Showing posts with label மதவெறி. Show all posts
Showing posts with label மதவெறி. Show all posts

Thursday, October 22, 2015

முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை, மதவெறி, ஜாதிவெறியை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்



சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது


சென்னை, அக். 22_ நுழைவுத் தேர்வு, பாலியல் வன்முறை, மாட்டுக்கறிக்கு தடை, பகுத்தறிவு _ முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை, மதவெறி _ ஜாதி வெறியை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (22.10.2015) மாவட்டத் தலைநகரங் களில் காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத் தலை வர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கி ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக் கங்கள் வருமாறு:-
மத்திய அரசே மத்திய அரசே! திணிக்காதே, திணிக்காதே!
நுழைவுத் தேர்வை திணிக்காதே!

நுழைவுத் தேர்வு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும்
நுழைவுத் தேர்வைத் திணிப்பதா?  கவுரவக்கொலை என்று சொல்லி
ஜாதிவெறி நோய்ப்பிடித்து
கொல்லாதே கொல்லாதே
காதலர்களைக் கொல்லாதே!
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்,
ஜாதி வெறியர்களை கண்டிக்கிறோம்

தேநீர்க் கடைகளில் இரட்டை டம்ளரா
என்ன செய்கிறது, பி.சி.ஆர் சட்டம்?
தமிழக அரசே தமிழக அரசே
செயல்படுத்து, செயல்படுத்து!
பி.சி.ஆர்.சட்டத்தை செயல்படுத்து!

பாலியல் வன்கொடுமையை கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே!
தடுத்து நிறுத்து, தடுத்து நிறுத்து
பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!!
நரபலியை எதிர்த்து,
மாட்டுக்கறித் தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

மாடுகளைக் காப்பாற்ற
மனிதர்களைக் கொல்லுவதா?
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
காவிக்கூட்டத்தை, காலிக்கூட்டத்தை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்!
பகுத்தறிவு பேசும் அறிஞர்களை
சீர்திருத்த எழுத்தாளர்களை
படுகொலை செய்யும்
காவிகளை, காலிகளை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
மத்திய அரசே! மாநில அரசே
நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு!!

போன்ற ஒலி முழக்கங்களை கழக தோழர், தோழியர்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழ கத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலா ளர் வீ.குமரேசன், திராவிடர் கழக வழக் குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், திரா விடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரை ஞர் அ.அருள்மொழி, மாவட்டத் தலைவர் இராசபாளையம் இல.திருப்பதி, மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில தொழிலாள ரணி துணைச் செயலாளர் பெ.செல்வராசு, வடமாவட்டங்களின் கழக அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன்,  சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் பங்கேற்று முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்
தென் சென்னை: செ.ர.பார்த்தசாரதி (மா.செ), டி.ஆர்.சேதுராமன் (ம.து.த), சி.செங்குட்டுவன், கோ.வீ.ராகவன், தரமணி கோ.மஞ்சநாதன், சா.தாமோதரன், ச.மாரியப்பன், செ.இராமச்சந்திரன், க.பாலமுருகன், ச.மகேந்திரன், மு.பவானி, வி.தங்கமணி, பி.அஜந்தா, வி.நிலா, கு.பா. கவிமலர், அய்ஸ்அவுஸ் விசு, அய்ஸ் அவுஸ் கோவிந்த், மயிலை ஜான்சன், இரா.பிரபாகரன், துணைவேந்தன், இரா.மோகன், கு.செல்வேந்திரன், மந்தை வெளி முகிலன்,  அ.செல்வராசன், மா.நட ராசன், மயிலை பாலு, சைதை தென்றல்.
ஆவடி மாவட்டம்: இல.குப்புராசு (மா.செ), இரா.இராமதுரை (மா.செ.), மு. இரகுபதி (தலைவர், திருநின்றவூர்), அ.அருண் (மு.அமைப்பாளர்), பாலமுரளி (மதுரவாயல்), பெரியார் மாணாக்கன் (பூவை), பட்டாளம் பன்னீர் (வேப்பம் பட்டு, செயலாளர்), பாலமுருகன், உ.மோக னப்பிரியா, ப.எழிலரசி (மாணவரணி), நெடுங்கிள்ளி (வேப்பம்பட்டு), தொண்ட றம் (பூவை), செல்வி மாணாக்கன், க.இளங்கோவன் (திமுக), கே.குமார், செந்தில், உடுமலை வடிவேல், எழிலரசி.
மகளிரணி: சி.வெற்றிசெல்வி, செல்வி, மரகதமணி, சுமதி, கு.தங்கமணி, உமா, தங்க.தனலட்சுமி, கற்பகம், வளர்மதி,  திலகவதி, இன்பக்கனி, சண்முகலட்சுமி, மணிமேகலை, மாலதி, தாமரைச்செல்வி.
பெரியார் பிஞ்சுகள்: யாழொலி, தங்கமணி, நிலா, கவின்மலர், பகுத்தறிவு, தொண்டறம்.
கும்முடிப்பூண்டி மாவட்டம்:  புழல் ஆனந்தன் (மா.செயலாளர்), கஜேந்திரன் (மா.து.தலைவர்), புழல் டி.பி.ஏழுமலை, மாலதி, எஸ்.கண்ணன், தாமரைசெல்வி, மழலை நலன், மழலை நவிலன், கவனப் பேட்டை ரவி, உதயகுமார் (மா.தலைவர்).
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்: மா.ராசு, ஆ.இர.சிவசாமி (வழக் குரைஞர்), கெ.விஜயகுமார், பொழிசை க.கண்ணன், சு.மோகன்ராஜ், ஏசா, நாகரத் தினம்.
வடசென்னை: பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராசன், பொதுக்குழு உறுப்பினர் திருவள்ளுவன், வியாசர்பாடி ஜீவா, வெங்கடேசன், கு.தங்கமணி, புரசை அன்புச்செல்வன், தளபதி பாண்டியன், கணேசன், பெரியார் திடல் சுரேஷ் கலைமணி, தமிழ்குடிமகன், மகேஷ், பேராசிரியர் பெரியாரடியான், தமிழ் லெமூரியா மு.தருமராசன், வழக் குரைஞர் சென்னியப்பன்,  பார்த்திபன், நெடுவை கு. குட்டிமணி, தஞ்சை கி.சவுந்த ரராசன், மற்றும் திரளான கழகத் தோழர் _ தோழியர்கள் பங்கேற்றனர்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Saturday, January 3, 2015

தீவிரவாத ஒத்திகைக்குக் கிடைத்தவர்கள் முஸ்லீம்கள் தானா?


இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக இந்துத்துவா ஆட்சி என்று அறிவிக்கவில்லையே தவிர, மற்றபடி பிஜேபியும் சரி, அதன் சங்பரிவாரங்களும் சரி ஓர் இந்து ஆட்சி இந்தியாவில் அமைந்துவிட்டதாகவே கருதி, ஆட்டம் போட ஆரம்பித்து விட்டனர்!

இந்த உண்மை அம்மணமாகத் தெரிந்திருந்தும் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் சீப்பை ஒளிய வைத்து கலியாணத்தை நிறுத்துவது என்பது போல நடந்து கொள்வது மிகக் கேவலமான வெட்கக் கேடாகும்.

ஊடகங்கள் உயர் ஜாதி பார்ப்பனர்கள் கைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளிலும் குவிந்து கிடப்பதால் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியே!

ஊடகங்களில் பெரும்பாலும் பணியாற்றுபவர் களாகப் பார்ப்பனர்களாகவே இருக்கின்ற காரணத்தால் இந்துத்துவாவைத் தூக்கிப் பிடிக்கத்தானே செய் வார்கள். உண்மையைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு அதன்மீது பொய்களான குரோட்டன்ஸ்களை வளர்க்கவே செய்வார்கள். அதுதான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

பிஜேபியில் ஏதோ அனாமதேயங்கள் அல்ல; பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திரமோடியே எப்படி நடந்து கொண்டு வருகிறார் என்பதைக் கவனித்தால் ஒளிவு மறைவு என்பதை எல்லாம் கடந்து, பச்சையாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள மதச் சார்பின்மையைத் தூக்கிப் போட்டு மிதித்து விட்டு, ஒளிந்திருந்த இந்துத்துவாவை ராஜ நடை போட வைத்து விட்டார்.
ஜப்பானுக்குச் சென்ற பிரதமர் நரேந்திரமோடி இந்தியர்கள் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் என்ன பேசினார்?

I brought Gita for gifting (the Japanese Emperor) I do not know what will happen in India after this. There may be a TV debate on this. Our secular friends will create ‘typhoon’ (storm).

ஜப்பான் நாட்டுப் பேரரசருக்கு கொடுக்கக் கீதையைக் கொண்டு   போன இந்தச் செய்தி இந்தியாவை அடைந்தால் அங்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. தொலைகாட்சிகளில் விவாதங்கள் அனல் பறக்கும்; எனது மதச் சார்பற்ற நண்பர்கள் புயலையே கிளப்புவார்கள் என்று பேசினார் என்றால் பார்த்துக் கொள்ளலாமே.

தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்பார்களே அதுபோலதான் செய்யும் தவறு என்ன என்று அவருக்கு மிக நன்றாகவே தெரியும்; இருந்தாலும் அவரைப் பீடித்து ஆட்டும் இந்துத்துவா வெறி அதனையும் கீழே தள்ளி மேலே எழுந்து நிற்கிறது. மதச் சார்பின்மை என்பதை எப்படியெல்லாம் எள்ளி நகையாடுகிறார். இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இவ்வளவுப் பச்சையான மதவெறியரைத் தேடினாலும் எளிதில் கிடைக்கப் போவதில்லை.
குஜராத் மாநிலத்தை இந்துத்துவாவின் பரிசோ தனைக் கூடமாக உருவாக்கினார். மத அடிப்படையில் மக்களைக் கூறு போட்டு, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். அதையே இந்தியா முழுமைக்கும் பரவலாக்கும் எண்ணம் நொடிதொறும், நொடிதொறும் அவரை உசுப்பி எழுப்பிக் கொண்டு இருக்கிறது. குஜராத்தில் அவரைத் தொடர்ந்து வந்த முதல் அமைச்சர் மோடிக்குச் சளைத்தவரல்ல என்பதைக் காட்டிக் கொண்டு இருக்கிறார்.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் தீவிர வாதிகளை எப்படி முறியடிப்பது என்பதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.

தீவிரவாதிகளாக நடித்தவர்கள் அத்தனைப் பேரும் முசுலிம் உடை அணிந்து, தலையில் குல்லாய் அணிந்து காணப்பட்டனர். அவர்கள் வன்முறையில் ஈடுபடுவது போல குஜராத் காவல்துறையால் ஒத்திகை நடத்தப் பட்டது.

வன்முறையில் ஈடுபடுவதுபற்றி பிஜேபி.யோ அல்லது சங்பரிவார்க் கும்பலா பேசுவது? பாபர் மசூதி இடிக்கப்பட்டதை விடவா அராஜகத்துக்கும் பயங்கர வாதத்துக்கும் நிர்வாண வன்முறைக்கும் இன்னொரு எடுத்துக் காட்டுத் தேவை?

மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் யார்? ஒரிசா சட்டப் பேரவை வளாகத்துக்குள்ளேயே புகுந்து வன்முறை வெறியாட்டம் போட்டவர்கள் யார்? காவி பயங்கரவாதம் என்ற புதுமொழியை அன்றைய உள்துறை அமைச்சர் புதிய பட்டத்தைச் சூட்ட வில்லையா?

விசுவ ஹிந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் பொது மக்களுக்குத் திரிசூலங்களை வழங்கி கிறித்தவர் களையும், முசுலீம்களையும் மதச் சார்பின்மை பேசும் இந்துக்களையும் குத்திக் கிழிக்கத் தூண்டிட வில்லையா?

அரியானா மாநிலத்தில் ஜாஜா பகுதியில் இறந்து போன பசுவின் தோலை உரித்ததற்காக அய்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த கொடியவர்களால் கொல்லப்படவில்லையா?

விசுவ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான கிரிராஜ் கிஷோர் என்பவர் பசுவின் உயிர் (அதுவும் செத்துப் போன) மனித உயிரைக் காட்டிலும் புனிதமானது என்று அப்போது கூறியது எவ்வளவுப் பெரிய காட்டுவிலங்காண்டித்தனம்!

ஏன்? காவல்துறை ஒத்திகை நடத்திக் கொண்டு இருக்கும் குஜராத்தில் நடக்காத வன்முறையா? அரச பயங்கரவாதமாக அல்லவா நடந்தது.

 முசுலிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்து அந்தக் கருவை நெருப்பில் தூக்கி எறிந்து வெறிக் கூச்சல் போட்டுக் கூத்தாடவில்லையா? அடுக்கிக் கொண்டே போகலாம்.

 ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலின் வன்முறையைப் பட்டியல் போட்டால் நாட்டில் காகிதங்கள் போதாது.

இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் தீவிர வாதத்தை முறியடிக்கும் பயிற்சிக்கான ஒத்திகைக்காக முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாக ஒப்பனை செய்து நிறுத்தியுள்ளனர்; இந்தியாவிற்கு இப்படி ஓர் ஆட்சியா? மகா மகா வெட்கக் கேடு!

Saturday, December 20, 2014

தேசிய நூலாக கீதை: பல இனங்கள் உள்ள நாட்டின் நலனுக்கு உகந்ததா?


பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரியிருப்பது பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டின் நலனுக்கு உகந்ததாயிருக்காது என்கிறார் காந்தியச் சிந்தனையாளரும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான டாக்டர் ஜெயப் பிரகாசம்.

பகவத் கீதையை காந்தி போன்றோர் உயர்வாக மதித்தனர் என்பது உண்மை ஆனால், கீதை குறித்த அவரது பார் வைக்கும் மற்றவர்களின் பார்வைக்கும் வேறுபாடு உள்ளது. நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் வன் முறையாலும் தீமையை வெல்வது நீதி யானதுதான் என்ற அர்த்தப்படுத் தினால், இந்த அணு யுகத்தில் அது பேரழிவை உருவாக்கும் என்றார் ஜெயப்பிரகாசம்.

காந்தியோ, கீதையை நன்மைக்கும் தீமைக்குமான மோதலில் மனித மனது, தீமையை வென்று நன்மையாக மாற்று கிறது என்று அர்த்தப்படுத்தினார், என் றார் ஜெயப்பிரகாசம். இது சத்யா கிர ஹத்திற்கான ஒரு நூல் என்று காந்தி பொருள்கொண்டார், பாரதி கூட அப்படித் தான் அதைப் பார்த்தார் என்றார் ஜெயப்பிரகாசம்.

அதே சமயம் அம்பேதகர் போன் றோர் கீதையை போரை நியாயப்படுத் தும் ஒரு புத்தகமாகவும், வர்ண அமைப்பை நியாயப்படுத்தும் ஆவண மாகவும் பார்த்தது குறித்து குறிப்பிட்ட ஜெயப்பிரகாசம், திலகர் கூட தனது " கீதா ரகசியம்" என்ற புத்தகத்தில், கீதையை, போருக்கான புத்தகமாகவே பார்த்தார் என்றார். எனவே இது போன்ற திரு மறைகளை மறு வாசிப்பு செய்வது அவ சியம், தேவையானவற்றை எடுத்துக் கொண்டு தேவையற்றவற்றை ஒதுக்கித் தள்ளுவது அவசியம் என்றார் அவர்.

மற்ற மதங்களில் உள்ளது போல ஒரே ஒரு நூல்தான் இந்து மதத்தில் திருமறை என்று மதிக்கப்படும் இடத் தில் இல்லை என்றார் ஜெயப்பிரகாசம். தென்னிந்திய மரபில் சைவ சித்தாந்தம் மற்றும் வைணவ சித்தாந்தத்திலும், பகவத் கீதையை அறியாத ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். எனவே பாஜகவின் இந்த முயற்சி என்பது , இந்து சமயத்தை மையப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இருக்கிறது என்றார் ஜெயப்பிரகாசம். அதே சமயத்தில் ஒரு நாட்டுக்கு தேசிய நூல் என்ற ஒன்று அவசியம் தானா என்று கேட்டதற்கு, நாடு பல பிரச்சனைகளை எதிர்நோக்கும் நிலையில், இது போன்ற பிரச்சனை களைக் கையில் எடுப்பது தேவை யற்றது என்றும் அவர் கூறினார்.

Friday, December 19, 2014

இளந்தளிர்களே உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்

132 பள்ளி மாணவர்களைக் கொன்ற தலிபான்களின் பயங்கரவாத செயல்!

இளந்தளிர்களே உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்;

எங்களின் அன்புக் கண்ணீர் காணிக்கை!


பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளின் அடாத செயல் காரணமாக உலகின் கறை படிந்த மதக் கொடுமைகளின் பட்டியலில் மதவெறி மற்றொரு மனிதநேயமற்ற, பச்சாதாபம் பார்க்காது, 132 பள்ளிக் குழந்தைகளைக் கொன்றுள்ளது; பலரை உயிருக்கு மன்றாடச் செய்துள்ளது.

இந்தச் செயல்களின் அடிப்படைக் காரணம் மதவெறி! மதவெறி!! மதவெறி!!!

கடவுள் கருணையே வடிவானவர்; அங்கு இங்கு எனாது எல்லா இடங்களிலும் பரவியுள்ளவர்; அவர் இல்லாத இடமே இல்லை என்று கதையளக்கும் கடவுள், மத நம்பிக்கைவாதிகளே, அப்படி ஒரு சர்வசக்தி உடைய ஆண்டவனோ, கடவுளோ இருந்தால், இந்தப் பச்சிளம் தளிர்களின் உயிர்களைக் கொன்றிட உடன்பட்டு வேடிக்கைப் பார்த்திருப்பானா?

நாட்டில் கடவுள் பெயராலும், மதத்தின் பெயராலும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இரத்த ஆறு ஓடுவது சகித்துக் கொள்ளக் கூடியதா?

உலகம் - மதவெறி காரணமாக - மீண்டும் காட்டுமிராண்டி யுகத்திற்கே திரும்பிச் செல்லுகிறதா? மகாவெட்கக்கேடு இது!

இதை ஒரு வன்முறைச் செயலாக மட்டும் பார்க்காமல், இதன்மூலம் - ஆணிவேர் - மதத் தீவிரவாதம் - அடிப்படை வாதம் என்ற தலிபான்கள் என்றால், அவர்களை உருவாக்கி மனிதாபிமானம் அறியாத வெறித்தனத்தை அவர்களுள் விதைத்தது எது?

கடவுளும், மதமும்தானே! அவைகளை ஏற்றுக்கொண்டே, மறுபுறம் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்று உபதேசம் செய்வது அர்த்தமுள்ளதா? முரண்பாடு அல்லவா?

பகுத்தறிவாளர்களும், நாத்திகர்களும், மனிதநேயம் உள்ளவர்கள்; ஆனால், மதவெறியர்களோ சரித்திரத்தின் அந்நாள் தொட்டு, இந்நாள் வரை - அசல் காட்டுமிராண்டிகளாய், சகிப்புத்தன்மை அறியாததாக மிருக உணர்ச்சியின் பிண்டங்களாகத் தானே வாழ்ந்து வருகின்றனர்! இதனை மறுக்க முடியுமா?

இலங்கையில் புத்தம் என்ற மனித நேயத்தையே ரத்தத் தடாகத்தில் தள்ளி குளிக்க வைத்து மகிழும் குள்ளநரிக் கூட்டத்தின் யதேச்சாதிகார அரசு பயங்கரவாதம் - அரசே - செஞ்சோலை என்ற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் குண்டுவீசி கொன்று அழித்து, மகிழவில்லையா?

அந்த ரத்தக் கறையாளன், சட்ட புத்தகத்தையே திருத்தி, தானே மீண்டும் நாட்டை ஆளத் திட்டமிடுவதற்கு, அந்தச் சம்பவம் போன்றவற்றை - பயங்கரவாதத்தை நான் துடைத்து எறிந்துவிட்டேன் என்று கொக்கரிக்கிறாரே!
இது பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டின் பிரச்சினையாக மட்டும் உலகம் பார்க்காது; பார்க்கக்கூடாது;

மனிதநேயத்திற்கு மதவெறி விடுத்த சவால் என்று எடுத்துக் கொண்டு, அனைவரும் அந்த மதவெறிக்குச் சமாதி கட்ட முனைப்போடு, நாடு, இனம், மதம் என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டி உலகம் ஒரு குலம்; மானிடப் பரப்பு பரந்து விரிந்தது என்ற அணுகுமுறையில் இதற்கு முடிவு கட்டி, நாகரிகத்தை நிலைநாட்டிட முன்வரவேண்டும்!

இளந்தளிர்களே, மொட்டுகளே, உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்! எங்களின் அன்புக் கண்ணீர்க் காணிக்கை!

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
18.12.2014

Thursday, October 17, 2013

அந்தரங்கம் புனிதமல்ல

இந்து ஆங்கில ஏட்டில் வெளிவந்த ஒரு கட்டுரை சங்பரிவார்க் கும்பலைக் கொஞ்சம் வெலவெலக்கச் செய்து விட்டது; வித்யா சுப்பிரமணியம் என்பவ ரால் எழுதப்பட்ட கட்டுரை அது (8.10.2013 நடுப்பக்கக் கட்டுரை).
2005ஆம் ஆண்டில் அத்வானிக்கும், ஆர்.எஸ்.எசுக்கும் இடையே நடைபெற்ற வரலாற்றுப் புகழ்மிக்க மோதலின்போது, தன்னைப் பதவி நீக்கம் செய்ததால் ஏற் பட்ட கோபத்தை அத்வானியால் அவ் வளவு எளிதாகக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் வெளியிட்டதை அவரது சொற்களிலேயே பார்க்கலாம். 2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் பேசும்போது ஆர்.எஸ்.எஸின் அனுமதி இல்லாமல் தனது கட்சியினால் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ளப்பட முடியாது என்ற எண்ணத்தை இந்த நிகழ்ச்சி உறுதிப்படுத்தி விட்டது என்று கூறினார். நாம் கொண்டி ருக்கும் இந்தக் கண்ணோட்டத்தினால், பா.ஜ.க.வுக்கோ அல்லது ஆர்.எஸ்.எசுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது. ஒரு நாட்டை மறு கட்டமைப்புச் செய்ய இயன்ற ஒரு தலைவரை உருவாக்குவதற்குப் பதிலாக இத்தகைய கண்ணோட்டம் அவரது நல் தோற்றத்தைக் குலைத்து விடும் என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். கவலைப்பட வேண்டும். மக்களிடையே நிலவும் இந்த எண்ணத்தைச் சிறிது சிறிதாகப் போக்கு வதற்கு ஆர்.எஸ்.எசும்., பா.ஜ.க.வும் உண்மையாகப் பாடுபட வேண்டும் என்று எல்.கே. அத்வானி பேசியதை - இந்து கட்டுரை எடுத்துக்காட்டி பிஜேபி யின் லகான் ஆர்.எஸ்.எஸின் கையில் தான் வலுவாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியது.
அபாயகரமான ஆர்.எஸ்.எஸ்.தான் பிஜேபியின் கர்த்தா; ஆர்.எஸ்.எஸ். காலை ஆட்டினால் பிஜேபி தலையாலேயே நடக்கும் என்கிற சங்கதி ஊருக்குத் தெரிந்தால் அரசியல் கட்சியான பி.ஜே.பி.க்கு மக்கள் மத்தியில் பெரும் சேதாரம் ஏற்படும் என்பதால், இந்து ஏட் டின் கட்டுரையை - _ தகவலை சங்பரிவார் -_ பிஜேபி வட்டாரத்தால் இரசிக்க முடியாது. இந்து ஏடு எழுதுவதற்கு முன்பே -_ மோடி ஆர்.எஸ்.எஸின் கட்டளைக் காரண மாகவே முன்னிறுத்தப்பட்டார் என்பது மலிவாகவே தெரிய ஆரம்பித்து விட்டது.
மற்றவர்களைவிட அதிகாரப் பூர்வமில்லாத பிஜேபியின் _ மோடியின் பேச்சாளரான திருவாளர் சோ ராமசாமி அவர்களுக்கு இதன் பாரதூர விளைவு கள் என்னவென்று தெரியும் அல்லவா! அதனால் தமக்கே உரித்தான வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டு மோடியின் கன்னத்தில் விழும் அறையைத் தம் கன் னத்தில் தாங்கிக் கொள்வதுபோல் எழுது கோலைத் தூக்கியுள்ளார்.
கேள்வி: பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். தான் வழி நடத்துகிறது. என்பது உண்மையா?
பதில்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா.ஜ.க.வை வழி நடத்துகிறது என்ற சொல்ல முடியாது.
அப்படிப்பட்ட நிலை இருந்தால், பா.ஜ.க. சுயமாக எந்த தீர்மானமும் செய்ய முடியாமல் திணறும். நிலைமை அப்படி இல்லை. பா.ஜ.க., வீட்டுப் பெரியவர் ஆர். எஸ்.எஸ்.
அவருடைய மனம் கோணாமல் நடந்து கொள்ள பா.ஜ.க., முயற்சிக்கும். சில சமயங்களில் உரசல் வருவதால் உறவு விட்டுப் போகாது (துக்ளக் 11.9.2013 பக்கம் 20).
எப்படியெல்லாம் நெளிந்து வளைந்து சப்பைக் கட்டுக் கட்டுகிறார் இந்த அய்யர்.
1976 நெருக்கடி நிலையைத் தொடர்ந்து ஜனசங்கத்தைக் கலைத்து விட்டு ஜனதாவில்  அய்க்கியமானதே _ ஆட்சி யில் மாஜி ஜனசங்கத்தவர்களான வாஜ் பேயியும் அத்வானியும் அமைச்சர்களாகக் கூட இருந்தனரே _ -அந்த அய்க்கியம் குலைந்து போனதற்கு என்ன காரணம்?
ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர், ஜனதா விலும் உறுப்பினர் என்னும் இரட்டை உறுப்பினர் தன்மை தானே _ - ஜெயப் பிரகாஷ் நாராயணன் போன்றவர்களால் அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட ஜனதா உருக்குலைந்து போனதற்குக் காரணம்?  பல முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., உறவைத் துண்டிக்க மறுத்தது ஏன்? ஆர்.எஸ்.எஸின் இந்து வெறி மதக் கொள்கை தானே அதற்குக் காரணம்.
ஓர் ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவா யில்லை; ஆர்.எஸ்.எஸ்.தான் எங்களுக்கு மிக மிக முக்கியம் என்று மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதற்கு என்ன காரணம்?
ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளராக இருந்த எச்.வி. சேஷாத்திரி இதோ பேசுகிறார்:
4.4.1998 இரவு 11 மணிக்கு தொலைக் காட்சி அலைவரிசை 1-இல் அவர் அளித்த பேட்டி இதோ!
கேள்வி: பி.ஜே.பி. ஆட்சியின் ரிமோட் கண்ட்ரோலாக ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகக் கூறுவதுபற்றி..
சேஷாத்திரி: வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி இவர்கள் எல்லாம் யார்?
ஆர்.எஸ்.எஸ். தானே? அப்படியிருக்க இன்னொரு ரிமோட் கண்ட்ரோல் எதற்கு?
கேள்வி: ஆர்.எஸ்.எஸின் லட்சியங் களையும், கனவுகளையும் பி.ஜே.பி. நிறை வேற்றும் என்று நம்புகிறீர்களா?
சேஷாத்திரி: நிச்சயமாக ஒவ்வொரு பிரச்சாரர் அல்லது ஸ்வயம் சேவக்கின் தகுதியையும், திறமையையும் பொறுத்து சில கடமைகளை ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு அளித்துள்ளது. வாஜ்பேயி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை பி.ஜே.பி.க்கு ஜனசங்கிற்கு அனுப்பினோம். ஆர்.எஸ்.எஸின் பெருமை மிக்க தொண் டர்களான அவர்கள் நிச்சயம் தங்களின் பணிகளை நிறைவேற்றுவார்கள். அதே போல, தமிழ்நாட்டு பி.ஜே.பி.க்கு எங்கள் தகுதி வாய்ந்த தொண்டரான இல. கணே சனைத் தந்துள்ளோம். அவரும் சிறப்பான பணி ஆற்றி வருகிறார் என்று கூறினாரே!
பிரதமர் வாஜ்பேயிலிருந்து மத்தியில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் ஆர்.எஸ். எஸ்.காரர்கள்.
அவர்களை பி.ஜே.பி.க்கு நாங்கள்தான் அனுப்பினோம். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். கனவுகளை நிறைவேற்றுவார்கள் என்று வெளிப் படையாக சொல்லவில்லையா?
ஆர்.எஸ்.எஸில் முழு நேர ஊழியராக உள்ள ஒருவரைத்தான் பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளராக நியமிக்க வேண் டுமென்று பி.ஜே.பி.யின் அமைப்பு விதியி லேயே திருத்தம் செய்யப்பட்டு விட்டதே! (The Hindustan Times 29.6.1997).
ஆர்.எஸ்.எஸ். தலைவரான ராஜுபையா என்ற இராஜேந்திர சிங் இடுப்பு எலும்பு முறிந்து ஜண்டேவலான் நகரில் மருத்துவ உதவி பெற்று ஓய்வில் இருந்தார். அவரை பிரதமர் வாஜ்பேயி சந்திக்கச் சென்றார்.
அது வெறும் உடல்நல விசாரிப்புக்கான நிகழ்ச்சி மட்டுமல்ல; பல அரசியல் முக்கி யத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது.
1) ஆர்.எஸ்.எஸின் நம்பிக்கை இல்லாத எவரையும் பி.ஜே.பி. வேட்பாளராகத் தேர்தலில் நிற்க வைக்கக் கூடாது.
2) ஆர்.எஸ்.எஸ். அமைத்துள்ள ஏழு உறுப்பினர் கொண்ட கொள்கை வகுப்புக் குழுதான் வேட்பாளர்களை இறுதி செய்யும். (ஆர்.எஸ்.எஸ். தலைவரான இராஜேந்திர சிங், பொதுச் செயலாளர் எச்.வி. சேஷாத்திரி முதலியோர் அக்குழுவில் முக்கியமாக இருப்பர்).
3) சென்ற 12ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 70 பி.ஜே.பி. உறுப்பினர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்.பற்றி சரியாகத் தெரியவில்லை என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடு என்றாரே சேஷாத்திரி.
பி.ஜே.பி. என்கிற அரசியல் கட்சிக்கு ரிமோட் கண்ட்ரோலாக இருப்பது சூப்பர் அரசியல் கட்சியான ஆர்.எஸ்.எஸ். தான் என்பது இன்னுமா விளங்கவில்லை?
5.2.1998 நாளிட்ட இந்து ஏட்டுக்கு எல்.கே. அத்வானி சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸின் சர்சங்சலக் (உயர் தலைவர் இராஜேந்திர சிங்) உட்பட யாரையும் கேட்காமலேயே வாஜ்பேயிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று அறிவித்தேன் என்றாரே!
பிரதமர் பதவிகூட ஆர்.எஸ்.எஸ். தலைவரைக் கேட்டுத்தான் முடிவு செய் யப்பட வேண்டும் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?
தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று நிகரற்ற சக்தியாக விளங்கும் காலத் தில் இவர்கள் எப்படி நடந்து கொள்வார் களாம்?
இதோ வாஜ்பேயி கூறுகிறார்:
பாரதீய ஜனசங் கட்சியாக இருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸுடனான எங்கள் தொடர்பு வெறும் கருத்தியல் மட்டத் தோடும் வரலாற்று ரீதியானதாகவும் ஆகியது. இத்தகைய இறுக்கமான தொடர்போடு பத்தாண்டுகளைக் கடந்து விட்டோம். பி.ஜே.பி.க்குள் இருந்து வேலை செய்கின்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எங்களின் கருத்தியல் அடித்தளத்தை எல்லோருக்கும் புரிய வைப்பதற்கு விருப்பப் பூர்வமான முயற்சிகளை செய்து வருகிறார்கள். சகோதர அமைப்புகளாகிய விஸ்வ இந்து பரிஷத், வித்யார்த்தி பரிஷத், பாரதீய மஸ்தூர் சபா, சேவாபாரதி, கல்யாண ஆஸ்ரம் ஆகிய வற்றோடு எங்களுக்குள்ள தொடர்பையும் அவர்கள் புரிய வைக்கிறார்கள். இந்த அமைப்புகள் அத்தனையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து பெற்ற உந்துதலின் அடிப்படையில் இயங்குபவை. எங்களது முயற்சிகளை இன்னும் நாங்கள் தீவிரப் படுத்த வேண்டும். அரசியலில் பாரதீய ஜனதா கட்சிக்குள்ள கூடுதல் வாய்ப்புகளின் அடிப்படையில் இவற்றுக்கான ஏற்பு அதிகமாகும்.
(டெலிகிராம் ஏடு 17.5.1990).
மேற்கண்ட ஆதாரங்கள் எதைத் தெரிவிக்கின்றன? ஆர்.எஸ்.எஸ்தான் அவர்களின் அடிப்படை ஆதாரச் சுருதி என்பது அப்பட்டமாக விளங்கி விட்டதே!
பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர்கூட ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்ற முழு நேரப் பேர் வழியாக இருக்க வேண்டும் என்று கட்சியின் அடிப்படை விதியிலேயே பாதுகாப்பாக வைத்துள்ளார்களே.
ஆர்.எஸ்.எஸ். அமைத்துள்ள ஏழு பேர் கொண்ட குழுதான் தேர்தலில் போட்டி யிடுபவர்கள் யார் யார் என்பதை முடிவு செய்யும் என்கிற அளவுக்கு நிலைமை இருக்கும்பொழுது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வை வழி நடத்துகிறது என்று சொல்ல முடியாது என்று முழு யானையைப் பிடி சோற் றில் மறைக்கப் பார்க்கிறார் மனு குலத்தாரான சோ.
6.3.1978 அன்று நாக்பூர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் தேவரசும், பொதுச் செயலாளர் ராஜேந்திர சிங்கும் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
ஆர்.எஸ்.எஸ்., நடவடிக்கைகள் ஓர் அரசியல் நோக்கம் கொண்டதுதான். நாங்கள் அதிகார அரசியலில் தீவிரம் காட்டாவிட்டாலும்கூட! அது மட்டுமல்ல; தற்போதுள்ள இதன் சட்ட திட்டங்களின்படி உறுப்பினர்கள் அரசியலில் பங்கெடுக்க முடியும். பல ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், மாநில அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். (குஜராத்தில் ஒரு வெள்ளோட்டம் என்ற தலைப்பில் ஆதவன் - தீட்சண்யா எழுதிய கட்டுரை தினமணி 18.2.2000 பக்கம் 4).
ஆர்.எஸ்.எஸ். வெறும் கலாச்சார அமைப்புதான்; - அரசியலில் ஈடுபடாது என்று பேசுவது - எழுதுவது எல்லாம் பம்மாத்து வேலை என்பது நீதிமன்றத்தில் அவர்கள் கொடுத்த வாக்குமூலமே காட்டிக் கொடுத்து விட்டதே!
மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்த போது நடந்த ஒன்றை நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும். மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்த போது புதுடில்லியில் கல்வி அமைச்சர்கள் மாநாடு கூட்டப்பட்டது (1998 அக்டோபர் 22).
அந்தக் கூட்டத்தில் சரஸ்வதி வந்தனா பாடப்பட்ட போது தமிழ்நாடு அரசின் சார்பில் அதில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் வெளி நடப்புச் செய்தார்.
அந்த மாநாட்டில் அளிக்கப்பட்ட கல்வித் திட்டத்தைத் தயாரித்தவர் ஆர்.எஸ்.எஸ். நிபுணர் என்று கூறப்பட்ட சிட்டியங்லா. மூன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரைக்கும் சமஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்க வேண்டும். சரஸ்வதி வணக்கம் வந்தே மாதரம் பாடல்கள் அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம். உபநிஷத்துகள் வேதங்கள் முதலியன பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த  ஆர்.எஸ்.எஸின் கல்வித் திட்டம்; கடுமையான எதிர்ப்பின் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது.

ஆட்சியின் பரம இரகசியம்கூட ஆர்.எஸ்.எசுக்குத் தெரிவிக்கப்பட வேண் டும் என்பது எழுதப்படாத சட்டமாகும்.
1999 மே 11,13 ஆகிய இரு நாள்களில் மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு இராஜஸ் தான் மாநில பொக்ரான் பாலைவனத்தில் அய்ந்து அணு குண்டுகளை வெடித்துச் சோதனை செய்தது. அரசாங்கத்தின் மிக முக்கியமான இரகசியம் இது. குடியரசுத் தலைவருக்குக்கூட முதல் நாள் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வளவு பரம இரகசியமான செயல் ஆர்.எஸ்.எஸ்சுக்குத் தெரிவிக்கப்பட்டுள் ளதே!
எந்த நாளில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்யப்பட்டதோ அந்த நாளி லேயே ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் அணு ஆயுத இந் தியா என்ற தலைப்பில் ஒரு சிறப்பு இதழே வெளியிட்டது என்றால், இது எப்படி சாத்தி யமாகும் என்பதைச் சிந்திக்க வேண்டும்!
அணுகுண்டு வெடிப்புத் தகவல் முன் கூட்டியே ஆர்.எஸ்.எஸுக்குத் தெரிந்திருந் தாலொழிய இந்தச் சிறப்பிதழைக் கொண்டு வந்திருக்க முடியுமா? குடியரசுத் தலைவருக்கே தெரியாத அரசு இரகசியம் ஆர்.எஸ்.எஸுக்குத் தெரிகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் பா.ஜ.க.வின் ஆட்சி லகான் அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸிடம் தான் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
அமைச்சர் பதவியேற்கும்போது அரசு இரகசியங்களைக் காப்பாற்றுவோம் என்றுகூறி உறுதி எடுத்தவர்கள். அதற்கு மாறாக அணுகுண்டு சோதனை போன்ற அரசு இரகசியங்களைக்கூட ஆர்.எஸ். எசுக்குத் தெரிவித்துள்ளார்களே.
1995 மே 7 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசரில் ஒரு கட்டுரை வெளி வந்தது. அதற்குரியவர் ஏ.பி. வாஜ் பேயிதான். அந்தக் கட்டுரையின் தலைப்பு Sangh My Soul
என்பதாகும். அதுதான் பாரதீய ஜனதா கட்சியின் வெப்சைட்டிலும் இடம் பெற்றதாகும்.
ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா என்ற அந்தக் கட்டுரையில் நல்லவர் என்ன சொல்லுகிறார்?
முஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டுமாம்? இதோ அவர் எழுதுகிறார்:
1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (Organising)
2) முஸ்லிம்களை உட்கொள்ளுவது (Assimilation)
(இதன் பொருள்: முஸ்லிம்க ளுக்கென்று உள்ள அடையாளங்களை அழித்து அவர்களை இந்து மயமாக்குவது).
அப்படி முஸ்லிம்களை உட்கொள்ளு வதற்கு அவர் கூறும் வழிகள் மூன்று:
1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.
2) முஸ்லிம்களை நமது வழியில் கொண்டுவர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் - இது காங்கிரசின் அணுகுமுறை.
3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல்.
இம்மூன்று வழிகளில் முதல் மற்றும் மூன்றாம் வழிகள்தான் நம் வழி என்றார் வாஜ்பேயி.
பி.ஜே.பி.க்கு ஆர்.எஸ்.எஸ். வெறும் உடம்பு அல்ல அவர்கள் நம்பும் ஆன்மா! சொல்பவர் சாதாரணமானவரல்லர் - பிஜேபியின் மிகப் பெரிய தலைவர் வாஜ்பேயி.
இவர்கள் ஆர்.எஸ்.எஸில் சேரும்போது ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி என்ன?
எனது புனிதமான இந்து மதத்துக்கும், இந்து சமுதாயத்துக்கும், இந்துக் கலாச் சாரத்துக்கும் பாடுபட்டு பாரத் வர்ஷத்தில், அதுவே உயர்ந்தது என்பதை நிலைநாட்ட இந்த ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கில் (ஆர்.எஸ்.எஸ்.) நான் உறுப்பினராகிறேன் என்பதை எல்லாம் வல்ல இறைவன் முன்னாலும், எனது மூதாதையர் முன்பும் பிரமாணம் எடுக்கிறேன்.
இந்தச் சங்கத்தின் பணிகள்  அனைத் தையும் இதய பூர்வமாக ஏற்று வாழ்நாள் முழுவதும் செயல்படுவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் டிராயர் போட்டால் ஆர்.எஸ்.எஸ்., வேட்டி கட்டினால் பிஜேபி.
ஏற்கெனவே நரேந்திரமோடியைப் பற்றி நிலவும் கணிப்பு - ஊரும் உலகமும் அறிந்ததே!
ஆர்.எஸ்.எஸ். என்கிற முத்திரை அதிகாரப் பூர்வமாக விழுந்து விடக் கூடாது என்பது அவர்களின் வியூகம்.
என்னதான் கம்பிமேல் ஏறி நின்று சாமர்த்தியம் காட்டினாலும் அத்வானியை உதாசீனம் செய்ததும் மோடியை முன்னிறுத்தியதும் ஆர்.எஸ்.எஸ்.தான் என்பது ஊர் சிரித்த ஒன்றே!
ஆர்.எஸ்.எஸைப்பற்றி அறிந்தவர் களுக்கு ஒன்று நன்றாகவே தெரியும்; குஜ ராத்  மாநில இனப்படுகொலையாளர்கள் தான் ஆர்.எஸ்.எசுக்குத் தேவைப்படுவர். அந்த வகையில் அவர்கள் மோடியைத் தவிர உறுதியாக வேறு யாரைத் தேர்வு செய்ய முடியும்?
அந்தரங்கம் புனிதமானது என்பார்கள். பி.ஜே.பி.யைப் பொறுத்தவரை அவர்களின் அந்தரங்கமான ஆர்.எஸ்.எஸ். புனித மானதல்ல -_ அசிங்கமானது _- ஆபத் தானது! - அருவருப்பானது!! - எச்சரிக்கை! எச்சரிக்கை!!


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>

அக்டோபர் 16-31 - 2013

Tuesday, June 11, 2013

பாரதீய ஜனதாவில் உள்கட்சிப் பூகம்பம் வெடித்தது!

மோடிக்கு பிரச்சாரக் குழுத் தலைவர் பதவியா? அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அத்வானி விலகல்
சுயநலக் கூடாரமாகிவிட்டது கட்சி என்றும் குற்றச்சாற்று
சென்னை, ஜூன் 11- வரும் நாடாளுமன்றத் தில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து இக்கட்சிக்குள்ளே ஏற் பட்டுள்ள உச்சக் கட்ட மோதலின் விளைவாக சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இக்கட்சி யின் செயற்குழுவில் மோடிக்கு பிரச்சாரக் குழுத் தலைவர் பதவி வழங்கியதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரி வித்து அத்வானி திடீர் ராஜினாமா செய்து பூகம் பத்தைக் கிளப்பியுள் ளார்.
மத சார்பற்ற நாடான இந்தியாவில்  இந்து மத வெறியைத் தூண்டும் வகையிலும்,  சிறுபான்மையினரை  பல்வேறு வகையில்  கொச்சைப்படுத்தியும் தாக்குதல் தொடுத்து வருவது பாரதீய ஜனதா கட்சியாகும்.
அத்வானி பற்றி..
இக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானி இந்தியா முழுவதும் மதவெறியைத் தூண்டும் வகையில் ரத யாத்திரை நடத்தி அயோத்தியில் உள்ள இஸ்லாமியரின் வழிப்பாட்டுதலமான பாபர் மசூதியை இடித்து, தன்னை முன்னணி தலை வராக பிரகடனப்படுத் திக் கொண்டவர். இச் சம்பவம் உலகம் முழு வதும் இந்தியாவிற்கு தலை குனிவை ஏற்படுத் தியது.
கட்சியில் பிரச்சாரக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பார தீய ஜனதா கட்சியைச் சேர்ந்த குஜராத் முதல் வர் நரேந்திரமோடி குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தனக்கு சாதகமாக்கி இஸ்லா மியர்மீது பழி போட்டு, தனது அரசு இயந்தி ரத்தை பயன்படுத்தி சிறு பான்மை மக்கள்மீது மேற்கொண்ட கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல்கள் மூலம் தனது இந்துமத வெறித் தனத்தின் கோரத்தை தனக்குத்தானே வெளிப் படுத்திக் கொண்டவர்.
இந்த இருவருக்கும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என பனிப் போர் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் கோவாவில் கூடிய பிஜேபியின் செயற்குழு வில் குஜராத் முதல மைச்சர் நரேந்திரமோடி கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவராக நிய மிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்வானி நேற்று (10..6.2013) கட்சி யின் தேசிய செயற்குழு, ஆட்சிமன்ற குழு, தேர் தல் குழு ஆகியவற்றில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மோடியை தவிர்த்தார்:
தனது உதவியாளர் மூலம் நேற்று காலை 11 மணிக்கு ராஜ்நாத் சிங்குக்கு ராஜினாமா கடிதத்தை அத்வானி அனுப்பினார். பின்னர், 12.30 மணியளவில் அத் வானியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். ராஜினாமாவை திரும் பப் பெற அத்வானியை அவர் கோரியதாக தெரி கிறது. ஆனால், மோடிக்கு பதவி அளிக்கப்பட்ட தற்கு அத்வானி தனது எதிர்ப்பை ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்ன தாக, மோடியும் ராஜ் நாத் சிங்கும் அத் வானியை சந்தித்து மோடியின் நியமனத் துக்கு ஆசி பெற முடிவு செய்ததாகவும், கடைசி நேரத்தில் ராஜ்நாத் சிங் மட்டுமே சந்தித்துள் ளார். கட்சியின் மூத்த தலை வர்கள் சுஷ்மா சுவராஜ், எஸ்.எஸ்.அலுவாலியா, அனந்த் குமார், வெங் கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் டில்லியில் உள்ள அத்வானி வீட் டுக்கு சென்றனர். அத் வானியை சந்தித்து ராஜி னாமாவை திரும்பப் பெற வேண்டுகோள் விடுத்தனர். அத்வானி யின் ராஜினாமாவை ஏற்க மறுத்த ராஜ்நாத் சிங் தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள் ளார். ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என்ற பாஜ தலைவர்களின் வேண்டு கோளை அத்வானி நிராகரித்தார்.
ஏமாற்ற மாட்டார்
அத்வானியை நரேந்திர மோடி நேற்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி ராஜினாமாவை திரும்பப் பெறும்படி கோரினார். இத்தகவலை டுவிட்டர் இணையதளத் தில் மோடி தெரிவித் துள்ளார். லட்சக்கணக் கான தொண்டர் களை அத்வானி ஏமாற்ற மாட்டார் என்று மோடி கூறியுள்ளார்.
ராஜ்நாத்துக்கு உருக்கமான கடிதம்
ராஜ்நாத் சிங்குக்கு அத்வானி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
ஜனசங்கத்துக்காகவும் பா.ஜ.வுக்காகவும் எனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன். இது எனக்கு எல்லை யற்ற திருப்தியை அளிக் கிறது. ஆனால், சமீப காலங்களில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் போக்கு ஏற் றுக் கொள்ள முடியாத தாக இருக்கிறது. நாட் டையும் மக்களையும் பற்றி கவலை கொண்ட ஷியாம் பிரசாத் முகர்ஜி, தீன் தயாள் உபாத்யாயா, நானாஜி தேஷ்முக், வாஜ்பாய் போன்ற தலை வர்களின் கொள்கை யோடு உருவாக்கப்பட்ட கட்சியில் அந்தக் கொள் கைகள் இப்போது இல்லை. நமது கட்சியின் பெரும்பாலான தலை வர்கள் தங்கள் சொந்த நலன் குறித்தே கவலைப் படுகின்றனர்.
எனவே, கட்சியின் தேசிய செயற்குழு, ஆட்சி மன்ற குழு, தேர் தல் குழு ஆகியவற்றில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். இதையே எனது ராஜி னாமா கடிதமாக ஏற் றுக் கொள்ளவும்.
- இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.




மூன்று முறை ராஜினாமா
பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, கடந்த எட்டு ஆண்டுகளில், மூன்று முறை, பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த, 2005இல் பாகிஸ்தான் சென்ற அத்வானி, அந்நாட்டின் உயரிய தலைவர், முகமது அலி ஜின்னாவை, மதச்சார்பற்ற தலைவர் என, பாராட்டினார். இதையடுத்து, அவருக்கு, கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பவே, தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு, பல நாட்களுக்கு பிறகு, திரும்பப் பெற்றார். அதே ஆண்டு, டிசம்பரில், மும்பையில் நடந்த கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், இப்பிரச்சினை மீண்டும் எழவே, அத்வானி தன் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவராக, ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றார்.இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலையொட்டி, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பா.ஜ.,வின், பிரச்சாரக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக, அத்வானி, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...