Showing posts with label நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை. Show all posts
Showing posts with label நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை. Show all posts

Monday, July 30, 2012

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 80


நமது இயக்கத்துக்குத் தவறான நோக்கங்கள் கற்பிக்கப்பட்டு, பார்ப்பனர் கள் மீது துவேஷம் கொண்டிருப்பதாக நம் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையானது அல்ல என்பதுடன், சில்லறைத்தனமானதுமா கும். தங்களுக்குத் தனியாக பிரதி நிதித்துவம் வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரியபோது, அவர்கள் இந்துக்களை வெறுத்தார்களா?
உருவாக்கப்பட உள்ள கவுன்சிலில் பெரும்பகுதியினர் இந்தியர் களாக இருக்க வேண்டும் என்று இந்தி யர்கள் கேட்டபோது, ஆங்கிலேயரை அவர்கள் வெறுத்தார்களா? அவையில் அதிகாரிகள்  உறுப்பினர்களின் எண் ணிக்கை பாதியிலிருந்து அய்ந்தில் ஒரு பாகமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் அல்லாத உறுப் பினர்கள் கோரிய போது அதிகாரி உறுப்பினர்களை அவர்கள் வெறுத் தார்களா? இல்லை என்றால், நம் மீது மட்டும் இந்த வெறுப்புக் குற்றச்சாட்டு ஏன் சுமத்தப்படுகிறது?
இத்தகைய குற்றச் சாட்டுகள் நமது நோக்கத்தை எட்டுவ திலிருந்து நம்மை தடுத்து நிறுத்தி விடப்போவதில்லை என்பதை நமது எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ளவே இல்லை என்றே தோன்றுகிறது. பொதுப் பணிகளிலும், சட்டக் கவுன்சில்களிலும் தாங்களே ஏகபோக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று பார்ப்பனர்கள் விரும்பு கின்றனர் என்ற எண்ணத்தையே, இத்தகைய தடைசெய்யும் தந்திரங்கள் நம் மனங்களில் ஏற்படுத்தும். எவர் மீதும் நமக்கு எந்த வித வெறுப்பும் இல்லை. நமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள மட்டுமே நாம் விரும்புகிறோம்.
நம்மை நாமே உயர்த்திக் கொள்ளவே நாம் முயல்கிறோமே அன்றி, மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்க முயலவில்லை.  ஒரு நடைமுறை மீதே, தற்போதுள்ள வாக் குரிமை, சட்டமன்ற அமைப்புகள் என்ற நடைமுறை மீதே நாம் தாக்குதல் நடத் துகிறோம்.  எந்த ஒரு தனிப்பட்டவர் மீதோ, ஒரு சமூகத்தின் மீதோ எந்தக் குறையையும் நாங்கள் கூறவில்லை. எங்களுக்கு ஏதேனும் குறைபாடு இருந் தால்,  1892 மற்றும் 1909 ஆம் ஆண்டு களில் அறிமுகப்படுத்தப்பட்ட நடை முறையைத் தொடர்ந்து இயல்பாக ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர் பார்த்து அவற்றைத் தவிர்க்க நடவடிக் கைகள் மேற்கொள்ள அரசு தவறிவிட்டது என்பதுதான் அந்தக் குறை. இத்தகைய பின்விளைவுகள் மிகவும் மோசமான வைகளாக ஆகவில்லை என்பதில் அய்ய மேதுமில்லை.
சட்டக் கவுன்சில்களை பெரும் அளவில் விரிவுபடுத்தும் திட் டத்தை அறிமுகப்படுத்தி, இந்தக் கவுன்சில்களுக்கு நிருவாகக்கட்டுப்பாடு மற்றும் வரி விதிக்கும் அதிகாரங்களை அதிக அளவில் அளிக்கத் திட்டமிடும் போது,  இத்தகைய அதிகாரங்களால் பாதிக்கப்படக்கூடிய  மக்கள் தங்களுக்கு வர உள்ள ஆபத்துகளைக் கண்டு அஞ்சி, அத்தகைய அதிகாரங்கள் தங்கள் மீது தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வகையில் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கோருவது இயல்பானதேயாகும்.
ஆங்கிலோ இந்தி யர்கள் அதிகாரத்தில் இருந்தபோது,  நிருவாகிகளுக்கு சுயநலம் என்று எதுவும் இல்லாமல் இருந்ததாலும், இயல்பாக ஒரு தலை சார்பாக ஆதரவு காட்டச் செய்யும் உள்ளூர் மக்களுடனான தொடர்புகள் அவர்களுக்கு  இல்லாமல் இருந்ததாலும்,  அவர்கள் ஒருதலை சார்பாகச் செயல் படாமல் நடுநிலை வகித்தார்கள் என்ற ஒரு பாதுகாப்பு மக்களுக்கு இருந்தது. அதற்கு மாறாக,  மற்ற சமூகங்களின் நலன்களுடன் மோதல் போக்கைக் கொண்டுள்ள நலன்களைப் பெற்றுள்ள ஒரு சமூகம் பெரும் அதிகார நிலைக்கு உயருமானால்,  மற்ற சமூக மக்களின் முன் னேற்றத்தை விட, தனது சமூகத்தைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்திலேயே அந்த சமூகம் அதிக அக்கறையும், ஆர்வமும் இயல்பாகவே கொண்டிருக்கும் என்பதால், ஒரு தனிப்பட்ட சமூகத்தின் கைகளில் இவ்வாறு அதிக அளவு அதிகாரங்கள் குவிக்கப்படுவது பற்றி மற்ற சமூக மக்கள் அச்சம் கொள்வது இயல்பேயாகும்.
ஹங்கேரியின் வரலாற்றை நாம் படித்ததில்லையா? அந்த நாட்டில் மாக்யார்கள்  ஆற்றிய செயல்களைப் பற்றி நாம் அறிந்திருக்கவில்லையா? அவர் களின் கைகளில் அதிகாரங்கள் குவிக் கப்பட்டதே அந்நாட்டின் அழிவுக்குக் காரணமாக ஆகிவிடவில்லையா? இத் தகைய ஒரு நிலை நம் நாட்டிலும் ஏற்படுவதற்கு நாம் அனுமதிக்கலாமா? அப்படி இல்லையென்றால், ஒரு அதிகார மற்றும் செல்வாக்கு சமநிலையை உரு வாக்க மட்டுமே நாம் முயலும்போது, தவறான நோக்கங்களை நமது முயற் சிக்குக் கற்பிப்பது ஏன்? பழைய ரணங் களைக் கிளற வேண்டும் என்பது நமது விருப்பமல்ல. அதனால் எந்த ஒரு நல்ல பயனும் ஏற்படப் போவதில்லை.
ஆனால், தங்களின் சொந்த நலன்களைப் பாது காத்துக் கொள்ள வேண்டும் என்ற அவர்களது விருப்பத்தை ஏதேனும் ஒரு வழியில் முறியடிக்க முனையும்போது,  கடந்த கால வரலாறு திரும்புகிறது என்ற உண்மையையே அது உணர்த்துகிறது. சமூக அடிப்படையில் ஒரு திட்டத்தை உருவாக்குவது கடினமான செயலாகவும் இருக்கக்கூடும். என்றாலும், அத்தகைய ஒரு திட்டத்தில் இருந்து தப்பிச் செல்வது என்பது அவ்வளவு எளிதான செயலல்ல.  எந்த வகையிலும் நாம் அதனை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.
பின்னர் நெல்லூரைச் சேர்ந்த ஒரு செல்வந்தரான நிலச்சுவான்தாரரான திரு. கே.ஆதிநாராயணரெட்டி மாநாட்டுக் குத் தலைவராக திரு. தியாகராய செட்டி யார் அவர்களை முறைப்படி முன்மொழிய, உயர்நீதிமன்ற வழக்குரைஞரும், பெர் ஹாம்பூர் நகர்மன்றத் தலைவருமான  திரு. ஏ.பி.பட்ரோ வழிமொழிந்தார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, July 13, 2012

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 76


பார்ப்பனரல்லாதார் இயக்கம்

காங்கிரஸ் - முஸ்லிம் லீகின் கோரிக் கையான ஹோம் ரூலைத் தவிர வேறு எதிலும் மனநிறைவடையாதவர்களாக இருந்தபோது, சுய ஆட்சி எந்த அளவுக்கு நாட்டுக்கு அளிக்கப்பட்டாலும், பார்ப் பனரல்லாத மக்களுக்கு அது நன்மையை விடத் தீமையையே அதிகமாக விளை விக்காதா என்று சிந்தனை மிக்க பார்ப் பனரல்லாத மக்கள் கேட்கத் தொடங் கினர். அதிகாரமும், செல்வாக்கும்  பெற்றிருந்த பார்ப்பனர்கள் தங்களைப் பற்றி மிகைப்படுத்திக் காட்டிக் கொண் டதைக் காணும்போது, இந்த கேள்வி மிகவும் நியாயமானதாகவே தோன்றியது. ஆங்கிலேய ஆட்சியாளர்களை விட பார்ப்பன ஆட்சியாளர்களையே பார்ப்பன ரல்லாத மக்கள் விரும்புவார்கள் என்று பேரரசின் சட்டக் கவுன்சிலில் மரியாதைக் குரிய திரு. சி.எஸ்.சீனிவாச சாஸ்திரி அதிர்ச்சி அளிக்கும்படி தன்னிச்சையாகப் பேசியது பார்ப்பனரல்லாத மக்களின் கண்களைத் திறந்துவிடுவதாக இருந்த துடன், தென்னிந்திய பார்ப்பனர்களின்  எண்ணம் எத்தகையதாக இருக்கிறது என்பதையும் வெளிக்காட்டியது. ஆங்கி லேயரின் ஆட்சியைப் போலவே, பார்ப் பனர்களின் ஆட்சியும் நமது நாட்டின் பொது நலனுக்குக் கேடு விளைவிப்ப தாகவே இருக்கும் என்பதுடன், நாட்டின் மற்ற பகுதியில் உள்ள மக்கள் தங்களின் சரியான உணர்வினால், புரிதலால் பார்ப்பனர்களின் செல்வாக்கு மறுபடியும் எப்போதும் தலை தூக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.
ஆங்கிலேயரின் ஆட்சி அங்குமிங்கு மாக  நமக்கு ஒரு சில இடங்களில் மேலெழுந்தவாரியாக கேடு விளை வித்தது என்றால், பார்ப்பனர்களின் ஆட்சியோ நம்மை ஒவ்வொரு மூலையிலும் துரத்தியடித்து, நமது வாழ்க்கையின் உட்புறத்தையே பாதிப்பதாக இருக்கும். மதச்சார்பற்ற ஆட்சியாளரின் ஒரு வரை யறைக்குட்பட்ட அதிகாரம் எளிதாகப் புரிந்து கொள்ளப்பட இயன்றதாக இருக்கும் என்றால், ஆன்மிக உணர்வு கொண்ட ஆட்சியாளரின் அதிகாரம் எல்லையற்றதாகவும், எளிதில் புரிந்து கொள்ள முடியாததாகவும் இருப்பதாகும். ஆங்கிலேய ஆட்சியாளர் இருப்பதை விட பார்ப்பன ஆட்சியாளர் இருக்கலாம் என்று நாம் நினைக்கவில்லை; விரும்பவும் இல்லை. ஒரு தனிப்பட்ட ஆங்கிலேயர் நமக்குப் புதியவர் என்றும், அவரை விட ஒரு தனிப்பட்ட பார்ப்பனர் நம் நாட்டவர் என்றும் நாம் சில நேரங்களில் நினைத் தாலும் கூட, பார்ப்பனர்களை ஆட்சியாளர் இடத்தில் வைத்துப் பார்க்க மறுப்பதில் நமக்கு தயக்கம் ஏதுமில்லை. இந்த வெறுப்புக்கான காரணம் என்ன என்று தேடி வெகுதொலைவுக்குச் செல்ல வேண் டுவதில்லை. பிறப்பினால் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று பார்ப்பனர்கள் பெருமை பாராட்டிக் கொள்வது, அவர் களுள் மறைந்திருக்கும் பாகுபாடு காட்டும் மனோபாவம், அனைத்துக்கும் மேலாக தனிப்பட்டவர்களாக அவர்கள் பெற்றுள்ள செல்வம், செல்வாக்கு ஆகியவை பார்ப்பனரல்லாத மக்களின் மனதில் அவர்களைப் பற்றி அழிக்க முடியாத சந்தேக உணர்வையும், நம்பிக்கையின் மையையும் தோற்றுவித்துள்ளன. தங் களின் அதிகாரங்களை, செல்வாக்கை ஒன்றுதிரட்டி, தங்கள் இனத்தின் மேன் மைக்கான கொள்கைகளைக் கடைப் பிடித்து, கடந்த காலத்தில் தன்னலமே உருவானவர்களாக பார்ப்பனர்கள் இருந்த காரணத்தால்,  மற்ற சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக அவர்கள் மேற்கொண்ட நியாயமான முயற்சி களுக்குத் தடை ஏற்படுத்தும் ஆபத்து நிறைந்தவர்களாகவே தங்களைப் பார்ப்பனர்கள் கடந்த காலத்தில் காட்டிக் கொண்டுள்ளனர். எவரும் புரிந்து கொள்ள முடியாத  வழிகளில் பணியாற்றி வந்த பார்ப்பனர்கள், இந்த மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்று விழுக்காடு அளவிலேயே அவர்கள் இருந்த போதிலும், அனைத்து அரசு பதவிகளிலும், சலுகைகளிலும் ஒரு பெரும் பகுதியை இதுவரை பெற்று அனுபவித்து வந்துள்ளனர்.
புலிவேந்தலா மாநாடு
அனைத்துக்கும் மேலாக, பார்ப்பன வம்சாவளியினரின் துருப்பிடித்துப் போன ஆயுதங்களைப் புதுப்பிக்கும் நோக்கத் தில், ஆர்வம் கொண்ட ஒரு சில பார்ப் பனர்கள் உருவாக்கி வளர்த்த வர்ணாஸ் ரம தர்ம இயக்கத்தினர், பொதுவாகவே பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாத மக்களிடையே பொதுவாகவே ஒரு வெறுப்பு உணர்வை, பகை உணர்வை உருவாக்கி வளர்த்து வந்தனர். இத் தகைய சூழ்நிலைகளில், பார்ப்பனரல்லாத சமூகங்களைச் சேர்ந்த தொலை நோக் குக் கொண்ட, திறமை மிகுந்த தலைவர் கள் தங்களின் சமூக மக்களின் நலன்களைப் பாதுகாக்க ஓர் இயக்கத் தைத் தொடங்க முடிவு செய்தது இயல் பானதேயன்றி அதில் வியப்பேதும் இருக்க முடியாது. முதல் முதலாக பார்ப் பனரல்லாத மக்களின் இயக்கத்தைத் தொடங்கியதற்காகவும், அதனை மூன்று வெவ்வேறு மொழி நாளிதழ்களின் மூலம் பிரபலமடையச் செய்ததற்காகவும்,  டாக் டர் நாயர் அவர்களுக்கும், ராவ் பகதூர் பி.தியாகராய செட்டியார் அவர்களுக்கும் நமது நன்றியைச் செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். என்றாலும், பார்ப்பனரல்லாதாரின் இந்த இயக்கம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தைக் கொண்டது மட்டுமே யன்றி, எவரையும் தாக்குவதை நோக்க மாகக் கொண்டது அல்ல. சமூகக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும் அது தேசிய உணர்வுக்கு எதிரானது அல்ல. ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட நலன்களை மேம்படுத்திப் பாதுகாப்பதாக அது இருக்க வேண்டுமேயன்றி, நாட்டின் பொதுவான நலன்களைப் பாதிப்பதாக இருக்கக்கூடாது.  இந்த தெளிவான நோக்கத்தைக் காணத் தவறியதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாகத்தான்,  சந்தேகமே குணமாகக் கொண்ட திவான் பகதூர் பி.கேசவபிள்ளையாலும், அவரது கூட்டாளிகளாலும் இரண்டாவது பார்ப் பனரல்லாத மக்கள் இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. பார்ப்பனரல்லாத மக்களிடையே ஏற்பட்டுள்ள இத்தகைய தேவையற்ற பிரிவினைக்காக வருந்தும் நாம், இந்த இரண்டு அமைப்புகளும் மேலும் மேலும் பொதுவான நோக்கங் களுக்காகச் செயல்பட்டு வருவதுடன், காலப்போக்கில் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகிறோம். இதற் கிடையே,  நமது பொதுவான நோக்கங் கள் நிறைவேறுவதற்கு உதவி செய்வது தான் உண்மையான பார்ப்பனரல்லாத மக்களான நமது கடமையாகும். அனைத் துக்கும் மேலாக, நடைமுறை சாத்திய மான அரசியல் சீர்திருத்தங்களைக் கோரிப் பெறுவதில், நமது பார்ப்பன சகோதரர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களாக பார்ப்பனரல்லாதவர் களான நாம் இருந்துவிடக் கூடாது என்பதை நாம் எப்போதுமே மனதில் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட் டால், நமது  ஜனநாயக உணர்வுகள் உண்மையானவை அல்ல, போலி யானவையே என்பது நம்மால், நாமறியா மலேயே மெய்ப்பிக்கப்பட்டுவிடும். அதே நேரத்தில், கானல் நீரைத் தேடி ஓடி நமது ஆற்றல்களை வீணடித்துக் கொள்ளும், வீணான கனவுகளைக் காண்பவர்களாக வும் நாம் இருக்கக் கூடாது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, July 10, 2012

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 74

மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடங்கப் படும் முன், மாநாட்டில் தலைவரும், பார்வையாளர்களும், ஒரு பெரும் எண்ணிக்கை கொண்ட பிரதிநிதிகளால் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த ஊர்வலம் சென்ற இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பைப் பெற்றது.
பிற்பகல் 3 மணிக்கு மாநாட்டு நிகழ்ச் சிகள் திரு. ஏ.பி. பார்த்தசாரதி நாயுடு வின் இறைவணக்கத்துடன் தொடங்கின. கீழ்க்குறிப்பிடப்பட்ட பிரமுகர்களிடமி ருந்து வந்திருந்த வாழ்த்துத் தந்திகளும், வாழ்த்துக் கடிதங்களும் மாநாட்டில் படிக்கப்பட்டன. திவான் பகதூர் ஏ.சுப்பராயலு ரெட்டியார், ராவ் பகதூர் சூரியநாராயணமூர்த்தி நாயுடு, திரு பி.ராமராயநிங்கர், கான் பகதூர் முகமது அபிபுல்லா சாகிப், திரு.கே.கோடி ரெட்டி, வழக்கறிஞர், ராவ்பகதூர் எம். வெங்கடரத்னம் நாயுடு, சல்லப்பள்ளி குமாரராஜா, திரு. எத்திராஜ் முதலியோர் ஆகியோர் மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பி இருந்தனர்.
வரவேற்புக் குழுத் தலைவர் பி.துரை சாமி நாயுடு கீழ்க்குறிப்பிட்ட வரவேற்புரை ஆற்றினார்.
வரவேற்புரை
எதிர்பக்கத்தில் இருக்கும் கனவான் கள் நினைப்பது போல பார்ப்பனரல்லாத மக்கள் இயக்கம் ஏதோ திடீரென்று ஏற்பட்ட ஒன்றல்ல.  வெகு நீண்ட காலமாகவே, பார்ப்பனரல்லா மக்களிடம் இந்த உணர்வு நிலவி வருகிறது. ஜாதிகள் பற்றியும், சமூக சீர்திருத்தங்கள் பற்றியும் சுவாமி விவேகானந்தா போன்ற பெரும் மத போதகர்களின் உரைகளைப் பார்த் தால், இது பற்றிய உண்மை விளங்கும்.
இந்த இயக்கம் நமது மாபெரும் தலைவர்களான டாக்டர் நாயர், ராவ் பகதூர் பி.தியாகராய செட்டி அவர்களால் தொடங்கப்பட்டு, போற்றி, வளர்க்கப் பட்டு வந்துள்ளது. இந்த இரு தலைவர்களும் உலக நிகழ்வுகளை பொறுமையாக கூர்ந்து நோக்கி வந்தனர். அவ்வாறு தங்களின் கவனம் மிகுந்த ஆய்வில் கண்டறிந்ததை வைத்துக் கொண்டு, பார்ப்பனரல்லாத சமூக மக்களுக்கு, முன்னேற்றமடைந் துள்ள மற்ற மக்களுக்கு இணையான ஓரிடத்தைப் பெற்றுத் தருவதற்காகச் சரியானதும் உண்மையானதுமான உண் மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். பார்ப் பனரல்லாத சமூகத்தின் சார்பாக இந்த இரு தலைவர்களும் பொதுப் பணிகள் தேர்வாணையத்தின் முன் சில ஆண்டு களுக்கு முன்பு சாட்சியமும் அளித்துள் ளனர்.
அலட்சியத்துடன் மெத்தனமாக உறங்கிக் கிடந்த பார்ப்பனரல்லா சமூகங் களைச் சேர்ந்த நம்மை, ஒரு உண்மை யான ஜனநாயக மாற்ற நோக்கங் களுக்காக நமது சரியான மதிப்பீட்டையும், தேர்வு செய்யும் நமது ஆற்றலையும் கொண்டு திறந்த விழிகளுடன் உலக நிகழ்வுகளைப் பார்க்கவைத்துள்ளனர். இவை அனைத்துக்காகவும், இந்தப் பெரும் பார்ப்பனரல்லாத சமூகங்கள்,  இந்த மாற்றங்கள் ஏற்படக் காரணமாக விளங்கிய டாக்டர் நாயர் மற்றும் ராவ் பகதூர் பி.தியாகராய செட்டி ஆகியோருக்கு  ஆழ்ந்த நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.
இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பெருங்கூட்டத்தினரை இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள். இந்தத் தாலுக்காவைச் சேர்ந்த முக்கியமான பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த முன்னணிப் பிரமு கர்கள் - இந்துக்கள், கிறித்துவர்கள், முகமதியர் அனைவரும் நம்மோடு சேர்ந்துள்ளனர்.
இந்தத் தாலுக்காவின் ஒட்டுமொத்த பார்ப்பனரல்லாத மக்களும் நமது நோக்கங்கள், இலட்சியங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டனர் என்பதற்கு இதுவே ஒரு தெளிவான அடையாளமாகும். ஆங்கிலேய ஆட்சியில் நாம் பெற்ற பயன்களை நாம் முழுமையாக அங்கீகரிக்காமல் போனால், நாம் நன்றி யுணர்வு அற்றவர்களாக ஆகிவிடுவோம்.
இன்று நாம் என்னவாக இருக்கிறோமோ, அந்த நிலையை ஆங்கிலேய அரசுதான் நம்மை அடையச் செய்தது என்பதில் எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. ஆங்கிலேய அரசின் அதிகாரங்களில் தேவையின்றி தலையிடாதவாறு, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தாராளமான அரசியல் சீர்திருத்தங்கள் வழங்குவதற் கான சரியான நேரமிது. ஆங்கிலேய அரசு அண்மைக் காலத்தில் நமக்கு சில சலுகைகளை அளித்துள்ளது. பெரும்பாலும் படிப்பறிவில்லாமல் கிடக்கும் நமது மக்கள் எண்ணற்ற ஜாதிகளாகப் பிரிக்கப்பட்டு பிளவுபட்டு நிற்கின்றனர்.
அவர்களின் நலன்களும், கலாச்சார நிலைகளும் மாறுபட்டவை யாகும்.  இந்த நிலையில், ஆங்கிலேய அரசின் செல்வாக்கையும், அதிகாரத் தையும் பலமிழக்கச் செய்யும் நிருவாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால், பிற் படுத்தப்பட்ட சமூக மக்களின் நலன்கள் பெரிதும் பாதிக்கும்.  தொடக்கநிலை, இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி தான் நாட்டின் இன்றைய முக்கியமான தேவையாகும்.
பின்னர்  தலைவர் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்ட திரு கே.சுப்பா ரெட்டி அவர்களுக்கு பெரும் ஆர்வத் துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது தலைமையுரையை ஆற்றினார். அவரது உரையிலிருந்து சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன.
தலைவர் உரை
ஆங்கிலேய சாம்ராஜ்யத்திடமிருந்து சுய ஆட்சியைப் பெறுவது இனியும் ஒரு தனிப்பட்ட கட்சியின் ஏகபோக உரிமை அல்ல என்ற ஒரு நிலையையும், ஆங்கிலோ இந்தியர் நீங்கலான இந்தியாவில் உள்ள மற்ற அனைத்துக் கட்சிகளின் அதிகார பூர்வ நிலையும் அதுதான்  என்னும் ஒரு நிலையையும் நாம் ஏற்கெனவே அடைந்து விட்டோம்.
இப்போது நம் முன் உள்ள ஒரே ஒரு கேள்வி, அதற்காக இன்னும் எவ்வளவு காலம் நாம் காத்திருக்க வேண்டும் என்பதும், போர் முடிந்த பிறகு இந்தியா பெற இருக்கும் அரசியல் சீர்திருத்தம் குறைந்தது எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதும்தான்.  இப்போரில் நாம் ஆங்கிலப் பேரரசுக்கு அளிக்கும் உதவிக்காக இதனை நாம் கேட்கவில்லை; அவ்வாறு உதவி செய்வது நமது கடமையாகும்.
நமது சொந்த நாட்டில் நம்மை நாமே ஆண்டுகொள்வது என்பது நமது பிறப்புரிமை என்பதை அங்கீகரிக்கும் வகையில்தான் இதனை நாம் கேட்கிறோம்.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...