Showing posts with label - குடந்தை கருணா. Show all posts
Showing posts with label - குடந்தை கருணா. Show all posts

Thursday, November 26, 2015

உலகத்தில் எங்கேனும் கேட்டதுண்டா?



- குடந்தை கருணா
தலைவர் தொண்டர்களைப் பார்த்து சொல்கிறார்: நான் சிறைப்படுத்தப்பட்டு விட்டேன் என்பதாலேயோ, அல்லது பொதுமக்கள் என்கிற எண்ணத்தால் அதைத் தடுக்க அரசாங்கத்தார் ஏராள மான மக்களைக் கைதுசெய்து விட்டார் கள் என்ற எண்ணத்தாலேயோ, புதிய சட்டத்தின்படி நீண்ட நாள் தண்டிக்க நேரிடும் என்ற அச்சத்தினாலேயோ  யாரும் அதாவது கொளுத்தவேண்டி யது அவசியம்தான் என்று கருதுகிறவர் கள், எந்தவிதமான தயக்கமும் இல்லா மல், அரசமைப்புச் சட்டத்திலிருந்து பொறுக்கி எடுத்துப் போட்டிருக்கிற, நமக்குக் கேடான நாலைந்து பிரிவு களைக்கொண்ட பிரசுரத் தொகுப்பைக் கொளுத்தியே தீர வேண்டியது முக் கியமான காரியம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறை வேற்ற பெயர் கொடுங்கள், என்கிறார்.
சட்டத்தை எரித்தால் மூன்றாண்டு கடுங்காவல் என தெரிந்தும் பத்தாயிரத் திற்கும் மேல் பெயர் கொடுக்கிறார்கள். சட்டத்தை எரித்து, மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கடும் சிறைவாசம் மூன்றாண்டுவரை அனுபவிக்கிறார்கள்.
யார் அந்த தலைவர்? அவர்தான் சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார்.
அவரின் பேச்சை, கட்டளையாக ஏற்று, பெரியார் இயக்கத்தினர் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கைதாகி தங் களை கடும் கஷ்டத்திற்கு ஆட்படுத்திக் கொள்கிறார்கள்.
சரி. எதற்காக இந்தப் போராட்டம்? சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப் புச் சட்டம் 26.1.1950 இல் நடைமுறைக்கு வருகிறது. இந்த சட்டத்தை பலரும் புகழ்பாடிக் கொண்டிருக்கையில், ஒரே ஒரு குரல் அதற்கு எதிர்ப்பு தெரிவிக் கிறது.
அரசமைப்புச் சட்டத்தை உருவாக் கிய ஆறு பேர்களில் நான்கு பேர் பார்ப்பனர்கள். இதை நிறைவேற்றிய அரசியல் நிர்ணயசபை என்பது வயது வந்தோரின் வாக்குரிமை பெறாதவர் களைக் கொண்டதாகும்.
இந்த சட்டத்தில் ஹிந்து மதத்திற்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது; ஹிந்து மதத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது; ஜாதியைக் காப்பாற்றத்தான் இடமிருக்கிறது. இதை எளிதில் திருத்தி யமைப்பதற்கும் ஜாதி ஒழிப்புக்காரருக்கு வசதியில்லை; வாய்ப்பும் இல்லை.
ஆதலால், ஜாதியை ஒழிக்க விரும்பு கிறவர்கள், இதை எரிப்பதன் மூலம் நம் எதிர்ப்பைக் காட்டிக்கொள்வதைத் தவிர, வேறு வழி என்ன? என பொட்டில் அடித்தாற்போல் மக்களைப் பார்த்துக் கேட்டார் பெரியார். பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் இந்தப் பிரிவுகளை அரசு நீக்க வேண்டும் என பதினைந்து நாள் கெடுவும் கொடுத்தார் பெரியார்.
விளைவு. ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியை வலியுறுத்தும் பிரிவை நீக்க வேண்டும் எனக் கூறி எரித்தனர்.
இந்தியாவில் எங்கேயும் நடைபெற் றிராத இத்தகைய போராட்டத்தை எந்த ஆண்டு, எந்த தேதியில் பெரியார் நடத்தினார். அவர் தேர்ந்தெடுத்த தேதி 1957 இல் நவம்பர் 26.
அது என்ன? நவம்பர் 26. ஆம். அன்று தான், அதாவது 26.11.1949 அன்று தான்,  பாபா சாகிப் அம்பேத்கர் தலை மையில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது. பின்னர் 26.1.1950 முதல் நாட்டில் நடைமுறைப்படுத்தப் பட்டது.
ஆக, எந்த நாளில் அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதோ, அதே நாளை தேர்ந்தெடுத்து, அந்த நாளில் மக்களை இழிவுபடுத்தும் பிரிவை மக்களைக் கொண்டு கொளுத் தும் நிலையை உருவாக்கினார்.
இன்று மறியல் செய்யும் கட்சியினர், அன்று மதியமோ அல்லது அதிகபட்சம் மாலையோ உறுதியாக விடுதலை கிடைத்துவிடும் என்ற ஒரே நம்பிக் கையில் கலந்து கொள்ளும் நிலையில், பெரியார் விடுத்த வேண்டுகோளை ஏற்று மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உச்சபட்சமாக மூன்றாண்டு கடும் தண்டனை விதிக்கப்பட்டனர். ஒருவர் கூட பிணையில் வரவில்லையே.
மாறாக, தண்டனையை நீதிமன்றம் கூறும் வேளையில், இவர்கள் கூற வேண்டியது என்ன தெரியுமா?
நான் ஜாதி ஒழிப்புக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால், என் எதிர்ப்பைக் காட்டிக்கொள்ளும் அறிகுறியாக இச் சட்டத்தை கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால், நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சி யுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
இப்படி ஓர் அறிக்கையை தண்ட னைப் பெற்ற அனைவரும் நீதிமன்றத் தில் கூறினர். தண்டனை பெற்றனர். சிலர் சிறையில் இறந்தனர்.
ஜாதி ஒழிப்புக்காக இந்திய வரலாற் றில் பெரியாரும் அவர்தம் இயக்கமும் நடத்திய போராட்டத்தைப் போல் எவரும் நடத்திடவும் இல்லை; இத்த கைய எண்ணிக்கையில் சிறைத் தண் டனை பெற்றதும் இல்லை; நீதிமன்றத் தில் துணிவுடன் அறிக்கை கொடுத்ததும் இல்லை.
இந்த பெருமை பெரியார் இயக்கத் திற்கு மட்டும்தான் உண்டு, தோழர்களே.
இதைப் படித்த சிலர் நினைக்கலாம். பாபாசாகிப் அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தை பெரியார் எதிர்த்தாரே என்று. அவர்களுக்கு ஓர் நற்செய்தி. ஆந்திர மாநில மசோதா பற்றிய விவாதம் மாநி லங்களவையில் நடைபெறுகிறது. 3.9.1953 அன்று அந்த விவாதத்தின் போது டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார்: சிலர் நான்தான் இந்த சட்டத்தை ஏற்படுத்தினேன் என்று சொல்கிறார்கள். நான்தான் அதை நெருப்பிலிட்டுப் பொசுக்குவதற்கும் முதன்மையானவனாக இருப்பேன்.  நான் அதை முற்றிலும் வெறுக்கிறேன், என்று கூறியவர் அம்பேத்கர்.
அம்பேத்கர் கூறியதை, நடை முறைப்படுத்தியவர் பெரியார்.
ஜாதி ஒழிப்புக்காக நடைபெற்ற போராட்டமும், அதில் தண்டனைப் பெற்றவர்களும் வரலாறாக இன்று இருக்கிறார்கள். அவர்களின் போராட் டத்திற்கான காரணம் இன்றும் உள்ளது. ஜாதி ஒழிப்புக்கான சட்ட மாற்றத்தை வென்றெடுக்க நாம் இந்த நவம்பர் 26 இல் சூளுரைப்போம். ஜாதி இழிவுதான் என்பதை உரக்கச் சொல்லுவோம்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, November 16, 2015

நம்புங்கள், நான் ரொம்ப நல்லவன்ங்க


- குடந்தை கருணா
‘தந்தி’ டிவியில் ஆயுத எழுத்து மற்றும் கேள்விக் கென்ன பதில் நிகழ்ச்சிகளில் நெறியாளராக பணி யாற்றும் ரங்கராஜ் பாண்டே, 13.11.2015 வெள்ளியன்று, சுப.வீரபாண்டியனின் கேள்விக்கு பதில் சொல்பவராக காட்சி அளித்தார்.
தமிழ் நாட்டில் உயிரும் உடலும் சொந்தம் என்று சொன்ன ரங்கராஜ், தன் பெயருக்குப் பின்னால் ஒட்டிய வால்  பாண்டேவிற்கு அளித்த விளக்கம் இருக்கிறதே, ஆகா என்ன சாமர்த்தியம். 1857-ல் நடந்த சிப்பாய் கலகத்தில் கலந்து கொண்ட மங்கல் பாண்டே என்ற பார்ப்பான் நினைவாக பாண்டே என்பதை மனதில் இருத்தி, பெயரில் சேர்த்துள்ளாராம். நாம் நம்பித்தான் ஆக வேண்டும். மங்கல் பாண்டே மீது அத்தகைய பக்தி இருந்தால், ரங்கராஜ் மங்கல் பாண்டே என்று தானே வைத்திருக்க வேண்டும். தமிழ் நாட்டில் கனகசுப்புரத்தினம் தன் பெயரை, பாரதியின் மீது கொண்ட மரியாதையால், பாரதிதாசன் என்று தானே வைத்துக் கொண்டார். ஆனால், இவர் பாண்டே என்று வைத்துக்கொண்டால், எப்படி மங்கல் பாண்டே நினைவு வரும். பாண்டே என் கிற பார்ப்பன ஜாதிப்பெயர்தான் அனைவருக்கும் வரும். இருந்தாலும், ரங்கராஜீக்கு மட்டும் மங்கல் பாண்டே நினைவுக்கு வருவார். இதெப்படி என்று கேட்கக்கூடாது.
ஏனென்றால், வருமானத்திற்கு அதிகமான சொத்து என்றால் சொத்துக்குவிப்பு என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஆங்கிலத்திலும், assets disproportionate case  என்று தான் எழுது கிறார்கள். ஆனால், ரங்கராஜ் பாண்டேவிற்கு மட்டும் அது சொத்து வழக்கு என்பதாகத் தான் அர்த்தமாம். யார் என்ன சொன்னாலும் மாற்றிக் கொள்ள மாட்டாராம்.
அடுத்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை பேட்டி கண்டபோது, அது பதிவு செய்யப்பட்டு, இன்னொரு நாள் ஒளி பரப்பப்பட்ட நிகழ்ச்சி. அந்த பேட்டியின் போது எந்த ஆதாரத்தையும் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் தெரிவிக்காமல், இவராக, ஒரு வீடியோவை அதுவும் முழுவதும் தவறான கருத்தை ஒளிபரப்பினார். பலரின் கண்டனத்துக்குப் பிறகு, தந்தி டிவி நிர்வாகம், திராவிடர் கழகத்தின் உண்மை கருத்தினை சில நாட்களுக்குப் பிறகு ஒளிபரப்பியது.  இது குறித்து, சுப.வீ. கேட்ட கேள்விக்கு, அறிவு நாணயத்தோடு ரங்கராஜ் பாண்டே பதில் தரவில்லை. மாறாக, தனக்குத் தெரிந்த கருத்தை பேட்டி எடுத்தவரிடமும் காட்டாமல் ஒளிபரப்பினாராம். அதற்கு மறுப்பு வந்தபோது அதையும் செய்தாராம்.
‘தி இந்து’ நாளிதழ், நூறாண்டுக்கும் மேலாக நடத்தப்படும் பத்திரிக்கை. 1987 ஆகஸ்டு 22-ஆம் தேதி திடீரென காஞ்சி மடத்திலிருந்து ஜெயேந்திர சரஸ்வதி மாயமானார். எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. மறு நாள் தி இந்து நாளேடு முதல் பக்கத்தில் Head of Kanchi Mutt missing  என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. காஞ்சி மடாதிபதியைக் காணோம் என்று செய்தி வெளியிட்டதற்காக பார்ப்பனர்களிடமிருந்து கண்டனக் கடிதங்கள் தி இந்து நாளிதழுக்கு வந் ததையடுத்து,  என்று தலைப்பிட்டதற்கு வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட்டது தி இந்து நாளிதழ். இத்தகைய மனப்பான்மையை ரங்கராஜ் பாண்டேவிடம் நாம் எதிர்பார்க்க முடியுமா? முடி யாது என்று பாண்டே தெளிவாக சொல்லிவிட்டார்.
பின் எதற்காக இந்த பேட்டி? தொலைக்காட்சி வரலாற்றில் புதிய முயற்சியா? அதெல்லாம் ஒரு வெங்காயமும் இல்லை. ரங்கராஜ் பாண்டே நெறியாளராக நடத்தும் நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க தான் ஒரு ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட மனிதராக இருப்பது நிகழ்ச்சி பார்க்கும் அனைத்து மக்களுக்கும் தெரிந்துவிட் டது. இதன் காரணமாக நிகழ்ச்சியின்மீது ஒரு மரியாதையும் இல்லை என்பதை நிர்வாகம் தெரிந்த கொண்டதன் விளைவுதான், இந்த மாதிரி ஒரு பேட்டியை எடுத்து, ரங்கராஜ் பாண்டே ரொம்ப நல்லவர்னு காட்ட நிர்வாகம் முனைந்துள்ளது.
ஆனால் எப்படி மெனக்கெட்டாலும், ஒரு திரைப்படத்தில் சொல்வார்களே, மண்டையில் இருக்கும் கொண்டையை மறைக்க முடியவில்லை என்று. அதைப்போல, ரங்கராஜ் தன்னை நல்ல வன்னு சொன்னாலும், பின்னால் இருக்கும் பாண்டே காட்டிக்கொடுத்துவிடுகிறது.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...