Showing posts with label மத்திய அரசு தகவல். Show all posts
Showing posts with label மத்திய அரசு தகவல். Show all posts

Wednesday, July 17, 2019

வேலைவாய்ப்பு திறன் குறைந்த படிப்புகளுக்கு அனுமதியில்லை:

மத்திய அரசு தகவல்

புதுடில்லி, ஜூலை 17- அடுத்த கல்வி யாண்டிலிருந்து, வேலைவாய்ப்பு திறன் குறைந்த புதிய வழக்கமான படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஅய்சிடிஇ) அனுமதி வழங்காது என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

மக்களவையில் நேற்று முன் தினம் கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் உறுப்பனிர் சசிதரூர், ‘‘60% பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். சில வேலைகள் படிப்புக்கு சம்பந்தமில் லாததாக இருக்கின்றன. எனவே பொறியியல் கல்லூரிகளில் சரியான திறன் வழங்கப்படுகிறதா? தொழில் துறையின் தேவைக்கும், பொறியியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் படிப்புகளுக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுகிறது. இந்த இடைவெளி நீக்கப்பட வேண்டும்.  இதை நீக்கிவிட்டால், ‘பக்கோடா விற்று வேலைவாய்ப்பை பெருக்க முடியும்என்பது போன்ற அறிவுரை கள் மாணவர்களுக்கு அவசியமிருக் காது’’ என்றார்.

இதற்கு பதிலளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியதாவது: பொறியியல் படிப்புக்கான பாடத் திட்டங்களை ஏஅய்சிடிஇ மறு ஆய்வு செய்து, விரைவில் புதுப்பிக் கும். வரும் 2020_21ஆம் ஆண்டு கல்வியாண்டில் இருந்து குறைந்த வேலைவாய்ப்பு திறன் கொண்ட புதிய வழக்கமான துறைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. மேலும், செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின், இன்டர்நெட் ஆப் திங்ஸ்,  டேட்டா சயின்ஸ், சைபர் பாதுகாப்பு, 3டி பிரின்டிங் போன்ற நவீன தொழில்நுட்ப துறைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

தொழிற்துறையின் தேவைகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளுக்கு இடை யிலான இடைவெளியைக் குறைக்க மாணவர்களுக்கு தொழில் பயிற்சி கட்டாயமாக்குவது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் அரசின்மேக் இன் இந்தியாதிட்டத்தின் ஒரு அங்கமாக செயல்பட முடியும். தற்போது உலகின் 500 சிறந்த நிறு வனங்களில் 200இல் அய்அய்டி மாணவர்கள் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...