Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Wednesday, February 4, 2015

மூளைப் பாதுகாப்பு அரண்கள் - எவை?


முதுமை அடைந்தவர்கள் நோய் களினால் தாக்குண்டு அவதியுறுவது ஏற்கப்பட முடியாத ஒன்று என்றாலும், நியாயப்படுத்தக் கூடியதுதான்.

ஆனால், இளைய தலைமுறையினர் பலரும் பல்வேறு நோய்களினால் பாதிக் கப்பட்டு, வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ளுவது அநியாயமான கொடுமை யாகும்!

எதுவும் நம் கையில் இல்லை என்று சாக்குருவி வேதாந்தம் பேசுவது, செய்கின்ற செயலுக்குப் பொறுப்பேற்கத் தெரியாத, அல்லது பொறுப்பின்மை யின் அடையாளமேயாகும்.

வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி, குறிக்கோள், உணவுப் பழக்கவழக் கங்கள் தொடங்கி, மது, சிகரெட் போன் றவைகளை நண்பர்களுடன் விளை யாட்டு, வேடிக்கையாகத் தொடங்கி, பிறகு அது விபரீதமாகிவிட்டதோடு, முதலில் வரவேற்றவர்களே, அவற்றை வழியனுப்பத் துடித்தாலும் விடமாட் டேன் உன்னை, விடமாட்டேன் என்று கெட்டியாய் முதலைப் பிடியுடன் பிடித்துக் கொள்வது இளைஞர் உலகின் இன்றைய வாழ்வின் அலங்கோல மாகும்!

எடுத்துக்காட்டாக சில ஆய்வுகள் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் இதோ:

1. இயந்திர வாழ்க்கையாக சுழலும் நம் இளைஞர்கள் - மாணவர்கள் பலர் - வீடுகளிலிருந்து கல்விக் கூடம், தொழில் பணிமனைகளுக்குக் கிளம்பும் நேரத்தில், காலைச் சிற்றுண்டியைப் புறக்கணித்து, வெறும் வயிற்றுடன் ஓடுகிறார்கள்!
இதன் விளைவு...?

அவர்களது உடலில் சர்க்கரை அளவு (காலை நேரத்தில்) குறைகிறது; மூளைக்குத் தேவையான இரத்த ஓட்ட மும் குறைகிறது; மூளை பாதிப்படை கிறது; இதனால் வேலையில் சுணக்கம். உடலில் கலக்கம், மயக்கம்! சிற்சில நேரங்களில் சோர்வுடன் கூடிய தூக்கம்!

‘Break Fast’  என்பது ஆங்கிலச் சொல், காரணப் பெயர்தான் - பட்டினி யைத் தவிர்க்கும் உணவு முறை இது. இதைத் தவிர்த்தல் அறிவுடைமை ஆகாது - உடல்நலக் கேடு செய்யும். எனவே, இதனை மாற்றிக் கொள்ளுங் கள்.

2. அதிகமான உணவை உண்டு, வயிற்றில் திணிக்காதீர்; அதிகமாக பலூனை ஊதினால், அது வெடித்து விடு கிறது; உடலோ அதனைச் செரிமானம் செய்ய இயலாது தவிர்த்து, பல வகையில் உடலுக்கு எச்சரிக்கை மணி அடித்து, உடலின் செரிமான இயந்திரப் பகுதியை பழுதாக்குகிறது - வயிறு குப்பைத் தொட்டியல்ல, வடிகால் பெறவேண்டிய பயிர், வளரும் கழனி - மறவாதீர்!

இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று எண்ணும்போதே, உடனடியாக இலையை விட்டு எழுந்துவிடுங்கள். அது உங்கள் ஆயுளைக் கூட்டும்.

3. புகைப் பிடித்தல் - இன்றைய இளைஞர்களிடம் மலிந்துள்ள ஒரு மகத்தான தீய பழக்கம்!

புற்று நோய் வந்து ஆயுளைப் பறிப்பதுபற்றிய தகவல்களை அறியாத வர்களா இவர்கள்? இருந்தும் - தெரிந்தே விளக்கை கையில் வைத்து, பாழுங்கிணற்றில் விழலாமா?

இப்பழக்கத்தால் மூளைச் சுருங்கிச் சுருங்கி, அல்சைமர்ஸ் Alzheimer என்ற மறதி நோய்க்கு சிவப்புக் கம்பளத்தை விரித்து வரவேற்கும் நிலை அல்லவா ஏற்படுகிறது.

4. அதுபோலவே, அதிகமான சர்க் கரை - இனிப்பு பொருள்களை உண் ணுதல்மூலம், நாம் உண்ணும் மற்ற உணவில் உள்ள புரதச் சத்துகளும், ஊட்டச் சத்துக்களும் நம் உடலில் சேர்வதற்குப் பெரிதும் தடையாக இது அமைந்து விடுகிறது.

இதுவும் மூளையை வெகுவாகப் பாதிக்கும் நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

5. காற்றுத் தூய்மைக்கேடு. நமது உடலின் மூச்சுக் காற்றான உயிர்க் காற்று (பிராண வாயு) மூளைக்கு அதிகம் தேவை. கெட்ட காற்று - கரியமில வாயு மற்றும் மாசுபட்ட காற்றை நாம் அதிகம் சுவாசிக்கும் நிலை ஏற்பட்டால் - மூளைக்குச் செல்லவேண்டிய பிராண வாயு குறைகிறது. இதனால் மூளையின் செயல் திறன் - ஆற்றல் குறைகிறது என்கின்றனர் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள்!

6. தூக்கம் என்பதின் முக்கியத்துவம், தேவைபற்றி நம்மில்பலர் அறிந்தவர் கள் அல்லர்.

நல்ல தூக்கம் நம் மூளைக்கு நல்ல ஓய்வைத் தரும். நீண்ட நேரம் தூங் காமல் இருந்தால், அத்தூக்கக் குறைவும் நமது மூளையின் ஆற்றலை வெகு வாகப் பாதிக்கிறது.

உணவுக்கு என்ன விதியோ அதே விதிதான் தூக்கத்திற்கும் (The Same Formula)

(அ) அளவும் குறைதல் கூடாது

(ஆ) அளவும் கூடவும் கூடாது

(இ) குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக் கத்தை நமது உடற் கடிகாரத்திற்கு ஏற்படுத்தி விட்டால், அது நம் வாழ்வை நீட்டும்!

7. தூங்கும்போது சிலர் தலை யணையில் தலை வைத்து முகத்தையும் - போர்வை கொண்டு இழுத்து மூடிக் கொண்டு தூங்குகிறார்கள்.

இது மூளையைப் பாதிக்கும், நல்ல காற்றுத் தேவை குறைகிறது; தூய்மை யற்ற காற்று உள்ளே புகுந்து மூளையைக் கெடுக்கிறது!

அதுபோலவே, நம் உடல் நிலை சரியாக இல்லாதபோதும்கூட சிலர் - அவர்கள் பணிப் போதையாளர்கள் (Workaholic) ஆகி பழக்கப்பட்ட காரணத்தினால், கடுமையான பணி - படித்தல், எழுதுதல், சிந்தித்தல் - இவைகளைச் செய்தால், பாரம் இழுக்க முடியாத இயந்திரமாக மூளை பலவீன மடையும் வாய்ப்பு அதிகம்.

8. எதையும் பயன்படுத்தாமலேயே வைத்தால், அது துருப் பிடித்து விடும்; பயனற்றதாகி விடும். பயன்பாட்டுத் தகுதியை இழக்கும்.

அதுபோலத்தான் மூளையும்கூட! எவ்வளவுக்கெவ்வளவு பயன்படுத்து கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு அது விரியும் - தெளிவாக ஆணை பிறப் பிக்கும்.

பயன்படுத்தாவிட்டால், அது சுருக்க மடைந்து, செயல்திறனை இழக்கவே செய்யும். எப்பொருளையும் பயன் பாட்டில் வைத்திருக்கத் தவறாதீர்!

9. மிகவும் குறைவாகப் பேசுவது, மூளைக்குப் பாதுகாப்பு என்கின்றனர் அத்துறை மருத்துவர்கள்! அதற்காக அறிவுப்பூர்வமான உரையாடல்களைத் தவிர்த்து விடாதீர்கள்! பெரிதும் கேட் பாளராக இருங்கள்; பேச்சைக் குறைத்து செயலைப் பெருக்குங்கள்!

இவை நம் மூளைப் பாதுகாப்பு அரண்கள் ஆகும்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
 
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:



Wednesday, January 28, 2015

குழந்தைத் திருமணங்களால் சிதையும் எதிர்காலம்

உலகம் முழுவதும் நடக்கும் குழந்தைத் திருமணங் களால் பாதிக்கப்படும் சிறுமிகளில், மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்த சிறுமிகள் என்கிறது யுனிசெஃப் நிறுவனம்(அய்க்கிய நாடு களின் சிறுவர் நிதியம்). குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படா விட்டால், 2050-க்குள் நூறு கோடி சிறுமிகள் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சித் தகவலைத் தருகிறது அந்த நிறுவனம்.

2009ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஜனவரி 24ஆம் தேதி, தேசிய பெண் குழந்தைகள் நாள் கடை பிடிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு தேசிய பெண் குழந்தை நாளை முன்னிட்டு இந்தியத் தொழிற் கூட்டமைப்பும், யுனிசெஃப் நிறுவனமும் சென்னைப் பல்கலைக் கழகத் துடன் சேர்ந்து வளரிளம் பெண் களுக்கான ஒருநாள் கருத் தரங்கிற்கு ஏற்பாடு செய் திருந்தன.

இந்தியா மட்டு மல்லாமல் சர்வதேச அளவில் பெண்களும், பெண் குழந்தைகளும் சந்திக்கும் பிரச் சினைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் பெண்களின் நிலை உயர்ந்திருக்கிறது என்று யுனிசெஃப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் சமூக, பொருளாதாரக் காரணிகளில் குறிப் பிடத்தக்க முன்னேற்றத்தைத் தமிழகப் பெண்கள் அடைந் திருக்கின்றனர் என்று சொல்லலாம். ஆனால், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக் கையில் பெரிய மாற்றம் எதுவும் நடக்கவில்லை.

கிருஷ் ணகிரி இதில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் தருமபுரி, சேலம், நாமக்கல் போன்ற மாவட் டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் 24 சதவீதப் பெண்களுக்கு பதினெட்டு வயதுக்கு முன்னால் திருமணம் செய்யப் படுகிறது என்று தெரிவிக்கிறது யுனிசெஃப்பின் அறிக்கை.

மேலும் தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் நடக்கும் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 25.5 சதவீதம் என்றால், நகரங்களில் அது 21.4 சதவீதமாக இருக்கிறது  என்கிறார் பேராசிரியர் ரீட்டா ஜான்.

குழந்தைத் திருமணத்தால் வளரிளம் பெண்கள் பாதிக்கப்படுவது உலகளவிலும் அதிகமாகவே இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டுமல்லாமல் அய்ரோப்பிய நாடுகளிலும் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப் படுத்துவது சவாலாகவே இருக்கிறது. இந்தியாவில் 27 சதவீத பெண்களுக்குப் பதினைந்து வயதுக்குள் திருமணம் முடிந்து விடுகிறது.

இந்தப் பெண்கள் குடும்ப வன்முறை, குழந்தைப் பேறு சிக்கல், பிரசவகால மரணம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக் கின்றனர். சமீபத்தில், தருமபுரியில் நிகழ்ந்த சிசு மரணங் களுக்கு இந்தச் சிறுவயதுத் திருமணமும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்கிறார் தமிழகக் குழந்தைகள் உரிமை ஆய்வகத்தின் மாநிலத் தலைவர் ஆண்ட்ரூ சேசுராஜ்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Monday, January 26, 2015

அறுசுவையும் அதன் மருத்துவ குணங்களும்


துவர்ப்பு - ரத்தப்போக்கை குறைத்து, ரத்தத்தை பெருக்குகின்றது. வயிற்றுப் போக்கை சரிசெய்ய வல்லது. வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

இனிப்பு - தசையை வளர்க்கின்றது. மனதிற்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தை தரக்கூடியது. இனிப்பு அதிகமாக பயன்படுத்தினால் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல்எடைக்கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்புள்ளது. இயற்கையாக கிடைக்கக்கூடிய உருளை,கேரட், அரிசி, கோதுமை,கரும்பு போன்றவை தண்டு வகைகள் அதிகமாக உள்ளது.

புளிப்பு - கொழுப்பினை வழங்குகிறது. பசியுணர்வை தூண்டும், உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கிறது. இது அதிகமாயின் தாக உணர்வுகளை அதிகரிக்கும்.

கார்ப்பு - எலும்பினை வளர்க்கின்றது. இந்த சுவை நுனி நாக்கில் எரிச்சலை உண்டாக்கும். கண், வாய் போன்ற வற்றில் நீர் வரச்செய்யும். அதிகமானால் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் புண்களை உண்டாக்கும்.

உவர்ப்பு - உமிழ் நீரை சுரக்கச் செய்கிறது, அன்றாடம் பயன்படுத்தும் உப்பை பயன்படுத்தினாலே போதுமானது. அதோடு வாழைக்காய், மாவடு, அத்திக்காய், அதிகமா னால் வாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, அனை வரும் அன்றாட உணவுகளில் அறுசுவைகளை அளவாக எடுத்துக்கொண்டால், ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

ஆரோக்கியத்திற்கு எளிமையான முக்கிய குறிப்புகள்:- மருந்து, மாத்திரைகளை குளிர்ந்த நீரில் சாப்பிடக் கூடாது. மாலை 5 மணிக்கு மேல் கடுமையான உணவுகளை தவிர்ப்பது நன்மை. காலை வேளையில் அதிகப்படியான நீரும், இரவு வேளையில் குறைந்த அளவு நீரும் பருக வேண்டும்.

இரவு 10 மணி முதல் அதி காலை 4 மணி வரை ஆழ்ந்து உறங்க வேண்டும். சாப்பிட்ட உடன் படுக்கக்கூடாது. மொபைல் போனில் பேட்டரி குறைவாக இருக்கும் போது பேசக்கூடாது. ஏனெனில் அதிலிருந்து வெளிப்படும் ரேடியே சன் 1000 மடங்கு அதிகமாக இருக்கும். அதேபோல் இடது பக்ககாதில் போன் பேசுவதே நன்மை.

பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ள வாழைப் பழத்தை எடுத்து பற்களின் மீது 2 நிமிடம் மசாஜ் செய்தால் போதும், அதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் பற்களை பளபளக்க செய்யும்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, January 22, 2015

கருப்பையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு ஆலோசனை

மாதவிலக்காவது, அதைத் தொடர்ந்து திருமணமாகி குழந்தை பெறுவது என இந்த இரண்டுமே கருப்பையின் மாபெரும் வேலைகள் என்பது பெரும்பாலான பெண் களின் நினைப்பு. அதனால்தான் முன்பெல்லாம் கர்ப்பப் பையில் சின்ன பிரச்னை என்றால்கூட சர்வசாதாரணமாக அறுவை சிகிச்சையில் அதை வெட்டி எறிந்து விட்டு வேறு வேலையைப் பார்க்கிற மனோபாவம் அவர்களிடம் இருந்தது.

விஞ்ஞானமும், மருத்துவமும் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில் கருப்பையை அகற்றாமலேயே பிரச்சினைகளை மட்டும் குணப்படுத்த முடியும். கருப்பையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கான அதை நீக்காமல் செய்யக்கூடிய தீர்வுகள் பற்றியும், தவிர்க்க முடியாமல் கருப்பை அறுவை சிகிச்சை  செய்கிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். கருப்பையில் உண்டாகிற அனேகப் பிரச்சினைகளை இன்று கர்ப்பப்பையை அகற்றாமலேயே சரிசெய்ய முடியும்.

உதாரணத்துக்கு ஃபைப்ராயிடு கட்டி என்றால் அதை மட்டும் நீக்கும் சிகிச்சைகள் வந்து விட்டன. அதீத ரத்தப் போக்கு தொடர்பான  பிரச்சினைகளுக்கும் பிரத்யேக ஊசிகள், மெரீனா என்கிற கருத்தடைச் சாதனம் போன்றவை உதவும்.  ஹார்மோன் கோளாறு காரணமாக உண்டாகிற அளவுக்கதிக ரத்தப் போக்கை சரி செய்ய, கருப் பையின் உள்ளே உள்ள சவ்வுப் பகுதியை பொசுக்கி, அதை மெலிதாக்கும் எண்டோமெட்ரியல் அப்லேஷன் சிகிச்சை பலனளிக்கும். கர்ப்பப் பையில் கட்டியோ, சதையோ இருந்தாலும் ஹிஸ்ட்ரோஸ்கோப் மூலம் சரி செய்து விட முடியும்.

இவற்றையெல்லாம் மீறி, கருப்பையில் வேறு ஏதேனும் பெரிய பிரச்சினைகள் இருந்து, கருப்பையை நீக்குவது மட்டுமே தீர்வு என்கிற நிலையில்,  லேப்ராஸ்கோப்பி முறையில் அதை நீக்குவது தான் பாதுகாப்பானது. ஓப்பன் சர்ஜரி என்கிற வயிற்றைக் கிழித்துச் செய்கிற அறுவை சிகிச்சை  செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையிலும் இரண்டு வகைகள் உள்ளன.

ஒன்று  டிஎல்ஹெச் எனப்படுகிற டோட்டல் லேப்ராஸ் கோப்பிக் ஹிஸ்ட்டரெக்டமி.  இதில் முழுக்க முழுக்க லேப்ராஸ் கோப்பிக் முறையில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப் படும். இன்னொன்று எல்ஏவிஹெச் எனப்படுகிற லேப்ராஸ் கோப்பிக் அசிஸ்ட் டெட் வெஜைனல் ஹிஸ்ட்ட ரெக்டமி. இதில் பாதி அறுவை சிகிச்சை லேப்ராஸ்கோப்பி முறை யிலும், மீதி பிறப்புறுப்பின் வழியேவும் செய்யப்படும்.

முதல் வகையில் இடுப்பெலும்புத் தசைகள் பாதிக்கப்படாது. பின்னாளில் ஏற்படுகிற சிறுநீர் கசிவு, சிறுநீரை அடக்க முடியாத நிலை, அடி இறக்கம் போன்றவை இதில் இருக் காது. இரண்டாவது வகையில் இந்தப் பிரச்சினைகளைத் தவிர்ப்பது சிரமம்.கருப்பையை அகற்றச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்தினால், அதற்கு முன் உங்கள் சினைப்பையை ஸ்கேன் செய்து பார்த்து, அவற்றின் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

தினம் ஒரு நெல்லிக்(கனி)காய்

 



தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல் வார்கள். இன்றைய விலைவாசியில் மருத்துவரைத் தேடிப் போவதும் ஆப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். ஆப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும்.

ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக் கொண்டது நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்'' என்கிறார் சென்னை அரசு அண்ணா மருத்துவமனையின் சித்த மருத்துவரான கே.வீரபாபு. ''நெல்லிக்காயில் சிறப்பு என்று ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல முடியாது.

நெல்லிக்காயே சிறப்புதான்...'' என்கிறார் சரிநிகர் உணவு ஆலோசகர் ஹேமமாலினி. இருவரும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களில் இருந்து...

1. நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.

2.சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங் களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் 'திரிபலா சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.

3.கொதிக்கும்  வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் சளி பிடித்துக் கொள்ளும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் சளி வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.

4.திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங் களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.

5.நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

6.தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

இந்துத்துவவாதிகளுக்கு மரண அடி

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை மதவாதமே!

அமெரிக்க அதிபர் ஒபாமா அதிரடி!




புதுடில்லி, ஜன.27_ இந்தியாவின் வளர்ச்சிக்கு மதவாதம் தடையாகவே இருக்கும் என்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

மாணவர்களிடையே அவர் தெரிவித்த கருத்து இந்துத்துவாவாதிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. டில்லியில் இந்திய சுற்றுப் பயணத்தின் இறுதி நாளான இன்று (27.1.2015) பகல் 12 மணியளவில் சிரிபோர்ட் அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரிடையே பேசும் போது அவர்களின் கேள்விகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா  பதில் அளிக்கையில் மத வாதப் பாதையில் செல்லும் எந்த நாடும் முன் னேற்றம் காணாது,  இந்தியாவின்  வளர்ச்சிக்கு தடையாக மக்களைப் பிளக்கும் கருவியாக மதவாதம் இருக்கும் என்று பதிலளித்தார்.

மதவாதம் என்பது மக்களைப் பிரிவி னைக்கு ஆளாக்கும் ஒரு கருவியாக தற்போது மாறிக்கொண்டு வருகிறது, மதவாதப் பாதை யில் இருந்து விலகி, சமூகநலனிற்கு பாடுபடும் நாடுகளே தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகள் மதத் தின் பெயரால் பிரிவினை செய்வதை விட்டு விட்டு வளர்ச்சியில் ஆர்வம் காட்டினால் இந்தியா வளர்ச்சியடையும்.

அமெரிக்காவில் 30 லட்சத்திற்கு மேல் இந்தியர்கள் வசிக்கின்றார்கள். அங்கு இந்தி யர்கள் மதத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களுடைய வளர்ச்சியுடன் அமெரிக்காவின் வளர்ச்சி குறித்தும் அக்கறைகொண்டு செயலாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக அமெரிக்க மக்களிடையே பல இந்தியர்கள் நற்பெயர்களைப் பெற்றுள் ளனர்.

நமக்குள் ஏற்படும் விவாதங்களை அது எந்த தலைப்பில் இருந்தாலும் அமைதியான பேச்சுவார்த்தையின் துணையோடு தான் தீர்வு காண முடியும். ஆனால், உணர்ச்சி பூர்வமாக எடுக்கும் எந்த முடிவும் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.

இந்தியா எப்பொழுது வெற்றிப் பாதையில் செல்லும்?

இந்தியாவின் வளர்ச்சி  எப்போது வெற்றிகரமான பாதையில் செல்லும் என்றால், அது மதவாதத்தை விட்டுவிட்டு, மதத்தின் பெயரால் பிரிவினைவாதச் செயல்களை நடத் தாமல் இருக்கும் பொழுதுதான் இந்த நாட்டின் வளர்ச்சி சிறப்பாக அமையும்; அதுவரை நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விகுறியாகத்தான் இருக்கும்.

மதமாற்ற விவகாரம் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்த ஒபாமா ஒருவர் ஒரு மதத்தைப் பின்பற்றுவதும், அதை விட்டு விலகுவதும் அவரவர் விருப்பமாகும், அது தனிப்பட்ட மனிதருக்கான அதிகாரமாகும், ஆனால் மதத்தின் பெயரால் சமூகத்தைப் பிரிவினைக்கு ஆட்படுத்தும் இதில்  மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அமெரிக்கா வளர்ச்சி அடைந்தது எப்பொழுது?  நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்களது பெற்றோருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது, காரணம் நிறபேதம் அமெரிக் காவை ஆட்டிப்படைத்தது, தற்போது அப்பிரி வினைவாதம் நீங்கியதால் தான் அமெரிக்கா வின் வளர்ச்சி சாத்தியமானது. இந்தியாவின் உறுதியை மதப் பிணக்குகள் குலைத்து விடும். இந்திய அரசமைப்பு சட்ட பிரிவு 25 இந்துத்துவா வலதுசாரி அமைப்புகளின் கர் வாப்சி என்கிற மதமாற்றங்களுக்கு எதி ராக ஒபாமா பேச்சு அமைந்திருந்தது.

ஒபாமா இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 25இன்படி மத சுதந்திரம் குறித்து கூறப் பட்டுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசும்போது, உங்கள் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 அனைத்து மக்களும் சமம் என்று குறிப்பிடு கிறது. அனைவருக்கும் தேர்வு செய்வதிலிருந்து, சுதந்திரமாகப் பேசுவதற்கும், பின்பற்றுவதற் கும், பரப்புவதற்கும் உரிமை உள்ளது. நம்முடைய இரண்டு நாடுகளிலும் அனைத்து நாடுகளிலும் மத சுதந்திரத்தைக்காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமன்றி அனைவருக் கும் உள்ளது.

உலகம் முழுவதும் மத சகிப்புத்தன்மை இல்லாமல் உள்ளதைக் காண்கிறோம். வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றால் ஒரே நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று உள்ளது. மதரீதியான பிரிவினைக்கு எதிராக காப்பாளராக நாம் இருக்க வேண்டும்.  என்று கருத்துரை வழங்கினார் அமெரிக்க அதிபர்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை மதவாதமே! அமெரிக்க அதிபர் ஒபாமா அதிரடி!


நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோயில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே!




வயிற்றுப்புண்ணும்... உண்மையும்...

நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் (வயிற்றுப் புண்) வரும் என்று சொல்வார்கள்; வயிற்றுப்புண் பெரும்பாலும் சரியான நேரத் திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர் களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாள்கள் கழித்துப் பாருங்கள். இப்போது அந்தச் சாதம் கெட்டுப் போய் நாற்றம் எடுக்கும்.

சில சமயம் புழுக்கள்கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரத்தை மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுபடியும் ஒரு பத்து பதினைந்து நாள்கள் கழித்துப் பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் நஞ்சாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து ஓட்டை போட்டிருப் பதைப் பார்த்திருக்கலாம் (இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்). இப்போது அல்சர் எப்படி வந்தது என்று உங்களால் சுலபமாகப் புரிந்து கொள்ளமுடியும்.

நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் தவறு. பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடும் போதுதான் அல்சரே வருகிறது. பசித்துச் சாப்பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. வயிற்றில் நேரத்திற்கு அலாரம் வைத்துக் கொண்டு ஜீரண நீர்கள் சுரப்பதில்லை. சரியான நேரத்திற்குச் சுரப்பதற்கு அங்கு எந்தவிதமான ஏற்பாடும் கிடையாது. மனித உடலானது முற்றிலும் உணர்வுகளால் ஆனது.
உணர்வுகளே மனித உடலை வேலை செய்யத் தூண்டு கின்றன, வேலையை முடிக்கவும் தூண்டுகின்றன. செயல் படுத்தவும் வைக்கின்றன. நேரத்திற்கு ஜீரண நீர் சுரந்து விடும். அப்போது வயிற்றில் சாப்பாடு இல்லையென்றால் அல்சர் புண் வந்துவிடும் என்பதும் தவறு. நீங்கள் பசிக்காமல் மூன்று வேளையும் சாப்பிடும்போது, ஜீரண நீர்கள் சுரக்காத நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு அங்கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்ட வாயுக்கள் உருவாகத் துணை புரிகிறது.

நாள்தோறும் இதுபோன்ற செயல் தொடர்ந்து நடைபெறும்போது, கெட்டுப்போன உணவு நஞ்சாக மாறுகிறது. பாத்திரத்தில் வைத்த உணவு எப்படி நஞ்சாக மாறுகிறதோ.... அப்படி நஞ்சாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் அல்சரை (புண்களை) உருவாக்குகிறது. செரிமானம் கெட்டால்தான் அல்சர் வருமே ஒழிய, செரிமானத்திற்கு அங்கு ஒன்றுமே இல்லாதபோது அல்சர் வராது.

சாப்பிடாமல் இருந்தால் உடல் சோர்வடைந்து, சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அது சம்பந்தமாக நோய்கள் வேண்டுமானால் வரலாம். அல்சர் வந்துவிட்டால் உங்கள் உடலில் கழிவுகளின் தேக்கம் நிறைய உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உடலில் ஆண்டுக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் தொடு சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளைத் திறக்க இது ஒன்றே போதுமே

பனிக்காலத்தில் குழந்தைகளின் உணவில் மாற்றம் தேவையா?



பனிக்காலம் தொடங்கியதுமே குழந்தைகளைப் பல நோய்கள் தொற்றிக்கொள்ளும். அதுவும் இப்போது இருக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகமிக குறைவாக இருப்பது ஒரு காரணமென்றால் மற்றொரு புறம் சுற்றுப்புறச்சூழலால் புதிதுபுதிதாக கிளம்பும் கிருமிகள்.

இவற்றிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்க நம் வீட்டை கிருமிகள் அண்டாமல் சுத்தமாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் குழந்தைகளின் உணவு முறைகளை கையாள்வதும். பனிக்காலத்தில் ஒரு சில உணவுகளை கொடுக்க வேண்டும், சில உணவுகளை தவிர்க்கவேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறான கருத்து. நம் ஊர் குளிரோ, மழையோ,  பனியோ எதுவும் நம் செரிமானத்தை பாதிக்காது.. குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் தாகம் அடிக்கடி எடுக்கும். நிறைய தண்ணீர் குடிப்பார்கள்.

அதனால் சாப்பாடு அதிகம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பனிக்காலத்தில் தண்ணீர் குடிப்பது குறைவதால் அதிகம் பசிக்கும். இக்காரணத்தினால் அவர்களுக்கு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் கொடுக்கவேண்டும். ஆனால் பல அம்மாக்கள் செய்யும் தவறு. தயிர், ஆரஞ்சு, வாழைப் பழம் சாப்பிடுவதால் சளி பிடிக்கும் என குழந்தை களுக்கு கொடுப்பதில்லை. பனிக்காலத்தில் தொற்றுக் கிருமிகளால் சளி பிடிக்கும்.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனை பொறுத்து சளி பிடிக்கும் இது ஒரு இயல்பான செயல்.  இதற்கும் உணவு முறைகளுக்கும் சம்பந்தமில்லை. வைட்டமின் சி நிறைந்த காய்கனிகள், பழங்கள், மற்றும் மோர் போன்றவற்றை அதிகம் கொடுத்தால் தான் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகூடும்.

டெங்கு, ஸ்வைன் ஃப்ளு போன்றவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற உதவும். வைட்டமின் சி நிறைந்த உணவுகள் எலுமிச்சை, ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைக்கோஸ், மிளகு, கீரை வகைகள் குழந்தைகளுக்கு வழங்கலாம்.

Tuesday, January 6, 2015

குளிர்காலத்தில் உடல் நலத்தைப் பாதுகாக்க!


வெயில் காலத்தைவிட பனி காலங்களில் நமக்கு அதிக அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. மனிதர்களுக்கு காது, மூக்கு, தொண்டை பகுதிகளைத்தான் பனி தாக்குவ தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரவு முதல் அதிகாலை வரையிலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சுத் திணறல், சளி என பிரச்சினைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறவும் வாய்ப்புள்ளது. பின்னர் அது மூக்கடைப்பு, காதுவலி போன்ற நோய்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளும். குளிரால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி காய்ச்சல் மற்றும் குளிர்கால பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில இயற்கை மருத்துவ வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

1. பனிகாலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். அதற்கு எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். வெந்நீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்கவைத்து அருந்தினால் தொண்டைவலி, மூக்கடைப்பு, காதுவலி, சளி போன்ற நோய்கள் நம்மை அண்டாது.

2. குளிருக்கு இதமாக கற்பூரவல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்து அருந்தலாம். அல்லது 2 வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு பச்சையாக சாப்பிட்டாலும் உடலில் குளிரின் தாக்கம் ஏற்படாது.

3. குளிர்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது தோல்தான். சிலருக்கு தோலில் வெள்ளை படர் அல்லது தோல் சுருக்கம் ஏற்படும். எனவே, அதைத் தடுக்க குளிக்கும் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து குளிக்கலாம். தோல் பாதுகாக்கப்படும். தோல் வறட்சியும் நீங்கும்.

4. பனி காலத்தில் குளிப்பதற்கு சோப்புகளை பயன் படுத்துவதைவிட கடலை மாவு, பயத்தம் பருப்பு மாவு ஆகியற்றை தேய்த்து குளிக்கலாம்.

5. தொண்டைவலி, வறட்டு இருமலுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் ஒரு சிறுதுண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும்போது, அரை தேக்கரண்டி மிளகுப்பொடி போட்டு சற்று ஆறியதும் அதை உருட்டி வாயில் போட்டுக்கொண்டால் இதமாக இருக்கும். வறட்டு இருமலும் அடங்கும்.

6. மூக்கு, தொண்டை, காதுகளில் ஏற்படும் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, காலில் பாத வெடிப்புகள் வேறு ஏற்படும். பாதவெடிப்புக்கு பயப்படவே தேவையில்லை. சிறிதளவு விளக்கெண்ணெயுடன், தேங்காய் எண்ணெயை சம விகிதத்தில் கலந்து, அதில் சிறிது மஞ்சள் பொடியை போட்டு குழைத்து, பேஸ்ட் போல் செய்து, அதை வெடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகிவிடும்.

7. முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க பாதாம் எண்ணெய் பயன்படுத்துவது உகந்தது.


குளிர் காலத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவு வகைகள்

1. பனி காலங்களில் எண்ணெய்கள் மூலம் செய்யப்பட்ட பலகார வகைகளை அறவே ஒதுக்கிவிடவேண்டும். காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிக்கு இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசியால் செய்யப்பட்ட கஞ்சி, பிரெட் போன்றவற்றை சாப்பிடலாம்.

2. பழங்களில் சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களைச் சாப்பிடவேண்டும். புளிப்புச்சுவை நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, சீத்தாப்பழம் போன்ற பழவகைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளக்கூடாது. வெயில் காலங்களில் நம் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளும் இப்பழங்கள் குளிர்காலங்களில் ஒத்துக்கொள்ளாது. விரிவாக கூறினால், வெயில் காலங்களில் நமக்கு அதிகம் வியர்க்கும். அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரைட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக நாம் புளிப்புச் சுவைமிக்க பழங்கள், மோர் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வோம். ஆனால், குளிர்காலத்தில் இவற்றை நாம் எடுத்துக்கொள்ளும்போது, நம் உடலில் அதிக அளவு அமிலச்சத்து சேர்ந்து சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். பழங்களில் பச்சை திராட்சையும், பச்சை வாழைப்பழத்தையும் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.

3. முக்கியமாக இந்தப் பனிக்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். சுண்டல் வகைகள், முளைக்கட்டிய தானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் சமையலில் மிளகு கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

4. ஒரு நாளில் 2 வேளை உணவில் இரும்புச்சத்து நிறைந்த காய், கீரை, பழ வகைகள் எடுத்துக்கொள்ளலாம். முருங்கை, பேரீட்சை, திராட்சை உள்ளிட்டவற்றையும் சாப்பிடலாம். பழரசங்கள், இளநீர், தர்ப்பூசணி, அய்ஸ் கிரீம்கள் உள்ளிட்ட குளிர்ச்சியான உணவு வகைகளை அறவே தவிர்த்தல் நல்லது.

5. ஊட்டச்சத்துகள் முகுந்த பசலைக்கீரை, வேர்க்கடலை, கேரட், கோழிக்கறி ஆகியவற்றை சாப்பிடலாம். குறிப்பாக கோழி சூப் குளிருக்கு ஏற்ற இதமான ஒன்று என்பது யாவரும் அறிந்ததே.

6. நீர்ச்சத்து நிறைந்த பூசணி, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கன்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.
மேலும் நோய் எதிர்ப்புச்சத்து மிகுந்த உணவுகளான கீரை, கோதுமை உட்கொள்ளுங்கள்.

Saturday, December 20, 2014

ஆப்பிளுக்குப் பதிலாக கேரட்டைப் பயன்படுத்துங்கள்!



மஞ்சள் காமாலையை கேரட் சாறு கட்டுப்படுத்தி விடும். கேரட்டில் உள்ள கால்ஷியம், இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தித் தருகிறது. எல்லா வயதுக்காரர்களுக்கும் அற்புதமான பானம் இது. காரணம், 

உடலில் சளி, கோழை இருந்தால், அவை எல்லாவற்றையும் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியேற்றிவிடும். எல்லா உறுப்புக்களையும் தன்னிடமுள்ள கால்ஷியத்தால் ஊட்டி வளர்த்துப் பாதுகாத்து வருவதற்காகவாவது நன்கு கேரட் சாப்பிட வேண்டும். 

குழந்தைகளுக்கு வரும் குடல் பூச்சித் தொந்தரவுகளுக்கும் கேரட் சாறே போதும். தினமும் காலையில் அருந்தி வந்தால் குளற்புதுக்கள் முற்றிலும் அழிந்துவிடும். 

வயிற்றுப் போக்கு, உணவு செரியாமை, கடும் வயிற்று வலி, பெருங்குடல் வீக்கம் முதலியவைகளுக்கும் கேரட் சாறு உதவுகிறது. இரைப்பையில் புண் ஏற்படாமல் இருக்க, கேரட் ஒரு நல்ல பாதுகாவலனாய் இருந்து உதவுகிறது. மலச்சிக்கல் உடனே குணமாக 25 மில்லி அளவு கேரட்சாறு, 50 மில்லி பசலைக் கீரைச்சாறு ஆகியவற்றுடன் பாதி எலுமிச்சம் பழத்தைக் கலந்து குடித்தால் போதும்,

 பற்கள் ஆரோக்கியமாக இருக்கவும். பல் சொத்தை ஈறுகளில் இரத்தம் முதலியவை வராமல் இருக்கவும். சாப்பாட்டிற்குப் பிறகு ஒரு கேரட்டைக் கடித்துச் சாப்பிடவும். கேரட்டை இப்படி மென்று தின்பதால் உமிழ்நீர் அதிகமாக ஊறுகிறது..

 இது உணவுச் செரிமானத்திற்கு உதவுகிறது. கேரட்டின் தோலுக்கு அருகிலேயே சோடியம், சல்ஃபர், குளோரின், அயோடின் போன்றவை அதிகமாக இருப்பதால் கேரட்டைத் தோல் சீவாமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.

 நன்கு கழுவினாலே போதும். சமையலில் என்றால் சற்றுப் பெரிய துண்டுகளாகச் சீவி, சமைக்க வேண்டும். அப்பொழுதுதான் சத்துக்கள் சரிவரக் கிடைக்கும். நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் இவற்றுக்கு அவித்த கேரட்டைக் கொடுத்தால் அவை ஆரோக்கியமாக வளரும்.

Wednesday, December 18, 2013

பாலியல் வன்முறை உளவியல் காரணம்?



நாம் மனிதர்கள் மத்தியில்தான் வாழ்கிறோமா என்கிற அய்யத்தை அவ்வப்போதைய சம்பவங்கள் உணர்த்துகின்றன. அண்மைக்காலமாக இந்தியாவெங்கிலும் அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிராமங்களில், சிறு நகரங்களில் தொடர்ந்து நடந்துவரும் இத்தகைய வன்முறைகளின் மீது கவனம் கொள்ளாத ஊடகங்கள், தலைநகர் டெல்லியில் நடைபெறும்போது அச்செய்தியை நாடெங்கும் கொண்டுசென்றுவிடுகின்றன.

இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தேறும்போதெல்லாம் அரசியல் காரணங்களை மட்டுமே பேசிவிட்டு, தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்; சுட்டுக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் கூறும் ஊடகங்கள், சமூகக் காரணங்களைப் பேசுவதில்லை. இன்னும் குறிப்பாக மனநல ரீதியிலோ உளவியல் பார்வையுடனோ சுத்தமாகப் பேசுவதில்லை.

சமூகத்தின் ஒழுங்கு குறித்து ஏற்படும் பிரச்சினைக்கு ஏதோவொரு உளவியல் காரணம் கட்டாயம் இருக்க வேண்டும். அதிலும் ஆண்-பெண் உடல் தொடர்புடைய சிக்கல் என்றால் அதில் முதல் காரணம் உளவியலாகத்தான் இருக்கும்.

தமிழக ஊடகங்களில் சமூகம் குறித்த விவாதங்களில் துணிச்சலாகக் கருத்துக் கூறி வருபவர் டாக்டர் ஷாலினி. அண்மையில் டெல்லியில் நடந்த இரண்டாவது பாலியல் வன்முறையைத் தொடர்ந்து அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

``இப்போ பொதுவா உலகத்துல பெண் பலகீனமானவள், அவளை நல்லபடியாக கொண்டு வரணும்னு நிறைய முயற்சி பண்றோம். ஆண் அதைவிட பலகீனமானவன். இன்னும் நாம வழிக்குக் கொண்டு வரணும்ங்றதையும். நாம உணராம விட்டுட்டோம். இதுமாதிரி பிரச்சினை வரும்போதுதான் பேசுறோம் என்று எடுத்த எடுப்பிலேயே அதிரடியாகப் பேசினார். தொடர்ந்து நம் கேள்விகளுக்கு சரமாரியாக பதிலளித்தார்.

அதிகமாக பாலியல் வன்முறை ஏற்பட அடிப்படைக் காரணம் என்ன?

பொதுவாக ஓர் ஆணுக்குத் தன்மேல் நம்பிக்கை இருக்கும்போது, தன்னுடைய ஆளுமை மேல் Confidence இருக்கும்போது என்னுடைய தரம் மிகுதிதான் என்கிற தெளிவு இருக்கும். ஆணுக்கு தன்மீது நம்பிக்கையில்லாதபோதுதான் பிரச்சினை. ஆண், பெண் பாலியல் உறவுங்கிறது, ஒன்று அவருடைய உந்துதல் Instinct, இன்னொன்றைப் பார்த்துக் கற்றுக் கொள்வது Learning. மற்ற ஜீவ ராசிகளுக்கு, அது பாத்துக் கத்துக்கறதுக்கு ஒண்ணுமில்லே. பூச்சிப்புழுக்களுக்கெல்லாம் Brain ரொம்ப சின்னது. அது கத்துக்க முடியாது.
Instinct மூலமாக வாழ்ந்து முடிச்சுடும். அதுக்குப் புதுசா வித்தியாசமாக கத்துக்க வழியே இல்லை. ஆனால், மனிதர்கள் பிறக்கும்போது Instinct இருந்தாலும் எப்படி நிறைவேற்றனும்னு, பெரும்பாலும் பார்த்துத்தான் கத்துக்கிறோம்.

அப்போ, இந்தப் பையன் தவறான விசயத்தப் பாத்துட்டான்னு வச்சுக்குவோம். அவனுக்குக் கிடைக்குற மாதிரி, பெண்ணுன்னா இப்படி இருக்கணும், வளர்ந்த சம்மதிக்கிற பெண்ணோடதான் உடலுறவு கொள்ளணும்னு அவன் பார்த்திருந்தா அவன் கத்துக்குவான். அப்படிப் பார்க்காமல், விகாரமாகவே Sexual காட்சிகளையோ, Sexual வன்முறையையோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல அவன் பாத்துக் கத்துக்கிட்டான்னா, அவன் இப்படிக்கூட செய்யலாம் போலிருக்கே, அப்படிங்கிற விசயம் தெரிஞ்சு போச்சுன்னா, அவன் செய்ய முயற்சி பண்ணுவான். இது எப்படி இந்தப் பையனுக்கோ, பெண்ணுக்கோ தெரிய வருதுன்னு பார்த்தா, அவங்களுக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கலாம். அவுங்க சுற்று வட்டாரத்துல, இன்டர்நெட்டுல, Pornograph பார்த்திருக்கலாம்.

எதுவுமே இல்லைன்னா அவன் வெட்டியா இருக்கிறதுனால, விகாரக் கற்பனையோடு இருக்கலாம். இது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் ஓர் ஆண் தன்னுடைய ஆண்மை மேல நம்பிக்கை இருக்கும்போது பெர்சனாலிட்டி மேல அவனுக்கு கான்பிடென்ட் இருக்கும்போது, ஒரு சுயமரியாதை இருக்கும்போது, என்னோட தரம் உயர்கிறது, என் தரத்திற்கு இதெல்லாம் செய்யக் கூடாது, அப்படின்னு அவன் மனதில் இருக்கும். தன்னைப்பற்றி ஒரு அபிப்ராயமே இல்லாதபோது, வெட்டியா இருக்குற பையனுக்கு, தான் அவமானப்படுறதா, தனக்கு மரியாதை இல்லைன்னு நினைக்கிற மனிதனுக்கு இதுக்கு மேல எனக்கு என்ன இருக்குனு நினைக்கிற ஆண் இது மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சிடுவாங்க.

படித்தவர், படிக்காதவர் பெரிய அதிகாரத்தில் இருப்பவர் என்ற  வேறுபாடின்றி இந்தத் தவறு நடைபெறுகிறது. தன் சொந்த மகளிடமே தவறாக நடந்த பிரச்சினை என்னிடம் வந்துள்ளது.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆண்களின் வக்கிர புத்தினு சொல்லலாமா-?

இல்லை. ஆணுக்கு இயல்பிலேயே பாலியல் இச்சை அதிகம். அவனைப்பற்றி அவனது மனதில் தெளிவான அபிப்ராயம் இல்லைன்னா அவுங்க எந்த லெவலுக்கும் போக வாய்ப்பிருக்கு. எனவே, யாராவது கடிவாளம் போட்டுக்கிட்டே இருக்கணும்.

கடிவாளம் என்றால்......?

கடிவாளம் என்பது வேறு வேறு விதத்தில் தேவைப்படுது. ஒரு பையனுக்கு விளையாட்டு, கல்வி என்று ஏதாவது ஒன்றில் ஈடுபாடு இருக்குமானால் பாலியலில் கவனம் செலுத்த மாட்டான். ஆணுக்கு இருக்கும் நேரத்தை -_ சக்தியை நல்ல முறையில் பயன்படுத்தினால் தனிமையில் ஈடுபடும் வாய்ப்புக் குறையுது. தேவையில்லாத சிந்தனைகள் வளர்வது தடுக்கப்படுகிறது. வீட்டில் இருப்பவர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியா இருக்கணும்.

இன்று இணையத்தில் நிறைய Pornograph படங்கள் இலவசமாகவே பார்க்கும் வசதி உள்ளது. எல்லா விதத்திலயும் பார்த்துக் கத்துக்கிறாங்க. பார்த்ததைச் செயல்படுத்தும் எண்ணம் உண்டாகிறது. இந்தப் பிரச்சினை உலகம் முழுவதும் பரவிக் கொண்டு உள்ளது. எல்லோரும் சேர்ந்துதான் இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வரணும்.

தற்போது பெண்கள் அணியும் கவர்ச்சிகரமான உடைகள்தான் ஆண்களைத் தூண்டுவதாக உள்ளது என்னும் கருத்து பற்றி.....

ஒரு பெண் ஆபாசமா உடை அணிந்து செல்லும்போது, ஆண்கள் பின்தொடர்ந்து வருவார்களே தவிர, தொடுவதற்கு முயற்சி செய்ய மாட்டாங்க. ஏதாச்சும் நம்மளப் பண்ணிடுவாரோ என்ற பயம்தான் இருக்கும். அடக்க ஒடுக்கமா இருக்கிற பொண்ணுங்களைத்தான் Abuse பண்ணுவாங்க. ஆண்கள் பெண்கள் முகபாவனைக் குறிப்பைத்தான் பார்ப்பார்களே தவிர, உடைகளை அல்ல.

எனவே, பெண்கள் Body Language-_ல கவனமா இருந்தாலே போதும். பெண்கள் Body Language- கான்பிடென்டா, தைரியமா இருந்தா ஆபத்து வராது. உடை என்பது ஒரு பிரச்சினை அல்ல.

இன்றைய சமூகத்தின் கட்டமைப்பை மீறி தூண்டப்படக் காரணம்?

தன் ஆசைகளை உடனே நிறைவேற்றிக் கணும்ங்கிற நினைப்பு வந்துடுது. பொறுமையா இருக்கணும்ங்கற புரிதல் இல்லாமல் போகிறது. கேட்டதும் தேவைகள் எல்லாமே கிடைத்து விடுகிறது. கடைக்குச் சென்றால் எல்லாம் வாங்கிடலாம். இல்லைங்கிறதே இல்லைனு ஆகிவிட்டது. நினைத்ததும் எல்லாவற்றையும் சாதிக்க முடியுது. கஷ்டமே இல்லாமல் கிடைக்கிறது. எனவே சுயகட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது.

இதில் பெற்றோரின் பங்கு ஏதேனும் உள்ளதா? சரியாக வளர்க்கத் தவறியதுதான் காரணமா......?

பெற்றோர் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுவதே கிடையாது. பெண் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோர் ஆண் குழந்தைகளை அப்படி வளர்ப்பதில்லை. அவர்கள் மொழியிலேயே பிரச்சினைகளையும் _ எதிர்கொள்ளும் விதத்தையும் கற்றுக் கொடுக்கத் தவறுகிறார்கள். சில பெற்றோர் சொல்லி வளர்க்கின்றனர். ஆண் குழந்தைகளைக் குறிப்பிட்ட வயது வந்ததும் எதுவும் சொல்லி வளர்ப்பதில்லை. பெண் குழந்தைகளுக்காவது பருவ வயதை அடையும்போது சில விஷயங்களைக் கற்றுக் கொடுப்பர். ஆண் குழந்தைக்கு எதுவும் இல்லை. எப்ப, எப்படிச் செயல்படுத்தணும்னு சொல்லித் தரணும். சொல்லித் தர பெற்றோர் வெட்கப்படுகின்றனர். இதனால் ஆணின் மனதில் அறியாமை உள்ளது. மனநிலையில் தெளிவில்லாமல் போயிடுது. தவறுக்குக் காரணமாகி விடுகிறான். பெண் குழந்தையை அம்மா, பாட்டி train பண்ணிவிடுவது போல் ஆண் குழந்தை மீது கவனம் செலுத்துறதில்லை. எனவே, ஆண் குழந்தைகளும் கஷ்டப்படுறாங்க. மத்தவங்களையும் கஷ்டப்படுத்துறாங்க.

எந்த மாதிரி பயிற்சி கொடுக்க வேண்டும்?

உலகத்தை - குடும்பத்தைக் காப்பாத்த வேண்டியது ஆணின் கடமை. உன்னை நம்பி ஒரு பெண் வருவா அவளையும் நீ நல்லவிதமா காப்பாத்தணும்னு, உன் குழந்தைகளை சந்தோஷமா வச்சிக்கணும்னு சொல்றதில்ல, அப்பா அம்மாவ பார்த்துக்கணும்தான் சொல்வோம். பெண்களும் அப்பா அம்மாவைப் பார்த்துக்கலாமே. ஆண் மட்டும் வேலைக்குப் போகணும். சம்பாதிக்கணும். கார் வாங்கணும், அம்மா அப்பாவைப் பார்த்துக்கணுமா? மற்றொன்று அவனோட பிரக்ஞையே அவனுக்கு இல்ல. இரண்டாவது அவளோட Sexuality பத்தி அவனுக்கு எதுவுமே தெரியாது. அதனால அவன் நிறைய, ஏடாகூடமா போய் மாட்டிக்கிடுறாங்க. அதுக்கப்புறம் அவனைத் திட்டுறோம் இப்படி நடந்துக்கிட்டியே கரெக்டான்னு. இப்படி நடந்துக்கறதுக்கு அறியாமைதான் முக்கியமான காரணம். அதனை நாம் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.
திருமணத்திற்கும் பாலியல் வன்முறைக்கும் தொடர்பிருக்கிறதா?
அதுக்கும், இதுக்கும் சம்பந்தம் இல்லை.  பாலியல் குற்றத்துல மாட்டின அந்த 22 வயது பையன் திருமணமானவன்தான். அவனால சரியான முறையில உறவு கொள்ள முடியாததால், Candle Bottle உள்ளே சொருக வேண்டிய அவசியம் இல்லைல்ல. இயலாமைதான். இயலாமை இருக்கிறதாலதான் பரீட்சைப் பொருளா வைத்து ஏடாகூடம் பண்றாங்க.

இப்போ பொதுவா உலகத்துல பெண் பலகீனமானவள், அவளை நல்லபடியாக கொண்டு வரணும்னு நிறைய முயற்சி பன்றோம். ஆண் அதைவிட பலகீனமானவன். இன்னும் நாம வழிக்குக் கொண்டு வரணும்ங்றதையும். நாம உணராம விட்டுட்டோம். இதுமாதிரி பிரச்சினை வரும்போதுதான் பேசுறோம்.

திருமணமானவருக்கே அப்படி ஓர் எண்ணம் குழந்தைகள் மீது வருகிறதே?

பொதுவாகவே, ஆணின் மூளையானது வக்கிரங்களுக்குட்பட்டதுதான், Sexual drive அதிகம். ஏதேனும் ஒரு கட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதான் கரெக்டா அவன் வருவான்.

வீட்டுக்கு அடங்காமல் போற பசங்களுக்குத் திருமணம் செய்து வைத்தால், சரியாகிவிடும் என்கிறார்களே? உண்மையா?

நம்ம ஊர்ல வந்து ஏதாவது பெண்ண பலி கொடுத்துவிட்டால் சரியா வந்திடும்னு நினைக்கிறாங்க. ஆனால், எந்தக் கடவுளுக்கும் பெண்ணைப் பலிகொடுக்கவே மாட்டாங்க. ஆடு, மாடுன்னு ஆணைத்தான் பலி கொடுப்பாங்க. ஒரு பெண்ணைப் பலிகொடுக்கிற சமுதாயம் உருப்படாது.

இருந்தாலும் ஆக்க சக்தியை எவனாவது அழிப்பானா? விதை நெல் இருக்கிற வரைக்கும்தானே அடுத்த தலைமுறை உருவாகும். விதை இருக்கிற நெல்லை எரிச்சுட்டா.. எவ்வளவு முட்டாள்தனம். உட்கார்ந்திருக்கிற கிளையை வெட்டுவது போல் ஆகும். பையன் சரியில்லைன்னா அதைச் சரிக்கட்டணும். அதை விட்டுட்டு யார் தலையிலும் கட்டிட்டு Responsibility கிடைக்கலன்னு சொல்றது  தவறானதுதான். எல்லோருக்கும் திருமணமானது, ஒரு பொண்ணு வந்தா அடங்கிடுவான். இல்லைன்னா, எனக்கப்புறம் யார் வந்து பார்ப்பார்கள்,
அந்தக் காலத்துல பெண்கள் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன், ஏழேழு ஜென்மத்துக்கும் ஒரே புருஷன்தான். இந்தக் காலத்துப் பெண்கள் கணவன் சரியில்லை என்றால், சரிதான் போடா நீ கிளம்புன்னு சொல்லிவிடுகிறார்களே. பெண்கள் எல்லாம் Advance  ஆகிட்டார்கள். ஆண்களும் பெரியவர்களும்தான்  Advance ஆகல.

குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதை எப்படித் தவிர்ப்பது?

முதலில் அதை, குழந்தைக்கு உடலோட பாகங்களைப் பற்றி தெளிவா வெட்கப்படாமல், கூச்சப்படாமல் சொல்லணும். இது ஆண்குறி, இது பெண்குறின்னு, அவங்கவங்க வீட்டுல என்ன செல்லப் பெயரைச் சொல்றாங்களோ, அதை use பண்ணி சொல்லித்தரணும்.

அதுல வெட்கப்படுறதுக்கு ஒண்ணும் இல்லைங்கிறதைச் சொல்லணும். இந்தப் பாகத்தைச் சுத்தமா வச்சுக்கனும்னு சொல்லித்தரணும். அவுங்க என்ன Language பேசுறாங்களோ, அதற்கேற்ற மாதிரி வார்த்தைகளை நாம அந்தக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரணும். பெண் குழந்தைகளின் உறுப்பை யாரும் தொடக் கூடாது. அம்மா அல்லது பாட்டிதான் தொடணும். அப்பாகூட தொடக்கூடாது. வேறு யாரும் தொடக்கூடாது.

தொட்டால் என்னிடம் வந்து சொல்லணும்ங்கிறத ஒன்றரை வயதிலிருந்தே சொல்லித் தரணும். குழந்தைகளுக்கு நல்லாத் தெரியும். யாராவது தொட்டால் சொல்லிடுவாங்க. பெரும்பாலான பிரச்சினை, நமக்குத் தெரிஞ்சவங்கதான் செய்வாங்க. நமக்குத் தெரியாத யாரோ கிட்னாப் பண்ணிட்டுப் போயி, ரேப் பண்ண மாட்டாங்க. கூடவே இருக்குற யாராவது, செய்யறதுனால, கூட இருக்குற எந்த ஆணா இருந்தாலும், எச்சரிக்கையா இருக்கணும்.

கணவனாகவே இருந்தாலும் எச்சரிக்கையாகவே இருக்கணும். ஏன்னா, அப்பாவால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளையும் நாம் பார்க்கிறோம். ஒட்டு மொத்தமா ஏரியாவிலே சின்ன பசங்க, பெரிய பசங்க, வயசானவங்கன்னு பாகுபாடே இல்லாமல் யார்கிட்டேயும் குழந்தையைத் தனியே விடாமல் யாரிடமும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

இது பெண்குழந்தையைப் பாதுகாக்க வேண்டியவங்க, பாதுகாக்க நாம்  செய்ய வேண்டிய வேலை. ஆண் குழந்தையை டிசைன் பண்ணும்போது, நீ கெட்டிக்காரன், புத்திசாலி என்று அவனது தன்னம்பிக்கை (Confident) யை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவன் தரம் அதிகமாகிவிடும். அதற்கு ஏற்றாற்போல் அவன் நடந்து கொள்வான். தன்னம்பிக்கை இல்லாதபோதுதான் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபடுகிறான்.

ஆண் பிள்ளைகளை இன்றைக்கு உள்ள பெற்றோர்கள் வளர்க்கும் முறைதான் பாலியல் வன்முறையைத் தூண்டுகிறது என்று சொல்லலாமா?

இப்போதெல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் பகிர்ந்து கொள்வதில்லை. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆளுக்கொரு I-pad அய் வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தை  I-pad அய் நோண்டிக் கொண்டிருக்கிறது. அப்போது பிராக்டிகலாகப் பார்க்க வாய்ப்புள்ளது. தனிமையும் புத்திசாலித்தனமும் வக்கிரமும் சேரும்போது அந்தக் காம்பினேஷன் ரொம்ப மோசமானது. எனவே, குழந்தைகளிடம் அதிக நேரம் செலவு செய்து நிறைய விஷயங்களைச் சொல்லித் தரவேண்டும். அவர்களது மனதைப் புரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். மனம் என்பது ஒரு குரங்கு. அதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் பயிற்சியை _ பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

பாலியல் கல்வி இன்றைய குழந்தைகளுக்கு அவசியமா?

ரொம்ப ரொம்ப அவசியம்.

இது உளவியல் ரீதியா குழந்தைகளை ஒரு நல்ல நிலைக்கு எடுத்துக்கொண்டு வருமா?

ஒரே நாளில் பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுக்க முடியாது. ஒரு வயதில் இருக்கும்போதே நாம் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லித் தரக்கூடிய விஷயம். அட்லீஸ்ட் பெற்றோர்கள் சொல்லித்தரவில்லை என்றால், கல்வித் திட்டத்திலாவது நாம் கொண்டு வரவேண்டும். அதுவும் இல்லையென்றால், நாம் ஊடகங்கள் வாயிலாகச் சொல்லித் தரவேண்டும். எதுவுமே, அப்பா, அம்மாவும் சொல்லித் தரமாட்டாங்க. பள்ளியிலும் சொல்லித் தரமாட்டங்கன்னா, ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி அந்தக் குழந்தைகள் அறியாமையால் தவறான கருத்துகள் வைத்திருக்கிறார்கள். அதனால்  நிறைய பிரச்சினைகள் வரும். ஓர் ஆணுக்கு வக்கிரம் இருந்தாலும் அது உலகத்தையே பாதிக்கும். அதனால் நாம் போர்க்கால அடிப்படையில் ஆண்களின் புத்தியைத் திருப்பித் தரணும் என்பது ரொம்ப அவசியமாக இருக்கிறது.

பாலியல் கல்வி முறை என்று நேரடியாக இல்லையென்றாலும் வேறு ஏதாவது வழிமுறைகள் உள்ளதா?

பாலியல் கல்வி என்று தனிப்பட்ட முறையில் சொல்வது தவறு. இது ஒரு வாழ்க்கைக் கல்வி. உடம்பு என்பது என்னவென்று நமக்குத் தெரிய வேண்டும். வாழ்க்கை என்றால் என்னவென்று தெரிய வேண்டும். கல்யாணம்னா, செக்ஸ்னா  என்னவென்று இயல்பாக எல்லாரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இப்போது வாக்கிங் என்பது ரொம்ப முக்கியம் என்று சொல்கிறார்கள். காட்டுவாசிக்கிட்டப் போயி வாக்கிங் ரொம்ப முக்கியம்பான்னு சொன்னா அவன் சிரிப்பான். அதெல்லாம் நான் செய்துக்கிட்டு இருக்கேன். இதப்பத்தி நீ பேசாதே என்று சொல்வான். இயல்பாக இருக்கிற விஷயத்தை நாம் தனிப்பட்ட முறையில் (ஸ்பெஷல்) செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கு. இப்பக் காட்டுவாசிங்க இயல்பாகவே பேசுவாங்க. இப்படிச் செய்தால் இப்படியாகும், குழந்தை இப்படிப் பிறக்கும், ஆணும் பெண்ணும் இப்படி இருப்பாங்க என்று இயல்பா பேசுற விஷயத்தை மறைத்து மறைத்தே நாம் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கிவிட்டோம். இதுமாதிரி இல்லாமல் இயல்பாக இருந்தால் பிரச்சினைகள் சரியாகும்.

உளவியல்ரீதியான பயிற்சி ஏதாவது.....?


உளவியல்ரீதியான பயிற்சி என்பது இன்றைக்கு நிலைமையில் உளவியலுக்கான மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவுங்க சொல்லித் தரமாதிரி இருக்கு. ஆனால், காலம்காலமாக சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் இந்த உளவியல் அடிப்படைகளைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருந்திருக்காங்க. திருக்குறள் என்பது உளவியல் ரீதியான பயற்சி மாதிரிதான். Personality development manual மாதிரி திருக்குறள் இருக்கிறது. நாலடியாரும் இருக்கிறது. இன்னும் எவ்வளவோ நூல்கள் நம்மிடம் இருந்தும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறோம்.

உளவியல் ரீதியாக மனசுதான் நமக்கு ரொம்ப  முக்கியம். இல்லை என்றால் நாம் மிருகம்தான். மனசு மட்டும்தான் நம்மை வித்தியாசப்படுத்துகிறது. ஆனால், அந்த மனதைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டால் எல்லாம் நல்லபடியாக இருக்கும். அப்படி இல்லையென்றால் மிருக லெவலுக்குப் போய்விடுவோம். அதைவிட மோசமானது, மிருகங்கள் இதுமாதிரி செய்யாது. ஆனால் நாம் செய்வோம். புத்தி சொன்னதைத் தப்பாகப் பயன்படுத்தும்போது ஆபத்தாக ஆகிவிடும். நமக்கு மனதை ஆக்கப்பூர்வமாக வைத்துக் கொண்டிருப்பதற்கான வழிகாட்டுதல் இருந்துக்கிட்டே இருக்க வேண்டும். அதில்தான் நாம் கோட்டை விட்டு விடுகிறோம். நம்ம பசங்களுக்கு எல்லாத்தையும் சொல்லித் தந்துவிட்டு Moral scienc அய்ச் சொல்லித் தரமாட்டோம். குழந்தைகளுடன் நேரத்தைச் செலவு செய்வது கிடையாது.  தெளிவு, அறிவு, ஞானம், சரியான Learning  இருந்தால் சரியாகிவிடும். தெளிவு கடையில் கிடைக்காது. நாம்தான் சொல்லித் தரணும்

- மனநல மருத்துவர் ஷாலினி  பேட்டி
- சந்திப்பு : செல்வா


நன்றி : Unmaionline 2013 மே 01-15

Sunday, June 23, 2013

தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களுக்கு நல்லதா?

உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது.
மேலும் குழம்பு, ரசம், மோர் போன்ற திரவ உணவுகள் மூலமும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்துவிடுகிறது.
எனக்குத்தாகமே எடுப்பதில்லை. அதனால் தான் தண்ணீரே பெரும்பாலும் குடிப்பதில்லை என சிலர் ஆறு மணி நேரத்துக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள் இது தவறு.
ஏனெனில் ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலிலிருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும்.
ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால்தான் இயல்பு நிலை என்று அர்த்தம். இதய நோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை உடலுக்கு நல்லது. நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதற்கு மேல் உடலுக்கு குடிநீர் தேவை இல்லை.
சிறுநீர் கழிக்கும் இடைவெளி
ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி வரை நேரத்துக்கு ஒரு முறைதான் சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையோ சிறுநீர் கழிக்க நேர்ந்தால் அதை அடிக்கடி எனக் கொள்ளலாம்.
அடிக்கடி சிறுநீர் கழித்தால் மருத்துவரிடம் அவசியம் ஆலோசனை பெற வேண்டும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...