8 வயது சிறுமி
லிசிபிரியா விளக்கம்
பன்னாட்டு மகளிர் தினத்தையொட்டி சாதனை
பெண்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை சுட்டுரை தளத்தில் பகிரும் வகையில்
பிரச்சாரம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. ‘அவள் நமக்கு உத்வேகம்
அளிக்கிறாள்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த பிரச்சா ரத்தில் இணையுமாறு மணிப்
பூர் மாநில பருவநிலை மாற்ற ஆர்வலரும், இந்தியாவின் கிரேட்டா என
அழைக்கப்படு பவருமான 8 வயது லிசிபிரியா கங்குஜமுக்கு பிரதமர் மோடி அழைப்பு
விடுத்திருந்தார்.
ஆனால் இந்த அழைப்பை லிசிபிரியா
நிராகரித்து விட் டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த கவுரவத்
துக்காக முதலில் நான் மகிழ்ச் சியும், துக்கமும் அடைந்தேன். பின்னர்,
பருவநிலை மாற் றத்தை அரசியல்வாதிகள் தீவி ரமாக எடுத்துக்கொள்ளாத தால், இந்த
கவுரவத்தை நிரா கரிப்பது என முடிவு செய் தேன்’ என்று கூறினார்.
பருவநிலை மாற்றம் தொடர் பாக ஆயிரக்கணக்கான
குழந் தைகள் மற்றும் இளைஞர்க ளுடன் நாடாளுமன்றத்துக்கு முன்பும், நாட்டின்
பல்வேறு பகுதிகளிலும் ஆண்டு முழு வதும் போராட்டம் நடத்தி யும் யாரும்
அவற்றை கண்டு கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
No comments:
Post a Comment