அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்
மானங்களை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா
தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வந்தது.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வட
கொரியா மீது பொருளாதார தடைகள் விதித்தன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா
வுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற் பட்டது.
இந்த பிரச்சினையை முடி வுக்கு கொண்டு
வரும் வகை யில் அமெரிக்க அதிபர் டிரம் பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங்
அன்னும் 2 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அணு ஆயுத தயாரிப்பை முழுமையாக கைவிடுமாறு
அமெரிக்கா விடுத்த கோரிக் கையை வடகொரியா ஏற்க வில்லை. இதனால், அந்த நாட்
டின் மீதான பொருளாதார தடைகளை விலக்கி கொள்ள டிரம்ப் மறுத்துவிட்டார்.
இதனால் இருநாட்டு தலைவர்களிடையே நடந்த 2
பேச்சுவார்த்தைகளும் தோல் வியில் முடிந்தன. இதையடுத்து வடகொரியா தொடர்ந்து
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது.
உலகமே கரோனா வைர சால் கடும் அச்சத்தில்
இருக் கும் சூழலில் வடகொரியா கடந்த வாரம் குறுகிய தூரம் சென்று
தாக்கக்கூடிய ஏவு கணைகளை ஏவி சோதித்தது.
இது கரோனாவால் பெரும் அச்சுறுத்தலை எதிர்க்கொண்டு வரும் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு கடும் அதிர்ச்சி அளித்தது.
இந்த பரபரப்பு அடங்குவ தற்குள் வடகொரியா
நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை சோதித்தது கொரிய தீபகற்பத்தில்
பதற் றதை அதிகப்படுத்தி இருக்கிறது.
No comments:
Post a Comment