Showing posts with label ராகுல் காந்தி குற்றச்சாட்டு. Show all posts
Showing posts with label ராகுல் காந்தி குற்றச்சாட்டு. Show all posts

Tuesday, December 15, 2015

கோவிலுக்குள் செல்லவிடாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் என்னை தடுத்தனர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு


புதுடில்லி, டிச.15 அண்மையில் அசாம் சென்றிருந்த போது பார் பேதா பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குள் என்னை செல்லவிடாமல் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கள் தடுத்ததாகவும், இது தான் பாரதீய ஜனதாவின் அரசியல்  பாணி என்றும் இது ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று எனவும் காங்கிரஸ் துணைத்தலை வர் ராகுல் காந்தி தெரி வித்துள்ளார். 
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:- நான் அசாம் மாநிலத்திற்கு சென்றிருந்த பொழுது, அங்குள்ள பர்பேதா மாவட்டத்தில் இருக்கும் கோவில் ஒன்றுக்கு செல்ல விரும்பினேன். ஆனால், கோவில் இருந்த ஆர்.எஸ். எஸ். தொண்டர்கள் என்னை கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுத் தனர். பாரதீய ஜனதா செயல்படும் விதம் இது தான். 
என்னை தடுத்து நிறுத்த அவர்கள் யார்? எனவும் மிகவும் ஆவேச மாக ராகுல் காந்தி பேசினார். கடந்த வெள் ளிக்கிழமை பர்பதா மாவட்டத்திற்கு சென்று இருந்த ராகுல் காந்தி, இந்த பிரச்சினைக்கு பிறகு  ஆர்.எஸ்.எஸ் தொண் டர்கள் கோவிலில் இருந்து வெளியேறிய பின்னர் அன்றைய தினம் மாலை கோவிலுக்கு சென்று வழி பட்டார். 
அசாம் முதல் அமைச்சர் தருண் கோகாய் நேற்று இவ்விவ காரம் குறித்து பேசும் போது, ராகுல் காந்தியை பர்பேதே கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுக்க பாஜகவும் ஆர்.எஸ். எஸும் சதியில் ஈடுபட் டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, October 9, 2015

ஏழைகள், தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து மோடிக்கு கவலை இல்லை ராகுல் காந்தி குற்றச்சாட்டு




பாட்னா, அக்.8 பீகார் சட்ட சபைக்கு வரும் 12ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை 5 கட்டங் களாக தேர்தல் நடத்தப்படுகிறது. 243 இடங்களை கொண்ட பீகார் சட்ட சபை தேர்தலில், ஆட்சியை கைப்பற்ற துடித்துக்கொண்டிருக்கும் பாரதீய ஜனதா அணியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் அய்க்கிய ஜனதா தளம் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் மதச்சார் பற்ற கூட்டணி அமைத்துள்ளது.
 இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின் றன. காங்கிரஸ் கட்சி சார்பில் துணைத்தலைவர் ராகுல் காந்தி அங்கு தீவிரப் பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறார்.
பெகுசரை மற்றும் ஷேக்பூரா மாவட்டங்களில் நடந்த பிரச்சார கூட்டங்களில் ராகுல் காந்தி பேசு கையில், கடந்த நாடாளுமன்ற தேர் தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும், 
விவ சாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினார். இங்கிருக்கும் யாருடைய வங்கி கணக்கிலாவது ரூ.15 லட்சம் போடப்பட்டு உள்ளதா? தயவு செய்து கூறுங்கள். அவர் வழங்கிய ஒரு வாக் குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.
அவர் பதவியேற்ற இந்த 16 மாதங்களில் ஒரு ஏழையை கூட சந்திக்கவில்லை. விவசாயிகள், ஏழை தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து மோடிக்கு கவலையே இல்லை. வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அவருடைய உடைகள் குறித்துதான் மோடிக்கு கவலை. 
சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது பல்வேறு நிகழ்வுகளில், பலப்பல வண்ணங்களுடன் 16 உடை களில் மோடி தோன்றியிருக்கிறார். எப்போ தும் கார்ப்பரேட் அதிகாரிகள் தான் கோட்-சூட்டில் அவரை சுற்றி இருக் கின்றனர். அவர்களுக்கு மட்டும் தான் அறிவு இருப்பதாகவும், ஏழைகளுக்கு அறிவில்லை என்றும் பிரதமர் நினைக்கிறார்.
விவசாயிகள், தொழிலாளர்கள் யாராவது கிழிந்த உடையுடன், பிரதமர் அருகே நிற்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரோ எப்போதும் வெள்ளை உடையுடன் எளிமையாக இருக்கிறார். இதனால் ஏழைகள் உள் ளிட்ட அனைத்து தரப்பு மக்களுடன் அவரால் ஒன்றிணைய முடிகிறது. என்று கூறினார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...