சென்னை, ஜூலை 15 கடந்த 2 மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 12க்கும் மேற்பட்ட ஆணவப் படு கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதில் பாதுகாப்புக்குச் சென்ற காவல்துறை முன்னிலையிலேயே குஜராத்தில் பட்டியல் இன மணமஇகனை உயர் ஜாதி மணப்பெண்ணின் பெற் றோர்கள் கொலை செய்துள்ள நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் கிராமத்துக்கு அருகே உள்ள மண்டல் கிராமத்தில் ராஜ்புத் சமுகத்தை சேர்ந்த பெண்ணை பட்டியல் இன வாலிபர் ஒருவர், திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அப்பெண் கர்ப்பமாக இருந்த நிலையில் பெண்ணின் பெற் றோர்கள் தாங்கள் தங்கள் மகளைக் கவனித்துக்கொள்கிறோம் என்று கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் வீட்டில் தனது மகளை பட்டியல் இன இளைஞரை திருமணம் செய்ததற்காக கட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதை அறிந்த அந்த இளைஞர் தனது மனைவியை அழைத்துச் செல்ல உதவி வேண்டி காவல்துறையினர் மற்றும் மாநில பெண்கள் ஆணைய அதிகாரிகளுடன் சென் றார். அப்போது காவலர்கள் முன்னி லையிலேயே மணப்பெண்ணின் உறவினர்கள் இளைஞரை வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர் பாக உடன் இருந்த பெண்கள் உதவி ஆலோசகர் பாவிகா நவ்ஜிபாய் பின்னர் இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்தார்.
இது குறித்து மாநில பெண்கள் ஆணையத்தின் ஆலோசகர் கூறிய தாவது, அவரது மனைவி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஹரேஷ் என்னிடம் கூறினார். அவரது மனைவியை பெண் வீட் டார் துன்புறுத்துகின்றன என்று கூறி அவரை மீண்டும் அழைத்து வருவதற்கு என்னிடம் உதவி கேட்டுக் கொண்டார். குஜராத் அரசாங்கம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் 24 மணி நேர உதவிக்காக அபயம் என்ற ஹெல்ப்லைன் ஒன்றை நடத்தி வருகிறது. இந்த மய்யம் காவல்துறையோடு இணைந்து செயல்படும். இந்த அமைப்பு அதி காரிகளுடன் ஹரேஷ், வர்மொர் கிராமத்தில் உள்ள அவரது மாமனார் தஷ்ரத்சின் ஜாலாவின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என்று ஹரேஷை எச்சரித்தே, நவ்ஜிபாய் அவரை கூட்டிச் சென்றுள்ளார்.
"அதுமாதிரி எதுவும் நடக்காது என்று ஹரேஷ் என்னிடம் கூறினார். ஊர்மிளாவின் தந்தைக்கு தன்னை தெரியும் என்றும் தனது மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு போக வேண்டும் என்று விருப்பப்பட்ட தாகவும் சொன்னார். அவர்களின் வீட்டை தொலைவில் இருந்து காண்பிப்பதாகவும் ஹரேஷ் கூறினார்" என நவ்ஜிபாய் தெரிவித்தார். அபயம் உதவி மய்யத்தின் ஆலோசகர் பவிகா, பெண் காவலர் அர்பிதா லிலாபாய் மற்றும் ஓட்டுநர் சுனில் சோலங்கி ஆகியோரும் சென்றனர். அர்பிதா மற்றும் பவிகா இருவரும் தஷ்ரத்சின் வீட்டிற்குள் சென்றுள்ளனர். ஹரேஷ் வாகனத் தினுள்தான் அமர்ந்திருந்தார்.
ஹரேஷின் மனைவி ஊர்மிளா, அவரது தந்தை தஷ்ரத்சின், சகோதரர் இந்தரஜித்சின் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களோடு 15-20 நிமிடங்கள் பவிகா பேசினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊர் மிளாவின் குடும்பம் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டதையடுத்து அவர் அங்கிருந்து சென்றார். வாகனம் வரை பவிகாவுடன் வந்த தஷ்ரசின், காரில் அமர்ந்திருந்த ஹரேஷை பார்த்திருக்கிறார்.
முதல் தகவல் அறிக்கைப்படி, ஹரேஷை பார்த்த தஷ்ரத்சின், "இவன்தான் நம் பெண்னை கூட்டிச் சென்றவன். அவன் ஓட்டுநருக்கு அருகே அமர்ந்திருக்கிறான். அவனை காரில் இருந்து வெளியே இழுத்து கொலை செய்யுங்கள்" எனக் கூறியுள்ளார். ட்ராக்டர்கள் மற்றும் பைக்குகளுடன் வாகனத்தை சுற்றி வளைத்த எட்டு பேர், அங்கு இருந்த அதிகாரிகளை கத்தி மற்றும் வாள்கள் கொண்டு தாக்கத் தொடங் கினர். இதில் காயமடைந்த பெண் காவலர் அர்பிதா, காவல்துறை கட் டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், அதற்குள் ஹரேஷ் உயிரிழந்துவிட்டார். தகவல் கொடுத்த 15 நிமிடங்களுக்கு பிறகு மண்டல காவல்துறையினர் அங்கு வந்தனர். பின்னர் ஹரேஷின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல் லப்பட்டது. "ஹரேஷின் குடும்பம் அவரது வருமானத்தை நம்பிதான் இருக்கிறது. அவரை கொன்று விட்டனர்" என்று ஹரேஷின் மாமா ஷாந்திலால் தெரிவித்தார். பாது காவலராக பணியாற்றி வந்த ஹரேஷின் தந்தை, தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக ஹரேஷ் பணியாற்றி வந்தார்.
மராட்டியத்தில்
மகாராட்டிராவில் தானே மாவட் டத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் பெற் றோர்கள் காட்டிற்குள் அழைத்து சென்று கொலை செய்துள்ளனர். மே மாதம் மகாராட்டிரா அகமத் நகரில் காதல் திருமணம் செய்த இணையரை பெண்ணின் பெற்றோர்கள் தீவைத்துக் கொலை செய்த நிகழ்வு அம்மாநிலத்தை உலுக்கியது. இதே அகமத் நகரில் ஏப்ரல் மாதமும் ஜாதி மாறி திருமணம் செய்ததாக தனது மகளைப் பெற்றோர்களே வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில்...
மத்தியப்பிரதேசத்தில் 21 வயது கர்ப்பிணிப்பெண்னை அவரது குடும்பத்தினரே வேற்று ஜாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்ததாக கூறி கொலை செய்தனர். அதே மாநிலத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி 23 வயது பொறியியல் பட்ட தாரி பெண் காதல் திருமணம் செய்ததால் பெற்றோர்களால் கொலை செய்யப்பட்டார்.
உத்தராகண்ட்டில்
உத்தராகண்ட் மாநிலத்தில் காதல் திருமணம் செய்த தனது மகளை பெற்றோர்கள் கோடாரியால் பிளந்து கொலை செய்துள்ளனர்.
தமிழகத்தில்...
தூத்துக்குடி மாவட்டம் குளத் தூர் பகுதியில் புதிதாக திருமணமான இணையர்கள் ஜாதி ஆணவப்படு கொலை செய்யப்பட்டனர். அதே போல் கோவையில் காதல் திருமணம் செய்துகொண்ட கனகன், வர்ஷினி ப்ரியா என்ற இணையர்கள் படுகொலை செய் யப்பட்டனர்.