Showing posts with label தமிழகத்தின் உரிமை மறுக்கபடுகிறது. Show all posts
Showing posts with label தமிழகத்தின் உரிமை மறுக்கபடுகிறது. Show all posts

Sunday, July 14, 2019

அஞ்சல்துறை போட்டித் தேர்வுகளை தமிழில் எழுதத் தடை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்




சென்னை, ஜூலை 14  அஞ்சல் துறை போட்டித் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தாமல் ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தபால் துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத் தாள் வழங்கப்படும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு மத் திய அரசு சுற்றறிக்கை அனுப்பியி ருக்கிறது. இது கண்டனத்துக்குரி யது. தமிழக மக்கள் மீது இந்தி மொழியைத் திணிக்கும் உரிமை மத்திய அரசுக்கு இல்லை. இதை மீறி திணிக்க முயன்றால் கடும் விளைவுகளை நரேந்திர மோடி அரசு சந்திக்க வேண்டி வரும். ஏற் கெனவே, நடைமுறையில் இருந்த படி மாநில மொழிகளான தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அஞ்சல்துறை கேள்வித் தாள்கள் வழங்கப்பட வேண்டும்.

வைகோ (மதிமுக): 2015-ஆம் ஆண்டு நடந்த தபால் துறை பணி யாளர்கள் தேர்வில் அரியாணா, பீகார் உள்ளிட்ட வடமாநிலங் களைச் சேர்ந்தோர் அதிக மதிப் பெண் பெற்றதாகக் கூறி, தமிழகத் தில் பணி வாய்ப்பு பெற்றனர். இந்த நிலையில் இந்தி, ஆங்கில மொழி களில் மட்டுமே அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்பட்டால், இனி முழுக்க முழுக்க இந்திக்காரர்கள் ஆதிக்கம்தான் தபால் துறையில் கொடிகட்டிப் பறக்கும். தமிழர் களின் வேலைவாய்ப்புகளை வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாரி வழங்கும் பாஜக அரசின் நடவடிக்கை நியாயப்படுத்தவே முடியாத அக்கிரமச் செயல்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): தபால் துறை போட்டித் தேர்வுகளை இந்தி, ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக இளைஞர்கள் தபால் துறையில் நுழைந்துவிடக் கூடாது என்பதற் காகவே மத்திய அரசு இந்த உத்தர வைப் பிறப்பித்துள்ளது. இந்த உத் தரவைத் திரும்பப் பெற வேண் டும்.

தொல்.திருமாவளவன் (விசிக): தபால் துறைப் பணியிடங்களுக் கான தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்ற அறிவிப்பு மாபெரும் அநீதி மட்டுமல்ல மோசடியுமாகும். தமிழகத்தைச் சாராதவர்களை இங்கே பணியமர்த்துவதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதா கத் தெரிகிறது. மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும் பப் பெற வேண்டும். தமிழிலும் எழுத அனுமதிக்கவேண்டும். இல் லாவிடில் தமிழகம் மிகப்பெரிய போராட்டக்களமாக மாறும்.

டிடிவி தினகரன் (அமமுக): மத்திய அரசின் அறிவிப்பால் இந்தி பேசாத மாநில மக்கள் அஞ்சல் துறை வேலைவாய்ப்புகளைப் பெற முடி யாத நிலை ஏற்படும். இது அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக அமையும். இரண்டு மொழிகளில் மட்டுமே தேர்வு என்ற சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்.

தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி): தபால் துறைப் பணிகளுக் கான தேர்வில் தமிழை நீக்குவதென் பது இந்திய ஒன்றியத்திலிருந்து தமிழ கத்தை நீக்குவதற்கே சமம். மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...