வேலூர், ஜூன் 23-வேலூரில் 600 ஆண்டு கள் பழைமை வாய்ந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலை இந்து அற நிலையத்துறை கையகப் படுத்தியது. இதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித் துள்ளது.
விஜயநகர மன்னர் ஆட்சிக்காலத்தில் 16ஆம் நூற்றாண்டில் வேலூர் கோட்டை கட்டப்பட்டது. இங்கு, ஜலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு கலை நயம்மிக்க மண்ட பம், சிலைகள், குளம், ஐம்பொன்னால் செய் யப்பட்ட 63 நாயன் மார்கள், நடராஜர் சிலை கள் உள்ளன. இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், வெளி நாட்டு பயணிகளும் வருகின்றனர்.
இந்திய விடுதலைக்கு காரணமாக இருந்த சிப்பாய் புரட்சி 1806இல் நடந்தது இந்த கோட் டையில் தான். 600 ஆண் டுகள் பழைமை வாய்ந்த, வரலாற்று சிறப்பு மிக்கதாக வேலூர் கோட்டை திகழ்கிறது. இங்குள்ள கோயிலை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் என்ற அமைப்பு கடந்த 32 ஆண்டு களாக நிர்வகித்து வந்தது.
கடந்த 2003ஆம் ஆண்டு, இந்த கோயிலை கையகப்படுத்த இந்து அறநிலையத்துறை முடிவு செய்து அறிவிப்பு வழங்கியது. இதை எதிர்த்த கோயில் நிர் வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கள், இந்து அறநிலையத் துறை கோயிலை கைய கப்படுத்தலாம்; இந்த விஷயத்தில் தரும ஸ்தா பனம் தலையிட முடி யாது என்று கடந்த 2012ஆம் ஆண்டு டிசம் பர் 14ஆம் தேதி தீர்ப் பளித்தது. இதைத் தொடர்ந்து, கோயிலை கையகப்படுத்த போவ தாக மத்திய, மாநில அரசுகளுக்கு இந்து அற நிலையத்துறை அறி விப்பு கடிதம் அனுப் பியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தரும ஸ்தாபன நிர்வாகிகளி டம், கோயிலை கையகப் படுத்துவதாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவிப்பு கடிதம் அளித்தனர். அதைப்பெற்றுக் கொண்ட கோயில் நிர்வாகிகள், இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பதாக கூறிய தாக தெரிகிறது.
நேற்று காலை, உதவி ஆணையர் பாரிவள்ளல் தலைமையிலான அதி காரிகள், கோயிலில் இருந்த 10-க்கும் மேற் பட்ட உண்டியல்களை யும், அர்ச்சனை டோக்கன் களையும், கோயி லில் இருந்த கிணற்றையும் பூட்டு போட்டு சீல் வைத்தனர். இதை யடுத்து, கோயிலின் தக் காராக உதவி ஆணையர் பாரி வள்ளல் செயல்படுவார் என்று தெரி விக்கப்பட்டது.
அப்போது உதவி ஆணையர் பாரிவள்ளல் கூறியதாவது:
இந்து அறநிலையத்துறையே கோயிலை நிர்வகிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. அதனால் ஆணையரின் உத்தரவின் பேரில் இன்று (நேற்று) ஜலகண்டேஸ்வரர் கோயில் நிர்வ கத்தை ஏற்றுள்ளது. இனிவரும் காலங்களில் கோயிலில் வழக்கமான பூஜைகள், விழாக்கள் நடத்தப்படும். இதுவரை, வேலூர் மாவட்டத்தில் 1,109 கோயிலை இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. ஜலகண் டேஸ்வரர் கோயிலின் ஆண்டு வரு மானம் ரூ.10லட்சம் ஆகும். கோயிலை வளர்ச்சி பெற செய்யும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஜலகண்டேஸ்வரர் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்தும் விஷயம் அறிந்து, அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த அன்புமணி, ஆதிமோகன் உள்ளிட் டோர், கோயிலை ஒப்படைக்க மாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
இந்து முன்னணி எதிர்க்கிறதாம்
இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆதிமோகன் கூறுகையில் இந்த கோயிலில் வரு மானம் வருவதால், கோயிலை கையகப் படுத்துகிறார்கள். ஆனால் 300 ஆண்டுகள் பழைமையான அப் துல்லாபுரத்தில் உள்ள கைலாயநாதர் கோயிலை ஏன் கையகப்படுத்த வில்லை? எந்த கோயிலில் வருமானம் வருகிறதோ, அந்தக் கோயிலை ஏற்றுக்கொள்வார்கள். கோயிலை கையகப்படுத்துவதை கண்டித்து, நாங்கள் பெரிய அளவில் போராட் டம் நடத்துவோம் என்றார்.
ஏன்? ஜலகண்டேசுவரரிடம் முறை யிடுவதுதானே?
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்: