வட இந்தியாவில் கடந்த 1985-ஆம் ஆண்டு நடை
பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் குற்றம்சாட்டப் பட்ட 30 பேரை,
டில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை விடுதலை செய்தது.
கடந்த 1985-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம்
தேதி டில்லி மற்றும் உத்தரப் பிரதேம், அரியாணா மாநிலங்களையொட்டிய பகுதிக
ளில் தொடர் குண்டுவெடிப்பு சம் பவங்கள் நடைபெற்றன. பேருந்து கள் மற்றும்
பொது இடங்களில் வானொலியில் பொருத்தி வைக் கப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்து
டில்லியில் மட்டும் 49 பேர் உயிரி ழந்தனர். 127 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு
புலனாய்வுக் குழு, 59 பேர் மீது குற்றம்சாட்டி குற்றப் பத்திரிகை தாக்கல்
செய்தது. அவர் களில் 5 பேர் தலைமறைவாகிவிட்ட னர். மேலும் 5 பேருக்கு எதிராக
போதிய சாட்சியம் இல்லை எனக் கூறி, அவர்களை கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை
மாதம் விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. மீதமுள்ள 49 பேரில் 19 பேர்
நீதிமன்ற விசா ரணையின்போது உயிரிழந்த நிலை யில், இதர 30 பேர் கடந்த
1986-ஆம் ஆண்டு முதல் பிணையில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை
டில்லி கூடுதல் குற்றவியல் நீதிபதி சந்தீப் யாதவ் திங்கள்கிழமை வழங்கினர்.
அந்த தீர்ப்பில், ‘இந்த வழக்கு விசாரணையின்போது சில சந்தர்ப்பங்களில்
காவல்துறையின ரால் விசாரிக்கப்பட்ட சாட்சிகளி டம், நீதிமன்றத்தில் விசாரணை
நடத்தப்படவில்லை.
இந்த வழக்கில் பொதுமக்களில் பலரை வதைத்து,
அழுத்தம் தந்து வலுக்கட்டாயமாக அவர்களை சாட்சிகளாக காவல்துறையினர்
ஆஜர்படுத்தியுள்ளனர் என்பது சாட்சியங்கள் மூலம் தெளிவாக புலப்படுகிறது.
சாட்சிகளாக ஆஜ ராகவிடில், அவர்களும் வழக்கில் குற்றவாளிகளாக
சேர்க்கப்படுவர் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தவறான விசா
ரணை முறையால் திரட்டப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் வழக் கில்
குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக அறிவிக்க முடியாது.
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட வர்கள்
மீதான குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்வதில் அரசு தரப்பு
தோல்வியடைந்துள்ளது. எனவே குற்றம்சாட்டப்பட்ட 30 பேரும்
விடுவிக்கப்படுகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment