தமிழ்நாட்டில் மட்டும் தமிழும் - ஆங்கிலமும் இருட்டடிப்பு செய்யப்படுவதின் மர்மம் என்ன?
மத்திய
அரசுக்குச் சொந்தமான திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள வேலை
வாய்ப்புக்கான விளம்பரத்தில் பெரும்பாலும் இந்தியும், கொஞ்சம் ஆங்கிலமும்
கலந்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களில்
வெளியிடப்பட்டுள்ளதில் அந்தந்த மாநில மொழிகளும் இடம்பெற்றுள்ளன. ஆனால்,
தமிழ்நாட்டில் மட்டும் தாய்மொழியான தமிழ் திட்டமிட்டுத்
தவிர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து திராவிடர்
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கேந்திர வித்யாலயாவின் 2020-2021 ஆண்டு ஆசிரியர்கள் பணிக்கான அறிவிப்பு,
தகுதியானவர்கள் கவனத்திற்கு!
முதுநிலை பட்டயப்படிப்பு(பிஜிடி) ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு(டிஜிடி) மற்றும் டிப்ளமா கம்யூட்டர் புரோகிராமர், மேற்பார்வையாளர், செவிலியர், யோகா ஆசிரியர், தமிழ் ஆசிரியர், கைவினைப் பொருள் தயாரிப்பு பயிற்சியாளர், பி.டி. ஆசிரியர் போன்றோர் தேவைப் படுகிறது, மேலே கூறியவற்றிற்கு தகுதியான நபர் கள் தகுந்த சான்றிதழ்களோடு 15.3.2020 மற்றும் 16.3.2020 அன்று கீழ்க்கண்ட முகவரியில் நேரடியாக வரவும்
நேர்முகத்தேர்விற்கு வரவேண்டிய நேரம் காலை 8 மணி முதல் 10 வரை
இடம் கேந்திரிய வித்யாலயா, சி யு டி என், திருவாரூர்
இப்படி ஒரு விளம்பரம் திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிக்கான கேந்திர வித்யாலயாவிற்காக நாளிதழ்களில் வெளியாகியுள்ளது,
அதில் கேந்திரவித்யாலயா என்ற பெயர் மட்டுமே தமிழில் உள்ளது. மற்றவை அனைத்துமே பெரிய எழுத்துக் களில் இந்தியில் உள்ளது.
அதன் கீழே பெயரளவிற்கு ஆங்கி லத்தில்
விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது இதைப் படிக்கும் இந்தி தெரியாத
நபர்கள் தமக்கான விளம்பரம் இல்லை என்று நினைக்கும் நோக்கில் திட்டமிட்டே
இந்த விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா ஜம்மு, ஆந்திரா,
பஞ்சாப் மாநிலங் களில் ஆங்கிலத்தில் தனியாகவும், இந்தியில் தனியாகவும்,
மேலும் அந்தந்த மாநில மொழிகளில் தனியாகவும் விளம்பரம் கொடுக்கும்போது,
தமிழகத்தில் இந்தியை முக்கியப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள
விளம்பரங்களைப் பார்க்கும் போது தமிழாசிரியர்களும் இந்தி கற்று இருக்க
வேண்டும் என்ற ஒரு மறைமுக எண்ணத்தையும் உருவாக்கி யுள்ளார்கள் என்று
தெரிகிறது.
இதன் மர்மம் - சூழ்ச்சி புரிகிறதா?
மத்திய அரசின் நிறுவனம் ஒன்றின் இத்தகு
விளம்பரம் எதைக் காட்டுகிறது? தமிழ்நாடு என்றால் வஞ்சிக்கப்படத்தான்
வேண்டுமா? மத்திய அரசு என்பது இந்தியா முழுவதுக்குமானது இல்லையா? இந்த
விளம்பரம் எல்லா மொழி களிலும் வெளிவர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் -
அத்தோடு இட ஒதுக்கீடுபற்றியும் குறிப்பிட வேண்டும்.
கி.வீரமணி,
தலைவர்
திராவிடர் கழகம்.
சென்னை,
11.3.2020
No comments:
Post a Comment