இன்னும் படிக்க வேண்டும் என்று 4ஆம்
வகுப்பு தேர்வையெழுதி தேர்ச்சி பெற்றவரும், குடியரசுத் தலைவரிடம் "பெண்கள்
சக்தி"க்கான விருதைப் பெற்றுள்ளவருமான 98 வயதான கார்த்தியானி தனது
விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வயது முதிர்ந்தவர்கள் தேர்வை எழுதி வெற்றி
பெற்று வருவது கேரளாவில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் 105 வயதான பாட்டி
பகீரதி அம்மாள் 4ஆம் வகுப்புத் தேர்வை மாநில அறிவொளி இயக்கத்தின் சார்பாகப்
பயிற்சி பெற்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் மற்ற பெண்களுக்கும் ஊக்கம்
அளித்ததற்காக பாட்டி கார்த்தியானிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
"பெண்கள் சக்தி" விருதை வழங்கி கவுரவித்தார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பாக ஆண்டுதோறும் "பெண்கள் சக்தி" விருது வழங்கப்படுகிறது.
பெண்களுக்கு ஊக்கமாக இருப்பவர்களுக்கு,
அவர்களை ஆற்றல் படுத்துவோருக்கு ஆண்டுதோறும் பெண்கள் தினமான மார்ச் 8ஆம்
தேதியையொட்டி குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். 'இன்னும் படிக்க வேண்டும்'
என்பது 4ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 98 வயது பாட்டி விருப்பம்!!
No comments:
Post a Comment