அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து இந்திய வம்சாவளி செனட் எம்பி.யான கமலா ஹாரிஸ் விலகி னார்.
இதில் தற்போதைய அதி பர் டிரம்ப்பை
எதிர்த்து கள மிறங்க உள்ள ஜனநாயக கட் சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதை
தேர்வு செய்யும் நியமன தேர்தல் அடுத்த ஒரு வாரத்தில் தொடங்க உள் ளது.
இம்முறை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாள ராக களமிறங்க முன்னாள் துணை
அதிபர் ஜோ பிடன், இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர்னியா செனட் எம்பி.யான
கமலா ஹாரிஸ், இண்டியானா முன்னாள் மேயர் பேட்டி புட்டிச், நியூயார்க்
முன்னாள் மேயர் மைக்கேல் புளோயம்பெர்க், வெர்மன்ட் செனட் எம்பி சான்டர்ஸ்,
அமெரிக்காவின் முதல் இந்து எம்பி.யான துளசி கப்பார்ட், எமி கிளோபச்சர்
ஆகியோர் போட்டியிட்டனர்.
கடந்த சில மாதங்களாக இவர்கள் தீவிர
பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில், ஜோ பிடென், சான்டர்ஸ், கமலா ஹாரிஸ் இடையே
கடும் போட்டி நிலவியது. ஆனாலும், ஜோ பைடனுக்கே மக்கள் ஆதரவு அதிகளவில்
உள்ளது. இந்நிலையில், அதிபர் வேட் பாளர் போட்டியிலிருந்து கமலா ஹாரிஸ்
நேற்று விலகினார்.
No comments:
Post a Comment