Showing posts with label பிற நூல்களிலிருந்து. Show all posts
Showing posts with label பிற நூல்களிலிருந்து. Show all posts

Saturday, December 24, 2011

பூணூல் அணிவது தேவைதானா?


 - காந்தியார்


ரிஷிகேசத்தில் துறவிகள் பலர் என்னைப் பார்க்க வந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் மிகுந்த பற்றுக் கொண் டிருந்தார். ஃபோனிக்ஸ் கூட்டத்தாரும் அங்கே இருந்தனர். அவர்களைப் பற்றி அத்துறவி என்னைப் பல கேள்விகள் கேட்டார். மதம் பற்றி நாங்கள் உரை யாடினோம். இதில் எனக்கு மிகுந்த அக் கறை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார். கங்கையில் நீராடிவிட்டு, உடலில் சட்டையில்லாமலும் தலையில் தொப்பியில்லாமலும் நான் வந்துகொண் டிருப்பதைப் பார்த்தார். தலையில் உச்சிக் குடுமியும், உடலில் பூணூலும்  இல்லா மல் நான் இருந்ததைக் கண்டு அத் துறவிக்கு மனவேதனையாகிவிட்டது.

இந்து தர்மத்தில் நம்பிக்கையுள்ள நீங்கள், பூணூல் அணியாமலும், உச்சிக்குடுமி இல்லாமலும் இருப்பதைக் காண என் மனம் வேதனைப்படுகிறது. இவை இரண்டும் இந்து தர்மத்தின் புறச் சின்னங்கள். ஒவ்வொரு இந்துவுக்கும் இவை இருந்தாக வேண்டும் என்று கூறினார்.

பூணூல் அணிவதைக் கைவிட்ட கதை

இந்த இரண்டையும் நான் ஏன் கைவிட்டேன் என்பதே ஒரு தனிக் கதையாகும். நான் பத்து வயது சிறுவனாக இருந்தபோது, பார்ப்பனச் சிறுவர்கள் தாங்கள் அணிந்திருந்த பூணூலில் சாவிக் கொத்துகளைக் கோத்துத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் பொறாமைப்படுவது உண்டு. நானும் அப்படிச் செய்யவேண்டும் என்று ஆசைப் பட்டேன். கத்தியவாரிலிருக்கும் வைசிய குடும்பத்தினர் அக்காலத்தில் சாதாரணமாகப் பூணூல் அணிந்து கொள்வதில்லை. ஆனால், முதல் மூன்று வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டியது அவசியம் என்று வற்புறுத் தும் இயக்கம் ஒன்று அப்போதுதான் ஆரம்பமாகி இருந்தது. இதன் காரணமாக காந்தி சாதியைச் சேர்ந்த சிலர் பூணூல் போட்டுக் கொண்டனர். எங்களில் இரண்டு மூன்று சிறுவர்களுக்கு ராம ரட்சை கற்பித்துக் கொண்டிருந்த பார்ப்பனர் எங்களுக்குப் பூணூல் போட்டு விட்டார். நான் சாவிக்கொத்தை அதில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், ஏதோ ஒரு சாவிக் கொத்தைக் கண்டுபிடித்து என் பூணூலில் மாட்டிக் கொண்டேன். பிறகு பூணூல் அறுந்து போய்விட்டது. அது போய்விட்டதே என்று அப்போது நான் வருத்தப் பட்டேனா  என்பது பற்றி எனக்கு இன்று நினைவில்லை. ஆனால் அதற்குப் பிறகு புதிதாகப் பூணூலைத் தேடி நான் அணிந்து கொள்ளவில்லை என்பதை மட்டும் அறிவேன்.

பூணூல் அணிவது தேவையற்ற பழக்கம்

நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு இந்தியாவிலும் தென் ஆஃப்பிரிக்கா விலும் பலர், நல்ல எண்ணத்தின் பேரி லேயே என்னைப் பூணூல் அணியும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால், அவர்கள் முயற்சி வெற்றி அடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் அணிந்து கொள் ளக்கூடாது என்றால், மற்ற வருணத் தாருக்கு மட்டும் அதை அணிந்து கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று அவர்களுடன் வாதாடினேன். பூணூல் அணிந்து கொள்வது தேவை யற்ற பழக்கம் என்பது என் கருத்து. ஆதலால், அதை அணியவேண்டும் என்பதற்குப் போதுமான காரணம் இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. பூணூலைப் பொருத்தவரையில் எனக்கு எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் அதை அணியவேண்டும் என்பதற்குரிய நியாயம்தான் எனக்குத் தென்படவில்லை.

வைணவன் என்ற முறையில் என் கழுத்தில் துளசி மாலை அணிந் திருந்தேன். குடுமி வைத்திருப்பது அவசியம் என்று எங்கள் வீட்டுப் பெரியவர்கள் கருதி வந்தனர். ஆயினும், நான் இங்கிலாந்துக்குப் புறப்பட விருந்த சமயத்தில் எனது உச்சிக் குடுமியை எடுத்து விட்டேன். எடுக்காதிருந்தால் தலையில் தொப்பி இல்லாதபோது அதை யாராவது பார்த்துவிட்டால் கேலி செய்வார்கள் என்றும், ஆங்கிலேயர்கள் என்னை ஒரு காட்டுமிராண்டி என்று நினைப்பார்கள் என்றும் அப்போது நான் எண்ணினேன். இந்த கோழைத் தனமாக உணர்ச்சியின் காரணமாக, தென் ஆஃப்பிரிக்காவில் மத நம்பிக்கையுடன் உச்சிக்குடுமி வைத்திருந்த என் அண்ணன் மகனான சகன்லால் காந்தி யையும் குடுமியை எடுத்துவிடுறு செய்தேன். ஏனெனில், அவருடைய பொதுத் தொண்டுக்கு அக்குடுமி இடையூறாக இருக்குமென அஞ்சினேன். ஆதலால், அவர் மனத்துக்குச் சங்கடமாக இருக்குமே என்பதைக் கூட எண்ணாதபடி, அவர் குடுமியை எடுக்கும்படி செய்துவிட்டேன்.

பூணூல் அணியும் உரிமை எப்போது?

இவற்றையெல்லாம் மேற்கண்ட துறவியிடம் கூறி விட்டு நான் மேலும் 
கூறியதாவது:-

கணக்கற்ற இந்துக்கள் பூணூல் அணியாமலேயே இந்துக்களாக இருந்து வர முடிகிறது. பூணூல் அணிய வேண்டும் என்பதற்கு எந்த விதமான நியாயமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆதலால் அதை நான் அணிந்து கொள்ளப் போவதில்லை. மேலும் பூணூல் என்பது ஆன்மீகப் புனர்வாழ்வுக்குரிய சின்னமாக இருக்க வேண்டும். அதை அணிகிறவர், உயரிய தூய வாழ்க்கை நடத்துவதற்கு முயல் பவராகவும் இருக்க வேண்டியது முக்கி யம். ஆனால், இந்து மதமும் இந்தியா வும் இன்றுள்ள நிலைமையில், அத்தகைய தத்துவத்தோடு கூடிய ஒரு சின்னத்தை அணிந்து கொள்வதற்குத் தங்களுக்கு உரிமையுண்டென்று இந்துக்கள் காட்டமுடியுமா  என்று அய்யப்படுகின் றேன். இந்து சமயத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு - தாழ்வு என்ற வேற் றுமைகள் எல்லாம் நீங்கி, அதில் இன்று மலிந்து கிடக்கும் பல்வேறு தீமைகளும், நடிப்புகளும் நீங்கிய பிறகே இந்துக் களுக்குப் பூணூல் அணியும் உரிமை ஏற்பட முடியும்.

பூணூலைப் பற்றிக் கவலை இல்லை

ஆதலால் பூணூல் அணிந்து கொள் வது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது. ஆனால், குடுமியைப் பற்றி நீங்கள் கூறும் கருத்து சிந்திக்கத் தக்கதே. ஒரு சமயம் குடுமி வைத்திருந்து, வெட் கம் என்ற தவறான எண்ணத்தினால் அதை எடுத்துவிட்டேன்.

ஆகவே, மீண்டும் அதை வளர்த்துவிட வேண்டும் என்று உணர்கிறேன். என் தோழர் களுடன் இதைப் பற்றி விவாதிப்பேன்.

பூணூலைக் குறித்து என்னுடைய நிலையைத் துறவியார் ஒப்புக் கொள்ள வில்லை. அதை அணிய வேண்டியது இல்லை என்பதற்கு எனக்கு என்ன நியாயங்களாகத் தோன்றினவோ, அவையே அணிய வேண்டும் என்ப தற்குக் காரணங்களாக அவருக்குத் தோன்றின!
இவ்விஷயத்தில் ரிஷிகேசத்தில் நான் கொண்டிருந்த கருத்து எதுவோ அதுவே இன்றும் என் கருத்தாகும்.

சமயங்கள் பல இருந்து வரும் வரையில், ஒவ்வொரு சமயத்திற்கும் வெளிப்படையான சின்னம் ஏதாவது அவசியமாக இருக்கலாம். ஆனால், அந்தச் சின்னமே பிரமாதமாக்கப்பட்டு, இன்னொரு மதத்தை விட தன் மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன் படுத்தப்படுமாயின் அப்பொழுது அச்சின்னம் புறக்கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும்.,
ஹிந்து சமயத்தை மேன்மைப் படுத்துவதற்கான சாதனமாக பூணூல் இன்று எனக்குத் தோன்றவில்லை. ஆகை யால், அதில் எனக்குக் கவலையும் இல்லை.
- சுயசரிதை

Thursday, November 24, 2011

பிறவிக் குணம்


பிறவிக் குணம்
"தான்"  என்ற கர்வம் தலைதூக்கி நிற்கும், மற்றும் ஒரு குணம் கெட்டவன்தான் பார்ப்பனன்; தனக்காக மட்டுமே வாழ்பவன்; எல்லாமே அவனுக்குச் சொந்தம் என்றும், மற்றவர்களுக்காக அவன் எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்ற எண்ணத்தோடு வளர்க்கப்பட்டவன். இதை அவனுடைய வாழ்க்கையில், தன்னுடைய எல்லா நடவடிக்கைகளிலும் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பவன். பொது நன்மையையும், நாட்டுப்பற்றையும்கூட தன்னுடைய சொந்த நலனுக்காகத் தூக்கி எறிந்து விடுவான். தன்னை வளப்படுத்திக் கொள்வதற்காக, காட்டிக் கொடுப்பது, நன்றிகெட்டதனம், திருட்டுத்தனம் ஆகியன அவனுக்கு ஒரு பொருட்டல்ல. தன்னுடைய நலனுக்காக, மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டு அவர்களைக் கேவலப்படுத்தி, மனதார வெறுப்பது அவனுடைய பிறவிக் குணம். சிறிதும் நன்றியுணர்ச்சியற்று, மற்றவர்களின் துயரத்தைக் கண்டுகொள்ளாமல் இரக்கமற்றவனாய், என்றுமே தன்னைப் பற்றியே சிந்தனை உள்ளவன். அவன் யாருக்காவது, ஏதாவது உதவி செய்கிறான் என்றால் அது அவனுடைய ஜாதிக்காரனுக்காக மட்டுமே இருக்கும். மற்றவர்கள் எல்லாம் அவனுக்குக் கீழானவர்கள் என்று படிப்பிக்கப்பட்டவன். அவனுடைய வளர்ப்பே, அவனால் முடிந்த மட்டும் தன்னை உயர்த்திக் கொள்ளக் கடமைப்பட்டவன் என்பதோடு, மற்றவர்களைக் கேவலப்படுத்துவது, கொடூரமாக நடத்துவது மற்றும் தன்னுடைய தேவைகளுக்காக அவர்கள் பணிபுரிபவர்கள் என்பதாகும். மற்றவர்களுக்காக ஓர் நூலிழை அளவுகூட எதுவுமே செய்யாமல், மற்றவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டுமே என்ற எண்ணமே இல்லாமல் இருப்பவன்.
அவன்தான் பார்ப்பனன்!
(அபேதுபா எழுதியுள்ள இந்தியர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் மதச் சடங்குகள் என்ற பிரெஞ்சுப் புத்தகத்திலிருந்து)
- தமிழாக்கம்: பெரியார் திறலோன்
(இந்தப் பிரெஞ்சுப் புத்தகம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. இதன் ஆங்கில மொழியாக்கம், ஜிபிணி விகிழிழிணிஸிஷி மிழிஷிஜிமிஜிஹிஜிமிளிழிஷி கிழிஞி சிணிஸிளிவிளிழிமிணிஷி ளிதி மிழிஞிமிகிழி என்று ஆங்கில மொழியிலும் புத்தகமாக வெளிவந்துள்ளது.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், செத்துப்போன காஞ்சி விசுவநாதன் சங்கராச்சாரி, கோமாளி சோ, அரசியல் அனாதை சுப்ரமணியசாமி, பாலக்காட்டுப் பார்ப்பனன் சேஷன் ஆகியோரைக் கவனிக்கும்போது பிரெஞ்சு எழுத்தாளர் அன்று எழுதியது இன்றும் சரியாக இருப்பதுதான்).

பழைமைக்கு அடி!


ஓ ஜ ஜி! உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன். 

நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்யவில்லையென்று கருதுகிறீர்களா?

மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்

காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்லவில்லையே? ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர்களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல்வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார்.

நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற்காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்பதற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர். இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்புகிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வதில்லையா?

எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும்தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப்படுகிறது - இவ்வளவையும் பார்த்துக்கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

ஆதாரம்: (வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூல்
ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்)


Tuesday, November 8, 2011

பிரிட்டீஷாரின் பேச்சாளர் ராஜாஜி!


  பிரிட்டீஷாரின் பேச்சாளர் ராஜாஜி!       

1942ஆம் ஆண்டு ஆகஸ்டுப் புரட்சியில் கைதான தலைவர்களெல்லாம் 1945ஆம் ஆண்டில் ஒருவர் பின் ஒருவராய் விடுதலை செய்யப்பட்டு வந்தனர். வைஸிராய் லார்டு வேவல் காங்கிரஸ் தலைவர்களையெல்லாம் அழைத்து சமரசம் பேசினார். முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில், காங்கிரசை விட்டு விலகியிருந்த ராஜாஜியையும் அழைத்துப் பேசினார்.

இதே சமயத்தில் ராஜாஜி மீண்டும் காங்கிரசில் சேர்ந்துவிட வேண்டும் என்று விரும்பி அதற்காக முயன்று வந்தார். ஆனால், ஆகஸ்டுப் போராட்டத்திற்கு எதிராகவும், நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவாகவும் அறிக்கை விட்டு காங்கிரசை விட்டு விலகிய அவரை மீண்டும் காங்கிரசில் சேர்ப்பதை பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்கள் எதிர்த்தனர்.

1942 மே மாதத்தில் அலகாபாத் நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுப்பதை ஆதரித்து ராஜாஜி ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதற்கு ஆதரவாக 15 வாக்குகளும், எதிராக 120 வாக்குகளும் கிடைத்தன. அதைத் தொடர்ந்து ராஜாஜி காரியக் கமிட்டியிலிருந்தும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகினார்.

தன்னுடைய (பாகிஸ்தான்) தீர்மானம் தோற்றாலும், தாம் தொடர்ந்து போராடப் போவதாகவும் அறிவித்தார் ராஜாஜி. இதனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நோட்டீஸ் அனுப்பியது. இது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியிலிருந்தும், சட்டசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகும்படி அவருக்கு மகாத்மா காந்திஜியே கடிதம் எழுதினார்.

வல்லபாய் பட்டேல் வற்புறுத்தியதால் தான் ராஜாஜிக்கு காந்திஜி இப்படி ஒரு கடிதத்தை எழுதினார் என்று பட்டாபி சீத்தாராமையா குறிப்பிட்டிருக்கிறார். இதன்படி காங்கிரசிலிருந்து விலகிய ராஜாஜி, ஆகஸ்டுப் போராட்டத்தையும் கடுமையாக எதிர்த்தார். பாகிஸ்தான் பிரிவினையையும் தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வந்தார்.

1942 முதல் 1945ஆம் ஆண்டு வரை அவரது சொல்லும் செயலும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவானதாகவே இருந்தன. பிரிட்டிஷாரின் பேச்சாளரைப் போலவே ராஜாஜி பேசி வந்தார். இது காங்கிரஸ் தொண்டர்களை மிகுந்த ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது.

இவ்வளவு நடந்த பிறகு 1945ஆம் ஆண்டில் ராஜாஜி வைஸிராயுடன் சமரசப் பேச்சில் ஈடுபட்டதும், மறுபடியும் காங்கிரசில் சேர முயன்றதும்  காங்கிரஸ்காரர்களுக்கு எரிச்சலூட்டியது. குறிப்பாக ஆகஸ்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் செய்து வந்த தேசபக்தர்களுக்கு வேதனை அளித்தது.
(நூல்: சரித்திர நாயகன் காமராஜர்! - சிவலை இளமதி)

Saturday, October 1, 2011

தமிழில்வடமொழிக்கலப்பு


தமிழில்வடமொழிக்கலப்பு


- பரிதிமாற் கலைஞர் -

வடமொழி தமிழ்நாட்டில் வெகு நாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ்மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்ற லில்லாது போயிற்று. வடமொழியாளர்  தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வட மொழியில் நூல்கள் வகுப்பான் புகுந் தனர். அவர்களெல்லாம் ஆன்ம நூற்பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயுமிருந்தமை பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங் களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்லாதிருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நூல் வகைச் சாதி முறையை மெல்ல மெல்ல நாட்டிவிட்டனர்.

முற்சடைப் பலனில்வே றாகிய முறைமைசொல்
நால்வகைச் சாதியிந் நாட்டினீர் நாட்டினீர்

என்று ஆரியரை நோக்கி முழங்குங் கபிலரகவலையுங் காண்க. இன்னும் அவர் தம் புத்திநலங் காட்டித் தமிழ ரசர்களிடம், அமைச்சர்களெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்; தமிழரிடத் திருந்த பல அரிய விஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியு முன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.

தமிழருட் சாமானிய சனங்கள் அவ்வாரியரது விருப்பத்திற்கேற்ப எவ்வளவிணங்கிய போதிலும், புலவ ராயினார். அவர்களது திருத்தப் பாட்டிற்குப் பெரிது  மிங்கினாரல்லர். ஒழுக்கச் சீர்ப்பாடு ஏற்பட்ட போதிலும், பாஷைத் திருத்தம் ஏற்பட வில்லை. தமிழின் முப்பத்தோரெழுத் துக்களும் அவ்வாறேயின்றளவு மிருக்கின்றன; சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக் கொள்ளுமியல்புடைய ஆரியர் தமிழ் நாட்டிற்கேற்றபடி தமிழிலிபியையொட் டிக் கிரந்தம் என்னும் பெயரிற் புதுவதோர் இலிபி வகுத்தனர்; தமிழரை விசீ கரிக்குமாறு அவ்விலிபியற் பல நூல்கள் வரைந்தனர். தமிழ்ப் புலவ ராவார். எதற்கும் அசையாது தங்கள் தமிழ் மொழியின் போக்கையே தழுவிச் செல்வராயினர்.

இவ்வாறு தமிழருட் பண்டிதரா யினார் வடமொழியைத் தமிழின்கண் விரவவொட்டாது விலக்கியும், பாமர ராயினார் வடமொழிச் சொற்களுட் பலவற்றை மேற்கொண்டு  வழங்கப் புகுந்தமையின் நாளாவட்டத்தில் வட சொற்கள் பல தமிழ்ப் பாஷையின் கண்ணே வேரூன்றி விட்டன. அவ்வா றாயின் இது போலவே வடமொழியின் கண்ணும் தமிழ்ச் சொற்கள் பல சென்று சேர்ந்திருத்தல் வேண்டுமன்றோ? அதையும் ஆராய்வோம்.

வடமொழி தமிழ் மொழியொடு கலக்கப் புகுமுன்னரே, முன்னது பேச்சுவழக்கற்று ஏட்டு வழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்து விட்டது. ஏட்டு வழக் கொன்று மேயுள்ள பாஷையோடு இரு வகை வழக்குமுள்ள பாஷையொன்று கூடியியங்கப் புகுமாயின் முன்னதன் சொற்களே பின்னதன் கட்சென்று சேருமேயன்றிப் பின்னதன் சொற்கள் முன்னதன் கட்சென்று சேரா. இது பாஷை நூலின் உண்மைகளுளொன்று. இதுவே வழக்காற்று முறை.

இம்முறை பற்றியே வடசொற்கள் பல தமிழின்கட் புகுந்தன. தமிழ்ச்சொற்களிற் சில தாமும் வடமொழியின்கண் ஏறாமற் போயின. எனினும் தென்னாட்டு வடமொழியாளர் மட்டிற் சிலர் ஊர்ப்பெயர், மலைப்பெயர், யாற்றுப் பெயர் முதலாயிவற்றைத் தங்கள் சப்த சாஸ்திரத்திற்கியைந்த வண்ணம், ஓசை வேறுபாடு செய்து கொண்டு தாங்கள் வகுக்கப் புகுந்த புராணாதிகளில் வழங்குவாராயினர். இதுதானுண்மை; இதற்குமே லொன்றுஞ் சொல்ல இயலாது.

இனித் தமிழ்ப் புலவர்களாயினர் சமஸ்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப் பார்த்தும் அவற்றை விலக் குதல் முடியாது போயிற்று. போகவே தமிழ்ப் புலவர்களுந் தங்கள் முயற்சி களெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத்திலக்கண விதிகட்குத் தக்கவாறு திரித்து மேற்கொள்வாரா யினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர். பின்னர்க் கொஞ்சங்கொஞ்சமாக வட சொற்கள் பல தமிழ் மொழியின்கண் இடம் பெறுவனவாயின.

அதன்மேல் முதலிடை கடையெனும் முச்சங்கத்தார் காலத்தினும் வட சொற்கள் தமிழ்நூல்களிலேறின. ஆயினும் அவை சிறிதளவேயாம். தொல்காப்பியம் என்னும் இலக் கணத்தினுள்ளும் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு என்னும் நூற்றொகைளுள்ளும் ஆங் காங்கு இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற் குமேலில்லை.

பின்னர் பௌத்தராயினார் தலை யெடுத்துத் தம் மதத்தையாண்டும் பரப்பிப் பல்லாயிரக்கணக்காகச் சனங்களைச் சேர்த்துக் கொண்டு அக்காலத்திருந்த ஆரியரை யெதிர்த் தனர். இப்பகைமை தென்னாட்டிலும் பரவிற்று. பரவவே தமிழருட் பலர் பௌத்தமதம் மேற்கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்கமுற்றிருந்தனர்.

அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப் புலவர்கள் தங்களாற் கூடிய மட்டில் வடசொற்களைத் தமது தமிழ் மொழியின்கண்ணே கலக்கவொட்டாது தடுத்தனர். முன்னரே தமிழிற் போந்து வேரூன்றி விட்ட வடசொற்களைத் தொலைப்பது அவர்கட்குப் பெருங் கஷ்டமாய் விட்டது. ஆதலின் அவர்கள் என் செய்ய வல்லர்?

முன்னரே வந்தனபோக, இனிமேலாதல் அப் பொல்லாத வடசொற்கள் தமிழின்கண் வாராதவாறு பாதுகாத்தல் வேண்டு மென்று சிறிதுகாலம் முயன்றனர்.

அவ்வாறே இவர்களது விடா முயற்சியாற் சிறிதுகாலம் வடசொற்கள் தமிழில் அதிகமாய் வந்து கலவா மலுமிருந்தன. இக்காலத்திலேதான் செந்தமிழ் கொடுந்தமிழ் எனத் தமிழ் இருபிரிவினதாகியியங்கப் புகுந்தது. செந்தமிழாவது புலவராயினார் பயிலுந்தமிழ் கொடுந்தமிழாவது புலவரல்லாத சாமானிய மக்கள் பயிலுந் தமிழ். இவற்றைக் குறித்துப் பிரிதோர் அமயத்திற் பேசுவோம்.

இனி எத் தணை நாள் மேன்மேலெழும் வெள் ளத்தைத் தடுத்துக் கொண்டிருத்தல் இயலும்? ஆதலாற் பௌத்தரது முயற்சியாலேற்பட்ட கரைகள் ஆரிய பாஷையின் அலைகளால் எற்றுண்டு அழிவனவாயின. பௌத்த சமயமுந் தலைதாழ்ந்தது.

இந்நிலைமையிற் சைனர் எழுந்தனர். அங்ஙனமெழுந்த சைனர் ஆரியரது ஆசாரங்களுட் பலவற்றை மேற்கொண் டனர்; அஃதன்றியும் வடமொழியின் கண் விசேஷ கௌரவமுடையராய் அதனைப் பெரிதும் பயில்வராயினர். வடமெழியின் பாகதங்களையும் அவற்றினிலக்கணங்களையும் நன் குணர்ந்து கொண்டனர். இத்தகைய சைனப் புலவர்கள் தமிழ்மொழியையும் அப்பியசிக்கப் புகுந்து, தமிழின் கண்ணே அளவிறந்து வடசொற்களை யேற்றினர்.
(செந்தமிழ்ச் செல்வி செப்டம்பர் 2011)

Friday, September 30, 2011

சோதிடப்புரட்டும் கிரகங்களும்


சோதிடத்தில் கிரகங்களின் இருப்பிடத்தை வைத்து பலாபலன் சொல்லப்படுகிறது!
சூரிய வட்டத்தில் எந்தெந்தக் கிரகம் எந்தவிடத்தில் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் சோதிடம் கணிக்கப்பட்டிருக்கிறது. சென்னை, டில்லிக்குப் பக்கத்தில் வடக்கே இருப்பதாகவும், பம்பாய் கன்னியாகுமரிக்குத் தெற்கே இருப்பதாகவும் கூறுவது போலத்தான் சோதிடத்தில் கிரகங்கள் இருக்குமிடம் சொல்லப்பட்டிருக்கிறது!
சூரியனுக்குப் பக்கத்திலே இருக்கும் புதன் கிரகத்தை செவ்வாய் கிரகத்திற்கு பக்கத்தில் இருப்பதாகவும், சூரியனிலிருந்து இரண்டாவதாக இருக்கும் வெள்ளி கிரகத்தை 5ஆவதாக இருக்கும் வியாழன் கிரகத்திற்குப் பக்கத்தில் இருப்பதாகவும் இப்படி ஒரே குழப்பமாக கிரகங்களின் வரிசையை வைத்துக் கொண்டு சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்று கூறினால் அதைக் கேட்பவர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா!
அறிவியல்படி சூரியனிலிருந்து கிரகங்கள் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று இருப்பதை சோதிடத்தில் சூரியன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த மிகப் பெரிய தவறை வைத்துக் கொண்டு சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்று பொய் கூறி வருகின்றனர். ஒரு காலத்தில் நம்பினார்கள் பூமியை மய்யமாக வைத்துத் தான் சூரியனும் மற்ற கிரகங்களும் சுற்றி வருவதாக! அறிவியல் ஆய்வுக்குப்பின் அது தவறு என்று தெரிந்த பிறகாவது சோதிடர்கள் திருத்திக் கொள்ள வேண்டாமா? எனவே சோதிடம் என்பது தவறான அடிப்படையில் தவறாக கணிக்கப்பட்டு பொய்யும் புரட்டும் இணைக்கப்பட்டு கூறப்படுவதுதான் என்பதை சிந்திப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்!
பூமியின் துணைக் கோள் சந்திரனை சோதிடத்தில் சேர்த்துக் கொண்டவர்கள், செவ்வாய் கிரகத்தின் துணைக்கோள் 2, வியாழனின் துணைக் கோள் 16, சனியின் துணைக்கோள் 22, இவை சோதிடத்தில் சேர்க்கப்படவில்லை! அக்கால சோதிடருக்கு இந்த துணைக்கோள்கள் தெரிந்திருக்கவில்லை! அவர்களுக்கு தெரிந்திருந்த அரைகுறையான வானவியல் அறிவைக் கொண்டு மனித வாழ்க்கையின் முழுமையையும் கூறிட முடியும் என்று நம்ப வைத்து வருகின்றனர்!
ஒரே ஒரு மூலிகையைக் கொண்டு மனிதனின் அத்தனை நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று கூறும் ஏமாற்றுக்காரனைப் போல், அறிவியலுக்குச் சம்பந்தமில்லாத சோதிடத்தால் மனித வாழ்வின் பிரச்சினைகளை எல்லாம் அறிந்து தீர்த்து வைக்க முடியும் என்று சோதிடர்கள் கூறி வருகிறார்கள். இருவரும் ஏமாற்றுக்காரர்களே!
வேத காலத்திலேயே சோதிடம் இருப்பதாகக் கூறுகிறார்களே அவர்கள் இந்த 21ஆம் நூற்றாண்டு வரை கூறி வருவது இந்த சோதிடம் மட்டும்தானே! அன்று சொன்னதைத்தானே  இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! வேதத்தையும், சோதிடத்தையும் அதன் கணிப்பையும் கொண்டு புதிய கண்டுபிடிப்பு எதையாவது செய்ததுண்டா! பழைய சோதிடத்தை வைத்து ஏமாற்றுவது தானே உங்கள் வேலையாக இருக்கிறது. எவ்வளவு காலம் இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்! மேல் நாட்டினர் புதிது புதிதாக வானவியல் கண்டுபிடிப்புகளைச் செய்து வருகிற போது இந்த வேதகாலச் சோதிடர்கள் ஒரு கண்டுபிடிப்பைக் கூட செய்யவில்லையே!
மேல்நாட்டு விஞ்ஞானிகள் ஹால், கலிலியோ, பர்னால்டு, பெரைன், நிக்கோல்சன், ஹெர்ஷ்செல், கேசினி மற்றும் பல விஞ்ஞானிகள் 1610ஆம் ஆண்டிலிருந்து புதிய துணைக் கோள்களைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்திருக்கிறார்கள்.
2008ஆம் ஆண்டில் சனிக்கிரகத்தின் துணைக் கோளில் ஒன்றான டைட்டானில் பூமியில் கிடைக்கும் எண்ணை வளம் போல அங்கு திரவ வடிவமான ஹைட்ரோ கார்ப்பன்கள், மீத்தேன், ஈத்தேன் உருவில் கிடைக்கின்றன! இவ்வாறு வானவியல் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சோதிடர்கள் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்! அறிவியலை நம்பாத மக்கள் சோதிடத்தை நம்புகிறார்கள். அறிவியலை ஏற்று மக்கள் விழிப்படைய வேண்டும்.
- சோதிட மறுப்பும், வானவியல் சிறப்பும்
கவிஞர் தி.பொன்னுசாமி, தூத்துக்குடி

Sunday, September 25, 2011

அந்தப் பெண்மணி யார்?


அந்தப் பெண்மணி யார்?


1943-இல் நான் திருச்சூரில் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கும்பகோணத்திலிருந்து எனது நண்பர் கா.மு. ஷெரீப் அவர்கள் வந்தி ருந்தார்கள். கும்பகோணத் துக்கப்பால் காவேரி நதியின் மத்தியில் பெரிய விஸ்தார மான ஒரு திட்டுப் பூமியை வாங்கி அதிலே ஆட்டுப் பண்ணையும், விவசாயப் பண்ணையும் நடத்தி வருவ தாகவும், அதை நான் காண வேண்டும் என்றும் என்னை அழைத்தார். அவரும் நானும் திருச்சூரிலிருந்து ரயிலேறிப் புறப்பட்டோம்.
ஈராட்டிலே...
ஈரோட்டிலே ரயில் மாறவேண்டும். திருச்சி செல் லும் வண்டியில் இரண்டாம் வகுப்பில் நுழைந்தோம். கீழ்த்தட்டு ஒன்றில் ஒரு ஜமுக்காளம் விரிக்கப்பட்டி ருந்தது. அருகில் ஒரு சிறிய பையன் நின்றுகொண்டி ருந்தான். அவனை விசா ரித்தபோது நாயக்கருக்காக அவன் காத்திருப்பது தெரிய வந்தது. பிளாட்பாரத்தில் காய்கறி அல்லாத சோற்றுக் கடை வைத்திருப்பவனைக் கூப்பிட்டு முதல் தரமான சாப்பாடு கொண்டு வரும்படி சொன்னேன். பிரியாணி, சாப்ஸ், ஆம்லெட், குருமா என்று அவன் தன் கடையில் உள்ளதையெல்லாம் தட்டுகளில் கொணர்ந்தான். அத்தட்டுகளை எல்லாம் ஜமுக்காளத்தின் மீது வைக்கச் சொல்லி விட்டு, நாங்கள் இருவரும் பிளாட் பாரத்தில் நாயக்கரின் வருகைக்காகக் காத்திருந்தோம்.
இதெல்லாம் என்ன?
வண்டியினுள் நுழைந்த நாயக்கர் இதெல்லாம் என்னடாவென்று அருகில் இருந்த பையனைக் கேட்டார்.  நான் உள்ளே நுழைந்து அவருக்கு வணக்கம் செலுத்தி, இவையெல்லாம் தங்களுக்காக வரவழைத்தேன் என்றேன்.
அய்யோ, உன் உடல்நிலை முன் போல் இல்லை. பத்திய உணவு சாப்பிட்டு வருகிறேன். இதையெல்லாம் எதற்காகக் கொண்டு வந்தீர்கள்? என்று சங்கடத் துடன் கேட்டார்.
என்ன செய்வது? நீங்கள் பிரியமாகச் சாப்பிடுவீர்கள் என்றெண்ணி ஆர்டர் கொடுத்து விட்டேன். ஓட்டல்காரனுக்குப் பணமும் கொடுத்தாகி விட்டது என்று இழுத்தேன்.
சரி சாப்பிட்டுத் தொலைக்கிறேன் என்று தட்டுகளை யெல்லாம் ஒருவாறு காலி செய்துவிட்டார். நானும் நண்பர் ஷெரீப் அவர்களும் வெளியில் நின்று கொண்டிருந்தோம்.  அப்போது,  பின்னல் ஜடையுடன் ஒரு பெண் உள்ளே நுழைந் தாள்.  நான் ஒரு தப்பு செய்துவிட்டேன் என்றார் பெரியார் அப்பெண்ணிடம்.
என்ன அது?
பிரியாணி சாப்பிட்டுவிட்டேன்.
அய்யோ, ஏன் சாப்பிட்டீர்கள்?
எனது மிகப் பழைய நண்பரொருவர் பிரியத்தோடு வற்புறுத்தினார். . . தட்டமுடியவில்லை.
அவருக்கு என்ன தெரியும்?
உங்கள் நண்பருக்கு உங்கள் உடல் நிலை எப்படித் தெரியும்? நீங்கள் மறுத்திருக்க வேண்டாமா?
மேற்கண்டவாறு அப்பெண்ணும் பெரியாரும் பேசிக் கொண்டிருக்கையில், ஸ்பென்சர் சிப்பந்தி யொருவன் எங் களைக் கடந்து சென்றான். ஓடிப்போய் ஒரு சோடா கொண்டுவா என்று அவனிடம் நான் கூற, அவனும் வெகு விரையில் சோடாவும் டம்ளருமாக ஓடி வந்தான். சோடாவைத் திறந்து டம்ளரில் ஊற்றி வண்டிக்குள் இருந்த நாயக்கரிடம் கொடுக்கச் சொன்னேன்.
யாருக்கு? என்று பட்லரை விசாரித்து டம்ளரைக் கையில் வாங்கிக் கொண்டு வண்டியை விட்டுக் கீழே இறங்கி எனது பக்கத்தில் வந்து நின்றார் நாயக்கர். அப்பெண்ணும் அருகில் வந்து நின்றாள்.
பெண்ணு யாரு?
இப்பெண் யாருங்க, புதிதாய் இருக்கிறது? அவள் உங்களைப் போடும் போடு எனக்கே பயமாயிருக்கிறது! என்றேன். பெரியார் வேலூரில் ஒரு நண்பரின் மகள். ஸ்கூல் பைனல் வரை வாசித்திருக்கிறது. நமது இயக்கத்தில் அதிக பற்றுதல். எனது காரியதரிசி போல என்னுடன் இருந்து வருகிறது என்றார்.
வண்டி புறப்படும் சமயமாயிற்று. பெரியார் உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டார். நானும், நண்பர் ஷெரீபும் அதே பெட்டியில் ஏறிப் படுத்துக் கொண்டோம். அதிகாலைக்கு முன்னரே ரயில் திருச்சி ஜங்ஷனை அடைந்தது. நாங்கள் மூவரும் கீழே இறங்கு முன்னர், அப்பெண் எங்கள் வண்டி யின் முன்னே வந்து நின்றாள்!
என்ன மணி!  நல்ல இடம் கிடைத் ததா? நன்றாகத் தூங்கினாயா?
ஓ! முதல் தரமான இடம்.  சர்வென்ட்ஸ் கம்பார்ட்மெண்ட் (முதல், இரண்டு வகுப்பு பிரயாணிகளின் வேலைக்காரர்களுக்கென்று அமைக்கப் பட்டிருக்கும் தனிப்பெட்டி) காலியாக இருந்தது. நன்றாகத் தூங்கினேன்.
அதுதான் பொய். இந்தப் பெண் தூங்கவே இல்லை. ஒவ்வொரு ஸ்டேஷ னிலும் வண்டி நின்றதும், ஓடிவந்து உங்களை எட்டிப் பார்த்துவிட்டுப் போனது என்று ஒரு போடு போட்டார் நண்பர் ஷெரீப். இப்படியும் பூலோகத்தில் ஒரு பெண் இருப்பாளா என்று நான் மனதுக்குள் எண்ணிக் கொண்டேன். அந்தப் பெண் பிற்காலத்தில் மணியம்மையாவார்.
(கோவை அ.அய்யாமுத்து எழுதிய நான் கண்ட பெரியார் என்ற நூலிலிருந்து).
எந்த அய்யாமுத்து அவர்களை மேற்கோள் காட்டி தந்தை பெரியார் அவர்களைச் சிறுமைப்படுத்த இந்தப் பார்ப்பனக் கூட்டம் எண்ணியதோ, அதே அய்யாமுத்து அவர்களைக் கொண்டே அதனை முறியடிக்கவும் நியாயமாக நம்மால் முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!.

Sunday, September 18, 2011

தந்தை பெரியார் - மறைமலை அடிகள் - திரு.வி.க. அடிகளும் ஈ.வே.ராவும்


இருபதாம் நூற்றாண்டைப் புத்தூழி பூத்த காலம் என்று கூறிவிடலாம். உலகெங்கும் உரிமை உணர்ச்சி வெள்ள மாய்ப் பெருக்கெடுத்ததும், தொழிற் பெருக்கமும், அதனால் நேர்ந்த எண் ணிலா மாற்றங்களும் உலக மக்களிடையே புத்தம் புதிய கருத்துக்களை - வாழ்க்கை முறைகளை உண்டாக்கியதும், மொழி, சமயம், கலை, நடை உடை பாவனைகளில் மாறுபாடுகள், மறுமலர்ச்சிகள் தோன்றி யதும், வாழ்க்கை இன்பங்களை நுகரும் பேராவலும், அதற்கான வாய்ப்புக்கள் மிக்கதும் இக்காலமேயாகும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாகப் போற்றி வந்த- மாற்றமில்லாப் பலவகையான பழக்க வழக்கங்களின் நன்மை தீமைகளை ஆராய்ந்து நற் கருத்துகளை நாட்டிடைப் பரப்பப் பற்பல கிளர்ச்சிகளும், எழுச்சிகளும் ஏற்படக் காரணமாகவிருந்த இந்நூற்றாண்டை வாழ்த்துதல் வேண்டும். நன்மையில் தீமையும், தீமையில் நன்மையும் விளைதல் மாற்றரிய விதிகளாகும்.

இவ்வெண்ணங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் அடிகளுக்கும், ஈ.வெ.ரா. என்னும் பெரியார் ராமசாமி நாயக்கருக்கும் நேர்ந்த தொடர்புகளையும், நட்பின் இனிமைகளையும் இங்கு ஆராய்தல் வேண்டும். அப்போதுதான் உண்மையான செய்திகளை உணர இயலும். அடிகளைப் பற்றிய தன்மைகளை இதுகாறுங் கண்ட அவர் வரலாற்றால் நாம் உணர்ந்து கொண்டிருப்போம். ஆனால், நம் கண்ணோட்டத்தில், பெரியாரைப் பற்றிய தன்மைகளில் முதன்மையான சிலவற்றை இங்குக் கூறியாக வேண்டும். அவற்றால் அடிகள்- பெரியார் தொடர்பு களை நன்கறிதல் கூடுமன்றோ!

ஈ.வே.ரா.

கோயம்புத்தூர் சீமையைச் சார்ந்த ஈரோட்டிலே உயர்வுற்றதோர் குடியிலே பெருஞ்செல்வராய் வைணவத்தில் ஆழ்ந்த பற்றுடையராய் விளங்கிய வேங்கடசாமி என்பாரின் புதல்வராய்த் தோன்றியவரே ஈ.வே.ரா. இவர் தாய்மொழி கன்னடம். உடற்கட்டும், ஆன்ற உடலமைப்பும், இளமை வளமும், எழில் வடிவமும், கூர்த்த மதியும், போராட்ட உணர்ச்சியும் இவர்க்கு இயல்பாகவே அமைந்திருந்தன.  அன்பும், அரிய நற்பண்புகளும் மிக்க இவர்பால், இளமையில் அடங்காத் தன்மைகளும், முரட்டுக் குணங்களும், பிடிவாதமும் ஏராளமாம். பள்ளிப் படிப்பில் இவர் ஆர்வம் கொள்ள வில்லையாயினும் தமிழிலக்கியங் களை, அதுவும் வைணவம் தொடர்பான நூல்களைத் தமது காளைப் பருவத்தில் இவர் ஓரளவு கற்றுச் சுவை கண்டவர்.

செயற்றிறனும், ஆட்சி வன்மையும், தாம் மேற்கொண்ட பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றும் ஆற்றலும் இவற்றிற்கேற்ற தோற்றமும் சான்ற இவர் ஈரோடு நகரசபைத் தலைவராயமைந்து நகருக்காற்றிய நற்பணிகளைத் திறம்படச் செய்து முடிக்கும் ஆற்றலுடையவர்கள் என்ற கோட்பாட்டைத் தமது திறமான ஆட்சி முறைகளால் சுக்கு நூறாக்கிய செம்மலரிவர்.

பொதுப் பணியில் ஆர்வங் கொண்ட இவர், அக்காலத்து நிகழ்ந்த நாட்டுரிமைக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு உண்மையுடன், ஊக்கத்துடன் அரியபணிகள் பல புரிந்தார். அதனால், தமிழ் மாகாணக் காங்கிரஸ் தலைவரானார். அந்நிலையத்தைச் செப்ப முறச் சீர்திருத்தி விடுதலைப் போருக்குப் பெருங் கிளர்ச்சி செய்தார். காந்தியடிகள் வழிநின்று அப்போரில் ஈடுபட்டார். காற்றெனப் புயலெனத் தமிழகமெங்கும் உலவித் தம் அரிய பெரிய உணர்ச்சி மிக்க சொற்பொழிவுகளால் உரிமைக் கிளர்ச்சித் தீயை எங்கும் மூட்டினார்.  பன்முறை சிறை சென்றார்.

இத்துடன் தீண்டாமை விலக்கு, மது விலக்கு, கதர் பரப்பு, மாதர் முன்னேற்றம், சாதியொழிப்பு, மூடப் பழக்கங்களை ஒழித்தல் முதலிய பல பணிகளிலும் சிறந்த தொண்டாற்றினார். இவர் உண்மைப் பணி, தியாகம், அஞ்சாமை, ஆன்ற பண்புடமை கண்டு அன்றைய தமிழகம் இவரைத்தன் தலைசிறந்த தொண்டராகத் தலைவராக ஏற்றுக் கொண்டாடி மகிழ்ந்தது.

பெரியார் மாற்றம்

1924 வரையில் மேலே கூறியவாறு தேசத் தொண்டுகளில் ஈடுபட்டு அரும் பணிகளாற்றி உயர்ந்த பெரியார், பின்பு, பார்ப்பனரல்லாதார் பக்கம் நின்று அவர் உயர்வுக்காகப் பாடுபடலானார். அதனால் கடுமையான பிராமணர் எதிர்ப்பில் இறங்கிவிட்டார். எதிலும் மிக முற்போக் காளராய் முனைந்து நிற்கும் இவர் இவ்வியக்கத்தின் முன்னணியில் நின்று தொண்டாற்றலானார். அதனால், பார்ப் பனரல்லாதார், தம் குடும்பச் சடங்குகளில் பார்ப்பனர்களைக் குருமார்களாகக் கொள்ளலாகாது, அவர்கட்கு எவ் வகையிலும் உதவி செய்தல் கூடாது, அவர்கட்கு ஆக்கந்தரும் காங்கிரசை ஒழித்தல் வேண்டும். தமிழ் தன்னுரிமை பெறவேண்டும். தமிழ்ப் புலவர்களைப் போற்றல் வேண்டும். வடமொழியினும் தமிழே சிறந்தது. ஆரிய நாகரிகம், மக்களை அடிமை உணர்வில் ஆழ்த்தும்; தமிழ் நாகரிகம் மக்களை வாழ்விக்கும்; ஆரியராம் பிராமணர் ஆதிக்கம் உடனே தொலையவேண்டும் - அப்போதுதான் தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து -தன்னுரிமை பெற்று வாழ்வர் என்று எங்கும் வீரமுழக்கஞ் செய் தார்.

திருக்கோயில்களில் பார்ப்பனராதிக்கம் ஒழிய வேண்டும். அங்குத் தமிழ் மறைகளே முழங்கப்படல் வேண்டும். தமிழ்ப் பழக்க வழக்கங்கள் பரவல் வேண்டும். ஆரியப் பழக்க வழக்கங்களை - வர்ணாஸ்ரம தர்மங்களை அடியுடன் அறுத்தெரிய வேண்டும் என்றெல் லாம் எங்கெங்குஞ் சென்று முரசு கொட்டினார். இவற்றுடன் காங்கிரஸ் கொள்கைக்கு மாறுபட்ட பொது உடைமைக் கொள்கைகளைப் பரப்புவதிலும் முனைந்தார்.

அடிகள்பால் கவர்ச்சி

இவ்வாறு காங்கிரசிலிருந்து பிரிந்து பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தில் முனைந்து நின்ற பெரியார், மேற்கூறிய கருத்துக்களைத் (அரசியற் கருத்துக்கள் தவிர) தமக்கு முன்பே பல்லாண்டுகளாகத் தனித்து நின்று முழங்கிவந்த அடிகள்பால் ஆன்ற அன்பும்,  மதிப்பும் கொண்டார். தம் தமிழர் முன்னேற்றக் கருத்துக்களுக்கு அடிகள் தலைவராய் விளங்கும் அருமை பெருமைகளை உணர்ந்தார்.

திரு.வி.கவும், ஈ.வே.ராவும்

நட்பில் திரு.வி.க.வும், பெரியாரும் ஓருயிர் ஈருடல் போன்றவர்கள். இருவரும் ஒருவர்பால் மற்றவர் ஆழ்ந்த அன்பும், மதிப்பும் கொண்டவர்கள் கருத்து வேற்றுமைகள் இவர்கள் நட்பின்முன் தலைகாட்டுவதில்லை. ஆம் உயர்ந்தோர் தன்மை இவைதாமே! சென்னையை வாழிடமாகக் கொள்ளும் முன்பெல்லாம், ஈ.வே.ரா., சென்னை போதருங் காலெல்லாம் திரு.வி.க.வுடன்தான் தங்குவார். சென்னையில் எவ்வளவு அலுவல்கள் இருந் தாலும் திரு.வி.க.வை அன்றாடம் பார்க்கத் தவற மாட்டார். இரவில் அவருடன்தான் தங்குவார்; அளவளாவுவார், உறங்குவார். அவர்கட்கு வசதியான இடம் இராயப் பேட்டையிலுள்ள குகானந்த நிலையமாகும்.

இருவரும் அளவளாவுங்கால் தமக்குள் மாறுபட்ட கருத்துக்களைப் பற்றி வழக்கிடார்; ஒற்றுமைப்பட்ட கருத்தின் இனிமைகளைப் பேசி இன்புறுவர். உலகத்திலுள்ள அரசியல் கள், தனிப்பட்ட தலைவர்கள் - தொண்டர்கள் பற்றி எல்லாம் பேசுவார்கள். சீர்திருத்தக் கருத்துக்களைப் பேசுவர். நாட்டுக்குத் தேவையான நலங்கள் பற்றி எண்ணுவர். தமிழிலக்கியங்கள் பற்றி ஆராய்வர். சமயங்கள் பற்றிப் பேசுவர். இந்நிலையில் அடிகள் பேச்சு வந்துவிடும். திரு.வி.க. அடிகள்பால் அளவி றந்த பித்தரல்லவா? அடிகள் பெருமையையும்,  புலமையையும் ஒன்றுக்கு ஆயிரமாக ஈ.வே. ராவுக்குக் கூறுவார். அடிகள் கருத்துக்கள் பல ஈ.வே.ரா. கருத்துக்கு அரணாயிருப்பதை விளக்குவார்.

திரு.வி.க.விடம் ஈ.வே.ரா.வுக்கு எல்லை யில்லா அன்பும், மதிப்பும் உண்டு. இதனை மேலேயும் கூறினோம். தம்மாற் பெரும் புலவரெனப் போற்றப் பெறும் திரு.வி.க.வே அடிகளை மிகமிக உயர்த்திப் பேசுவதைக் கேட்க அவர்க்கு அடிகள்பால் மேலும் அளவில்லா அன்பும், மதிப்பும் உண்டாவ தற்குக் கூறவா வேண்டும்?

அதனால், பெரியார் அடிகள் நூல்கள் பலவற்றை ஆழ்ந்து படிக்கலானார். அடிகள் நூல்களில், பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும் என்ற நூல் அவர்க்கு வேதமாயிற்று. தாம் பேசுமிடங் களிலெல்லாம் அடிகள் கருத்துக்களை எடுத்துக் காட்ட அடிகளை வானளாவப் போற்றுவராயினார். இவ்வாறு அடிகளிடம் பேரன்பும் பெருங் கவர்ச்சியும் கொண்ட ஈ.வே.ரா. அடிகளை நேரிற் கண்டு பேச வில்லை; அதற்கு முற்படவும் இல்லை. நான் ஒரு போது அவர்களை, அய்யா!, தாங்கள் ஏன் பல்லாவரம் வரக்கூடாது? தங்களைப் பார்க்க அடிகளுக்க விருப்பம் உண்டே! என்றேன். அதற்கு அவர்,

என்ன சாமி! சுவாமிகள் எவ்வளவு பெரியவர்; பெரிய புலவர். அவருடன் நான் பேச என்ன இருக்கிறது! என்றார். ஆனால், அவர்க்கு அடிகளைப் பார்த்துவிட வேண்டு மென்னும் ஆவல் மட்டும் மிகுதியாகயிருந்தது. அதற்கோர் வாய்ப்புக் கிடைத்தது.

அடிகளைக் காணல்

முற்கூறியாங்குத் தஞ்சையில் - கருந் தட்டான் குடியில் கரந்தைத் தமிழ்ச் சங்க விழா அடிகள் தலைமையில் நிகழ்ந்து கொண்டிருந்தபோது, விழாவுக்கு முன்பாகவே ஈ.வே.ரா. வந்துவிட்டார். நான் அவரிடம், வாருங்கள் அய்யா! அடிகளிடம் உங்களை அறிமுகப் படுத்துகின்றேன் என்று வற் புறுத்தி அழைத்தேன். அடிகள் அப்போது மேடை மீது தலைமை இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள். நாணத்தால் அவர் மறுத்து விட்டார். நான் மேடைக்குச் சென்று அடிகட்கு அவரைச் சுட்டிக் காட்டினேன்.

விழாவின் இடை நேரத்தில் அடிகள் மேடையினின்றும் இறங்கி சற்றே வெளி யிடஞ் சென்று மீள நேர்ந்தது. அடிகள் கூட்டத்திடையில் மேடைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அடிகள் தம்மருகில் வருவதற்கு முன்பே ஈ.வே.ரா. எழுந்து நின்று அடிகளை அன்போடு வணங்கி நின்றார். நான் அடிகளுக்கு அவரை அறிமுகஞ் செய்து வைத்தேன். ஈ.வே.ரா. ஒன்றும் பேசாது இரு கைகளையும் கூப்பியபடி இருந்தார். அடிகள் அவரைத் தம்முடன் மேடைக்கு வந்து அமரும்படி அழைத்தார். அவர் அதற்கு இசையவில்லை.

ஆன்ற மதிப்பு

ஈ.வே.ரா. அடிகளோடு அளவளாவுதற்கு மறுத்த காரணம், அடிகள்பால் அவர் கொண்ட ஆன்ற மதிப்பேயாம். இதற்கு ஈண்டொரு நிகழ்ச்சியை எடுத்துரைத்தல் இனிமை யாகும். அஃதாமாறு - 1925இல் சென்னை யில் சுரேந்திரநாத் ஆரியா வீட்டில் ஈ.வே.ரா. தங்கியிருந்தார். அக்காலத்தில் காங்கிரஸ் தலைவராய்ப் பெரும் புகழ் படைத்தவராய் அவர் விளக்கமுற்றிருந்தார். நாட்டாள்கள் (பத்ரிகைகள்) வழியாக இவர் பெரும் புகழை யான் நன்கறிந்திருந்தேன். ஆரியாவின் எதிர்வீட்டில் யான் ஓர் நண்பரைக் காணச் சென்றிருந்தேன். அவர் எதிர் வீட்டில் ஈ.வே.ரா. இருப்பதை அறிவித்தார். என் நண்பருக்கு ஆரியாவின் நண்பர்.

என் நண்பரிடம் யான், ஈ.வே.ரா.வைப் பார்க்க விரும்புவதைத் தெரிவித்தேன். அவரென்னை அங்கழைத்துச் சென்றார். எனக்கப்போது பதினெட்டு ஆண்டு. உட்கார்ந்திருந்த ஈ.வே.ராவுக்கு யான் அறிமுகப்படுத்தப்பட்டேன். உடனே, அவர் திடுமெனத் தம்மிருக்கையை விட்டு, ஆ! அடிகள் புதல்வரா? என்றெழுந்து நின்று வணங்கினார். சிறுவனாகிய யான் நாணத்தினாலும், வியப்பினாலும் திகைத்து மெய்மயிர் சிலிர்த்து நின்றேன். ஆ! மாபெருந்தலைவர்.

எவ்வளவு பணிவாக இருக்கிறார்! சிறுவனாகிய என்னை எழுந்து நின்று வணங்கி நிற்கின்றாரே! என்ன வியப்பு என்றெல்லாம் மயங்கி நின்றேன்  சில நொடிகள். அப்போதவர், என்னை இருக்கையில் உட்காரச் சொன் னார். நான் குழறிக் குழறித் தாங்கள் பெரியவர்கள். தாங்கள் உட்கார்ந்த பிறகே நான் உட்காருவேன் என்றேன்.  அதற்கவர் தாங்கள் அடிகள் புதல்வரல்லவா! அடிகளைப் போலப் பெரும்புலவர் யாருளர்? அவர்கள் எங்கள் தலைவர். அவர் புதல்வராகிய தாங்கள்தான் முதலில் அமரவேண்டுமென்று சிறியனாகிய என்னை வற்புறுத்தி உட்கார வைத்து விட்டுப் பிறகே அவர் உட்கார்ந்தார் என்பதாம்.

சுயமரியாதை இயக்கம்

காங்கிரஸ் இயக்கத்தினின்று பிரிந்த பின் சில ஆண்டுகள் ஈ.வே.ரா. சீர்திருத்தக் கருத்துகளை விளக்கப்படுத்திக் கொண் டும், தமிழின - நாகரிக மறு மலர்ச்சிக்குப் பணியாற்றிக் கொண்டுமிருக்கையில் வேறோர் திசையில் நாட்டங்கொண்டார். அவர் கருத்துப்படி, ஆரிய நாகரிகமாம் வர்ணாஸ்ரம தர்மப் பிடியிலிருந்து - அவ்வாரியஆதிக்கப் பிராமணர்களின் பிடியிலிருந்து தமிழினம் விடுதலை பெறவேண்டும். அதற்குத் தமிழர்கள் தம் சுயமரியாதையை உணர்தல் வேண்டும். உணர்ந்து பிராமணர்கள் ஆதிக்கத்தி லிருந்து விடுதலை பெறவேண்டும். அதற்கு; கிளர்ச்சி செய்து தமிழ் மக்கள் பயன்பெற ஓர் இயக்கம் வேண்டுமென்று கருதினார். கருதியவாறே சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

வேற்றுமையில் ஒற்றுமை (அடிகள் கொண்ட மகிழ்ச்சி)

கடவுள், சமயம், கோயில், வழிபாடு, சமய நுல்களில் ஆழ்ந்த ஆர்வங்கொண்ட சிவத் தொண்டராம் அடிகள் தாம் பரப்பவிருந்த தமிழ் இன நாகரிக, மொழி சீர்திருத்தக் கருத்துக்கள் யாவற்றையும் ஈ.வே.ரா. பரப்பி வருவது கண்டு ஆழ்ந்த மகிழ்ச்சி கொண்டார். யான், ஆராய்ந்து எழுதி அரிதே அச்சிட்டு வெளிப்படுத்தும் கோட்பாடுகள் யாவும் கலைஞர்க்கும், புலவர்க்கும், பொது மக்களிற் சிறந்தார் சிலருக்குகே பயன் தருகின்றன. ஆனால், ஈ.வே.ராவின் கிளர்ச்சியோ சிற்றூர், பேரூர்களிலெல்லாம் பரவிப் பயன் விளைக் கின்றது. இதனால் எனது நோக்கங்களும், விருப்பங்களும் அவராலே எளிதில் எங்கும் பரவுகின்றன. என்னோக்கம் எனக்கு வருத்தம் தருதலின்றி எளிதே முற்றுரு கின்றன. ஆதலால், ஈ.வே.ரா. நெடிதினிது வாழ்க! அவர் முயற்சி வெல்க! என்று தம்மைக் காண வருவோரிடமெல்லாம் அடிகள் கூறவே, ஈ.வே.ராவை வாயார வாழ்த்திக் கொண்டிருந்தார்.
(நூல்: மறைமலை அடிகள் வரலாறு ஆசிரியர் மறை.திருநாவுக்கரசு.

Wednesday, December 29, 2010

தமிழர் தலைவர் கி.வீரமணி- தந்தை பெரியார் கண்டெடுத்த நல்மணி!

1944 ஆம் ஆண்டு ஆகத்து 27ஆம் நாள் சேலம் மாநகரில் எழுச்சியோடும், தந்தை பெரியாரே எங்கள் தலைவர் என ஏழை எளியோர் ஏராளமாகக் கூடிய நீதிக் கட்சி 16ஆம் மாநாடு சிறப்புடன் நடந்தேறியது.

இயக்க வரலாற்றில் திருப்புமுனையாக நீதிக்கட்சி என்ற பெயரை நீக்கித் திராவிடர் கழகம் என மாற்றுப் பெயரைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றியதற்குப் பிறகு மக்கள் இயக்கமாக  மலைக்கத் தக்கவகையில் வளர்ந்து ஓங்கியது.

திராவிட இயக்க வரலாற்றில் 1944 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்களிடையே ஏற்பட்ட புதிய எழுச்சியும்,புத்துணர்ச்சியும் குறிப்பிடத்தக்கவை.

திராவிடர் கழகம் முழுக்க முழுக்க ஏழை, எளிய, பாட்டாளிகளும், பாமர மக்களும் நிரம்பிய கட்சி என்ற பெயர் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல், இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் பெரியார் அண்ணா பேச்சுகளால் ஈர்க்கப்பட்டுக் கழகத்தில் வந்து சேரலாயினர்.

பேரறிஞர் அண்ணா அவர்களைக் கல்லூரிகள் போட்டி போட்டுக் கொண்டு அழைக்கத் தொடங்கின. மேடைப் பேச்சிலே அண்ணா பாணி  என்ற ஒன்று ஏற்பட்டது. அந்தப் பாணியிலேயே மாணவர்களெல்லாம் பேசத் தலைப்பட்டனர்.
 
திராவிடர் கழகத்திற்கு நாவன்மை மிக்க ஒரு பேச்சாளர் பட்டாளமே கல்லூரிகளிலிருந்து வெளிப்பட்டது.
திராவிட இயக்க உணர்ச்சியும் எழுச்சியும் தமிழகத்தில் பொங்கி வழியத் தொடங்கின. அது ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். அப்போதுதான் முளைவிட்டுச் செடியாக வெளிவந்தது. வீரமணி என்னும் ஒரு வீர விதை. அந்தச் செடிக்கு நீரூற்றி உரமிட்டு வளர்த்தவர் கடலூர் ஆ.திராவிடமணி என்பவர் ஆவார்.
 
பள்ளி ஆசிரியரான ஆ.திராவிடமணி அவர்கள் சாரங்கபாணி என்னும் மாணவ மணிக்கு வீரமணி எனத் தனித்தமிழ் பெயர் சூட்டி நாடெங்கும் அழைத்துச் சென்று கொள்கை மணம் கமழச் செய்தார்.
 
பன்னிரண்டு வயதுச் சிறுவன் வீரமணி பேச்சைக் கேட்க வாரீர்! என்று அந்தக் காலத்தில் துண்டறிக்கைகளை அச்சடித்து விளம்பரம் செய்வார்கள். சிறுவன் வீரமணி வீர முழக்கமிடுவதைக் கேட்க ஒவ்வோர் ஊரிலும் மக்கள் கூடுவார்கள்.
 
அந்தக் காலகட்டத்தில் எங்கள் ஊரான திருக்காரவாசலுக்கு அருகில் உள்ள ஆலத்தம்பாடி என்னும் ஊரில் அந்த ஊரைச் சேர்ந்த சேஷைய ராசு, ஆசிரியர் சண்முகம், தையற்கடை வைத்திருந்த அப்பாண்ட ராஜன் ஆகியோருடன் நானும் சேர்ந்து வீரமணியை அழைத்து கழகப் பொதுக் கூட்டம் நடத்தினோம்.

1946ஆம் ஆண்டு சனவரி 7 ஆம் நாள் அந்தக் கூட்டம் நடைபெற்றது. அன்றைக்கு முந்திய நாள் காலை திருத்துறைப்பூண்டியில் தஞ்சை மாவட்ட மாணவர் கழக மூன்றாவது மாநாடும், பிற்பகல் முதலாவது கருஞ்சட்டை மாநாடும் நடைபெற்றன.

அந்த மாநாட்டில் கலந்துகொண்ட காஞ்சி கலியாணசுந்தரம், கடலூர் ஆ.திராவிடமணி, கடலூர் வீரமணி, கவிஞர் கருணாநந்தம் ஆகியோரை ஆலத்தம்பாடிக்கு அழைத்து வந்து அந்தக் கூட்டத்தை நடத்தினோம்.

அன்று மாலை தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப்படத்தை ஏந்தியவாறு கால்நடையாக ஊர்வலம் நடத்தினோம். எங்களுடன் அந்த ஊர்வலத்தில் சிறுவன் வீரமணியும் நடந்துவந்தார்.

அன்று அந்தச் சிற்றூர் மக்களெல்லாம் சிறுவன் வீரமணியின் வீர முழக்கம் கேட்டு வியந்தும் மகிழ்ந்தும் பாராட்டினர்.

அன்று அவர் பந்தலிலே பாகற்காய் என்னும் குட்டிக் கதையை உவமையாக எடுத்துச் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தார்.
 
அதாவது, ஓர் இழவு வீட்டில் ஒப்பாரி வைத்துப் பெண்கள் அழுது கொண்டிருந்தபோது அந்தத் துக்கத்தில் கலந்துகொள்ள இரண்டு பெண்மணிகள் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டின் உள் முற்றத்தில் பாகற்காய் நிறைய காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த அந்தப் பெண் மணிகளில் ஒருவர் தமது ஒப்பாரியோடு ஒப்பாரியாகப் பந்தலிலே பாகற்காய் பந்தலிலே பாகற்காய்  என்று பட ஆரம்பித்தார். அதைக் கேட்டு மற்றொரு பெண்மணி போகும் போது பார்த்துக்கலாம் போகும் போது பறிச்சுக்கலாம் என்று ஒப்பாரியோடு சேர்த்துப் பாடினாராம்.

இப்படிப் பல குட்டிக்கதைகளையும் அடுக்கடுக்கான உவமைகளையும் சொல்லி மேடையில் சிறுவன் வீரமணி ஆற்றிய உரை பாமர மக்களின் உள்ளத்திலெல்லாம் நமது கொள்கையைப் பதியம்போடச் செய்தது என்றால் மிகையாகாது.

பவள விழா கண்ட வீரமணியும், அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் திருமதி மோகனா வீரமணி அவர்களும், அவர்தம் பிள்ளைச் செல்வங்களும் பல்லாண்டு பல்லாண்டு எல்லா நலமும் இனிதே பெற்று வாழ்க என முத்துவிழா கண்ட நான் வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்று பன்னிரண்டு வயது சிறுவனாக நான் பார்த்த வீரமணிதான் என்னுடைய 80 ஆவது பிறந்தநாள் விழாவிலும் 81 ஆவது பிறந்தநாள் முத்து விழாவிலும் கலந்துகொண்டு என்னை வாழ்த்திச் சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(கடந்த 2.12.2010 அன்று தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்தநாள்.)

(நன்றி: மீண்டும் கவிக் கொண்டல் - டிசம்பர் 2010)

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...