Wednesday, August 31, 2011

ஒரு கடவுளுக்குப் பல பிறப்பா? விநாயகன் கதைகளைக் கேளீர்!


தொகுப்பு: குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்
1. முரண்பட்ட வரலாறு
பிள்ளையார்பற்றிய கதையை விளக்க வேண்டியது அவசியம். இந்த உண்மையை உணர்ந்தபின் பிள்ளையார் கடவுள்தானா? பிள்ளையார் பொம் மையை உடைத்ததனால் பெரியார் அவர் கள் என்ன அடாத செயலைச் செய்து விட்டார் என்பதைத் தெளிவாக உணர முடியும்.
புராணக் கதைகளில் கணபதியின் பிறப்பே பல்வேறு விதமாகக் கூறப்பட் டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூற முடியாது. ஆனால், ஒன்று தெளிவு. கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.
கணபதி, பெண் இல்லாமல் ஆணுக் குப் பிறந்தவர் என்றும், இதற்கு நேர் மாறாக ஆண் இல்லாமல் பெண்ணுக்குப் பிறந்தவர் என்றும் கூறப்படுகின்றன. புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பார்வதி, தன் உடல் அழுக்கை உருண் டையாக்கி விளையாடிக் கொண்டி ருந்தாளாம். அந்த உருண்டையின் மீது அவள் அன்பு சொரிய அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகன் என்று அழைத்தாளாம்.
மற்றொரு கதை: கணபதியின் பிறப்பை வேறு விதமாகச் சித்தரிக்கிறது. பார்வதி, தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத்துவாரத் தில் உள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்த பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அக்குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்றுவிட்டாளாம்.
மேற்கூறிய கதைகள் அனைத்தும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவுபடுத்த வில்லை. பிரம்ம வர்த்த புராணத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனிப் பார்வை தோஷத்தால் தலை இல்லாமல் பிறந்தானாம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ, விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத் தானாம். ஆனால், ஸ்கந்த புராணம் இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றினுள் புகுந்து குழந்தை யின் தலையைக் கடித்து தின்று விட்டா ளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே, அக்குழந்தை யானைத் தலை கொண்ட கஜாசுரன் என்ற இராட்சசன் தலையை வெட்டி தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும், கண்ணும் இல்லாத இக் குழந்தை தனக்குத் தலை இல்லையென் பதை எங்ஙனம் உணர்ந்தது? கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக்கொண்டது என்பதை ஸ்கந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.
சுப்ரபேத ஆகமம் என்ற நூல் கூறுவதாவது:
சிவனும், பார்வதியும் யானைகளைப் போல் சம்போகம் செய்தார்களாம். இதன் விளைவாகப் பிறந்தது யானைத் தலைக் குழந்தையாம்.
(ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா. என்ற நூலில் பக்கம், 365, 40, 41, 42)
2. விநாயகன் இடைக்கால வரவே!
அறிஞர்கள் சிலர் சங்க இலக்கியத்தில் விநாயகனைப்பற்றிய குறிப்பு காணப் படாததால் இடைக்காலத்தில் வந்த வழிபாடே விநாயகன் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்மவர்மனின், தானைத் தலைவனாகிய பரஞ்சோதியார் என்னும் சிவத்தொண்டன் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலைநகராகிய வாதாபியி லிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட் டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.
ஞானசம்பந்தரும், பொடி நுகரும் சிறுத் தொண்டர்க் கருள் செய்யும் பொருட்டாகக் கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே என்று பாடுகிறார்.
(டாக்டர் சோ. ந. கந்தசாமி, தமிழ்த் துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஞான விநாயகர் என்னும் கட்டுரையில், பக்கம் 20)
3. பண்டை இலக்கியத்தில் விநாயகன் இல்லை
நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகன் வழிபாடு சொல் லப்படவில்லை. திருஞானசம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகன் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமையம்மை பெண் யானையின் வடிவு கொள்ளச் சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்று வித்தான் என்கிறார். சிறுத்தொண்டர் பரஞ்சோதி என்ற பெயரோடு வட பகுதி யில் வாதாபி என்ற நகர்மேல் படை எடுத்துச் சென்று அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது, அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டுவந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என் பதும், வாதாபியிலிருந்து கொணர்ந்த மையால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.
(தமிழாகரர் வித்துவான் செ. வெங் கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தன்னை நினையத் தருகிறான் என்ற கட்டுரையில், பக்கம் 17)
(மேல் இரு கருத்துகட்கும் ஆதார நூல்: சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்குட முழுக்கு விழா மலர், 8.9.1978)
4. சிவனுக்குப் புதிய உறவு
பாடல் பெற்ற கோயில்களில், நாயன் மார் காலத்தில் விநாயகனை வைத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. விநாயகன் தமிழகத்துத் தெய்வம் அல்லர். முருகன் சங்க நூல்களில் இடம்பெற்றிருப்பதுபோல, விநாயகன் இடம்பெறவில்லை. விநாய கன் வழிபாடு பம்பாய் மாகாணத் தில்தான் மிகுதியாகக் காணப் படுகிறது. அம் மாகாணம் பல்லவர் காலத்தில் பண் டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந் தது. சிறுத்தொண்ட நாயனார் சாளுக்கிய நாட்டுத் தலை நகரான வாதாபியைக் கைபற்றியபோது இப்புதிய கடவுளை அங்குக் கண்டார். தாம் முன்னர் கண்டறியாத அத் திருவுருவத் தைக் கண்டதும் வியப்புற்று அதனை எடுத்துவந்து தம் ஊரில் சீராளதேவன் கோயிலில் வைத்து வழிபடலானார். அதுமுதல் சீராளன் கோயில் கணபதீச் சுரம் எனப் பெயர் பெற்றது என்பது தெரிகிறது. இக் கணபதீச்சுரமே சம்பந்தர் பாடல்களிலும் இடம்பெற்றது. பின்னர் நாளடைவில் இப்புதிய கடவுளுக்கும், சிவபெரு மானுக்கும் உறவு முறை கற்பிக்கப் பட்டது. அதன் பயனாக விநாயகன் சிவபெருமானுக்கு முதல் திருமகனாகக் கருதப்பட்டான். இவ் விநாயகன், வாதாபியிலிருந்து குடி யேறிய தெய்வம் என்பதை வாதாபி கணபதி பஜேம் பஜேம் என்னும் ஸ்தோத்திரத்தாலும் நன்குணரலாம்.
(சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய சைவ சமயம் என்ற நூலில், பக்கம் 62)

விநாயகனால் வந்த வினை


விக்னேஷ்வரன் - விக்னம் இல்லாமல் காப்பவன் என்று வித்தாரமாகப் பேசுகிறார்கள் - விநாயகனுக்குத் தோப்புக் கரணம் போட்டுச் சென்றால் நினைத்தது நடக்கும் என்றெல்லாம் புராண புழுதிகளைக் கொட்டி வைத்துள்ளனர்.
அதேநேரத்தில் இந்த விநாயகனால் இரண்டு வெள்ளைக்கார அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்ற வரலாறு தெரியுமா?
மகாராட்டிர மாநிலம் புனேயில் பிளேக் நோய் கடுமையாக பரவிய காலகட்டம். எலிகள் செத்து விழுந்து அதிலிருந்து கிருமிகள் பரவி பிளேக் நோயைக் கொடுத்துவிடும்.
பிளேக் நோய்க்குக் காரணமான எலிகளைக் கொல்லும் இயக்கத்தை வெள்ளைக்கார அரசு தீவிரப்படுத்தியது - மனிதாபிமானத்தோடு, மக்களை நோயிலிருந்து காப்பாற்றவேண்டிய கடமையைத்தான் பிரிட்டீஷ் அரசு செய்தது.
திலகர் பெருமான், திலகர் பெருமான் என்று தேள் கடிக்கு ஆளானவர்கள்போல் கதறுகிறார்களே - அந்த லோகமான்ய பால கங்காதரர் என்ற, கொழுத்த மீசைக்காரத் திலகர் பெருமான் என்ன வேலை செய்தார் தெரியுமா?
நமது பகவானாகிய விநாயகனின் வாகனம் எலி. அதன்மீது மிலேச்சர்களான - கிறிஸ்துவ வெள்ளைக்காரர்கள் கை வைத்துவிட்டனர் - வேட்டையாடி ஒழிக்கக் கிளம்பிவிட்டனர்! போச்சு! போச்சு!! நமது மதம் போச்சு - கலாச்சாரம் போச்சு என்று மதவெறியைக் கிளப்பி விட்டார்.
இதன் விளைவு என்ன தெரியுமா?
புனே நகரில் எலி ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த இரு வெள்ளைக்கார அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைக்குக் காரணமாக தூண்டி விட்டவர் என்ற முறையில் திலகருக்குப் பதினெட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வெள்ளைக்காரன்தான் கணவன் செத்தால், அவன் மனைவியையும் அவனோடு சேர்த்து எரிக்கவேண்டும் என்றிருந்த சதி என்ற உடன்கட்டை முறையை ஒழித்தான்.
குழந்தைப் பருவத்திலேயே பெண்களுக்குக் கலியாணம் செய்யும் கொடுமைக்கு முட்டுக்கட்டை போட்டான்.
இந்த இந்துத்துவாவாதிகளோ பழைமைக் குட்டையில் ஊறிய பாசிகளாக இருந்து மக்களைப் படுபாதாளத்தில் தள்ளினார்கள்.
விநாயகனை முதன்மைப்படுத்தி ஊர்வலம் நடத்தி, மக்களிடம் பெரும் அளவில் புழக்கத்திற்குக் கொண்டு வந்தவர் இந்தத் திலகர்தான். இவர்தான் ஆர்.எஸ்.எஸ்.வெறியின் மூலத்துக்கு வித்து போட்ட ஆலகால விஷம்!
அதனைக் கையில் எடுத்துக்கொண்டுதான் விநாயக சதுர்த்தி ஊர்வலம் என்று கூறி மற்ற மற்ற மாநிலங்களிலும் அதனை அரங்கேற்றி வன்முறை வெறியாட்டங்களை நடத்திக் கொண்டும் திரிகிறார்கள்.
ஆக, விநாயகன் என்பவன் விக்னேஷ்வரன் அல்ல. விக்னங்களைக் களைபவனும் அல்ல. மாறாக விக்னங்களை, வன்முறைகளை உற்பத்தி செய்வதற்கு இந்து வெறிக்கூட்டத்துக்குக் கையில் கிடைத்த மதக் கருவி - எச்சரிக்கை!

அடுத்து என்ன?


பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோர் மீதான தூக்குத்தண்டனை தொடர்பாக நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் - ஒரு திருப்பு முனையாகவும், கொஞ்சம் நிம்மதி அளிப்பதாகவும் அமைந்திருந்தன.
8 வார காலம் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் அளித்ததன்மூலம் ஒரு இறுக்கமான நிலையிலிருந்து மக்கள் கொஞ்சம் விடுபட்டுள்ளனர் என்பதில் அய்யமில்லை.
இது ஒரு தற்காலிக நிலைதான்; நிரந்தரமான நிலை என்பது - மூவர்மீது நிலுவையில் உள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவதுதான்.
இந்த வழக்கில் ஏற்கெனவே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டுள்ள நளினிக்குக் காட்டப்பட்ட அதே சலுகை இந்த மூவர் விஷயத்திலும் காட்டப்படவேண்டும் என்பதுதான் அனைவரின் ஒட்டுமொத்த வேண்டுகோளாகும்.
தீர்ப்பில் ஆண் - பெண் என்ற பாலியல் வேறுபாடுக்கு இடம் இல்லை என்பதுதான் சட்டத்தின் நிலை என்பதால், இந்தத் திசையில் அழுத்தத்தைக் கொடுப்பதுதான் சரியானதாக இருக்கும்.
ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்குமேல் தண்டனையை இவர்கள் அனுபவித்துவிட்டதால் நளினி உள்பட நால்வரையும் விடுதலை செய்வதுதான் நியாயமானதாக இருக்க முடியும்.
இப்பொழுது தற்காலிகமாக கிடைத்திருக்கும் வெற்றி எந்த ஒரு கட்சியின் தனிப்பட்ட வெற்றி என்று கூற முடியாது. ஒட்டுமொத்தமான இனவுணர்வும், மனித நேயமும், நியாயவுணர்வும் வெடித்துக் கிளம்பியிருக் கின்றன. திட்டமிட்ட ஏற்பாடுகள் (டீசபயளைந) ஏதுமின்றி அவரவர்களுக்கும் ஏற்பட்டுள்ள இயல்பான உணர்வுகள் தான் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பினை உருவாக்கிற்று.
இதன் விளைவாகக் கிடைத்துள்ள தற்காலிக வெற்றியை முழு வெற்றியாக மலர்விக்க தொய்வின்றி மக்கள் போராட்டத்தை எடுத்துச் செல்லவேண்டியது மிகவும் அவசியமாகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய தினம் ஒருமித்த முறையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும் என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது.
தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க.வின் தலைவர் கலைஞர் அவர்களும் அதனை வழிமொழிகின்ற வகையிலே, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத் துள்ளார். தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுவாக அனைத்துத் தரப்பினரின் கருத்தும் இதுதான். இப்பொழுது நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், தமிழ்நாட்டு மக்களின் இந்த நிலையை முன்வைத்து, அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும், அனுதாபத்தையும் ஒன்று திரட்டி, நல்லதோர் முடிவினை எட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவர் திரு. டி.ஆர். பாலு அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான முன்மொழிவின் மீது ஒன்று திரண்டு தமிழ்நாட்டு உறுப்பினர்கள் குரல் கொடுத்ததுபோலவே, இந்தப் பிரச்சினையிலும் நடந்துகொண்டால், நல்லது நடக்கும், நல்ல விளைவை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கொடுத்திருக்கும் எட்டு வார காலம் இடைக்காலத் தடை என்கிற வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இப்பொழுது பந்து மத்திய அரசின் உள்துறையிடம் உள்ளது. ஒரு தீர்ப்பை முன்வைத்து. இதுவரை இந்த அளவு மக்கள் எழுச்சியை, கொந்தளிப்பைக் காட்டிய தில்லை என்பது வெளிப்படை!
இதனை மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும் - உளவுத் துறை மூலமும் மத்திய அரசின் காதுகளுக்கு எட்டியிருக்கும். அதன் அடிப்படையிலும், ஒரு மாநில அரசே ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால், அதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டு மத்திய அரசு செயல்படவேண்டும்; உள்துறை அமைச்சர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் - வேறு உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல், வெகுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, மூவர்மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஏற்கெனவே அனுபவித்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் கருதி, நளினி உள்பட நால் வரையும் விடுதலை செய்யவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.
எல்லா மன்றங்களையும்விட மக்கள் மன்றமே வலிமையானது. அதைக் கவனத்தில் கொள்ளவும் வலியுறுத்துகிறோம்.

தினமலரின் எரிச்சல்!


தமிழ்நாடு சட்டப்பேரவையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து பக்கவாத்தியம் பகுதியில் டவுட் தனபாலை விட்டுப் பேச வைத் திருக்கிறது தினமலர் பார்ப்பன ஏடு!

இதே மாதிரி எல்லா கொலை, கற்பழிப்பு வழக்குக் கைதிகளையும் விட்டுடணும்... அப்போதான், தமிழக மக்களின் உணர்வு களுக்கு முழுமையா மதிப்பளிச்சதா அர்த்தமாகும்... என்று கிண்டலடித்து உள்ளது.
என்னதான் அ.தி.மு.க.வை இந்தக் கூட்டம் விழுந்து விழுந்து ஆதரித்தாலும், தமிழுணர்வு என்ற பிரச்சினைவரும் போது தங்களின் பார்ப்பன அடையாளத்தைக் காட்டிக் கொண்டு விடுகிறார்கள் பார்த்தீர் களா?

ஆயிரக்கணக்கான மக்களைக் கொன் றொழித்ததற்கும், தமிழ்ப் பெண்களைக் கற்பழித்துக் கொடுமை நடைபெற்றதற்கும் காரணமான ராஜபக்சேவுக்கு டில்லியில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கும் போது, எங்கே போனது இந்தப் புத்தி?

சங்கர மடத்தின் அடுக்களையில் ஒளிந்துகொண்டிருந்ததோ!

அல்லது ராஜபக்சேயின் பங்களாவில் பங்கா இழுத்துக் கொண்டிருந்ததோ!

Tuesday, August 30, 2011

தமிழிசை வளர்த்த ஆதி மும்மூர்த்திகளுக்கு மணிமண்டபம் கட்டும்பணி தொடர வேண்டும் மணவழகர் மன்ற விழாவில் தமிழர் தலைவர் வேண்டுகோள்


சென்னை, ஆக. 30- தமிழிசை வளர்த்த ஆதிமும் மூர்த்திகளான முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தா பிள்ளைக்கு மணிமண்டபம் கட்டும் பணி தொடர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை மணவழகர் மன்றத்தின் சார்பில் முத்தமிழ் விழா அறக்கட்டளையும், ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக் கட்டளையும் இணைந்து நடத்திய (மணவழகர் மன்றத்தின்) 55ஆம் ஆண்டு முத்தமிழ் விழா நிகழ்ச்சி நேற்று (29.8.2011) மாலை 6.15 மணிக்கு சென்னை பிராட்வே-ராஜா அண்ணாமலை மன்றத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கே.கன்னியப்பன்
இந்நிகழ்ச்சிக்கு  வந்தி ருந்த அனைவரையும் மண வழகர் மன்றச் செயலாளர் கே.கன்னி யப்பன், வர வேற்று பேசினார். முத் தமிழ் மன்றம் எவ்வளவு சிரமத்திற்கு இடையிலே நடைபெற்றது. இன்றைக்கு வெற்றி நடைபோடுகிறது. ஆரம்பத்தில் எம்.ஏ.எம். இராமசாமி அவர்கள் ரூ.பத் தாயிரம் கொடுத்தார். இன்றைக்கு அது பத்தொன்பது லட்சமாக வளர்ந்திருக்கிறது என்று பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், பேராசிரியர், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர் எல்லாம் இந்த மன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று அரும்பாடுபட்டதை விளக்கி அனைவரையும் வரவேற்று பேசினார்.

எம்.ஏ.எம்.இராமசாமி

அடுத்து அண்ணா மலைப் பல்கலைக் கழக இணைவேந்தர் எம்.ஏ.எம். இராமசாமி உரையாற் றினார். அவர் தமது உரையில் மணவழகர் மன்றத்தின் நிதி இருப்பு பத்தொன்பது லட்சம் என்று இங்கு கன்னியப்பன் சொன்னார். இப்பொழுது ஒரு லட் சம் வழங்குகிறேன்.

இந்த மணவழகர் மன்றத்திற்கு எது வேண்டு மானாலும் கேளுங்கள் செய்யத்தயாராக இருக்கி றேன். பெரியார் என்னுடைய தந்தையாருடன் நெருக்கமாக இருந்தவர். எங்கள் செட்டிநாடு ஊரில் உள்ள வீட்டில் பெரியார் தங்க வேண்டும் என்று கேட்டார். பெரியார் இரண்டு வருடங்கள், அதாவது 740 நாள்கள் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

நீங்கள் எவ்வளவு, காலத்திற்கு வேண்டுமானாலும், இங்கே தங்கியிருக்கலாம் என்று என்னுடைய தந்தையார் பெரியாரிடம் கூறினார். பெரியார் நாயுடன் வருவார். அதிலும் ராஜபாளையம் நாய் என்றால் பெரியாருக்கு மிகவும் பிடிக்கும். மாலை 5மணி ஆனால் தினந்தோறும் எங்கள் வீட்டு முன்பு பெரியார் நாற்காலியில் உட்கார்ந்திருப்பார். பெரி யாரை வேடிக்கை பார்க்க தினந்தோறும் எங்கள் வீட்டு முன்பு 20,30 பேர் கூடுவிடுவார்கள். அந்த அளவுக்கு பெரியார் எங்களுடைய குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தவர் என்று கூறி துவக்கவுரையாற்றினார்.


பு.ரா.கோகுலகிருஷ்ணன்

மணவழகர் மன்றத்தினு டைய காப்பாளர் குஜராத் மாநில முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் பு.ரா.கோல குலகிஷ்ணன்  தலைமையுரை யாற்றினார்.

1957ஆம் ஆண்டு முதல் இந்த மணவழகர் மன்றம் சிறப் பாக நடந்து வருகிறது. அன்றி லிருந்து இன்று வரை சமுதாயப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் எந்த வித பதவிகளைப் பற்றியும் எதையும் எதிர்பாராமல் இந்த சமுதாயத்திற்காகத் தொண்டாற்றி வருகின்றார். நாள்தோறும் தந்தை பெரியார் கொள்கையைப் பரப்பி வருகின்றார்.

மிகச் சிறந்த தலைவர் வீரமணி

திராவிடர் இயக்கத் தலைவர்களில் மிக முக்கியமான குறிப்பிடத்தக்க மிகச் சிறந்த தலை வராக விளங்குபவர் வீரமணி அவர்கள். பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் இந்தமன்றத்திற்கு அன்று தொட்டு இன்று வரை தொடர்புள்ளவர்கள். சிலர் பதவிகள் வந்தவுடன் நல்லவர்களை மறந்துவிடுகிறார்கள் என்று கூறி விளக்கிப் பேசினார்.

தமிழச்சி தங்கபண்டியன்

அடுத்து தமிழச்சி தங்கபாண்டியன் உரை யாற்றினார். அவர் தமது உரையில் தான் இந்த மன்றத்தில் இப்பொழுது தான் முதல் முறையாக உரையாற்றுவதாகக் குறிப்பிட்டவர், தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ் மொழியின் உயர் வையும் விளக்கினார்.

தமிழர் தலைவர் உரை

அடுத்து திராவிடர் கழக  தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

மிகச்சிறப்பான வகையிலே இந்த மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா அறக்கட்டளையும், ராஜா சர் அண்ணாமலை செட்டியார், நினைவு அறக்கட்டளையும், இணைந்து இன்றைக்கு 55ஆம் ஆண்டு விழாவை நடத்திக்கொண் டிருக்கின்றார்கள்.

55 ஆண்டுகளாக இந்த மணவழகர் மன்றம் மிகச்சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ் உணர்வுசிறிதும் குன்றாமல் இந்த மாமன்றம் மிகவும் அதிசயிக்க தக்கவகையிலே நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.

திரு.வி.க. வைத் தெரியுமா?

திரு.வி.க. என்றால் யார் என்று சொடுக்குப் போட்டுக் கேட்டால் எத்தனைத் தமிழர்களுக்குத் தெரியும்?

திரு.வி.க ஏதோ திரைப்படத்தில் நடித்திருந்தால் ஒரு வேளை இளைய தலைமுறையினருக்குத் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

தண்ணார் தமிழ் வளர்த்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரைப் போன்றவர்கள் நாங்கள் எல்லாம் படித்தோம். அங்கு தமிழைப் பெற்றோம் பெரியார் பல்கலைக் கழகத்தில் சுயமரியாதை உணர்வைப் பெற்றோம்.

பெரியார்-அண்ணா-கலைஞர் போன்றவர்கள் நம்முடைய மொழி உணர்வுக்காகவும்-இன உணர்வுக்காவும் இன்றைக்கும் தேவைப் படுகிறார்கள்.

தமிழ்த்தென்றல் திரு.வி.க. மறைமலை அடிகளார், பரிதிமாற் கலைஞர், ஆகியோர் எல்லாம் விரும்பிய செம்மொழி வரலாற்றைத் தெரிந்துகொள்ளக் கூட தமிழர்களுக்கு இன்றைக்கு உரிமை இல்லையா? தமிழிசையை வளர்க்க தமிழர்கள் பெரும்பாடுபட்டிருக் கிறார்கள். சர் ஆர்.கே.சண்முகம் அவர்கள் வெளிநாட்டிற்குச் சென்றிருக்கின்றார். தமிழ கத்திலே இருந்து ஒரு தந்தி அவருக்கு கிடைக்கிறது. என்னவென்றால் தமிழிசை இயக்கம் வென்றது என்பதுதான் அந்தத் தந்தியின் வாசகம். அதைப் பார்த்து அவர் மகிழ்ந்து தனது நண்பர்களி டத்திலே சொல்லுகின்றார். அப்பொழுது அருகிலிருக்கின்றவர்கள் கேட்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழிசை வென்றது என்றால் வேறு எந்த இசை அங்கு இருந்தது என்று அன்றைக்குக் கேள்வி கேட்டார்கள். அப்படிப் பட்ட ஓர் நிலை அன்றைக்கு இருந்தது.

தந்தை பெரியாரும், திரு.வி.கவும், இருவருமே அணுகுமுறையிலே சில கருத்துகளிலே மாறுபட் டிருக்கலாம். ஆனால் இருவருமே இன உணர்வுக்காகவும், மொழி உணர்வுக்காகவும் பாடுபட்டவர்கள்.

திரு.வி.க. பற்றி பெரியார்

பெரியாரே ஒரு முறை சொல்லுகிறார். எனக்கு அவ்வளவு தமிழ் பேசத் தெரியாது. இந்த அளவுக்குத் தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்தது என்றால் நான் திரு.வி.க.வுடன் பழகியதும், அவருடைய உரையாடல்களை கேட்டதும், நவசக்தி இதழைப் படித்ததுமே காரணம் என்று ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருக்கின்றார்.

24.10.1948 ஈரோட்டில் தி.க. தனி மாநாடு ஸ்பெசல் மாநாடு நடைபெறுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு அது. அண்ணா  அவர்களை காரிலே அமர வைத்து தந்தை பெரியார் நடந்து வந்தார். அந்த மாநாட்டிற்கு அண்ணா தலைமை தாங்குகிறார். அப்படிப்பட்ட சிறப்பு கொண்ட மாநாட்டில் திராவிட நாடு படத்தை திரு.வி.க. திறந்து வைக்க தந்தை பெரியார் அழைத்தார்.

பெரியார் பற்றி திரு.வி.க.

திரு.வி.க. அந்த மாநாட்டில் பேசுகிறார். சமுதாய முன்னேற்றத்திற்கு பெரியார்கள் அவ்வப்பொழுது தோன்றிக்கொண்டுதான் இருப்பார்கள். திராவிட மக்களுக்கு நல்வழி காட்டி அவர்தம் அடிமை வாழ்க்கையை மாற்றி இன்ப வாழ்வை அமைக்க இயற்கை தோற்றுவித்த பெரியார் தான் நம் பெரியார்.

காந்தியைப் போல அகிம்சா வாதியாகப் பெரியார் திகழுகிறார். சாக்ரடீசை மிஞ்சிய சீர்திருத்தவாதியாக பெரியார் திகழுகிறார். இப்படி திருவிக ஏன் பெரியாரைப் பாராட்டினார்? காரணம் தமிழர்களுடைய அடிமைத்தனம் அகல வேண்டும் என்பதற்காகப் பாராட்டினார்.

இதனுடைய வேர் எங்கேயிருக்கிறது? காரணம் பண்பாட்டுப் படை எடுப்பு. அதனால்தான் திரு.வி.க. சீர்திருத்தவாதி சாக்ரடீசை மிஞ்சியவர் பெரியார் என்று சொல்லுகின்றார். அன்றைக்கு சீர்திருத்த கருத்துகளை பரப்பிய சாக்ரடீசுக்கு நஞ்சு கொடுத்து கொன்றார்கள்.

ஆனால் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். பெரியார் தனது கொள்கை தனது காலத்திலேயே வெற்றி பெற்றதைப் பார்த்தவர் என்று சொன்னார்.

எனவே கையிலே போடப்பட்ட விலங்கை அது கண்ணுக்குத் தெரியும் உடைத்துவிடலாம் அதே போல காலுக்குப் போட்ட விலங்கு கண்ணுக்குத் தெரியும். அதை உடைத்துவிடலாம். ஆனால் மூளைக்குப் போடப்பட்ட விலங்கு கண்ணுக்குத் தெரியாது. அதுதான் பண்பாட்டுப் படை எடுப்பு.

தமிழர்கள் போராட வேண்டிய களம்

தமிழர்களின் இசைக்காகப் போராட வேண்டியிருக்கிறது. தமிழன் கட்டிய கோவிலில் இன்னமும் தமிழன் அர்ச்சகராக நுழைய முடியவில்லை. நீதிமன்றம் குறுக்கே நிற்கிறது.

தமிழ் வருடப் பிறப்பு சித்திரை என்று இன்றைக்கு இந்த அரசு சொல்லுகிறதே. அது தமிழர்களின் சொத்தா? 60 தமிழ் வருடங்கள் என்று சொல்லு கிறார்களே. இது அறிவுக்குப் பொருந்துமா? கலைஞர் அவர்கள் தமது ஆட்சி காலத்தில் தை முதல்நாள்தான் தைப்புத்தாண்டு என்று அறிவித்தார். 500 தமிழறிஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 1921ஆம் ஆண்டு எடுத்த முடிவு. தை முதல்நாள்தான் தமிழர்களுக்குப் புத்தாண்டு என்று அறிவித்தார்கள். உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லாம் தை முதல்நாள்தான் தமிழர்களுக்குப் புத்தாண்டு என்பதை அறிந்து மகிழ்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத் தினார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற அரசு தமிழர்களுக்கு புத்தாண்டு சித்திரை என்று அறிவித்திருக்கிறது. நான் இந்த மேடையில் அரசியல் பேச விரும்பவில்லை.

ஒரு பார்ப்பன பண் பாட்டு படைஎடுப்பு ஏற் பட்டிருக்கிறது. தமிழ னுக்குப் புத்தாண்டு கூடாதா? அண்ணா அவர்கள் சுயமரியாதை திருமணத்திற்கு சட்டவடிவம் கொண்டு வந்தார். அன்றைக்கு சட்டமன்றத்திற்கு குறிப்பெடுப்பவனாக நான் சென்றிருந்தேன். எதிர்கட்சித் தலைவர் கருத்திருமன் சுயமரியாதை திருமணத்தின் சட்ட வடிவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகிறார்.

அப்பொழுது சொன்னார். புரோகிதர்களுக்கு இனி வேலையில்லாதத் திண்டாட்டம் ஏற்படும் என்று சொன்னார். உடனே அண்ணா சொன்னார். நாங்கள் சுயமரியாதை திருமணத்திற்குத்தான் சட்ட வடிவம் கொண்டு வந்தோம். புரோகிதர் திருமணத்தை தடுக்கவில்லையே. இரண்டு புரோகிதர்களை வைத்துக்கொண்டு வேண்டு மானாலும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார்.

எனவே தமிழர்களுக்கு புத்தாண்டு தை முதல்நாள் தான் என்றால் சென்ற ஆட்சி செய்தது என்பதை மாற்றுவதா? தமிழ் கலைக் களஞ்சியமான சிங்கார வேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணியில் 1691 பக்கத்தில் வருஷம் என்ற தலைப்பில் எழுதியிருக்கின்றார். தமிழ் ஆண்டுகள் பிரபவ, சுக்கில, ஸ்ரீமுக, பார்த்திப, சித்ரபானு என்று 60 வருடங்கள்  எழுதப்பட்டிருக்கின்றதே இதில் ஒரு சொல்லாவது தமிழ் சொல் உண்டா? இதைத் தான் பண்பாட்டுப் படை எடுப்பு என்று சொல்லுகின்றோம். இளைய தலைமுறையினர் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

சங்கீத மும்மூர்த்திகள் என்று தியாகய்யர் (1767-1848), முத்துசாமி தீட்சிதர் (1776) சியாமா சாஸ்திரி(திருவாரூர்) என்று சொல்லுகிறார்கள். இவர்களா சங்கீத மும்மூர்த்திகள்?

தமிழ் இசையை வளர்த்த தமிழறிஞர்கள் தமிழ் இசை ஆதி மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்டவர்கள் யார் என்றால் 1. முத்துத்தாண்டவர் (கி.பி. 1525-1625) 2.அருணாச்சலக் கவிராயர் (1712-1779) 3.மாரிமுத்தா பிள்ளை.

இன்றைக்கு இம்மும்மூர்த்திகளுக்கு மணி மண்டபம் கட்ட தி.மு.க ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவார்களா? இந்த ஆட்சியில்-தெரியவில்லை.

எனவே தமிழர்களே தமிழனின் அடிமை விலங்கை ஒடிப்பது நமது கடமை. அதற்காக உரக்கச் சிந்தியுங்கள். சிந்திப்பதோடு நின்று விடாதீர்கள் தமிழின உணர்வு பெற செயல் படுங்கள். -இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

பேராசிரியர் க.அன்பழகன்

நிறைவாக தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன் பழகன் தமிழ் மொழி, தமிழின உணர்வு பற்றி யும், பெரியார், அண்ணா, திரு.வி.க., கலைஞர் ஆகி யோர் தமிழ் சமுதா யத்திற்கு ஆற்றி வருகின்ற தொண்டறத்தைப் பற்றியும் நீண்டதொரு சொற்பொழிவு மூலம் சுவைபட விளக்கினார்.

இறுதியாக மணவழகர் மன்றத் துணைச் செயலாளர் சு.கருணாநிதி நன்றி கூறினார்.

வேண்டாம் தற்கொலை!


பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் உயிரின் நிலை என்ன? அவர்களின் உயிர்கள் மீட்கப்பட்டு விடக் கூடாதா? என்று உலகத் தமிழர்கள் அத்தனைப் பேரும் உறக்கமின்றித் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்தக் காரணத்துக்காக இன்னொரு செங்கொடி என்ற தமிழச்சி  தீக்குளித்துத் தன் உயிரைப் போக்கிக் கொண்டார் என்பது வெந்தப் புண்ணில் எரியும் தீக்குச்சியைச் சொருகியது போல் இருக்கிறது. இது தேவைதானா? இந்தச் செயலால் விளையப் போவது என்ன? எல்லோருக்கும் - உணர்வு  இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளாதவர்கள் எல்லாம் உணர்வற்றவர்கள் என்று பொருளாகாது.

ஒரு போராட்டக் களத்தில் உயிர் தருவது என்பது வேறு - அது உன்னதமானது வரலாறும் மெச்சக்குரியதாகும். அதே நேரத்தில் ஒரு களத்தில் நம் உயிரை நாமே மாய்த்துக் கொள்வது எப்படி உன்னதமானதாக இருக்க முடியும்?போராட வேண்டிய நேரத்தில் உயிரைப் போக்கிக் கொள்வதால் எதிரிக்குத் தான் பலம் சேர்க்கும்.இந்த முறையே கூடாது என்று பொதுவாக தலைவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள் என்றாலும், இது போதுமானதல்ல; மிக அழுத்தமாகக் கூற வேண்டும்; திருப்பித் திருப்பி கூற வேண்டும். அறிக்கைகளாக வெளியிட வேண்டும்.தற்கொலை செய்து கொண்டவர்களை வீரர்களாகவும், வீராங்கனைகளாகவும் காட்டிப் பெரிதுபடுத்தும்போது, விளம்பரப்படுத்தும்பொழுது, மற்றவர்கள் மத்தியிலும் வேறு வகையான உணர்ச்சிகள் தூண்டப்படுவதற்குக் காரணமாக இருந்து விடக் கூடாதல்லவா!இதுபோன்ற கூட்டங்களில் இரங்கல் உரையாற்றும் போதுகூட, இதனை மிக அழுத்தமாக வெளிப்படுத்த வேண்டும்.சாகச் செய்வானை சாகச் செய்யாமல் சாகின்றாய் தமிழா என்று புரட்சிக் கவிஞர் சொன்ன வரிகளை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்வதாக மிரட்டுவதையேகூட தந்தை பெரியார் ஏற்றுக் கொண்டவர் அல்லர்.காந்தியார் அத்தகு உண்ணாவிரதம் மேற் கொண்டபோதுகூட அதனை சண்டித்தனம் என்று கண்டித்தவர் தந்தை பெரியார்.நம்மீது பரிதாபத்தை உண்டாக்கி உரிமைகளைக் கேட்பது கூடாது - அது ஒரு வகையான யாசகம் ஆகும்.தந்தை பெரியார் அந்தக் கால கட்டத்தில் எச்சரித்தது - சரியாகப் போய் விட்டது என்பதை இப்பொழுது அரங்கேறும் உண்ணாவிரதங்களைப் பார்க்கும் பொழுது தெளிவாகிறதே!எந்தப் போராட்டம் என்றாலும் வெளிப்படையாக அறிவித்து, தடை வந்தாலும் அதனைமீறி நடத்திக் காட்டி, அதற்குரிய தண்டனையை இன்முகத்தோடு எதிர் கொள்வதுதான் உண்மையான வீரமாகும்.எந்தவித உரிமைகளைப் பெறுவதாக இருந்தாலும் அதற்குரிய கஷ்ட நஷ்டம் என்னும் விலை கொடுத்தாக வேண்டும் என்பதுதான் சரியான அணுகுமுறையும், நாணயமான செயல்முறையுமாகும்.போராட்டக் காலங்களில் தந்தை பெரியார் வெளியிடும் அறிக்கைகளைப் பார்த்தால் அதன் வீரியமும், விவேகமும் விளங்கும்.வீணாக உணர்ச்சி வயப்பட்டு, பின் விளைவு களைப் பற்றிக் கவலைப்படாமல் மேற்கொள்ளும் எந்தச் செயலும் எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் - ஏமாற்றத்தைக் காண்பதுதான் மிச்சமாகும்.முத்துக்குமரனோடு முடிந்து போகும் என்று நினைத்தது நடக்கவில்லை; இப்பொழுது செங்கொடியும் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டார். இதாவது கடைசியாக இருக் கட்டும் என்று தலைவர்களும், ஊடகங்களும் உரக்கக் கூறட்டும்! சப்தம் போடட்டும்!உயிர் என்பது விலை மதிக்கப்பட முடியாதது; அது மலிவாகப் போய் விடக் கூடாது; வெறும் உணர்ச்சி வயம் என்று பலகீனத்திற்குப் பலியாகி விடக் கூடாது.தன்னைத்தானே மாய்த்துக் கொண்டவர்களின் கல்வெட்டில் - தற்கொலை செய்து கொள்ளாதே மனிதா! என்ற வாசகங்கள் பொறிக்கப்படட்டும்!திருத்தணியில் நடைபெற்ற காஞ்சி மண்டல திராவிடர் கழக மாநாட்டில்கூட தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தமிழினப் பெரு மக்களுக்கு இந்த வேண்டுகோளை முன் வைத் துள்ளார் - தலைவர்களும் பின்பற்றுவார்களாக!

மாரடைப்பைத் தடுக்க இதோ புது மருந்து!


மனிதர்கள் நன்றாக வாய்விட்டு சிரிக்கும் போது, அவர்களது இதயத்திற்குப் போகும் இரத்தக் குழாய்கள் மிகவும் விரிவடைந்து, ரத்தக் குழாயில் தாராளமாய் ரத்தம் ஓடிடவும், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், அந்தச் சிரிப்பு (நமக்கு) மனிதர்களுக்குப் பெரிதும் உதவிடு கிறது என்கிறார்கள் இத்தாலி நாட்டின் பிஸா (Pisa) பகுதியில் உள்ள Institute of Chemical Philsiology என்ற அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சி மூலம் - மாரடைப்பு வராமல் தடுக்க ஒரு புதிய மருந்தாகி இந்த வாய்விட்டு சிரிக்கும் சிரிப்பு ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரீசில் உள்ள European Society of cardialogists என்ற அமைப்பு மாநாட்டில் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தனர்.

இதயநோயாளிகளில் 78.5 விழுக் காடு உள்ளவர்கள் இதய நோயி லிருந்து விடுபட்டிருப்பதற்குக் காரணம், கோபப்படாமல் அவர்கள் வாழுவது தான்!

இன்னொரு கல்வியகத்தில் கோபம் வந்தவர்களை வைத்து ஆய்வு செய்தனர். அவர்களில் 57.4 சதவிகிதம்தான் வாழுகிறார்கள். இதயநோய் தாக்கும் நிலை அவர்கள் பலருக்கு உண்டு!

அமெரிக்க பால்டிமோர் மருத்துவமனை ஆய்விலும் இத்தாலிய ஆய்வினையே செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். இரத்தக் குழாய் மட்டுமா விரிவடைகிறது - நம் மனங்களும்கூடத்தான்!

மருந்துகள் தரும் சிகிச்சைகளை விட, மன மகிழ்ச்சி, இறுக்கத்தினை எட்டி நில் என்று சொல்வதுபோல் எப்போதும் கல கலப்பான சிரிப்பு மன்னர்களாக வாழுப வர்கள் ஆயுள் குறிப்பாக இதயநோய் வந்தபிறகும்கூட அவர்கள் ஆயுள்  நீளும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்கிறார் டில்லி எஸ்கார்ட்ஸ் (நுளஉடிசவள) மருத்துவ மனையின் பிரபல இதய சிகிச்சை டாக்டர் அசோக் சேத் அவர்கள்!

அவர் முக்கிய அறிவுரை கூறுகிறார் - இதயநோயாளிகள் மட்டுமல்ல; பொது வான மனிதர்கள் எவரும் கோபம் கொள்ளுவதால் மாரடைப்பு விரைவுடன் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று எச்சரிக்கையாகக் கூறுகிறார்.

நமது சுரப்பிகள் (Adrenaline and Rasconstrictor) ஹார்மோன்கள், ரத்தக் குழாய்களைச் சுருக்கி, இரத்த ஓட்டத் திற்குத்தான் தடை ஏற்படுத்தி மாரடைப்பு சிவப்புக் கம்பளம் விரிக்கின்றனவாம்!

228 நோயாளிகளில் 200 பேர்கள் ஆண்கள். இதில் 51 பேர்கள் இதய நோய் - மாரடைப்புக்கு ஆளானவர்கள் 28 மரணங்கள் 23 மாரடைப்பு நோயாளிகள் மாறிய நிலை!

வள்ளுவர் சொன்ன சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி எவ்வளவு அறிவி யல் பூர்வக் கருத்து என்பதை எண் ணுங்கள்.

மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்   - குறள் (303)

இதன் பொருள்: ஒருவன், யாரொரு வரிடத்திலும் சினங்கொள்ளாமல் அந்தச் சினத்தை அறவே மறந்துவிட வேண்டும். இல்லையென்றால், அந்தச் சினத்தால் தீமையான விளைவுகள் தாம் அவனுக்கு ஏற்படும்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற    - குறள் (304)

ஒருவனது முகத்தில் வெளிப்படும் சிரிப்பையும் அகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியையும் அடியோடு அழிக் கின்றன. சினத்தைவிட, அவனுக்குப் பகையாக விளங்கும் பொருள் வேறு ஏதொன்றும் இருக்க முடியாது.

வள்ளுவர் சிந்தனை எப்படிப்பட்ட அறவியல் சிந்தனையாக உள்ளது என்பது எல்லையற்ற மகிழ்ச்சிக்குரியது அல்லவா?

மூவருக்குத் தூக்கு நளினிக்குக் காட்டிய அதே உணர்வை - இந்த மூவர் விஷயத்திலும் காட்டக் கூடாதா? திருத்தணி மாநாட்டின் சிறப்பு அம்சங்கள்


காஞ்சிபுரம் மண்டல திராவிடர் கழக மாநாடு திருத்தணியில் 28.8.2011 மாலை 6 மணிக்கு கமலா திரையரங்கம் அருகில் சுயமரியாதைச் சுடரொளிகள் கே.பி. தேசன் - ஓவியர் வாசு ஆகியோர் நினைவரங்கில் சிறப்பாகத் தொடங்கப் பெற்றது. திராவிடர் கழகக் கொடியை கழகத் தலைமை நிலைய செயலாளர் வீ. அன்புராஜ் ஏற்றி வைக்க மாநாடு தொடங்கியது.

மாநாடு பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் மாநிலத் தலைவர் கவிஞர் பொதட்டூர் புவியரசன் தலைமையில் நடைபெற்றது.

அனைவரையும் வரவேற்று திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் கெ. கணேசன் உரையாற்றினார். தலைவரை முன்மொழிந்து மண்டல செயலாளர் மோகனவேலு உரையாற்றினார்.

வழி மொழிந்து செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.கோ. கோபால்சாமி அரக்கோணம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பொ. பெருமாள்  ஆகியோர் உரையாற்றினர். காஞ்சி மண்டலத் தலைவர் பு. எல்லப்பன் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசினார்.

மாநாட்டின் தொடக்கவுரையை அரக்கோணம் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் மா. பெரியண்ணன் நிகழ்த் தினார்.

(தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நேற்றைய விடுதலையில் வெளிவந்துள்ளது)

தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங் கத்திற்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு தலைமை வகித்தார்.

ஜாதி மதமற்ற சமுதாயம் என்ற தலைப்பில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரட்டீஸ், ஆரிய ஆதிக்கத்தை அழித்தொழிப்போம் என்ற தலைப்பில் காஞ்சி மாவட்டக் கழக அமைப்பாளர் காஞ்சி கதிரவன், இனமான உரிமைகளை வென்றெடுப்போம் எனும் பொருளில் முனைவர் அதிரடி அன்பழகன் ஆகியோர் சிறப்பாக உரையாற்றினர்.

கழகத் துணைப் பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், மாநில மாணவரணி துணைச் செயலா ளர் நம்பியூர் சென்னியப்பன் ஆகியோரும் பங்கேற்றனர். மாவட்டத் துணைத் தலைவர் வழக்குரைஞர் மா. மணி இணைப்புரை வழங்கினார்.

தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் உரை நிகழ்த்தியதற்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சிறப்புரை - நிறைவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் நிறைவுரை

அவர்தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது: பொதுவாகப் பக்தர்கள் கூடும் ஊர் இது. இந்த ஊரிலே பகுத்தறிவுவாதிகள், கறுஞ்சட்டையினர் கூடி பகுத்தறிவுக் குரல் கொடுத்துள்ளனர். பக்தர்கள் பெரும் அளவு நடமாடினாலும், வழி நெடுக கோயில்கள் இருந்தாலும் எந்தவித சிறு அசம்பாவிதமும் நடைபெறாது கழகத்தின் கட்டுப்கோப்புக்குக் கிடைத்த வெற்றி.

யாரும் ஆட்சேபிக்க முடியாத கொள்கைகளைக் கொண்டது நமது இயக்கம் என்றார் தந்தை பெரியார். அதனால்தான் இந்தக் கொள்கைகளைப் பின்பற்ற முடியாதவர்கள்கூட, அதனை ஆட்சேபிக்க முடியாதவர் களாக இருக்கிறார்கள். தந்தை பெரியாரின் சுற்றுப் பயணம் தனி மனிதரின் சுற்றுப் பயணம் அல்ல. ஒரு தத்துவத்தின் சுற்றுப் பயணம்.

இந்தத் திருத்தணி பகுதியில் தந்தை பெரியார் அவர்களின் காலத்தில்கூட நம் இயக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றதில்லை. தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகுதான் அதிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைக்கு மிகச் சிறப்பான எழுச்சியூட்டும் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் உடலால் இன்று இல்லாவிட்டாலும் அவர்களின் கொள்கைகள் நாளும் நாளும் மேலும், மேலும் வெற்றி பெற்று வருகின்றன என்பது தந்தை பெரியார் அவர்களுக்குக் கிடைத்த பெருமையாகும்.

பக்தி பெருகி வருவதாகக் கூறுகிறார்கள். உண்மை யிலே யார் கடவுளை நம்புகிறார்கள்? உண்டியலில் கூட எந்தப் பணத்தைப் போடுகிறார்கள்? செக் மூலமாகவோ, டி.டி. மூலமாகவோ முகவரியுடன் கோயில் உண்டியலில் பணம் போடச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், தங்கள் பாவத்தைப் போக்குவதாக நினைத்துக் கொண்டு அள்ளிக் கொட்டு கிறார்கள் (பலத்த சிரிப்பு - கைதட்டல்).

பொதுவாக லஞ்சம் உற்பத்தியாகும் இடமே கோயி லாகும் என்று குறிப்பிட்டார். விடுதலை ஏட்டின் சாதனைகள் குறித்து விடுதலை ஆசிரியர் குறிப்பிட்டதாவது:

தந்தை பெரியார் அவர்களின் அறிவு ஆயுதமான விடுதலை ஏடு சாதித்தவை கொஞ்சமா? ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்தது யார்? அந்தத் திட்டம் மட்டும் ஒழிக்கப்படாமல் இருந்திருந் தால் குப்பன் மகன் சுப்பன் இன்று அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினீய ராகப் பணியாற்றுகிறானே - இது நிகழ்ந்திருக்குமா?

தமிழ்நாட்டில் எத்தனைப் பொறியியல் கல்லூரிகள்? எத்தனை பாலிடெக்னிக்குகள்? இந்தியாவிலேயே 69 சதவிகித இடஒதுக்கீடு தமிழ்நாட்டில்தானே இந்தச் சாதனைகளில் விடுதலையின் பங்கு சாதாரணமானதா? என்ற வினாவைத் தொடுத்த தமிழர் தலைவர் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை மாற்றி சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றியுள்ள ஆட்சிக்குத் தன் கண்டனத்தைத் தெரிவித்தார்.

மக்கள் நம்பிக்கையை சட்டத்தால் மாற்றக் கூடாதாம்: அப்படியென்றால் பெண்களுக்குத் திருமணத்தை எட்டு வயதிலேயே நடத்தினார்களே - அந்தச் சம்பிரதாயத்தை மாற்றி 18 வயது என்று சட்டம் செய்தார்களே, அது தவறானதா?

சம்பிரதாயத்தை மாற்றக் கூடாது என்றால் குடும்ப நலத் திட்டத்தை அரசு வற்புறுத்தலாமா?

கருச்சிதைவுக்குச் சட்ட சம்மதம் தெரிவிக்கப் பட்டுள்ளதே - அதனை மாற்றிச் சட்டம் செய்வார்களா என்ற வினாவை அர்த்தத்தோடு எழுப்பினார். இவற்றிற்கு யார்தான் பதிலிறுக்க முடியும்?

தை முதல் நாளை மாற்றி மறுபடியும் சித்திரை முதல் நாளை கொண்டு வந்தது - பச்சையான பார்ப்பனப் பண்பாட்டுப் படை எடுப்பே!

இதனை எளிதாக திராவிடர் கழகம் விட்டு விடாது! ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒன்றிணைத்துப் போராடுவோம்.

ஆண்டு வருமானம் 9000 ரூபாய் என்று இருந்தால் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று ஆணை பிறப்பித்தார் எம்.ஜி.ஆர். அதனைப் போராடி இடஒதுக்கீட்டை மீட்கவில்லையா? அதே போல பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம் என்றார். பேரறிவாளன், சின்ன சாந்தன்,  முருகன் ஆகிய மூவருக்குமான தூக்குத் தண்டனைபற்றி கருத்துத் தெரிவித்தார் கழகத் தலைவர். மூன்று பேர்கள் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்களே - இவர்கள் மூவரும் பார்ப்பனர்களாக இருந்தால் இந்தப் பார்ப்பன ஊடகங்கள் இப்படி எழுதுமா?

மரணத்தைவிட கொடுமையானது மரணத்தை ஒவ்வொரு நாளும் எதிர்ப்பதாகும். இந்தத் தூக்குத் தண்டனையில்கூட நளினுக்குத் தூக்குத் தண்டனையை மாற்றி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதே - வரவேற்கிறோம். அதே அளவுகோல், அதே அணுகுமுறை இந்த மூவர்கள் பேரிலும் காட்டலாமே என்பதுதான் நமது வேண்டுகோள்.

சட்டத்தில் பாலியல் பார்த்துத் தீர்ப்பு என்பது கிடை யாதே! அதே சட்டப்படி பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன்  ஆகியோர் விஷயத்திலும் நடந்து கொள்ளலாமே என்பதுதான் நமது அன்பான வேண்டுகோள்.

காஞ்சிபுரத்திலே இது தொடர்பாக ஒரு பெண் தீக்குளித்து மாண்டார் என்ற தகவல் இப்பொழுது கிடைத்தது. இத்தகைய முயற்சிகளில் யாரும் இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். தற்கொலை களால் இவற்றிற்குப் பரிகாரம் காண முடியாது. உரிய முறைகளில் போராடி வெற்றி பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
(முழு உரை பின்னர்)

முதல் அமைச்சருக்குத் தமிழர் தலைவரின் வேண்டுகோள் அறிக்கை


சட்டமன்றத்தின் இன்றைய தீர்மானத்திற்கு முன்பே காலையில் எழுதப்பட்ட அறிக்கை இது!
வாதப் பிரதிவாதங்களுக்கான நேரமல்ல இது!

மனிதநேயத்தை, கருணை உள்ளத்தைக் காட்ட வேண்டிய காலம்!
மூவர் தூக்குத் தண்டனை ரத்து செய்யக்கோரி
சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றலாம்


உலகத் தமிழர் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை எதிர்பார்க்கும் உணர்வு இது!
மக்கள் மன்றத்தின் உணர்வை சட்டமன்றம் பிரதிபலிக்க வேண்டும்


பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் உள்ளிட்ட அனைவரின் சார்பாக முதல் அமைச்சரிடம் கேட்டுக் கொள்ளும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் வதியும் இளைஞர்கள் பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு, நாடு முழுவதும் உள்ள மக்கள் உணர்வாக - வெள்ளப் பிரவாகமாக பெருக்கெடுத்தோடும் நிலையில், நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகள் (காங்கிரஸார் தவிர) இம்மூவர் உயிரைக் காப்பாற்ற தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் முன்வர வேண்டும்; கருணை காட்டிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

முதல் அமைச்சரின் அறிக்கை

நேற்று இதுசம்பந்தமாக தமிழக சட்டப் பேரவையில் விதி 110 (விவாதம் செய்ய இயலாது என்ற விதி)இன் கீழ் அறிவித்த ஓர் அறிக்கையில்,

...எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு மேதகு குடிஅரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்தவித ஆதிகாரமும் மாநில முதல் அமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தித் தெரிவிக்க விரும்புகிறேன் என்று தமிழக முதல் அமைச்சர் தெரிவித்திருப்பது, மிகுந்த ஏமாற்றத்தையும் மன வேதனையையும் உலகமெங்கும் வாழும் கோடானு கோடி தமிழர்கள் உள்ளத்தில் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

1991 (5.3.1991)இல் மத்திய உள்துறை அமைச்சரகம் தெரிவித்த கடிதம் என்ற ஒரு கருத்துரை,

19.4.2000-த்தில் தி.மு.க. அமைச்சரவை முடிவு என்பது போன்ற சிலவற்றைச் சுட்டிக் காட்டி, தனது இயலாமையை நமது முதல் அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வேண்டியது கருணை உள்ளம் - மனிதநேயம்!

மிக்க வணக்கத்துடன் நமது முதல் அமைச்சர் அவர்களுக்கு நாம் தெரிவித்துக் கொள்ள விரும்புவ தெல்லாம்; மூன்று உயிர்கள் இன்னும் சில நாள்கள் தான் என்று ஊசலாடும் நிலையில், முன்னால் வந்து நிற்க வேண்டியது முதலமைச்சரின் கருணை உள்ளமும் மனிதநேயமும் தானே தவிர, வாதத் திறமையோ, அரசியல் சட்டம்பற்றிய பல்வேறு அம்சங்களின் விளக்கமோ அல்ல.

வீதிகளில் திரளும் மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், கண்ணீரும் கம்பலையுமாக அழுது புலம்பி, (காஞ்சியில் செங்கொடி என்ற தீக்குளித்த பெண்ணின் தியாகம்போல்) பலவற்றில் ஈடுபடும் உணர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றுள்ள ஒரு மனிதாபிமான பிரச் சினையில், பரஸ்பர குற்றச்சாட்டுகளை - அரசியல் களமாக்கிக்  கூறுவதைவிட மிக முக்கியம் எந்த வகையிலாவது உதவிட வழிவகை உள்ளதா என்பதை ஆராய்வதும், அப்படி ஆராய்ந்து முயற்சி எடுப்போருக்கு உறுதுணையாக இருப்பதும்தான்!

முதல்வரிடம் கோரிக்கை விடுப்பவர்கள் எவரும் அவரையோ, அவரது அரசையோ தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு செய்யவில்லை. இயற்கை யாக எழும் மனிதாபிமானக் காரணத்தாலும், துணிச் சலுடன் முடிவு எடுக்கும் திறன் முதல்வரிடத்தில் பல நேரங்களில் உண்டு என்ற நம்பும் எண்ணத்தாலும்தான்!

விதி 161 என்ன கூறுகிறது?

நெருப்புப் பற்றி எரியும்போது முதலில் செய்ய வேண்டிய பணி, அதனை எப்படியெல்லாம் எல்லோரும் ஒத்த நிலையில் முனைந்து அணைத்து, பாதிக்கப்படுவோரைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை, செயலுக்குமே முன்னுரிமை தர வேண்டும் என்பதே!

இந்திய அரசியல் சட்டப்படி 161 விதியின்படி, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது சட்ட வியாக்யானத்தையும், அவரவர் தரும் விளக்கத்தையும் பொறுத்தது ஆகும்.

அதே விதியில் உள்ள கட்டளைபற்றி நமது முதல் அமைச்சர் அவர்கள் தாக்கல் செய்த அந்த அறிக்கையில்,

....இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ குடிஅரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம்... என்பதே கதவுகள் முழுவதுமாக சட்டப்படி - 161 விதியின் படி மூடப்படவில்லை என்பதை வெளிச்சம் காட்டி விளக்குவதாக உள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை இந்தியா ஒரே நாடு, ஒருமைப்பாடு ஓங்குக என்று முழங்கிடும் நிலையில், டில்லி நாடாளுமன்றத்தைத் தாக்கியவர்களுள் ஒருவரான தீவிரவாதி அப்சல்குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றினால் காஷ்மீரமேபற்றி எரியும் என்று கூறும் ஆட்சித் தலைவர்களே கூறிடும் நிலை அங்கே!

இங்கேயோ கருணைக்குக் கசிந்துருகினாலும் கிட்டாத நிலை!

நெல்லிக்காய்  மூட்டை தமிழர்கள் நிலை கண்டு வெட்கப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

தீர்மானத்தின்மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வு வெளியாகும்

மாநில அரசு, நல்வாய்ப்பாக தமிழ்நாடு சட்டப் பேரவை நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில், அதில் ஒரு மனிதநேயம் பொங்கும் பரிந்துரை வேண்டுகோள் தீர்மானமாக கொணர்ந்து, நிறைவேற்றிட வேண்டும் என்பது (சில வாரங்களுக்குமுன் இலங்கை அரசின்மீது பொருளாதாரத் தடை ஏற்படுத்த போட்ட தீர்மானம் போல)  தமிழ் மக்களின், (ஒரு சில தனி மரங்களைத் தவிர) ஒட்டு மொத்த உணர்வாகும். அத்தகைய தீர்மானம் இந்தப் பிரச்சினையில் உதவிகரமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மாகும்.    மனிதநேயத்தின் உச்சத்திற்கும் செல்லும்வாய்ப் பும் ஏற்படுமே. இன்னமும் காலந் தாழ்ந்துவிடவில்லை.

மாறிய சூழ்நிலைகள் பல உள்ளன என்பதை அத் தீர்மானத்திலேயே சுட்டிக்காட்டலாமே!

தடா சட்டத்தின் மூலம் தீர்ப்பு!

1. தடா சட்டத்தின்படி பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. பொதுவான குற்றவியல் நெறிமுறைக்கே தலை கீழானதடாவில் அம்மூவருக்கும் தூக்குத் தண்டனை தரப்பட் டுள்ள நிலையில், அத்தடா சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையே ஒரு மாறிய சூழ்நிலைதானே!

2. ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்த விசாரணை இன்னும் தொடரும்போது, மேலும் புதிய ஆதாரமோ, குற்றவாளிகளோ கிடைக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது என்றும் சுட்டிக் காட்டப்படலாமே!

மக்கள் மன்றத்தின் உணர்வை சட்டமன்றம் பிரதிபலிக்கலாமே!

எனவே மக்கள் மன்றம் இதில் காட்டும் உணர்வை - சட்டமன்றம் காட்டுவது மக்களாட்சியில் தவறல்ல; தேவையும்கூட
சென்னை உயர்நீதிமன்றம் அதன் கடமையைச் செய்ய முன்வரும் நிலையில், மனிதநேயம் சட்டவிதிகளை யும் தாண்டியது என்ற காட்ட வேண்டிய அரிய வாய்ப்பு இன்னமும் தமிழக அரசுக்கு குறிப்பாக நமது முதல்வ ருக்கு உண்டு. அதை அவர்கள் பயன்படுத்தி, புதிய முன்மாதிரியை ஏற்படுத்தலாம்.

அரசமைப்புச் சட்டத்தில் நூறு திருத்தங்கள் வரவில்லையா?

விதிகளும், சட்டங்களும், மரபுகளும் மக்களுக்காகத் தானே தவிர, விதிகளுக்காக, சட்டங்களுக்காக மக்கள் என்ற நிலை கிடையாது என்பதை அறியாதவரல்லவே முதல் அமைச்சர் அவர்கள்.

மாற்றப்பட முடியாத விதிகள் என்றால் இந்திய அரசியல் சட்டத்திற்கு இதுவரை 100 திருத்தங்கள் வந்திருக்க முடியாதே!

முதல் அமைச்சருக்கு வேண்டுகோள்!

எனவே மீண்டும் மனிதநேய மலர்ச்சியைக் காட்ட வேண்டிய மகத்தான கடமையைச் செய்ய வேண்டுமென முதல் அமைச்சர் அவர்களை, உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை அனைவர் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்!
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!! நன்றி கூறுகிறோம்!

மேலே காணப்படும் அறிக்கை இன்று காலை 8 மணிக்கு ஏற்கெனவே எழுதப்பட்டது. பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று காலை 11 மணிக்கு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!!  தமிழக முதல்வருக்கு நன்றி கூறுகிறோம்.
-கி. வீரமணி

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...