Showing posts with label மொழி பெயர்ப்பு. Show all posts
Showing posts with label மொழி பெயர்ப்பு. Show all posts

Sunday, September 23, 2012

ஒன்றுக்கு மேற்பட்ட நிர்வாகங்களை இந்தியா தாங்காது! மத்திய அமைச்சர் கபில்சிபல்

central-minister
(15.9.2012 தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டில் மத்திய அமைச்சர் கபில்சிபல் ‘Can’t Have Multiple Executives’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை முரசொலி நாளிதழ் தமிழாக்கம் செய்து வெளியிட்ட கட்டுரை)
இந்திய ஜனநாயகத்தின் மூன்று தூண்களுள் ஒன்றான நிர்வாகத்தைத் தவிர, மற்ற அமைப்புகள் புதிய கொள்கைகளை வகுக்க முயலும்போது, அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக் கும். புதிய கொள்கைகளை வகுக்கும் அதிகாரமும், அதைச் செயல்படுத்தும் அதிகாரமும் மத்திய அரசுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது.
கொள்கைகளைத் தவறாக வகுத்தாலோ அல்லது செயல்படுத்தினாலோ, அதற்காக மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் மத்திய அரசைக் கேள்வி கேட்பார்கள். நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் கேள்வி நேரம் மற்றும் விவாதங்களில் இது எதிரொலிக்கும்.
அரசின் முடிவுகள் அரசியல் சட்டத்திற்கு உடன் படாததாக இருந்தால், அது நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படும். எனவே, அரசு நிர்வாகம் என்பது பொறுப்புடைமைத்தன்மை கொண்ட அமைப் பாகும்.
சி.ஏ.ஜி. என்பவர் கொள்கை வகுப்பவர் அல்லர்!
சமீப காலமாக அரசியல் சட்டப்படியான அமைப்புகள் கொள்கை வகுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மரபு மீறலுக்கு சி.ஏ.ஜி. தான் (இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்) ஒளிரும் உதாரணமாகும்.
அரசியல் சட்டத்தின்படி 149ஆவது பிரிவின்படி சி.ஏ.ஜி. யின் பணி என்பது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி மத்திய அரசின் நிதிக் கணக்குகளையும், மாநில அரசுகளின் நிதிக் கணக்குகளையும் தணிக்கை செய்வது தான். அரசின் அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் முறையாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதையும், அனைத்து செலவுகளும் விதிகளுக்குட்பட்டிருப்பதையும் உறுதி செய்வதற்கான அதிகாரம் சி.ஏ.ஜி.க்கு உண்டு. ஆனால், சி.ஏ.ஜி. என்பவர் கொள்கை வகுப்பாளர் அல்லர்; அதுதான் உண்மை!
ஒரு குறிப்பிட்ட இயற்கை வளம் ஏலத்தில் விடப்பட வேண்டுமா? வேண்டாமா என்பதை சி.ஏ.ஜி. முடிவு செய்ய முடியாது. அவ்வாறு செய்வது தணிக்கைப் பணி அல்ல! இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வது என்பது பட்ஜெட் ஒதுக்கீட்டைப் போன்றதல்ல; அதன் பயன்பாடும் பட்ஜெட் ஒதுக்கீட்டைப் போன்றதல்ல!
ஒரு குறிப்பிட்ட இயற்கை வளத்தை, அப்போது நிலவும் சூழலைப் பொறுத்து - ஒரு குறிப்பிட்ட சமூக, பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஒதுக்கீடு செய்வதற்கான அதிகாரம் அரசுக்கு உண்டு.
ஆகாஷ் கணினி விவகாரம்
இந்தியாவில் 1 கோடியே 10 லட்சம் மேனிலைப் பள்ளி மாணவ - மாணவியருக்கு ஆகாஷ் கணினியை இலவசமாக வழங்குவது என்று முடிவெடுத்தால், அந்தக் கொள்கை முடிவு பற்றிக் கருத்துக் கூறும் அதிகாரம் சி.ஏ.ஜி.க்கு இல்லை. இன்னும் கேட்டால், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தனக்கு வரும் வருவாயை அரசு இழக்கலாம். ஆகாஷ் கணினி விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலோ அல்லது ஏலத்தில் விடப் பட்டாலோ அதனால் அரசுக்கு வருமானம் கிடைக்கும். ஆனால், அது அரசின் நோக்கமல்ல!
ஆகாஷ் கணினியை மாணவர்களுக்கு எவ்வாறு வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்வது சி.ஏ.ஜி.யின் அதிகார வரம்புக்குட்பட்டதல்ல. வேண்டு மானால், தனது அதிகாரம் குறித்த, தனிப்பட்ட புரிதலின் அடிப்படையில் ஆகாஷ் கணினியைப் பெற்ற மாணவர்களில் யார் யாருக்கெல்லாம் அதற்கான கட்டணத்தைச் செலுத்து வதற்கான வசதி இருக் கிறதோ, அவர்களிடமிருந்து கணினிக்கான முழுவிலை யையும் அரசு வசூலித் திருக்க வேண்டும். அவ் வாறு செய்யாததால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கூறி, எதிர்ப்பு தெரிவிக்க லாம். அவ்வாறு சி.ஏ.ஜி. எதிர்ப்பு தெரிவித்தால், அரசு என்ன செய்யலாம்?
பொதுக் கணக்குக் குழுவின் செயல்பாடு
இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் அரசு எழுப்ப முடியாது. ஏனெனில் சி.ஏ.ஜி.யின் அறிக்கை முதன்முதலில் பொதுக்கணக்குக் குழுவின் ஆய்வுக்காக அனுப்பப்பட வேண்டும். பின்னர் சி.ஏ.ஜி.யின் அறிக்கையைப் பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்து, வரைவு அறிக்கையைத் தயாரிக்கும். அந்த வரைவு அறிக்கை பொதுக் கணக்குக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, இறுதி அறிக்கை யாக நாடாளுமன்ற மக்களவைக்கு அனுப்பப்படும். அந்த அறிக்கையில் சி.ஏ.ஜி. அறிக்கை மீதான பொதுக்கணக்குக் குழுவின் முடிவுகளும், பரிந்துரை களும் இடம்பெற்றிருக்கும்.
பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கை மீது விவாதம் நடத்தும் அதிகாரம் மக்களவைக்கு உண்டு என்ற போதிலும், பெரும்பாலும் அத்தகைய விவாதம் நடைபெறுவதில்லை. அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்களை உறுப்பினர்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் குறிப்பிடுவார்கள் என்றபோதிலும், இது தொடர்பாகத் தனி விவாதம் நடப்பதில்லை.
சி.ஏ.ஜி.யின் அறிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாது
ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயம் அவையின் முன் கொண்டு வரப்பட்டு, அது குறித்த தீர்மானத்தின்மீது விவாதம் நடத்தப்பட்டாலும், இறுதியில் அது வாக்கெடுப்புக்கு விடப்படாது. சி.ஏ.ஜி. தெரிவிக்கும் கருத்துக்கள் நிச்சயமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலமாக மாயமாகி விடாது. சி.ஏ.ஜி.யின் அறிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் முடியாது. ஏனெனில், சி.ஏ.ஜி. யின் அறிக்கையால் யாரையும் கட்டுப்படுத்த முடியாது; இதற்கு அரசிடம் எந்தத் தீர்வும் இல்லை.
சி.ஏ.ஜி.யின் அறிக்கையும் கண்டுபிடிப்புகளும் பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக்காகத் தாக்கல் செய்வதுடன் அதன் பணி முடிவடைந்து விடுகிறது. வேறெந்த ஒரு அரசியல் சாசன அமைப்புக்கும் பதில் கூறும் கடமை சி.ஏ.ஜி.க்கு இல்லை. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில், ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் விட்டிருந்தால் அதிக வருவாய் கிடைத்திருக்கும், அவ்வாறு செய்யாத தால் பேரிழப்பு ஏற்பட்டு விட்டது என்று கொள்கை திணிப்பைச் செய்து, அதனடிப் படையில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கை பொதுக் கருத்தில் பெரும் திரிபை ஏற்படுத்திவிட்டது. இந்த விஷயத்தில் உண்மை எங்கோ தொலைந்து விட்டது.
அதன் விளைவாக, நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் விடாததால், தனியார் நிறுவனங்க ளுக்கு 1,85,591.34 கோடி லாபம் கிடைக்கக் கூடும் என்று கணக்கிடும் அளவுக்கு சி.ஏ.ஜி.க்குத் துணிச்சல் ஏற்பட் டிருக்கிறது.
இத்தகைய தணிக்கை அறிக்கையால் நாடாளு மன்றம் ஸ்தம்பித்ததுடன், அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அனைத்தும் முடங்கிவிட்டன. சி.ஏ.ஜி.யின் கொள் கை பரிந்துரைகள் காரணமாக நாம் இப்போது அரசியல் சட்டசிக்கலில் சிக்கிக் கொண்டிருக் கிறோம்.
கொள்கை முடிவுகளைப் பரிந்துரைப்பது அதிகாரப் பகிர்வுக்கு எதிரானதாகும்
2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 2008 ஜனவரி 10 அன்று வழங்கப்பட்ட அனைத்து 2-ஜி உரிமங்களையும் ரத்து செய்வதாக அறிவித் தது, சி.ஏ.ஜி.க்குப் பெரும் துணிச்சலை ஏற்படுத்தியிருக்கக் கூடும். நிர்வாக முடிவுகளை ரத்து செய்வதற்கான நீதிமன்ற உரிமைகள் பற்றிக் கேள்வி எழுப்ப முடியாது. எனினும், இயற்கை வளங்கள் ஒரு குறிப்பிட்ட முறையில்தான் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் கூறும்போது, அதை எதிர்த்து வினா எழுப்பலாம். அவ்வாறு நீதிமன்றங்கள் கொள்கை பரிந்துரைகளை அளிப்பதென்பது, அதன் அதிகாரத்தைப் பயன் படுத்துவதில் உள்ள குறையாகும்.
ஏற்கெனவே நான் கூறியபடி, அரசு நிர்வாகத்தால் உருவாக் கப்படும் கொள்கை என்பது நாடாளுமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படக் கூடியதாகும். ஆனால், நீதிமன்றம் பரிந் துரைக்கும் கொள்கை என்பது நாடாளுமன்றத்தால் ஆய்வு செய்ய முடியாது என்பதுடன், நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த வாய்ப் பற்றதாகும். எனவே, நீதிமன்றங்களோ அல்லது சி.ஏ.ஜி.யோ கொள்கை முடிவு களைப் பரிந்துரைப்பது என்பது அரசியல் சட்டப்படியான அதிகாரப் பகிர்வுக்கு எதிரானதாகும். அதுமட்டுமின்றி, வலிமையான ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும் என்ற நமது தத்துவத்திற்கு எதிரான, தார்மீக நெறியற்ற செயலாகும்.
மக்கள் நலம் காப்பதே அரசின் நோக்கம்
வருவாயைப் பெருக்குவதற்கான வணிகத்தில் அரசு ஈடு பட்டிருக்க வில்லை. தன் வருவாயைப் பெருக்கிக் கொள்வ தற்குப் பதில், சாதாரண மக்களின் வருவாயைப் பெருக்கு வதற்கான சூழலை ஏற்படுத்துவ தற்கான நலம் விரும்பும் அரசை உருவாக்குவதுதான் எங்களின் நோக்கமாகும்.
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற் பட்டாலும், அது தொலை அடர்த்தியை அதிகரிப்பதற்கும், பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் உதவியது. இதனால் அரசின் வருவாய் பெருகாவிட்டாலும், மக்கள் பயனடைந்தனர்.
அதன்பின் 2010ஆம் ஆண்டில் 3-ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் விட்டதின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததால், அரசு பயன் பெற்றது. ஆனால் அதன் பின் இன்றுவரை சுமார் மூன்றாண்டுகள் ஆகிவிட்டபோதிலும், இன்று வரை இந்தியாவில் 3-ஜி சேவைகள் தொடங்கப்படவில்லை. இந்தச் சேவை தொடங் கப்படாத நிலையில், வங்கியிலிருந்து செல்பேசி நிறுவனங் கள் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. இன்றைய நிலையில் தொலைத் தொடர்புத் துறை கடுமையான கடன் வலையில் சிக்கியிருக்கிறது. இன்னும் மீளவில்லை.
இந்திய அரசை ஒரே நேரத்தில் மூன்று நிர்வாகங்கள் நிர்வகிப்பதை அனுமதிக்க முடியாது. இதன் விளைவுகள் இப்போதே வெளியில் தெரிய தொடங்கிவிட்டன. வலிமையாக இருந்த தொலைத் தொடர்புத் துறை இப்போது நலிவடைந்து வருகிறது. 2 ஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இரு தரப்பு முதலீட்டு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி இந்திய அரசு மீது பல்வேறு வழக்குகள் தொடரப்படவுள்ளன.
பல லட்சக்கணக்கான டாலர் தற்போது சிக்கலில் உள்ளது. எந்தத் தவறும் செய்யாத செல்பேசி நிறுவனங்கள் தங்களது உரிமத்தை இழந்திருக் கின்றன. இதனால் இந்தியாவில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று வெளிநாட்டு முதலீட் டாளர்கள் கருதும் சூழல் ஏற்பட்டால், அதை நம்மால் சமாளிக்க முடியாது. தனிப்பட்ட ஒதுக்கீடுகளை, நீதிமன்றங்கள் ரத்து செய்யக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. குற்ற நோக்கம் கொண்ட தனிப்பட்ட செயல்பாடுகள் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டியவை ஆகும். குற்றத் தவறுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேபோல் அரசு, தன் நிதியைத் தவறாகப் பயன்படுத்தினாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட பயன் பாட்டிற் கான பட்ஜெட் ஒதுக்கீட்டைச் சிறப்பாகப் பயன்படுத்தா விட் டாலோ, அதற்காக அரசைக் குறைகூறும் உரிமை சி.ஏ.ஜி.க்கு உண்டு.
ஆனால், ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்காகப் பொதுச் சொத்துக்கள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றங் களோ, சி.ஏ.ஜி.யோ அல்ல!
(நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா, 15.09.2012)
- நன்றி: முரசொலி (22.9.2012)

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, August 9, 2012

நீதித்துறையின் தீவிர செயல்பாட்டால் ஏற்படும் கவலை

-  டி.ஆர். அந்தியார்ஜுனா

நீதித்துறையின் தீவிரச் செயல்பாடு என்னும் கோட்பாட்டை விளக்குவது என்பது அவ்வளவு எளிதான செயலல்ல. பலப்பல மனிதர்களுக்கும் அது பலவித மான பொருளை அளிப்பதாக இருக்கிறது.  இவ்வாறு நீதித்துறை எடுக்கும் முடிவு களை ஏற்காத விமர்சகர்கள் அவற்றைக் குறை கூறுகின்றனர். இத்தகைய தீவிரச் செயல்பாடும், அழகினைப் போலவே, காண்பவர்களின் கண்களில் இருப்ப தாகும்.  வசதியற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட ஏழை மக்களும் நீதி கேட்டு நீதி மன்றங்களுக்குச் செல்லும் ஒரு வாய்ப்பினை இந்தியாவில் ஏற்படுத் திக் கொடுத்தது பொதுநல வழக்கு எனப் படுவது. 1979-லிருந்து உச்சநீதிமன்றத் தின் வழிகாட்டுதலில் நீதித் துறையானது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டி ராத ஒரு முறையில் செயல்படத் தொடங்கி, சமூக நீதியை வழங்குவதில் ஒரு முக்கியப் பங்காற்றத் தொடங்கியது.
வேறு எந்த நாட்டின் நீதித்துறையிலும் இல்லாதது
இத்தகைய பொதுநல வழக்குகளின் மூலம் இது காலம் வரை அசாதாரணமான தன்மையில் பொது மக்களின் நன்மைக் காக மேற்கொள்ளப்பட்டு வந்த  நீதித் துறையின் இந்தத் தீவிரச் செயல்பாடு, இன்று அரசு மற்றும் அரசு அமைப்பு களின், அதிகாரிகளின் செயல்களைத் திருத்தும் ஒரு பொதுவான மேற்பார்வைப் பணி என்ற அளவுக்கே பெரும்பாலும் மாற்றப்பட்டுள்ளது என்பது பெரிதும் கவலைப் படவேண்டிய ஒரு விஷயமாகும். வேறு எந்த நாட்டின் நீதித் துறையிலும் இல்லாத ஒரு வகையான நீதித் துறையின் தீவிரச் செயல்பாடு இது.
அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட தோன்றியதே இது!
சமூகத்தின் அல்லது சில அமைப்பு களின் குறிப்பிட்ட சில பிரிவினர்க்கு சில அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்ட சூழ்நிலையை நீதித்துறையின் கவனத் துக்குக் கொண்டு வந்த சமூக ஆர்வலர் களின் புகார்களை 1979 இல் உச்ச நீதிமன்றம் அனுமதித்ததில் இருந்து - அதன் தாக்கம், ஆற்றல் எத்தன்மையதாக இருக்கும் என்பதைப் பற்றி எவரும் சிறி தும் அறிந்திராத நிலையில் - தொடங்கி யது இந்த பொதுநல வழக்கு கோட்பாடு.
பொதுநல வழக்கு நடைமுறையின் தோற்றம்
1979 இல் உச்சநீதிமன்ற வழக்குரை ஞர் கபிலா ஹிங்கோரணி  என்பவர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு ஒரு நாளிதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளைப் பற்றிய செய்தியைக் கொண்டு வந்தார். பிகார் சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகள், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு என்ன சிறைத் தண்டனை கிடைக்குமோ, அந்தத் தண்டனைக் காலத்துக்கும் அதிகமாக சிறைகளில் விசாரணைக் கைதிகளா கவே அடைபட்டு துன்புற்று வருவதை அக் கட்டுரைத் தொடர் வெளிப்படுத்தியி ருந்தது.
பிகார் சிறை அதிகாரிகளால் சிறைக் கைதிகள் கொடுமைப்படுத்துவதைப் பற்றியும், கைதிகளின் பரிதாப நிலை பற்றியும் சுனில் பத்ரா என்ற கைதி நீதியரசர் கிருஷ்ணய்யருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இக் கடிதத்தையே மனு வாக ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் சிறை களில் கைதிகள் மனிதநேயத்துடன் நடத் தப்பட வேண்டும் என்று ஆணையிட்டது.
ஆக்ராவில் உள்ள  பெண்களின் பாதுகாப்பு இல்லம் ஒன்றில் எத்தகைய விலங்காண்டித்தனமான சூழ்நிலைகளில் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருக் கின்றனர் என்பதுபற்றி நாளிதழ் ஒன்றின் ஆசிரியருக்கு இரண்டு சட்டப் பேராசிரி யர்கள் எழுதிய கடிதமே மற்றொரு வழக் குக்கு உச்சநீதிமன்ற ரிட் மனுவிற்கான அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. கட்டு மானப் பணியிடங்களில் தொழிலாளர் சட்டங்களை மீறிய வகையில் தொழி லாளர்கள் ஏமாற்றிப் பயன்படுத்தப்படுவது  ஒரு கடிதம் மூலம் உச்ச நீதி மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. கல் குவாரிகளில் தொழிலாளர்கள் கொத் தடிமைகள் போல நடத்தப்படும் நிலை ஒரு சமூக ஆர்வலரால் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. மும்பை நடைபாதை வாசிகளை இடம் பெயரச் செய்ததை எதிர்த்து ஒரு பத் திரிகையாளர் நீதிமன்றத்திற்குச் சென் றார். இது போன்ற பல வழக்குகள் பொது நல வழக்குகளாகத் தொடர ஆரம்பித் தன.
பொதுநல வழக்குகளின் நோக்கம் என்ன?
இத்தகைய வழக்குகளைக் கையாண்ட நீதிமன்றங்கள், மக்களின் உரிமைகள் மற்றும் அரசுகளின் கடமைகள் பற்றி ஒரு புதிய விளக்கத்தை உருவாக்கி, அரசு தனது குற்றங் குறைகளுக்குப் பொறுப்பேற்று பதில் கூறக் கடமைப் பட்டுள்ளது என்னும் புதிய நடைமுறை களை உருவாக்கியது. பொதுநல வழக்கு எவ்வாறு தோன்றியது என்று அதன் நோக்கத்தைப் பற்றி 1982 இல் நீதியரசர் பி.என்.பகவதி மிகச் சரியாகக் கூறினார். மனித இனத்தின் கீழ் நிலையில் வைத்து பார்க்கப்படும் ஏழை மக்கள் கூட்டத்தின ருக்கும் எட்டும் தொலைவில் நீதித்துறை யைக் கொண்டு வரும் நோக்கத்தைக் கொண்ட, சட்ட உதவி இயக்கத்தின் ஒரு முக்கியமான பகுதிதான் இந்த பொதுநல வழக்குகள். வழக்கமான, சாதாரணமான, பாரம்பரிய வழக்குகள் என்ற நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு வகையான வழக்குகள் இவை என்று அவர் வலியுறுத்தினார்.
அதன் பின்னர் நீதிமன்றத்தின் வாடிக்கையாளர்களாக, நிலச்சுவான் தார்கள், வியாபாரிகள், தொழில் மற்றும் நிதி நிறுவனங்கள், வசதிவாய்ப்பு மிகுந்த மக்கள் மட்டுமே இருக்கவில்லை. பொது நல வழக்கு என்பதன் மூலம், ஒரு பாமர மனிதரும், சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரும், சமூக ஆர்வலர்களின் உதவியுடன், நீதி மன்றங்களை எளிதாக நாடத் தொடங் கினர்.
இத்தகைய ஈடு இணையற்ற நீதித் துறையின் தீவிரச் செயல்பாடு என்பது மற்ற நாடுகளில் காணப்படாத ஒன்றாகும்.   இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹேரி வுல்ஃப், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த மைக்கேல் கிர்பி போன்ற புகழ்பெற்ற நீதிபதிகள் இதனைப் பாராட்டினர்.
பொது நலன் என்பது போய் பொது காரணம், பொது நோக்கம் என்பது வந்துவிட்டது
என்றாலும், ஆண்டுகள் செல்லச் செல்ல, பொது நல வழக்கு என்ற கோட் பாட்டில் இருந்த சமூக நலனுக்கான செயல்பாடு என்ற கண்ணோட்டம் நீர்த்துப் போகச் செய்யப் பட்டு மறைந்தே போனது; அந்த பொது நலன் என்ற இடத்தை பொதுக் காரணம் அல்லது பொது நோக்கம் என்பது பிடித்துக் கொண்டது.
இன்று இந்த மாதிரியான வழக்குகள் எல்லாம் பாமர மனிதரின், சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக தொடுக்கப்படும் வழக்குகள் அல்ல. அரசு நிருவாகம் அல்லது அரசு அதிகாரிகள் அல்லது துறைகள், பொது நிறுவனங்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாடுகளில் உள்ள குற்றங் குறைகளை சரி செய்யும் நோக்கத்தைக் கொண்ட வழக்குகளே இவை. இது போன்ற விஷயங்களில் நீதிமன்றங்களின் தலையீடுகளுக்கு எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் உள்ளன.
நீதிமன்றங்கள் கையாண்ட பொதுநல வழக்குகள்
சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க் கும் நோக்கத்தில், மோட்டார் வாகனங் கள் வெளியிடும் புகையினால் காற்று மாசுபடுவதைத் தடுக்கவும், அளவுக்கு அதிகமான சப்தத்தைத் தவிர்க்கவும்,  போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்க் கவும் ஆன சில நெறிமுறைகளை நிர்ண யித்து உச்சநீதிமன்றம் ஆணை பிறப் பித்தது; வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து ஆணை யிட்டது; நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண் டும், குடியிருப்புப் பகுதிகளில் தூய்மை பராமரிக்கப்படவேண்டும், குப்பையை அழிப்பது, டில்லியில் போக்குவரத்துக் கட்டுப்பாடு, கார்களின் இருக்கை பெல்ட் போட்டுக் கொள்வதைக் கட்டாயமாக் குவது, நகரங்களில் குரங்குகளின் அட்டகாசத்தைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது, காவலர் இல்லாத ரயில்வே கேட்டுகளில் ஏற்படும் விபத்துகளைத் தவிர்ப்பது, கல்லூரிகளில் புதிய மாண வர்களை கேலி செய்வதைத் தடுப்பது, ரத்த வங்கிகளில் ரத்தத்தைச் சேகரிப்பது, சேமித்து வைப்பது, ஒலிபெருக்கிகளைக் கட்டுப்படுத்துவது, பட்டாசு வெடிப்பதைத் தடுப்பது என்று எண்ணற்ற வழக்குகளில் உயர்நீதிமன்றங்களும்,உச்ச நீதிமன்றமும் ஆணைகளைப் பிறப்பித்துள்ளன.
அண்மையில் பிறப்பிக்கப்பட்ட ஓர் ஆணையில், இந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பது என்ற மிகுந்த சிக்கல் நிறைந்த பொறியியல் துறை பற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நன்றி: தி இந்து, 6.8.2012
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Monday, July 30, 2012

பா.ஜ.கட்சி தலைவர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகும் ஆர்.எஸ்.எஸ். (2)

- ராணா அயூப்
நேற்றைய தொடர்ச்சி....

முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சுதர் சனம் அரசின் விவகாரங்களில் தலையிடு வதை வாஜ்பேயியும், அத்வானியும் எவ்வாறு திறமையுடன் தவிர்த்தனர் என்பதை எண்ணி ஆர்.எஸ்.எஸ். இப்போதும் குழம்பிக் கொண்டே இருக்கிறது. வாஜ்பேயி போன்ற மென்மையான தாராளமனம் கொண்ட தலைவருடன்  தீவிரக் கொள்கைப் பிடிப்புள்ள அத்வானி போன்ற தலைவரும் உடனிருப் பதையே ஆர்.எஸ்.எஸ். விரும்பி வரவேற் கிறது. ஆனால் அத்தகைய தலைவர்கள் மீது கட்டுப்பாடு வைத்திருக்க வேண்டும் என்றே விரும்புகிறது. கட்டுப்பாட்டை இழக்க அது விரும்பவில்லை.
வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, மிகுந்த நம்பிக்கைக்கு ரிய அவரது தலைமைச் செயலாளர் பிரஜேஷ் மிஸ்ராவை ஆர்.எஸ்.எஸ்.  தொடர்ந்து தாக்கிக் கொண் டிருந்தது. அவரை பதவி விலக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் கூறிய காரணம் உண்மையானதல்ல. அவர் நீக்கப்பட்டால், வாஜ்பேயி பலவீனமடைந்துவிடுவார் என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் அரசு நிலைக்க வேண்டுமே என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கியதை தெகல்கா வெளிப்படுத் தியதில் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு மகிழ்ச்சிதான். பிரதமர் அலுவலகத்தில் இருந்த பிரிஜேஷ் மிஸ்ரா மற்றும் என்.கே.சிங் மீது தாக்குதல் நடத்துவதையும் அது வரவேற்றது. வாஜ்பேயி பிரதமர் அலுவலகத்தின் மிது முழு அளவி லான தாக்குதலை நடத்த சென்னை கணக் காயர் குருமூர்த்திக்கு  சுதந்திரம் அளித்தது.
பா.ஜ.கட்சி விவகாரங்களில் தலையிடு வதை ஆர்.எஸ்.எஸ். நிறுத்திக் கொண்டு அதனை ஒரு முழுமையான அரசியல் கட்சி யாக வளர விடுமா? என்று அரசியல் நோக் கர்கள் கேட்பதுண்டு. இது பற்றி ஆர்.எஸ். எஸ்.சின் ஓர் உண்மையான விவாதம் நடந்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை இக்கேள்வி அளிக்கிறது. ஆனால், பா.ஜ.க. தன் கட்டுப்பாட்டை விட்டு விலகிச்செல்வதை ஆர்.எஸ்.எஸ். விரும்பவே இல்லை. யார் தலை வராக வரவேண்டும், யார் ஓய்வு பெற வேண்டும் என்பத தாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணுகின் றனர். முற்றிலும் அரசியலை மட்டுமே சார்ந்த பிரச்சினையிலும் ஆர்.எஸ்.எஸ். மூக்கை நீட்டி வருகிறது. பிரதமர் வேட்பாளர் மதச்சார் பற்றவர் என்ற தோற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியபோது, பா.ஜ.கட்சி இதற்கு பதில் கூறட்டும் என்று விட்டுவிடாமல், மோகன் பகத், இந்துத்வ ஆதரவாளர் ஒருவர் பிரதமராக வருவதில் தவறென்ன? என்று கேட்டார். உடனே பிரதமர் வேட்பாளராக தான் ஆவதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அளிப்ப தாக மோடி கூற ஆரம்பித்து விட்டார். அதனை மறுத்து, ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர் பாளர் ராம் மாதவ், இந்துத்துவா பற்றி நிதிஷ் குமார் கூறியதற்கு மோகன் பகத் பதிலளித் தார் அவ்வளவுதான்.  எவரையும் குறிப்பிட்டு அவர் அவ்வாறு கூறவில்லை என்று கூறினார்.
2002 குஜராத் படுகொலைகள் என்னும் களங்கம் மோடியின் மீது நீடித்திருக்கும் நிலையில் அவரை எப்படி பிரதமர் வேட்பாள ராக ஆக்க முடியும் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, கோட்பாடு பற்றிய கேள்வி அது என்பதால், பாபர் மசூதி இடிப்புக் குப் பின்தான் அத்வானி உதவி பிரதமர் ஆனார் என்று அவர் பதிலளித்தார்.
கமல்சந்தேஷ், பஞ்சஜைன்யா, ஆர்கனை சர் என்ற ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தால் நடத்தப்படும் மூன்று பத்திரிகைகளிலும் அண்மையில் மோடிக்கு எதிரான செய்திகள் வெளிவந்துள்ளன. மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவர் பிரபாத் ஜாவை ஆசிரியராகக் கொண்ட கமல்சந்தேஷில், மோடி ஓர் அவசரக் குடுக்கை என்று எழுதியுள்ளார். எல்லோரை யும் அனுசரித்துச் செல்ல முடியாத பொறுமை யற்ற தலைவராக மோடி ஆகி வருவதாக பஞ்சஜைன்யாவின் கட்டுரை எச்சரிக்கிறது. சங் வட்டாரத்தில் மிகவும் மதிக்கப்படும் முன்னாள் பேராசிரியர் தேவேந்திர ஸ்வரூப் எழுதிய கட்டுரை இது.
சங் என்ன நினைக்கிறதோ அதற்கு எதிரான இத்தகைய கருத்துகள் சங் பத்திரி கைகளில் எவ்வாறு வெளி வருகின்றன என்று ஒரு மூத்த ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கேட்கிறார்.
ஆனால்  ஓர் அமைப்பு என்ற முறையில் ஆர்.எஸ்.எஸ். மோடிக்கு இத்தகைய ஆதரவு அளிப்பது பற்றி குஜராத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.கட்சியினர் கவலையும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். சங்கத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும் சரி, அவர்கள் அளிக்கும் ஆதரவு மோடியை சர்வாதிகாரி அரசியல்வாதியாகத்தான் ஆக்கும் என்று ஜடாபி கூறுகிறார். மோடியை ஆதரிக்க நம்மைப் போன்ற எத்தனை ஆடுகளை பலி தருவார்கள்? ஹரேன் பாண்டியா, சஞ்சய் ஜோஷி, கேசுபாய் படேல் என்று எத்தனை பேர்? என்று அவர் கேட்கிறார். கொள்கைப் பிடிப்பு கொண்ட தலைவர்களை உருவாக்குவதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். தீய சக்திகளையே உருவாக்கி வருகிறது என்று அவர் கூறுகிறார்.
தனக்கு உடல்நலமில்லை என்று கூறிக்கொண்டு மோடி மருத்துவமனையில் சேர்ந்தபோது ஆர்.எஸ்.எஸ். அவருக்கு அடிபணிந்தது. ஆர்.எஸ்.எஸ்.கோட்பாட்டில் என் கணவர் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர் என்பதை அவர்கள் அறியமாட்டார்களா? என்று ஹரேன் பாண்டியாவின் மனைவி ஜக்ருதி கேட்கிறார்.
இப்போது நடப்பது இதுதான். ஒரு அமைப்பு பிரச்சாரம் செய்யும் கோட்பாடு வெளிப்படுத்தப்படும்போது,  ஒரு நோக்கத் திற்காக அல்லாமல் ஒரு தனிப்பட்டவருக்கே அது உதவுவதாக உள்ளது. எந்தப் பிரச் சினையில் இருந்தும் எளிதாகத் தப்பிக்கும் வழியையே இன்று ஆர்.எஸ்.எஸ். தேடுகிறது. எடியூரப்பா, வசுந்தரா, மோடி போன்ற தனிப்பட்டவர்களின் கட்டளைக்கு அது கீழ் படிந்து வருகிறது என்று ஒரு பா.ஜ.க. மூத்த தலைவர் கூறுகிறார்.
என்றாலும், ஆர்.எஸ்.எஸ்.சின் முரண் பாடுகளே முன் நிற்கின்றன. ஜாதி அரசி யலுக்கு இடம் கொடுத்து லிங்காயத் சமூகத் திற்கான அடையாளத்துக்கு ஆதரவு தரும் எடியூரப்பாவுக்கு பா.ஜ.க. ஆதரவு தருவதை ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை. ஆனால், தனது சொந்த ஊரான நாக்பூரைச் சேர்ந்த தனது பார்ப்பன இனத்தைச் சேர்ந்த கட்காரிக்கு இரண்டாவது முறை பா.ஜ.க. தேசிய தலைவர் பதவியை பகவத் அளித்துள் ளது எப்படி? என்ற கேள்வி எழுகிறது.
பா.ஜ.கட்சியில் உள்ள புதுதலைமுறை யினருடனான தொடர்பில் ஓர் இடைவெளி ஏற்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. முரளி மனோகர் ஜோஷி, அத்வானியை விட்டால், வேறு யார் எங்களுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்ள உள்ளனர்? இரண்டாம் நிலை தலைவர்களை எல்லாம் பாருங்கள். அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ரஜ்நாத் சிங், எடியூரப்பா அவர்களில் எவரும் கோட்பாட்டுக்காக வேலை செய்பவர்கள் அல்ல. மேல்பதவியில் இருப்பதையே அவர்கள் அனைவரும் விரும்புகின்றனர். இந்த மாதிரியான அரசியல் நடத்துவ தால்தான் அத்வானி மும்பை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின் றனர். குஜராத்தில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு அம்மாநிலத்தின்  வளர்ச்சியும், இந்துத்துவா கோட்பாடும் தான் காரணம் என்று  சிலர் கூற ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இந்த வியூகம் மத்தியபிரதேசம், ராஜஸ்தான்  போன்ற மாநிலங்களில் ஏன் செல்லுபடி யாகவில்லை? மத்திய பிரதேசத்தில் உண் மையில் ஆர்.எஸ்.எஸ்.தான் பா.ஜ.க. போர் வையில் ஆட்சி செய்கிறது. அரசியல் விவ காரங்களில் சுரேஷ் சோனியின் தலையீடும், வியாபார ஒப்பந்தங்களை ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் முடித்துத் தரும் வெளிப்படையான ரகசியங்கள்தான். சோனி ஆர்.எஸ்.எஸ்.சில் பணக் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து விட்டதாக பலரும் புகார் கூறுகின்றனர். மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒப்பந்தங்களுக்கு அவர் ஒரு தரகர் போல இருக்கிறார்; ஆர்.எஸ்.எஸ்.சும் அதனைக் கண்டு கொள்ளாமல் உள்ளது என்று ஒருவர் கூறுகிறார்.
ஆர்.எஸ்.எஸ்.சின் இணைச் செயலாள ரான சோனி முன்னாள் தலைவர் சுதர்சனின் சீடர்.  மற்றொரு பார்ப்பனரான சுரேஷ் பய்யாஜி ஜோஷியை பொதுச் செயலாளராக ஆக்கி தன்னைப் புறக்கணித்ததற்காக பகவத் மீது சோனிக்கு வருத்தம் இருக்கிறது. ஜாதி தான் இதன் காரணம் என்று வைசியரான அவர் கூறுகிறார்.
பா.ஜ.கட்சிக்கு அரசியல் களத்தில் இடம் பெறுவதற்காக ஆர்.எஸ்.எஸ். இரட்டைப் பேச்சு பேசி வருகிறது. இது இதர இந்துத்துவ அமைப்புகளைப் புறக்கணிப்பதாகவும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பலரையும் ஏமாற்ற மடையச் செய்வதாகவும் இருக்கிறது. விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தளத்துடன் ஆர்.எஸ். எஸ்சுக்கு நல்ல உறவு இருந்தது.  கருநாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த அமைப்பு களுக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.கட்சி யினருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் வெடித்துக் கிளம்பின. மகாராஷ்டிராவில் மாலகான் குண்டுவெடிப்புகளுக்கும் தனக் கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். சவுகரியமாக விலகிக் கொண்டது. பஜ்ரங்தளம், சனாதன் சன்ஸ்தா, விசுவ இந்து பரிசத் ஆகியவை மாலகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவு தந்தபோது, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தர வில்லை. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்திரேஷ்குமார், சுனில் ஜோஷி என்ற இரு ஆர்.எஸ்.எஸ். காரர்களைப் பற்றி சாட்சியம் அளித்தபோது, ஆர்.எஸ்.எஸ். தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தியது.
இவை அனைத்துக்கும் ஆர்.எஸ்.எஸ். சின் செல்வாக்கு குறைந்து வருவதே கார ணம் என்று ஒரு முக்கிய ஆர்.எஸ்.எஸ்.நட்சத் திரமான கோவிந்தாச்சார்யா கூறுகிறார். சாதாரண சாப்பாடு, படுக்கும் பாய், 200 சதுர அடி அறையுடன் ஆர்.எஸ்.எஸ். தொண் டர்கள் மனநிறைவடைந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்களும் அவர்களது மூத்த தலை வர்களைப் போலவே  அதிகாரம் தேடுபவராக இருக்கிறார்கள்; குளிரூட்டப்பட்ட அறை, மற்றும் நவீன சாதனங்களைத் தேடுபவர் களாக உள்ளனர். அந்த சவுகரியங்களைப் பெறுவதற்கு இந்துத்துவா, சமூக முன்னேற் றம் பற்றி பேசுவதே வழியாகும். இதுதான் அரசியல் என்று தோன்றுகிறது.
நன்றி: தெகல்கா 14 ஜூலை 2012 தமிழில்: த.க.பாலகிருட்டினன்

.

Sunday, July 29, 2012

பா.ஜ.கட்சி தலைவர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகும் ஆர்.எஸ்.எஸ்.

கடந்த கோடை காலம் காவிக் குடும் பத்திற்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருந்தது. தொடர்ந்து வர உள்ள தேர்தல் பணிகளுக்கு முன்பு அமைதியுடன் மூச்சு விடுவதற்கான நேரமாக அது இருந்தது.
2012 நவம்பர்-டிசம்பரில்   தேர்தல் நடைபெற உள்ள குஜராத், இமாசல பிரதேச மாநில அரசுகளை தக்க வைத்துக் கொள்ளவேண்டும். 2013 மார்ச் ஏப்ரலில் நடைபெற உள்ள கர்நாடக மாநில ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவேண்டும். 2013 நவம்பர் டிசம் பரில் தேர்தல் நடைபெற உள்ள சத்தீஷ்கர், மத்தியபிரதேச மாநில அரசுகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி ராஜஸ்தான், டில்லி மாநிலங் களையும் கைப்பற்ற வேண்டும். இந்த மாநிலங்களில் எல்லாம் பெருமளவில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டு, 2014 ஏப்ரலில் நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வரவேண்டும்.  தவறாக ஒரு அடி எடுத்து வைத்தாலும் இந்த கனவு நொறுங்கிப் போய்விடும்.
இது மட்டுமன்றி பா.ஜ.க. தலைவர் களிடையேயும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் களிடையேயும் உட்கட்சிச் சண்டைகள் முன் எப்போதும் இல்லாத அளவில் நிலவி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்.சுக்கு வெளிப் படையான எதிர்ப்புகள் தோன்றுகின்றன; வெளிப்படையான கேலி கிண்டலுக்கு அந்த அமைப்பு உள்ளாகிறது. முன்பு எப்போதும் இவ்வாறு நடந்ததில்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன?
2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய முன் னேற்றக் கூட்டணி ஆட்சியை இழந்தது; 2005 ல் வாஜ்பேயி அரசியலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துவிட்டார். ஜின்னாவைப் புகழ்ந்து பேசிய அத் வானியின் நிலை பலவீனமடைந்து விட்டது. ஆர்.எஸ்.எஸ். இந்த நேரத்தில் பா.ஜ.கட்சியின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு அக் கட்சியின் கட்டுப் பாட்டைக் கைப்பற்றிக் கொண்டது. இரண்டாம் நிலை பா.ஜ.க. தலைவர்களை ஒருவருடன் ஒருவரை மோதவிட்டது.
பா.ஜ.கட்சி விவகாரங்களில் ஆர். எஸ்.எஸ். தலையிட்டு வந்ததை பா.ஜ. கட்சியினர் பொறுமையுடன் இது வரை சகித்து வந்தனர்; ஆனால் இப்போது திருப்பித் தாக்கத் தொடங்கிவிட்டனர். அத்வானியும் வாய்மூடி இருக்கவில்லை. மோடியை பா.ஜ.க.வின் அடுத்த பிரதமர் வேட்பாளராக  பெரும்பான்மையான ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பார்க்கின்றனர். ஆனால் முக்கியமான ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களுடன் மோடியின் உறவு சுமுகமானதாக இல்லை. குஜராத் மாநிலத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களும், பா.ஜ.க.மோடி எதிர்ப்பாளர்களும் பரிவார் தங்களைக் கைவிட்டுவிட்டதாகவே கருதுகின்றனர். இவ்வாறு தேவையானபோது தங்களைப் பயன்படுத்திக் கொண்டு, மற்ற நேரங் களில் தங்களை தூக்கி எறியும் ஆர்.எஸ். எஸ்.சின் மீது அவர்கள் இப்போது கோப மாக உள்ளனர். என்றாலும்  இவர்களையும் சமாதானப்படுத்தி தேர்தல் வெற்றி பெற ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது.
இந்த முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். வெற்றி பெறுகிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. பா.ஜ.கட்சியில் ஆர்.எஸ். எஸ். தனது செல்வாக்கை, நம்பகத் தன்மையை இழந்துவிட்டது. கட்சிக் காரர்கள் தங்களுக்குள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளும்போது ஆர்.எஸ்.எஸ்.சைப் பற்றி கேலியும் கிண்டலும் செய்கின்றனர்; இதுவரை அவர்கள் அவ்வாறு செய்ததில்லை.
பா.ஜ.கட்சியின் தேசிய அமைப்பு மற்றும் மாநில அமைப்புகளின் அன்றாட விவகாரங்களில்  தலையிட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். தான் ஓர் அரசியல் கட்சியல்ல, சமூக அமைப்பு என்று பேசி வருவதைக்  கேலி செய்கின்றனர். நமது கட்சித் தலைவரை அவர்கள் நம்மீது திணிக்கின்றனர். பிரதமர் வேட்பாளரை யும் அவர்கள் அறிவிக்கின்றனர். கட் சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் அவர்களே கையா ளுகின்றனர். அப்படியிருந்தும் தான் அரசியல் கட்சியல்ல என்று ஆர்.எஸ்.எஸ். கூறிக்கொள்கிறது என்று ஒரு மூத்த பா.ஜ.க. தலைவர் கிண்டலடித்தார்.
கடந்த மே, ஜூன் மாதங்களில் ராஜஸ் தான், கருநாடகா மாநில பா.ஜ.கட்சியில் உட்கட்சி மோதல்கள் உச்ச கட்டத்தை எட்டின. தனது விருப்பப்படி முதல்வரை நியமிக்க வைத்துவிட்டார் கருநாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா. குஜராத் முன்னாள் பா.ஜ.க. முதல்வர் கேசுபாய்படேல் கட்சி உறுப்பினர் பதவியைப் புதுப்பிக்கவில்லை.  மற்றொரு முன்னாள் அமைச்சர் ஜடாபியா மூன்றா வது அணி ஒன்றை உருவாக்க முனைந் துள்ளார். அனைத்துக்கும் மேலாக குஜராத் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பலர் கேசுபாய் படேலுக்கும் ஜடாபியாவுக்கும் உதவி செய்ய உறுதி அளித்துள்ளனர்.
கேசுபாயின் எதிர்ப்பைப் பற்றி ஆர்.எஸ்.எஸ். கவலைப் பட்டாலும், அவரது எதிரி மோடியை எந்த அளவிற்கு ஆதரிப்பது என்பதில் ஆர்.எஸ்.எஸ். இரு கருத்துகளைக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு மோடி யுடன் தனிப்பட்ட முறையிலும் பிரச் சினைகள் உள்ளன. 2011 இல் அகமதா பாதில் சத்பாவனா பட்டினிப் போராட்டம் நடத்தியபோது  மோடி  ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் அனுப்பப்பட்ட ராம் லால் மற்றும் சுரேஷ் சோனியைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டார். சுரேஷ் சோனிக்கும் மோடிக்கும் உள்ள பகை அவர்கள் இருவரும் பிரசாரகர் களாக இருந்த காலத்தில் தொடங்கிய தாகும்.
பா.ஜ.கட்சியை விடவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் விட தனக்கு ஒரு பெரிய தோற்றத்தை உருவாக்கிக் கொள்ளவே மோடி முயல்கிறார் என்று சுரேஷ் சோனி அறிக்கை அளித்தள்ளார். தனிப்பட்ட வர்கள் செல்வாக்கு பெறுவதை விரும்பாத ஓர் அமைப்பு இதனை செரிமானம் செய்து கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல.
அருண்ஜேட்லி அல்லது சுஷ்மா ஸ்வராஜை விட மோடியையே பிரதமர் வேட்பாளராகக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது.  அத்வானி தீவிர அரசி யலில் இருந்து ஓய்வு பெற்ற வழிகாட்டும் தலைவராக இருக்க வேண்டும் என்று அது எதிர்பார்க்கிறது. கட்சியை விட உயர்வாக உங்களை நீங்களே நினைத் துக் கொள்ள வேண்டாம் என்று மறை முகமான எச்சரிக்கையை மோடிக்கு ஆர்.எஸ்.எஸ்.அளித்துள்ளது.
இதில் உள்ள பிரச்சினை என்ன வென்றால், ஆர்.எஸ்.எஸ்.சே எந்தப் பிரச்சினையிலும் நிலையான கருத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான். இந்துத்துவா, நாட்டின் முன்னேற்றம், ஊழலற்ற அரசியல் என்ற எந்த விஷயத் திலும் அது தீவிரமாக இருக்கவில்லை. மோடி, எடியூரப்பா, வசுந்தராராஜே ஆகியோரை ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பது, தனிப்பட்டவர்களை புகழும் கலாசாரத் திற்கு எதிரான கொள்கையினால் அல்ல;  இந்த அதிகார விளையாட்டில் தாங்கள் வெளியே தள்ளப்பட்டு விடுவோம் என்ற அச்சம்தான் காரணம். நன்றி: தெகல்கா 14 ஜூலை 2012 தமிழில்: த.க.பாலகிருட்டினன்
ராணா அயூப்

(தொடரும்)

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

JULY 16-31

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...