Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Friday, February 13, 2015

காதலர் தினத்தை ஆதரிப்போம்- திராவிடர் கழக மாணவரணி அழைப்பு

காதலர் தினத்தை ஆதரிப்போம்!
 
பாசிஸ்டுகளின் எதிர்ப்பை முறியடிப்போம்!
 
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் திராவிடர் கழக மாணவரணி அழைப்பு



மனித இனத்தின் இயற்கை உணர்வான காதல் என்பது, இரு தனி மனிதர்களுக்கிடையிலான அன்புப் பரிமாற்றமாக மட்டுமில்லாமல், இந்தியாவைப் பொறுத்தளவில் ஜாதி, மதம் போன்ற அடிப்படைவாதத்தைத் தகர்க்கும் மனித நேயக் கருவியாகத் திகழ்கிறது. 

இதனாலேயே ஜாதி-மதங்களைக் காப்பாற்ற நினைக்கும் ஜாதீயவாதிகளும் மதவாதிகளும், பாசிஸ்டுகளும் மதத்தின் பெயராலும் கலாச்சாரத்தின் பெயராலும் காதலர் தினத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு ஆங்காங்கே வன்முறையிலும், அருவருக்கத்தக்க செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோம் என்று வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும் அளவுக்கு அறிவிப்பு விடுக்கும் அசட்டுத் துணிவை இன்றைய சூழ்நிலை அவர்களுக்குத் தந்திருக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தான போக்காகும். மனிதநேயத்தில் அக்கறை கொண்டோரும், சமூக நல்லிணக்கத்திலும், சமூக அமைதியிலும் பற்றுக் கொண்டோரும் இந்தப் போக்கைக் கண்டிக்க முன்வரவேண்டும்.

காதலர் தினத்தை எதிர்ப்பதாகக் கூறி நடக்கும் இத்தகைய பாசிச வன்முறைப் போக்குக்கு, முற்போக்கு இயக்கங்களும், கல்லூரி மாணவர் அமைப்புகளும், அமைப்புகளைச் சாராத பல்வேறு கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும்.

 காதலர்கள் மீதான வன்முறைகளிலிருந்து அவர்களைக்  காப்பதற்கான முயற்சிகளிலும், அத்தகைய வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் மனிதநேயமும் சமூக அக்கறையும் கொண்டோர்,  மாணவர்கள், இளைஞர்கள்  ஒன்றிணைந்து ஈடுபடவேண்டும் என்று திராவிடர் கழக மாணவரணி அழைப்பு விடுக்கிறது.

இந்த உணர்வோடு தங்களைப் பதிவு செய்துகொள்ளவிரும்புவோர் 9176757084, 8807541920  என்ற எண்களில், அல்லது savelove.tn@gmail.com    என்ற மின்னஞ்சலில் தங்களது பெயரைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
மாநில செயலாளர்
9444210999
த.சீ.இளந்திரையன்
மாநில இணைச் செயலாளர்
9750134599

த.அஜிதன்
மாநில துணைச் செயலாளர்
9789775497



Friday, January 30, 2015

சென்னை பன்னாட்டு ஆவணப்பட,குறும்படத் திருவிழா 2015

சென்னை பெரியார் திடலில்  மூன்றாவது சென்னை பன்னாட்டு
ஆவணப்பட,குறும்படத் திருவிழா 2015

ஜன.30, 31, பிப்.1 ஆகிய மூன்று நாள்கள் பெரியார் திடலில் திரையிடப்பட உள்ள குறும்படம் மற்றும் ஆவணப்படங்கள்

https://www.facebook.com/events/786526551430828/786692201414263/?comment_id=786927208057429&notif_t=event_mall_comment
நாள்: 30, 31 ஜனவரி, 01 பிப்ரவரி 2015

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல் சென்னை-7

தொடங்கி வைப்பவர்: ஊடகவியலாளர், எழுத்தாளர் ஜெயராணி

30.01.2015 வெள்ளிக்கிழமை 10.30 மணி: 

டேம்ட்  Dammed (இந்தி) அணைகுறித்த ஆவணப்படம்./2013/

இயக்கம்: நந்தன் சக்சேனா, கவிதா பஹல்

நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணையால் பாதிக்கப்பட்ட மத்தியப்பிரதேசத்தில் உள்ள கிராமத்தினருக்கு மறுவாழ்வோ, இழப்பீடோ  அளிக்க முன்வரவில்லை. வளர்ச்சிக்கான முன்னுதாரணமானவையாக இருக்கும்  மாபெரும் அணைகள் கட்டப்படுவதில் உள்ள சிக்கல்கள் குறித்த ஆவணப்படம் /64 நிமிடங்கள்/

11.45 மணி:

கோத்ரா டாக்  பயங்கரவாதத்தின் முன்னோட்டம் Godhra Tak: the Terror Trail
(ஆங்கிலம்) ஆதாரங்களைக்கொண்டுள்ள குஜராத் கலவரம்குறித்த புலனாய்வு ஆவணப்படம்/2003/ இயக்கம்: சுப்ரதீப் சக்ரவர்த்தி

குஜராத் கோத்ரா ரயில் நிலையத்தில் 27.02.2002 அன்று  சபர்மதி விரைவுத் தொடர்வண்டியின் எஸ்-6 பெட்டி தீக்கிரையாக்கப்பட்டபோது கரசேவகர்கள் உள்பட 59 பயணிகள் உயிரிழந்தனர். அந்த  காட்டுமிராண்டி சம்பவம் குறித்த புலனாய்வு ஆவணப்படம். /62 நிமிடங்கள்/

1.00 மணி : உணவு இடைவேளை

2.00 மணி: திரைப்படப்பிரிவு வழங்கும் படங்கள்

அய் ஆம் டிவென்ட்டி I AM TWENTY   (ஆங்கிலம், இந்தி-கருப்பு வெள்ளை) 

இயக்கம்: எஸ்.என்.எஸ். சாஸ்திரி

இந்தியாவின் சுதந்தரமடைந்த 20ஆண்டுகளுக்கு பின்னர், நாடுமுழுவதும் பயணம்செய்து, 1947ஆம் ஆண்டில் பிறந்த 20 வயதுள்ள இளைஞர்களிடம் பேட்டி. சுதந்திரம்  என்பதன் பொருள் என்ன? அவர்களின் கனவு என்ன?  இளம் தேசத்தை அவர்கள் எதன் சின்னமாகக் காண்கிறார்கள்? அவர்களின் பதில்கள் தத்துவார்த்தம், உறுதி, நகைச்சுவை, அச்சம், எச்சரிக்கை உணர்வு, நம்பிக்கை மனப்பான்மை என பலவற்றின் கலவையாக இருந்தன. 40 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த எண்ணங்களின் பதிவாக உள்ள இப்படம் இந்த காலக்கட்டத்துக்கு பொருத்தமானதாகவும் இருக்கிறது. /20 நிமிடங்கள்/

இந்தியா 67/இந்தியருக்கான நாள் INDIA 67 / AN INDIAN DAY இசைவடிவம் 
வண்ணத்தில் 1967 /58 நிமிடங்கள்/ இயக்கம்: எஸ். சுக்தேவ்
இயக்குநர் சுக்தேவ் அவர் அரசின் திரைப்படப்பிரிவில் பணியாற்றியவர்.
நீண்ட காலமாகவே பிரச்சாரத்திலிருந்து அகற்றப்பட்ட படம்.

இந்தியா 67 இந்திய சுதந்திரம் அடைந்த 20 ஆண்டினைக் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

பிற்பகல் 3.30 மணி:

பிந்டோ Binto (பிரெஞ்சு, ஜெர்மனி) /64 நிமிடங்கள்/

இயக்கம்: சீமோன் கத்தரினா கவுல் புர்கினோ ஃபாசோவிலிருந்து புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பவராக கனவுடன் உள்ளவர் பிந்டோ. ஆனால், குழந்தைகள் இல்லத்தில் உள்ள தன் குழந்தைக்கான பொறுப்புகளை ஏற்றதால் ஏற்ற இறக்கங்களை அடைவதை உணர்த்தும் குறும்படம்.

4.30

லா பார்காLa parka (ஸ்பானிஷ், மெக்சிகோ) /29 நிமிடங்கள்/2013 இயக்கம்: கபிரியேல் செர்ரா

25 ஆண்டுகளாக பலிபீடத்தில் பணியாற்றிவருபவர் எஃப்ரெயின்.  சாவைப்பற்றி நன்கு உணர்ந்த அவர் வாழ்வுக்காக போராடுவதை விளக்கும் குறும்படம்.
----------------------
31.1.2015 - சனிக்கிழமை
காலை 10 மணி:

என்கவுண்டர்ட் ஆன் சஃப்ரான் அஜெண்டா 'Encountered on Saffron Agenda? (ஆங்கிலம்) ஆவணப்படம் 90 நிமிடங்கள்/2008 இயக்கம்: சுப்ரதீப் சக்ரவர்த்தி
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற / 22.10.2002 அன்று  சமீர்கான் பதான், 13.01.2003 அன்று சாதிக் ஜமால், 16.06.2004 அன்று இஷ்ரத் ஜகான்-ஜாவீத் ஷெயிக்  மற்றும் 26.11.2005 அன்று சொராபுத்தீன் ஷெயிக்/  என்கவுண்டர்கள்குறித்த புலனாய்வை அடிப்படையாகக் கொண்டுள்ள ஆவணப்படம்.
 
பகல் 12 மணி: பத்மினி மை லவ் Padmini My Love (மராத்தி, இந்தி) ஆவணப்படம்.19.30 நிமிடங்கள்(2014)

இயக்கம்: முன்முன் தலாரியா மற்றும் சிலர்
மும்பையின் சின்னமாக  உள்ள பத்மினி ஃபியட் கார் வாடகைக்கார்கள் எதிர்கொள்ளும அச்சுறுத்தல்கள்குறித்த ஆவணப்படம்

12.20 மணி: கான்ட் ஹைட் மி CAN’T HIDE ME (இந்தி, ஆங்கிலம், கன்னடம்) ஆவணப்படம் 26 நிமிடங்கள்(2014) இயக்கம்: மாதுரி மொகிந்தர்

பார்வதி, மல்லிகா மற்றும் ஹீனா ஒருவரை ஒருவர் சந்தித்தது கிடையாது. எண்ணிப்பார்க்க முடியாத அளவில் பொதுவான ஒரே கருத்தையே பிரதிபலித்துள்ளனர்.

பெண்களுக்கான உரிமைகளை மீட்பதில் அதிகஅக்கறையுடன் பெண்கள் சுதந்திரத்தைத் தக்கவைப்பதற்கு தொடர்ச்சியாக கண்ணுக்குத் தெரியாத தடுப்புகளுக்கு எதிராக போராடி உள்ளனர்.

2.00 மணி: அவுட் ஆப் கோர்ட் செட்டில்மண்ட் Out of Court Settlement(ஆங்கிலம்) ஆவணப்படம் 66 நிமிடங்கள் (2012) இயக்கம்: சுப்ரதீப் சக்ரவர்த்தி

தாக்குதல் மற்றும் கொலைகளை அடிப்படையாகக் கொண்டுள்ள கதை. மிகுந்த அச்சுறுத்தல்களுக்கிடையே வழக்குரைஞர்கள்  நாடுமுழுவதும் உள்ள பயங்கரவாத வழக்குகளில் ஆஜராவது குறித்த ஆவணப்படம்.

3.30 மணி:  திரைப்படப்பிரிவு படங்கள்

டில்லி டாலியிங் DILLY DALLYING (ஆங்கிலம்) கருப்பு வெள்ளை, 10
நிமிடங்கள்(1957) இயக்கம்: கே.எல்.காந்த்பூர்

மும்பை மாநகர் சூழல், நாட்டுக்கு சேவைஆற்றுவதில் ஒவ்வொருவரின் காலம் தவறாமை, செயல்களை தள்ளிப்போடுதல், முடிவெடுப்பதில் தாமதப்படுத்தல் ஆகிய பழக்கங்கள் பெரிய அளவில் சமுதாயத்தை சீரழிக்கும் என்பதை எடுத்துக்காட்டும் குறும்படம்.

அவர் நேஷனல் ஆன்தெம்/ஹமாரா ராஷ்டிரகான் OUR NATIONAL ANTHEM / HAMARA RASHTRAGAN (இந்தி)10 நிமிடங்கள் (1964)

இயக்கம்: பிரமோத் பட்டி

தேசிய கீதத்தை சரியான முறையில் பாடுவதற்கு குழந்தைகளுக்கு வழிகாட்டும் அனிமேஷன் படம்.

கிளாக்ஸ்ப்லோஷன் CLAXPLOSION (கருப்பு வெள்ளை) கருப்பு வெள்ளை, 2 நிமிடங்கள்(1968)

இயக்கம்: பிரமோத் பட்டி

குடும்ப கட்டுப்பாடு குறித்த அனிமேஷன் படம்

ஸ்டின்கிங் ஸ்டோரி STINKING STORY (இந்தி, ஆங்கிலம்) கருப்பு வெள்ளை, 16 நிமிடங்கள்(1980) இயக்கம்: லோக்சென் லால்வானி

மாநகரங்கள்: வானை முட்டும் உயர்ந்த கட்டடங்கள், திரை அரங்குகள், அய்ந்து நட்சத்திர விடுதிகள், குதிரை பந்தயம், பெட்ரோல் நிலையங்கள், குறைந்த அளவில் பொது கழிப்பிடங்கள், அங்கிங்கெனாதபடி எங்குபார்த்தாலும் நாகரிகமற்ற, சுகாதாரக் கேடுகள் குறித்து எச்சரிக்கும் ஆவணப்படம்.

வாய்ஸ் ஆப் தி பீப்பிள் VOICE OF THE PEOPLE (ஆங்கிலம்,  ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் இந்தி, குஜராத்தி, மராத்தி மற்றும் பெங்காலி) கருப்பு வெள்ளை, 17 நிமிடங்கள்(1974)
 
இயக்கம்: எஸ்.சுக்தேவ்

16.04.1974 காலக்கட்டத்தில் அகில இந்திய அளவில் ரயில்வே வேலை நிறுத்தம் குறித்து கவலைப்பட்ட சுக்தேவ், கேமராவை மக்களை நோக்கிக் கொண்டு சென்றார்.

தொழிலாளர் களுக் கான பேட்டிகள்,  சராசரி பயணிகளின் பேட்டிகள் ஆகியவை களைப் பதிவு செய்துள்ள படம். அரசுக்கு ஆதரவாகவும், வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு எதிராக மக்கள் உள்ளதாக கூறுவதாகவும் உள்ள படம்., தொழிலாளர்களின் தலைவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இப்படம் குறித்து கூறுகையில் படத்தில் குறிப்பிடும்படியாக ஒன்றும் இல்லை என்றார்
--------------------
1.2.2015 - ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணி:

ஆஃப்டர் தி ஸ்டோர்ம் After the Storm (ஆங்கிலம்) 68 நிமிடங்கள்(2012) ஆவணப்படம் இயக்கம்: சுப்ரதீப் சக்ரவர்த்தி

பயங்கரவாத குற்றச்சாற்றுகளில் பல்வேறு நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளைக்கடந்து விடுதலை பெற்ற ஏழு பேரின் சோதனைகள்,வேதனைகள் மற்றும் இருள்சூழ்ந்த வாழ்க்கைப் போராட்டம்குறித்த ஆவணப்படம்

11.30 மணி:

திரைப்படப்பிரிவு படங்கள்

சிம்பள் ஆப் ப்ராக்ரஸ் SYMBOL OF PROGRESS (ஆங்கிலம்) கருப்பு, வெள்ளை, 14 நிமிடங்கள்(1965) இயக்கம்: என்.எஸ்.தாப்பா

பஞ்சாப்பில் பெரிய ஏரிகள் நீரின்றி வறண்ட நிலங்களாக இருப்பதை மாற்றிய, மாபெரும் சின்னமாக உள்ள பக்ராநங்கல் அணையின் பொறியியல் திறன், இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள், இரண்டரை மில்லியன் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி, பெரிய அளவில் உள்கட்டமைப்பு கொண்ட நாடாக உயர்த்துவது குறித்து விளக்கும் ஆவணப்படம்

விவித் பார்தி VIVIDH BHARTI (இந்தி) கருப்பு வெள்ளை, 14 நிமிடங்கள்(1965)
 
இயக்கம்: அமர் வர்மா

அகில இந்திய வானொலியின் புகழ்பெற்ற விளம்பர ஒலிபரப்பு விவித பாரதி வானொலி ஒலிரப்பு குறித்த படம். பொழுதுபோக்கில் பிரபலமாக இருந்த இலங்கை வானொலிக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் உருவான ஒலிபரப்பு. நாடகங்கள், மெல்லிசை, திரைப்படப்பாடல்கள் மற்றும் பல தரப்பட்ட வயதிலும் உள்ள நேயர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கொண்ட வானொலி ஒலிபரப்பாகிய விவித பாரதி குறித்த ஆவணப்படம்.

எ டெகேட் ஆப் அச்சீவ்மெண்ட் A DECADE OF ACHIEVEMENT (ஆங்கிலம்) கருப்பு வெள்ளை 22 நிமிடங்கள் (1976) 

இயக்கம்: எஸ்.என்.எஸ் சாஸ்திரி

1966முதல் 1976வரையிலான ஒரு தலைமுறையில் பத்தாண்டுகளில் இந்தியா அடைந்த முன்னேற்றங்கள், முக்கியமான 20 தலைப்புகளில் நெருக்கடிக்காலத்தில் மக்களின் கருத்துகள் ஆகியவைகளைக் கொண்டுள்ள படம்.

ஆக்சுவல் எக்ஸ்பீரியன்ஸ் நெ.4 ACTUAL EXPERIENCE NO. 4 (ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, குஜராத்தி மற்றும் மராத்தி ஆங்கில துணைத்தலைப்புகளுடன்) கருப்பு வெள்ளை, 14 நிமிடங்கள்(1969) இயக்கம்: ஓ.பி.அரோரா

குடும்பக் கட்டுப்பாட்டில் லூப் கருவி பயன்பாடு குறித்து நாடெங்கும் உள்ள பெண்களின் பேட்டி முரண்பாடாக உள்ள முறை, மருத்துவ சிக்கல்களைக் கொண்டதாக இருந்துள்ளது.

இப்படியான கருத்தைக்கொண்டுள்ள படமாக இருந்த மையால், வெளியாகும்போதே குறிப்பிட்ட காலத்தில் முடங்கிப்போனது.

12.45 மணி: எ டரஸ் Tres Pesos (ஸ்பானிஷ், மெக்சிகோ) 19.59 நிமிடங்கள்(2013)

இயக்கம்: ரொசாலி ஹப்பிள்

மெக்சிகோ மாநகரில் சாதாரண நாள்களில் சுரங்கப் பாதையின் கதவுகள் மூடப்படுவதும், திறக்கப்பதும் அன்றாடப்பணிகள் காட்சியிலும் இடம்பெற்றுள்ளது. பகல் 1.00 மணி: உணவு இடைவேளை

2.00 மணி: இன் தினோ முசாபர்நகர் En Dino Muzaffarnagar (ஆங்கிலம்) 2மணி, 27 நிமிடங்கள்(2014) ஆவணப்படம்

இயக்கம்: சுப்ரதீப் சக்ரவர்த்தி

ஒரு காலத்தில் அன்பின் நகரமாக இருந்த முசாபர் நகர். செப்டம்பர் 2013 கலவர நகராக மாறிவிட்டது.

இன் தினோ முசாபர்நகர் (இன்றைய முசாபர்நகர்) கலவரத்துக்கு முந்தைய நிலை, கலவர காலம் மற்றும் கலவரத்துக்கு பின்பு ஏற்பட்டுள்ள சூழல்கள் ஆகியவைகளை விளக்கும் படம்.

 கடந்த ஆண்டு நடைபெற்ற முசாபர்சகர் கலவரத்தை அடுத்த அரசியல் வெறுப்புணர்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டது.அரசியல் வாதிகள் சுய லாபத்துக்காக கலவரத்தின்மூலம் பிரித்து தேர்தலுக்காக கலவரத்தை ஏற்படுத்தியதுகுறித்து விளக்கும் படம்.

ஒருங்கிணைப்பு: பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை, மறுபக்கம், பனுவல் புத்தக நிலையம், டிஸ்கவரி புத்தக நிலையம், சென்னை பல்கலைக் கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை, இந்திய அரசின் திரைப்படப் பிரிவு

25-ஆம் தேதி முதல் 1-ஆம் தேதிவரை பிற ஒருங்கிணைப் பாளர்களின் நிகழ்விடங்களிலும் திரையிடல் நடைபெறும்.

விழா ஒருங்கிணைப்பாளர்: ஆர்.பி.அமுதன்

மேலும் விவரங்களுக்கு: chennaifilmfestival.blogspot.in

தொடர்புகளுக்கு: 9944533400, 9952563431

Wednesday, January 9, 2013

பெரியார்திரை குறும்படப்போட்டி


போட்டிக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: ஜனவரி 20, 2013

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நான்காம் ஆண்டாக நடத்தும்  பெரியார் திரை குறும்படப் போட்டிக்காக குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

போட்டிக்கான விதிமுறைகள்: 

1. பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப்  பிரதிபலிப்பதாக குறும்படம் இருத்தல் வேண்டும்.

2. குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் (Subtitle)  இருப்பின் நலம். தரமான DVD அல்லது CD வடிவில் குறும்படத்தின் இரண்டு பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.

3. ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களையும் போட்டிக்கு அனுப்பலாம். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

4. இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், ஏற்கெனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விவரமும் இணைத்து அனுப்பப்பட வேண்டும். 

5. குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Photos)   மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவை வரவேற்கப்படுகின்றன. 

6. போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான ஒப்புதல் கடிதம் படத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். (அல்லது) போட்டிக்காக குறும்படத்தை அனுப்புகிறவர் எந்த உரிமையில் அதனை அனுப்புகிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

7. போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் அனைத்தும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை நடத்தும் திரையிடல் நிகழ்வுகளில் திரையிடப்படும்.

8. குறும்படங்கள் 2010-2012 ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.

9. தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

10. போட்டி முடிவுகள் விடுதலை, உண்மை இதழ்களிலும் பிற நாளிதழ்களிலும் செய்தியாக 2013 ஜனவரி இறுதியில் வெளியிடப்படும். 

11. ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

12. தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.

13. விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை www.viduthalai.in, www.periyarthirai.blogspot.com  ஆகியவற்றில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

14. போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை.

15. போட்டிக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: ஜனவரி 20, 2013


முதல் பரிசு: ரூ.10,000
இரண்டாம் பரிசு: ரூ. 5,000
மூன்றாம் பரிசு: ரூ. 3,000


மேலும் தொடர்புகளுக்கு:

செல்பேசி: 9444210999, 9940489230


periyarthirai@gmail.com




அனுப்ப வேண்டிய முகவரி:

அமைப்பாளர்,
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை,

பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, 
வேப்பேரி, சென்னை-7




படைப்புலகம் என்பது இன்று காட்சி வடிவிலானதாக மாறியிருக்கிற சூழலில், இளைஞர்களிடமும், முற்போக்குச் சிந்தனையாளர்களிடமும் அதற்கான ஆர்வமும், முனைப்பும் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின் வெகு சாதாரணமான நகரங்களிலும், கிராமங்களிலும் கூட குறும்படம் மற்றும் ஆவணப்படங்கள் குறித்த விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது. அவற்றில் முற்போக்குப் சிந்தனைகளையுடைய குறும்படங்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது.

ஜாதி - மத ஒழிப்பு, பெண்ணுரிமை, பகுத்தறிவு உள்ளிட்ட தலைப்புகளில் எடுக்கப்படும் குறும்படங்களின் படைப்பாளிகள் பிற்காலத்தில் நல்ல பல படைப்புகளை கொள்கை உணர்வோடு தரவல்லவர்களாக இருக்கிறார்கள். 

தங்களின் சொந்த முயற்சியில் படைப்பை வெளிக்கொண்டு வரும் அவர்களுக்கு, திரையிடல் வாய்ப்புகளை வழங்கி ஊக்கம் அளிக்கவும், அவர்களை ஆற்றுப்படுத்தி,  திரைத் துறையில் ஏற்கெனவே இயங்கி வரும் படைப்பாளிகளோடு இணைப்பை ஏற்படுத்தித் தந்து புதிய இளைய தலைமுறை படைப்பு வட்டத்தை உருவாக்கிடவும் சரியானதொரு களம் தேவைப்பட்டு வந்தது. அந்தத் தேவையை நிறைவு செய்யும் விதமாகத்தான் கடந்த 8.11.2008 அன்று பெரியார் திடலில் மணியம்மையார் அரங்கில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் சீரிய சிந்தனையில் தோன்றி, அதை செயல்படுத்த, அவரே தலைமையேற்று, பாவலர் அறிவுமதி முன்னிலையில் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை தொடங்கப்பட்டது.

 கடந்த நான்காண்டுகளில் சென்னை பெரியார் திடலில் மட்டும் 55திரையிடல்கள் நிகழ்த்தப்பட்டன.

 இவற்றில் 67 குறும்படங்களும், 19 ஆவணப்படங்களும் திரையிடப்பட்டுள்ளன. இது தவிர, வட சென்னை, குற்றாலம், காட்டாங்குளத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாம்களிலும்,  திருச்சி, மதுரை, பொன்னமராவதி, காரைக்குடி போன்ற நகரங்களிலும் திரையிடல்கள் நிகழ்த்தப் பெற்றுள்ளன. மேலும் ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம், குறும்பட வெளியீடு, பெரியாரியல் பரப்பும் புதிய குறும்படங்கள் தயாரிப்பு என இதன் பரப்பும் விரிந்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களின் திரையிடல்களுக்கு படைப்பாளிகளை அறிமுகப்படுத்தி அவர்களின் படங்களுக்குரிய அங்கீகாரம் பெற்றுத் தருதல் என இதன் செயல்பாடு தொடர்கிறது.

தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறையைத் தொடங்கிடவும், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அளவில் குறும்பட ஆவணப்படப் போட்டிகள் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்தகைய முயற்சியின் பயனாகக் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற பெரியார் திரை குறும்படப் போட்டியில் 150-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அனைவரின் வரவேற்பையும் பெற்ற யோசி சிறந்த குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசான ரூ.10000 மற்றும் பெரியார் திரை குறும்பட விருது 2011யும் பெற்றது. இனி ஒருவிதி செய்வோம், பேரன், துவந்த யுத்தம் ஆகியவை முறையே இரண்டாம் (ரூ.5000), மூன்றாம் (ரூ.3000) மற்றும் சிறப்புப் பரிசுகள் (ரூ.1000) பெற்றன. அதன் தொடர்ச்சியே இவ்வாண்டும் அறிவிக்கப்பட்டுள்ள 2012-ஆம் ஆண்டுக்கான பெரியார் திரை குறும்படப் போட்டி  ஆகும்.

மாதந்தோறும் நடைபெறவுள்ள திரையிடல்களுக்கும் தங்கள் படைப்புகளை அனுப்பி, உலகின் பார்வைக்கு வைக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பை நம் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திரையிடலும் அதனைத் தொடர்ந்து படைப்பாளியுடன் கலந்துரையாடலும் நிகழும். திரையிடல் என்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஊடகங்களுக்கும் இளைஞர்களைத் தயாரிக்கும் பரந்த நோக்கோடும் இம்முயற்சி நடைபெற்று வருகிறது.




Saturday, January 14, 2012

சென்னை பெரியார் திடலில் மூன்று நாள்கள் தை-1தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா! அறிஞர் பெருமக்கள் கலையுலக பெருமக்கள் பங்கேற்கின்றனர்


சென்னை, ஜன 14- தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் சென்னையில் மூன்று நாட்கள் தமிழ்புத்தாண்டு பொங்கல் விழா, பண்பாட்டு படையெடுப்பை முறியடிக்கும் வகையில் திராவிட இனம் எழுச்சி பெறும் உறுதிமிக்க திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
சென்னை பெரியார் திடலில் தை 1,2,3 (ஜனவரி 15,16,17) ஆகிய மூன்று நாள்கள் திராவிடர் திருநாளாக  வெகு சிறப்பாக நடைபெற உள்ள இந்நிகழ்வில் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, கட்டை ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய மிக்க கலை நிகழ்ச்சிகளும், தமிழர்களின் பாரம்பரிய பல்சுவை உணவு விற்பனைக் கண்காட்சியும் நடைபெறு கின்றன.
பாரம்பரியப் பல்சுவை உணவுகளான சுடசுட எண்ணெயில் பொரித்து வழங்கப்படும் அசல் மணப்பாறை முறுக்கு முதல், திருவில்லிபுத்தூர் தித்திக்கும் அருமையான பால்கோவா, வாயில் போட்டவுடன் வழுக்கிச் செல்லும் திருநெல்வேலி அல்வா, உலகப் புகழ்பெற்ற விருதுநகர் வீச்சுப் புரோட்டாவும், திண்டுக்கல் சிறுமலைப் பழத்துடன் இன்னும் ஏராளமாய்ச் சுவைக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல்நாள் விழா
15.1.2012 அன்று மாலை நடைபெறும் விழாவில் கருங்குயில் கணேஷ் குழுவினரின் கிராமியக் கலை, டி.கே.எஸ்.கலைவாணன் குழுவினரின் ஏன் தமிழ் புத்தாண்டு? கிராமிய இசை மற்றும் திருச்சி கலைக் குழுவினரின் மார்கழியின் உச்சியில் மலரட்டும் தை ஒலி-ஒளி நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகின்றன.
இரண்டாம் நாள் விழா
16.1.2012 அன்று மாலை நடைபெறும் விழாவில்  திருத்தணி பன்னீர்செல்வம் அவர்களின் தனி ஆவர்த்தனம், திண்டுக்கல் சரவணன் மற்றும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்கள் பங்கேற்கும்    நகைச்சுவை நிகழ்ச்சி, மற்றும் தை -1 தமிழ் புத்தாண்டு விளக்க கருத்தரங்கம் ஆகியவை நடைபெறுகின்றன.
மூன்றாம் நாள் நிகழ்ச்சி
17.1.2012 அன்று மாலை நடைபெறும் விழாவில்   தஞ்சை செல்வி கலைக் குழுவின் கிராமியத் திரைஇசை நிகழ்ச்சியும் கருங்குயில் கணேஷ் குழுவினரின் கிராமியக் கலை நிகழ்ச்சியும்  நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தொழிலதிபர் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்து பெருமக்கள் தேர்வு செய்யப்பட்டு, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் வழங்கப்படும் பெரியார் விருது, சாதனையாளர் விருது  இவ்வாண்டு மூன்று நாள்களிலும் வழங்கப்படுகின்றது.
முக்கிய பிரமுகர்கள்
இம்மூன்று நாள் விழாவிலும் நடிகர்கள்   அருள்நிதி (கலைஞரின் பெயரன்), நடிகர் இயக்குநர் பொன் வண்ணன், நடிகை சரண்யா, நடிகர் ஒளிப்பதிவாளர் இளவரசு; திரைப்பட இயக்குநர்கள் சற்குணம்,  அமுதன்;  தமிழ்ப்பணியாற்றும் சான்றோர்கள்  மா.ஆண்டோபீட்டர், முனைவர் இளங்கோவன், ஒரிசா பாலு; எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன் பாஸ்கர் சக்தி,  அஜயன்பாலா, ; தொழிலதிபர்கள் அபிராமி ராமநாதன், சிவக்குமார், போஸ்டர் ஆனந்தன்; ஓவியர்  அரஸ், அரசு ஆர்ட்ஸ் அரசு  ஆகியோர் பாராட்டப்பட இருக்கின்றனர்.மூன்று நாட்களிலும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இவ்விழாவில் அறிஞர் பெருமக்களும் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.
இம்மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர்  கி.வீரமணி அவர்கள் பங்கேற்கின்றார்.
ஆரியப் புரட்டை முறியடிக்க, தமிழர் பண்பாட்டை மீட்டெடுக்க, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மை உணர்வை ஊட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா இது! தமிழர்களே!,  குடும்பம் குடும்பமாகத் திரள்வீர்! திரள்வீர்!! தமிழர்கள் ஏற்றம் பெற திராவிட இன உணர்வினை கூர்மைப்டுத்திட வாரீர் வாரீர் என்று அழைக்கின்றோம்!

Tuesday, January 10, 2012

திராவிடர் கழகத்தின் சார்பில் தலைநகரில் மூன்று நாள்கள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா!


தமிழர்களே, திரள்வீர்!
சென்னை, ஜன.10- சென்னை  பெரியார் திடலில் தை 1,2,3 ஆகிய நாள்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு  பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
தை முதல் நாளைத் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடும் வகையில் மூன்றுநாட்கள் (ஜனவரி 15 முதல் 17 வரை) சென்னை பெரியார் திடலில்  திராவிடர் திருநாள் விழாக் கொண்டாடப் படுகிறது. இந்நிகழ்வில் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, கட்டை ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய கலைஞகளும், தமிழர்களின் பாரம்பரிய பல்சுவை உணவு விற்பனைக் கண்காட்சியும் நடைபெறு கின்றன.
முதல் நாள் கருங்குயில் கணேஷ் குழுவினரின் கிராமியக் கலை, கலை வாணன் குழுவினரின் ஏன் தமிழ் புத்தாண்டு கிராமிய இசை மற்றும் திருச்சி கலைக் குழுவினரின் மார் கழியின் உச்சியில் மலரட்டும் தை ஒலி, ஒளி, நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன.
இரண்டாம் நாள் பன்னீர் அவர்களின் தனி ஆவர்த்தனம், திண் டுக்கல் சரவணனின் கவனக நிகழ்ச்சி, ரோபோ சங்கரின் நகைச் சுவை நிகழ்ச்சி, மற்றும் தை -1 தமிழ் புத்தாண்டு விளக்க கருத்தரங்கம் ஆகியவை நடைபெறுகிறது.
இறுதி நாள் கருங்குயில் கணேஷ் குழுவினரின் கிராமியக் கலை நிகழ்ச்சியும்   தஞ்சை செல்வி கலை குழுவின் கிராமியத் திரை இசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் வழங்கப்படும் பெரியார் விருது வழங்கப் படுகிறது. நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தொழிலதிபர் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்து பெருமக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப் படுகின்றன. இவ்விழாவினை திராவிடர் கழகத்தின் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை அமைப்பான தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் நடத்துகிறது. மூன்று நாட்களிலும் அறிஞர் பெரு மக்களும்  முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.
ஆரியப் புரட்டை முறியடிக்க, தமிழர் பண்பாட்டை மீட்க, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மை உணர்வை ஊட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா.
தமிழர்களே,  குடும்பம் குடும்பமாகத் திரள்வீர்! திரள்வீர்!!

Friday, December 2, 2011

79 ஆம் ஆண்டு பிறந்தநாள




உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான

தந்தை பெரியாரின் 'விடுதலை' நாளேட்டின் 

ஆசிரியராக 50 ஆம் ஆண்டில் உலக சாதனை பொறித்து

தொண்டாற்றிவரும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 

79 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை 

தங்களுக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

-'விடுதலை' குடும்பத்தார்



Asiriyar 79th Birthday Greetings 2011.jpg
266K   View   Download  

Wednesday, November 30, 2011

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா


சோலை எழுதிய வீரமணி ஒரு விமர்சனம் நூல் - ஆசிரியர் குரலில் வாழ்வியல் சிந்தனை குறுந்தகடு வெளியீடு
நீதியரசர் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் - பேரா.சுப.வீரபாண்டியன் பங்கேற்கின்றனர்
தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் சிறப்புரையாற்றுகிறார்
சென்னை, நவ. 30- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொள்கை முரசம் கொட் டும் விழாவாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், நீதியரசர் பி.ஆர்.கோகுல கிருஷ்ணன், பேராசிரியர் சுப.வீர பாண்டியன் பங்கேற்கின்றனர்.
எழுபது ஆண்டுகள் பொதுத் தொண்டிற்கு சொந்தக்காரர், திரா விடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் எழுச்சித் திருவிழா வாக, கொள்கைத் திருவிழாவாக நடைபெறுகிறது.
2.12.2011 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் ராதா மன்றத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழா தொடங்குகிறது.
கோ.சாமிதுரை
இவ்விழாவிற்கு திராவிடர் கழக பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமி துரை தலைமை வகித்து உரையாற்று கிறார்.
சென்னை மண்டல தி.க. தலைவர் தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி, மண்டல செயலாளர் நெய்வேலி வெ.ஞானசேகரன், வடசென்னை மாவட்ட தி.க. தலைவர் தி.வே.சு. திருவள்ளுவன், தென்சென்னை மாவட்ட தி.க. தலைவர் இரா.வில்வ நாதன், தாம்பரம் மாவட்ட தி.க. தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்ட தி.க. தலைவர் மா.ஆ.கந்த சாமி, கும்மிடிப்பூண்டி மாவட்ட தி.க. தலைவர் செ.உதயகுமார் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகிக்கிறார்கள்.
திராவிடர் கழக பிரச்சார செயலா ளர் வழக்குரை ஞர் அ.அருள்மொழி அறிமுக உரையாற்றுகிறார்.
திராவிடர் கழக பொதுச் செயலா ளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவ ரையும் வரவேற்று உரையாற்றுகிறார்.
வீரமணி - ஒரு விமர்சனம் நூல் வெளியீடு

மூத்த எழுத்தாளர் சோலை அவர்கள் எழுதிய வீரமணி - ஒரு விமர்சனம் நூலை வெளியிட்டு தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் சிறப்புரை ஆற்றுகிறார்.

நிகழ்ச்சியில் தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் ஒலிப் புத்தகம் (ஆசிரியர் குரலில்) குறுந் தகட்டை வெளியிட்டு குஜராத் மாநில உயர்நிதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுல கிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நூலைத் திறனாய்வு செய்து உரையாற்றுகிறார்.

நிகழ்ச்சியில் வீரமணி - ஒரு விமர்சனம்! நூலை எழுதிய மூத்த எழுத்தாளர் சோலை பாராட்டப்பட இருக்கிறார்.
நூல் பெறுவோர்

விழாவில், நீதிபதி இரா.பரஞ்சோதி, பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், மயிலை நா.கிருஷ்ணன், வழக்கறிஞர் த.வீரசேகரன், மு.அ.கிரிதரன், க.திரு மகள், த.க.நடராஜன், கு.தங்கமணி, ஆவடி பா.தென்னரசு, சைதை எம்.பி. பாலு, மு.சென்னியப்பன், மு.கதிரவன் (தி.மு.க) ஆகியோர் நூலைப் பெறுகின்றனர்.

ஒலிப்புத்தக குறுந்தகடு பெறுவோர்
ஒலிப்புத்தக குறுந்தகட்டை கோ.ஒளிவண் ணன், பேராசிரி யர் மு.நீ.சிவரா சன், வீ.குமரே சன், வழக்கறி ஞர் வீரமர்த் தினி, கோ.கருணாநிதி, அர.இராமச் சந்திரன், ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், செ.ரா.பார்த்தசாரதி, செம்பியம் கி.இராமலிங்கம், இரா.தமிழ்ச்செல் வன், செ.தமிழ்சாக்ரடீஸ் ஆகியோர் பெறுகின்றனர்.
மேலும் 3 புதிய நூல்கள்

தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசையில் மேலும் 3 புதிய நூல்கள் வெளியிடப்படுகின்றன.

1. உண்மை தொழிலாளர் யார்?

2. மேல்நாடும் கீழ்நாடும்

3. பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?

டெய்சி மணியம்மை நிகழ்ச்சிகளைத் தொகுத்து இணைப்புரை வழங்குகிறார். நிறைவாக வை.கலையரசன் நன்றியுரை ஆற்றுகிறார்.

முன்னதாக மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை கழகக் குடும்பத்துப் பிள்ளை களின் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப் பாக நடைபெறவிருக்கின்றன. இவ்விழா வில் பங்கேற்க குடும்பம் குடும்பமாக திராவிடர் கழக தோழர்களும் இன உணர்வாளர்களும் திரளுகிறார்கள்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...