிக்கூட்டமாக இயங்கும் முறை வியப்பான ஒரு செயல். அவர்களுக்கிடையே தடையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். மதம், ஜாதி, நிறம், கட்சி, நாடு, மாநிலம், மொழி  சம்பிரதாயம், ஏழை, செல் வந்தர் போன்றவையே அந்தத் தடைகள்.

அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட சிறையில் அவர்கள் உள் ளனர். நல்லவேளையாக இப்படி மனிதனைப் பிரிக்கும் இத்தகைய தடை கள் குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. குழந்தைகள் ஒன்றோடொன்று சேர்ந்து விளையாடுகிறார்கள். வேலை செய் கிறார்கள். ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகே, மற்ற பெரியவர்கள் மூலம் இத்தகைய தடைகளைப் பற்றி அறிய வருகின்றனர்.

நேரு தேர்தல் களத்தில்...

இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடைபெற்றது. நேரு அவர்கள், உத்தரப் பிரதேச மாநிலத் தில், அவரின் கோட்டை என்று கருதப் பட்ட பகல்பூரில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து நிற்கும் துணிச்சல், சுவாமி பிரபுடட் பிரமாச்சாரிக்கு வந்தது. சுயேச்சையாக எதிர்த்து நின் றார். ஆனால் அவரைத் தீவிர இந்து மத அமைப்புகள் ஆதரித்தன. குறிப்பாக இந்து மகாசபை என்ற பழைமை விரும்பி இந்து மத அமைப்பும், பாரதிய ராமராஜ்ய பர்ஷத் அமைப்புகளுமாகும்.

இந்த இந்து அமைப்புகள் ஏன் தீவிரமாக எதிர்த்தன? இந்துக்களைக் கட்டுப்படுத்தக் கூடிய இந்து சீர்திருத்த சட்டம் ஒன்றை நேரு கொண்டு வர எண்ணியிருந்ததே காரணம். திருமணம், வாரிசு, சொத்துரிமை போன்ற துறைகளில் அதிரடி சீர்திருத்தம் வருவதற்கு ஏற்ற சட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

நேருவை எதிர்த்து தேர்தலில் நின்ற சாமியார், நீண்ட வெள்ளை கோவணம், மேலே காவி சால்வை அணிந்து வெள்ளை அடர்ந்த தாடி ஆரஞ்சு நிற கண் கண்ணாடியுடன் காட்சியளித்தார். 1931 மாதிரி டாட்ஜ் காரில், இந்து பக்தர்கள் பாட்டு குழு உடன் வர சாமியார் தேர்தல் பிரச்சாரம் செய்தார். மேடை அமைத்து, தாளம் தட்டி பாட்டு, நடனம் நடத்தி பிரசாரம் செய்தார். துண்டறிக்கைகளைத் தொண்டர்கள் வழங்கினர்.

சாமியார் கையெழுத்திட்ட துண் டறிக்கையில் இந்து சீர்திருத்த  சட்டம், மதத்தை அழிக்கும், சாதிகளில் குழப்பம் ஏற்படுத்தும். குடும்பத்தைப் பிளவுபடுத்தும் வழக்கறிஞர்கள்தான் லாபமடை வார்கள் என்று கூறப்பட்டிருந்தது. தேர்தலில் சாமியார் படுதோல்வி யடைந்தார். அதைத் தொடர்ந்து மவுனவிரதம் மேற்கொண்டு, ஷீபர் பேனா எடுத்து என் உள் ஆத்மா கட்டளை இட்டதால் தேர்தலில் நின்றேன் என்று அறிக்கை விட்டார்.

நேருவும் அட்டன்பரோவும்

காந்தியார் வாழ்க்கைப் பற்றித் திரைப்படம் தயாரித்த ஆட்டன்பரோ, நேருவை புதுடில்லியில், 1963இல் சந்தித் தார். தான் தயாரிக்கும் திரைப் படத் திற்கு, நேருவிடம் அனுமதி கேட்டார் அட்டன்பரோ. அனுமதி வழங்கி, நேரு ஒரு அறிவுரையும் கூறினார்.
நீங்கள், எதை, எப்படி செய்தாலும், அவரை (காந்தியை) கடவுளாக சித்திரிக் காதீர்கள். அந்தத் தவறை நாங்கள் இந்தியாவில் செய்கிறோம். காந்தி கடவுள் என்று சொல்லப்படும் நிலையை விட உயர்ந்தவர்

குறிப்பு:
 மேலும் பல சுவையான செய்திகளை அறிய, பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவன வெளி யீடான இதழ்களை ஏந்திய மலர் என்ற நூலில் படித்து அறியலாம்.

Thursday, November 3, 2011

அறிவுப் பசிக்கு விருந்துஅண்ணா நூற்றாண்டு நூலகம்


விடுமுறை நாள்களில் சென்னைவாசிகளின் சென்னைக்கு வந்து செல்வோரின் பயனுள்ள பொழுதுபோக்காக அறிவுப்பசிக்கு விருந்தாக அமைந்துள்ளதே கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். சிறுவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்ற அனைத்துத் தரப்பினரையும் தன்னகத்தே ஈர்க்கும் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.
கலைஞரின் பொற்கால ஆட்சியில் எத்தனையோ சாதனைகள் சரித்திரங்களாக - பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவைகளாக இருந்தாலும் முதலிடத்தைப் பெறுவது 4 லட்சம் நூல்களை அகத்தே கொண்டுள்ள தென் ஆசியாவிலேயே பெரியதாகத் திகழும் இந்நூலகமே! சிங்கப்பூர் தேசிய நூலகத்தை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 12 லட்சம் நூல்கள் இடம்பெறும் என்ற செய்தி அறிவுப்பசியை மேலும் தூண்டுவதாக உள்ளது. முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு பிரமாண்டமாய் காண்போர் கண்ணையும் கருத்தையும் ஈர்த்து 8 மாடிகளுடன் காட்சியளிக்கிறது.
சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 31,100 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. பெரிய முகப்புக் கூடம், வரவேற்பறை, பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி நூலகம், 2 படிக்கும் அரங்குகள், இன்டர்நெட் மய்யம், திரைஅரங்கு, கருத்தரங்க அறைகள், கண்காட்சி அறைகள் என்ற பன்முகத் தோற்றத்துடன் பாங்காய் காட்சியளிப்பதே தரைத்தளம்.
குழந்தைகள் விளையாடிக் கொண்டே படிக்கும் வகையில் செயற்கை மரத்துடன் திகழ்ந்து, கணினி விளையாட்டுகள், இணைய-தளம் (ஆன்லைன்) மூலம் பாடங்களைக் கற்கும் வசதியுடன் அனைத்து மாநில பாடநூல்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதே முதல் தளம்.
தமிழ் நூல்கள் ஆட்சி செய்யும் இடமே இரண்டாம் தளம். மூன்றாம் தளத்தில் ஆங்கில நூல்களும், நான்காம் தளத்தில் மருத்துவ நூல்களும் நிருவாகம் தொடர்பான நூல்களும் அணிவகுத்து நிற்கின்றன. ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு துறையினைத் தன்னகத்தே கொண்டு தனிச்சிறப்புடன் திகழ்கிறது.
உலக டிஜிட்டல் நூலகத்துடன் இணைப்புப் பெறப்பட்டுள்ளதால் உலகிலுள்ள புகழ்பெற்ற பல நூலகங்களில் உள்ள தகவல்களைச் சேகரிக்க முடியும். பழைமையான ஓலைச் சுவடிகள், அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், வரைபடங்-களுக்கு யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட கணினிகள் உள்ளன. மொத்தத்தில் அறிவுப் புரட்சிக்கு வித்திடும்வகையில் அமைக்கப்-பட்டுள்ளது. பெரியார் பிஞ்சு இதழுக்காக அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றபோது நூலக இயக்-குநர் முனைவர் க.அறிவொளி, துணை நூலக இயக்குநர் திரு. வெ. மாதேஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நூலகத்தை வலம்வர வேண்டிய உதவிகளைச் செய்தனர்.
மலர்களைப் பார்த்து பட்டாம்பூச்சிக் கூட்டம் மகிழ்ச்சியுடன் ரீங்காரமிட்டுப் பறந்து செல்வதைப் போல, குழந்தைகள் குதூகலத்துடன் உள்ளே நுழைந்து புத்தகங்களை ஆராய்-கின்றனர். உள்ளே சென்றதும், நாமும் குழந்தையாகிவிடமாட்டோமா என்ற எண்ணத்துடன் குழந்தைகளுடன் உரையாடி-னோம்.
ராம்பிரீத்தி, இரண்டாம் வகுப்பு,
செயிண்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி,
பெசண்ட் நகர், சென்னை. எங்க வீடு அடையார்ல இருக்கு. கதைப் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும். இங்கதான் முதல்ல வந்திருக்கேன். ரொம்பப் பிடிச்சிருக்கு. நிறைய புத்தகங்கள் இருக்கு. ஆசையா எல்லாத்தையும் பார்த்தேன். பிடித்திருந்ததை எடுத்துப் படித்தேன் என்றார் இந்தப் பிஞ்சு.
இவரை அழைத்து வந்திருந்த இவரது தாய் ராதாவிடம் பேசினோம்:
இதுவரை வேறு நூலகங்களுக்குச் சென்றதில்லை. நிறைய குழந்தைகளைப் பார்க்கிறதால நாமும் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படும். இந்த சூழ்நிலை வரணும்ங்கிற ஆர்வத்தை உண்டாக்குகிறது. படிபடினு வீட்ல சொன்னாலும் படிக்க மாட்டாங்க. ஆனால், இங்கு மற்ற குழந்தைகளைப் பார்க்கும் போது தானாகவே படிக்கிறாங்க. குழந்தைகளை முதலில் தனியாக விடச் சொல்கிறார்கள் கொஞ்சம் பழகுவதற்கு- உடனிருந்து பெற்றோர் வழிகாட்டுவதற்கு உதவினால் நன்றாக இருக்கும் என்று கூறினார்..
ஜே.ஆகாஷ் பால்
செயிண்ட் மைக்கேல்ஸ் அகாடெமி
காந்திநகர், அடையார்.
தரமணியிலிருந்து வருகிறேன். அறிவியல் புத்தகங்கள் குறிப்பாக வேதியியல் புத்தகங்கள் படிக்க ரொம்பப் பிடிக்கும். பள்ளியில் நூலகம் இருக்கு. அங்கு இல்லாத புத்தகங்கள் இங்க இருக்கிறதைப் பார்த்ததும் ரொம்ப சந்தோசமா இருந்தது. தரமான புத்தகங்களாக உள்ளன. ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு விடுமுறையில் வரணும்னு நினைக்கிறேன்.
அம்மா விட்டுட்டு வேலைக்குப் போயிட்டாங்க. மதியம் வந்து கூட்டிட்டுப் போவாங்க. வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க முடியலையே என்ற வருத்தம் உள்ளது.
சாம் சுந்தர், இரண்டாம் வகுப்பு,
கே.வி. அய்.அய்.டி, அடையார்.
மேடவாக்கத்திலிருந்து வருகிறோம். டோரா, கிரிக்கெட்பற்றிய புத்தகங்கள் படித்தேன். மிக்கி மவுஸ் படித்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. நான்தான் போக வேண்டும் என்று அடம்பிடித்தேன். அப்பா அம்மா அழைத்து வந்தார்கள்.
செல்வ சுந்தர்,
ஆறாம் வகுப்பு,
கே.வி. அய்.அய்.டி, அடையார்.
பொதுஅறிவு, மிருகங்கள் பற்றிப் படிக்க ரொம்பப் பிடிக்கும். படித்தேன். ரொம்ப ஆசையா இருக்கு. எதிர்பார்த்ததைவிட நிறைய புத்தகங்கள் உள்ளன என்றனர் இந்த சகோதரப் பிஞ்சுகள்.
இவர்களது பெற்றோர் நம்மிடம் பேசும்போது,
ரொம்ப நன்றாக உள்ளது. இப்படி வைத்தால் தான் குழந்தைகளுக்குப் பழகும்தன்மை (கிவீபீமீ) ஏற்படும். அடிக்கடி குழந்தைகளை அழைத்து வரத் தோன்றுகிறது. ஒருதடவை-யாவது குழந்தைகள் அருகில் அமர்ந்து அவர்களது பயத்தைப் போக்கி வழிகாட்ட (நிவீபீமீ) அனுமதி கொடுத்தா நல்லா இருக்கும் என்றனர்.
ராம்பிரவீன், முதலாம் வகுப்பு
செயிண்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி,
பெசண்ட் நகர், சென்னை.
தரமணியிலிருந்து வருகிறேன். கதை படிக்க ரொம்பப் பிடிக்கும். போக்குவரத்து (Transport), கார்பற்றிய புத்தகங்கள் படித்தேன். ரொம்ப ஆர்வமா இருந்தது. இங்கயே இருக்கணும் போல இருக்கு என்று உற்சாகமாக இந்தப் பிஞ்சு பேசினார்.
இவரது தந்தை ராஜேஷிடம் பேசியபோது,
வரும்போது எப்படி இருக்குமோ என்று யோசித்தேன். ரொம்ப உபயோகமாக இருக்கிறது. வீடு பக்கம் என்பதால் அடிக்கடி வரலாம். புத்தகங்கள் தரமானவைகளாக உள்ளன.
குழந்தைகளுக்கான கருத்தரங்கு மாதம் ஒரு நாள் குறிப்பிட்ட தலைப்பில் நடைபெற்றால் நன்றாக இருக்கும். குறிப்பிட்ட துறை வல்லுநர்களை ஆலோசனை வழங்கச் செய்யலாம் என்றார் ராம்பிரவீனின் அப்பா.
அக்ஷிதா நரசிம்மன்,
ஈரோ கிட்ஸ், எல்.கே.ஜி, கோட்டூர்புரம்.
டயனோசர்ஸ் கதை ரொம்பப் பிடிக்கும். மிக்கிமவுஸ் படித்தேன். டயனோசர் கதை படிக்க புத்தகம் கிடைக்கலை. அப்பா தேடிப் பார்த்தார். குழந்தைகளோட ரொம்ப ஜாலியா இருக்கு. இங்க ஒரு புது தோழி கிடைத்துவிட்டாள் என்ற மகிழ்ச்சியில் பேசினார் இந்தப் பிஞ்சு.
இவரது தந்தை நரசிம்மனிடம் பேசியபோது,
தரமான புத்தகங்களாக உள்ளன. எனவே, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்ல பயனாக இருக்கும். நேற்று வந்து டயனோசர்ஸ் புத்தகம் பார்த்தேன். அதான் குழந்தையை இன்று அழைத்து வந்தேன். ஆனால் இன்று கிடைக்க-வில்லை. புத்தகங்களை அடுக்கிவைக்கும் முறையிலும், எடுத்துவைக்கும் முறையிலும் சரியான வழிமுறையைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்றார்.
திவ்யலட்சுமி,
அய்ந்தாம் வகுப்பு,
செயிண்ட் மைக்கேல்ஸ் அகாடமி,அடையார்.
கோட்டூர்புரத்திலிருந்து வருகிறேன். டாமன்செரி புத்தகங்கள் படித்தேன். ரொம்ப நல்லா இருந்தது. தொடர்ந்து வர ஆசை. ஒவ்வொரு விடுமுறையும் வரவேண்டும் என்று நினைக்கிறேன். கணினியில் விளையாடும் வசதி இருப்பதால் அடிக்கடி வருவேன் என்றார் இந்தப் பிஞ்சு. இவரது தாயாரிடம் பேசியபோது,
முதல்முறையாக குழந்தையை நூலகம் அழைத்து வருகிறேன். வீட்டிலிருந்து தொலைக்காட்சியைப் பார்த்து வீணாக விடுமுறையைப் போக்குவதற்குப் பதில், பயனுள்ள முறையில் விடுமுறை இருக்கட்டுமே என்று அழைத்து வந்தேன். அடிக்கடி அழைத்து வந்து படிக்கும் பழக்கத்தை குழந்தைக்கு உண்டாக்க வேண்டும். அருகில் இருப்பதால் அடிக்கடி வரும் வாய்ப்பு உள்ளது என்று பூரித்தார்.
எம்.விக்னேஷ்,
குமாரராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளி,
காந்திநகர், அடையார்.
வீடு அருகில் இருப்பதால் தினமும் ஒரு மணி நேரம் வந்து செல்கிறேன், நாட்டுப்புறக் கதைகள், நாட்டுப்புற நகைச்சுவைகள் என்று பல்வகைப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். பாடம் தொடர்பானவற்றை வகுப்பில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். எனவே, பொது அறிவு போன்ற பிற நூல்களைத் தேடிப் படிக்கிறேன். அனைத்துத் துறை சார்ந்த புத்தகங்களும் இருப்பதால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் தினமும் வருகிறேன் என்றார் இந்தப் பிஞ்சு. திறக்கப்பட்ட சில நாட்களிலேயே அனைவரையும் கவர்ந்து விட்டது அண்ணா நூற்றாண்டு நூலகம்.
சந்திப்பு : செல்வலெட்சுமி
படங்கள் : உடுமலை வடிவேல்
பெரியார் பிஞ்சு அக்டோபர் மாத இதழ் 2010

Friday, October 14, 2011

தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் கருத்துப் பேழை 6


தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் கருத்துப் பேழை 6


பேராசிரியர் முனைவர்  நம். சீனிவாசன்

திராவிடர் கழக மாநிலச் சட்டத் துறைத் தலைவர் கி.மகேந்திரன், வழக்குரைஞர்; இனிய பண்பாளர்; நல்ல கவிஞர்; சிறந்த பேச்சாளர். அவரது புதுக்கவிதை பெரியார் மலரை அலங்கரிக்கிறது. புதுவிதி செய்தார் பெரியார் - இது கவிதைத் தலைப்பு.

இதுவரை
உலகில்
யாரும் தோன்றவில்லை
உம்போல்
ஒரு பெரியார்!

என்று  தொடங்கும் கவிதை பெரியாரின் ஜாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, கடவுள் எதிர்ப்பு, மூடநம்பிக்கை அழிப்பு முதலியனவற்றை கவித் துவமாய் எடுத்துரைக்கிறது. தமிழர் தலைவர் வீரமணியின் பணிகளால் ஏற்படும் விளைவை, அக்கிரகாரங் களில் பூகம்ப அதிர்வுகள்! என்ற படிமக் காட்சி யாக்குகிறார். கவிக் கூற்று பொய்த்ததில்லை; திராவிடர் வெற்றி பெறுவர்.

பேராசிரியர் தமயந்தி இராசதுரை அவர்கள் நீதிக் கட்சியும் சுயமரி யாதை இயக்கமும் மகளிர்க்கு ஆற்றிய தொண்டுகளை விரிவாகப் பட்டியலிட்டிருக்கிறார். திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் செயல் துடிப்பு மிக்க களப்பணி வீரர்; ஓய்வறியாப் பிரச்சார பீரங்கி; நல்ல பேச்சாளர்; முனைவர் பட்டம் பெற்றவர்.

பெரியார் பிறந்த நாள் மலரில் அவர் எழுதிய கட்டுரை சாமியார்களின் முகத் திரையைக் கிழிக்கிறது. அவருடைய எழுத்து நடையில் துள்ளலும் இருக் கிறது; எள்ளலும் இருக்கிறது. படித்துச் சுவைக்க லாம். பெரியாரின் சொத் துக்கள் பொது நலத்திற்குப் பயன்படுவதை எடுத்துக் காட்டி, நெஞ்சை நிமிர்த்திக் கூறலாம் பெரியாரே உயர்ந்தவர் என்று நிறுவுகிறார்.

பெரியாரும் வள்ளுவரும்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் சுப.திண்ணப்பன் அவர்கள் பெரியார் பிறந்த நாள் மலரில் பெரியாரும் வள்ளுவரும் என்ற தலைப்பில் அருமையான கட்டுரையை எழுதியுள்ளார். குறளை ஆழமாகக் கற்று பொருள் உரைப்பவர் பெரியார் என்பதை பேராசிரியர் சுப.திண்ணப்பன் நிறுவுகிறார்.

திராவிடர் கழகப் பொதுச் செய லாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் கடும் உழைப்பாளி; எப்போது பார்த்தாலும் எழுதிக் கொண்டே இருப்பார். பெரியார் கொள்கை- இயக்கம் இவை தவிர அவர் வேறு எதையும் பேசி நான் பார்த்ததில்லை. இயக்க வரலாற்றில் சந்தேகம் கேட்டால் உடனே பதில் சொல்லு வார்; அரை மணி நேரத்தில் ஆதாரத்தோடு நேரில் வருவார்.

மதிப்பிற்குரியவர். இயக்க நிகழ்வுகளை ஆவணப்படுத்தி இருக்கிறார். எந்தத் தகவல்களையும் உடனே எடுக்க இவருடைய உழைப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்வது பெரியாரால்தான் என்னும் கட்டுரை மலரில் இடம் பெற்றிருக்கிறது.

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மலருக்கு எழுதியிருக்கின்ற கட்டு ரைகள் யாவும் ஆவணமாக இருப்பதைப் படிப்பவர்கள் உணர்வார்கள். இவ் வாண்டு சமூக நீதியின் பயணத்தை ஆவணமாக்கித் தந்துள்ளார். 

1916 தொடங்கி 2010 வரை நடைபெற்ற முயற்சி - பிரச்சாரம் - போராட்டங்கள், யாவும் பத்து பக்கங்களில் நிறைந்து கனிந்து விரவிக் கிடக்கின்றன. முனைவர் பட்ட ஆய்வில் கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் ஒரே கட்டுரையில் பெற முடிகிறது.

தந்தை பெரியார் 133 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் கொள்கை விளக் காய்ச் சுடர்விடுகிறது. அய்யாவின் அருமை பெருமைகளை அகிலத்திற்கு அறிவிக்கிறது.

சான்றோர்களின் சிந்தனை ஊற்று எழுத்துக்கள் பதிவு பெற்றிருக்கின்றன.

இயக்கச் செயல்பாடுகள் இளைஞர் களின் கவனத்திற்குச் சென்றிருக் கின்றன. மலரின் கருத்துக்கள் மக்கள் மனதில் பரவட்டும்!
அய்யாவின் மனித நேயச் சிந்தனை கள் அகிலத்தை வெல்லட்டும்!
(நிறைவு)

Thursday, October 13, 2011

தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் கருத்துப் பேழை - 5


தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் கருத்துப் பேழை


நீதிக்கட்சியின் தோற்றத்தைப் படம் பிடிக்கிறார். நீதிக்கட்சியைப் பற்றி, தியாகராயரைப் பற்றி, பெரியார் கூறிய கருத்துக்களைத் தொகுத் தளித்திருக்கிறார். இலவச நண்பகல் உணவுத் திட்டத்தின் வித்து எங் கிருக்கிறது என்பதை அவர்தம் ஆராய்ச்சியால் வெளிப்படுத்தியி ருக்கிறார். பார்ப்பனரல்லாதாரின் கல்விக்கு நீதிக்கட்சி ஆற்றிய தொண்டினை இக்கட்டுரை எடுத் துரைக்கின்றது. செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது சுயமரியாதை மாகாண மாநாட்டில் முதலமைச்சர் சுப்பராயன் அவர்களும் ஊ.பு.அ. சவுந்திரபாண்டியன் அவர்களும் பெரியாரின் தொண்டினைப் புகழ்ந் துரைத்ததை இக்கட்டுரை எதிரொ லிக்கின்றது. 80 ஆண்டுகள் நிறைந்த பேராசிரியர் இராசதுரை யின் படைப்புகளில் ஆழமான விஷ யங்கள் அணிவகுக்கும்; வர்ணாசிரம தர்மத்தை எதிர்க்கும்போது வீரம் கொப்பளிக்கும்.
முனைவர் பேராசிரியர் ந.க.மங் களமுருகேசன் அவர்கள் சிறந்த வரலாற்றுப் பேராசிரியர். அவர் எழுதிய நூல்கள் பல பல்கலைக் கழகங்களில் பாடநூல்களாக வைக் கப்பட்டிருக்கின்றன. அவர் பெயரை உச்சரிக்காத வரலாற்றுத் துறைகள் இருக்காது. எந்த விஷயமானாலும் வேர் வரைச் சென்று தகவல்களைத் திரட்டி தமக்கே உரித்தான நடையில் அருமையாக வழங்கும் ஆற்றல் பெற்றவர். கும்பகோணம் மகாமகம் - பெரியார் பார்வை என்னும் கட்டுரை பெரியார் பிறந்த நாள் மலரை அலங் கரிக்கின்றது. மகாமகம் பற்றிய புராணச் செய்திகளும், பூமி சூரி யனைச் சுற்றும் அறிவியல் செய்தி களும் குளத்தைச் சுற்றி எழுப்பப்பட்ட மண்டபக் கோயில்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளும் இக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.
தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை வியந்து போற்றும் பேராசிரியர் மங்களமுருகேசன், பெரியார் நடையில் உளம் உருகி மெய் சிலிர்த்து நிற்கிறார். அவர் கேட் கிறார் : தமிழ்ப் பண்டிதர்களே, தமிழ் அறிஞர்களே, மெத்தப் படித்த மேதாவிகளே, இது போர் (பெரியார் கேட்டது போல்) நீங்கள் படித்த, படைத்த இலக்கியம் - வினா இலக்கியம் ஏதாவது இருக்கிறதா? இதுபோல் வினாக்களாலேயே வேறு எந்த மொழியிலாவது, எந்த அறிஞ ராவது, படைத்திருக்கிறாரா? முடிந் தால் காட்டுங்கள் என்று பேரா சிரியர் விடுக்கும் அறைகூவல் பெரி யாரின் பெருமையை உலகிற்கு உணர்த்துகிறது.
மு.நீ. சிவராசன் அவர்கள் தமிழ் இலக்கியங்களைக் கற்றறிந்த அறிஞர். தெளிவான உச்சரிப்பில் கருத்தை உரைக்கும் திறன் பெற்றவர். புராண, இதிகாசங்களின் இயல்பினை நன் குணர்ந்தவர். பெரியார் பிறந்த நாள் மலரில் அவர்,
வழிவழித் தொடரும் ஆரியர் திராவிடர் போராட்டமே எனும் கட்டுரை எழுதியி ருக்கின்றார். பாகவ தத்தில் வேதவியாசர் கூற்று, தமி ழகத்து பழமொழிகள், மனுதர்ம வாசகங்கள், இராமாயண, மகா பாரதக் கதைகள், பெஞ்சமின் வாக்கர் எழுதியது, உச்சநீதிமன்ற நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜூ கூறியது, பெரியாரின் கருத்துக்கள் என்று ஆரியர்-திராவிடர் போராட் டத்தை ஓர் ஆவணமாக்கித் தந்துள்ளார். வேனன் என்னும் மன்னனை வஞ்சனை யால் வீழ்த்தியதையும், இரணியனை மகன் துணை கொண்டே கொன்றதும், தம்பி விபீஷணன் காட்டிக் கொடுக்க அண்ணன் இராவணன் வீழ்ச்சி பெற்றதையும், அசுர வேந்தர்களை தித்திக்கும் திலோத்தமை தீர்த்துக் கட்டியதையும், குருவால் வஞ் சிக்கப்பட்ட ஏகலைவனின் சோகச் சரித் திரத்தையும், இராமன் செய்த சம்பூகன் கொலையையும் மு.நீ.சிவராசன் தூரிகை ஓவியமாய் வரைந்து செல் கிறது. சென்னை விமான நிலையத்தில் பெருந் தலைவர் காமராசர் பட்ட அவமானங் களையும் கட்டுரை விவரிக்கிறது.
காதலைப் பற்றி பெரியார்
காதலைப் பற்றி தந்தை பெரியார் 1931 ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை மலரில் இடம் பெற்றிருக்கின்றது. அய்யாவின் வளமான சிந்தனையை உள்ளடக்கிய இக்கட்டுரை ஆங்கி லத்தில் மொழி பெயர்க்கப்பட்டால் எழுத்தாளர்களின் கவனத்திற்குச் சென்றால்
அய்யாவின் அத்தனை வரி களும் மேற்கோளாய் பரவும், உலாவரும்.
முனைவர் பேராசிரியர் ப.காளிமுத்து அவர்கள் அற்புதமான சொற்சித்திரத்தை - கருத்தோவியத்தை ஈரோடும் ஏதென்சும் என்னும் தலைப்பில் மலரில் படைத் திருக்கிறார். சாக்ரடீசைப் பற்றி விரிவாகக் குறிப்பிடும் காளிமுத்து தந்தை பெரியார் அவர்களும் சாக்ரடீசும் ஒன்று படுகின்ற இடங்களையும் வேறுபடும் இடங் களையும் கட்டுரையில் மனங்கொள் ளுமாறு விவரித்திருக்கிறார்.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்று நஞ்சருந்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டவர் சாக்ரடீஸ் என்றும், தம் வ ழ்நாளிலேயே தம்முடைய கொள்கைகள் வெற்றி பெற்று அரசியல் அதிகாரத் தைக் கைப்பற்றி அரியணையில் அமர்ந்த காட்சியைக் கண்டு மகிழ்ந் தவர் தந்தை பெரியார் என்றும் ஒப் பிட்டுக் காட்டுகிறார் காளிமுத்து.
தந்தை பெரியாரின் அன்பு உள்ளத் திற்கு, பெருந்தன்மை மிக்க பரந்த மன ப்பான்மைக்கு ஆயிரமாயிரம் சான்று களை அடுக்கிக் காட்டலாம். எழுத்தில் நின்று நிலைப்பவை கொஞ்சம்.  வர லாற்றில் பதிவாகாமலே மறைந்தது ஏராளம். தந்தை பெரியாரின் பெருமை யைப் பறைசாற்றும் கட்டுரையினை தமிழறிஞர் அ.ச.ஞான சம்பந்தம் எழுதியிருக்கின்றார். மிகச் சிறப்பான  அக்கட்டுரை பெரியார் பிறந்த நாள் மலரில் இடம் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
புத்தர் பெரியார் -நாத்திகம்
க.திருநாவுக்கரசு சீரிய சிந்தனை யாளர்; திராவிட இயக்க எழுத்தாளர்; அவரை வரலாற்றுக் களஞ்சியம்என்று போற்றலாம். நிலைய நூல்களை வாசிக்கும் அறிஞர்; தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் மேதை. பெரியார் பிறந்த நாள் மலருக்கு அவர் எழுதிய, புத்தர் பெரியார் நாத்திகம் என்னும் கட்டுரை மலரின் பொருட் செறிவை அடர்த்தியாக்கி இருக்கிறது. திருநாவுக்கரசு தீட்டியி ருக்கும் கட்டுரை மீணடும் மீண்டும் படித்து மூளையில் பதித்துக் கொள்ள வேண்டிய கருத்துக் குவியல்.
புத்தரிடமிருந்து தத்துவமேதை தந்தை பெரியார் பார்ப்பனர் சேர்ப்பு, கடவுளின் இருப்பு, பெண்ணுரிமை,ஆன்மா என்று நான்கு நிலைகளில் வேறுபடுவதை எடுத் துரைக்கின்றார். பகுத்தறிவு பற்றி எஸ். இராமநாதன் கட்டுரை கேட்க, பண்டித ஜவகர்லால் நேரு எழுதிய பதில் கடிதம் கழகத் தோழர்களுக்குப் புதிய செய்தி யாகும்.
சாருவாகம், சாங்கியம், மீமாம்சை, சமணம் பற்றியெல்லாம் சுருக்கமாய் விளக்குகிறது இக்கட்டுரை. ஆஸ்திகம் - நாஸ்திகம் பற்றி அண்ணா திராவிட நாட் டில் தீட்டிய கருத்தாழம் மிக்க சொல் லோவியம் இக்கட்டுரையை அணி செய்கிறது. பல நூல்களின் மூலம் கிடைக்க வேண்டிய அரிய செய்திகளை இந்த ஒரு கட்டுரை மொத்தமாக சத்தமில்லாமல் சிந்தைக்குள் சொல்லிச் செல்கிறது.
தந்தை பெரியாரின் பொதுவுடைமைக் கொள்கை
மு.பரமசிவம் எழுதியுள்ள பொது வுடைமைக் கொள்கையும் பெரியார் ஈ.வெ.ரா.வும் கட்டுரை பல வரலாற்றுச் செய்திகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. குடிஅரசு இதழ் நிகழ்த்திய பொதுவுடைமைப் பிரச்சாரம், புரட்சி ஏடு வெளியிட்ட சோவியத் ரஷ்யாவின் நீதி முறை, அய்ந்தாண்டுத் திட்டம், குடி அரசு புத்தகாலயம் வெளியிட்ட பொதுவு டைமைத் தத்துவ நூல், சுயமரியாதை மாநாட்டில் லெனின் படத்திறப்பு, பெரியாரின் சோவியத் பயணம் என்று வரலாற்றுத் தகவல்களை நிரல்பட வழங்கியிருக்கின்ற உயரிய கட்டுரை.
குடிஅரசு, ரிவோல்ட், புரட்சி, பகுத் தறிவு, விடுதலை, கூந துரளவஉந உண்மை, கூந ஆடினநச சுயவடியேடளைவ   முதலியன பெரியார் நடத்திய இதழ் களாகும். அய்யாவின் நோக்கத்தி னையும் அவர் கொண்டிருந்த இலக் கினையும் பத்திரிகை எழுத்தின் துணை கொண்டே வாசகர்களின் பார் வைக்கு விருந்தாய் பரிமாறப்படும் பகுதி மலரில் இடம் பெற்றுள்ள பகர்வது பகலவன் என்னும் பகுதியாகும். பழைய இதழ்கள் அப்படியே ஸ்கேன் செய்யப்பட்டு பழைமை மாறாமல் புதுப் பொலிவுடன் தரப்பட்டிருக் கிறது. தந்தை பெரியாரின் இலட்சிய வேட்கையினை உணர்த்தும் இப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமாகும்.
கடந்த பெரியாராண்டில் கழக டைரி என்னும் பகுதி மலரில் இடம் பெற் றிருக்கிறது. இந்தத் தொகுப்பினால் விளையும் பயன் மிகுதி. படிக்கின்ற போது இவ்வளவு செயல்பாடுகளா என்ற மலைப்பை ஏற்படுத் தும். வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்ப்பதற்குக் கழக டைரி பேருதவி யாய்த் திகழ்கிறது. இயக்கப் போராட் டங்களை - செயல்பாடுகளை விடுதலை நாளிதழில் மூழ்கி முத்தெடுக்கும் முன் கழக டைரியில் எளிதாய் கண்டு கொள்ள முடிகிறது. நாள்தோறும் உழைத்தாலன்றி கழக டைரி தொகுப் பது அரிது என்பதைக் கற்றவரே உணர்வர்.
ஆசிரியரின் அறிக்கைகள் தேதி வாரி யாக -தலைப்புகளுடன் வெளி யிடப்படுவது தேவையான ஒன்றாகும். தலைவரின் கையெழுத்துக்கள் - அறிக்கைகள் யாவும் பெரியார் திடல் நூலகத்தில் ஆவணமாகப் பாதுகாக் கப்பட்டிருப்பதைத் தோழர்கள் கண்டு மகிழலாம். தமிழர் தலைவர் அவர்களின் சுற்றுப் பயணப்பட்டியல் வியப்பை ஏற்படுத்தும். ஓய்வில்லா அலைச்சல்; பெரியார் பணி முடிக்க இடைவிடாப் பிரச்சாரம்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...