Thursday, August 29, 2019

பனியில் கலந்த பிளாஸ்டிக்

ஆர்ட்டிக் பனிக் கடல் பகுதியில் தூய பனி பெய்யும். ஆனால், அதிலும் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்திருப்பதை, ஜெர் மனியின் ஆல்பிரட் வெகெனர் இன்ஸ்டிடி யூட்டின் விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
பவேரியா பகுதியில், அவர்கள் எடுத்த ஒரு லிட்டர் பனியில், 1.5 லட்சம் பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருந்தன. உரசும் வாகன சக்கரம் முதல் குழாய்கள் வரை, பலவழிகளில் பிளாஸ்டிக் துகள்கள் காற்றில் கலக்கின்றன.
உணவு வழியே மனித குடலுக்குள்ளும், குப்பைகளாக கடலுக்குள்ளும் கலந்துவிட்ட பிளாஸ்டிக், இப்போது காற்றின் வழியே நம் சுவாச பைகளுக்குள்ளும் வருகிறதா என, விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி


மஞ்சள் ஒரு கிருமி நாசினி. புண்களை ஆற்றும் திறன் கொண்டது என்பது நம் பாட்டிகளுக்கே தெரிந்திருந்தது. அதை சுவிட்சர்லாந்திலுள்ள, எம்ப்பா ஆய்வு மய்யம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
விரைவில் கரையும் உயிரி பாலிமர்களால் ஆன பஞ்சு போன்ற பொருளில், மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' என்ற பொருளை வைத்து, புண்களின் மேல் பிளாஸ்திரி போல போட்டு சோதித்தனர், விஞ்ஞானிகள். தோலின் செல்கள், உயிரி பாலிமர்களுக்கு இடையே உள்ள சந்து, பொந்துகளில் புகுந்து வளர ஆரம்பித்தன. இப்படி வளரும் செல்கள் வழக்க மாக தழும்பை உருவாக்கும். ஆனால், உயிரி பாலிமரில் ஊற வைக்கப்பட்ட குர்குமின், செல்களை இயல்பாக வளர வைத் தன. இதனால், பெருமளவு தழும்பு உருவாகாமலேயே புண்கள் ஆறின. மஞ்சள் பிளாஸ்திரியை புண்ணின் வடிவத் திற்கு ஏற்ப வெட்டி ஒட்ட முடியும். உயிரி பிளாஸ்திரிக்கு வளைந்துகொடுக்கும் திறன் உண்டு என்பதால், முழங்கை, முழங்கால் பகுதிகளிலும் அதை ஒட்டி வைக்க முடியும்.
சோதனை கட்டத்திலிருக்கும் மஞ்சள் பிளாஸ்திரி விரைவில் சந்தைக்கு வரும் என, எதிர்பார்க்கலாம்.

http://viduthalai.in/e-paper/187368.html


இந்தியா, மத்திய கிழக்கு பகுதி போன்ற வெப்ப நாடுகளில், பல நுற்றாண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது தான். அதை அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகளான அஸ்வத் ராமன் உள்ளிட்டோர் நவீன கட்டடங்களுக்கு பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ந்தனர்.
அந்த ஆராய்ச்சியில் வெற்றி கிடைக் கவே, 'ஸ்கை கூல்' என்ற நிறுவனத்தையும் துவங்கி, வெள்ளோட்டம் பார்க்க ஆரம் பித்துள்ளனர். அது என்ன தொழில் நுட்பம்? சூரிய ஒளியையும் வெப்பத்தையும் உள்வாங்காமல் வெளியே பிரதிபலிப் பதுதான் அந்த குளிர்ச்சி தொழில்நுட்பம்.
அந்தக் கால கட்டடக் கலை யுக்திகளை ஆராய்ந்த பிறகு, அதே தன்மையை கொண்ட ஒரு படலத்தை ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர், ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள். அந்தப் படலத்தை ஒரு குடுவையின் மேல் போர்த்தினால், அதைச் சுற்றியுள்ள காற்றின் வெப்பத்தைவிட, 5 முதல், 10 டிகிரி செல்ஷியஸ் வரை குடுவைக்கு உள்ளே வெப்ப அளவு குறைவாகிவிடுகிறது.
இத்தனைக்கும் ஒரு யூனிட் மின்சாரம் கூட இதற்கு தேவையில்லை.ஸ்கை கூல் படலத்தை பெரிய அளவில் தயாரித்து கட்டடங்களின் வெளி சுவர்களில் பொருத்தினால், கட்டடத்திற்குள்ளே குளிர்ச்சியாக இருக்கும். இதனால், அதிக மின்செலவில், 'ஏசி' போட வேண்டிய தில்லை. 'ஏசி'யால் உருவாகும் புவி வெப்பமாதல் விளைவும் குறையும். ராமன் குழுவினரின் வெள்ளோட்டம் பலன் தந்தால், 'ஏசி'யின் சந்தை படுத்துவிடும் என்பதோடு, மின்சார விரயமும் தவிர்க் கப்படும்.

மீனவர் வயிற்றில் அடியா? மீனவர் நலத்துறையும் மத்திய அரசின் கைகளுக்கு செல்லும் அவலம்


மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலும், மீனவர் நலனில் மாநில அரசிற்கு உள்ள உரிமையைப் பறிக்ககும் வகையிலும் மோடி தலைமையிலான பாஜக அரசு புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள் ளது. இதன் மூலம் மீனவர் உரிமை பறிபோகும் அபாயம் உருவாகி யுள்ளது.
ஆழ்கடல் மீன் பிடித்தல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக புதிய சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும், இதற்கான சட்ட முன்வடிவை மாநில அரசுகளுக்கு அனுப்பி கருத்துக் கோரியுள்ளது.
இப்புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் ஆழ்கடல் தொடர் பான மாநில அரசுகளின் அதிகா ரங்கள் பறிபோகும் மேலும், விசைப் படகு மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரமும் மத்திய அரசின் வசம் சென்றுவிடும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையின்படி இது வரை, ஆழ்கடலில் 12 நாட்டிக்கல் மைல் வரையிலான கடற்பரப்பில் மீன்பிடி உரிமை வழங்குதல் உள் ளிட்ட கட்டுப்பாடுகள் மாநில அரசு வசம் இருந்து வருகிறது.
இந்நிலையில், புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க, விசைப்படகுகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசின் வசம் கொண்டு வர பா.ஜ.க முயற்சித்து வருகிறது.
இதன் மூலம் எல்லைக் கட்டுப் பாடின்றி அந்நிய கார்பரேட் நிறு வனங்களுக்கு மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுவிடும்.
மேலும், மாநில அரசின் உரிமை பறிக்கப்பட்டால் காலங்காலமாகச் செய்து வரும் மீன்பிடித் தொழில் கடுமையான பாதிப்பைச் சந்திக்க நேரிடும் மேலும் மாநில அரசு
களின் மூலம் மீனவர் களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் பறிக்கப் பட்டுவிடும், இதன் மூலம் மீனவர்கள் பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கு கொத்தடிமை களாக சென்று மீன் பிடி தொழிலை செய்யவேண்டிய அவலத்திற்கு ஆளாவார்கள்.

மோட்டார் வாகனத் துறை வீழ்ச்சி விடுக்கும் எச்சரிக்கை


இந்தியாவின் மோட்டார் வாகனத் துறையானது கடும் சரிவை எதிர்கொண்டுவருகிறது. அனைத்து வகையான வாகனங்களின் உள்நாட்டு விற்பனையும் கடந்த ஆண்டு ஜூலையைவிட தற்போது 19% குறைந்திருக்கிறது. பயணிகள் வாகனத்தின் விற்பனை 31% குறைந்திருக்கிறது. இது கடந்த 19 ஆண்டுகளில் மிகவும் குறைவான விற்பனை. கூடவே, இருசக்கர வாகனங்களின் விநியோகம் 17%, வாகனங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு விற்பனைக்கு அனுப்பும் தொழில் துறை 26% பாதிப்புக்குள்ளாகி யிருக்கின்றன. இந்தியப் பொருளாதாரத்தை ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது அதில் மோசமான மந்தநிலை சமீபகாலமாக நிலவுவது தெரிந்தாலும், மோட்டார் வாகனத் துறையிலிருந்து கிடைக்கும் தரவுகள் அதற்கு உறுதியான சான்றாக அமைகின்றன.
ஒன்பது மாதங்களாகத் தொடர்ந்து பயணிகள் வாகன விற்பனை சுருங்கிக்கொண்டே வருகிறது. இதனால், விற்பனையகங்கள் மூடல்; முகவர்கள், உதிரிபாக விற்பனையாளர்கள், வாகனத் தயாரிப் பாளர்கள் ஆகிய தரப்பில் தொழிலாளர்களை வேலையிலிருந்து அனுப்புதல் என்று கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கிடையே மேலும் கடுமையான பணியிழப்புகள் ஏற்படும் என்று மோட்டார் வாகன முகவர்கள் சங்கம் எச்சரித் திருக்கிறது. இப்பிரிவில் பல்லாயிரக்கணக்கானோர் ஏற்கெனவே வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மோட்டார் வாகன சங்கம் தங்கள் துறையில் கடந்த மூன்று மாதங்களில் வேலையிழப்பு நடந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.
வங்கிகள் அல்லாத நிதித் துறை நிறுவனங்களில் பணத் தட்டுப்பாடு நிலவுவது, அதனால் வாகனங்கள் வாங்குவதற்குக் கடன் கொடுப்பது குறைந்திருப்பது, வாகனக் காப்பீட்டுக்கான தொகைகள் உயர்ந் திருப்பது, கார்கள், மோட்டார் வண்டிகள், ஸ்கூட் டர்கள் போன்றவற்றுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப் படுவது ஆகியவை மோட்டார் வாகனத் துறையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகளாகக் கூறப்படுகின்றன. கூடவே, கனரக வாகன விற்பனை யில் ஏற்பட்டிருக்கும் சரிவு, சரக்குப் போக்குவரத் தோடும் மக்களின் நுகர்வோடும் இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். வாகன விற்பனையின் எண் ணிக்கை வீழ்ச்சியானது ஒட்டுமொத்த பொருளாதார சுணக்கத்துக்கான அறிகுறியாகவும் பார்க்கப்பட வேண்டும்.
அடுத்து வரும் காலம் என்பது நிச்சயமாக மோட்டார் வாகனத் துறைக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, நுகர்வோர் நம்பிக்கை கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் இந்திய நுகர்வோரின் நம்பிக்கை குறைந்திருப்பது தெரியவருகிறது. 63.8% பேர் எச்சரிக்கையோடும் நிதானமாகவும்தான் செலவழிப்போம் என்று கூறி யிருக்கின்றனர். இதே நிலையோ அல்லது இதைவிட மோசமான நிலையோ இன்னும் ஒரு ஆண்டுக்கு நீடிக்கும் என்று அந்தக் கருத்துக்கணிப்பிலிருந்து தெரியவருகிறது. 2018-ல் இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு 37.3% ஆக இருந்தது. மோட்டார் வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பது அந்தத் துறையை மட்டுமே சார்ந்ததல்ல; ஒட்டுமொத்த பொருளாதார நிலையின் பிரதிபலிப்பு. உடனடியாக உரிய கொள்கை முடிவுகள் எட்டப்படவில்லை என்றால் பிரச்சினை பூதாகரமாக வெடிக்க வாய்ப்பிருக்கிறது.
நன்றி: "இந்து தமிழ் திசை" 26.8.2019

காஷ்மீரில் உண்மையைச் சொல்லிய மருத்துவரை இழுத்துச் சென்ற காவல்துறை


காஷ்மீர் மாநிலத்தில் தடை காரணமாக  நோயாளிகள் பாதிப்படைந்ததாகத் தெரிவித்த மருத்துவரைக் காவல் துறையினர் இழுத்துச் சென்றுள்ளனர்.
காஷ்மீரில் கடந்த 4 ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக் கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தொலைத் தொடர்பு மற்றும் இணையம் முடக்கப்பட்டுள்ளது. பல அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறை யில் வைக்கப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் தற்போது தடைகள் விலக் கப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆயினும் காஷ்மீர் நிலை குறித்து நேரில் கண்டறியச்  சென்ற காங்கிரஸ் முன் னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் திருப்பி அனுப்பப் பட்டனர்.
சிறீநகரில் பத்திரிகையாளர் சந் திப்புக்காக ஒரு அரங்கம் உள்ளது. அந்த அரங்கில் நேற்று (28.8.2019) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பணியாற்றும் மருத்துவர்  உமர்  வந்துள்ளார். சிறுநீரக சிகிச்சை நிபுணரான உமர் தனது கையில் இது வேண்டுகோள் - போராட்டம் இல்லை''  என எழுதிய அட்டையைப் பிடித்திருந்தார். மருத்துவர்கள் அணியும் மேல் கோட்டை அணிந்த அவர் செய்தியாளர்களிடம் 10 நிமிடங்கள் பேசி உள்ளார்.
உமர் பேசும் போது, தகவல் தடுப்பு மற்றும் பயணத் தடை கார ணமாகப் பல  நோயாளிகளின் வாழ்க்கை அபாயமாகி உள்ளது. குறிப்பாக டயாலிசிஸ் மற்றும் கீமோதெரபி சிகிச்சையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தடையால் எத்தனை நோயா ளிகள் உயிரிழந்தனர் எனவும், எத்தனை பேருக்குத் தேவைப்படும் உட னடி சிகிச்சைகள் தள்ளிப் போடப் பட்டது என்பது சரியாகத் தெரிய வில்லை. என் நோயாளி ஒருவருக்குக் கடந்த மாதம் 6 ஆம் தேதி கீமோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டி இருந்தது. ஆனால் கட்டுப்பாடு காரணமாக அவரால் வர முடியவில்லை.
அதன் பிறகு அவர் 24 ஆம் தேதி கீமோ தெரபி சிகிச்சைக்கு வந்தார்.  ஆனால் கீமோதெரபிக்கான மருந் துகள் கிடைக்கவில்லை. மற்றொரு நோயாளிக்கு ஒரு மருந்து டில்லியில் இருந்து வாங்கவேண்டி உள்ளது. ஆனால் அந்த மருந்தை தற்போதுள்ள நிலையில் வாங்க முடியவில்லை. எனவே அவருடைய சிகிச்சை கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இது போல் வாரா வாரம்டயாலிசிஸ் செய்துக் கொள்ள வேண்டிய நோயா ளிகள் பலர் இந்த தடை காரணமாக செய்து கொள்ளவில்லை.
நமது மாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் சுமார் 15 லட்சம் பேர் பதிவு செய்யப் பட்டுள்ளனர். இந்த திட்டத்தில் அதிகம் பேர் உள்ள மாநிலத்தில் காஷ்மீர் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இணையம் வேலை செய் யாததால் நோயாளிகளால் இந்த அடையாள அட்டை மூலம் எவ்வித சிகிச்சையும் பெற முடியவில்லை. இதைப்போல் மற்ற பல காப்பீட்டு திட்டங்களில் பதிவு செய்துள்ளோரும் துயருற்று வருகின்றனர். எனவே அரசு உடனடியாக தொலைபேசி இணைப்பு சேவையையாவது அளிக்க வேண்டும்'' எனக் கேட்டுக் கொண் டார்.
அவர் பேசிக் கொண்டு இருக் கும்போது அங்கு வந்த  காவல்துறையினர் உமரைப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர். அவரை எங்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்பது இன்னும் தெரியவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மருத்துவ அதிகாரியைச் சந்திக்க முயன்றனர். ஆனால் அவர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள வில்லை. இது குறித்து செய்தியாளர் ஒருவர் அரசு பல விவகாரங்களை மூடி மறைக்க எண்ணுகிறது எனவும், அதனால் தான் உமர் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

Tuesday, August 27, 2019

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புரட்சியாளர் விருதுகள்

சென்னையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களான யூ ஆர் லவுட் மற்றும் அம்மா கல்வியகம், கோவையில் உள்ள கே.பி.ஆர். இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி யுடன் இணைந்து, 4ஆவது ஆண்டாக இந்த புரட்சியாளர் விருதுகளை வழங்க உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே இருந்து, இந்த விருதுக்கானவர்களை தேர்வு செய்துள்ளனர்.
நடப்பு ஆண்டுக் கான விருது வழங்கும் விழா, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி, கோவை, கே.பி.ஆர். இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினி யரிங் அண்ட் டெக்னாலஜி வளாகத் தில் நடைபெற உள்ளது.
தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் டேனியல் ஜேக்கப் கூறியிருப்பதாவது: இந்த விருது வழங்குவதன் முக்கிய நோக்கம், மாணவர் களை அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து பயில வைப்பதும், ஆசிரியர்களை அரசுப் பள்ளியைத் தேர்வு செய்து அங்கு பணியாற்றச் செய்வதும்தான்.
தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள், திறமை மற்றும் புத்திசாலித்தனத்தில் மற்ற யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இது, இன்று வரை உண்மையாகத் தொடர்கிறது. இந்நிலையில், இதுபோன்ற விருதுகளும், அங்கீ காரமும், அரசுப் பள்ளி மாணவர் களை மேலும் தன்னம்பிக்கை கொள்ளச் செய்வதுடன், அவர்களது முடிவு சரியானது தான் என்பதை உறுதி செய்வதாகவும் அமையும்  என அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதி: மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு

ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஅய்) ஈவுத்தொகை மற்றும் உபரி நிதி ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க அந்த வங்கி முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்று ஆர்பிஅய் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைக்கு ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழு திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது.
இதன்படி, 2018-19 ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் உபரி ரூ.1,23,414 கோடி, திருத்தப்பட்ட பொருளாதார முதலீட்டு கட்டமைப் பின் (இசிஎஃப்) கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள உபரி ரூ.52,637 கோடி என மொத்தமாக ரூ.1.76 லட்சம் கோடி உபரித் தொகை மத்திய அரசுக்கு வழங்கப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவற்றிலும் ரிசர்வ் வங்கிகளிடம் இருக்கும் உபரி நிதி, அரசிடம் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியிடம் ரூ.9.6 லட்சம் கோடி உபரி நிதி உள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள ரிசர்வ் வங்கிகள் அதிகபட்சமாக 14 சதவீத உபரி நிதியை தங்கள் வசம் வைத்துள்ளன.ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி 28 சதவீத உபரி நிதியை வைத்துள்ளது.
அதை தன்னிடம் வழங்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியதை அடுத்து, அதற்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான குழு, 3 முதல் 5 ஆண்டு இடைவெளியில் ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்றும், இதன் மூலம் அரசு தனது நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்றும் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Monday, August 26, 2019

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்புகள்

இந்தியாவின் முன்னணி சுற்றுலா பயண ஏற்பாட்டு நிறுவனமான டிராவல் ஃபுட் சர்வீசஸ் (TES) உடன் இணைந்து ஏர் போர்ட் அத் தாரிட்டி ஆப் இந்தியா (AAI), சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் காபி பாக்ஸ். அய் அறிமுகம் செய்துள்ளது.
இது தற்போது பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாற் றுத் திறனாளிகளால் நிர்வாகிக் கப்படுகிறது. இது எங்கள் வணிக நடைமுறைகள் மற்றும் தற்போது விமான நிலையங்களின் குறிப்பி டத்தக்க மறு வடிவமைப்பு திட் டத்தின் விளிம்பில் இருக்கும் போது, முக்கியமான பயண மய் யங்களின் நிலப்பரப்பை மாற்றும் போது சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் உதவ நாங்கள் முயற்சி செய்கிறோம் என சென்னை விமான நிலைய இயக்குநர் எஸ்.சிறீகுமார் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் சிறுநீர் கல் உபாதை


சிறுநீரகம் ஒருநாளைக்கு 30 முறை ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணியைச் செய்கிறது. நிமிடக் கணக்கில் 90 மில்லி ரத்தத்தை எடுத்து அமினோ அமிலம், யூரிக் அமிலம் போன்ற பல்வேறு கூறுகளை வடித்துச் சுத்தப்படுத்து கிறது.
சிறுநீரகத்தின் உட்பாகமான நெப்ரான்கள் ரத்தத்தில் உள்ள கழிவம்சங்களை நீக்கி நல்ல ரத்தத்தை இதயம் நோக்கி உந்தித் தள்ளுகின்றன. சுமார் 1.5 மில்லியன் எண்ணிக்கையில் உள்ள குவளை போன்ற வடிவமுடைய நெப்ரான்கள் சுருங்கும்போது சட்டென்று சுருங்கிக் கழிவுப் பொருட்களை நீக்குகிறது. விரியும்போது சீரான வேகத்தில் நின்று அடுத்த கட்டத்துக்குத் தாவுகிறது. சிறுநீரகம் ஒருநாளைக்குச் சுமார் 165 லிட்டர் ரத்தத்தை வடிகட்டி 1.5 லிட்டர் கழிவைச் சிறுநீராகப் பிரித்துச் சிறுநீர்க் குழாய் வழியாகச் சிறுநீர்ப் பைக்கு அனுப்புகிறது. அவ்வளவு பெரிய அளவுக்கு வடிகட்டி சிறுநீரைப் பிரிக்கத் தெரிந்த நெப்ரான்களால் கல்லீரல் மூலமாகவும் பித்தப் பையிலும் சேரும் அடர் கழிவுகளைச் சிதைக்க முடிவதில்லை.
உடலில் பரு வடிவத்தில் சேரும் உடலுக்குத் தேவையற்ற கழிவுகளை ஈர்த்துவைக்கும் கல்லீரல் அவற்றைச் சிறுநீரகத்துக்கு அனுப்பும் போது தன் வழக்கமான செயல் முறையை மேற்கொண்டு வடிவ மாற்றம் செய்யாமல் குறுணைக் கல் வடிவத்திலோ சேமியா போன்ற நீளக் குச்சிகளாகவோ நொறுங்கும் தன்மை யுள்ள சில்லுகளாகவோ திரித்திரியாகவோ சிறுநீர்க் குழாய்க்கு அனுப்பி விடுகிறது.
இப்படி அனுப்பப்படுவதையே சிறுநீரகக் கல் என்றும் பித்தப்பைக் கல் என்றும் குறிப் பிடுகிறோம். இத்தகைய கல் வெளியேறும்போது சிறுநீரகத்திலிருந்து சிறுநீரகப் பை வரையிலும் அதைக் கடந்து சிறுநீர்த் தாரையிலும் பிறப்பு உறுப்பிலும் கடுமையான வலி தோன்றுகிறது. முப்பதாண்டுகளுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் சிறுநீர்க் கல் உபாதை இப்போது பரவலாகிவிட்டது.
அதிக உணவால் தள்ளாடும் நெப்ரான்
நமது கழிவு நீக்க உறுப்புகளில் பிறவற்றின் வேலை குறைந்து விட்டதால் அவற்றின் பொறுப்பையும் சிறுநீரகமே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எடுத்துக் காட்டாக வேலை நெருக்கடியாலோ சோம்பல் பட்டோ மலம் கழிக்கவில்லை என்றால் மலக் கழிவில் உள்ள நீர் ரத்தத்தின் வழியாகச் சிறுநீரகம் நோக்கிச் செலுத்தப்பட்டுவிடும். அப்போது அந்த நீரை வெளியேற்ற வேண்டிய பொறுப்பு சிறுநீரகத் தினுடையதாகி விடுகிறது. இப்படிப் பிற கழிவு நீக்க உறுப்புகளின் செயல் திறன் குறைகிற போதெல்லாம் அதை ஈடு செய்யச் சிறுநீரகமே கூடுதலாக உழைக்க நேர்கிறது. ரத்தத்தில் சேரும் கழிவுகளை நீக்கும் பணிகளோடு அவ்வப்போது உணவில் சேரும் தேவைக்குக் கூடுதலான உப்பு, காரம், கசப்பு, இனிப்பு போன்ற கூறுகளையும் நீக்க வேண்டிய கடமை சிறுநீரகத்தின் நெப்ரான்களுக்கு உண்டு. நாம் உண்ணும் கெட்டியான சாம்பார், கிரீஸ் தன்மையிலான கிரேவி போன்றவற்றில் சுவை உடலின் தேவைக்கு மிகுதியாக இருப்பதோடு நீண்ட நேரம் சமைக்கப்படுவதால் அதில் மிகுந்திருக்கும் வெப்பம் செரிமானத் துக்காக உடலில் உள்ள நீரை உறிஞ்சிக் கொள் கிறது. உடலில் இயல்புக்கு மாறாக நீர் வற்று வதால் ரத்தவோட்டத்தின் வேகமே குறைந்து போகும். கெட்டியான உணவை உண்ட பின்னர் நமக்கு அடிக்கடி தாகம் ஏற்படுகிற தென்றால் சிறுநீரகத்தின் நெப்ரான்கள் நீர் வற்றித் தவிக்கின்றன என்று பொருள்.
கால் ஏன் மரத்துப் போகிறது?
பரவலாக நம்பப்படுவது போல, உணவு உண்டு செரிமானமான பிறகு சுமார் நான்கு மணி நேரம் கழித்து உணவின் சாரம் ரத்தமாக மாற்றப்படுவதில்லை. மாறாக, நாம் உணவு உண்ணத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உணவின் ஒரு பகுதி ரத்தமாகி விடுகிறது. இரண்டு கால்களையும் மடக்கிச் சம்மணமிட்டு அமர்ந்து உண்கிற பொழுது சுமார் பத்து நிமிடங்களில் முழங்கால்களுக்குக் கீழ்ப்பகுதி மரத்துப்போவதை உணர முடியும். அப்படி யானால் உண்டு கொண்டிருக்கும் உணவிலி ருந்து முதற் கட்டமாகப் பெற்ற சாரம் ரத்தத்தில் கலந்து  ரத்தத்தின் அடர்த்தி அதிகரித்து விட்டது என்று பொருள். ரத்தத்தின் அடர்த்தி உயராத அளவுக்கு உண்டால் நெப்ரான்களுக் கான வேலைப் பளு குறைவாகவே இருக்கும். உண்டு கொண்டிருக்கும்போதே உணவின் வழியாகச் சேரும் உபரிப் பொருளை வெளி யேற்ற வேண் டிய வேலைப் பளு நெப்ரான்களுக்கு அதிகரிக் குமானால் முதல் கட்டமாகச் செரிமானத்துக்கு வாயில் சுரக்க வேண்டிய உமிழ்நீரைச் சிறுநீரகத்தால் சுரக்க இயலாது.

குடல்பாதை நோய்கள் அணுகாமல் இருக்க...


வாய், குடல் பாதை நோய்கள் வாசற்படி அணுகாமல் இருக்க செய்ய வேண்டியவை. குறிப்பாக நெஞ்சு எரிச்சல், எதிர்க்களித்தல், செரிமான மின்மை பிரச்சினை இருப்பவர்கள் கீழ்க்காணும் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்:
* எப்போதும் மிகைக் கொழுப்பு, எண்ணெய் உணவைத் தவிருங்கள்
* காலை எழுந்து பல் துலக்கியதும், ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவதை கட்டாயப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
* அதிகமான காரம், மசாலா, புளிப்பு, உப்பு போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
* உணவில் வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள், நார்ச் சத்துக்கள் போதுமான அளவு இருக்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
* உறங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பே உணவு, பானங்களை அருந்துவதை நிறுத்துங்கள்
* சாப்பிட்டவுடன் அரக்கப் பறக்க ஓடாதீர்கள், கத்தாதீர்கள், எப்போதும் கூன் போடாமல் நிமிர்ந்து உட்காருங்கள்
* தொப்பைக்காரர்கள் உடல் எடை யைக் குறைத்தாக வேண்டும்
* வந்திருக்கும் நோய்களுக்கு ஏற்ற உணவைத் தேர்வுசெய்ய வேண்டும் - தகுந்த உணவு நிபுணர்கள், மருத்து வர்களின் துணையுடன்.
* புகை, மது எக்காலத்திலும் வேண் டாம் (காப்பி, டீ இல்லாமல் வாழ முடியாது என்பவர்கள் அளவுடன் பருகலாம்)
* இறுக்கமான ஆடைகளை அணி யாதீர்கள், குறிப்பாக இறுக்கமான ஜீன்ஸ் வேண்டாம்.
* எப்போதும் சத்தான சரிவிகித உணவையே உண்ண வேண்டும்
* முதுமையில் விருந்தும் விரதமும் தேவையில்லை.
கீழ்க்காணும் உணவு வகைகள் வயிறு, குடல் பாதைப் பிரச்சினை உடைய வர்களுக்கு நல்லது
# குடிநீராக சீரகம் கலந்த நீர்
# கறிவேப்பிலை, கொத்தமல்லி
# பிரண்டை (துவையல் அல்லது சட்னியாக). பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு மேல் தோலை உரித்துவிட்டு மோரில் 30 நிமிடம் ஊறவைத்து சமைக் கலாம் (வயிறு நோய்களுக்கு பிரண் டையைப் போல சிறந்த உணவு ஏதுமில்லை).
#வாரம் ஒரு முறை வாழைத்தண்டு, பாகற்காய், சுண்டைக்காயை உணவில் சேர்ப்பது தேவையற்ற குடல் பாதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவியாக அமையும்.
# ஏதேனும் ஒரு பழ வகை (நம் மண் ணுக்கு ஏற்ற, பருவக்காலத்துக்கு ஏற்ற பழங்கள்). நாரத்தம், ஆரஞ்சு, புளியம் பழம் போன்ற நாம் மறந்துவிட்ட பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
# ஏதேனும் ஒரு பிஞ்சுக் காய்கறி - கரும்பச்சை நிறக் கீரைகள் (பொன் னாங்கண்ணி, பசலை, முருங்கை). செரி மானக் கோளாறு உள்ளவர்கள் சூப்பாக அருந்தலாம்
# செரிமானம் நன்றாக இருந்தால் பருப்பு, கொட்டை வகைகளை தேவை யான அளவு உண்ணலாம் (நிலக்கடலை, பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட்)
# நெய் அளவுடன் (ஒரு நாளைக்கு 5 முதல் 10 மி.லி.)
# அதிகம் புளிக்காத வெண்ணெய் எடுத்த மோர்
# தேன், இளநீர் (வெறும் வயிற்றில் குடிப்பது நல்லதல்ல), எலுமிச்சைச் சாறு (உணவு இடைவேளைகளில்)
# செரிமானத்தன்மை அறிந்து பால் அருந்தலாம் அருந்தலாம்.
# மதிய உணவில் அறுசுவையும் இருப் பதை உறுதி செய்துகொள்ளுங்கள்
முதுமையில் இயற்கையாகவே இரப்பை, குடல் பாதைகள் தேய்மானத் திசையில் இருக்கும். கூடவே பல்வேறு நோய்கள் வந்திருக்கலாம். அதற்குப் பல்வேறு மருந்துகளை எடுத்துக் கொண் டிருக்கலாம்.
அதனால் இரைப் பை, குடல் பாதை சிரமங்கள் இருந்து கொண்டே இருக்கும். இதைச் சமாளித்து ஆரோக்கியமாக இருக்க உணவு பற்றிய புரிதலும், அதை உண்பதும் முக்கியம். அதே அளவு முக்கியம் இரப்பை குடல் பாதைக்கான   பயிற்சிகள், உடற்பயிற்சிகள், முடிந் தவர்கள் நீச்சல் நிபுணர்கள் துணையுடன் நீந்துவது முதுமையைச் சுகமாக்க உதவும்.

அரசியல் பிரச்சினைகளுக்காக மக்கள் நலப்பணிகளை நிறுத்துவதா? நீதிமன்றம் கண்டனம்

ஆந்திர மாநிலத்தில் முந்தைய தெலுங்கு தேசம் கட்சி அரசு கோதாவரில் நதிக்கு இடையே போலவரம் அணை கட்டும் பணிகளை தொடங்கியது. இதன் மூலம் ராயல சீமா பகுதியில் தண்ணீர் தட்டுப் பாட்டை முழுமையாக தீர்த்து விடலாம் என சந்திரபாபு நாயுடு கருதினார். ஆனால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த தும், போலவரம் அணை கட்டும் பணிகளை நிறுத்தியது. மறு ஒப்பந்தம் கோர முடிவு செய்தது. இதை எதிர்த்து தற்போது ஒப்பந்தம் எடுத்துள்ள நவயுகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை நாடியது.
இந்நிலையில் இந்த விவகாரத் தில் மறு ஒப்பந்த நடை முறைகளை  நிறுத்தி வைத்து நீதிமன்றம் நேற்று  முன் தினம் தீர்ப்பு வழங்கியது. போலவரம் அணை கட்டும் பணியை நிறுத்தக் கூடாது. நவயுகா நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தம் மூலமே அதனை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு ஜெகன்மோகன் அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த அரசு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்து, தனது கட்சியை சேர்ந்தவர் களுக்கு அந்த ஒப்பந்தத்தை வழங்கலாம் என ஜெகன் திட்டமிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய அரசியலில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது அதிகரித்துகொண்டே வருகிறது, தமிழகத்தில் கலைஞர் ஆட்சிகாலத்தில் கொண்டுவந்த அனைத்து திட்டத்தையும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்திவிட்டார். இதில் துறைமுக விரைவுச்சாலைத்திட்டம், புதிய சட்டமன்றம் உள்ளிட்ட பல திட்டங்கள் அடங்கும்.
2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு புதிய சட்டமன்றத்தை மருத்துவமனையாக மாற்றினார் நீதிமன்றம் தலையிட்டு ம் இந்த விவகாரத்தில்  ஜெயலலிதா பிடிவாதமாக இருந்தார்.
முழுக்க முழுக்க நவீன முறையில் சட்டமன்றத்திற்கு என்றே வடிவமைக்கப்பட்டு கட்டபப்ட்ட புதிய சட்டமன்றம் மருத்துவமனையாக மாற்றப்பட்டதால் மக்களின் பணம் முற்றிலும் விரயமானது, மருத்துவ மனையாக மாறியிருப்பினும் அங்கு மருத்துவப் பணிகளை மேற்கொள்ள பெரும் சிரமம் ஏற்படுகிறது, சட்டப் பேரவை மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற வரும் நோயாளிகள் அனைவரும் ராஜீவ் காந்தி  அரசு மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பப் படுகின்றனர்.
அதே போல் துறைமுகம் - மதுரவாயில் நெடுஞ்சாலைப் பணி 70 விழுக்காடு பணிகள் முடிந்த நிலையில் ஜெயலலிதா பதவி ஏற்ற உடன் அந்த பணியை நிறுத்தினார். பல நூறு கோடிகள் விரயமானது. அதே போல் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் உழவர் சந்தை உள்ளிட்ட பல மக்கள் விரும்பி பாராட்டிய திட்டங்களை ஆட்சி மாறியதும், நிறுத்திவைத்தன் மூலமாக பெருத்த பணவிரயம் மற்றும் பணி முடக்கம் ஆகியவை ஏற்பட்டன.
இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட்டும் ஆட்சியாளர்கள் தங்களது சுயநலம் மற்றும் அதிகார இறுமாப்பு காரணமாக மாநிலத்தின் வளர்ச்சியையே பின்னோக்கி செல்லவைத்துவிட்டனர்.

மதம் மாற விரும்பும் பெண்ணை சிறை வைத்தது ஏன்? நீதிமன்றம் கேள்வி

இசுலாம் மதத்துக்கு மாற விரும்பிய 27 வயது இந்துப் பெண்ணை விடுதலை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றக் கிளை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு தமிழ்மலர் என்னும் வழக்குரைஞர் மனு ஒன்றை அளித் திருந்தார். அந்தமனுவில், மதுரையைச் சேர்ந்த பல் மருத்துவம் படித்த 27 வயதுப் பெண் ஒருவருக்கு இசுலாம் மதத்தின் மீது பற்று ஏற்பட்டுள்ளது.
அதையொட்டி அவர் தமிழ்நாடு தவுகித் ஜமாத் அமைப்பை அணுகி இசுலாம் மதத்துக்கு மாற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதை அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.
அந்தப் பெண் அங்கிருந்து தப்பி வந்து ஜம்மியாத்துல் அகிலில் குரான் வால் கழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். அந்த  கழகத்தில் தன்னை பெற்றோர்கள் கொன்று விடுவார்கள் என பயந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அளித்த புகாரை காவல்துறையினர் பதியாமல் இருந்துள் ளனர்.  அந்தப் பெண் தல்லாக்குளம் காவல்துறையிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பெற்றோருடன் அனுப்பி உள்ளனர். இந்த மனுவை அளித்த வழக்குரை ஞராகிய நானும் எனது சக வழக்குரைஞர்களும் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவருக்குச் சட்ட உதவி அளிக்க முயன்றோம். ஆனால் காவல்துறை அதிகாரி அதற்கு எங்களை அனுமதிக்கவில்லை.
அந்தப் பெண்ணையும் சந்திக்க அனுமதி அளிக்க வில்லை. அந்தப் பெண் தல்லாக் குளம் காவல்நிலைய உத்தரவுப்படி சட்ட விரோதமாக ஒரு பெண்கள் விடுதியில் அடைக்கப்பட்டிருந்தார். எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவில் கூறப்பட்ட பெண் ஒரு மேஜர். அவருக்கு அவர் விரும்பிய மார்க்கத்தைத் தொடர சட்டப்படி உரிமை உண்டு. எனவே அவரை சட்ட விரோதமாகப் பெண்கள் விடுதியில் வைக்கக் கூடாது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

மோடியின் ஆட்சியை கடுமையாக விமர்சிக்கும் ஊடகங்களுக்கு தொடரும் மிரட்டல்கள்

வங்கி மோசடி தொடர்பாக 'டெக்கான் கிரானிக்கல்' நாளிதழ் உரிமையாளர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வங்கி கடன் மோசடி தொடர்பாக பிரபல ஆங் கில நாளிதழான டெக்கான் கிரானிக்கல்  உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை ஆய்வு நடத்தியது. அப் போது ரூ.5 லட்சம் மதிப்பி லான பழைய ரூபாய் நோட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாத நிலை யில்,  கடன் மோசடி தொடர் பான வழக்கில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளி தழின் உரிமையாளர் வெங்கட்ராம ரெட்டி மற்றும் விநாயகரெட்டி ஆகியோரது, அய்தராபாத்  மற்றும் டில்லியில் உள்ள வீடுகள், அலுவலகங்களில்   அமலாக்கத்துறை அதி காரிகள் அதிரடியான சோத னைகளை மேற் கொண்டனர்.
இந்த சோதனையின் போது, 'டெக்கான் கிரா னிக்கல்'  உரிமையாளர் வீட்டில் இருந்து,  அசையா சொத்துகள், டிஜிட்டல் ஆதாரங்கள், ரூ.5 லட்சம் ரூபாய்க்கான பழைய ரூபாய் நோட்டு கட்டுகள், இரண்டு சொகுசு கார்கள் உள்ளிட்ட முக்கிய ஆவ ணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடன் பெற்ற தொகை யாருக்கு திருப்பி விடப் பட்டது என்று டிஜிட்டல் ஆதாரங்களைக் கொண்டு அமலாக்கத்துறை அதிக ரிகள் ஆய்வு செய்து வரு வதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஊடகத் துறையினரிடையே பர பரப்பை ஏற்படுத்தி உள் ளது.
'டெக்கான் கிரானிக்கல்', 'த டெலிகிராப்' போன்ற ஆங்கில நாளிதழ்கள் மோடியின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து எழுதி வருகின்றன. இத னால் பழைய வழக்குகளை தூசி தட்டி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் ஜி.டி.பி. வீழ்ச்சி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி நடப்பு ஆண்டு 6.2% ஆக இருக்கும் என்று பிரபல பொருளாதார நிறுவனமான மூடிஸ் தெரிவித்து உள்ளது.
நியூயார்க்கில் உள்ள மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ்  நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகத்தில் இந்திய பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி அடைந்து 6.2 ஆக குறையும் என்று கணித்துள்ளது.
இதே நிறுவனம் மோடியின் கடந்த ஆட்சியின்போது, 2015_-16ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயரும் என்று கணித்து கூறியது.. முதல் காலாண்டில் இது 7.3 சதவீதமாக உயரும் என்றும்  பொருளதார வளர்ச்சியில் சீனாவை முந்தும் என்றும் கணித்திருந்தது.
ஆனால், தற்போது இந்திய பொருளதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளது. ஏற்கனவே ஜிடிபி  6.8 % ஆக குறைந்த நிலையில், தற்போது 6.2 ஆக குறையும் என்று கணித்துள்ளது.
நடப்பு ஆண்டுக்கான (2019)   இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை முந்தைய மதிப்பீட்டான 6.8 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதமாகக் குறைத்தது.
இதற்கு காரணம், பலவீனமான உலகப் பொருளாதாரம் ஆசிய ஏற்றுமதியைத் தடுமாறச் செய்துள்ளதாகவும், நிச்சயமற்ற இயக்கச் சூழல் முதலீட்டை எடை போட் டுள்ளது என்றும்  மூடிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியுள்ளது.
ஆனால், பிரதமர் மோடியோ,   2024_-25ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த மதிப்பு அய்ந்து ட்ரில்லியன் டாலர் ஆகவேண்டும் என்று  இலக்கை நிர்ணயித்துள்ளார். இந்த பொருளாதார இலக்கை இந்தியா  அடைய வேண்டுமென்றால், ஒவ்வோர் ஆண்டும் இந்திய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) எட்டு சதவீதமாக அதிரிக்க  வேண்டும்.
ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பல துறைகள் சரிவை கண்டு வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவின் ஜிடிபி குறைந்து வருகிறது. மேலும்,  டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவாக 22 காசுகள் சரிந்து 72.03 ரூபாயாக உள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய ஒப்பந்தங்களின்படி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் சிக்கலில் தவிக்கின்றனர்.

Sunday, August 25, 2019

சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

திருவண்ணாமலை தேனிமலையில் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கீடு செய்யக் கோரி, போட்டாட் சியர்அலுவலகத்தில் இரவு முழுவதும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கோட்டாட்சியர் சிறீதேவி பேச்சுவார்த்தை நடத்தினார். திருவண்ணாமலை தேனிமலை பகுதியில் 1.50 ஏக்கர் நிலத்தை அப்பகுதியை சேர்ந்த ஒருபிரிவினர் சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். மற்றொரு பிரிவினர் இந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மேலும், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட நிலத்தை அளந்து கொடுக்கு மாறு வருவாய்த்துறையினருக்கு உத்தர விட்டது.
அதன்பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் இடத்தை அளவீடு செய்து, நிலத்தை சுற்றிலும் கடந்த 21ஆம் தேதி கம்பிவேலியை அமைத்தனர்.
தேனிமலை பகுதியை ஒருபிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கீடு செய்யக் கோரியும் நேற்று முன்தினம் அந்த பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாலை 6 மணி யளவில் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற பொது மக்கள், தங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை அங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறி, இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 10 மணியளவில் அலுவலகத்திற்கு வந்த கோட்டாட்சியர் சிறீதேவி போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோட்டாட்சியர், மனுதாரர் அவருக்கு சொந்தமான இடம் என உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படிதான் இடம் அளவீடு செய்து வேலி அமைக்கப்பட்டுள்ளது என்றார். அதற்கு போராட்டக்காரர்கள், பிரச்சினைக்குரிய அந்த இடத்தை யாரும் பயன்படுத்தாத வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறி மனு அளித்தனர். மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்ததையடுத்து, காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

விளைநிலங்களில் பெட்ரோல் டீசல் குழாய் பதிக்கும் திட்டம் தகவல் அறியும் சட்டத்தில் விவரம் கோரி 500 விவசாயிகள் மனு

தருமபுரி மாவட்டத்தின் வழியாக கோவை இருகூரிலிருந்து, கரு நாடக மாநிலம் தேவனகோந்தி வரை பெட்ரோல், டீசல் குழாய் பதிக்கும் திட்டம் குறித்து, தகவல் அறியும் சட்டத்தில் விவ சாய நிலங்கள் பற்றிய விவரம் கேட்டு, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனித்தனியாக மனு அளித்தனர்.
கோவை மாவட்டம், இருகூரில் இருந்து கருநாடக மாநிலம் தேவனகோந்தி வரை பாரத் பெட்ரோலியம் கார்ப் பரேசன் சார்பில் பெட்ரோல், டீசல் ஆகியவை குழாய் மூலம் கொண்டு செல்ல முடிவு செய் யப்பட்டுள்ளது. இதற்காக, விவ சாய விளைநிலங்கள் வழி யாக குழாய் பதிக்கப்படவுள்ளது. இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்ம புரி, கிருஷ்ணகிரி உள் ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள நூற் றுக்கணக்கான விவசாயி களின் விளைநிலங்கள் பாதிக்கப்படு கிறது. இந்த திட் டத்தை நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி வழி யாக கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வரு கின்றனர்.
இத்திட்டத்தை செயல் படுத்துவதற்கான அறிவிப்பு, மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில், அரசி தழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான பணி களுக்காக புஷ்பா என்ற அதி காரியும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இத்திட்டம் எந்ததெந்த மாவட்டங்களில் விளை நிலங் கள் வழியாக செல்லும் என நிலங்களில் சர்வே எண், கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவு உள்ளிட்ட வைகளும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதனால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இந் நிலையில், தர்மபுரி மாவட் டத்தை சேர்ந்த ராமர்கூடல், சின்னம்பள்ளி, பெரும்பாலை, அரகாசனஅள்ளி, மாக்கனூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள்,  22ஆம் தேதி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டனர்.
பின்னர், சமூக ஆர்வலர் பியூஸ் மானூஸ் தலைமையில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனித்தனியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அதிகாரியிடம் ரூ.10 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டி, தகவல் அறியும் சட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், பாரத் பெட் ரோலிய நிறுவனத்தால், இருகூர் முதல் தேவனகோந்தி வரை பெட்ரோலிய குழாய் பதிப்பு தொடர்பான பணிகள் தொடர் பான அனைத்து கோப்பு களையும் பார்வையிட, சரியான நேரத்தை குறிப்பிட்டு ஒதுக்கு மாறு கேட்டுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், ‘தகவல் அறியும் சட்டத்தில் எந்தெந்த விவசாயி களின் நிலத்தின் வழியாக இத் திட்டம் செல்கிறது என் பதை கேட்டு மனு செய்துள்ளோம். எங்கள் விவசாய நிலத்தின் வழியாக கொண்டு செல்லாமல், மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும்,’ என்றனர்.

பார்லே பிஸ்கட் நிறுவனத்தில் 10,000 தொழிலாளர்களை பணி நீக்க வாய்ப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே புராடக்டஸ் பிரைவேட் லிமிடெட் 10,000 தொழி லாளர்களை பணி நீக்கம் செய்யக் கூடும். ஏனெனில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதோடு கிராமப்புற மய்யப்பகுதிகளில் தேவை யும் சரிந்து வருவதால் உற்பத்தியின் அளவை குறைப்பதாக பார்லே நிறுவனத்தின் நிர்வாகி தெரிவித்தார்.
ஆசியாவின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமான இந்திய பொருளாதாரம் கார் முதல் ஆடைகள் வரை விற்பனை சரிவை எதிர்கொண்டு வருகிறது. உற்பத்தியை குறைக்க நிறுவனங்கள் கட்டாயமாகி வருகிறது.
வளர்ச்சியை புதுப்பிக்க அர சாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தி யுள்ளது.
பார்லே பிஸ்கட் விற்பனையின் வீழ்ச்சியினால் உற்பத்தியை குறைக்க வேண்டியிருக்கும்.
இதன் விளைவாக 8,000லிருந்து 10,000 பேர் பணிநீக்கம் செய்யப் படலாம் என்று மும்பையில் இருந்து பார்லேவின் பிரிவுத் தலைவர் மயங்க் ஷா கூறினார்.
“நிலைமை மிகவும் மோசமானது, அரசாங்கம் உடனடியாக தலையிடா விட்டால் வேலைவாய்ப்பு இழப்பு என்பது கட்டாயமாகிவிடும்” என்று அவர் கூறினார்.
1929ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பார்லே நிறுவனத்திற்கு சொந்தமாக 10 நிறுவனங்கள், 125 ஒப்பந்த உற்பத்தி ஆலைகள் நேரடி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட சுமார் ஓர் இலட்சம் பேரை பணியில் அமர்த்தி யுள்ளது.
பார்லே நிறுவனத்தின் அதிகாரி ஷா, பார்லே பிஸ்கட் பிராண்டு களுக்கான தேவை வேகமாக சரிந்து வருகிறது.
2017 ஆம் ஆண்டு முதல் விதிக்கப் பட்ட ஜிஎஸ்டி வரியினால் ஒவ்வொரு பிஸ்கட்டிற்கு ரூ. 5 வரியாக கட்ட வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.
அதிக வரி காரணமாக ஒவ்வொரு பேக்கிலும் குறைவான பிஸ்கட்களை வழங்கி வருகிறது பார்லே.
இது கிராமப்புற இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்ட நுகர்வோரின் தேவையை குறைத் துள்ளது. இது பார்லேவின் வருவாயை பாதிக்கும் மேலாக குறைத்துள்ளது.
“இங்குள்ள நுகர்வோர்கள் விலை யில் தான் மிகவும் கவனமாக உள் ளனர். குறிப்பிட்ட விலைக்கு எத் தனை பிஸ்கட் பெறவேண்டும் என் பதில் கவனமாக உள்ளனர்” என்று ஷா தெரிவித்தார்.
1.4 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயைக் கொண்ட பார்லே, கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி விகிதங்களை மறுபரிசீலனை செய் யுமாறு முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.
பார்லே குளுக்கோ என்று அழைக்கப்பட்ட மும்பையை தலை மையிடமாக கொண்ட நிறுவனத்தின் பெயர்தான் பார்லே-ஜி என்று மாற்றப் பட்டது.
1980- - 1990களில் அனைத்து வீடுகளிலும் உச்சரிக்கப்படும் பெய ராகவும் இருந்தது.
2003 ஆம் ஆண்டில் பார்லே ஜி உலகின் மிகப்பெரிய பிஸ்கட் பிராண்டாக கருதப்பட்டது.
இந்தியாவின் பொருளாதார மந்தநிலை ஏற்கெனவே அதன் முக் கியமான வாகனத் தொழிலில் ஆயி ரக்கணக்கான வேலை இழப்புகளுக்கு வழி வகுத்தது. தேவையில் வீழ்ச்சியை துரித்தப்படுத்தியது என்று  ஷா கூறினார்.

பிஎப் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்

பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6.3 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் முக்கிய முடிவு எடுக்கும் மத்திய அறங்காவலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் அய்தராபாத்தில் நடைபெற்றது. இதில்  பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டம் 1995ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி ஓய்வூதிய திட்டத்தில் இடம் பெற்றுள்ளவர்கள் பகுதியளவு தொகையை முன்பணமாக எடுக்க முடியும். இந்த திட்டம் 2009ஆம் ஆண்டு திரும்ப பெறப்பட்டது.
இந்த நிலையில் 2009க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்கள் முன்பணம் எடுக்கும் வசதிக்கு ஈபிஎப்ஓவின் மத்திய அறங்காவலர் குழு இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின்படி ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதிய தொகை  அடுத்த 15 ஆண்டுகளுக்கு மூன்றில் ஒரு பகுதி குறைக்கப்படும். 15 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் அவர்கள் முழு ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் 6.3 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்.

120 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டுகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம், வயநாடு பகுதியிலும் பெய்த பலத்த மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. உபரிநீர் காரணமாக காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகபட்ச மாக நொடிக்கு 2.40 லட்சம் கன அடி வீதம் வந்தது.  சனிக்கிழமை மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.29 அடியாக உயர்ந்தது. அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் நிலை உருவாகி உள்ளது. இந் நிலையில், கடந்த இரு தினங்களாக காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்தது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாகச் சரிந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரும், கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 89.21 டி.எம்.சி.யாக உள்ளது.

போக்குவரத்து விதிகள் மீறல்: தினசரி 1200 பேருக்கு இ-சலான் அனுப்பும் போக்குவரத்து காவல்துறை

போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டி செல்பவர்களின் வீடுகளுக்கு, போக்குவரத்து காவல்துறையில் இருந்து அவர் களின் வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் ரசீது அனுப்பப்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு சுமார் 1200 பேர் பேர் போக் குவரத்து விதிகளை மீறி வாகனங்களை செலுத்தி வருவதாகவும், அவர்களின் வாகன எண்களை வைத்து, அவர்களின் முகவரிக்கு அபராதத்துக்கான மின்னணு ரசீது அனுப்பி வைக்கப்படுவதாக போக்கு வரத்து காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் கடுமை யாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.  ஹெல்மெட் அணியாதவர்கள், சீட் பெல்ட் போடாதவர்கள், சிக்னலை மீறி வாகனத்தை ஓட்டி செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களை, அந்த பகுதியில் உள்ள காமிரா உதவியுடன் கண்டறிந்து, வாகனத்தின் பதிவு எண்ணின் வாயிலாக அவர்களின் வீடுகளுக்கு புகைப்படத்துடன் கூடிய கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. அந்த கடிதத்தில் வண்டி எண், விதிமீறிய இடம், ரசீது எண் உடன் எவ்வளவு அபராதம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கூறிய போக்குவரத்து காவல்துறை அதிகாரி,  சென்னை காவல்துறையினர் ஒவ்வொரு நாளும் குறைந்தது 1,200 வழக்குகள் தொடர்பாக, வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிகளுக்கு மின்னணு ரசீதுகள் அனுப்புகின்றனர். வாகனத்தின் எண்ணை அடையாளம் காணக்கூடிய கேமராக் களில் சிக்கியவர்களைத் தவிர, வாகனத்தின் பதிவு எண்ணின் புகைப்படங்களைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றவர் களை காவல்துறை பதிவு செய்கிறது.ரசீது பெற்ற வர்கள், அடுத்த  24 மணி நேரத்திற்குள் அபராதம் செலுத்த வேண்டும்.
சென்னையின் முக்கிய சந்திப்புகளில்  தினசரி ஏறக்குறைய 4,000 விதிமீறல்களைக் கண்டறிப்படு கிறது என்றும்,  அதை .  ஆராய்ந்து ஒரு நாளைக்கு சுமார் 500 பேருக்கு சலான்கள் வழங்கப்படுவதாகவும்  கூறினார்.

Saturday, August 24, 2019

மாநிலங்களவை எம்பி.யாக மன்மோகன் பதவியேற்பு




புதுடில்லி,ஆக.24, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன் மோகன் சிங், அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை  உறுப்பி னராக இருந்து வந்தார். இவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 14ஆம் தேதி முடிந்தது.

இந்நிலையில், ராஜஸ்தானில் நடந்த மாநிலங் களவை உறுப்பினர் இடைத்தேர்தலில் மன்மோகன் சிங் போட்டியிட்டார். அவருக்கு எதிராக பாஜக வேட்பாளரை நிறுத்த வில்லை. இதனால், மன்மோகன் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டார்.

இதைத் தொடர்ந்து, மாநிலங் களவை உறுப்பின ராக மன்மோகன் சிங் நேற்று பதவியேற்றுக் கொண் டார். அவருக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்  பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமத் படேல் மற்றும் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சில பாஜக தலைவர்களும் உடனிருந்தனர்.

பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று கூறிய நிதி ஆயோக் தலைவருக்கு பாஜக மிரட்டல்



புதுடில்லி ஆக. 24 நாட்டின் பொருளாதாரம் கடும் தேக்க நிலை யைச் சந்தித்து வருகிறது. வாகனத் தொழில் நிறுவனங்களின் வீழ்ச்சி, பல்வேறு தொழில்களின் நசிவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு ஆகியவை பொரு ளாதார வீழ்ச்சியை மோசமாக்கியுள்ளது.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், தலைமை பொருளா தார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், முன்னாள் பிரதமரும், பொருளாதார அறிஞருமான மன் மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார அறிஞர்களின் கருத்து களும் இந்தியாவில் அதிபயங்கரமான பொருளாதாரச் சீர்கேடு ஏற்பட்டி ருப்பதை எச்சரிக்கை செய்துள்ளனர்.

இருப்பினும்  பா... தலைவர் களும், அமைச்சர்களும் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பொய் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டின் பொரு ளாதார வளர்ச்சிக்காக மோடியால் அமைக்கபப்ட்ட  நிதி ஆயோக் அமைப்பின்  தலைவர் ராஜிவ் குமார், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர் ஷமிகா உள்ளிட்டோரும் பொருளா தார வீழ்ச்சி குறித்து எச்சரித்தனர்.

நிதி ஆயோக் தலைவர் ராஜிவ் குமார் .என்.அய் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கடந்த 70 ஆண்டுகளில் நிதித்துறை இதுபோன்ற சறுக்கலைக் கண்டதில்லை.

ஒட்டு மொத்த நிதித்துறையும் நெருக்கடியில் உள்ளது. பொருளாதார நிலை இன்னும் மோசமடைய வாய்ப்புள் ளது. அரசு உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளாக பொருளா தார வளர்ச்சியில் நாடு எதிர் கொண் டிருக்கும் மோசமான நிலையைத் தடுத்து நிறுத்த வேண்டும். அரசுத் துறைகள் மட்டுமல்லாமல், தனியார் துறைகளும் கடுமையான நெருக்கடி களைச் சந்தித்து வருகின்றன. தனியார் துறையின் அச்சத்தை அகற்ற மத்திய அரசு தன்னால் முடிந்ததைச் செய்யவேண்டும். எனத் தெரிவித்தார்.

ராஜிவ் குமாரின் பேட்டி நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி யுள்ளது, மோடி பாரீஸ் நகருக்குச் சென்று இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறிவருகிறது என்று கூறிக் கொண்டு இருக்கும் நிலையில்  நிதி ஆயோக் தலைவரின் பேச்சு மோடியை மீண்டும் ஒரு பொய்யர் என்று உறுதிசெய்துள்ளது.

இந்த நிலையில் பாஜகவினர் நிதி ஆயோக் தலைவரை மிரட்டும் விதமாக பேசியுள்ளனர்.

இதனை அடுத்து அவர் தனது பேச்சை ஊட கங்கள் தவறாக மொழி பெயர்த்து விட்டது என்று கூறியுள் ளார்.

பா.. அரசு பொருளாதார நெருக்கடி நிலையை வெவ்வேறு பிரச்சி னைகளைப் பயன்படுத்தி திசை திருப்பி வந்த நிலையில், ராஜிவ் குமார் பொருளாதார தேக்க நிலையை வெளிப்படையாகத் தெரிவித்துள் ளார்.

முக்கியமாக தனது ஆட்சியின் தொடர் தோல்வியை மறைக்க மோடி மற்றும் அமித்ஷா போன்றோர் தொடர்ந்து முயற்சி செய்தும் உண் மைகள் வெளியே வருவதை தடுக்க முடியவில்லை. இதனால் மிரட்டல் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

'கோபம் - அளவோடு' நியாயமே!





கி.வீரமணி

கோபங்கள் பலவகை.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி வகை, தனி ரகம்!

அய்ந்தறிவு படைத்த மிருகங்களுக்குக்கூட கோபம் வராமலா இருக்கிறது?

பிறகு எப்படி ஆறறிவு படைத்த, மானம் உள்ள மனிதர்களுக்குக் கோபம் வராமலிருக்க முடியும்?

யாரையாவது பார்த்து 'இவருக்குக் கோபமே வராதுங்க' என்றால் அது மனித சுபாவத்திற்கு மாறானவர் என்று அறிமுகப்படுத்துவது போன்றது.

மனித இயல்பு கோபப்படுவதுதான். எப்படி நகைச்சுவை வரும்போது சிரிக்கின்றோமோ, துக்கம் துயரம் துளைக்கும்போது அழுகி றோமோ, அதுபோன்றது தான் கோபம் கொள் ளும் உணர்ச்சியும்கூட!

கோபப்படாதவர்கள்போல் சிலர் காட்டிக் கொண்டால் அது நடிப்பு, அல்லது நயவஞ்சகம்; எதையோ மற்றவர்களிடம் எதிர்பார்த்து பொறுத்துக் கொள்ளுகிறார் என்பதே அதன் புதை பொருள்.

Provoked Anger என்பது ஆத்திரமூட்ட பட்டதால் ஏற்படும் கோபம், பல நேரங்களில் நியாயப்படுத்தக்கூடிய கோபம் தான்!

ஆனால் காரணமின்றி எதற்கெடுத்தாலும் அற்ப விடயங்களுக்கெல்லாம் கூடத் தேவையற்றவைகளுக்காக கோபப்படுவது, மாற்றிக் கொள்ள வேண்டிய பண்பு - பழக்கம் ஆகும்!

ஆத்திரமூட்டப்பட்ட கோபத்தினைக் கட்டுப்படுத்துவதை விட வெடித்து வெளிப் படுத்தி விடுவதே - அது நாகரிகமான அளவில், ஓர் எல்லைக் கோட்டுடன் நிறுத்திக் கொள் வதற்குப் பழகவேண்டும்.

ஆத்திரமூட்டப்படும் கோபத்தைவிட ஆத்திரமூட்டப் படாமல் அவ்வப்போது வெடிக்கும் கோபம் நமது இதயத்தின் - இரத்த ஓட்டத்தின் - அதன் காரணமாக நமது உடல் நலத்தினை வெகுவாகப் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்!

உடல் நலம் பேணுவோர் கவனத்தில் கொள்ளவேண்டிய நல்ல அறிவுரை!

முற்றும் துறந்தவர்களுக்கே கோபம் "சாபம்" எல்லாம் புராணங்களில் வராமலிருக்கிறதா?

முனிவர் என்ற பெயரேகூட கோபம் கொள்பவர் - முனிவு என்பதன் அடிப்படையால் தானே? மொழி வல்லுநர்கள் தீர்ப்புக் கூறட்டும்!

தனி வாழ்க்கையில் கோபப்படுவோர் கூட பொது வாழ்க்கையில் ஈடுபடும்போது கட்டாயம் கோபத்தை அடக்கியே ஆகவேண்டும் - பொது நலம் கருதி.

எனக்கே கூட இந்த கெட்டப்பழக்கம் வரும்; ஆனால் மின்னல் போல் உடனே மறைந்து விடும்.

உடனடியாக நான் நடந்து கொண்டது சரிதானா? என்ற கேள்வியையும் உள்மனம் கேட்டு ஒரு 'குட்டும்' வைக்கும்!

எனது வாழ்விணையர் என்னை இவ்வகை யில் பற்பல நேரங்களில் கண்டித்து நெறிப் படுத்துவார்; அப்படி இடித்துரைக்கும் நட்பு அனைவருக்குமே தேவை!

நியாயமான கோபம் மற்ற சக தோழர் களையோ, ஊழியர் களையோ, தவறு செய்வதிலிருந்து திருந்தாதவர்களையோ திருத்த தேவையானதுதான் என்பதையும் முழுமையாக மறுத்துவிட முடியாது!

இளமையில், மாணவப் பருவத்தில் பெற் றோரின் குறிப்பாக தந்தையின் கண்டிப்பு, படிக் கும்போது ஆசிரியர்களின் அந்தக் காலத்துப் பிரம்படி (இக்காலத்தில்தான் அது முடியாத ஒன்றாயிற்றே) நம்மை மிகவும் நல்வழிப்படுத்தும் வழிமுறைகளாகவே அமைந்ததை, பிற்காலத் தில் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் எண்ணி எண்ணி மகிழத்தானே செய்கிறோம்!

ஆனால் எந்தக் கோபத்தையும் நீடிக்கவிடக் கூடாது; நிலைத்து விட்டால் அது வன்மமாகி விடும். பழிக்குப் பழி என்ற மிருக உணர்ச்சிக்கு மனிதர்கள் ஆளாகி, கூலிப்படையைத் தேடு கிறார்கள், தன் ரத்த உறவுகளை, கொள்கை உறவுகளையே கூட பலிகடாவாக்கி பிறகு தண்ட னைக்காளாகி அழுவதன் பலன்தான் என்ன?

எனவே கோபப்படுதலும் சிற்சில நேரங்களில் தேவைதான் - ஆனால் அது எல்லைதாண்டி விடாமல் - நயத்தக்க நாகரிகத்தில் நின்று விடுவது நல்லது - நம் இதயத்திற்கும் நட்பிற்கும்! இல்லையா?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...