Showing posts with label விடுதலை செய்திகள். Show all posts
Showing posts with label விடுதலை செய்திகள். Show all posts

Friday, July 10, 2015

கும்பமேளாவையொட்டி நாசிக் நகரில் 8 லட்சம் ஆணுறைகள் விநியோகமாம்!



நாசிக், ஜூலை 10_ மகா ராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் ஜூலை 14 அன்று கும்பமேளா என்ற அம் மணச் சாமியார்களின் கூட்டுக் களியாட்டம் நடைபெறும் இந்த நிகழ்வை ஒட்டி நாசிக் முழுவதும் 8 லட்சம் ஆணுறைகள்  விநியோ கிக்கப்பட்டுள்ளன.  

  ஜூலை 14 இல்

மும்பை நகரைச் சேர்ந்த பிரபல ஆணுறை விநியோகிக்கும் ஜே.கே.அன்ஷீல் மற்றும் ஜோய் லைஃப் லோடக்ஸ் இந்தியா பிரைவேட் லிமி டெட் என்ற இரண்டு நிறுவனங்களும் கடந்த மாதம் நாடு முழுவதும் விநியோகிக்கும் ஆணுறை யில் அளவை 60 விழுக் காடு குறைத்துள்ளது.  இது குறித்து அந்த நிறு வனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள் ளது  அதில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது,  மக ராஷ்டிரா நகரமான நாசிக்கில் ஜூலை 14 மகாகும்பமேளா நடை பெற உள்ளது இந்த கும்பமேளாவிற்காக எங்களது உற்பத்தில் 47 விழுக்காடு நாசிக் நக ரத்திற்கு அனுப்பியுள் ளோம். ஆகவே முன்னேற் பாடான இதர மாநிலங் கள் அதிகமாக இருப்பு வைத்துக்கொள்ளவேண்டு கிறோம் என்று அனுப்பி இருந்தது. அதே நேரத்தில் நாசிக் நகருக்கு அருகில் உள்ள பெருநகரங்களான மாலேகாவ் சிரிடி சங் கம்னேர் கோபர்காவ் உமர்காவ் போன்ற நக ரங்களில் பலமடங்கு ஆணுறைகள் வாங்கி இருப்பு வைத்தனர். எல் லாவற்றையும்விட மக ராஷ்டிர அரசு பாலியல் தொற்றுநோய் தடுப்புத் துறை வழக்கத்திற்கு மாறாக 8 லட்சம் ஆணு றைகளை நாசிக் மாவட் டம் முழுவதும் இலவச மாக வழங்க அனுப்பி யுள்ளது.   

பாலியல்நோய் தடுப்புத்துறை

வடமாநிலங்களில் சில ஆண்டிற்கு ஒருமுறை நாசிக், அலகாபாத், அரித் துவார் போன்ற நகரங் களில் நடக்கும் கும்ப மேளா விழாவில் லட்சக் கணக்கான நிர்வாண சாமியார்கள் ஒன்றுகூடு வார்கள். இவர்கள் கங் கையிலும், திரிவேணி சங் கமம் என்று அழைக்கப் படும் அலாகாபாத் நகரத் திலும் கோதாவரி நதி துவக்க இடமான நாசிக் கிலும் கூடி கும்மாளமிடு வார்கள். லட்சக்கணக் கான அம்மணச்சாமியார் கள் ஒன்று சேரும் போது பல விதங்களில் பிரச் சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மகராஷ் டிரா பாலியல்நோய் தடுப்புத்துறை கூறியுள் ளது. சாமியார்களுக்கு கவலையாம்  

கும்பமேளா நடக்கும் நிலையில், அதிகளவில் காண்டம்கள் வர வழைக்கப்படுவது விழா அமைப்பாளர்களை அதிர வைத்துள்ளது. சாமியார்கள் அதிக அளவு கூடும் நிலையில், இப்படி காண்டம்கள் விநி யோகம் செய்யப்பட்டுள் ளது தவறான முன்மாதி ரியை ஏற்படுத்தி விடும் என்று சாதுக்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளன ராம்.

4 லட்சம் பாலியல் தொழிலாளர்கள்

2013 ஆம் ஆண்டு அலகாபாத் நகரில் நடந்த கும்பமேளாவிற்குப் பிறகு வட உத்தரப்பிரதேசத்தில் மாத்திரம்  4 லட்சத்திற்கு அதிகமாக பாலியல் நோய் தொடர்பான நோயாள கள் அரசு மற்றும் பொது மருத்துவ மனையில் சேர்க் கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, July 9, 2015

மத்திய பிரதேச பிஜேபி ஆட்சியில் வியாபம் ஊழல் விசாரணை புதிய திருப்பம்

மத்திய பிரதேச பிஜேபி ஆட்சியில் வியாபம் ஊழல் விசாரணை

புதிய திருப்பம் - சி.பி.அய். விசாரணைக்கு

உச்சநீதிமன்றம் உத்தரவு


டில்லி ஜூலை 9  கோடிக்கணக்கான ரூ ஊழல் மற்றும் 50 சந்தேக மரணங்கள் தொடர்பான வியாபம் ஊழல் தொடர் பான வழக்கை சிபிஅய் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடு மையான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள வியாபம் ஊழல் தொடர்பான  வழக்கை சி.பி.அய். விசா ரணை செய்ய வேண்டும் எனக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், ஆம் ஆத்மி கட்சி யின் முக்கிய தலைவர் களில் ஒருவரான தலைவர் விஸ்வாஸ் உள்பட பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இவர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சி.பி.அய். விசாரணை நடத்த வேண்டும். மத்திய பிர தேச உயர்நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விசா ரணை நடத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து ஊழலில் நேரடித் தொடர்பு உள்ளதாக கருதப்படும் பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் ஆளுநர் இருவரையும் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  காங்கிரஸ் முன்னணி தலைவர் திக்விஜய் சிங் இதுகுறித்து திக்விஜய் சிங் கூறும்போது ஊழலில் தொடர்புடைய மாநில முதல்வர் பதவியில் இருந்துகொண்டே விசா ரனையை எதிர்கொள்வ தென்பது விசாரனையின் மீதான நம்பிக்கையை குலைத்துவிடும் ஆகவே நேர்மையான விசார ணைக்கு வழிவிட்டு சிவ் ராஜ்சிங் சவுகான் தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று கூறினார்.

காவலர் மரணம்

இந்த வழக்கில் சம்பந் தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் என இன்று வரை 50 பேர் சந்தேகத் திற்கிடமான  முறையில் மரணம் அடைந்து வருகின் றனர். இந்த நிலையில், வியாபம் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த போலீஸ் கான்ஸ் டபிள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மர்ம மான முறையில் இறந்தது தெரிய வந்துள்ளது.

போலீஸ் அகாடமியில் இருந்து மூன்று போலீசார் தப்பிக்க உதவி புரிந்ததாக கூறப்படும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சஞ்செய் குமார் யாதவ் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக சிறப்பு விசாரணைக்குழு நீதிமன் றத்தில் நேற்று தெரிவித் துள்ளது. 

இதன்மூலம் இந்த வழக்கில் சம்பந் தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் என மர்மமான முறையில் இறந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. தலைமை வழக்குரைஞர் உடல்நிலை மோசமாகியது  இந்த வழக்கை விசா ரித்து வரும் அரசுத் தரப்பு  வழக்கறிஞர் ஆதர்ஷ் முன்னி திரிவேதியின் உடல் நிலை தற்போது மிகவும் மோசமாகியுள் ளது. 

நேற்று மாலை, அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவர் சிறிது நேரத்திலேயே அவருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. உடனடி யாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்கும் போது மருத்துவமனைக் குக் கொண்டு வரும் போதே மிகவும் மோச மான நிலையில் அவரது உடல்நிலை இருந்தது. தற்போது அவரை உயிர் காப்பு பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்கள். இன்று உச்சநீதிமன்றத் தில் வியாபம் தொடர் பான வழக்கில் இவரது வாதமும் நடைபெறும் என்ற நிலையில் தற் போது வழக்கறிஞரும் உயி ருக்கு ஆபத்தான முறை யில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த வழக்கில் பலர் மர்மமான முறையில் பலியாகி வரும் நிலையில் உணவில் விஷம் கலந்து கொலை செய்வதற்கான முயற்சியாக இருக்க வேண்டுமென அவரது குடும்பத்தார் சந்தேகிக் கின்றனர்.

Wednesday, July 8, 2015

பெண் கேலி செய்தவனை காவல் நிலையத்திற்குள் தர்மஅடி கொடுக்கும் மாணவி

பிலிபிட், ஜூலை 8_- உத்தர பிரதேசம் மாநி லத்தில் பெண் கேலி செய்தவனை பாதிக்கப் பட்ட மாணவி தர்மஅடி வழங்குவது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் பிலிபிட்டில் மாணவியை, இளைஞன் ஒருவன் பெண் கேலி செய்து உள்ளார். இது தொடர்பாக காவல் துறையில் புகார் தெரி விக்கப்பட்டது. இளை ஞரை காவல் நிலையம் அழைத்து சென்ற காவல் துறையினர் பாதிக் கப்பட்ட மாணவியை வைத்து அடிக்க செய்து உள்ளனர்.
இளைஞருக்கு பாதிக்கப்பட்ட மாணவி தர்மஅடி வழங்குகிறார். அந்த இளைஞன் சாரி, சாரி என்று கெஞ்சு கிறான். சாரியா.. என்று கோபப்படும் அந்த பெண் செருப்பை கழற்றி இளை ஞன் கன்னத்தில் பளார் விடுகிறார். அடி தாங் காமல் இளைஞன் அந்த பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட் கிறான்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி யுள்ளன.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, July 7, 2015

என் உயிருக்கும் ஆபத்து வருமோ! மத்திய அமைச்சர் பயப்படுகிறார்

பிஜேபி ஆட்சியில் வியாபம்
என் உயிருக்கும் ஆபத்து வருமோ! மத்திய அமைச்சர் பயப்படுகிறார்
போபால், ஜூலை 7- தினம் தினம் மரணம் என்ற ஒரு கோரமான ஊழல் களமான வியாபம் கொலைகள் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கூறும் போது எனக்கு நாளை என்ன நேரும் என்று தெரியவில்லை, நடப்பதைப் பார்த்தால் எனக்கு பயமாக உள்ளது என்று கூறியுள்ளார்.  வியாபம் ஊழல் தொடர்பானவர்கள் தொடர்ந்து அய்யத்திற் கிடமான முறையில் மரண மடைந்து வருகிறார்கள். சனிக்கிழமை முதல் தொடர்மரணம் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஆரோசா மாவட்டத்தில் உள்ள காவலர் தங்குமிடத்தில் தலைமைக் காவலர் ரமாகாந்த் பாண்டே அய்யத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார்.  இன்று காலையில் அவ ரது நண்பர்கள் அவரை எழுப்ப முயலும்போது அவர் இறந்து கிடந்ததாக தகவல் தெரி வித்தனர். ஆனால் காவல் துறை தரப்பில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப் படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மரண மடைந்த தலைமைக் காவலர் ரமா காந்த் பாண்டே, வியாபம் ஊழல் தொடர்பாக விசா ரணை செய்துவரும் சிறப்பு புலனாய்வுத்துறையில் சில தகவல்களைத் தெரிவித் ததாகவும் அதனடிப்படை யில் முக்கியப் புள்ளிகள் சிலரின் பெயர்களும் குற்ற வாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது என்ப தும் குறிப்பிடத்தக்கது.  இந்த தொடர் மர ணங்கள் குறித்து நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி கூறியதாவது, வியாபம் தொடர்பானவர் களின் தொடர் மரணம் மிகுந்த அச்ச உணர்வை உருவாக்குகிறது.
எனக்கு மிகவும் பயமாக உள்ளது நாளை எனக்கு என்ன நேரும் என்று  பயந்து வாழ்கிறேன், ஆனால் என்னுடைய பெயரும் இதில் சேர்க்கும் முயற்சி நடந்துவருகிறது. என்னுடைய பெயரும், மரணமடைந்தவர்களின் பெயர் பட்டியலில் சேர்க் கப்படுமா? என்ற உணர்வு உள்ளூர இருந்துவரு கிறது என்றார்.  இந்தியாவையே உலுக்கிவரும் பாஜகவின் வியாபம் முறைகேடு குறித்து சி.பி.அய். விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரிய மனுக்களை உச்சநீதிமன் றம் ஏற்றுள்ளது.
வியாபம் ஊழலில் முதல்வர் முதல் ஆளுநர் வரையிலான பெயர்கள் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளது இந்த நிலையில் மாநில அரசின் கீழ்வரும் காவல் துறை முறையாக விசாரணை நடத்தாது என்று கூறி சி.பி.அய் விசாரணை வேண்டுமென்று என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலை வர் விஸ்வாஸ் உள்பட பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந் தனர்.  இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனுக்கள் விசார ணைக்கு எடுத்துக் கொள் ளப்படுகின்றன. மேலும், அனைத்து மனுக்களும் வரும் 9-ந் தேதி விசாரிக்கப் படும் என்று உத்தரவிட் டுள்ளது. இதனால் 9-ந் தேதி சிபிஅய் விசா ரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் வியாபம் முறைகேட்டில் உள்ள சந்தேக முடிச்சுகள் அவிழ்க்கப்படலாம்.
கொலை மிரட்டல் வியாபம் ஊழலை வெளிபடுத்திய நாள் முதல், தொடர்ந்து பல் வேறு மிரட்டல்களை சந்தித்து வருவதாக ஊழல் விவகாரம் வெளி உலகுக்கு தெரிவதற்கு காரணமாக இருந்த ஆஷிஷ் சதுர்வேதி தெரி வித்தார்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, July 6, 2015

விவசாயிகள் நலன்களைப் புறக்கணிக்கும் மத்திய, மாநில அரசுகள்

வேளாண்மை உற்பத்தி பொருள் களுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து விலையாக நிர்ணயிக்க வேண்டுனெ எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகளின் ஆணையம் 2006-இல் பரிந்துரை செய்தது. அப்போது மத்திய ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அதை நிறைவேற்றவில்லை. இந்தப் பரிந்துரையை நாங்கள் அமல் படுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்து, ஆட்சிக்கு வந்த மோடியின் அரசு வாக்குறுதியை காற்றிலே பறக்க விட்டது.
மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு 17.6.2015 அன்று டெல்லியில் கூடியது. அதில் நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டா லுக்கு வெறும் ரூ. 50/- மட்டுமே உயர்த்தி, தற்போதுள்ள ரூ. 1360/- உடன் ரூ. 50/-ஜ சேர்த்து, நிகழாண்டுக்கான விலையாக ரூ. 1410/- வழங்க முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு, நெல் ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 50/- மட்டுமே உயர்த்தி யிருப்பது, விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
விளை நிலங்கள் அனைத்தும், விலை நிலங்களாக வீட்டு மனைகளாக மாறிவரும் சூழலில், விவசாயிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டாமல் அவர்களின் நெஞ்சை நோகடிக்கச் செய்வது எந்த வகையில் நியாயமாகும்?
எள்ளு போட்டே காசு பார்க்கல, நெல்லு போட்டே காசு பார்க்கல, கரும்பு போட்டே காசு பார்க்கல. கல்லை நட்டுப்போடு (மனை நிலைமாக) கட்டு, கட்டா நோட்டைப்பாரு என்று ஆசை வார்த்தை கூறுகிறார்கள் நிலத்தரகர்கள். கடந்த ஆண்டு எள் விலை சராசரியாக கிலோ ஒன்றின் விலை ரூ. 100/-க்கு மேல் விற்பனையானது. இந்த ஆண்டு நிலவரம் என்ன? ஈரோடு வேளாண்மை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் - மைலம் பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் (பவானி வட்டம்) 20.6.2015 அன்று மறைமுக ஏலம் விடப்பட்டது. இதில் கடந்த வாரங் களில் விற்பனையான சுமார் கிலோ ரூ. 85 - 89 என்ற விலையிலிருந்து கீழிறங்கி - பெரும் பாலான மூட்டைகள் பாதி விலையாக ஏலம் குறிக்கப்பட்டு, ஒலி பெருக்கியில் அறிவிக்கப் பட்டதைக் கேட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். பெரும்பாலான விவசாயிகள் தங்களது எள்ளு மூட்டைகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, திரும்பவும் எடுத்துச் சென்று விட்டனர்.
இந்த நாட்டிலே, கொத்தடிமைகள் என்று சொன்னால் அது விவசாயிகளுக்குத் தான் பொருந்தும். இந்த ஆண்டு எல்லா விளைபொருள்களும் மிகவும் குறைந்த விலைக்கும், கேட்பாரற்றும் கிடக்கின்றன. அவர்களுக்கு கைச்செலவுக்கு கை கொடுத்து வந்த பால் உற்பத்தியிலும் அடிவிழுந்தது. பாலை முழுமையாக விற்பனை செய்ய இயலாமல் பால் கூட்டுறவு சங்கங்கள் - கொள்முதல் செய்வதை குறைத்துக் கொண் டதால், தனியார் சங்கங்கள் தானாகவே கொள்முதல் விலையை மிகவும் குறைத்து விட்டன. விவசாயிகள்பாடு திண்டாட்டம் தானே? 15.6.2015 அந்தியூர் - வெள்ளை எள் அதிகவிலை கிலோ ரூ. 84.69, சிகப்பு எள் அதிகவிலை கிலோ ரூ. 64.29; 16.6.2015 பூதப்பாடி வெள்ளை எள் அதிகவிலை கிலோ ரூ. 85.90; கருப்பு எள் அதிகவிலை கிலோ ரூ. 50.70, 19.6.2016 சிவகிரி வெள்ளை எள் அதிகவிலை கிலோ ரூ. 80.19, கருப்பு எள் அதிகவிலை கிலோ ரூ. 80.09, சிகப்பு எள் அதிகவிலை கிலோ ரூ. 77.09, 20.6.2015 மைலம்பாடியில் மேற்கண்ட விலைகளை விட குறைவு.
பட்டியலில் சிவகிரியில் கருப்பு எள் ரூ. 80.09 என்று விற்பனையாகும்போது பூதப்பாடியில் கிலோ ரூ 50.70 க்கு ஏலம் கூறப்படுவதன் காரணமென்ன? சுமார் 1000 கிலோ விற்பனை செய்யும் ஒரு சிறு விவசாயி ரூ, 29,390 அய் இழந்து விட்டு போக வேண்டிய அவலம் தானே உள்ளது. மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு அடிப்படை விலை நிர்ண யம் செய்யாதது ஏன்? எல்லாம் தனியார் மயம் என்று ஆகும்போது அரசாங்கம் பெரு முதலாளிகளின் கூடாரமாகத் தான் இருக்க முடியுமே ஒழிய மக்களின் அரசாங்கமாக செயல்பட முடியாது. கோடி கோடியாய் சொத்து சேர்ப்பவர்கள்  கோலோச்சம் போது மாடாய் உழைக்கும் விவசாயிகள் மடிந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுவது சர்வ சாதாரணம் தானே! இது தான் ஜன நாயகமா?  சிந்திப்பீர் குடிமக்களே!
- கா.நா.பாலு
மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம் சேலம்

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் ஆட்சிமன்றக்குழுப் பொறுப்பேற்க திரைக் கலைஞர் பல்லவி மறுப்பு

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் ஆட்சிமன்றக்குழுப் பொறுப்பேற்க
திரைக் கலைஞர்  பல்லவி மறுப்பு
மேலும் சிலரும் பதவி விலகல்

பூனா, ஜூலை6_ பூனாவில் உள்ள திரைப் படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவனத் தின் தலைவராக சவ்கான் என்னும் சிறிய நடிகர் ஒருவரை மத்திய பாஜக அரசு நியமனம் செய்த தால், அக்கல்வி நிறுவனத் தின் மாணவர்கள் தொடர்ச் சியாக கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். சென்னை அய்.அய்.டி. மாணவர் அமைப்பாகிய அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம், டில்லி யில் உள்ள அரசு நிறுவ னமாக உள்ள ஜவகர் லால்நேரு பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல் வேறு இடங்களிலிருந்தும் அம்மாணவர்களுக்கு ஆதரவாக, மத்திய அர சின் முடிவை எதிர்த்து எதிர்ப்புகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது.
நடிகை பல்லவி ஜோஷ் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச் சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடி தத்தில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பொறுப்பு வகிக்க விரும்ப வில்லை என்று குறிப் பிட்டுள்ளார்.
தொலைக்காட்சிகளில் அந்தாக்ஷரி எனும் போட்டிப்பாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த வரான பல்லவி ஜோஷ், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஏற்பட் டுள்ள பல்வேறு சம்பவங் களைச் சுட்டிக்காட்டி, அந்த காரணத்தாலேயே பொறுப்பை வகிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படத் தயாரிப் பாளர் ஜானு பரூவா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோரும் பயிற்சி நிறுவனத்தின் ஆட்சிமன்றக்குழுவில் அல்லது அதன்சாபுடைய எந்த அமைப்பிலும் அங்கம் வகிக்க விரும்ப வில்லை என்று அறிவித் துள்ளனர்.
பல்லவி கூறுகையில், பூனாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ஆட்சிமன்றக்குழு உறுப் பினராக என்னுடைய நியமனம்  மாணவர்களி டையே என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப் பாகும் என்று எதிர் பார்த்தேன்.  ஆனால், கல்வி நிறுவனத்தின் அமைப்பு, ஆட்சிமன்றக் குழுகுறித்து மாணவர்கள் மகிழ்வாக, திருப்தியாக இல்லை என்றால், அத னால் ஏற்படப்போகின்ற பயன்தான் என்ன? என்று கேட்டார்.
3 நாட்களுக்கு முன் பாக மத்திய அமைச்சகத் துக்கு தன்னுடைய கருத்தை கடிதம்மூலமாகத் தெரிவித்துவிட்டதாக பல்லவி குறிப்பிட்டுள்ளார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பிஜேபியின் ம.பி. ஆட்சியில் என்ன நடக்கிறது?

பிஜேபியின் ம.பி. ஆட்சியில் என்ன நடக்கிறது?
மர்ம மரணங்கள் - மேலும் மேலும் மர்ம மரணங்கள்!

கடந்த மூன்று நாட்களில் தினமும் ஒருவர் மரணம்

போபால்\டில்லி, ஜூலை 6_ - மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி கடந்த 15 ஆண்டு களாக நடந்து வருகிறது. இந்த ஆட்சியில், மருத் துவம் பொறியியல் நுழை வுத் தேர்வு மற்றும் அரசுப் பணியாளர் ஆணையத்தில் (வியாபம்) அதிக அளவு  ஊழல் நடந்துள்ளதாக காங் கிரஸ் குற்றம் சாட்டியது.  இந்த ஊழல் தொடர்பான சாட்சிகள் மற்றும் ஊழலில் பங்கு வகித்த பலர் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின் றனர். ஜூன் 30 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் இந்த ஊழலில் சாட்சியாக உள்ள ஒருவரும், குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் ஒருவரும் சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்தனர்.
இந்த நிலையில் வியாபம் ஊழல் தொடர் பாக செய்திசேகரித்துக் கொண்டிருந்த ஆஜ்தக் என்ற பிரபலசெய்தி (தொலைக்காட்சி) நிகழ்ச் சித் தொகுப்பாளர் மரண மடைந்தார். பிரபல செய்தித் தொகுப்பாளரான அக்ஷ்ய சிங் தலைநகர் டில்லியில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம் மேக் என்ற நகரத்தில் கடந்த வாரம் மரணமடைந்த மருத்துவர் தோமரின் குடும்பத்தின ரிடம் நேர்காணல் நடத்தி  கொண்டிருக்கும் போது  பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடன் சென்ற ஒளிப்பதிவாளர் கூறும் போது: எங்களிடம் பேசிக் கொண்டு இருக்கும்போது திடீரென  வாந்திஎடுக்க ஆரம்பித்தார். நாங்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்தோம், அடுத்த சில நிமிடங்களில் மயக்க மடைந்தார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் என்று கூறினார். இந்த நிலையில் அவர் கொண்டு வந்த ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போய் விட்டன.    இந்த மரணம் தொடர் பாக சிறப்பு புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ள தாக சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். மருத்துவமனை முதல்வர் மரணம் இந்த நிலையில் ஜபல் பூர் மருத்துவமனை முதல் வர் அருண் சர்மா டில்லி யில் உள்ள அய்ந்து நட் சத்திர விடுதி ஒன்றில் பிணமாக மீட்கப்பட்டார். சனிக்கிழமை இரவு டில்லி வந்த இவர் நேற்று பத்திரி கையாளர் ஒருவரை சந்திப் பதாக இருந்தது. இந்த நிலையில் காலைவரை அவர் அறைதிறக்கப்பட் டாத காரணத்தால் சந் தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை மாற்றுச்சாவி போட்டுத் திறந்து பார்த்தபோது படுக்கையறையில் இறந்து கிடந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் மருத் துவரின் பிணத்தைக் கைப் பற்றி பிரேத பரிசோ தனைக்கு அனுப்பியுள்ளனர்.
இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர் உடலில் எந்த இடத்திலும் காயம் இல்லை, ஒரு வேளை மாரடைப்பு ஏற் பட்டு மரணமடைந்திருக்க லாம் எதுவிருந்தாலும் பிரேதபரிசோதனைக்குப் பிறகுதான் தெரியவரும் என்றார்.  மரணமடைந்த அருண் சர்மா வியாபம் ஊழலில் மிகவும் முக்கிய நபராவார், இவர் தலைமையில் நடந்த மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் பல் வேறு முறைகேடுகள் நடந் தது குறித்து இவர்மீது விசாரணை நடந்து வரு கிறது.  நேற்று சந்தேகத் திற்கிடமான முறையில் மரணமடைந்த பத்திரிகை யாளர் அக்சய் சிங் திங்கள் அன்று இவரைச் சந்திப்ப தாக தனது அலுவலகத் தில் கூறியிருந்தார். காவல்துறை பெண் ஆய்வாளர் மரணம் இந்தத் தொடர் மர ணத்தை அடுத்து ஞாயிறு மாலை சாகர் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் அனாமிகா குஷ்வாக தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் பிண மாக மீட்கப்பட்டார்.
இவர் வியாபம் ஊழல் மூலம் நடந்த முறைகேட் டின் மூலம் காவல்துறை அதிகாரியானவர்.  நீச்சல் மற்றும் தடகள வீராங் கனையான அனாமிகா குளத்தில் குதித்து இறந் திருக்க வாய்ப்பில்லை. அவரை கொலை செய்து குளத்தில் வீசியிருக்க வேண்டும் என்று அவரு டன் பணிபுரிந்த சிலர் கூறியுள்ளனர். இருப்பினும் காவல்துறை இதை தற் கொலை என்றே பதிவு செய்துள்ளது.  கொலை செய்ப்பட்ட பத்திரிகையாளரின் உடல்  உடனடியாக எரியூட்டப்பட்டது சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த பத்திரிகையாளர் உடல் சாதாரண உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகு உடனடியாக எரியூட்டப் பட்டது. முக்கியமாக இது போன்ற சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்தவர்களின் உடலை நீதிபதிகள் முன்னிலையில் மருத்துவ நிபுணர்கள் பரிசோதனை செய்யவேண்டும் ஆனால் அக்ஷய் சிங்கின் உடல் மத்தியப்பிரதேச போபால் மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்த பிறகு முழு அறிக்கை வரும் முன்பே உடனடியாக எரியூட்டப் பட்டு விட்டது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

மும்பை திரைப்பட கதாபாத்திரங்களில் உயர் ஜாதியினருக்கே முக்கியத்துவம்

மும்பை திரைப்பட  கதாபாத்திரங்களில்  உயர் ஜாதியினருக்கே முக்கியத்துவம்

தமிழ்நாட்டிலோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை!

இந்து ஆங்கில ஏடு ஒப்பீடு

சென்னை, ஜுன்29_ மும்பையில் வெளிவரும் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களாக உயர் ஜாதியினரே சித்தரிக்கப் படுகின்றனர்; தமிழ்நாட் டில் அதற்கு மாறாக தாழ்த் தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் கதாநாயகர் களாக சித்தரிக்கப்படுகின் றனர் என்று இந்து ஆங் கில ஏடு ஒப்பிட்டு ஆய்வுக் கட்டுரையை வெளியிட் டுள்ளது.

(28.6.2015) அதன் விவரம் வருமாறு:

மும்பைத் திரை உலகு மற்றும் சென்னை திரை உலகு இரண்டையும் தி இந்து ஒப்பீடு செய்துள் ளது. இரண்டு திரையுலகி லும் திரைக் கதைகளில் இடம்பெறக்கூடிய கதா பாத்திரங்களில் ஜாதியின் நிலைகுறித்து அந்த ஒப்பீடு சுட்டிக்காட்டி உள்ளது.

மும்பைத் திரையுலகில் பெரிய அளவிலான மாற் றங்கள் ஏற்படாமல் ஜாதி யைப் பிடித்துக்கொண்டு பின்னடைவிலேயே இருப் பதாகவும் சுட்டிக்காட்டி உள்ளது. அதேநேரத்தில் சென்னைத் திரையுலகில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட ஜாதியினர்,  பெயர்களில் கதாபாத்தி ரங்கள் சித்தரிக்கப்பட்டுள் ளதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டு களில்தான் பிற்படுத்தப்பட் டவர்கள் கதாபாத்திரங் களாக இடம் பெற்றுள்ள தாக புள்ளிவிவரத் தகவல் குறிப்பிடுகிறது.

தமிழ்நாட்டில் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டு களில் வெளியான பிரபல மான படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களாக பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட வகுப்பினர் சித்தரிக் கப்பட்டுள்ளனர்.

2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் மும்பை திரையுலகில் வெளியான படங்கள்குறித்து திரட் டப்பட்ட தகவலின் அடிப் படையில் திரைப்படங் களில் இடம்பெறும் கதா பாத்திரங்கள் மற்றும் கதாபாத்திரங்களின்  பெயர்கள், கதையோட் டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே முன் னணி கதாபாத்திரங்களாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட வகுப்பினரை சித்தரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மஞ்சு நாத், ஹைவே படத்தில் குஜ்ஜார் குற்றவாளியாக முன்னணி கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. மற்ற இரண்டு கதாபாத்திரங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இடம் பெறச் செய்துள்ளனர்.

சம்பட் பால் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வகையில் மாதுரி தீக்ஷித்  நடித்துள்ள குலாப் கேங் படம்,  அமோலே குப்தா வின் குழந்தைகளுக்கான படமான ஹவா ஹவாய் ஆகிய படங்களில் கதா பாத்திரங்களாக பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் சித் தரிக்கப்பட்டுள்ளனர்.

மேரி கோம் படம் பழங் குடியின குத்துச் சண்டை வீராங்கனை கதாநாயகி யாக சித்தரிக்கிறது. இரண்டு படங்களில் கிறித்தவர் களை முக்கியக் கதாபாத் திரங்களாகவும், மூன்று படங்களில் சீக்கியர்களை கதாநாயகர்களாகவும், ஒன்பது படங்களில் முசு லீம் கதாபாத்திரங்களா கவும் சித்தரிக்கப்பட்டுள்ள னர். மற்ற 66 படங்களில் இந்துக்களில் உயர்ஜாதி யினர் மட்டுமே கதாபாத் திரங்களாக சித்தரிக்கப்பட் டுள்ளனர். மற்ற படங்களில் ஜாதிகளைக் குறிப்பிடக் கூடிய வகைகளில் கதா பாத்திரங்கள் இல்லை.

2013ஆம் ஆண்டில் பந்தூக், ரிவால்வர் ராணி ஆகிய படங்களில் கங் கானா ராவுத் பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த வராக நடித்துள்ளார். கோலியோன் கி ராஸ்லீலா ராம்லீலா படத்தில் ரன்வீர் சிங் பழங்குடியினத்தவராக நடித்துள்ளார்.

மும்பை திரையுலகிலி ருந்து வெளிவரக்கூடிய படங்களில் கதாபாத்தி ரங்களாக உயர்ஜாதியினர் மட்டுமே குறிப்பிடப் பட்டுவருகின்றனர்.

2013ஆம் ஆண்டில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 66 படங்களிலும் கதா பாத்திரங்களும் உயர்ஜாதி கதாபாத்திரங்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்துள் ளனர்.

கடந்த காலங்களில் மும்பையில்

கடந்த காலங்களில் மும்பை திரையுலகில் வெளியான படங்களில் முன்னணி பாத்திரங்களாக பிற்படுத்தப்பட்ட வகுப் பினர்தான் சித்தரிக்கப் பட்டு வந்தனர். 2010ஆம் ஆண்டில் வெளியான ஆக்ரோஷ், ராஜ்நீதி மற்றும் 2006ஆம் ஆண் டில் வெளியான ஓம்காரா ஆகிய படங்களில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பின ராக கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டாலும், பல்வேறு ஜாதிகளிடையே ஏற்படுகின்ற பிரச்சி னைகளை உள்ளடக்கியதா கவே இருக்குமே தவிர வெறுமனே பிற்படுத்தப் பட்ட வகுப்பினரை மட டும் கொண்டுள்ள கதா பாத்திரங்களாக அவை இருக்காது.

மும்பை திரையுலகினரி டையே ஆண், பெண் இருபாலரிடத்திலும் பன்முகத்தன்மைகள் இல்லாமல் இருப்பதால், பெரும்பான்மையராக உள்ளவர்களில் 750  நடிகர் மற்றும் நடிகையரில் கடந்த பத்து ஆண்டுகளில் அய்ந்து படங்களுக்கும் மேலாக முசுலீம்களைத் தொடர்ந்து இந்துக்களில் உயர்ஜாதியினர் இருந்து வருகிறார்கள்.
ஆனால், தமிழ்த்திரை யுலகில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் முன்னணிக் கதாபாத்திரங் களாக இருந்து வருகிறார் கள். தென்னிந்தியாவில் உள்ள அனைத்துப் படங் களும் கணக்கில் கொள் ளப்படா விட்டாலும், 2013ஆம் ஆண்டில் வெளி யான முக்கியத்துவம்பெற்ற 16 படங்கள் பழைய படங் களின் பெயரையேக் கொண்டுள்ளன.

ஏழு படங்கள் பிற் படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னணிக் கதாபாத்திரங் களாகக் கொண்டுள்ளன. 2014ஆம் ஆண்டில் பிர பலமான 10 படங்களில் குறைந்த பட்சம் ஒரு படமாவது (சென்னை) தாழ்த்தப்பட்ட வகுப்பி னரைச் சித்தரிக்கும் கதா பாத்திரமாக அமைக்கப் பட்டிருக்கிறது.


இதுகுறித்து கருத்துகளைக் கேட்கும் போது, பிரச்சினை ஏற் படுத்தக்கூடியது என்று பெரும்பாலான இயக்கு நர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.




  • பெண் சாமியார் சாத்வி பிராச்சியின் கொலைவெறி பேச்சு
  • முஸ்லீம்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் - பஞ்சாயத்தில் முடிவாம்
  • கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி வேறுபாடா?
  • இன்னும் எத்தனை இளவரசன்கள் தேவை?
  • அறிவோம் சட்டம் (1) : தகவல் அறியும் உரிமைச் சட்டம்
  • பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்
  • தமிழ்நாட்டிலும் விநாயகர் ஊர்வலங்களுக்குத் தடை வருமா?
  • யோகா - மூச்சுப் பயிற்சி - கி. வீரமணி
  • சூத்திரர் வரிப் பணம் பிராமண மொழிக்கா?
  • விடுதலைப்புலிகள்மீது தொடர்ந்து பழி சுமத்தி வருபவர் செல்வி ஜெ. ஜெயலலிதா
  • Saturday, July 4, 2015

    முஸ்லீம்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் - பஞ்சாயத்தில் முடிவாம்

    அடாலியில் மீண்டும் வன்முறை

    முஸ்லீம்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் - பஞ்சாயத்தில் முடிவாம்

    பரிதாபாத் ஜூலை 4_ மசூதி கட்டிய விவகாரம் தொடர்பாக எழுந்த வன்முறை சிறிது ஓய்ந்திருந்த நிலையில் சிறிது அமைதி திரும்பிய அடாலி கிரா மத்தில் மீண்டும் வன் முறை வெடித்தது. ஊரில் கடைசி முஸ்லீம் வெளியேறும் வரை நாங்கள் அமைதியாக இருக்கமாட் டோம் என்று ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டதாம்.     மே மாதம் 25 ஆம் தேதியன்று அரியானா மாவட்டம் அடாலி கிராமத்தில் மசூதி கட்டப்பட்ட போது இந்துக் கோவிலுக்கு அருகில் மசூதி கட்டும் கட்டுமானச் சிதறல் கள் விழுந்தது தொடர்பான சாதாரண பிரச்சினை வன்முறையாக வெடித் தது. இந்த வன்முறையி னால் அடாலி கிராமத்தில் உள்ள 3000 முஸ்லீம்கள் கடுமையாக தாக்கப் பட்டனர். இதில் 700 முஸ்லீம் வீடுகள் தீவைத்துக் கொழுத்தப் பட்டது. 60 பேர் தாக்கப்பட்டனர்.
    முஸ்லீம் பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர்.  அன்று நடந்த வன்முறையின் போது அரியானா மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வன்முறையாளர்களை காவி அமைப்புகள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டுவந்து தாக்குதல் நடத்திய தாக விசாரணையில் தெரியவந்தது.   வன்முறைச் சம்பவத்தை அடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ் லீம்கள் பரிதாபாத் நகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சரண டைந்தனர். ஆண்களும் பெண்களும் காவல் நிலைய வளாகத்தில் தங்கி யிருந்த போது இரவு நேரத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட் டது. இவ்விவகாரம் தொடர்பாக சிறுபான்மை அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு விசாரனை அறிக் கையும் தாக்கல் செய்ய அரியானா மாநில அரசுக்கு உத்தர விட்டிருந் தது. முஸ்லீம்கள் மாட்டுமாமிசம் விற்றதாகவும், இந்துக் கோவில் மீது எலும்புகளை வீசியதாகவும் பொய் யான அறிக்கையை மாநில பாஜக அரசு அளித்தது. இக்கலவரம் நடந்த பிறகு சுமார் ஆயிரம் குடும்பங்கள் உபி, மகாராஷ்டிரா, பிகார் போன்ற மாநிலங்களில் உள்ள தங்களது உறவி னர்களின் வீட்டிற்கு சென்று விட் டனர்.   புதன்கிழமையன்று மாலை நோம்புத் தொழு கையில் ஈடுபட்ட சிலர் அருகில் உள்ள இந்துக் கோவிலில் பூசை செய்து கொண்டு இருந்த பெண்கள் மீது கற்களைவீசிய தாக வதந்தி பரவியது. இதனை அடுத்து மீண்டும் வன்முறை வெடித் தது. வன்முறை நடந்த பிறகு ஊரின் பாதுகாப் பிற்கு இருந்த சில காவ லர்கள் இந்த வன் முறையை அடக்க முற் படாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந் தனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீண்டும் முஸ்லீம் களின் வீடுகளை நோக்கி கூட்டம் கூட்டமாக சென்று கற்கள் மற்றும் கட்டைகள் கொண்டு தாக்குதல் நடத்தினர். ஏற்கனவே கலவரத்தின் காரணமாக வெளியூர் சென்ற முஸ் லீம்களின் பூட்டிய வீடுகளை  உடைத்து உள்ளே சென்று அங்குள்ள பொருட் களைச் சேதப்படுத்தினர். இதில் சில வீடுகளில் இருந்த விவ சாய உபகரணங்கள் மற்றும் தானி யங்கள் அனைத்தும் நாசப்படுத்தப் பட்டது.  சம்பவம் நடந்து கொண்டு இருந்த போது மாவட்ட காவல்துறை ஆணையர் சுபாஷ்யாதவ் தலைமை யில் சிறப்பு காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த ஆயிரம் காவல் துறையினர் அந்த ஊரை சுற்றிவளைத்தனர். இச் சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்பட வில்லை.    கலவரம் நடந்த ஊர்ப் பொது மக்களிடையே அமைதிகாக்கவேண் டியும், வதந்திகளை நம்ப வேண் டாம் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறியதாவது உங் கள் ஊரின் அமைதியை விரும்பாத சிலர் இது போன்ற வதந்திகளைப் பரப் புகின்றனர். நீங்கள் வதந்தி பரப்புப வர்களை நம்பாதீர்கள். மேலும் உங் களுக்கு  தாக்குதலில் இறங்கவேண் டாம், என் றும் கேட்டுக் கொண்டார்.    கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதே சில இளைஞர் கள் முஸ்லீம்களை அவ தூறாக பேசினர், அவர்களை ஊர்ப்பெரிய வர்கள் அமைதிப்படுத்தினர். இந்த நிலையில் அடாலி கிராமத்திற்கு அருகில் உள்ள ஊரில் பொதுப் பஞ்சாயத்து கூடியது. இந்தப் பஞ்சா யத்தில் இந்த ஊரில் இருந்து கடைசி முஸ்லீம் வெளியேறும் வரை நாங்கள் அமைதி யாக இருக்கமாட்டோம், என்று பஞ் சாயத்து தங்களது முடிவை அறிவித்தது.
    குடும்பத்தாரைச் சந்திக்க காவல்துறையினர் மறுப்பு
    அடாலி கிராமத்தில் மீண்டும் கலவரம் வெடித்த செய்தி வெளி யானதும் டில்லி மற்றும் பிற மாநிலங் களில் உள்ள இக்கிராம முஸ்லீம்கள் தங்களது உறவினர் களைச் சந்திக்க வந்தனர். அடாலி கிராம எல்லை யில் அவர்களைப் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறை தரப்பில் கூறியதாவது: மாவட்ட காவல்துறை ஆணையர் ஊரில் உள்ள பெரியவர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறார். இந்த நிலை யில் நீங்கள் ஊருக்குள் சென்றால் பிரச்சனை பெரிதாகிவிடும். ஆகவே உங்களை ஊருக்குள் செல்ல அனு மதிக்க மாட்டோம் என்று கூறினர்.  இதை ஏற்காத முஸ்லீம்கள் அந்த இடத்திலேயே அமர்ந்து தர்னா செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
    பிரச்சனை இன்னும் தீரவில்லை ஊர்ப்பஞ்சாயத்தின் முடிவை அடுத்து அருகில் உள்ள ஊர் இளை ஞர்கள் அடாலி கிராமத்தை நோக்கி வரத்துவங்கினர். நிலமை மோசமா வதை அடுத்து 3000-த்திற்கும் மேற் பட்ட மத்திய சிறப்பு காவல் படை அடாலி கிராமத்தில் குவிக்கப்பட் டுள்ளது,  வன்முறை தொடர்வதைக் கண்டு மேலும் 300 முஸ்லீம் குடும் பங்கள் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.   கடந்த ஆண்டு  ஹுட்டா தலை மையில் ஆன பாஜக அரசு விரை வில் இந்த மாநிலத்தை ஹரிக்கே தேஷ் (விஷ்ணுவின்) மாநிலமாக அதாவது இந்துக்கள் மட்டும் வாழும் மாநிலமாக மாற்றுவோம் என்று மறைமுகமாக கூறி ஆட்சிக்கு வந்தார். அரியானா மாநிலத்தில் பரிதாபாத் மாவட்டத்தில்  மாத்திரம் முஸ் லீம்கள் வாழ்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.   முஸ்லீம்கள் மீது திட்ட மிட்ட முறையில் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:



    68 ஆண்டுகால இந்தியாவின் நிலை இதுதான்

    68 ஆண்டுகால இந்தியாவின் நிலை இதுதான்
    சமூக - பொருளாதார கணக்கெடுப்பு வெளியீடு;
    ஜாதி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்படவில்லை

    புதுடில்லி,ஜூலை4_ கடந்த 1932_ஆம் ஆண்டு சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு வெளி யிடப்பட்டது. குறிப்பிட்ட பிராந்தியம், இனம், ஜாதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குடும்பங் களின் வளர்ச்சி குறித்து வெளியிடப்படும் இத்த கைய கணக்கெடுப்பு அதற் குப்பின் வெளியிடப்பட வில்லை.
    2011_2012ஆம் ஆண் டில் எடுக்க தொடங்கிய மக்கள் தொகைக் கணக் கெடுப்பு 2013ஆம் ஆண் டில் நிறைவடைந்தது. தனி மனிதனின் சமூக, பொரு ளாதார நிலைகள் மற்றும் ஜாதி ஆகியவைகுறித்த தகவல்கள் இந்தக் கணக் கெடுப்பில் திரட்டப்பட் டன. இந்தியா முழுவதும் உள்ள 640 மாவட்டங் களில் வசித்து வரும் குடும் பங்களில், கடந்த 2011_ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
    பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர்த்து சட்டவிரோதமாக பாகிஸ் தான் ஆக்கிரமித்து வைத் துள்ள பகுதியான 5180 சதுர கிலோமீட்டர் மற்றும் சட்டவிரோதமாக சீனாவுக்கு பாகிஸ்தான் தாரை வாரத்துக் கொடுத்த இந்தியப் பகுதியான 37,555 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் தவிர்த்து மீதமுள்ள 78,11 சதுர கிலோமீட்டர் பரப்பள விலான இந்தியப் பகுதியில் சென்சஸ் எடுக்கப்பட் டுள்ளது.
    தற்பொழுது வெளி யிடப்பட்டுள்ள கணக் கெடுப்பு புள்ளிவிவர அறிக்கைகளில் ஜாதி குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தப் புள்ளி விவரப்பட் டியலை நேற்று (3.7.2015) மத்திய நிதித்துறை அமைச் சர் அருண் ஜெட்லி, ஊரக வளர்ச்சித்துறை மந்திரி சவுத்ரி பிரேந்திர சிங் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளார்கள்.
    மக்கள் தொகை
    2011 சென்சஸ் கணக்குப் படி 121 கோடியே 5 லட்சத்து 69 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது. இந் தியாவின்  கிராமப்புற மக்கள் தொகை 83,34,63,448. நகர்ப்புற மக்கள் தொகை 37,71,06,125 ஆகும். அதில் பெண்களை விட ஆண் களே அதிகம் உள்ளனர். ஆண்களின் எண்ணிக்கை 62,31,21,843 ஆகும். பெண் களின் எண்ணிக்கை 58,74,47,730 ஆகும். நகர்ப் புறங்களை விட கிராமப் புறங்களில்தான் மக்கள் தொகை அதிகம் உள்ளது. நகர்ப்புறங்களில் பெண் களை விட ஆண்களே அதிகம் உள்ளனர். அதாவது ஆண்களின் எண்ணிக்கை 19,54,89,200. பெண்களின் எண்ணிக்கை 18,16,16,925. கிராமப்புறப் பகுதிகளிலும் ஆண்களே அதிகம். 42,76,32,643 ஆண்கள் கிராமப்புறங் களில் உள்ளனர். பெண் களின் எண்ணிக்கை 40,58,30,805 ஆகும். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 382 பேராக உள்ளது.
    இந்தியாவில் நகர்ப் புறம் மற்றும் கிராமப்புறங் களில் 24.39 கோடி குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 17.91 கோடி குடும் பத்தினர் (73 சதவீதம்) கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். இதில் 18.5 சதவீத தலித்துகளும், 11 சதவீத பழங்குடியின மக்களும் அடங்குவர்.
    பாலின விகிதாச்சாரம் பாலின விகிதாச்சாரம் கிராமப்புறப் பகுதிகளில்  1000 ஆண்களுக்கு பெண் களின் எண்ணிக்கை 949 ஆக உள்ளது. நகரப் பகுதிகளில் 1000 ஆண் களுக்கு பெண்களின் எண் ணிக்கை 929 ஆக உள்ளது.
    6 வயதுக்கு உட்பட் டோரின் எண்ணிக்கை 16,44,78,150 ஆகும். அதில் ஆண்களின் எண்ணிக்கை 8,57,32,470. பெண்களின் எண்ணிக்கை 7,87,45,680.
    கிராமப்புறப்பகுதிகளில் குழந்தைகளின் எண் ணிக்கை 12,12,85,762. நகர்ப்புற குழந்தைகளின் எண்ணிக்கை 4,31,92,388 ஆகும். 6 வயது வரையி லான கிராமப்புறப் பகுதிகளில் குழந்தைகள் மத்தியில் பாலின விகிதமா னது 923 விழுக்காடாக ஆக உள்ளது. அதுவே நகர்ப்புறத்தில் 905 விழுக் காடாக உள்ளது.
    கல்வி
    7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மத்தியில் கல்வியறிவானது 57.93 சதவீதமாக உள்ளது. மொத்த கல்வியறிவு பெற்றோர்களின் எண் ணிக்கை, 76,34,98,517 ஆகும். இதில் ஆண்களின் எண் ணிக்கை 43,46,83,779 ஆகும். பெண்கள் எண் ணிக்கை 32,88,14,738 ஆகும். ஊரகப் பகுதிகளில் கல்வி யறிவு பெற்றோர் எண் ணிக்கை 48,26,53,540. நகர்ப் புற எண்ணிக்கை 28,08,44,977.
    வருவாய்
    கிராமப்புறங்களில் மாத ஊதியம் பெறும் குடும்பங்களின் எண் ணிக்கை சுமார் 10 சதவீத மாக உள்ளது. இவர்களில் 5 சதவீதம் பேர் அரசு ஊழியர்களாகவும், 3.57 சதவீதத்தினர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிப வர்களாகவும், 1.11 சதவீ தத்தினர் பொதுத்துறை நிறுவன ஊழியர்களாக வும் உள்ளனர்.
    92 விழுக்காடு கிராமப் புற மக்கள் மாத வருவாய் 10ஆயிரத்துக்கும் கீழ் உள்ளனர். நான்கில் மூன்று பங்கினர் 5ஆயிரம் அல்லது அதற்கும் கீழ் வருவாய் உள்ளவர்களாக உள்ளனர்.
    தினக்கூலிகள்
    30.10 விழுக்காட்டளவி லான கிராமப்புற குடும் பங்கள் (5.39 கோடி) வேளாண் தொழிலை நம்பியும், 9.14 கோடி குடும்பத்தினர் (51.14 சதவீதம்) தினக்கூலியா ளர்களாகவும் இருக்கின் றனர். சுமார் 44.84 லட்சம் குடும்பத்தினர் வீட்டு வேலைக்காரர்களாகவும், 6.68 லட்சம் குடும்பத்தினர் பிச்சைக்காரர்களாகவும் இருக்கின்றனர்.
    கிராமப்புறங்களில் வாழ்வோரில் அதிகமான அளவில் குடும்பத்தினர் மிகவும் குறைந்த வருவாய் பெற்று வருவது கண்டறி யப்பட்டு உள்ளது.  இவர் களிடம் வாகனங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் வேளாண் கடன் அட்டை போன்ற எதுவும் இல்லை.
    56 விழுக்காட்டினருக்கு நிலமற்ற வறியவர்கள்
    கிராமப்புறங்களில் வாழ்வோரில் 4.6 சதவீத குடும்பத்தினர் வருமான வரி செலுத்துகின்றனர். எனினும் கிராமப்புற தலித் இன மக்களில் வருமான வரி செலுத்துவோர் 3.49 சதவீதமாகவும், பழங்குடி யினரில் 3.34 சதவீதத்தினர் மட்டுமே வருமான வரி செலுத்துவோர் எனவும் கண்டுபிடிக்கப்பட்டு உள் ளது.
    கிராமப்புற குடும்பத் தினரில் 94 சதவீதம் பேர் சொந்த வீடு வைத்துள் ளனர். ஒட்டுமொத்த கிராமப்புற மக்கள் தொகையில் 56 சதவீத குடும்பத்தினர் நிலமற்ற ஏழைகளாக வசித்து வரு கின்றனர். தலித் இனத்தை பொறுத்தவரையில் 70 சதவீதம் பேரும், பழங்குடி யினர் 50 சதவீதத்தினரும் நிலமற்றவர்களாக இருந்து வருகின்றனர்.
    இந்தியாவின் உண்மை நிலை
    இந்த கணக்கெடுப்பை வெளியிட்டபின் செய்தி யாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, இந் தியாவின் உண்மை நிலையை இந்த ஆவ ணங்கள் எதிரொலிக் கின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் சிறந்த இலக்கை நோக்கிய கொள் கைகளை வகுப்பதற்கு அரசுக்கு இந்த விவரங்கள் உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்.

    இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
    இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

    குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...