6 மாதத்தில் ரூ.18,000 கோடி எடுக்கப்பட்டது...
யெஸ் வங்கியுடன் நிதி தொடர்பான செயல்பாடு
களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் பெரிய அளவில் இடையூறுகளை
சந்திக்க நேர்ந்துள்ளது.
யெஸ் வங்கியின் அடுத்த நடவடிக்கை என்ன
என்பது தொடர்பாக பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் நிலவி வருகின்ற நிலையில் கடந்த
ஏப்ரல் முதல் செப்டம்பர் மாத காலம் வரையில் ரூ. 18 ஆயிரம் கோடி வரை நிதி
வைப்புதாரர்கள் இந்த வங்கியில் இருந்து எடுத்துள்ளனர் என்று அறிக்கை ஒன்று
வெளியாகியுள்ளது. அக்டோபர் 2019 முதல் பிப்ரவரி 2020 வரையில் மேலும் 20%
வரை வாடிக்கையாளர்கள் தங்களின் பணத்தினை திரும்பப் பெற்றிருப்பார்கள் என்று
நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பண மோசடி வழக்கில் மும்பையில் அந்த
வங்கியின் நிறுவனர் ராணா கபூர், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்
டார். மார்ச் 11ஆம் தேதி வரை விசாரணைக் காவலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார்.
அந்த வங்கியின் ஆண்டு அறிக்கையின் படி,
மார்ச் 31ஆம் தேதி 2019ஆம் ஆண்டு அவ்வங்கியின் வைப்பு நிதி ரூ. 2,27,610
கோடி ஆகும். ஆனால் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி அந்த வங்கித் தொகை 2,09,497
கோடியாக குறைந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மற்ற
வங்கிகளிலோ, ரெப்போ விகிதம் 135 அடிப் படை புள்ளிகள் குறைக்கப்பட்ட
பின்னர், 2019-20 ஆம் ஆண்டில், வைப்புத்தொகைகளில் 9.2 உயர்வு கண்டுள்ளது.
யெஸ் வங்கியில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு வங்கியில் இருந்து
எடுக்கப்படும் பணத்தின் அளவு மேலும் மேலும் அதிகரிக்கத் துவங்கியது.
வங்கியில் பிரச்சினை இருப்பதால் டிசம்பர் மாதத்துடன் முடிவுற்ற மூன்றாம்
காலாண்டு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வைப்புத் தொகையின்
அளவு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு மேலும் 10 முதல் 20 சதவீதம்
குறைந்திருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தை அடிப்படையாக கொண்டு இயங்கி
வரும் தொழில் நிறுவனம் ஒன்று தங்களின் வைப்பு நிதியை மொத்தமாக திரும்ப
எடுத்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது. அவர்களைப் போலவே திருப்பதி தேவஸ்தானம்
ரூ. 1300 கோடியை திரும்ப எடுத்துள்ளது. வதோதரா முனிசிபல் கார்ப்பரேசனால்
நிர்வகிக்கப்படும் வதோதரா ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் கம்பெனி தங்களின்
ரூ. 265 கோடியை ஆர்.பி,அய். அறிவிப்பிற்கு ஒரு நாள் முன்பு எடுத்தது
குறிப்பிடத்தக்கது. பிட்ச் ரேங்கிங்ஸ் என்ற பொருளாதார கணக்கீட்டு நிறுவனம்
வெளியிட் டுள்ள அறிக்கை ஒன்றில் ”யெஸ் வங்கியை கையகப்படுத்தும் முறை.பணம்
செலுத்தியவர்களின் நம்பிக்கையை பெறுவதாக அமைந்திருக் கிறது ஆனால் ரிசர்வ்
வங்கியின் இந்த முடிவு எதிர்பார்க்காத விளைவு களையும் ஏற்படுத்தலாம்.
தங்களின் வைப்பு நிதியை பாதுகாப்பான இடங்களில் சேமிக்க வேண்டும் என்று மற்ற
வங்கிகள் தூண்டினால் விளைவுகள் வேறுவிதமாகவே அமையும். இது பணப் புழக்கக்
குறைவை ஏற்படுத்தும். குறிப்பாக பலவீனமான வைப்பு நிதியுடன் இயங்கும் சிறிய
தனியார் வங்கிகளுக்கு இது பெரும் பாதிப்பினை ஏற் படுத்தும்” என்று
குறிப்பிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி விதித்த தடையால் பல
நிறுவனங்களின் முதலீடுகள் வங்கியில் சிக்கியுள்ளது. மார்ச் 31, 2019 அன்றைய
கணக்கின் படி 20 வாடிக்கையாளர்களின் மொத்த மதிப்பானது ரூ. 24,673
கோடியாகும். இது யெஸ் வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் மொத்த பணத்தின்
10.84%-த்தை கொண்டது. செப்டம்பர் 2017ஆம் ஆண்டு முதல் மார்ச் 2019ஆம் ஆண்டு
வரை இந்த வங்கியில் வைக்கப்பட்ட வைப்புத் தொகையின் அளவு 1,57, 989 கோடியாக
உயரத் துவங்கியது. இந்த காலகட்டத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது.
ரிசர்வ் வங்கியானது யெஸ் வங்கியின் மறுகட்டமைப்பிற்கான திட்டங்களை
வெளியிட்டதுடன் எஸ்.பி.அய். வங்கி, யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்கியது
தொடர்பாகவும் அறிவித்தது.
No comments:
Post a Comment