Thursday, January 30, 2020

அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரிய தலைமையகத்தை வடமாநிலங்களுக்கு மாற்றுவதா? ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரிய தலைமையகத்தை வடமாநிலங்களுக்கு மாற்றுவதால் எந்தபலனும் ஏற்படாது. அதற்குப் பதில்வழக்குகளின் நிலுவையைக் குறைக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கிளைகளை அதிகரிக்கலாம் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரபாசிறீதேவன் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முத்திய அமைச்சர் முரசொலி மாறன் முயற்சியால் இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்துக் கான தலைமையிடம் சென்னையில் கடந்த 2003, செப்.15 அன்று உருவாக்கப்பட்டது. இதன் சர்க்யூட் பெஞ்ச் எனப்படும் கிளைகள் சென்னை, மும்பை, டில்லி, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ளன.
வணிகச் சின்னம், காப்புரிமை, பதிப்புரிமை, புவிசார் குறியீடு மற்றும் உரிமை மீறல் போன்ற அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டு வழக்குகளை நீதித்துறை உறுப் பினர்களுடன், தொழில்நுட்ப உறுப்பினர் களும் இணைந்து விசாரித்து தீர்ப்பளிப்பர் என்பதால் பன்னாட்டுஅளவில் முக்கியத் துவம் பெற்று விளங்குகிறது.
தற்போது சென்னையில் உள்ளஇதன் தலைமையகத்தை நாக்பூர்அல்லது ஜபல் பூருக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதற்கு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தின் முன்னாள் தலைவருமான பிரபாசிறீதேவன்  கூறும்போது,
‘‘இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மேல்முறையீட்டு வாரியத்தின் தலைமையகம் எங்கு செயல்பட்டாலும் அதன் செயல் பாடுகளில் வேறுபாடுகள் இருக்கப் போவ தில்லை. என்னைப் பொறுத்தமட்டில் அதிகாரக் குவியல் ஒரே இடத்தில் குவியக் கூடாது. நாடு முழுவதும் பரவலாக்கப்பட வேண்டும்.
டில்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என குரல் கொடுத்துவரும் வேளையில், சென்னையில் உள்ள இந்தஅலுவலகத்தை வடமாநிலங்களுக்கு கொண்டு செல்வதால் எந்த பலனும் ஏற்படாது.
அதற்குப் பதில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, டில்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் எனஉள்ள கிளைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தலாம்.
காலியாக உள்ள நீதித் துறை மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்களின் பதவிகளை நிரப்பலாம்’’ என்றார்.
இதுதொடர்பாக திமுக மூத்த வழக் குரைஞரும், மாநிலங்களவை  உறுப்பினருமான பி.வில்சன் கூறும்போது,
‘‘இந்தியா,உலக வர்த்தக அமைப்பில் இணைந்தவுடன் காப்புரிமை சட்டங்களைச் சீரமைத்து ட்ரிப்ஸ் ஒப்பந்த சட்டத்திலும், நிர்வாகத்திலும் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது. அந்த கால கட்டத்தில் மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சராக வாஜ்பாய் அரசில் பதவி வகித்த முரசொலி மாறன், தோஹாவில் 2001-இல் வளரும் நாடுகள் சார்பில் பல மணிநேரம் வாதாடி இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் காப்புரிமை சட்டங்களை திருத்தினார்.
இதன்மூலம் அறிவுசார் சொத்துரிமை போன்ற மிக முக்கியமான உரிமைகளை இந்தியா போன்றவளரும் நாடுகளுக்கு முரசொலிமாறன் பெற்றுத் தந்தார் என உலகப் பத்திரிகைகளும் அவரைவெகுவாகப் பாராட்டின. காப்புரிமையையும், அறிவுசார் சொத்துரிமையையும் எப்படி சரியாகப் பயன்படுத்த வேண்டும் என சிந்தித்தவர் முரசொலி மாறன்.
அவருடைய முயற்சியால் சென்னையில் கொண்டு வரப்பட்ட இந்த தலைமையகம் கடந்த 16 ஆண்டுகளாக உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறைந்தபட்சம் முரசொலி மாறனின் நினைவைப் போற்றும் வகையிலாவது மத்திய அரசு இந்த தலைமையகத்தை சென்னையில் இருந்து மாற்றக் கூடாது’’ என்றார்.

சீர்திருத்தவாதிகளுக்கு மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல்

"மரணமடைவதற்கு தயாராக இருங்கள் துரோகிகளே" என்று நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட 15 பேருக்கு அடையாளம் தெரியாத நபர்களால் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ், கருநாடக மேனாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் பிருந்தா காரத், மூடநம்பிக்கை விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிஜகுணானந்தா உள்ளிட்டோருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது திரையுலகிலும், அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கடிதத்தில் 15 முக்கிய பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கொலை மிரட்டல் கடிதத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட அனைவரும் கொலை செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் துரோகிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொலை மிரட்டல் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ள பிரபலங்கள் அனைவரும் அந்தக் கடிதத்தைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபரால் எழுதப்பட்டுள்ள இந்த கொலை மிரட்டல் கடிதத்தில், நிஜகுணானந்தா, "நீங்கள் உங்கள் சொந்த மதத்துக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறீர்கள். ஜனவரி 29-ஆம் தேதி உங்களுடைய இறுதிப் பயணத்திற்குத் தயாராக இருங்கள். உங்களைத் தொடர்ந்து கீழே பட்டியலில் உள்ளவர்களும் தங்களது இறுதிப் பயணத்தை மேற்கொள்வார்கள். அதற்காக, நீங்கள் அவர்களை தயார் செய்ய வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த கொலைமிரட்டல் பட்டியலில், நிஜகுணானந்தா, கருநாடகா முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ், பஜ்ரங் தள அமைப்பின் முன்னாள் தலைவர் மகேந்திர குமார், நடிகரும் சமூகச் செயற்பாட்டாளருமான சேதன் குமார், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பி.டி.லலிதா நாயக், பேராசிரியர் பகவான், சமூகச் செயற்பாட்டாளர் மகேஷ் சந்திர குரு, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் ஆலோசகர் தினேஷ் அமீன் மட்டு, எழுத்தாளர் சந்திரசேகர் பாட்டில், எழுத்தாளர் அக்னி ரீதர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிருந்தா காரத் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், "நிஜகுணானந்தா சுவாமியை கொலை செய்வோம் என்று அச்சுறுத்தும் ஒரு கோழை குழு கடிதம் எழுதியுள்ளது. இந்த பட்டியலில் எனது பெயரும் இடம்பெற்றுள்ளது..  இந்தியா சிஏஏ, என்.ஆர்.சி.க்கு எதிராக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபலங்களுக்குக் கடிதம் மூலம் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக கருநாடக உள்துறை அமைச்சர் பஸவராஜ் பொம்மை, "இந்த விவகாரம் குறித்து காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். எடியூரப்பா, முன்னாள் முதல்வாரக இருந்தபோது வழங்கப்பட்ட அதே பாதுகாப்பு எச்.டி.குமாரசாமி மற்றும் சித்தராமையா ஆகிய இருவருக்கும்   வழங்கப்படும்" என்று கூறினார். கருநாடகாவில், மூடநம்பிக்கை களுக்கு எதிராகவும், இந்துத்துவ சக்திகளுக்கு எதிராகவும் எழுதியும் பேசியும் வந்த கன்னடப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், எழுத்தாளருமான கல்புர்கி மற்றும் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கொலை வழக்குகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், சுவாமி நிஜகுணானந்தா, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 15 பேருக்கு கொலைமிரட்டல் விடுத்து கடிதம் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்துத்துவ அமைப்பினரால் பகுத்தறிவாளரும், முற்போக்கு எழுத்தாளருமான கவுரிலங்கேஷ் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி பெங்களூருவில் கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பும் இதே போன்ற ஒரு கொலை மிரட்டல் கடிதம் எழுதப்பட்டது, அதிலும் அடையாளம் தெரியாத நபர் எழுதியிருந்ததாக விசாரணை அமைப்பினர் கூறியிருந்தனர். அவ்வாறு கொலைசெய்யப்படுவோர் பட்டியல் மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணை ஆவணமாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
யாரோ ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதுபற்றிப் பெரிதுபடுத்தலாமா என்று அலட்சியப்படுத்தக் கூடாது.
இதற்கு  முன் இப்படி எழுதப்பட்டவர்களால் கொலையும் நடத்தப்பட்டுள்ளது. இதில் என்ன கொடுமை என்றால் இதற்கு முன் சீர்திருத்தவாதிகளைப் படுகொலை செய்த மதவெறியர்களுக்குரிய தண்டனை கிடைக்கவில்லை.
வேறு வேறு பெயர்களில் அவர்கள் இருந்தாலும் அடிப்படையில் ஹிந்து அடிப்படைவாதிகளே. இதையெல்லாம் பார்ப்பன ஏடுகள் கண்டு கொள்ளாதது ஏன் என்பதையும் மற்றவர்கள் சிந்திக்க வேண்டும்.

Tuesday, January 28, 2020

பிசியோதெரபியே போதும்!

தோள்பட்டை இடப்பெயர் பிரச்னை ஏற்படும்போது அறுவை சிகிச்சை செய்தே எலும்புகளை இணைத்து வருகின்றனர். ஆனால், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக பிசியோதெரபி என்னும் இயன்முறை மருத்துவத்தின் வழியேயும் பின் விளைவுகள் இல்லாமல் சிகிச்சை அளிக்கலாம் என்று நம்பிக்கை அளிக்கிறார்கள் இயன்முறை மருத்துவர்கள்.
சில நேரங்களில் எதிர்பாராத விபத்துகளால் எலும்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கலாம். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுத்தும்கூட மீண்டும் அதே இடத்தில் பிற்காலத்தில் வலி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கெல்லாம் இயன்முறை மருத்துவம் நல்ல பலனைத் தருகிறது. முதலில் தோள்பட்டை இடப்பெயர்வு ஏற்பட்டுள்ளதா என்று -,  ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அதற்கு ஏற்ற   அணிவித்து பிசியோதெரபிஸ்ட்டுகள் சிகிச்சை அளிப்பார்கள். தோள் பட்டை இடப்பெயர்வு முதற்கட்ட சிகிச்சையாக வலி நிவாரண மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது. இயன்முறை மருத்துவத்தில் தோள்பட்டை தசை பகுதிகளை வலுவூட்ட உடற்பயிற்சி, சுடு ஒத்தடம் அல்லது அய்ஸ் ஒத்தடம் கொடுக்கப்படுகிறது. இத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கை முறை யிலும் மாற்றம் தேவை. இதுபோல் பிசியோதெரபி சிகிச்சை முறையை எடுத்துக் கொள்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. மற்ற சிகிச்சைமுறை போன்று அறுவை சிகிச்சை வலியோ இதில் கிடையாது. உடலிலிருந்து ரத்தம் வெளியேற வாய்ப்பில்லை. தொற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பில்லை. பிஸியோதெரபி சிகிச்சைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் தசை உறுதி பெறுவர். உடைந்த எலும்பு இணைப்பு பலம் பெறும்.

ஆன்டிபயாட்டிக் ஆபத்து; குழந்தைகள் ஜாக்கிரதை!


ஆன்டிபயாட்டிக் பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில். மேலும் இது போன்ற ஆன்டிபயாட்டிக் எடுப்பதன் மூலம் ஆஸ்துமா, உணவு சம்மந்தப்பட்ட ஒவ்வாமை, சரும பிரச்சினை, சுவாசப் பிரச்சினை மற்றம் கண்பார்வையிலும் பிரச்னை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாகவே நாம் சாதாரண ஜுரம் மற்றும் சளி பிரச்சினை இருந்தாலே ஆன்டிபயாட்டிக் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. இதனை நாம் எவ்வாறு சாப்பிடவேண்டும்.
மேலும் அதற்கான வழிமுறைகள் என்ன என்று விளக்கம் அளிக்கிறார் ஜெம் மருத்துவ மனையின் அனஸ்தியோலாஜிஸ்ட் மற்றும் இன்டர்வெஸ்ட் நிபுணர்  டாக்டர் வான்மதி. ஆன்டிபயாட்டிக் என்பது நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்கும் மருந்து. ஆனால் நாம் இதனை ரொம்பவே தேவையில்லாமல் பயன் படுத்திக் கொண்டு இருக்கிறோம். நுண்ணுயிர் தாக்கம் என்பது நம்முடைய உடலில் ஏற்படும் சாதாரண ஜுரம் மற்றும் சளியின் தாக்கம். இந்த இரண்டு பிரச்சினைக்கும் சரியான மருந்து எடுத்துக் கொண்டால் ஒரே வாரத்தில் சரியாகிவிடும். சில சமயம் நாம் சளிக்கு அவசியம் மருந்து எடுப்பதில்லை. அந்த தருணங்களில் அவற்றின் தாக்கம் இரண்டு நாட்கள் கூடுதலாக இருக்கும். பிறகு சரியாகிவிடும்.
காரணம் இது போன்ற சாதாரண பிரச்சினை களுக்கு நம் உடலில் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே உள்ளது. எதிர்ப்பு சக்தி உயிரணுக்கள் நம் உடலில் ஏற்படும் பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமியின் தாக்கத்தை எதிர்த்து போராடி அதனை அழிக்கும் வல்லமை கொண்டுள்ளது. ஆனால், நம்மில் இந்த ஒரு வார பிரச்சினையை தாங்கும் பொறுமை யாருக்கும் இல்லை என்று தான் சொல்லணும். நம்முடைய உடலுக்கு எது வந்தாலும் உடனடியாக சரியாக வேண்டும் என்நு தான் நாம் பார்க்கிறோம்.
இதனால் பெரும்பாலானவர்கள் டாக்டரிடம் செல்லும் போதே, உடனடியா குணமாக வேண்டும் என்று வற்புறுத்துவதால், அவர்களும் அதற்கான அதிக அளவு டோசேஜ் மாத்திரையினை தருகிறார்கள். இதில் ஆன்டிபயாட்டிக்கும் அடங்கும். சாதாரணமான காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் அதற்கு பெரிய அளவில் ஆன்டிபயாட்டிக் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. டாக்டர் கொடுக்கும் சாதாரண மருந்துகளிலேயே குணமாகிவிடும். ஆனால் என்ன ஒரு வாரம் இதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும். காரணம் இவை எல்லாம் வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற கிருமியின் தாக்கத்தினால் தான் ஏற்படுகிறது. இவை இரண்டுமே ஒரு வகையான நுண்ணுயிர்கள் தான். கண்ணுக்கு தெரியாத கிருமிகள். அதனால் சாதாரண தும்மல் இருந்தாலே காய்ச்சல் வருவது போல் இருக்கும். அவை இரண்டு நாட்களில் சரியாகிவிடும். ஆனால் சில சமயம் நாம் என்ன மருந்து எடுத்துக் கொண்டாலும், சளி அதிகமாக கட்டிக் கொண்டு இருக்கும். அந்த சமயம் அவை பாக்டீரியாவின் தொற்றாகவும் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் சைல்ட் காய்ச்சல் மற்றும் சளிக்கு நாம் ஆன்டி பயாட்டிக் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது.
ஆனால் இதுவே நான் சொன்னது போல் அதிக அளவு சளி கட்டிக் கொண்டு இருந்தால், அது பாக்டீரியா தொற்றாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ளலாம். ஆன்டிபயாட்டிக் என் பது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் கிருமிகளை குணப்படுத்த முடியாமல் போகும் போது அந்த சமயத்தில் கிருமிகளுடன் எதிர்த்து போராடி அதனை அழிக்க உதவக்கூடியது. எந்த ஒரு பிரச்னையும் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் கொடுக்க வேண்டும். அதாவது காய்ச்சல் மூன்று நாட் களுக்கு மேல் நீடிக்கும் போது அது குறித்து ஆய்வு எடுப்பது வழக்கம். அதில் டைபாய்ட், டெங்கு போன்ற பிரச்னையை கண்டறிந்தால் மட்டுமே ஆன்டி பயாட்டிக் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கும். இது சாதாரண பிரச்னையாக இருக்கும் பட்சத்தில் ஆன்டி பயாட்டிக் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

கீரையோ ஒன்று... பயன்களோ ஏராளம்!


கீரைகளில் முளைக் கீரை தனித்துவமானது. சாதாரண மாக தெருக்களில்கூட கிடைக் கக் கூடியது. வீட்டிலும் வளர்க் கலாம். முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இது தவிர, நார்ச்சத்தும், மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் உள்ளன. இதனால், உடல் வலுவடையும், வளரும் சிறுவர்களுக்கு இந்தக் கீரையைத் தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி உண்டாகும். முளைக் கீரையின் மருத்துவப் பயன்கள் பற்றி பார்ப்போம்.
*இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்வதோடு, இதிலடங்கியுள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு  உதவுகின்றது. முளைக் கீரை அதிமதுரம் (ஒரு துண்டு), மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட  இருமலும் குணமாகும்.
*முளைக் கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து,  சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்துவகையான காய்ச்சலும் குணமாகும்.
*முளைக் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துக் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், பௌத்திரக் கட்டி, ரத்த  மூலம் போன்றவை சரியாகும்.
*முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கி,  நல்ல பசி உண்டாக்கும்.
*முளைக் கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ருசியின்மைக் குறைபாடு நீங்கும்.
*முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப்  போதிய அளவில் கிடைக்கும். 40 நாட்களுக்குத் குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்ல உயரமாக வளருவார்கள்.
*முளைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தித் தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை  சரியாகும்.
*சிறுவர், சிறுமியருக்கு முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல்  உடையது. முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் குடல்புண்கள் குணமாகும்.
*முளைக் கீரைச் சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப்  பொலிவு உண்டாகும்.
*சொறி சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்தக் கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது. முளைக் கீரைச்   சாற்றில் உளுந்தை ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.

மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டம்பற்றி மக்கள் கருத்து கேட்கக் கூடாது என்பதா?

மயிலாடுதுறை, ஜன.27,  சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், கருத்து கேட்காமல் எண்ணெய் கிணறுகளை காவிரி படுகையில் அமைக்க லாம் என்று 2016இல் சுற்றுச்சூழல் அறிவிக்கையில் திருத்தம் செய்துள்ளது.
இப்போது தமிழக அரசு இந்த அபாயகர திட்டம் வேண்டாம் என்று கடிதம் எழுதுவதற்கு பதிலாக இப் போது நீங்கள் செய்த திருத்தத்தில் இருந்து விலக்கு கொடுங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடி தம் எழுதியுள்ளார். கருத்து கேட்பு எடுக்க வேண்டாம் என்று மட்டுமே கூறியுள்ளார்.
காவிரி படுகை காணாமல் போனால் ஒரு உருண்டை சோற்றுக்கு கையேந்தும் நிலை வரும் என்று எச்சரிக்கை  செய்யும் வகையில் இன்று  மயிலாடுதுறையில் போராட் டம் நடைபெறுகிறது.
மத்திய அரசு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட் டத்தை கைவிடு, தமிழக அரசிடம் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை ஒட்டுமொத்தமாக நிராகரி என்று கோரிக்கை வைக்கி றோம். காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஏனென்றால், தமிழகத்தின் உணவுப் பாது காப்பை அது தான் காப் பாற்றும். படுகை அழிந்தால் தமிழகம் காணாமல் போகும். 5ஆவது சுற்று ஏலம் முடிந்து கடலில் கிணறு அமைத்தால் மீனவர்கள் மீன்பிடி தொழிலை  கைவிட வேண்டிய நிலை ஏற் படும். ஏனென்றால் மீன்கள் இறந்து போகும், இல்லை யெனில் மீன்கள் இடம் பெயர்ந்து விடும். காவிரிப் படுகையை வேளாண் மண்ட லமாக அறிவிக்க கோரி நாங்கள் கடந்த 2013 முதல் வலியுறுத்தி வருகி றோம். உலகம் முழுவதும் பாதுகாப்பு வேளாண் மண்டலம் இருக் கிறது. ஆனால், அரசுக்கு என்ன தயக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை.
தடைமீறி  போராட்டம்
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஹைட் ரோகார்பன் திட்டத்தை கைவிட வலி யுறுத்தி இன்று முதல் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப் பட்டது.
இதையொட்டி மயிலாடு துறை சின்னக் கடைவீதியில் இன்று மாலை கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடக் கிறது.
இதற்கான துண்ட றிக்கை பொது மக்களிடம் நேற்று விநியோகித்தனர்.
ஆர்ப்பாட்டம் நடத்து வதற்கு காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் நேற்று இரவு வரை அனுமதி தரப்படவில்லை. காவல்துறையினர் அனுமதிக் காவிட்டால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத் தப்படும் என்று கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 282 கிராம சபைகளில் தீர்மானம்


நாகை, திருவா ரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங் களின் 282 கிராம சபை கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரிப்படுகையை 2 மண்டலங்களாக பிரித்து மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. பிரிவு 1இ-ல் விழுப்புரம், புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதி களில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள், பிரிவு 2இ-ல் கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தி யில் எதிர்ப்பு கிளம்பியதால் தற்கா லிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், 5-ஆவது ஏலத் துக்காக 11 ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதற் கான அறிவிப்பு கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்டது. இவற்றில் 4,064 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள ஒரு திட்டம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட இருக்கிறது. புதுச்சேரியில் தொடங்கி  காரைக்கால் வரையிலும், தமிழகத் தில் கடலூர், நாகப்பட்டினம் உள் ளிட்ட மாவட்டங்களிலும் செயல் படுத்துவதால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக் கப்படும் நிலை உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிண றுகள் அமைப்பதில் ‘ஏ கிரேடு’, ‘பி கிரேடு’ என பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ கிரேடு’ அமையும் பகுதியில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற வேண்டும் என விதி உள்ளது. ‘பி கிரேடு’  மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டியதில்லை. சுற்றுச்சூழல் கமிட்டியில் அனுமதி வாங்க வேண் டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு டெல்டா விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், 71-ஆவது குடி யரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், 282 கூட் டங்களில், ஹைட்ரோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் அக் கரைபேட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்வது தொடர்பான தீர்மானம் வாசிக்கப் பட்டு அது நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கீழ்வேளூர் ஒன்றியத்தில் இலுப்பூர், குருக்கத்தி ஊராட்சிகள், செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூர் ஊராட்சி என மாவட்டத்தில் 60 ஊராட்சிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. குறிப்பாக, வேதாரண்யம் ஒன்றியத்தில் 30 ஊராட்சியில் நிறைவேறியது என்பது குறிப்பிடத் தக்கது.
திருவாரூர் மாவட்டம்: திருவா ரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பெரும் புகளூர் ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, தீர்மானத்துக்கு ஆதர வாக நூற்றுக்கணக்கான பொது மக்கள் முழக்கம் எழுப்பினர். இதே போல், திருக்காரவாசல், பின்ன வாசல், குன்னியூர் உட்பட  100 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார் பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. அந்தந்த ஊராட்சி மன்ற அலு வலகத்தில் நடந்த கூட்டத்தில், குடிநீர், மின்சாரம், சுடுகாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. கத்தரி நத்தம், ஊரணிபுரம், அழகிய நாயகி புரம், செருவாவிடுதி, கதிராமங்கலம், கள்ளபுலியூர் உள்ளிட்ட 12 கிராம ஊராட்சிகளில், ‘‘மக்களின் வாழ் வாதாரமான விவசாயத்தை அழிக் கக்கூடிய ஹைட்ரோ கார்பன் உள் ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை அனுமதிக்க முடியாது’’ என மக் களின் ஏகோபித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூர், விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் கடலோர பகுதி களான வானூர், மரக்காணம் ஒன்றி யத்தில் 35 கிராம சபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திடத்தை கொண்டு வரக்கூடாது என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.
அதேபோல், கடலூர் மாவட் டத்தில் பி.முட்லூர், அரியக்குறிச்சி உள்ளிட்ட 60 கிராம ஊராட்சிகளில் ஹைட்ரோ கார் பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. புதுக் கோட்டை மாவட்டத்தில், நெடு வாசல் வடக்கு, நெடுவாசல் தெற்கு, கற்காகுறிச்சி உள்பட 15 ஊராட் சிகளிலும் தீர்மானம் நிறைவேறியது.

Monday, January 27, 2020

காந்தியின் படுகொலைக்கான ஆதாரங்களை அகற்ற முயல்கிறார்கள்

துஷார் காந்தி குற்றச்சாட்டு!
டில்லியில் உள்ள தீஸ் ஜனவரி மார்க் இல் உள்ள பழைய பிர்லா பவன் காந்தி ஸ்மிருதி என்றழைக் கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட  காந்தியார் இந்த வீட்டில் தான் தன் வாழ்வின் கடைசி சில மாதங்களைக் கழித்தார். அவரது வாழ்க்கையின் அந்த இறுதியான 144 நாட்களின் நினைவுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பழைய பிர்லா பவன் 1971 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத் தப்பட்டு தேசத் தந்தையின் நினைவக மாக மாற்றப்பட்டது. இந்திய சுதந்திர நாளான 15 ஆகஸ்ட் 1973 அன்று அது பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. அங்கு காந்தியார் வாழ்ந்த காலம் மற்றும் அப்போது நடைபெற்ற அவரது படுகொலை உட்பட பல வரலாற்று நிகழ்வுகள் பற்றிய நிழல் படங்கள் மற்றும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன..
ப்ரெஞ்சு நிழல்படக் கலைஞர் என்றி கார்டியர்-ப்ரெசனால் எடுக்கப்பட்ட  நிழல் படங்கள் இப்போது டிஜிட்டல் மயமாக்கப் பட்டு எல்.ஈ.டி. திரையில் குறிப்புகள் எதுவுமின்றி காட்டப்படு கின்றன எனவும் அதனால் அந்தப் நிழல் படங்கள் குறித்த சிறப்பு எதையும் அவை தெரிவிக்கத் தவறி விட்டன எனவும் காந் தியாரின் பேரன் துஷார் காந்தி கடந்த வாரம் கூறியதையடுத்து சர்ச்சை கிளம் பியது.
காந்தியாரின் வாழ்க்கை குறித்த பெரும்பாலான நிழல் படங்கள் எல் லாம் கண்காட்சியில் இருப்பதைப் போல காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் போது அவரது படுகொலை சம்பவங்கள் அடங்கிய நிழல் படங்கள் மட்டும் அகற்றப்பட்டிருப்பது அவரது சில வரலாற்று ஆதாரங்களை அழிப்பதற்கு ஒப்பானது என்று துஷார் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

 குடியுரிமை திருத்தச் சட்டத் துக்கு எதிராக கேரளா சட்ட சபையில் முதன் முத லாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசியல் சாசனத்துக்கு எதிரான குடியுரிமை திருத் தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற அந்த தீர் மானம் வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையிலும் குடி யுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறை வேறியது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் குடியு ரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் (25.1.2020) அன்று நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமை சட்டம் குறித்த மனுக்களுக்கு பதில ளிக்க மத்திய அரசுக்கு நான்கு  வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலை யில், மூன்றாவது மாநிலமாக காங்கிரஸ் ஆளும் ராஜஸ் தான் மாநிலத்திலும் குடியு ரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

வனுவாட்டு தீவில் வங்கி கணக்கு சாமியார் நித்யானந்தா ரகசியம் அம்பலம்


சர்ச் சைக்குரிய சாமியார் நித்யா னந்தா, பசிபிக் பெருங்கடலில் அமைந்து உள்ள, வனுவாட்டு தீவு நாட்டின் தேசிய வங்கியில், கணக்கு வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
சாமியார் நித்யானந்தா மீது, ஆள்கடத்தல், பாலியல் பலாத் காரம், சிறுவர்களை சித்ரவதை செய்தது என பல புகார்கள், குஜராத் மற்றும் கருநாடக மாநிலங்களில் உள்ளன.
இதையடுத்து, நித்யானந்தாவை கைது செய்யும் நடவடிக்கையில், குஜராத் காவல்துறையினர் இறங்கினர். எனினும், நித்யானந்தா, இந்தியாவில் இருந்து தப்பி தலை மறைவானார். அவர், ஈக்வடார் நாட்டில் பதுங்கி இருப்பதாக, தகவல் கிடைத்தது. எனினும், அதனை அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது.
இதையடுத்து, நித்யானந்தாவை கண்டுபிடிக்க, பன்னாட்டு காவல்துறை அமைப்பான, இன்டர்போல், 'புளூ கார்னர் தாக்கீதை' பிறப்பித்தது.
இதற்கிடையே, நித்யானந்தா எங்கு இருந்தாலும் கைது செய்வதற்கான, 'ரெட் கார்னர்' தாக்கீதை பிறப்பிக்க, தேவையான முயற்சிகளை, கருநாடக காவல்துறை எடுத்து வருகிறது. இந்நிலையில், நித்யானந்தா குறித்த சில தகவல்கள், தற்போது கிடைத்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் இருந்து, 1,750 கி.மீ., தொலைவில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு, வனுவாட்டு. இந்நாட்டில் உள்ள தேசிய வங்கியில், நித்யானந்தா, வங்கிக் கணக்கு வைத்துள்ளது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிறப்பு பூஜை செய்ததற்கு கட்டணம் செலுத்துமாறு, நித்யானந்தா தரப்பில், ஒருவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், வனுவாட்டு தேசிய வங்கியின் தகவல்கள் குறிப்பிடப்பட்டி ருந்தன. அதன்மூலம், வனுவாட்டு தலைநகர் போர்ட் வில்லாவில் உள்ள வங்கிக் கிளையில், அவர் கணக்கு வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உலகில், கார்ப்பரேட் வரி, வருமான வரி என, எந்த வரிகளும் இல்லாத நாடுகளில், வனுவாட்டு நாடும் ஒன்று. அங்குள்ள வங்கியில், கணக்கு தொடங்கும் நபர்களின் தகவல்களும் பத்திரமாக பாதுகாக்கப்படும். இப்படி, பல வசதிகள் உள்ளதால், நித்யானந்தா, அங்குள்ள வங்கியில் கணக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Sunday, January 26, 2020

கொரோனா வைரஸ்: பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹுபெய் மாகா ணத்தில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காய்ச்சலுக் காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர்.
அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது. அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவுக்கும் வைரஸ் தொற் றியது. மனிதர்கள் மூலமாக எளிதில் பரவும் இந்த வைரஸ் சீனாவின் பல்வேறு நகரங்களுக்கும் பரவத் தொடங்கியது. வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. மறுபுறம் வைரஸ் பாதிப்பினால் இறப்பவர்களின் எண் ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 41 பேர் பலியாகி உள்ள னர். சீனா முழுவதும் 1287 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பாதிக்கும் அதிகமானோர் 80 வயதை தாண்டியவர்கள் என சீன அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் சுவாச மண்ட லத்தின் செல்களை தாக்குகிறது. சளி, தும்மல், தொண்டை வலி மற்றும் காய்ச் சல் ஆகியவைதான் வைரஸ் தாக்குதலுக் கான அறிகுறி. தொடர்ந்து நுரையீரலை தாக்கும் வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தி உயிரைக் குடிக்கிறது. நுரையீரல் உள்பட சுவாச மண்டலத்தின் செல்களிலும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சுவாசிக்க முடியாமல் மரணம் நிகழ்கிறது.
இந்த வைரஸ் பாதிப்புக்கு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ள வர்கள் விரைவாக இறக்க நேரிடுகிறது. இதற்கிடையே நோயினால் பாதிக்கப் பட்ட சில இளைஞர்கள் தேறிவருவதாக வும் சீன ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

சிறு-குறு-நடுத்தர தொழில்முனைவோருக்கு இந்தியன் வங்கி ரூ.1,800 கோடி கடனுதவி

இந்தியன் வங்கி நிகழ் நிதியாண்டில் கடந்த டிச.31-ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நிகர லாபமாக ரூ.247 கோடியை ஈட்டியுள்ளது.
இது தொடார்பாக சென் னையில் 24.1.2020 அன்று நடைபெற்ற செய்தியாளார் சந்திப்பில் வங்கியின் நிதிநிலை அறிக்கையை அதன் நிர்வாக இயக்குநர் பத்மஜா சுந்துரு வெளியிட்டார். இதை யடுத்து அவர் செய்தியாளர்க ளிடம் கூறியது:
இந்தியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 4 லட் சத்து 50,278 கோடி ஆகும். இது கடந்த ஆண்டைக் காட் டிலும் 12 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. நிகழ் நிதியாண் டின் மூன்றாவது காலாண்டு மொத்த வருமானம் ரூ.6,505.62 கோடியாகும். கடந்த ஆண் டின் இதே கால கட்டத்தில் ரூ.5,269.10 கோடி ஆக இருந் தது. நிகர லாபம் கடந்த ஆண் டைக் காட்டிலும் (ரூ.152.26 கோடி) 62.3 சதவீதம் அதிக ரித்து தற்போது ரூ.247.16 கோடியாக உயர்ந்துள்ளது.
வட்டி மூலம் கிடைக்கக் கூடிய நிகர வருவாய் கடந்த ஆண்டில் ரூ.15,530 கோடி யாக இருந்தது. இது நிக ழாண்டு ரூ. 18,383 கோடியாக அதிகரித்துள்ளது. வாடிக்கை யாளர்களிட மிருந்து பெறப் படும் மொத்த டெபாசிட் தொகை ரூ.2 லட்சத்து 57,621 கோடி ஆகும். இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 12 சதவீதம் வளர்ச்சி பெற்றுள் ளது. வங்கியின் மூலம் ரூ.1 லட்சத்து 92,658 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 76,864 கோடி ஆக இருந்தது. வாராக்கடன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. நீண்ட கால திரும்பச் செலுத்தும் கடனாக 47 ஆயி ரம் சிறு,குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு ரூ.1,800 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி-அலகா பாத் வங்கி இணைப்பு விரை வில் நடைபெறும். இதன் மூலம் வட இந்தியாவில் இந்தியன் வங்கியின் வர்த்தகம் விரிவ டையும் என்றார் நிர்வாக இயக்குநர் பத்மஜா சந்துரு.

Saturday, January 25, 2020

வரி வருமான இலக்கில் இந்த ஆண்டு ரூ.2.5 லட்சம் கோடி குறையும்: முன்னாள் நிதித்துறைச் செயலர் எச்சரிக்கை

வரி வருமானத்தில் அரசு நிர்ணயித்த இலக்கை விட இந்த ஆண்டு ரூ. 2.5  லட்சம் கோடி குறையலாம் என  முன்னாள் நிதித் துறைச் செயலர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார்.
கார்பரேட் வரி வருவாய், கலால் வரி, சுங்க வரி போன்றவை  2019- - 2020 ஆம் ஆண்டில் மந்தமாகவே இருக்கும் என்று ஏற்கெனவே தெரி விக்கப்பட்டுள்ளது. இதில்  கலால் வரியில் ரூ.2.2 லட்சம் கோடியும், சுங்க வரியில் ரூ.1.06 லட்சம் கோடியும் குறைவாக வசூலாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது செலவுகள் அதிகரித்து வரி வருவாய் குறைந்துள்ளதால் நடப்பு நிதி யாண்டில் நிதிப் பற்றாக் குறை இலக்கை அடைவது கடினம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது.
முன்னாள் நிதித்துறை செயலர் சுபாஷ் சந்திர கர்க் ,  இந்த நிதி யாண்டில் இந்தியாவில் பொருளா தார மந்தநிலை பெரும் பிரச்சினை யாக எழுந்துள்ளது.
அரசின் வரி வருவாய் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகும் மந்த மாகவே இருந்து வருகிறது.
ஒரு பக்கம் அரசின் செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் இன்னொரு பக்கம் அரசின் வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி யின் கீழ் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில் ஒரு சில மாதங்களைத் தவிர மற்ற மாதங் களில் இலக்கை அடையவே முடியவில்லை. இத்தகைய சூழலில் இந்த ஆண்டில் வரி வருவாய் இலக்கை அடைவது கடினம்
மொத்தம் இந்த ஆண்டில் ரூ.24.59 லட்சம் கோடி வரி வசூல் செய்ய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
அதில் ரூ.2.5 லட்சம் கோடி குறைவான அளவிலேயே வரி வசூல் இருக்கும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது வெறும் 1.2 சதவீதமாகும்.
இதில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.8.09 லட்சம் கோடி போக, மத்திய அரசின் வரி வருவாய் ரூ.16.50 லட்சம் கோடி மட்டுமே இருக்கும். 2018-_19ஆம் ஆண்டில் அரசுக்கு ரூ.13.37 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருந்தது. எனவே இந்த ஆண்டில் வரி வருவாய் ரூ.3.13 லட்சம் கோடி குறையும் எனத் தெரிவித்துள்ளார்.

கேரளா சிறீசங்கராச்சாரியார் சமஸ்கிருத பல்கலைக்கழகம் தீர்மானம் நிறைவேற்றம்

 கேரளாவில் சிறீசங்கராச்சாரியார் சமஸ்கிருத பல் கலைக்கழகம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய நாட்டின் முதல் பல்கலைக்கழகமாக திகழ்கிறது.
இந்த தீர்மானத்தை, சிண்டிகேட்டில் மாணவர்களின் பிரதிநிதியான கேவி அபிஜித் கொண்டு வந்தார். 15 உறுப்பினர்கள் கொண்ட சிண்டி கேட்டில், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இந்த தீர்மானம் நிறைவேறி இருக்கிறது.
அந்த தீர்மானத்தில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் இதுதான்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களாக இருந்தாலும் அல்லது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்களாக இருந்தாலும் சரி.
நாட்டின் இளைஞர்களை மிருகத்தனமாகத் தாக்குவதன் மூலம் ஆளும் பாஜக ஒவ்வொரு எதிர்ப்பின் குரலையும் தடுக்க முயற்சிக்கிறது. வளாகங்களில். அதற்கு எதிராக குரல் எழுப்பும் அனைவரையும் மூடிமறைக்க பாஜக அரசு காவல்துறை மற்றும் குண்டர்களைப் பயன் படுத்துகிறது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான பயங்கரமான வன்முறைக்கு எதிராக ஒரு வலுவான போராட்டத்தை நடத்துமாறு பல்கலைக் கழகம் வலியுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் முதன்முறை! காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் முறை அறிமுகம்

தமிழகத்தி லேயே முதன் முறையாக, தாம்பரம் அடுத்த பெருங் களத்துர் பேரூராட்சியில், காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மனித வாழ்விற்கு அவசிய மான தண்ணீரின் தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பருவநிலை மாறு பாடு, காடுகள் அழிக்கப்படு வது, சுற்றுச்சூழல் மாசு உட் பட, பல்வேறு காரணங்க ளால், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க, நீர்நிலைகளை தூர் வாரி பராமரிப்பது மட்டு மின்றி, மாற்று வழிகளையும் யோசிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.அதற்கேற்ப, பெருங்களத்துர் பேரூராட்சி யில், காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் முறை, ஆறு மாதங்களுக்கு முன் அறிமுகப் படுத்தப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது.
இது குறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரவி குமார், (56), கூறியதாவது: பேரூராட்சிகளின் இயக்கு னர் உத்தரவுப்படி, சூரிய சக்தி இயந்திரம் வாயிலாக, காற்றை குடிநீராக மாற்றும் இயந்திரம், பேரூராட்சி அலுவலகத்தின், மாடியில் பொருத்தப்பட்டுள்ளது.இதற்கு, 4.7 லட்சம் ரூபாய் செலவானது. மொத்தம், நான்கு, 'செட்' சூரிய சக்தி இயந்திரங்களில், காற்றை மறுசுழற்சி செய்து, தண்ணீ ராக மாற்றும் வகையிலான மோட்டார்கள் உள்ளன.
இவற்றில் இருந்து கிடைக் கும் தண்ணீர் சிறிய அள வுள்ள சுத்திகரிப்பு இயந்திரம் வாயிலாக, சுத்தம் செய்யப் படுகிறது.நாளொன்றுக்கு, 80 லிட்டர் குடிநீர், இந்த இயந் திரம் வாயிலாக பெறப்பட்டு, அருகில் உள்ள, அரசு பள்ளி மற்றும் பொதுமக்களுக்கு, இலவசமாக வழங்கப்படுகி றது.
தமிழகத்திலேயே முதல் முறையாக, இத்திட்டம் இங்கு அறிமுகப் படுத்தப்பட் டுள்ளது.
எதிர்காலத்தில், குடிநீர் தேவையை பொறுத்து, பேரூ ராட்சி அலுவலகத்திலேயே திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம்.இதை பின்பற்றி, வீடுகளிலும் அமைக்க, எங் களிடம் பொதுமக்கள், ஆலோ சனை பெற்று வருகின்றனர். அவர்கள், அரசு மானியத்தை யும் எதிர்பார்க்கின்றனர்.அரசு மானியத்துடன், அனுமதியும் அளித்தால், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும், இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கீழடியில் அடுத்த வாரம் ஆறாம் கட்ட அகழாய்வு துவங்கும்


சிவகங்கை மாவட்டம் கீழடியில், அடுத்த வாரத்தில், ஆறாம் கட்ட அகழாய்வு துவங்க உள்ளது. தமிழகத்தின், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில், ஏற்கெனவே, மத்திய தொல்லியல் துறை சார்பில், மூன்று முறையும், தமிழக தொல்லியல் துறை சார்பில், இரண்டு முறையும் அகழாய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து, இந்தாண்டும் அகழாய்வு செய்வதற்கான அனுமதியை, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம் வழங்கி யுள்ளது. அதுமட்டுமின்றி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களிலும் அகழாய்வு செய்ய அனுமதி தரப்பட்டு உள்ளது.  இந்த இடங்களில், விரைவில் அகழாய்வு பணிகள் துவக்கப்பட உள்ளன.
இது குறித்து, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'கீழடியில், நான்கு இடங்களில், அகழாய்வு செய்ய உள்ளோம். அதற்கான கள ஆய்வுகள் முடிந்துள்ளன. ஒரு வாரத்தில், அகழாய்வு பணிகள் துவங்கும். அதேபோல், மற்ற இடங்களிலும் விரைவில், அகழாய்வுப் பணிகள் துவங்கும்' என்றனர்.

சரக்கு போக்குவரத்து நிறுவனத்திற்கு விருது

 FedEx நிறுவனம், உலகில் மிகவும் பாராட்டப்படும் நிறுவனங் களுடைய பட்டியலில் மீண் டும் இடம்பிடித்துள்ளது. ஃபார்ச்சூன் இதழ் வெளியிட் டுள்ள ஒரு கணக்கெடுப்பின் படி அதற்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது.
“முந்தைய 20 ஆண்டுகளி லும், ஃபார்ச்சூனின் மிகவும் பாராட்டப்படும் நிறுவனங் களில் ஒன்றாக அங்கீகரிக்கப் பட்டிருப்பது FedExக்குப் பெருமை” என்றார் FedEx நிறுவனத்தின் தலைவர் மற் றும் தலைமைச் செயல் அலு வலர் ராஜேஷ் சுப்ரமணியம். “இந்த மதிப்பு, உலகெங்கும் ஒவ்வொரு நாளும் எங்களு டைய வாடிக்கையாளர்க ளுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்கிவருகிற, வாக்கு றுதியை வாழ்க்கைமுறையாகப் பின்பற்றிவருகிற 490,000க்கும் மேற்பட்ட எங்கள் FedEx குழு உறுப்பினர்களுடைய நேரடிப் பலனாகும்.”

பூமியில் சூரியனை விட மிகப்பழைமையான திடப்பொருள்

கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதியே அண்டம். கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுதியே பேரண்டம். பேரண்டத்தில் காணப்படும் பல்வேறு அண்டங்களில் ஒன்றுதான் பால்வெளி மண்டலம். சூரியன் உட்பட நம்ம கண்களுக்குத் தெரியும் அனைத்துமே பால்வெளி மண் டலத்தைச் சார்ந்தவை. பால் வெளியும் மிக அடர்த்தியான விண்மீன்களின் தொகுதிதான்.
அவற்றுள் பல விண்மீன்கள் சூரி யனை விட பல மடங்கு பெரியது. மிக நீண்ட தொலைவில் தூரத்திலே இருப்ப தாலே நம் கண்களுக்கு வெறும் புள்ளி கள் போன்று தெரிகின்றன.
ஒரு மிக சக்திவாய்ந்த வெடிப்பின் காரணமாக திடீரென பிரகாசத்தில் பெரிதும் அதிகரிக்கும் ஒரு நட்சத்திரம், அதன் நிறையை வெளியேற்றுகிறது. இந்த நட்சத்திரம் சூப்பர்நோவா என அழைக்கப்படுகிறது. விஞ்ஞானத்தின் படி, ஸ்டார்டஸ்ட் எனும் விண்மீன் துகள்கள் ஒரு சூப்பர்நோவா வெடிப்பி லிருந்து மீதமுள்ள துகள்களால் ஆனது.
விண்வெளியில் மிதக்கும் தூசி மற் றும் வாயு ஒன்றுடன் ஒன்று மோதி வெப்பமடையும் போது விண்மீன்கள் உருவாக்கப்படுகின்றன. அது மட்டு மல்லாது அறிவியலின் படி விண்மீன்கள் என்றென்றும் பிரகாசிப்பதில்லை. நம் மைப் போல, மற்ற எல்லா உயிரினங் களைப்போலவே, அவை பிறக்கின்றன, வாழ்கின்றன, பின்னர் இறக்கின்றன.
மில்லியன் கணக்கான ஆண்டுகளாக எரியும் நட்சத்திரங்களின் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னர் அதன் துகள்கள் விண்வெளியில் வீசப்படுகின்றன. நமது பால்வெளியில் ஆற்றல் மூலமாக இருக் கும் சூரியன் உருவாவதற்கு முன்னதா கவே விண்மீன்கள் உருவாகியிருந்தன எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், பூமியில் விழுந்த விண் கல்லினுள் இருந்த விண்மீன் துகள்கள் தான் பூமியின் மிகப்பழமையான திடப் பொருள் என ஆய்வாளர்கள் கண்டறிந் துள்ளனர்.
வானியற்பியலில், அண்டக்கதிர் (காஸ்மிக் கதிர்கள்) என்பது குறிப்பாகச் சூரியக் குடும்பத்திற்கு வெளியில் இருந்து வரக்கூடிய ஓர் உயர்-ஆற்றல் பெற்ற அணுத் துகள் ஆகும். காஸ்மிக் கதிர்கள் உற்பத்தி மூலக்கூறுகள் வான்வெளி துகள்களில் எவ்வளவு உள்ளதை என் பதை கணிப்பதன் மூலம் அவை எவ் வளவு ஆண்டுகள் பழமையானது என கண்டறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வகையில், 1969ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் விழுந்த முர்சிசன் என்ற விண்கல்லை ஆய்வு செய்த அமெரிக்கா ஆய்வாளர்கள் அதில் சூரியனுக்கும் முந் தைய துகள்கள் உள்ளதாக கண்டறிந்து உள்ளனர்.
அவற்றில் உள்ள துகள்கள் 4.6 முதல் 4.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தை யவை எனவும் அவற்றுள் உள்ள மற்றும் சில துகள்கள் சுமார் 5.5 பில்லியன் ஆண்டுகளுக்கும் முந்தையது எனவும் கண்டறிந்துள்ளனர். இவை பூமியில் உள்ள திடப்பொருட்களில் மிகவும் பழமையானது எனவும் சூரியனுக்கும் முன்பு உருவானதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அறிவியலாளர்களின் கருத்துப்படி சூரியனின் வயது 4.603 பில் லியன் ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சலுகை அறிவித்த வோடபோன்

 ஏர்டெல், வோடபோன் அய்டியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் சமீபத் தில் தங்களது சலுகைகளின் விலையை 40 சதவீதம் வரை அதிகரித்தன. அதன் தொடர்ச் சியாக வோடபோன் ரூ. 997 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
புதிய ரூ. 997 விலை வோடபோன் சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் பல்வேறு பலன் கள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 180 நாட்கள் ஆகும். இத்துடன் ரூ. 499 மதிப்புள்ள வோடபோன் பிளே சந்தா, ரூ. 999 மதிப்புள்ள சீ5 சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இதே போன்ற பலன்களை வழங்கும் சலுகை ரூ. 599 விலை யில் ஏற்கனவே வழங்கப்படுகி றது. எனினும், இந்த சலுகை யின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். வோடபோனின்
ரூ.997 விலை சலுகை தற்சமயம் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படவில்லை. விரை வில் அனைத்து வட்டாரங் களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, January 24, 2020

மின்சாரத்தை நுகராத "குளிர்பதனப் பெட்டி!"

மின் தட்டுப்பாடு உள்ள வெப்ப நாடுகளில், உணவுப் பொருட்களை பாதுகாக்க குளிர் பதனப் பெட்டிகளை பயன்படுத்துவதில் சிக்கல் உண்டு. கடைகளில் வெகு நேரம் மின்சாரம் இல்லாவிட்டால், பெட்டியிலுள்ள உணவுப் பொருட்கள் கெட்டு விடும்.
இதற்கு, நெதர்லாந்தைச் சேர்ந்த, 'கூல் இன்பினிடி' தற்போது, 'அய்ஸ் வோர்ட் 300' என்ற புதிய குளிர் பதனப் பெட்டியை உருவாக்கியுள்ளது.
இதற்கு, ஆறு மணி நேரம் மின்சாரம் இருந்தால் போதும். அந்த நேரத்திற்குள், பெட்டியைச் சுற்றி நிரப்பப்பட்டுள்ள சாதாரண நீரை அய்ஸ் கட்டிகளாக மாற்றி விடும்.
பிறகு மின்சாரம் இல்லா விட்டாலும், அடுத்த, 48 மணி நேரத்திற்கு, பெட்டிக்குள் உள்ள உணவுகளை, 6 டிகிரிக்கும் குறைவான குளிர்ச்சியில் வைத்திருக்கும்.
ஆசிய நாடுகளில் அய்ஸ் கட்டிகளை வெளியில் வாங்கி வந்து, தெர்மாகோல் பெட்டிகளில் கொட்டி, அதில் நேரடி யாகவே உணவுப் பொருட்களை புதைத்து வைப்பர். அதைவிட, 'அய்ஸ் வோர்ட் 300' பெட்டியில், நல்ல குளிர்ச்சியை கூடுதல் நேரத்திற்கு பெற முடியும் என்கின்றனர், அதை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்.

கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!

சர்க்கரை நோயாளிகளில் சிலர், இடுப்பில் இன்சுலின் பம்பு கருவியை அணிய வேண்டியிருக்கும். அந்தக் கருவியில் இருக்கும் இன்சுலின் திரவம் ஓரிரு நாட்களில் கெட்டி தட்டி, பம்பு அடைத்துக் கொள்ளும் அபாயம் உண்டு.
இதை தடுக்க, அறை வெப்பத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்கும் இன்சுலின் திரவத்தை தயாரிக்க கிளம்பினர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள். கூடவே ஒரு போனசாக, அத்தகைய இன்சுலினை கோழி முட்டையிலிருந்தே தயாரிக்க முடியும் என்பதையும் அவர்கள் கண்டறிந்து உள்ளனர்.
மெல்போனிலுள்ள புளோரி இன்ஸ் டிடியூட் மற்றும் ஓசாகா பல்கலைக் கழக விஞ்ஞானிகள், முட்டையிலிருந்து தயா ரித்த இன்சுலின், ஆறு நாட்கள் வரை கெட்டி தட்டாமல் தாக்குப் பிடிக்கிறது.
'கிளைகோ இன்சுலின்' என்று பெயரி டப்பட்டுள்ள இந்த மருந்தால், பல கோடி ரூபாய் விரயம் தவிர்க்கப்படும். மேலும், தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு, பம்பு அடைத்துக் கொள்ளாமல், அதிக நாட்கள் இன்சுலினை பயன்படுத்தவும் முடியும்.
தற்போது வெற்றிகரமாக சோத னையை முடித்துள்ள விஞ்ஞானிகள், விரைவில் பெரிய அளவில் கோழி முட் டை இன்சுலினை தயாரிக்க, ஏற்பாடு களை செய்து வருகின்றனர்.

அய்.பி.எம்மின் கடல் நீர் பேட்டரி!

லித்தியம் அயனி மின்கலன்கள் இன்றி எதுவும் இயங்காது என்ற நிலை வந்திருக் கிறது. அதேசமயம், லித்தியம் அயனி மின்கலன்களில் சேர்க்கப்படும் கோபால்ட், நிக்கல் போன்ற உலோகங்கள் மற்றும் வேதிப் பொருள்கள், சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கின்றன என்ற புகார்களும் உரத்து ஒலிக்கின்றன.
பிரபல கணினி தயாரிப்பாளரான, அய்.பி.எம்.,கோபால்ட், நிக்கல் போன்ற உலோகங்கள் இல்லாமல், திறனுள்ள மின்கலன்களை தயாரிக்க முடியும் என்று அண்மையில் அறிவித்துள்ளது.
இந்த உலோகங்களுக்கு பதிலாக அது பயன்படுத்தும் மூன்று முக்கியமான வேதிப் பொருட்களை சாதாரண கடல் நீரில் இருந்தே எடுக்கலாம் என்றும் ஐ.பி.எம்., விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த மூன்று பொருட்கள் எவை என்பதை அவர்கள் ரகசியமாக வைத்துள்ளனர்.
கடல் நீர் பொருட்களைப் பயன்படுத்தி னாலும், தங்களது மின்கலன், அய்ந்தே நிமிடங்களில், 80 சதவீதம் மின்னேற்றம் பெற்றுவிடும் திறன் உடையவை என்றும், இந்த மின்கலன்களை மிக விரைவாக, ஆலைகளில் தயாரிக்க முடியும் என்றும் அய்.பி.எம் அறிவித்துள்ளது.
இன்றைய கணினிகள், விரைவில் சந் தைக்கு வரவிருக்கும் குவாண்டம் கணினிகள், விரைவில் பரவ ஆரம்பித்துள்ள மின் வாகனங்கள் போன்றவற்றுக்கு தங்களு டைய கடல் நீர் மின்கலன்கள் ஏற்றவையாக இருக்கும் என அய்.பி.எம்மின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ககன்யான் திட்டத்தில் முதல் ஆளில்லா விண்கலம்: இஸ்ரோ தலைவர் தகவல்

‘‘மனிதனை விண் வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத் தின் முதல் கட்டமாக ஆளில்லா விண்க லத்தை அனுப்பும் சோதனை வரும் டிசம்பரில் நடத்தப்படும்’’ என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியதாவது:
ககன்யான் திட்டம் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டம் மட்டுமல்ல, புதிய விண்வெளி ஆய்வு மய்யத்தை அமைத்து அங்கு தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற் கொள்வதை சாத்தியமாக்கும் முயற்சியும் கூட. ககன்யான் திட்டத்தில் 2 முறை ஆளில்லா விண்கலத்தை அனுப்பி சோதனை மேற்கொள்ளப்படும். இதில் முதல் சோதனை வரும் டிசம்பர் மாத மும், அடுத்த சோதனை 2021 ஜூனிலும் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, 2021 டிசம்பரில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பி வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘விண்வெளிக்கு அனுப்ப 4 விண்வெளி வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த மாத இறுதிக்குள் ரஷ்யா சென்று பயிற்சி பெற உள்ளனர். ககன் யான் விண்கலம் வடிவமைப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இந்த ஆண்டில் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் சோதித்து பார்க்கப்பட உள்ளது,’’ என்றார்.
ககன்யான் திட்டத்தின் மூலம் விண் வெளிக்கு செல்லும் 4 பேரும் இந்திய விமானப்படை வீரர்கள் ஆவர். இத்திட் டத்தில் பெண்கள் இல்லை என்பது சிறிய குறையாக இருந்தது. அது தற் போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மனிதர்களுக்கு உதவ, மனிதனைப் போலவே ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. ‘வியோம் மித்ரா’ என்ற அந்த ரோபோ ஒரு பெண். இந்த பெண் ரோபோ விண்கலத்தில் வீரர்களுக்கு உதவிகரமாக பல்வேறு பணிகளை செய்யும் வகையில் வடிவ மைக்கப்பட்டு உள்ளது. இது, 2 மொழி கள் பேசக்கூடியது. மேலும், விண் வெளிக்கு வீரர்களுடன் செல்வது மட்டு மின்றி, ஆளில்லா விண்கலம் அனுப்பப் படும் சோதனைகளிலும் ‘வியோம்மித்ரா’ இடம் பெற்றிருக்கும் என கே.சிவன் தெரிவித்துள்ளார்.

கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்கும் திட்டம்


கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரி பொருளை தயாரிக்கும் திட்டத்தை சென்னை அய்அய்டி விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.
வாகனப் புகையிலிருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு காற்று மாசுவின் அளவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக கார்பன் டை ஆக்சைடு வெளியாகாத வகையில் எரிபொருளை தயாரிக்க ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சோதனைகளை நடத்தி வந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சூரிய சக்தி மூலம் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரி பொருளை தயாரித்து சாதனை படைத்தனர்.
ஹைட்ரஜன் எரிபொருளின் உற்பத்தி செலவு குறைவாக இருந்தாலும், அது எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்ப தால் வாகனங்களில் பொருத்துவது மற்றும் சேமித்து வைப்பதில் சில பாதகமான விஷயங்கள் உள்ளன. எனினும், அதனை மிகவும் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக் கும் தொழில்நுட்பங்களும் வளர்ந்து விட்டன. இந்நிலையில், சென்னை அய்அய்டி விஞ்ஞானிகளும் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்கும் சாதனையை எட்டியுள்ளனர்.
கடல் நீரிலிருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் எரி பொருளை பயன்படுத்தும்போது அதிலிருந்து கார்பன் டை ஆக்சைடு வெளியேறுவதில்லை. இதனால் காற்று மாசு ஏற்பட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த எரிபொருளை சேமித்து வைக்க தேவையில்லை. நமது தேவைக்கு ஏற்ப தயாரித்துக்கொள்ளலாம். இதனால், பாதுகாப்பு மட்டு மல்லாமல் எரிபொருளை கொண்டு செல்வதற்கான செல வும் ஏற்படாது. கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரி பொருளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் செல வும் குறைவு. இந்த ஹைட்ரஜன் எரிபொருளை கார் போன்ற வாகனங்களுக்கு மட்டுமல்லாமல் விமான போக்கு வரத்திற்கும் பயன்படுத்தலாம் என்று சென்னை அய்அய்டி விஞ்ஞானி மாலிக் தெரிவித்துள்ளார்.
மேலும், கடல் நீரிலிருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருளை ராக்கெட்டுகளை ஏவுவதற்கும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தில் பயன்படுத்துவதே எங்களின் எதிர்கால திட்டம். அந்த நாளை எதிர்பார்த் துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். ஹைட்ரஜன் எரிபொருளை வாகனங்களுக்கு பயன்படுத் துவது தொடர்பான ஆய்வுகளும் முடிவடைந்துள்ளன. தற்போது ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்கும் திட்டத்தை மேம்படுத்தி வருகிறோம் என்றும் அய்அய்டி விஞ்ஞானிகள் கூறினர்.

பெரிய பதவி சின்ன புத்தி

காஷ்மீரில் ஆபாசப்படங்களை பார்க்க இணையம்  பயன்படுத்தப்படுவதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. சரஸ்வத் கூறி உள்ளார்.
திருபாய் அம்பானி தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப கல்வியக பட்டமளிப்பு விழாவில் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரும், நிதி ஆயோக் உறுப்பினருமான வி.கே.சரஸ்வத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அப்போது சரஸ்வத் இடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
வி.கே.சரஸ்வத், தனது பதிலில் “காஷ்மீர் மாநிலத்துக்குச் செல்ல ஏன் அரசியல்வாதிகள் விரும்புகின்றனர்? அவர்கள் டில்லி சாலையில் நடக்கும் போராட்டங்களை காஷ்மீரிலும் நடத்த விரும்புகின்றனர்.  அவர்கள் சமூக ஊடகங்களை தங்கள் போராட்டத்துக்கு உதவியாக பயன்படுத்தி வருகின்றனர்.   எனவே அவர்களுக்கு இணையச் சேவை இல்லை எனில் பயன் ஏதும் இல்லை.
காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்கு இணையத்தின் தேவை எதற்குத் தெரியுமா?  அவர்கள் இணையத்தை எதற்குப் பயன்படுத்துகின்றனர் என்பது தெரியுமா?  அவர்கள் இணையத்தை ஆபாசப்படம் பார்க்க மட்டுமே பயன்படுத்துகின்றனர்.  வேறு எதற்கும் அவர்கள் அதைப் பயன்படுத்துவது கிடையாது.  எனவே அங்கு இணையச் சேவை இல்லாததால் பொருளாதாரத்தில் எவ்வித மாற்றமும் உண்டாகப் போவதில்லை என நான் கூறுகிறேன்.
காஷ்மீரில் இணையச் சேவை முடக்கப்பட்டது.  ஆனால் அந்த சேவை குஜராத்தில் உள்ளதா?  காஷ்மீரில்  இணையச் சேவை முடக்கம் என்பதே வேறு.  காஷ்மீரில் விதி எண் 370 நீக்கப்பட்டு காஷ்மீரை முன்னேற்ற விரும்பும் போது இது போலச் சேவைகளைப் பயன்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் அதிகம் உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக் கழகத் துணைவேந்தர் மட்டுமல்ல; நிதி ஆயோக்  உறுப்பினர் என்னும் மிக முக்கிய பொறுப்பு களில் உள்ளவர்களின் தரம் எந்த நிலையில் உள்ளது என்பதற்கு இந்த சரஸ்வத் கூற்றும், கருத்தும் போதாதா?
பிஜேபி சட்டப் பேரவை உறுப்பினர்கள் கருநாடக மாநில சட்டப் பேரவையில் என்ன செய்தார்கள்? கைப்பேசியில் அவர்கள் ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்ற செய்தி அப்பொழுது பெரிதாகப் பேசப்பட்டது மறந்து விட்டதா?
கார்ப்பரேட்டுகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்காக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட வர்கள் பட்டியலில் பிஜேபியினர் முதல் இடத்தில் இருந்த தகவல்கள் எல்லாம் வெளிவரவில்லையா?
ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ளவர்கள் இணையதளங்களில் ஆபாசப் படங்கள் பார்க்கின்ற னர் என்பது நம்பத் தகுந்ததா? காஷ்மீர் என்றாலே இவர்கள் கருதுவது முஸ்லிம்கள் என்பதுதான். உடனே அவர்கள் மீது பழி போட வேண்டும் என்ற எண்ணம்  மேலோங்கிப் பொங்குகிறது. குஜராத் கல வரத்தின் போது கூட அன்றைய முதல்  அமைச்சர்   (இன்றைய பிரதமர் நரேந்திரமோடி என்ன பேசினார்?
அகதிகள்  முகாம்களில் முஸ்லிம் மக்கள்
பெருக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கிறார்கள் என்ற சொல்லவில்லையா? இந்த வெட்கம் கெட்ட ஆபாச - ஆரிய அட்டகாச அதிகார ஆட்சி என்று ஒழியுமோ!

Thursday, January 23, 2020

ஈழத்தமிழர்களைக் கொன்றது போதாதா? இலங்கை பாதுகாப்புக்கு இந்தியா ரூ.350 கோடியாம்!

கொழும்பு வில், இலங்கை அதிபர் கோத் தபய ராஜபக்சேவுடன், இரு நாட்டு பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு, இந்தியா சார்பில், 350கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்தியாவின் தேசிய பாது காப்பு ஆலோசகர் அஜித் டோவல், பல்வேறு நாடுக ளின் தலைவர்களை சந்தித்து, இரு நாட்டு பாதுகாப்பு உள் ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்படி அஜித் தோவல், நேற்று முன்தினம் இலங்கை சென்றார். அங்கு, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயுடன், தேசிய பாதுகாப்பு, உளவுத் துறை தகவல் பகிர்வு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் இரு நாடு களுக்குமான ஒத்து ழைப்பை மேம்படுத்துவது தொடர் பாக பேச்சு நடத்தினார்.
இலங்கை, மாலத்தீவு மற் றும் இந்தியா இடையேயான, கடல் மண்டலம் தொடர் பான உளவுத்துறையை மறு ஆய்வு செய்வதன் முக்கியத் துவம் குறித்து விளக்கிய அஜித் தோவல், இந்த செயல் முறைக்கு மற்ற நாடுகளையும் பார்வையாளர்களாக கொண்டு வர வேண்டும் என்றார். டோவலுடன் நடந்த பேச்சு குறித்து இலங்கை அதிபர் கோத்தபய திருப்தி தெரிவித் துள்ளார். ''இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத் துவது, விவாதத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது,'' என்று, அவர் கூறினார்.
இலங்கை அதிபர் அலு வலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: இருதரப்பு உறவு களை மேம்படுத்துதல் மற் றும் இரு நாடுகளின் ஆயுதப் படை, கடலோர காவல் படைக்கு இடையிலான ஒத் துழைப்பை வலுப்படுத்துதல் குறித்து விவாதிக்கப் பட்டது. பிராந்திய கடல் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட் டது. இலங்கையின் பாது காப்பு நடவடிக்கைகளுக்காக, 350 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என, இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கைப் போரில் காணாமல் போனவர்கள் இறந்து விட்டனராம்: கூறுகிறார் அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கை போரில் காணாமல்போன ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டனர் என இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக் கும், இலங்கை இராணுவத்துக்கும் 30 ஆண்டு காலமாக நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009ஆம் ஆண்டு முடி வடைந்தது. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 1 லட்சம் பேர் பலியாயினர் என கூறப்படுகிறது.
இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக் கானோர் படுகொலை செய்யப்பட்டனர் என தமிழர்கள் குற்றம்சாட்டினர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த இலங்கை இராணுவம், விடு தலைப் புலிகளிடமிருந்து தமிழர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மனி தாபிமான நடவடிக்கை என கூறியது.
இறுதிக்கட்ட போரில் தமிழர்கள் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக சர்வ தேச மனித உரிமை அமைப்புகள் கூறு கின்றன. ஆனால் மொத்தமே 20 ஆயிரம் பேர்தான் காணாமல் போயினர் என இலங்கை அரசு கூறி வருகிறது.
இந்நிலையில், அய்.நா ஒருங்கிணைப் பாளர் ஹனா சிங்கரை, இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே கடந்த வாரம் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், ‘தேவையான விசாரணை நட வடிக்கைகள் முடிந்த பிறகு, காணாமல் போனவர்களுக்கு இறப்பு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தாக இலங்கை அரசா ணையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இறப்பு சான்றிதழ் வழங்கிய பின் அந்த குடும்பத்தினருக்கு உதவிகள் அளிக்கப்படும். இந்த தீர்வு, பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு உதவும் என அதிபர் கோத்தபயா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை போரில் காணாமல் போனவர்கள் இறந்து விட்டதாக முதல் முறையாக அதிபர் கோத்தபயா ராஜபக்சே ஒப்புக் கொண் டுள்ளார். இவர்தான் இலங்கை பாது காப்பு அமைச்சராக இருந்து, புலிகளுட னான போரை முடிவுக்கு கொண்டுவரு வதில் முக்கிய பங்காற்றினார்.
காணாமல் போனவர்களின் பிரச்சி னைகளை தீர்க்க கோத்தபயா திட்டங் கள் வகுத்துள்ளதாக அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. அதில், ‘‘இலங்கை போரில் காணாமல் போனவர்கள், உண் மையிலேயே இறந்துவிட்டனர் என அதிபர் விவரித்துள்ளார்.

மின்சார வாகனங்கள் விற்பனை விரிவாக்கம்

அமேசான் நிறுவனம் தனது டெலிவரி வாகனங்களில் 2025 க்குள் 10,000 மின்சார வாகனங்கள் (ஈ.வி) அடங்கும் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமேசான் நிறுவன சந்தைகள் துணைத் தலைவர், அகில் சக்சேனா கூறியிருப்பதாவது: "அமே சான் இந்தியாவில், எங்கள் நடவடிக்கைகளின் சுற்றுச் சூழல் தாக்கத்தை குறைக்கும் ஒரு விநியோக சங்கிலியை உருவாக்க நாங்கள் கடமைப் பட்டுள்ளோம். 2025 ஆம் ஆண்டளவில் எங்கள் எலக்ட் ரிக் வாகன தொகுப்பை 10,000 வாகனங்களுக்கு விரிவுபடுத் துவது, தொழில்துறையில் ஆற்றல் திறனுள்ள தலைவராக மாறுவதற்கான எங்கள் பய ணத்தின் ஒரு ஒருங்கிணைந்த மைல்கல்லாகும். எங்கள் விநி யோக தொகுப்பில் புதுப்பிக்க முடியாத வளங்களை நம்பியிருப்பதைக் குறைப்பதன் மூலம், மின்மயமாக்கலில் தொடர்ந்து முதலீடு செய் வோம். ” என கூறினார்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி

 பேரறிவாளன் விடு தலை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆளுநர் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.
முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலையில், சிபிஅய் சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணையில், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட பேரறிவா ளன் உட்பட 7 பேர் தற்போது தண்டனை அனுபவித்து வருகின்ற னர். இந்த படுகொலைக்குப் பின் னால் உள்ள சதித்திட்டம் குறித்து விரிவாக விசா ரிப்பதற்காக ஜெயின் கமிஷன் அமைக் கப்பட்டது. இந்த படுகொலையில், வெளிநாட்டுச் சதி இருப்பதை மறுக்க முடியாது என்று கூறிய ஜெயின் கமிஷன், இது குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்று தனது இறுதி அறிக்கையில் அரசுக்கு பரிந்துரை செய்தது.
ஜெயின் கமிஷனின் அறிக்கை யின் அடிப்படையில், ராஜூவ் படு கொலையில் இன்றளவும் மர்மமாக உள்ள விஷயங்கள் குறித்து விசா ரிப்பதற்காக 1999ஆம் ஆண்டு, சிபிஅய் தலைமை யில் எம்டிஎம்ஏ என்ற விசாரணை அமைப்பு உரு வாக்கப்பட்டது. இந்தப் படு கொலையில் பயன்படுத்தப் பட்ட வெடி குண்டை யார் உருவாக் கியது? அது எங்கிருந்து வந்தது? என் பது உட்பட, மிக முக்கியமான விஷயங்கள் குறித்து 20 ஆண்டு களுக்கு மேலாக எம்டிஎம்ஏ விசா ரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், எம்எடிஎம்ஏவின் விசாரணையை உச்சநீதிமன்றம் கண் காணிக்க வேண்டும் என பேரறிவாளன் கடந்த 2016ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பெல்ட் வெடி குண்டுக்கு பேட்டரி வாங்கித் தந்த தாக தன் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ள நிலையில், பெல்ட் வெடி குண்டு எங்கிருந்து வந்தது என் பதே இதுவரை கண்டுபிடிக்கப்படா ததை அவர் சுட்டிக்காட்டியிருந் தார். எனவே, எம்டிஎம்ஏ விசா ரணை முடியும் வரை தனக்கு வழங்கப்பட்ட தண்டணையை நிறுத்தி வைக்கும்படி மனுவில் பேரறிவாளன் கோரியிருந் தார்.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, சிபிஅய் தரப்பில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாததை சுட் டிக் காட்டிய நீதிபதிகள் அதற்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர்.
ஆகவே, முழுமையான விசா ரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்த னர். வழக்கு நேற்று மீண்டும் விசார ணைக்கு வந்தபோது, சிபிஅய் தரப் பில் மற்றொரு விசாரணை அறிக் கைத் தாக்கல் செய்யப்பட்டது.  அதை படித்துப் பார்த்த நீதிபதி நாகேஷ்வ ரராவ் தலைமையிலான அமர்வு, இந்த அறிக்கையில் புதிதாக ஒன் றும் இல்லை என்றும் தொடர்ச்சி யாக ஒரே மாதிரியான அறிக்கையை சிபி அய்  தாக்கல் செய்து வருவதா கவும் கண்டனம் தெரிவித்தது.இதைத் தொடர்ந்து பேரறிவாளன் தரப்பு வழக்குரைஞரிடம், உங்க ளுக்கு என்ன நிவாரணம் வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப் பினர்.
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச் சரவை முடிவெடுத்து, அது தமிழக ஆளுநரிடம் அனுப்பப்பட்டதை பேரறிவாளன் வழக்குரைஞர் சுட் டிக்காட்டினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆளுநர் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய பேரறிவாளனின் வழக் குரைஞர், அந்த பரிந்துரைமீது ஆளு நர் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.  அப் போது குறுக்கிட்ட சிபிஅய் தரப்பு வழக்குரைஞர், ஆளுநருக்கு நீதிமன் றம் உத்தரவிட முடியாது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என் னென்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.  இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப் பட்டது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...