இலாபத்தில் இயங்கும் பாரத் பெட்ரோலிய
நிறுவன பங்குகள் விற்பனை செய்யப்படுவதேன்?
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்று, பாரத்
பெட்ரோலிய நிறுவ னம். இந்த நிறுவனம் லாபத் தில் இயங்கி வருகிற நிறுவனம்
ஆகும். கடந்த டிசம்பர் மாதத் துடன் முடிந்த காலாண்டில் இந்த நிறுவனம், நிகர
லாப மாக ரூ.2,051.43 கோடி ஈட்டி யது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன்
ஒப் பிடுகையில் இந்த லாபம் 3 மடங்கு ஆகும். ஆனால் இந்த நிறுவனத்தில் தனக்கு
உரிய 52.98 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு
எடுத்துள்ளது.
இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை கடந்த
நவம்பர் மாதமே அளித்துவிட் டது. அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் கீழான
நுமலி கார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் (அசாம்) மட்டும் மத்திய அரசின்
கட்டுப்பாட் டில் இருக்கும். இப்போது பாரத் பெட்ரோலிய கழகத் தின் 52.98
சதவீத பங்குகளை வாங்குவதற்கு விருப்பத்தை வெளிப்படுத்த அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. இந்த பங்குகளை வாங்க விரும்பு வோருக்கு 10 பில்லியன்
டாலர் (சுமார் ரூ.73 ஆயிரம் கோடி) சொத்துகள் இருக்க வேண்டும் என்று
தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாரத் பெட் ரோலிய நிறுவன
பங்குகள் விற்பனை செய்ய உள்ளது தொடர்பாக, மத்திய அர சுக்கு காங்கிரஸ் கட்சி
கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி
தொடர்பா ளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது சுட்டுரையில், “கடந்த டிசம்பர்
மாதத்தில் பிபிசிஎல் மூலம் அரசுக்கு ரூ.2051.53 கோடி லாபம் கிடைத்துள் ளது.
இந்த அளவிற்கு லாபகர மாக இயங்கும்
நிறுவனத்தை அரசு விற்க வேண்டிய கட் டாயம் என்ன வந்தது. தனது நண்பர்களான
பெரு நிறுவன அதிபர்களுக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் பிரதமர்
மோடி இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது” என்று
பதிவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment