Showing posts with label பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் வரும் 31ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. Show all posts
Showing posts with label பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் வரும் 31ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. Show all posts

Friday, August 25, 2017

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் வரும் 31ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது: இஸ்ரோ தகவல்


சென்னை, ஆக. 24- கடல்சார் ஆராய்ச்சிக்காக அய்.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண் வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம்(இஸ்ரோ) முடிவு செய் தது. அதன்படி ஏற்கெனவே 7 செயற்கைகோள்களை திட்ட மிட்டப்படி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடையவிருப் பதை தொடர்ந்து, புதிதாக அய்.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.
இதனை ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் 31ஆம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட் டுள்ளது.
320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப்பப்படும் அய்.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் இந்தியாவி லேயே வடிவமைக்கப்பட்டுள் ளது. பூமியில் இருந்து குறைந்த பட்சம் 284 கிலோ மீட்டர் உய ரத்திலும், அதிகபட்சம் 20 ஆயி ரத்து 657 கிலோ மீட்டர் உயரத் திலும் நிலை நிறுத்தப்படுகிறது.

இதன்மூலம் இயற்கைச் சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். ராக் கெட்டை ஏவுவதற்கான பணி களில் தீவிரமாக இறங்கியிருப் பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...