Showing posts with label சாமியார்கள். Show all posts
Showing posts with label சாமியார்கள். Show all posts

Friday, July 3, 2015

பெண் சாமியார் சாத்வி பிராச்சியின் கொலைவெறி பேச்சு

பெண் சாமியார் சாத்வி பிராச்சியின் கொலைவெறி பேச்சு

ஹஜ் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல்!

முசாபர்நகர், ஜூன் 3- அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தால் ஹஜ் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் தாக்குதலுக்குள்ளாக நேரிடும் என்று சர்ச்சைக் குரிய பெண் சாமியாரணி சாத்வி பிராச்சி மிரட்டல் விடுத்துள்ளார். மத்தியில் பிரதமர் மோடி தலைமை யிலான ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு சர்ச் சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருபவர் சாத்வி பிராச்சி. அந்த வகையில் தற்போது ஹஜ் யாத்ரீகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசி யிருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் நிகழ்ச்சி ஒன்றில் சாத்வி பிராச்சி பேசியதாவது: அமர்நாத் செல்லும் பக்தர்கள் மீது பயங்கரவாதத் தாக்கு தல்கள் நடத்தப்பட்டால் ஹஜ் யாத்திரை செல்லும் யாத்ரீகர்களும் அதே போன்ற நிலைமையை எதிர்கொள்ள நேரிடும். இனி ஒவ்வொரு பயங்கர வாத தாக்குதலுக்கும் அதேபாணியில்தான் பதிலடி கொடுப்போம். ஹஜ் யாத்திரை செல்வோ ருக்கு மானியம் கொடுக் கப்படுகிறது.. ஆனால் அமர்நாத் செல்லும் பக்தர்களுக்கு வரி விதிக்கப் படுவது என்பது அவ மானகரமானது. இவ்வாறு சாத்வி பிராச்சி கூறியுள் ளார். அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி தலை வர்கள் கண்டனம் தெரி வித்துள்ளனர். அதே நேரத்தில் பாரதிய ஜன தாவோ அவர் எங்கள் கட்சியிலேயே இல்லை என்று பதிலளித்துள்ளது.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Saturday, January 3, 2015

பி.கே. திரைப்படத்தை இந்துத்துவவாதிகள் எதிர்ப்பது ஏன்?

பி.கே. திரைப்படத்தை இந்துத்துவவாதிகள் எதிர்ப்பது ஏன்?
இந்தியாவை காவிமயமாக்கும் முயற்சிதான் காரணம்

இந்து ஏடே அம்பலப்படுத்துகிறது


சென்னை, ஜன.3_ பி.கே. என்ற முற்போக்கு எண்ணம் கொண்ட திரைப்படத்தை இந்துத் துவவாதிகள் எதிர்ப்பதற்கு முக்கிய காரணமே இந்தியாவை இந்துத்துவாவாக்கும் முயற்சி அதிகரித்து வருவதுதான் என்று இந்து ஆங்கில ஏட்டில் வெளி வந்துள்ள கட்டுரை தோலுரித்துக் காட்டுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாத்சாயனர் என்ற ஒரு இந்து எழுதிய நூலை இன்று திரைப் படமாக ஆக்கினால், அது தணிக்கைக் குழுவின் சான்றினை எப்போதுமே பெறமுடியாது.

ஜெயதேவர் என்ற மற்றொரு இந்து எழுதிய பாலுணர்வு மிகுந்த கற்பனை நூலான கீதகோவிந்தம் கிருஷ்ண பரமாத்வாவின் அங்க அழகினை ஆழ்ந்த உணர்வுடன் எடுத்துக் காட்டுகிறது. அடிக்கடி உடலுறவு கொள்வது ஒருவரின் வாழ்நாளைக் குறைத்துவிடும் என்று அண்மையில் குறிப்பிட்ட போபால் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் அலோக் சஞ்சாருக்கு இந்த நூலை அறிமுகப்படுத்த நீங்கள் விரும்பக் கூடும். என்றாலும்,  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறுதியாக நின்று வரும் இந்து மதம் சிலர் நகைச் சுவையாகக் கூறும் கேலியினாலும், கிண்டலினாலும் அழிந்து போகும் என்று நினைப்பவர்களிடம் இருந்து இந்து மதத்தைப் பாதுகாக்கவேண்டிய நிலை மறுபடியும் நமக்கு ஏற்பட்டுள்ளது.

ராஜ்குமார் ஹிரானி என்ற ஒரு இந்து இயக்குநர் தயாரித்து வெளியிட்டுள்ள பி.கே. என்ற திரைப்படத்தைப் பற்றி எழுந்துள்ள கருத்துவேறுபாடுகளைப் பற்றித்தான் நான் இப்போது குறிப்பிடுகிறேன். 

விசுவ இந்து பரிஷத் இந்த திரைப்படத்தைத் தடை செய்யவேண்டும் என்று கோருகிறது;  இந்த அமைப்பின் உறுப்பினர்களும், பஜ்ரங் தள உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டு இத் திரைப்படத்தின் சுவரொட்டிகளைக் கிழிந்தெறிந்து விட்டு, அத்திரைப்படம் திரையிடப்படுவதைத் தடுக்க முற்பட்டுள்ளனர். இதன் காரணம் என்ன? பி.கே. திரைப்படம் இந்து மதத்தைக் கேலிசெய்கிறது என்று விசுவஇந்து பரிஷத் அமைப்பின் செய்தித் தொடர் பாளர் வினோத் பன்சால் கூறுகிறார். மதநல்லி ணக்கத்தைக் காக்கும் நோக்கத்தில் இத் திரைப் படத் தின் சில காட்சிகளை சென்சார் குழு நீக்கிவிட வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லிம்களுக்கான தனிப்பட்ட சட்டக் குழுவும் கேட்டுள்ளது.

மூன்று முட்டாள்கள் என்ற திரைப்படம்

சிறிது நேரத்துக்கு நாம் பி.கே. திரைப்படத்தை மறந்துவிடுவோம். நடிகர் அமீர்கானை வைத்து இதே இயக்குநர் ஹிரானி எடுத்து பெரு வெற்றி பெற்ற முந்தைய திரைப்படமான மூன்று முட்டாள்களை எடுத்துக் கொள்வோம். தேர்வுகள் பற்றி கவலைப்படும் ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் தாங்கள் தேர்ச்சி பெற கடவுளை வழிபடுவதைப் பற்றி இத் திரைப்படத்தில் காட்சிகள் உள்ளன. தேர்வு முடிவுகள் இன்று வெளியாகப் போகின்றன. கடவுளுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய நேரமிதுதான்   என்று கூறுவது போல கிண்டலாக அக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு கடவுளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

ஒரு மாணவர் மணியடித்துக் கொண்டே, இந்து கடவுள்களின் படங்கள் நிறைந்துள்ள ஒரு சுவரின் முன்னர் கற்பூர ஆரத்தி காட்டிக்கொண்டே,  கடவுளே எனது எலக்டிரானிக்ஸ் தேர்வு விடைத் தாளை கவனித்துக் கொள்ளுங்கள். அப்படி செய்தால், உங்களுக்கு நான் ஒரு தேங்காய் உடைக்கிறேன் என்று முணுமுணுக்கிறான். தனது இயல்பியல் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு உதவினால், நாகதேவதைக்கு தினமும் ஒரு லிட்டர் பால் வார்ப்பதாக ஒரு பாம்பின் முன் வணங்கி நிற்கிறான் இன்னொருவன்.

மூன்றாவது மாணவன் தனது கையில் வைத்திருக்கும் புல்லினை ஒரு பசுவின் வாயில் திணித்துக் கொண்டிருக்கிறான்.  தனது தேர்வுகளில் தேர்ச்சி பெற கோமாதா தனக்கு உதவ வேண்டும் என்று அவன் விரும்புகிறான். மற்றொரு மாணவன் வேறொரு கடவுள் சிலையின் முன்னர் நின்று கொண்டு மாதா மாதம் 100 ரூபாய் காணிக்கை செலுத் துவதாக உறுதி அளிக்கிறான்.

காட்சியை விவரிப்பவர், இந்த 100 ரூபாயால் போக்குவரத்து காவல்காரரைக் கூட திருப்தி படுத்தமுடியாது; அப்படி இருக்கும்போது கடவுளை எப்படி இது திருப்திபடுத்தும் என்று குறிப்பிடுகிறார்.

இதுபோன்று இந்து மதம் கேலி செய்யப்படுவது பற்றித்தான் பி.கே. திரைப்படம் மீது குற்றம் சுமத்தப் படுகிறது. இத்துடன் முடிந்துவிடவில்லை; இதற்கு மேலும் உள்ளது.

3 முட்டாள்கள் படத்தில்  இத் தகைய கேலியான விமர்சனம் செய்யும் வர்ணனை யாளர் ஃபர்ஹான் குரேஷி என்பவர். இந்தக் காட்சி களில் எல்லாம் திரைப்படத்தின் கதாநாயகன் எங்கே வந்தான்? ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறான்.

கற்பூர ஆரத்தி காட்டப்படும்போது கூறப்பட்ட மந்திரம், அப்போது அடிக்கப்பட்ட மணியின் ஓசை ஆகியவற்றாலும் அவனை உறக்கத்தில் இருந்து எழுப்பமுடியவில்லை. இவற்றை எல்லாம் கடந்த நிலையில் அவன் இருக்கிறான் என்று கூறுவதற்கான மற்றொரு வழி இது.

ஆனால் அப்போது,  நாட்டின் பல பகுதிகளிலும் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையான சடங்குகள் எவை என்பது பற்றியும்,  அந்த திரைப்படத்தின் மய்யத்தில் தேவதூதனைப் போலக் காட்டப்படும் கதாநாயகனுக்கு சடங்குகள் என்ற ஊன்றுகோல் ஏன் தேவைப்படவில்லை என்பது பற்றியும் முஸ்லிம் வர்ணனையாளரின் கேலி, கிண்டல் பற்றி  எவர் ஒருவரும் எந்த சத்தமும் எழுப்பாததன் காரணம் என்ன என்ற வியப்பு எவருக்கும் ஏற்படவே செய்யும்.

கிறிஸ்தவ, சீக்கிய, முஸ்லிம் மாணவர்கள் எவரும் தீவிரமாக அவரவர்களின் கடவுள்களை வழி படுவதைப் பற்றி இப்படத்தில் எதுவும் இடம் பெற வில்லை என்பது பற்றி ஒரு வார்த்தை கூட அப்போது பேசப்படவில்லை. மதசார்பற்ற, பகுத்தறிவு மனம் கொண்டவர்கள்  இந்துக்கள் பின்பற்றும் பழக்க வழக் கங்களை மட்டுமே கேலியாகப் பார்ப்பது ஏன் என்று ஒருவர் கேட்கலாம்.

கமலஹாசனின் விசுவரூபம் படம்
 
மூன்று முட்டாள்கள் திரைப்படம் முழுக்க முழுக்க மதத்தைப் பற்றியதல்ல  என்பதால் எவரும் இந்தக் கேள்வியை எழுப்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் பி.கே. திரைப்படத்தின் நோக்கம் நன்கு புலப்படுவதாக இருக்கிறது.

இத்தகைய இனிமையான திரைப் படத்தைப் பற்றி பேசும்போது தாக்குதல் என்ற சொல் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்ற போதிலும் இதில், எவரது கருத்து, உணர்வு பற்றி சிறிதும் கவலைப்படாமல்  மதத்தின் மீது  வெளிப்படையான கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   இது ஒரு பெரிய திரைப்படம், இதில் நடிப்பவர் ஒரு பெரிய நடிகர் என்பதால் இதற்கு எதிராகப் பேசினால், அது அதிக அளவிலான கவனத்தை ஈர்க்கும் என்பதாலேயே இத்திரைப்படத்தின் மீது இத்தகைய முழுமையான கவனம்  குவிக்கப்பட்டிருக்கக்கூடும். கமலஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு என்ன நேர்ந்ததோ அதனைப் போன்றதுதான் இதுவும். முஸ்லிம்கள் தீட்டிய ஒரு சதித்திட்டத்தை தோற் கடிக்கும் அப்படத்தின் கதாநாயகன் தவறாமல் தொழுகை புரியும் ஒரு முஸ்லிம் என்பதை அப்படத்தை எதிர்த்த  முஸ்லிம் அமைப்புகள் நன்கு அறிந்தே இருந்தன. இது போன்ற கருத்து கொண்ட இதர திரைப்படங்களில் பெரும்பாலானவை கதாநாயகனை ஓர் இந்துவாகவே காட்டுபவையாக இருக்கும் என்ற நிலையில் அப்படத்தின் கதாநாயகன் ஒரு முஸ்லிமாக காட்டப்படுவதை அந்த முஸ்லிம் அமைப்புகள் கொண்டாடியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம்.  அப்படியில்லை. தீவிரவாதிகள் எப் போதுமே பெரும்பாலும் அது போல பார்க்க மாட்டார்கள்.

முப்பது ஆண்டுகளுக்குமுன்

பி.கே.திரைப்படத்தின் மீதான மற்றொரு குற்றச் சாட்டு அது காதல்புனிதப்போரை ஆதரிப்பதாக இருக்கிறது என்பதுதான். சர்பார்ஸ் என்ற பாகிஸ்தானிய இளைஞனுக்கும், இந்த உலகைப் படைத்தவள் என்ற பொருள் தரும் ஜகத்ஜனனி என்ற கடவுள் பெயரைக் கொண்ட ஒரு இந்து பெண் ணுக்கும் இடையே ஏற்படும் காதலைப் பற்றிய திரைப்படம் இது. ஆனால் இந்த காதல் கதை நடப்பது இந்தியாவிலோ பாகிஸ்தானத்திலோ அல்ல. எனது பெயர் கான் என்று கூறியவுடனேயே, அமெரிக்காவில் உள்ள ஒரு முஸ்லிம் இளைஞனுக்கும், ஒரு இந்து யுவதிக்கும் இடையே அது காதலைத் தோற்றுவித்துவிடுவது போலவே நடுநிலை நாடான பெல்ஜியத்தில் நடப்பதாக அக்கதை அமைந்துள்ளது. இந்த இரு திரைப் படங்களின் கதாநாயகிகளும் நன்கு படித்தவர்கள், தாராளமனம் கொண்டவர்கள், திருமணத்திற்குப் பிறகு அவர்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறிவிடுவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.

மனஉறுதி படைத்த ஜோதாஅக்பர் தனது மதத்தைத் துறந்தது போல தங்களது மதத்தைத் துறக்கத் தயாராக இருப்பவர்கள் அல்ல அவர்கள்.  இருபது முப்பது ஆண்டு களுக்கு முன்னர் வெளிவந்த முகந்தர் தா சிக்கந்தர் போன்ற திரைப்படங்களிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். அவற்றில் கதாநாயகன் ஒரு முஸ்லிம் பெண்ணால் வளர்க்கப்பட்டிருப்பான்; ஆனால் அவன் ஓர் இந்து பெண்ணைக் காதலிப்பான்.  பாலியல் துருவங்கள் மாறி யிருக்கும் மதக்கலப்பு காதல் கதைகளைப் பார்த்தால், கடார் படத்தில் முஸ்லிம் பெண்ணும் -சீக்கிய இளை ஞனும், வீர் ஜாரா, ராஞ்சஹானா, ஏக் தா டைகர் ஆகிய  படங்களில் முஸ்லிம் பெண்ணும்-இந்து ஆணும் காதலிக்கும் கதைகள் கொண்டவை. இப்படங்களுக்குப் பெரிய எதிர்ப்பு ஏதும் ஏற்பட்டதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படங்கள் அனைத்தும் பெருவெற்றி பெற்றவை. வசூலில் ரூ.200 கோடிக்கும் மேல் ஈட்டி சாதனை படைத்த முதல் திரைப்படம் மூன்று முட்டாள்கள் தான். அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த பார்வையாளர்களின், குறிப்பாக நமது நாட்டில் பெரும்பான்மையானவர்களாக உள்ள இந்து மக்களின் ஆதரவு இன்றி, இத்தகைய வசூலை ஒரு படத்தால் ஈட்டித் தர முடியாது. இப்படத்தில் செய்யப்படும் மென்மையான கேலியைப் பற்றி அவர்களே பெரியதாகக் கவலைப்படவில்லை என்னும்போது,  அவர் களுக்காக தடிகளை ஏந்திக்கொண்டு தாக்குவதற்கு ஓடி வருவதற்கு,  இந்த சந்தர்ப்பவாத அரசியல் கட்சி உறுப்பி னர்களும், மற்றவர்களும் யார்? திரைப்படங்கள் தேர்தல் களைப் போன்றவை என்பதை அவர்கள் உணர வில்லையா? மக்கள் வரிசையில் அமைதியாகக் காத்திருந்து, வாக்குச் சாவடிக்குள் சென்று, ஒரு வாக்கினை வாங்கி வாக்களிப்பார்கள். 

அதுபோல, பி.கே.போன்ற படங்கள் பெருவெற்றி பெறும்போது, 300 கோடி ரூபாய்க்கும் மேலான வசூலை அது அள்ளித்தரும் என்ற உறுதி ஏற்பட்டிருக்கிறது. இச்சாதனை புரியக்கூடிய முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். அப்படியென்றால், அளவு கடந்த, மிகப் பெரிய பெரும் பான்மையான மக்களால் அது ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது என்பதே அதன் பொருளாகும். தங்கள் ஆதரவின் மூலம் மக்கள் பேசியுள்ளனர். ஒரு பக்கத்தில், இந்தப் படத்தின் கதையைப் பற்றி கவனிக்கும்படி காவல் துறையை மகாராஷ்டிர மாநில அரசு கேட்டுள்ளது; மறு பக்கத்தில்,  மும்பை வட்டத்தில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் கொடுக்கும் முதல் படமாக பி.கே. இருக்கும் என்று பாக்ஸ்ஆபீஸ்இந்தியா இணையதளம் உறுதிபடக் கூறுகிறது. இந்த இடத்தில் நீங்கள் கேட்கவேண்டிய கேள்வி இதுதான். இங்கே உண்மை யிலேயே எவருடைய மனஉணர்வுகள்  பாதிக்கப்பட்டுள்ளன?

இந்தியாவைக் காவிமயமாக்கும் முயற்சி

தணிக்கைக் குழுவின் ஒப்புதலைப் பெற்று ஒரு திரைப்படம் வெளியிடப்பட்ட பிறகு, தங்கள் உணர்வுகளை அது காயப்படுத்துகிறது என்று கூறி, அதனை திரைப்பட அரங்குகளிலிருந்து திரும்பப் பெறவேண்டும் என்று கேட்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விஷயம் பற்றி உணர்ச்சி கொண்டவர்களாக இருக்கின்றனர். அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால், உங்களால் ஒரு திரைப்படத்தைக் கூடத் தயாரிக்கவே முடியாது. நீங்கள் இதனை அறிவீர்கள்; நானும் அறிந்திருக்கிறேன். எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகளும் இதனை அறிந்திருக்கின்றன. பிறகு ஏன், அவர்கள் தொடர்ந்து கோபப்படுபவர் களாகவும், கவலைப்படுபவர்களாகவும் இருக்கின்றனர்?  சிலர் கூறுவது போல, இந்தியாவை காவிமயமாக்கும் முயற்சி அதிகரித்து வருவதுதான் இதன் காரணம். இப்போது உள்ள கலாச்சார தட்பவெப்ப நிலை, ஹரேராமா, ஹரேகிருஷ்ணா திரைப்படம் வெளிவந்த 1970 களில் நிலவிய தட்பவெப்பநிலையில் இருந்து மாறுபட்டதாகவே உள்ளது.

தனது  தலைப்பிலும், காட்சிகளிலும் கடவுள்களுக்கு நுகத்தடி பூட்டி, கேலிச்சித்திரமாகக் காட்டுவதற்கு ஹரேராமா, ஹரேகிருஷ்ணா திரைப்படத்தினால் முடியும் என்றால், (இப்படத்தின் தம்மரே தம் என்ற பாடல் பெருவெற்றி பெற்றது) கணக்கு வழக்கின்றி ஹூக்கா புகைக்கும் காட்சிகளும், திருமணத்திற்கு முன்பான உடலுறவுக் காட்சிகளும் இடம் பெறச் செய்ய முடியும் என்றால், சாதாரணமான கேலியைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை எதனால் இப்போது வந்தது? இதற்கு மிகப்பெரிய முக்கியமான காரணம் என்னவென்றால், நமது தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், இன்டர் நெட்டுக்கும் வாரம் 7 நாட்களும் தினமும் 24 மணி நேரமும் ஒளிபரப்ப செய்திகள் தேவைப்படுகின்றன. அந்த செய்தி ஒரு மாபெரும் வெற்றி பெற்ற திரைப் படத்தைப் பற்றிய செய்தியாக இருந்துவிட்டால், அந்தச் செய்தியே பெரியதாக ஆகிவிடுகிறது. உணர்ச்சி  மயமான, பார்வையாளர்களையும், வாசகர்களையும் கவரும் செய்திகள்இவை.

எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த அமைப்புகள் மலிவான, எளிய, உறுதிஅளிக்கப் பட்ட விளம்பரம் தேடும் தங்கள் தாகத்தின் காரணமாக, கலவரங்களை விளைவித்து, சுவரொட்டிகளைக் கொளுத்துவதன் மூலம் தங்களைப் பற்றிய பொது மக்களிடையேயான அச்சத்தை வளர்க்க முயல்கின்றனர். இதில் உள்ள சோகம் என்னவென்றால், இது உங்களுக்கும் தெரியும்; எனக்கும் தெரியும்; எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகளுக்கும் இது தெரியும் என்பதுதான்.

நன்றி: தி ஹிந்து 2-1-2015
கட்டுரை ஆசிரியர்: பரத்வாஜ் ரங்கன்
தமிழில் : த.க.பாலகிருட்டிணன்

Thursday, October 25, 2012

கடவுள் சக்தி - நம்பிக்கை - சீட்டுக் கிழிந்தது!

குடந்தையில் 11 அய்ம்பொன் கோயில் சிலைகள் கோவிந்தா!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பெருமாள் கோவிலில் 11 அய்ம்பொன் சிலைகள் புதன்கிழமை திருட்டு போயின.
கும்பகோணம் அருகேயுள்ள பாபுராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட புளியஞ்சேரி அக்ரஹாரத்தில் ருக்மணி சத்யபாமா சமேத வேணு கோபாலசுவாமி (பெருமாள்) கோவில் உள்ளது. தனியாருக்குச் சொந்த மான இந்தக் கோவிலை ஒரு பிரிவைச் சேர்ந்த பரம்பரையினர் மட்டும் வழிபட்டு வருகின்றனர்.
ஏறத்தாழ நூறு ஆண்டுகள் பழைமையான இந்தக் கோவிலில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அர்த்த மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் சுவரும், மண்டபமும் இடிந்து உள்ளே விழுந்தன.
இந்தக் கோவிலை திருப்பணி செய்ய அறங்காவலர்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அக்டோபர் 22-ஆம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த ரவிச்சந்திர குருக்கள் இந்தக் கோவிலில் பூஜை செய்து, பின்னர் பூட்டிவிட்டுச் சென்றார். செவ்வாய்க்கிழமை பகல் முழுவதும் மழை பெய்து கொண்டிருந்ததால், குருக்கள் கோவிலுக்கு வரவில்லை.
புதன்கிழமை காலை 10 மணிக்கு கோவிலுக்கு வந்த குருக்கள் அர்த்த மண்டபத்துக்கும் கருவறைக்கும் இடையே உள்ள கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், பூட்டும் காணாமல் போனது தெரியவந்தது.
மேலும், கோவில் கதவு உடைக்கப் பட்டு, கருவறையில் இருந்த 5 ஆழ் வார்கள் சிலைகள், வேணுகோ பாலன், ருக்மணி, சத்யபாமா, கிருஷ் ணன், நரசிம்மன், ஆஞ்சநேயர் ஆகிய 11 சிலைகள் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் எனக் கூறப் படுகிறது.
காளஹஸ்தி கோவில் கோபுரம் கற்கள் இடிந்து விழுந்தன நகரி:  காளஹஸ்தி சிவன் கோவி லில், விமான கோபுரத்திலிருந்து கற்கள் இடிந்து விழுந்தன.
சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி வாயுலிங் கேஸ்வர சுவாமி கோவிலில், ஞான பிரசூனாம்பிகை தாயார் சன்னதி விமான கோபுரத்தில், மூன்று கலசம் அமைந்து உள்ளது. இந்த கலசம் அருகே, கற்கள் திடீரென இடிந்து கீழே சரிந்தது. கடந்த நான்கு தினங்களாக காளஹஸ்தி பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் விமான கோபுரத்தின் மீது தண்ணீர் இறங்கியதால், கலசத்தின் அடிப்பகுதி சேதமடைந்து, கற்கள் இடிந்து விழுந்துள்ளன. அப்போது, பக்தர்கள் யாரும் அருகில் இல்லாத தால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை.
நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்த பக்தர்கள், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தாயார் சன்னதி விமான கோபுரத்தின் மீது உள்ள கலசங்கள் அருகே செடிகள் முளைத்துள்ளன. இதை அகற்றி, பராமரிக்க தவறியதால் கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. விமான கோபுரத்தை உடனடியாக பழுது பார்க்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என, கோவில் அதிகாரி தெரிவித்தார்.  கடந்த ஆண்டும், கோவில் முகத் துவார கோபுரத்தில் கலசம் ஒன்று சரிந்து விழுந்தது.
அதற்கு முன்பு ராஜகோபுரமே தலைகுப்புறக் கவிழ்ந்ததே!
திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பக்குளம் சுவர் இடிந்தது
திருவாரூர்: திருவாரூர் தியாக ராஜர் கோயில் கமலாலய தெப்பக் குளத்தின் 66 அடி நீள சுவர் மழையால் இடிந்து விழுந்தது.
திருவாரூரில் தியாகராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான கமலாலயம் தெப்பக் குளம் பிரமாண்டமானது. தொடர்ந்து 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. கன மழையால் கமலாலய தெப்பக் குளத்தில், துர்காலயா சாலை வடக்கு பகுதியில் 66 அடி நீள சுற்றுச்சுவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் திடீரென இடிந்து குளத்துக்குள் விழுந்தது. எப்போதும் பரபரப்பான துர்காலயா சாலையில் தெப்பக்குளத்தின் சுவர் இடிந்ததால் தடுப்பு வைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தெப்பக்குளத்தில் நடைபெற்று வந்த படகு போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தகவலறிந்த இந்து அறநிலையத் துறை இணை ஆணையர்  ஆர்டிஓ,  தாசில்தார்,  நகராட்சி தலைவர்  மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சாட்டையால் அடித்து பேய் விரட்டலாம்!
என்று ஒழியும் இந்த மூடப் பேய்?
நாமக்கல்: நாமக்கல் அருகே நடந்த, அச்சப்பன் கோவில் திரு விழாவில், பக்தர்களை சாட்டையால் அடித்து, பேய் விரட்டும், "வினோத' நிகழ்ச்சி நடந்து.
நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமத்தில், அச்சப்பன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில், ஆண்டுதோறும், ஆயுதபூஜைக்கு மறுநாளான விஜயதசமியன்று, திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதில், குரும்பா இன மக்கள் மட்டும் பங்கேற்பர். விழாவின், முக்கிய
நிகழ்ச்சியாக, பக்தர்களைச் சாட்டை யால் அடித்து பேய் விரட்டுதல், சேவை நடனம் உள்ளிட்டவை நடக் கும். இதில், திருமணமாகாத பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மற்றும் துஷ்ட ஆவி பிடித்தோர் பங்கேற்பார்களாம். அவர்கள், தரையில் மண்டியிட்டபடி, கைகளை மேலே தூக்கியிருப்பர். கை தூக்கியுள்ள பக்தர்களை, அச்சப்பன் கோவில் பூசாரி மற்றும் கோமாளி வேடம் தரித்த நபர், பிரம்மாண்ட சாட்டையைச் சுழற்றி, நடனமாடியபடி அடிப்பது வழக்கம்.
அதன் மூலம், தங்களைப் பிடித்த துஷ்ட ஆவி உள்ளிட்டவை நீங்கும் என்பது, விழாவில் பங்கேற்கும் பக்தர் களின் நம்பிக்கையும் இந்தாண்டுக்கான, அச்சப்பன் கோவில் திருவிழா, விஜய தசமியான, நேற்று நடந்தது. சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குரும்பா இன மக்கள், கோவிலில் குவிந்தனர். மாலை, 3 மணியளவில், பிரசித்தி பெற்ற பேய் விரட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. அதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் ஈர ஆடையுடன் வரிசையாக மண்டியிட்டு, கைகளை மேலே உயர்த்தியவாறு காத்திருந்தனர்.
கோவில் பூசாரி மற்றும் கோமாளி வேடம் தரித்த நபரும் மேள தாளம் முழங்க சாட்டையை சுழற்றியபடி வந்தனர். பின், கைகளை மேலே உயர்த்தி மண்டி யிட்டிருந்த பக்தர்களை சாட்டையை சுழற்றி அடித்தனர். ஒரே அடியில் சிலர் எழுந்து சென்றனர். ஒரு சில பக்தர்கள் இரண்டு, மூன்று அடிகளுக்கு பின் எழுந்து சென்றனர்.அச்சன் கோவில் திருவிழாவையொட்டி, 40-க்கும் மேற் பட்டோர் நேர்த்திக் கடனாக, தங்களது தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டனராம்.
உடலில் ரத்தம் பீறிட கத்திபோடும் விழாவாம்!
பொள்ளாச்சி: நவராத்திரியை ஒட்டி, பொள்ளாச்சி அருகே அம்மன் கோவிலில், உடலில், "கத்தி போடும்' நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டம், நெகமத்தில், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது.
இங்கு, நவராத்திரி விழா, அக்., 15இல் துவங்கியது. கடந்த, 19ஆம் தேதி மாலை,  திருவிளக்கு வழிபாடும், நேற்று முன்தினம் இரவு, 8 மணிக்கு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும் நடந்தது.
விஜயதசமி தினமான நேற்று காலை, 9 மணிக்கு, விநாயகர் கோவிலில் அலகு சேவை செய்து, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
அங்கிருந்து, சக்தி அழைத்து வரப்பட்டது; உடன், மாவிளக்கு மற்றும் முளைப்பாரி ஏந்தி பக்தர்கள் வந்தனர்.
இதன் பிறகு, பக்தர்கள், "கத்தி போடும்' நிகழ்ச்சி, காலை 11:30 மணியளவில் துவங்கியது. இதில் பங்கேற்றவர்கள், "வேசுக்கோ தீசுக்கோ' என்ற முழக்கமிட்டவாறு, இரு கத்திகளை கொண்டு கைகளை கீறிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராம மக்கள் கண்டு களித்தனராம்.
துர்க்கா சிலை கரைப்பில் இளைஞர் சாவு
சென்னை: தசரா திருவிழா வையொட்டி சென்னையில் துர்க்கை அம்மன் சிலைகளை வைத்து வழி பாடு செய்தனர். வழிபாடு செய்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நேற்று மாலை கடலில் கரைத்த போது இளைஞர் ஒருவர் பெரும் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்துபோனார்.
விநாயகர் சதுர்த்தி திருவிழாவை யொட்டி, விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து, பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்ததுபோல, தசரா திருவிழாவை யொட்டி சென்னையில் சவுகார்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் 80 துர்க்கை அம்மன் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
வழிபாடு செய்த துர்க்கை அம்மன் சிலைகளை நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் மற்றும் நீலாங்கரை பல்கலைநகர் கடற்கரைப் பகுதிகளில் துர்க்கை அம்மன் சிலைகளை கடலில் கரைத்தனர். நீலாங்கரை பல்கலை. நகர் கடலில் சிலைகளைக் கரைத்தபோது, மணி கண்டன் (வயது 27) என்ற இளைஞர் கடலில் மூழ்கினார்.
அவரை மிகப் பெரிய அலை இழுத்துச் சென்றது. அவரோடு மேலும் ஒரு இளைஞரும் கடலில் மூழ்கி னார். ஆனால், அவரை அங்கிருந் தவர்கள் காப்பாற்றிவிட்டனர். இறந்த  மணிகண்டன் கிழக்கு தாம் பரத்தை சேர்ந்தவர். திருமணமாகாதவர். சென்னை விமான நிலையத்தில் சரக்கு பொருட்களை ஏற்றி, இறக்கும் பிரிவில் ஊழியராக வேலை பார்த் தார். இவரது உடல் நேற்று இரவு அதே பகுதியில் கரை ஒதுங்கியது.
நீலாங்கரை காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத் தினார்கள்.

Tuesday, December 13, 2011

Thursday, November 24, 2011

இந்து சாமியாரின் கதை அமெரிக்காவிலும் சிரிக்கிறது

நியூயார்க், நவ. 24-   ஒவ்வொருவரிடம் இருந்தும்  முப்பதாயிரம் டாலர் பெற்றுக் கொண்டு பொய்க் காரணம் கூறி அமெரிக்காவிற்கு வருவ தற்கான விசாவைப் பெற்று, வழங்கி மோசடி செய்துள்ளார் என்று இந்திய ஆன்மீக குரு ஒருவர் மீது சாற்றப்பெற்ற குற்றம் நிரூபிக்கப்பட்டுள் ளதாக அமெரிக்க நீதி மன்றம் தீர்ப்பளித்துள் ளது.  

அமெரிக்காவின் மில் வாகியில் உள்ள கவுடியா வைஷ்ணவ சொசைட்டி என்னும் ஓர் இந்துக் கோயிலின் தலைவர் என்று தன்னைக் கூறிக் கொண்ட 31 வயதான சாகர்சென் ஹல்தார் என் பவர்தான் இந்தக் குற்ற வாளி.

மத சம்பந்தமான பூசாரி போன்ற பணிகளைச் செய்வதற்காக அமெரிக்கா வருவதாகக் கூறிக் கொண்டு 25-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறு வதற்கான விசாக்களைப் பெற்று இவர் வழங்கி  மோசடி செய்துள்ளார் என்ற இவர் மீதான குற் றத்தை கிழக்கு வின்கான் சின் மாவட்ட நீதிமன்ற ஜூரி உறுதி செய்துள்ளார். இவருக்கான தண்டனை 24 ஆம் தேதியன்று வழங் கப்படும்.

இந்த விசாக்களுக் கான விண்ணப்பங்களில் அவர்கள் கவுடிய வைஷ் ணவ  சொசைட்டி கோயி லில் பணியாற்ற வரும் மதப் பணியாளர்கள்  என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அவர்கள் எந்தவிதமான மதப் பயிற் சியோ, அனுபவமோ பெற்றி ருக்கவில்லை. அமெரிக் காவுக்கு வந்த பிறகு பூசாரி களாக வேலை செய்யும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை.

இந்த விசாவைப் பெற்று வழங்குவதற்கு ஒவ் வொருவரிடமிருந்தும் தலா முப்பதாயிரம் டாலர்களை ஹல்தார் பெற்றுள்ளார். ஒரு கணிசமான தொகையை முன் பண மாகக் கொடுக்கும் இவர் கள் அமெரிக்கா வந்த பிறகு மில்வாகி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கடைகளில் வேலை செய்து தாங்கள் தர வேண் டிய பாக்கிப் பணத்தைத் தங்கள் வசதி போல ஹல்தா ருக்கும் இந்தியாவிலுள்ள அவருடன் தொடர்புடை யவர்களுக்கும் அளித்து விடுகின்றனர்.

இந்த வழக்கில் ஹல் தார் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக் கிறது என்று அமெரிக்க சுங்கம் மற்றும் குடியேற்றக் கட்டுப்பாடு, மற்றும் உள் நாட்டுப் பாதுகாப்பு விசா ரணை அதிகாரி, கேரி ஹார்ட்விக் என்பவர் கூறி னார்.  குற்றம் புரியும் நோக் கம் கொண்டவர்களும், நமக்குத் தீங்கிழைக்கும் எண்ணம் கொண்டவர் களும் தவறாகப் பயன் படுத்திக் கொள்ளும் ஆபத்தை  இத்தகைய விசா மோசடிகள் ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

இந்த வைஷ்ணவ கோயில் அதிக அளவில் விசா விண்ணப்பங்களை அளித்துள்ளதாக, அமெ ரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற மோசடிப் பிரிவில் இருந்து 2008 ஜூலையில் பெறப்பட்ட ஒரு புகார் மீது விசாரணை தொடங் கியது.

இவ்வாறு விரிவான விசா மோசடியைச் செய்வ தற்கு ஹல்தார் இந்தக் கோயிலின் பெயரைப் பயன்படுத்திக் கொண் டுள்ளார் என்று விசா ரணையில் தெரியவந்தது.

இந்தியாவில் இருந்து 2010 ஜூனில் அவர் அமெரிக்காவுக்கு வந்த போது, சிகாகோ பன் னாட்டு விமானதளத்தில் அவர் கைது செய்யப்பட் டார்.

அவரது பெட்டியில், பல இந்தியக் குடிமக் களின்  அடையாள ஆவ ணங்கள், அவர்களது பாஸ்போர்ட்டுகள்,  ஒளிப் படங்கள் மற்றும் இதர ஆவணங்கள் கண்டெடுக் கப்பட்டன.

Saturday, August 13, 2011

குதிப்பதுதான் குண்டலினியா?


திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்ற ஒரு இளைஞன். சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி காவிகளுடன் அலைந்து திரிந்தான். அந்தக் காவிகளின் எல்லாப் பழக்கங்களும் தொற்றிக்கொண்டு நான்தான் ரமணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டு நித்யானந்தா என்று புதுப்பெயர் சூடிக்கொண்டான்; ஆசிரமம் அமைத்தான். சாமியார் தொழில்தான் எப்போதும் நல்லாக் கல்லாக் கட்டும் தொழில் ஆயிற்றே. கல்லாப் பெட்டி நிரம்பியது.

பக்தி வியாபாரம் படு ஜோர். காலத்திற்குத் தகுந்தவாறு நவீனத் தொழில் நுட்பங்களைக் கையாண்டு பக்த கோடிகளைச் சேர்த்துக் கொண்டார். பேச்சில் வல்லவராகப் பேசப்பட்டார். அப்படிப் பேச இவரே பணம் கொடுத்து பலரையும் கிளப்பிவிட்டார். புத்தகங்கள் போட்டார். பல எழுத்து வியாபாரிகள் பணம் பெற்றுக்கொண்டு எழுதிக் கொடுத்ததையெல்லாம் இவரது பெயரிலேயே வெளியிட்டுக் கொண்டார். கதவைத் திற காற்று வரும் என்று முன்னணி ஏட்டில் தொடரும் வந்தது.


உடல் உழைப்பில்லாதவர்கள், மனம் சோர்ந்தவர்கள், குடும்பத்தோடு, குழந்தைகளோடு வீட்டில் சரியாகப் பேசாதவர்கள், தனிமையில் இருப்பவர்கள், கணவனை அல்லது மனைவியை விட்டுப் பிரிந்தவர்கள், முதியவர்கள் என வாழ்க்கையை ரசிக்கத் தெரியாத ரகத்தினர், சமூகச் சிந்தனை இல்லாதவர்கள் இந்த மாதிரிச் சாமியார்களைச் சரணடைவதுதான் சில ஆண்டுகளாக ஒரு பேஷன். அந்த பேஷன் இந்தச் சாமியாருக்கும் கை கொடுக்க கூட்டம் கூடியது. பணமும் சேர்ந்தது. கீதா உபதேசத்திலிருந்து பிரம்மச்சரியம் வரை வாய் கிழியப் பேசுவது நித்யானந்தாவின் சிறப்பு. கூடவே தியானம், யோகம் போன்ற எளிதான உடற்பயிற்சிகளும் சொல்லித் தரப்பட்டன. ஊர் ஊருக்கு அமைப்புகள் உருவாயின. உபதேசங்களுக்குப் பயணமும் சென்றார். சகல வசதிகளுடன் வாழ்க்கை முறை அமைந்தது. மனிதனின் உடல் தேவையும் ஏற்பட்டது சாமியாருக்கு.

ஒரு மார்க்கெட் இழந்த நடிகை ஆசிரமத்தில் அடைக்கலமானார். அவரே சாமியாருக்குப் பணிவிடைகள் செய்தார். இது நித்யானந்தாவே  சொல்லிய வாக்குமூலம். ஆசிரமத்துக்குள் சிக்கல் உருவாக சாமியாரின் அந்தரங்கம் சி. டி.யில் பதிவாகி இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒளிபரப்பானது. நக்கீரன் பத்திரிகையில் நித்யானந்தாவின் உண்மை முகத்தை அவரது சீடர் லெனின் கருப்பன் என்ற தர்மானந்தா வெளிக்கொணர்ந்தார்.
ஒரு ஆணுக்கு ஒரு பெண் துணை தேவைதான். அதனை உலகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், பிரமச்சரியம் பற்றிப் பேசியவர் அப்படி இருக்கலாமா என இந்து மதத்தினரே கேள்வி எழுப்பினர். நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழ இவரது பிடதி ஆசிரமம் கருநாடகாவில் இருப்பதால் வழக்குப் பதிவானது. சில நாள் வட மாநிலங்களில் ஓடி ஒளிந்து பின் கைது செய்யப்பட்டு சாமியார் கம்பி எண்ணினார். அவருடன் இருந்த நடிகை ரஞ்சிதாவோ தலைமறைவானார். வழக்கில் ஜாமீன் பெற்று ஆசிரமம் திரும்பியவருக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தைரியம் இங்கு பேட்டி கொடுக்கும் அளவுக்கு வந்தது.

கடந்த ஜூலை 13 அன்று எல்லா பத்திரிகையாளர்களையும் அழைத்து, தனது தரப்பு கருத்துகளைச் சொல்லிய நித்யானந்தா அந்த சி.டி.யில் இருப்பது நான் இல்லை; அது முழுக்க போலியானது; என்னிடம் பணம் பெற பேரம் பேசப்பட்டது; இதையெல்லாம் காவல்துறையிடம் புகாராக அளித்துள்ளேன் என்று கூறினார். இவ்வளவு பேசியவர் நமது உண்மை நிருபரின் எந்தக் கேள்விக்கும் விடை அளிக்கவில்லை. இன்னும் சிலர் கேட்ட தனது சொத்து விவரம் குறித்த கேள்விக்கும் விடை சொல்லவில்லை. ஆதாரத்தைத் தருகிறேன் என்று கூறியவர் அதனைத் தராமலேயே பேட்டியை முடித்தார். (பேட்டி முழு விவரம் பெரியார் வலைக்காட்சியில் காணலாம்: www.periyar.tv)
நித்யானந்தா ரஞ்சிதாவுடன் உள்ள வீடியோவை உலகமே பார்த்துவிட்டது. youtube இணைய தளத்தில் ஒரு பகுதியை மட்டுமே பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். டெல்லியில் உள்ள Forensic Science Laboratory, Govt. of NCT of Delhi ஆய்வு மய்யம் அந்த வீடியோவில் இருப்பது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும்தான் என்று சான்றிதழும் அளித்துவிட்டது. ஆனால், அப்பட்டமாகப் பொய் கூறும் இவர், இழந்த மதிப்பை - மரியாதையைத் திரும்ப மீட்க குண்டலினி யாகம் செய்யப்போவதாக அந்தப் பேட்டியின் போது கூறினார்.  அதன்படியே ஜூலை 15 அன்று அந்த நாடகத்தை தனது பிடதி ஆசிரமத்தில் அரங்கேற்றினார்.


பக்தர்களைக் கூட்டிவைத்துக் கொண்டு குண்டலினி யாகம் என்று கூறி மந்திரங்கள் ஜெபித்து கையை உயர்த்தி சைகை காட்டினார். ஏற்கெனவே பயிற்றுவிக்கப்பட்ட சிலர் கால்களை மடக்கி உட்கார்ந்தவாறே குதித்தனர். தவளை போலத் தவ்வினார்கள். இதுதான் குண்டலினி சக்தி என்பதுபோல நித்யானந்தாவும் சிரித்தபடியே உஷ்..உஷ்.. என்றார். ஆனால், சர்வசக்தி உள்ளதாகவும், தமக்கு எல்லா யோகாசனங்களும் தெரியும் என்றும் புற்று நோயையே குணப்படுத்தும் ஆற்றல் பெற்ற வித்தைகள் தெரியும் என்றும் பேட்டியில் பீற்றிக்கொண்ட நித்யானந்தா குண்டலினியைச் செய்துகாட்டவில்லை.
குறைந்தபட்சம் அந்த பக்தர்கள் குதித்ததுபோலக் கூடக் குதிக்கவில்லை. சிறிது நேரம் குதித்த அந்த பக்தர்கள் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டனர். இந்த நிகழ்ச்சியை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க அமெரிக்காவில் இருந்தும் டெல்லியில் இருந்தும் பெங்களூருவில் இருந்தும் ஆய்வு நிறுவனங்கள் வர இருக்கின்றன. அவர்களின் முன்னிலையிலும், பத்திரிகையாளர்களின் முன்னிலையிலும் செய்துகாட்டப்போவதாகச் சொன்னார். எந்த நிறுவனத்தினரும் வந்ததாகத் தெரியவில்லை. அந்தத் தகவலை நித்யானந்தா தரப்பும் அறிவிக்கவில்லை. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு சில பத்திரிகையாளர்கள் சென்றிருந்தனர். இவர்களில் கர்நாடகாவைச் சேர்ந்த கிரண் என்ற பத்திரிகையாளரும் ஒருவர். இவர் அங்கு என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார். கடந்த 15ஆம் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்றேன். அப்போது, நித்யானந்தா, குண்டலினி யாகம் நடத்தினார். அதில், மனிதனுக்குள் தெய்வீக சக்தியை வரவழைத்து ஒரு அடி உயரம் அந்தரத்தில் பறக்க வைக்க முடியும் என அறிவித்தார். இதை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்றார். நானும் முயற்சி செய்தேன். எதுவும் நடக்கவில்லை.

உடனே அவரிடம், எனக்குப் பறப்பது போன்று எந்த உணர்வும் ஏற்படவில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள். அதற்காக, ஆட்களை நியமித்து நாடகம் நடத்துகிறீர்களா? கம்ப்யூட்டர் யுகத்தில் இது சாத்தியம் இல்லாதது என்றேன். அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். எனது உடல் அமைப்புதான் இளைஞனைப் போன்றது. உணர்வுகள் 6 வயதுச் சிறுவனைப் போன்றது. எனவே, எனது சக்தி அபரிமிதமானது என்று சம்பந்தம் இல்லாமல் எதைஎதையோ பேசினார். இது குறித்து ரஞ்சிதாவிடமும் கேட்டேன். ஆனால், அவர் மழுப்பலாக சிரித்தார். எனது இந்த அனுபவத்தின் மூலம், நித்யானந்தா போலிச் சாமியார் என்பதைத் தெரிந்து கொண்டேன். குண்டலினி யோகா என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார். பிடதியில் விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தில், அவர் ஆசிரமம் அமைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். இது குறித்து அரசுக்குப் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இனிமேலாவது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.


யோகாசனங்களில் பல வகை உண்டு. அதில் குண்டலினி யோகாசனமும் ஒன்று என்று ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாகச் செய்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஏனென்றால், நித்யானந்தா சொல்வதுபோல புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உடலை சில அடிகள் உயர்த்தி அந்தரத்தில் பறப்பதுதான் குண்டலினி. இது சாத்தியமா என்பதே அந்தக் கேள்வி. யோகாசன வகுப்பு நடத்துபவர்களும் இதுவரை இப்படிச் செய்து காட்டியதில்லை. அதுவே முழு வேலையாக இருப்பவர்களுக்கே இன்னும் சாத்தியப்பாடாதபோது இந்த மோசடிப் பேர்வழிக்கு எப்படிச் சாத்தியப்படும் என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

காவி அணிந்து கொண்டு ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்து வெட்டவெளிச்சமான ஒரு ஆபாசக்கூத்தைக் கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி ஒருவரால் வெளிப்படையாக வந்து போலியாக மறுக்கமுடிகிறது என்றால் மக்கள் எவ்வளவு மடையர்களாக இருக்கிறார்கள் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்? இதுவே காவி அணியாத வேறு ஒரு துறையைச் சேர்ந்தவராக இருந்தால் இப்படிப் பேசியிருக்க முடியுமா? வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பேட்டி கொடுக்க முடியுமா? இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் இந்தக் காலிகள் ஏமாற்றுவார்கள்?
-  மணிமகன்

Wednesday, July 13, 2011

(அ) சத்ய பாபா அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நேரடிப் புலனாய்வு - திடுக்...திடுக்


- மின்சாரம்

ஊரில் இறங்கியவுடன் முதலில் நாம் சந்திப்பது பிச்சைக்காரர்களைத்தான். சத்தியபாபாவால் இதை ஒழிக்க முடிய வில்லையோ என்ற எண்ணம்தான் வந்தது.

இப்பொழுது பிரச்சினை வியாபாரிகளுக்குத்தான். கூட்டம் குறைந்து விட்டது. ஒவ்வொரு கடையிலும் சாயிபாபாவின் படம் உண்டு. சாயி என்றோ பாபா என்றோ அடையாளப் பெயர் இல்லாத கடைகள் கிடையவே கிடையாது.

சாயிபாபா இருக்கும் போது ஒவ்வொரு நாளும் வியாபாரிகள் ஒவ்வொருவரும் அங்கு சென்று அவரைத் தரிசித்துவிட்டுத்தான் கடையைத் திறப்பார்களாம்!

சும்மா சொல்லக் கூடாது! மனுஷன் ஆன்மீகக் குடையின்கீழ் ஊரை நிறுத்தி வைத்திருக்கிறார். (மேல்மருவத்தூர் அம்மாவும் அதே வழியில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்).

பாபாவால்தானே கூட்டம்! அதனால்தானே பிழைப்பு - விசுவாசமாக இருக்கமாட்டார்களா?

ஊரில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்தது, மருத்துவமனை கட்டியது, கல்விக்கூடங்கள் திறந்தது உள்பட பல நல்ல காரியங்களைச் செய்துள்ளார். அந்த விசுவாசத்தோடு மக்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

தன்னை எந்த ஒரு நிலையிலும் ஓர் இந்து மத சாமியாகக் காட்டிக் கொண்டதில்லை. நுழைவு வளைவில் கூட இந்துக் கடவுள்கள் மற்றும் புத்தருடைய உருவம் பொறிக்கப் பட்டுள்ளது.

அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மாத இதழான சனாதன சாரதி (Sanathana Sarathi) யின் அட்டைப்படம் நிரந்தரமானது. அதில் சர்வமதப் படங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். போன்ற சங்பரிவார்கள் உரிமை கொண்டாடும் ஒரு சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுக்கவில்லை என்பது சாமர்த்தியமான அம்சமாகும்.

சமயங்களுக்கு அப்பாற்பட்ட சாயிபாபா என்ற ஒரு நிலையை நிறுவியுள்ளார் என்றே கூற வேண்டும்.

பிரசாந்தி வளாகத்துக்குள் விநாயகர் கோயில் இருக்கிறது ஆல மரத்தடியின்கீழ் நம்ம ஊரில் உள்ள கடவுள்களின் உருவங்கள் சிறிது சிறிதாக அணி வகுத்து நிற்கின்றன. எல்லாவற்றுக்கும் மஞ்சள் பூச்சு!

பார்ப்பன ஊடுருவலை அது வெளிப்படுத்துவதாகக்கூடக் கருதலாம்.

ஆயிரக்கணக்கானோருக்குத் தரிசனம் -அளிக்கும் வகையில் அழகான மண்டபம்! கலை வேலைப்பாடுகள் கண்களைக் கவர்கின்றன!

மதிய உணவு வெறும் 6 ரூபாய்க்கே அளிக்கப்படுவது ஆச்சரியம்தான்! சிற்றுண்டி வெறும் இரண்டே ரூபாய்தான் - நம்ப முடியவில்லையா? (சிக்கனம் கருதி மதிய உணவை அங்குதான் உண்டோம்!)

பல மாநிலங்களிலிருந்தும் ஆண் - பெண் இருபாலர்களும் 15 நாள் தங்கியிருந்து சேவை செய்து திரும்புகின்றனர். -  இந்தச் சேவை பிரசாந்தி நிலையத்தில் மட்டுமல்ல - மருத்துவமனைவரை நீள்கிறது. (மனதைப் பறிகொடுத்துவிட்டால் சேவை செய்வதை ஒரு பாக்கியமாகத்தானே கருதுவார்கள்).

மக்களின் மூடபக்தியை - மூடநம்பிக்கையை ஆழமாக நன்கு பயன்படுத்திக் கொண்டு, வருவாய் நதிகள் கரை புரண்டு வருமாறு செய்தது ஒரு வகையில் சாதனைதான் அல்லது சாமர்த்தியம் என்றுகூட வைத்துக் கொள்ளலாம்.
அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் இந்தப் பாவங்களைப் போக்கிக் கொள்ளும் வகையில் அறப்பணிகளுக்கும் வாய்க்கால் திறந்து விடப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது அங்குள்ள மக்களின், வியாபாரிகளின் கவலையெல்லாம் - முன்பு போல புட்டபர்த்திக்கு மக்கள் வருகை குறைந்து போனால் நம் பிழைப்பு என்னாவது என்பதுதான்.

பாபா சமாதியை எழுப்பி அதனைப் பிரபலம் அடையச் செய்யும் ஒரு திட்டம் இருப்பதாகத் தெரிகிறது.

கதையை அவிழ்த்துவிட வேண்டியதுதானே! சாயிபாபாவைப்பற்றி ஆரம்பத்தில் அவிழ்த்துவிடவில்லையா? அதே பாணியில் பாபா சமாதியின் மகிமையோ மகிமை! அங்கு சென்று தரிசித்தால், கும்பிடு போட்டால், காணிக்கைகளைக் குவித்தால் பிள்ளைவரம் கிடைக்கும், வியாபாரம் பெருகும், மலைபோல் வரும் துயரங்கள் பனிபோல் விலகிவிடும்; வியாதிகள் பஞ்சாய்ப் பறக்கும் என்று ஆங்காங்கே ஆள்களை ஏற்பாடு செய்து பிரச்சாரம் செய்விக்க வேண்டியதுதானே!

(ஒரு கோடி ரூபாய் கொடு. கழுதையை மகான் ஆக்கிக் காட்டுகிறேன் என்று தந்தை பெரியார் சொன்னதை நினைவிற் கொள்க!)

கருநாடக மாநிலம், மாண்டியாவில், புட்டபர்த்தி சாயிபாபா மீண்டும் அவதரிப்பார் என்று இப்பொழுதே அஸ்திவாரம் போட்டு வைத்துள்ளார்கள். ஏதோ ஒரு திட்டமிட்ட மோசடி - சதிப்பின்னல் அரங்கேற்றப்பட உள்ளது (எச்சரிக்கை!).

பக்தி என்பது மனிதனின் மூளையில் மாட்டப்பட்ட விலங்கு என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அடிக்கடி சொல்லுவதைப் புரிந்து கொண்டால், மக்களை, மாக்களாக்கி அடி பணிய வைக்கும் யுக்தியில், கருவியில் பக்திதான் முதல் இடத்தில்!

இதனை எதிர்த்து வெற்றி கொள்வது என்பது எளிதானதல்ல. இதில் வெற்றி கண்டார் ஒரு தலைவர் என்று எண்ணிப் பார்க்கும் பொழுதுதான் தந்தை பெரியார் தம் மகத்துவத்தின் மாண்பு மலைப்பாக இருக்கிறது.

பக்தியின் பெயரால் பகவான் என்று நம்பி பணத்தைத் தருகிறார்கள், அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு மறுப்பாகப் பகுத்தறிவைப் போதித்த தலைவரை பகுத்தறிவுப் பகலவனாகப் போற்றி அன்பளிப்புகளைக் குவித்தது - தந்தை பெரியார் விஷயத்தில் மட்டுமே நடந்திருக்கிறது.

தந்தை பெரியார் தம் கொள்கைகளை ஏற்காதவர்களைக் கூடக் கவர்ந்திருக்கிறார் - மதிக்கும்படிச் செய்திருக்கிறார்.

கடவுளைத் தூக்கி எறிந்து கடுமையாக விமர்சித்து பகுத்தறிவைப் போதித்த இந்தப் பகலவன், ஒழுக்கத்தை வலியுறுத்தியதும், ஒழுக்கத்தின் இலக்கணமாகவே வாழ்ந்து காட்டியதும்தான் அவர்தம் இமாலய வெற்றிக்கும் இணை கூற முடியாத ஒட்டு மொத்த சமூகத்தின் மதிப்புக்கும், விழுமிய காரணங்களாகும்.
ரீஃபார்ம்களை ஆரம்பித்து விடுகிற எல்லா லீடர்களையும் ஒழுங்கு தப்பினவர்கள் என்று சொல்லுவதற்கு இல்லைதான். சாஸ்திர, ஸம்பிரதாய விதிகளாகிற ஒழுங்குகளை இவர்களும் விட்டவர்கள்தாம் என்பதால் இவர்களை ஸனாதன தர்ம பீடங்களான மத ஸ்தாபனங்களில் இருக்கிற நாங்கள் ஒப்புக் கொள்ளத்தான் இல்லை என்றாலும், இவர்கள் Personal Life - இல் (தனி வாழ்க்கையில்) சத்யம், ஒழுக்கம், தியாகம், அன்பு போன்ற பலவற்றைக் கடைப்பிடித்தவர்கள் என்பதை ஆட்சேபிப்பதற்கில்லை. ஓரளவிற்கு படிப்பு, விஷய ஞானம் எல்லாம் உள்ளவர்களாகவும், ஜனங்களை நல்லதில் கொண்டு போக வேண்டும் என்பதில் நிஜமான அக்கறை கொண்டவர்களாகவுமே இந்தச் சீர்திருத்தத் தலைவர்களில் பலர் இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!!

- இவ்வாறு கூறி இருப்பவர் மறைந்த  காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (தெய்வத்தின் குரல் - 3ஆம் பாகம் பக்கம் 336).

தந்தை பெரியார் அவர்களின் சமகாலத்தோடு வாழ்ந்தவர் என்ற முறையில் அவர் தந்தை பெரியார் அவர்களை மனதிற் கொண்டே இதனைச் சொல்லியிருக்க வேண்டும்.

தந்தை பெரியாரின் சொத்துகள் அவர் காலத்திலேயே அறக்கட்டளையாக ஆக்கப்பட்டு, அவர்களின் மறைவிற்குப் பிறகும் தக்க பாதுகாப்புடனும், வளர்ச்சிப் போக்குடனும், எதிரிகள் பொறாமைப்படும் அளவுக்கும், நாட்டு மக்கள் மதிக்கும் அளவுக்கும் நிர்வகிக்கப்படுவதையும் ஒரு பக்கத்தில் பார்க்கட்டும்!

சாயிபாபா அறக்கட்டளையின் சந்தி சிரிப்பையும், சீர்தூக்கிப் பார்க்கட்டும்.
கடத்தல் பூமியாக புட்டபர்த்தி ஆகிவிட்டது. பாபா பணமா  - கறுப்புப் பணத்தின் கிடங்கா என்று சாதாரண மக்கள் பேசும் நிலைக்கு ஆளாகி விட்டதே!

பாபா பகவான்(?) என்பது உண்மையென்றால் நல்ல நிருவாகி என்பதும் உண்மையானால் இந்தக் கேவலங்கள் நர்த்தனம் ஆடுமா?

ஒருவர் பற்றிய மதிப்பீடு - அவர் இல்லாத காலத்திலும் அவர் நிறுவனம் எப்படி நடைபோடுகிறது என்பதைப் பொறுத்ததாகும் என்பதை நாள்குறிப்பின் முகப்பில் எழுதி வைத்துக் கொள்ளலாம்.

பாபாவின் அறக்கட்டளை உறுப்பினர்கள் என்று வான வீதியில் மிதந்து கொண்டிருந்தவர்களின் யோக்கியதையை.. நாடு தெரிந்து கொள்ளட்டும்!

இதோ புட்டபர்த்தி உள்ளூர் மக்கள் பேசுகிறார்கள்.  (ஒளிப்பதிவு: பெரியார் வலைக்காட்சி) அக்கம் பக்கம் பார்த்துதான் பேசுகிறார்கள். அறக்கட்டளைப் பேர் வழிகள் பொல்லாதவர்கள் என்று கூறுகின்றனர். இதன் காரணமாக பெயர்கள் இங்கு மாற்றிக் கொடுக்கப் படுகின்றன.

முடி திருத்தும் தொழிலாளி

யஜூர் மந்திர் என்று சொல்லப்படுகிற பாபாவின் அறைக்கு இரண்டு பகுதிகள் உள்ளன. அதில் ஒன்றில் இருந்துதான் தங்கம், பணம் ஆகியவை சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இன்னொன்று பற்றி எனக்குத் தெரியாது. தற்போது, பாபாவுக்கு சமாதி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இரவில் மட்டும் பணிகள் நடைபெறுகின்றன. அங்கு ஏதோ சுரங்கம் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்பது மர்மம்தான். அதன் அருகில் யாரையும் அனுமதிப்பதில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது. ரத்னாகர் பற்றி மற்றவர்கள் சொல்வது சரியா, தவறா என்று தெரியாது. நடக்கின்ற தவறுகள் அனைத்துக்கும் ட்ரஸ்ட் உறுப்பினர்கள்தான் காரணம் என்று தெரிகிறது.

மரியா அர்ஜென்டினா (இளைஞர்)

சும்மா இங்கே நடப்பவற்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறோம் (நான்கைந்து பேர் ஒன்றாக வந்திருந்தனர்). நான் சாய்பாபாவின் பக்தன் அல்ல. நாங்கள் அர்ஜென்டினாவிலிருந்து வந்திருக்கிறோம். எனக்கு சாய்பாபாவின் அருள்வாக்கின் மீது நம்பிக்கை இல்லை. நான் ஒரு கடவுள் மறுப்பாளன்.

லட்சுமண்ணா (40 வயது)

ட்ரஸ்ட்ல  இருக்கிற அத்தனை பேருமே திருட்டுப் பசங்க. 420  - நல்லவங்க யாருமே கிடையாது. சாமியார் சாகறதுக்கும் அவங்கதான் காரணம். சாமியார் 29ஆம் தேதியே செத்திட்டாரு. ஆனா வெளியே வச்சா பிரச்சினை ஆகும்னு சும்மா உள்ளேயே வச்சிருந்தாங்க. லாரியெல்லாம் கொண்டு வந்து பணத்தை எடுத்துட்டுப் போறாங்களே தவிர எல்லாம் சாமிதுதான்.

சாமியோட பி.ஏ. சத்யஜித் மீது கொஞ்சம் நல்ல பேரு இருக்குது. உயிலு, டைரி அதெல்லாம் டிரஸ்ட்காரங்கதான் பண்ணியிருக்காங்க.

இந்த ட்ரஸ்ட்லிருந்து எங்க மண்டலத்திற்கு எதுவுமே செய்யல. அவங்கவங்களுக்குத் தேவையானதை பண்ணிக்கிட்டாங்க. பகவான் இருக்கும் போது கூட எங்களுக்கு ஒண்ணும் பண்ணல. கூலி வேலை செஞ்சுதான் பொழைக்கிறோம்.

மருத்துவமனை பரவாயில்லை. தமிழ்நாடு, கருநாடக மருத்துவர்கள் வந்து போறாங்க. நல்லா நடக்குதுன்னு சொல்றாங்க. அவரு இருக்கும்போது தமிழ்நாட்டுக்காரங்களுக் குத்தான் அதிகாரம் குடுத்திருந்தாங்க. சாமி இருக்கும்போது நல்லது பண்ணனும்னு சொல்வாரே தவிர பண்ணக்கூடா துன்னு சொல்லமாட்டாரு.

ரெங்கன் - இரவு காவலாளி

ஜானகிராமன் மீட்டிங்கில் பேசி பேசி உடம்பு சரியில்லாம போயி, 7 வருசத்துக்கு முன்னாடி மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து முடியாம இறந்துட்டாரு.

சாமிக்கும், அவருடைய தம்பி ஜானகிராமனுக்கும் நல்ல உறவு இருந்துச்சு. ஜானகிராமன் இருக்கும்போது எல்லாருக்கும் நல்லது செஞ்சிருக்காரு. அவரு செத்தாலும் வைகுண்டம்தான். இருந்தாலும் வைகுண்டம் தான். ஒரு வாக்குக் கொடுத்தா தவறமாட்டாரு. யாராவது தவறு செஞ்சா கண்டிப்பாரு. ஆனா, திருப்பிக் கூப்பிட்டு அன்பு காட்டுவாரு.

ட்ரஸ்ட்டுல என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியாது. பகவானுக்கு அப்புறம் ரத்னாகர் வந்தா ட்ரஸ்ட் இப்ப இருக்கிற மாதிரியே நடக்கும். அரசாங்கம் டிரஸ்ட்ட எடுத்துக்கறதப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. நான் இங்க 20 வருசமா இருக்கேன். எனக்கு ஜானகிராமன் நல்லா உதவி செஞ்சிருக்காரு. எம் பசங்களுக்கும் வேலை குடுத்திருக்காரு. நாங்க யாரும் படிக்கல. வேலை செய்யறோம். கூலி குடுக்கறாங்க. அவ்வளவுதான்.

ராமகிருஷ்ணா ரெட்டி (40 வயது) கிருஷ்ணா மாவட்டம்

நாங்க ஜகன்மோகன் ரெட்டி அவர்களின் பாத யாத்திரைக்காக இங்கு வந்திருக்கிறோம். புட்டபர்த்தி சாயி பாபா இருந்த இடத்தில் நாங்களும் இருப்பதே ஆனந்தமாகவும், அதிர்ஷ்டமாகவும் கருதுகிறோம். இங்கு ஏதேதோ நடப்பதாக வரும் செய்திகள் பற்றி என்ன சொல்வது! பொதுவான மனிதனாக தகுந்த சாட்சிகள் இல்லாமல் அதைப்பற்றி நாம் எப்படி கருத்து சொல்ல முடியும்?

மதராஸ் ஸ்வாஸ் தேவ் (35 வயது) சிறீகாகுளம் மாவட்டம்

சாமியார் இருக்கும்போது மனசுக்குக் கவலையா இருந்தாலும் இங்க வந்தா நிம்மதியா இருக்கும். செய்திகள் என்னென்னவோ வருது. அது உண்மையா இல்லாம இருந்தா நல்லாயிருக்குமுன்னு நினைக்கிறோம்.

ஆட்டோ ஓட்டுநர் (நடுத்தர வயது)

இங்கிருக்கிற மருத்துவமனையைப் பொறுத்தவரையில் பாபா இருக்கும்போது பார்த்த மாதிரிதான் இப்பவும் பார்க்கறாங்க. சீனியாரிட்டிபடிதான் மருத்துவம் செய்யறாங்க. நான் இங்க இருக்கிறதுனால மத்ததப் பத்தி எதுவும் தெரியாது.
(இவர் மருத்துவமனையின் முன்புள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருப்பவர்)

தனியார் டி.வி. இளைஞர்

பாபா இருந்தபோது நல்லா இருந்துச்சு. அவரு போன பிறகு, இந்தத் திருட்டுப் பசங்க ஏதேதோ செய்றாங்க. உள்ளிருந்து கொண்டு வந்ததாக 37 லட்சத்த பிடிச்சதா செய்திகள் வந்திருக்கு. வெளிப்படையா இப்படின்னா? உள்ள என்னென்ன நடக்குமோ யாருக்குத் தெரியும்? அரசாங்கம் இந்த ட்ரஸ்ட்ட ஏற்று நடத்தினா இதே பிரச்சினைதான் வரும்.  ட்ரஸ்ட் மெம்பருங்க நல்லவங்களா இருந்தா, உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதில் உறுப்பினர்களாக இருந்தால் நல்லாயிருக்கும். இப்ப இருக்கிற ட்ரஸ்ட்டிங்க மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது. மத்தியில் உள்ள தமிழ்நாட்டு அமைச்சர்தான் பின்னணியில் இருக்கிறார்.

சாயிபாபா பிறந்த இடம் இன்று சிவன் கோயிலாக இருக்கிறது - அந்தக் கோயிலின் அர்ச்சகர்

இதுதான் சாய்பாபா பிறந்த இடம். இந்த இடம் கொஞ்சம் பிரபலமானவுடன், பாபாவே ஈஸ்வரன் சிலையை இங்கு நிறுவி, பாபாவின் பிறந்த கிழமையான ஒவ்வொரு வியாழக்கிழமையும் அவரே இந்த இடத்திற்கு வந்து பூசைகள் செய்திருக்கிறார். இன்னும் அந்த பூசைகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரி அன்று ட்ரஸ்ட் உறுப்பினர்களும், பாபாவால் அழைக்கப்படும் முக்கியஸ்தர்களும் கூடி சிறப்புப் பூசைகள் செய்வது வழக்கம். இப்போது முன்பு போல கூட்டம் வருவதில்லை. அவரு இருக்கும்போது அவருதான் ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்து செஞ்சிக்கிட்டு இருந்தார். இந்திய அளவுல, உலக அளவுல பல முக்கியஸ்தர்கள் இங்க வந்து பாபாகிட்ட ஆசி வாங்கிட்டுப் போயிருக்காங்க. இப்ப அதெல்லாம் பார்க்க முடியலே. இப்பொழுது பாபாவோட சமாதியை சீரடி சாய்பாபா சமாதி போல அமைக்க ட்ரஸ்ட் உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன் மூலமாக எதிர்காலத்தில் கூட்டம் வரலாம். வராமலும் போகலாம்.

அவரு அறையிலிருந்து பணம் போனது பற்றி எனக்குத் தெரியாது. எனக்குத் தனிப்பட்ட முறையில் சம்பளம் ஏதுமில்லை. பக்தர்கள் தருகிற காணிக்கையில்தான் இதை ஒரு சேவையா செஞ்சுட்டு இருக்கேன்.

பாபாவின் அப்பா பெயர்: பெத்த ரங்கம்மா ராஜூ

அம்மாவின் பெயர் : சிறீவதி மேசுகாரு

வளர்ப்பு அம்மா : கர்ணம் சுப்பம்மா

பாபாவின் குடும்பம் ராஜூலு வகையைச் சார்ந்தது. ட்ரஸ்ட் தொடர்ந்து நடைபெறுவது சாய்பாபாவின் ஆசியில்தான் இருக்கிறது. இப்பொழுது ட்ரஸ்ட் உறுப்பினர்கள் பற்றி பல செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. எனக்குத் தெரிந்தவரை ரத்னாகர் வல்லவர். அவரது வீட்டுக்கு அருகில்தான் எனது வீடும் இருக்கிறது. இந்தக் கோயிலினுள் பிராமணர்களைத் தவிர வேறு யாரும் நுழைய முடியாது. ட்ரஸ்ட் உறுப்பினர்கள்கூட நுழைய முடியாது. இங்கு பிராமணர்கள்தான் தொடர்ந்து அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர்.

பழ வியாபாரி (65 வயது)

பாபா இருந்த வரையில், அவர் இந்த ஊருக்கு பல நன்மைகள் செய்திருக்கிறார். அவர் இறந்த பிறகு, புட்டபர்த்தியில் வியாபாரம் நன்றாக இல்லை. ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறோம். எனக்குத் தெரிஞ்சு ட்ரஸ்ட் உறுப்பினர்கள் எதுவும் செய்ய மாட்டாங்க. எனக்குப் படிப்பறிவு இல்ல. எந்தவித வசதியும் இல்ல. இந்த ஊரப்பத்தியும், எதப் பத்தியும் கவலைப்படாம ஆசிரமத்தில் இருக்கிறவங்க தான் கிடைச்சவரைக்கும் சுருட்டிக்கிட்டுப் போறாங்க. அவரு இருந்த வரையில் இங்க திருட்டுப் பயமே இல்லை. ஆனா, இப்ப ஆசிரமத்திலேயே திருடு போகுது. ஆட்டோவுல, கார்ல, எதுல கிடைக்குதோ அதுல திருடிட்டுப்  போறாங்க. அவரு இருந்த போது யார வேணும்னாலும் கூப்பிட்டுப் பேசுவாரு. கஷ்டம்னா ஏதாவது உதவி பண்ணுவாரு. ஆனா, இப்ப ஆசிரமத்துக்குள்ளேயே போக முடியல. ஏன்னா, பணமும் நகையும்தான் அவுங்க கண்ணுக்குத் தெரியுது. உள்ளூர்க்காரங்க யாரும் அவங்க கண்ணுக்குத் தெரியல.

குமார் - கல்லூரி மாணவர்
(சாயிபாபா நிறுவிய கல்லூரியிலேயே படிக்கிறார்)

சாயிபாபா பல நல்லது செஞ்சிருக்காரு. இனிமே என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியாது. நாங்களும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்போட இருக்கோம். ஆசிரமத்துல நடக்கிறதுபத்தி எங்களுக்குத் தெரியாது?

ஜனக்கம்பள்ளி கூலித் தொழிலாளி (இளைஞர்)

ட்ரஸ்டிலிருந்து பணம் நகை வெளியே போறது உண்மைதான். அதுதான் தினம் தினம் பத்திரிகையில் போட்டோவோட செய்தி வருதே. முன்னாடி இங்க வந்து கூலி வேலை செஞ்சிட்டுப் போனோம். இப்ப, அந்த மாதிரி இல்லை. உள்ளூர்க்காரங்களே வேலை இல்லாம இருக்காங்க. அருகில் இருந்த மற்றொரு இளைஞர் குறுக்கிட்டு, இதெல்லாம் ஏண்டா சொல்றே? என்று கூற விஜயகுமார், எனக்கென்ன பயம்? ட்ரஸ்ட்லிருக்கிறவங்க எல்லாம் திருட்டுப் பசங்கதான் என்கிறார் அழுத்தமாக.

அவரோட சகோதரி மகள் சேத்னா ராஜூ தனது உயிருக்கு ஆபத்து என்று கூறியது உண்மைதான். சேத்னா ராஜூ பாபா கூடவே இருந்தவர். அதனால், அவருக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும். ஆகவே, ரத்னாகரை அவர் தட்டிக் கேட்டிருக்கிறார். பாபாவையும் ட்ரஸ்ட்ல இருக்கிறவங்கதான் கொலை செய்து இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமா உணவு மூலமாகவும், மருந்துகள் மூலமாகவும் விசம் கொடுத்துக் கொன்றுவிட்டார்கள் என்று ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

மேலும், ஊரில் திருமணம் ஆகாத இளம் பெண்களின் திருமணச் செலவுக்கு 2 லட்சமும், வேலை இல்லாத ஏழை விவசாய இளைஞர்களுக்கு ஒரு லட்சமும் கொடுப்பதாக பாபா அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பலருக்குப் பிடிக்கவில்லை. அவருடைய அறையிலிருந்து பணம் பறி போனது அவர் கோமாவில் இருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாற்றி வைத்துவிட்டார்கள். ஆனால், வெளியில் கொண்டு செல்ல இயலவில்லை. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.

80 வயது கேரளவாசி

நான்  இங்கே வந்து 40 ஆண்டுகள் ஆகிறது. பகவான்தான் என்னை இங்கே வரச் சொன்னார். இப்ப, எனக்கு வேலை எதுவும் கிடையாது. எனக்கு 3 பையன்கள். அவங்கதான் எல்லாத்தையும் கவனிச்சிக்கிறாங்க. மூணு பேரும் ட்ரஸ்ட்லேயே வேலை பார்க்கிறாங்க. பகவான், இந்த ஊருக்கு நிறைய காரியங்கள் செஞ்சிருக்காரு. முதல்ல . . இங்க குடிக்கிறதுக்குத் தண்ணீர் இல்ல. அவருதான் கொண்டு வந்தாரு. வீடு இல்லாதவங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்காரு. இப்ப அதெல்லாம் நடக்காது. அதான், சாமி இல்லையே. அவங்கவங்க சவுகரியத்தைப் பார்த்துட்டு,  அவங்கவங்க போறாங்க. நான் வரும்போது ஆசிரமம் இல்ல. பிறகுதான் ஒவ்வொன்னா தொடங்கினாரு.  நான் ஓய்வு பெற்ற பிறகு, சாமி என்னைப் பார்த்து, என்ன வேணும்னு கேட்டாரு. நான் ஒன்றும் வேண்டாம்னு சொல்லிட்டேன்.

சாமி இருக்கும்போது எல்லாம் செஞ்சாரு. இப்ப இருக்கிற நிலைமையில எதுவும் சொல்ல முடியாது. பத்திரிகையில ஏதேதோ வருது. ஆனா, அதப்பத்தி எதுவும் சொல்ல முடியாது. நான் சாமிகிட்ட விபூதி வாங்கியிருக்கேன். பிறகு, நிறையப் பேர் வந்து நாங்களும் அந்த மாதிரி செஞ்சு காட்றோம்னு சொன்னாங்க. எனக்கு நினைவு இல்லை. எனக்குப் படிப்பு கிடையாது. நாலஞ்சி மொழி தெரியும். இப்ப எதுவும் சொல்றதுக்கு இல்ல. அவ்வளவுதான் சமாச்சாரம்.

இப்ப ரத்னாகரைப் பற்றி பேப்பர்ல என்னென்னவோ வருதுன்னு சொல்றாங்க. எல்லாரும் ரத்னாகர் மேலதான் சொல்றாங்க.

அலெக்சி பரோஸ்கி - ரஷ்ய இளைஞர்

நான் ரஷ்யாவில் பிறந்தேன். பல ஆண்டுகள் இந்தோனேசியாவில் வாழ்ந்தேன். தற்போது நேபாளில் இருந்து இந்தியா வந்துள்ளேன். மீண்டும், நேபாள் சென்று விசாவை நீட்டித்துக் கொண்டு, மீண்டும் புட்டபர்த்தி வர இருக்கிறேன். காரணம், புட்டபர்த்தி உலக அளவில் சிறப்புப் பெற்ற இடம். சாய்பாபா நீண்ட காலமாக இங்கு இருந்துள்ளார். நான் சாய் பகவானின் அருளை நம்புகிறேன். மற்றவர்கள்  இடத்தில் இல்லாத ஒரு சக்தி அவரிடம் உள்ளது. நான் அதில் உறுதியாக இருக்கிறேன்.

அவர் கடவுளாகவே இருந்தாலும், அவருக்குப் பல நோய்கள் இருந்தன. காரணம், நமது உடல் அய்ந்து பூதங்களால் ஆனது. இயற்கையின்படி இது நிகழ்ந்துள்ளது. இதை மக்கள் அறியாமல், தங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள போராடுகின்றனர். (பக்திக் கிறுக்கு இந்தியாவுக்கு மட்டும் சொந்தமா?)

சைக்கிள் பழுது பார்ப்பவர்

சாய்பாபா இறந்த பிறகு, வெளிநாட்டுக்காரங்க வருவது குறைந்து போய் வியாபாரம் படுத்துவிட்டது. அவரு 20 நாட்களுக்கு முன்பே இறந்து போய் _ பின்னர் இறந்ததாக அறிவித்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பாபாவைப் பொறுத்தவரையில் இந்து, முசுலிம், கிருஸ்துவர்னு பேதம் பார்க்கிறதில்ல. அவருக்கு எல்லாரும் ஒண்ணுதான்.

ஒரு முடிச்சை அவிழ்க்க வேண்டும்  என்று புட்டபர்த்திக்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்டிய அந்தத் திராவிடர் கழகப் படையினர் யார்? கவிஞர் கலி. பூங்குன்றன், செந்தில், உடுமலை வடிவேலு, பாஸ்கர் ஆகியோர்.

Wednesday, May 4, 2011

அப்படிப் போடு சிக்சர்!



விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல; வெற்றி பெறத் தேவையானவை திறமை, தன்னம்பிக்கை, துணிவே!

ஆனால், இந்தியாவின் கிரிக்கெட் விளை யாட்டுக்காரர்கள் (வீரர்கள் அல்லர்) இருக்கி றார்களே நொண்டிக் கழுதைக்கு சறுக்கியது சாட்சி! என்ற பழமொழிதான் அவர்களுக்குப் பொருத்தம், மிகவும் பொருத்தம்!

அய்.பி.எல். கிரிக்கெட் என்னும் 20 ஓவர் போட்டி இந்தியா முழுமையும் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவின் பெரும் பணக்கார முதலைகள் கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களை ஏலம் எடுக் கிறார்கள். (அடக் கொடுமையே! இவர்கள் என்ன கத்தரிக்காயா, சுண்டைக்காயா- ஏலம் எடுக்கப்பட!).

கிரிக்கெட் அணியில் விளையாடுபவர்களைவிட ஏலம் எடுப்பவர்கள்தான் தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்பதிலே துடியாய்த் துடிக்கிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முதலாளி முகேஷ் அம்பானி!

அவர் மனைவி நீதா.... மும்பை மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கொச்சி டஸ்கர் கேரளா அணிக்கும் போட்டி, முடிவில் மும்பை அணி தோல்வியைச் சுமந்தது.

பணம் போட்டவர்களாயிற்றே, சும்மா இருப்பார் களா? ஜோதிடரைத் தேடினார்கள்.

அந்த ஜோதிடரும் மும்பை ஸ்டேடியத்துக்கு வந்தார் - கண்டார் - கண்டுபிடித்தார் - அடே யப்பா, அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் இவரிடம் மடிப் பிச்சை வாங்கவேண்டும் போங்கோ!

கண்டுபிடித்துவிட்டார் - மும்பை அணியின் தோல்விக்குக் காரணத்தைக் கண்டுபிடித்து விட்டார். ஆம், மும்பை அணியினர் ஸ்டேடியத்தின் வலப்புறத்தில் உள்ள ஓய்வு அறையைத் தேர்ந்தெடுத்ததுதான் தோல்விக்குக் காரணமாம்!

இந்துத்துவா என்னும் கோழைத்தனம்!

இடது பக்க அறையைத் தேர்ந்தெடுத்து இருந்தால் கோப்பை அவர்களுக்குத்தானாம். (இந்தியாவில் இந்த இந்துத்துவா மனப்பான்மை தான் விளையாட்டுக்காரர்களைக்கூடக் கோழை யாக்குகிறது).

முகேஷ் அம்பானிகளும், மல்லையாக்களும், ஷாருகான்களும் சச்சின் டெண்டுல்கர், தோனி, ரெய்னா, கெயில் என்று விளையாட்டுக்காரர்களை விளையாட்டாகக்கூடத் தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

ஜோதிடரைப் பார்த்து அவர் என்ன சொல்லு கிறாரோ, அதன்படி எந்த ஓய்வு அறையைத் தேர்வு செய்யலாம், எந்தக் கலர் கர்ச்சிப்பை சட்டைப் பையில் வைத்துக் கொள்ளவேண்டும் என்பன போன்ற சமாச்சாரங்களைக் கடைப்பிடித்தாலே போதுமானது.

இதன்படி அதுவரை கிரிக்கெட் மட்டையைப் பிடித்து அறியாத குப்பனிடமும், சுப்பனிடமும் மைதானத்தில் பேட்டைக் கொடுத்தால், அடேயப்பா, வெறும் சிக்சர் மழைதான்! அப்படித்தானே!

அட, பைத்தியக்காரர்களே, அய்தராபாத்தில் இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெறவும், தான் அதிக ஓட்டங்கள் (ரன்) எடுக்கவும் புட்டபர்த்திக்குச் சென்று சாயிபாபாவிடம் ஆசி பெற்று வந்தாரே - (டெக்கான் கிரானிக்கல், 24.11.2005) பலன் கிடைத்ததா? அய்தராபாத்தில் டெண்டுல்கர் எடுத்த ஓட்டம் (ரன்) வெறும் இரண்டுதானே!

அதேபோல, பெங்களூருவில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், சாயிபாபா கொடுத்த மோதிரத்தை அணிந்து மைதானத்தில் இறங்கிய கவாஸ்கர் எடுத்த ஓட்டமும் இரண்டே இரண்டுதான். (திருச்சி மாலைமலர், 15.10.1987).

சாயிபாபாவிடம் சென்று ஆசீர்வாதம் வாங்காத கபில்தேவ்தான் அந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக 72 ஓட்டங்கள் (ரன்கள்) எடுத்து, கடைசிவரையிலும் ஆட்டம் இழக்காமல் சிறந்த ஆட்டக்காரராகவும் (மேன் ஆஃப் தி மேட்ச்) விருது பெற்றார். 2003 இல் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியாதான் கோப்பையை வெல்லப் போகிறது என்று சவால்விட்டனர். ஊத்திக்கிட்டது தான் மிச்சம் - கிரிக்கெட் என்றாலே, ஓடும் ஜோதிடர்கள் என்று தினமலர் (26.3.2003) செய்தி போடும் அளவுக்கு ஜோதிடர்களுக்கு மரண அடி!

ஜோதிடத்தை நம்புவோரை சோண கிரிகள், வெறும் சோற்றுத் துருத்திகள் என்று விளிக்காமல் வேறு என்ன நாமகரணங்களால் சாற்றுவதோ!

அப்படிப் போடு சிக்சர்!


விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல; வெற்றி பெறத் தேவையானவை திறமை, தன்னம்பிக்கை, துணிவே!

ஆனால், இந்தியாவின் கிரிக்கெட் விளை யாட்டுக்காரர்கள் (வீரர்கள் அல்லர்) இருக்கி றார்களே நொண்டிக் கழுதைக்கு சறுக்கியது சாட்சி! என்ற பழமொழிதான் அவர்களுக்குப் பொருத்தம், மிகவும் பொருத்தம்!

அய்.பி.எல். கிரிக்கெட் என்னும் 20 ஓவர் போட்டி இந்தியா முழுமையும் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவின் பெரும் பணக்கார முதலைகள் கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களை ஏலம் எடுக் கிறார்கள். (அடக் கொடுமையே! இவர்கள் என்ன கத்தரிக்காயா, சுண்டைக்காயா- ஏலம் எடுக்கப்பட!).

கிரிக்கெட் அணியில் விளையாடுபவர்களைவிட ஏலம் எடுப்பவர்கள்தான் தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்பதிலே துடியாய்த் துடிக்கிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முதலாளி முகேஷ் அம்பானி!

அவர் மனைவி நீதா.... மும்பை மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கொச்சி டஸ்கர் கேரளா அணிக்கும் போட்டி, முடிவில் மும்பை அணி தோல்வியைச் சுமந்தது.

பணம் போட்டவர்களாயிற்றே, சும்மா இருப்பார் களா? ஜோதிடரைத் தேடினார்கள்.

அந்த ஜோதிடரும் மும்பை ஸ்டேடியத்துக்கு வந்தார் - கண்டார் - கண்டுபிடித்தார் - அடே யப்பா, அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் இவரிடம் மடிப் பிச்சை வாங்கவேண்டும் போங்கோ!

கண்டுபிடித்துவிட்டார் - மும்பை அணியின் தோல்விக்குக் காரணத்தைக் கண்டுபிடித்து விட்டார். ஆம், மும்பை அணியினர் ஸ்டேடியத்தின் வலப்புறத்தில் உள்ள ஓய்வு அறையைத் தேர்ந்தெடுத்ததுதான் தோல்விக்குக் காரணமாம்!

இந்துத்துவா என்னும் கோழைத்தனம்!

இடது பக்க அறையைத் தேர்ந்தெடுத்து இருந்தால் கோப்பை அவர்களுக்குத்தானாம். (இந்தியாவில் இந்த இந்துத்துவா மனப்பான்மை தான் விளையாட்டுக்காரர்களைக்கூடக் கோழை யாக்குகிறது).

முகேஷ் அம்பானிகளும், மல்லையாக்களும், ஷாருகான்களும் சச்சின் டெண்டுல்கர், தோனி, ரெய்னா, கெயில் என்று விளையாட்டுக்காரர்களை விளையாட்டாகக்கூடத் தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

ஜோதிடரைப் பார்த்து அவர் என்ன சொல்லு கிறாரோ, அதன்படி எந்த ஓய்வு அறையைத் தேர்வு செய்யலாம், எந்தக் கலர் கர்ச்சிப்பை சட்டைப் பையில் வைத்துக் கொள்ளவேண்டும் என்பன போன்ற சமாச்சாரங்களைக் கடைப்பிடித்தாலே போதுமானது.

இதன்படி அதுவரை கிரிக்கெட் மட்டையைப் பிடித்து அறியாத குப்பனிடமும், சுப்பனிடமும் மைதானத்தில் பேட்டைக் கொடுத்தால், அடேயப்பா, வெறும் சிக்சர் மழைதான்! அப்படித்தானே!

அட, பைத்தியக்காரர்களே, அய்தராபாத்தில் இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெறவும், தான் அதிக ஓட்டங்கள் (ரன்) எடுக்கவும் புட்டபர்த்திக்குச் சென்று சாயிபாபாவிடம் ஆசி பெற்று வந்தாரே - (டெக்கான் கிரானிக்கல், 24.11.2005) பலன் கிடைத்ததா? அய்தராபாத்தில் டெண்டுல்கர் எடுத்த ஓட்டம் (ரன்) வெறும் இரண்டுதானே!

அதேபோல, பெங்களூருவில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், சாயிபாபா கொடுத்த மோதிரத்தை அணிந்து மைதானத்தில் இறங்கிய கவாஸ்கர் எடுத்த ஓட்டமும் இரண்டே இரண்டுதான். (திருச்சி மாலைமலர், 15.10.1987).

சாயிபாபாவிடம் சென்று ஆசீர்வாதம் வாங்காத கபில்தேவ்தான் அந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக 72 ஓட்டங்கள் (ரன்கள்) எடுத்து, கடைசிவரையிலும் ஆட்டம் இழக்காமல் சிறந்த ஆட்டக்காரராகவும் (மேன் ஆஃப் தி மேட்ச்) விருது பெற்றார். 2003 இல் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியாதான் கோப்பையை வெல்லப் போகிறது என்று சவால்விட்டனர். ஊத்திக்கிட்டது தான் மிச்சம் - கிரிக்கெட் என்றாலே, ஓடும் ஜோதிடர்கள் என்று தினமலர் (26.3.2003) செய்தி போடும் அளவுக்கு ஜோதிடர்களுக்கு மரண அடி!

ஜோதிடத்தை நம்புவோரை சோண கிரிகள், வெறும் சோற்றுத் துருத்திகள் என்று விளிக்காமல் வேறு என்ன நாமகரணங்களால் சாற்றுவதோ!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...