Showing posts with label கொத்தமங்கலம். Show all posts
Showing posts with label கொத்தமங்கலம். Show all posts

Thursday, June 22, 2017

கொத்தமங்கலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

கொத்தமங்கலம், ஜூன் 21- கொத்தமங்கலத்தில் தந்தை பெரியார் 138ஆவது பிறந்த நாள் திராவிடர் கழக பொதுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

17.6.2017 சனி மாலை 6 மணிக்கு சீரணி அரங்கு திட லில் அறந்தை கழக மாவட்டம் கொத்தமங்கலத்தில் திராவிடர் கழக சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை ஏற்று உரையாற்றினார். கிளைக்கழக அமைப்பாளர் இராமையன் அனைவரையும் வருக வருக என வரவேற்றார்.

தலைமை கழகப் பேச்சாளர் பெரியார் செல்வன் நீண்ட நேரம் தந்தை பெரியார் அவர் களின் அரிய கருத்துக்களை எடுத்து கம்பீரமாகப் பேசினார். திரளாக வருகை தந்திருந்த பொது மக்கள் கையொலி எழுப்பி வரவேற்றார்கள். கழ கப் பேச்சாளர் மாங்காடு மணி யரசன், புதுகை மண்டலத் தலைவர் இராவணன் ஆகி யோர் உரையாற்றினார்கள்.

அறந்தை மாவட்ட தலை வர் மாரிமுத்து, மாவட்ட செய லாளர் இளங்கோ, மாவட்ட துணைத் தலைவர் முத்து, மாவட்ட இளைஞரணி தலை வர் மகாராஜா, செயலாளர் வீரையா, ஒன்றிய தலைவர் சவுந்தர்ராசன், தி.குளம் ஒன் றிய தலைவர் தேவேந்திரன், பெரியார் பெருந்தொண்டர் இர ணியன், வடகாடு சின்னப்பா மற்றும் கழகத் தோழர்கள் திர ளாக வருகை தந்திருந்தார்கள். கழகத் தோழர் இராஜகுமார் நன்றி கூறினார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...