Wednesday, November 29, 2017

சமூகநீதிக்கான பாதையை அமைத்தவர்களுள் முதன்மையரான ஷோதிபாபூலே (1827-1890) 127ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

 
ஜாதியக்கொடுமைகள் தலைவிரித்தாடிக்கொண்டு இருந்த சூழலில் மகராஷ்டிராவின் புனே நகரில் ஜோதி பாபூலே பிறந்தார்.  ஓரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிபாபூலே, நண்பர் ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரை சூத்திரன் என்று கூறி திருமணத்தில் அனைவரின் முன்பும் அவரை அவமானப்படுத்தினர். இதனால் தலை குனிந்துவெளியேறிய ஜோதிபாபூலே இந்து மதசாஸ்திர நூல்களை படிக்க ஆரம்பித்தார். அதே போல் ஆங்கிலம் மற்றும் பிரான்சு நாட்டு மொழியைக் கற்று அந்த நூல்களையும் படிக்க ஆரம்பித்தார்.

இதன் மூலம் பொதுஇடங்களில் பகிரங்கமாக விவாதம் நடத்தத் துவங்கினார். உடலுழைப்பை கொட்டித் தரும் மக்களை, சூத்திரர் என இழிவுபடுத்தி சோம்பிக் கிடக்கிற வேலையைத் தான் பார்ப்பனர்கள் செய்கிறார்கள் என்றார்.  மராட்டியப் பார்ப்பனர்கள் அதிகம் பேர் வணங்கும் தத்தார்ரேயர் (சிவன், பிரம்மன் விஷ்ணு ஒன்றாக இணைந்த ஓருருவம்) என்ற தெய்வத்திற்கு கிண்டல் செய்யும் பாணியில் கடிதம் ஒன்றை எழுதினார்.


பெறுநர் : சிரஞ்சீவி தத்தாத்ரேயா

தந்தை பெயர் : ஆதி நாராயணன்

இடம் : எங்கும் பார்க்கலாம்

அன்புள்ள தத்தாத்ரேயர் அவர்களுக்கு,

பார்ப்பனர்கள் மூலமாக உலகுக்குச் சொல்லப்படும் உங்கள் மந்திரங்களின் அற்புதங்களை நீங்கள் நேரடியாகவே செய்து காட்டி இந்த ஆங்கிலேயரையும், பிரஞ்சுக்காரரையும் வாயடைக்கச் செய்ய வேண்டும். என்னைத் தவிர்க்கவோ, என்னிடம் இருந்து தப்பிக்கவோ முயல வேண்டாம். இந்த அறிவிப்பு கண்ட நாளிலிருந்து ஆறு காலத்திற்குள் தாங்கள் நேரில் ஆஜராக வேண்டும். அப்போது நான் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களும் உங்களை எங்கும் நிறைந்த ஆதி நாராயணனின் அதிகாரபூர்வ அவதாரம் என மதிப்போம். அப்படிக் காட்சியளிக்க, தாங்கள் தவறினால் இந்த நாட்டின் மகர்களும், மாங்குகளும், சகலகலாவல்லவர்கள் என அழைத்துக் கொள்ளும் உங்கள் பார்ப்பனர்களின் உண்மையான யோக்கியதையை அம் பலப்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதை அன்புடன் அறியவும்.

இப்படிக்கு,

தங்களைப் பற்றிய பிரச்சாரப் பெருமையின்

நிஜத்தை சோதிக்க விரும்பும்

ஜோதிராவ் கோவிந்தராவ் பூலே

 கல்வி அறிவைத் தராமல் மக்களை ஒடுக்கும் வேலையைச் செய்த பார்ப்பனர்களை கடுமையாகச் சாடினார். சத்திய சோதக் சமாஜ் எனும் அமைப்பை உருவாக்கி செயல்பட ஆரம்பித்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் இழிநிலை போக கல்வியறிவே சிறந்த கருவி என உணர்ந்தார். தன்னுடைய மனைவி சாவித்திரிபாய்பூலேவுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட, ஏன் இந்தியாவிலேயே பெண்களுக்கான முதல் பள்ளியை தொடங்கினார். உயர் ஜாதி மக்கள் கலவரம் செய்தார்கள்; அவர் போகிற பொழுது கல்லெறிந்தார்கள். என்றாலும், தனது கொள்கையில் இருந்து விலகாமல் உறுதியாக நின்றார்.

பெண்கள் கல்வியறிவு பெறுவது சாத்தியமாக ஆரம்பித்தது.  1851ஆம் ஆண்டு ஜூலையில் புனே புறநகரான நல்புதாவர் பேட், 1851ஆம் ஆண்டு செப்டம்பரில் ராஸ்தா பேட், 1852ஆம் ஆண்டு மார்ச்சில் விட்டல் பேட் போன்ற இடங்களில் பெண்கள் பயிலும் கல்விக் கூடங்களை நிறுவினார் ஜோதிராவ்பூலே.

சாவித்திரிபாய் அக்கல்விக்கூடங்களில் முதல் பெண்ணாசிரியராக பணியாற்றினார். நடந்து போகிற பொழுது ஆதிக்க ஜாதியினர் கற்களையும், சாணத்தையும் வீசினர், ஜோதிபா பூலேயிடம் புலம்பியதும் "அழுக்கான ஆடைகளை அணிந்து கொண்டு போ, பின் அங்கே போய் நல்ல ஆடைகளை அணிந்து கொள்!" என்றார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுக் கிணறுகளில் தண்ணீர் தரமறுத்த போது தனது வீட்டிற்கு உள்ளேயே கிணறு வெட்டி அதிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள வழிவகை செய்தார்

இளம் வயதில் விதவையான பெண்களின் தலையை மொட்டையடித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது; அந்த மொட்டையடிக்கும் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்ய மாட்டோம் என அறிவிக்கச் செய்தார்.

மூடநம்பிக்கை, கல்வியறிவின்மை, சுயமரியாதை இன்றி இருத்தல், போன்றவைதான் நமக்கு எதிரிகளாக இருக்கின்றன என்று கூறி, அதனை ஒழிக்க தனது வாழ் நாள் முழுவதும் பிரச்சாரம் செய்து மகாராஷ்டிரத்தில் சமூகநீதிக்கு வித்திட்டவர்களின் ஜோதிபா பூலேவும் ஒருவராவார்.

அரசுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக சதி! மாயாவதி குற்றச்சாட்டு


பெங்களூரு, நவ. 28 -தாழ்த் தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் உள்ளிட்ட வெகுஜன மக்களுக்கு பாபா சாகேப் அம்பேத்கர் உறுதிப்படுத்திய இடஒதுக்கீட்டு முறையை மத்தியில் ஆளும் பாஜக ஒழித் துக்கட்ட முயற்சிப்பதாக பகு ஜன் சமாஜ் கட்சியின் தலை வரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள்முதல்வருமான மாயாவதி குற்றம் சாட்டினார். இதற்காகவே, மத்திய பாஜக அரசானது, அரசுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்த்து வரு வதாகவும் மாயாவதி கூறினார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தென்னிந்திய மாநிலங்களுக் கான மாநாடு பெங்களூருவில் மாயாவதி தலைமையில் நடை பெற்றது. இந்த மாநாட்டில் மாயாவதி பேசியிருப்பதாவது: நாட்டில் முன்பை விட ஜாதி, மத மோதலை தூண்டிவிட்டு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் அடங்கிய வெகுஜன மக்களை பிரிக்கும் வேலை, வேகமாக நடந்து வருகிறது. அமைதியான மாநிலமாக இருந்த உத்தரப் பிரதேசத்தில் ஜாதி- மதக் கல வரத்தை தூண்டும் வேலையை பாஜக செய்து வருகிறது. பாஜக -வின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நான் பேச முயற்சித்தபோது, பாஜக-வினர் தடுத்து நிறுத்தினர்.

ஜனநாயக நாட்டின் முக்கிய மான அவையில், தாழ்த்தப் பட்ட மக்களின் அவல நிலையை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்குக்கூட உரிமை இல்லை. பாபாசாகேப் அம்பேத்கர் 60 ஆண்டுகளுக்கு முன், நாட்டு மக்களின் நல னுக்காக பேசமுயற்சித்தபோது, அவரைப் பேச அனுமதிக்க வில்லை. அதனாலேயே அவர் தனது அமைச்சர் பதவியிலி ருந்து விலகினார். அம்பேத் கரின் வழியில் நானும் எனது எம்.பி. பதவியை விட்டு வில கினேன். பாபாசாகேப் அம்பேத் கரும், பகுஜன் சமாஜ்கட்சியும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ருக்காக மட்டுமே போராட வில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகவும், சிறு பான்மையினருக்காகவும் போராடி வருகிறது. ஆனால் பாஜகவும், காங்கிரசும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினரை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து பிரிக்க முயற்சித்து வருகின்றன.

பாபாசாகேப் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட் டோர் உள்ளிட்ட வெகுஜன மக்களுக்கு பெற்றுதந்த இட ஒதுக்கீடுமுறையை ஒழித்துக் கட்ட பாஜக முயற்சித்து வரு கிறது. அதற்காகத்தான் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத் துத் துறைகளையும் தனியாருக் குதாரை வார்த்து வருகிறது. இந்த போக்கினால் தாழ்த்தப் பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் வெகு வாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த போக்கை வெகுஜன மக்கள் அனைவரும் இணைந்து தடுக்க வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர் பெற் றுதந்த அரசியல் உரிமையை நிலைநாட்டப் பாடுபட வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tuesday, November 28, 2017

திராவிடர் கழகம் - திமுக உண்டானதற்கு முன்னோடி நீதிக்கட்சியே!

நீதிக்கட்சி 101ஆம்ஆண்டு விழாவில் இனமான பேராசிரியர் க.அன்பழகன் உரை



சென்னை, நவ. 27  திராவிடர் கழகம், திமுக உண்டானதற்குக் முன்னோடி நீதிக்கட்சியே  என்றார் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்.

18.11.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நடைபெற்ற நீதிக்கட்சி 101 ஆம் ஆண்டு விழாவில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.

நீதிக்கட்சி முன்னோடியான வெள்ளுடை வேந்தர் டாக்டர் பிட்டி தியாகராயர், சி.நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்  உருவப்படங்களை திறந்து வைத்து உரையாற்றுகையில் கூறியதாவது:

நீதிக்கட்சியின் 101 ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு ரையாற்றவிருக்கின்ற தமிழர் தலைவர் வீரமணி அவர்களே, இந்த இயக்கத்தில் ஈடுபட்டு நம்முடைய அருமையான கொள்கைகளை விளக்கித் தந்திருக்கின்ற பி.டி.ஆர்.பி. தியாகராசன் எம்.எல்.ஏ., அவர்களே,

தலைமையுரையாற்றிய முனைவர் இராமசாமி அவர்களே, வரவேற்புரையாற்றிய முனைவர் மங்கள முருகேசன் அவர்களே,
நன்றியுரையாற்றவிருக்கின்ற முனைவர் தானப்பன் அவர்களே, குமரேசன் அவர்களே,

இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கின்ற பெரி யோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, அருமைத் தோழர்களே!

இந்நிகழ்வு நான் எதிர்பாராத ஒரு சிறப்பான நிகழ்ச்சி யாக அமைந்திருக்கிறது. மறைமலையடிகள், திரு.வி.க. போன்ற பெருமக்களின் பெயரைச் சொல்லி பழக்கப் பட்டிருக்கிற நான், நம்முடைய இயக்கத் தலைவர்களின் பெயரை அடிக்கடி சொல்லக்கூடிய ஒரு நல்ல நிலையை இந்த விழாவில் நான் பார்க்கிறேன்.

நீதிக்கட்சித் தலைவரின் படங்களைத் திறந்து வைத்தது எனக்குக் கிடைத்த பெருமை!

நம்முடைய தலைவர்கள், நீதிக்கட்சித் தலைவர்கள் என்று சொல்லக்கூடிய தியாகராயர், நடேசனார், டி.எம்.நாயர், பெரியார், அண்ணா ஆகியோரின் படங்களைத் திறக்கின்ற வாய்ப்பு எனக்குத் தரப்பட்டது. அவர் களுடைய படங்களை நான் திறந்து வைத்தேனே தவிர, உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அவர்களைப் போல இந்த இயக் கத்திற்கு ஆக்கம் கொடுத்தவர்கள், துணை நின்றவர்கள், வழிகாட்டியவர்கள் வேறு யாரும் இல்லை. அந்தத் தலைவர்கள்தான் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னால், நீதிக்கட்சியைத் தொடங்கி வைத்த தலை வர்கள், நீதிக்கட்சியினுடைய கொள்கை விளக்கத்தை செய்த தலைவர்கள், திராவிட இயக்கம் என்றால், என்ன என்று விளக்கியவர்கள். எனவே, அப்படிப்பட்ட தலைவர்களின் படங்களை நான் இன்றைக்குத் திறந்து வைத்திருப்பது எனக்குக் கிடைத்த பெருமை.

நீதிக்கட்சித் தலைவர்கள் இல்லையென்றால்....

அந்தத் தலைவர்கள் இல்லை என்று சொன்னால், இன்றைக்கு நம்முடைய இயக்கம் இல்லை. நம்முடைய இயக்கம், இந்தக் கொள்கையில் உள்ள இயக்கம் -  திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகள் இந்த நாட்டில் தலையெடுத்திருக்க முடியாது. அவர்கள் இருந்தார்கள், வாழ்ந்தார்கள், வழிகாட்டினார்கள், விளக்கம் சொன்னார்கள் - அதனுடைய விளைவு - இன்றைக்கு நாமெல்லாம் அந்த இயக்கத்தினுடைய கொள்கையைப் பின்பற்றி, அதனை உள்ளத்தில் ஏற்றிக்கொண்டு, மக்களிடையே எடுத்துச் சொல்கிறோம்.

உளமார்ந்த நன்றி

எனவே அப்படிப்பட்ட பெருமக்கள் நம்முடைய வழிகாட்டிகளான அவர்களுடைய படங்களைத் திறந்து வைத்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்காக நான் என்னுடைய உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் அதிகம் பேச முடியாத ஓர் இக்கட்டான நிலையில், இங்கே வந்து அமர்ந்திருக்கிறேன். எனவே, இக்கட்டான அந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பது எனக்கே தெரியவில்லை. எனவே, அப்படிப்பட்ட நிலைகாரணமாக, நான் அதிகமாகப் பேச முடியா விட்டாலும் கூட, என்னுடைய உளமார்ந்த உள்ளத்தை உணர்ந்த நீங்கள், அதனை உணர்ந்துகொண்டு ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்பி, என்னுடைய உரையை நான் முடித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை செயல்படுத்த வலியுறுத்தி எழுச்சிக்கோலம் பூண்ட மாநாடு!



சென்னை, நவ.27 தந்தை பெரியாரால் அறிவிக்கப்பட்டு நடைபெற்ற ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் 60 ஆம் ஆண்டு விழா, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று (26.11.2017) மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.

`திராவிட வீரன்' நாடக அரங்கேற்றம்

மாநாட்டின் முதல் நிகழ்வாக உரத்தநாடு கருங்குயில் கணேசன் கலைக் குழுவினரின்  பகுத்தறிவுப் பாடல்கள்,   கலைநிகழ்ச்சியைத் தொடர்ந்து தெற்கு நத்தம் சித்தார்த்தன், பெரியார்நேசன் குழுவினர் வழங்கும் ‘திராவிட வீரன்’ வீதி நாடகம் நடைபெற்றது. தமிழர் தலை வர் ஆசிரியர் பங்கேற்கும் திருக்காட்டுப் பள்ளி நிகழ்வில் அரங்கேற்றம் செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்ட `திராவிட வீரன்' நாடகம் இம்மாநாட்டில் அரங் கேற்றம் செய்யப்பட்டு, பார்வையாளர் களின் பாராட்டினையும் பெரும் வரவேற் பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தந்தை பெரியார் கண்ட கனவான தமிழர்களின் இழிவை ஒழிக்கும், ஜாதியை ஒழிக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை செயல்படுத்த வலியுறுத்தும்   மாநாட்டில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள்,, திராவிட இயக்க தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அறிஞர் பெருமக்கள் இரண்டாம் நாள் மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.
கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுகவுரையாற்றினார்.

நூல் வெளியீடு

கோ.கருணாநிதி எழுதிய 69% இட ஒதுக்கீடு சட்டம் ஏன்? எப்படி? எவரால்? புத்தகத்தை நீதியரசர் ஏ.கே.ராஜன் வெளியிட்டார். மதிமுக பொருளாளர் ஈரோடு அ.கணேசமூர்த்தி பெற்றுக்கொண்டார். மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகங்கள் அளிக்கப்பட்டன. ஒரு நூலின் விலை 60. இரு புத்தகங்கள் ரூ.100க்கு அளிக்கப்பட்டன. ஏராளமானவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிட மிருந்து புத்தகங்களை பெருமகிழ்வுடன் பெற்றுக்கொண்டார்கள்.

நவம்பர் 25, 26 ஆகிய இரண்டு நாள் மாநாட்டில் இயக்க வெளியீடுகள் ரூ.34,439 மதிப்பில் விற்பனை ஆனது.

தீர்மானங்கள்


மாநாட்டின் தீர்மானங்களை மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்  முன் மொழிந்தார். மாநாட்டில் 4 முக்கிய தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.

அனைத்து தீர்மானங்களையும் கருத்துரையாற்றிய அனைத்துக் கட்சித் தலைவர்கள், அறிஞர் பெருமக்கள் வழிமொழிந்து தீர்மானங்களை செயல் படுத்துவதில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதி கூறினார்கள். மேலும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வெற்றி விழாவிலும் பங்கேற்போம் என்று குறிப்பிட்டார்கள்.

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின்படி தமிழக அரசின் ஆகமப் பயிற்சி பெற்றவர்களில் மாநாட்டுக்கு வருகை தந்தவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி பாராட் டினார்.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் திருவண்ணாமலை அரங்க நாதன், மதுரை சிவஞான பிரகாஷ், திருச்சி சிவ சங்கர், சிவகங்கை அருண், திருச் செங்கோடு இரமேஷ், திருச்செந்தூர் பாலகுரு உள் ளிட்டவர்கள் பாராட்டப்பெற்றனர்.

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாக்கள்

திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் பி.பட்டாபிராமன், கொரட்டூர் பன்னீர்செல்வம்,  செங்கை சுந்தரம், நாகை மாவட்டம் நெப்போலியன், பூபேஷ்குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந் திரையன் ஆகியோர் விடுதலை சந்தாக்களை வழங்கினர்.

தமிழர் தலைவர் தலைமையில் அறிஞர்பெருமக்கள் கருத்து மழை

மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார். நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் மாநாட்டின் தொடக்கவுரையாற்றினார்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாட்டில் திமுக அமைப்புச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப் பினர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அ.பாலகிருஷ்ணன், மதிமுக பொருளாளர் ஈரோடு அ.கணேசமூர்த்தி, திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், செந்தமிழ வேள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஆகியோர் கருத்துரை வழங் கினர்.

கலந்துகொண்டவர்கள்

மாநாட்டில் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி, கழகப் பொதுச்செய லாளர்கள் துரை.சந்திரசேகரன், இரா.செயக் குமார்,  தலைமைசெயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சாமி.திராவிடமணி, அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், காங்கிரசு கட்சி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன், திமுக விஜயா தாயன்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செல்வம், கவிஞர் முத்துலிங்கம், காசி முத்து மாணிக்கம், திராவிட இயக்க தமிழர் பேரவை மாறன், கவிஞர் கண்மதியன், வா.மு.சே.திருவள்ளுவர், த.கு.திவாகர், விழிகள் வேணுகோபால், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செயலாளர்  கி.சத்தியநாராயணன், திராவிடர் இயக்க வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், பேரா சிரியர் திருக்குறள் பாசுகரன், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், பகுத்தறிவாளர் கழக செயலவைத் தலைவர் தகடூர் தமிழ் செல்வி, பகுத்தறிவாளர்கழக அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்செல்வன், பொரு ளாளர் சி.தமிழ்செல்வன், பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி, புதுவை நடராசன் மற்றும் குடியாத்தம் சடகோபன், கரு.பாலன், தருமபுரி தமிழ்செல்வன், திண்டிவனம் க.மு.தாஸ், ஆர்.டி.வீரபத் திரன்,  திருச்சி ஆல்பர்ட், தாம்பரம் ப.முத் தையன், வடசென்னை வழக்குரைஞர் சு.குமாரதேவன், ஆவடி பா.தென்னரசு, தென்சென்னை இரா.வில்வநாதன், செ.ர. பார்த்தசாரதி, மயிலாடுதுறை கி.தளபதிராஜ், பெல் ஆறுமுகம், சி.வெற்றிச்செல்வி, ச.இன்பக்கனி,  இறைவி, பசும்பொன் செந்தில்குமாரி, ஓசூர் செல்வி,  பா.மணி யம்மை, பொன்னேரி கு.செல்வி, பெரியார் மாணாக்கன், பூவைசெல்வி, சுமதி,   மரக தமணி, பொறியாளர் சீர்த்தி,  நெல்லுப்பட்டு அ.ராமலிங்கம், இ.ப.இனநலம், தொண் டறம்  உள்ளிட்ட தமிழகம் முழுவதுமிருந்து பல்வேறு கழக மாவட்டங்களின் பொறுப்பா ளர்கள்,  இளைஞரணி, மாணவரணி, தொழி லாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், திமுக, விடுதலைசிறுத்தைகள் கட்சி, சிபிஅய், சிபிஎம், திராவிட இயக்க தமிழர் பேரவை பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஏராள மானவர்களும், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் மாண வர்களும் கலந்துகொண்டனர்.

திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த மாநாட்டில் பட்டை போட்டவர்கள், நாமம் தரித்தவர்கள், ருத்திராட்ச கொட்டைகள் அணிந்தவர்கள் திரண்டிருந்தார்கள்.

கடவுள் நம்பிக்கை, கடவுள் மறுப்பு கொள்கை மாறுபாடுகளைக் கடந்து, தமிழர்களின் மானமீட்புக்கான, உரிமை மீட்புக்கான மாநாடு, ஜாதி ஒழிப்புக்கான மாநாடு என்று ஏராளமானவர்கள் மாநாட்டில் பெரிதும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மாநாடு முடியும்வரை அனை வரின் உரைகளையும் செவிமடுத்தனர். தீர்மானங்களை பலத்த கரவொலிகளுக் கிடையே நிறைவேற்றிக் கொடுத்தார்கள்.



மாநாட்டின்  நிறைவாக மாநில மாண வரணி துணைச் செயலாளர் நா.பார்த்திபன் நன்றி கூறினார்.

கேரள மாநில அரசின் செயல்பாட்டைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குக!


தமிழ்நாடு அரசு தவறுமேயானால் தொடர் பிரச்சாரம்

சிறை நிரப்பும் போராட்டம், நீதிமன்ற நடவடிக்கை தொடரும்!

ஜாதி - தீண்டாமையை ஒழிக்க 10 அம்ச திட்டங்கள்
சென்னை மாநாட்டில் அரிய தீர்மானங்கள்



சென்னை, நவ.27 கேரள மாநிலத்தில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அதனைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்ற தீர்மானத் தோடு ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கான 10 அம்ச திட்டங்களையும் சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் வெளியிடப் பட்டது.



25, 26.11.2017 ஆகிய இரு நாள்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற, முறையே தீண்டாமை - ஜாதி ஓழிப்பு மாநாட்டுக் கருத்தரங்கம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடு ஆகிய இரு நிகழ்விலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மாநாட்டுத் தலைவர்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

முன்மொழிந்தவர்: பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவரணி செயலாளர்)

தீர்மானம் - 1

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்

ஜாதி ஒழிப்புக்காகத் தன் வாழ்நாளை முழுவதும் அர்ப்பணித்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், தம் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டம் - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதாகும்.

இது தொடர்பாக 1970 ஜனவரி 26 அன்று தமிழ்நாடெங்கும் கோயில்களின் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிப் புப் கொடுத்தார்.

தந்தை பெரியார் அவர்களின் போராட்ட அறிவிப்பின் விளைவாக தமிழ் நாடு சட்டப் பேரவையில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியின்போது அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது (2.12.1970).

அதனை எதிர்த்து ஆதிக்க ஜாதியினர் உச்சநீதிமன்றம் சென்றனர். பரம்பரை அர்ச்சகர் முறை செல்லாது என்றும், ஆகம விதிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம் வரலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது (1972).

இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகம் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது.

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை யொட்டி, தந்தை பெரியார் அவர்களின் இறுதிப் போராட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே முதல் அமைச் சர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்களால் நீதிபதி எஸ்.மகாராசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப் பட்டது (24.9.1979).

உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகத் தடை ஏதும் இல்லை என்று வல்லுநர் குழு திட்டவட்டமாகத் தெரிவிக்கும் பரிந்துரை களை அரசிடம் அளித்தது.

அதன் தொடர்ச்சியாக ஆலயங்களில் ஜாதி வேறுபாடின்றி அர்ச்ககர் நியமனம் செய்யப்படுவதற்குப் பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசனை வழங்கிட நீதிபதி என்.கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமை யில் 12 பேர் கொண்ட குழு ஒன்று மாண்புமிகு எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசால் அமைக்கப்பட்டது (8.6.1984).

தேவையான பரிந்துரைகளை அவர்கள் வழங்கிய நிலையில், பழனி கோயிலில் அதற்கான பயிற்சிப் பள்ளி அமைக்கப்படும் என்று அஇ.அ.தி.மு.க. அரசு சார்பில் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது (1984).

தமிழக அரசு சார்பில் பயிற்சிப் பள் ளிகள் தொடங்கப்பட்டு, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு, தந்தை பெரியார், அண்ணாவின் கனவுகள் நனவாக்கப்படும் என்று அ.இ.அ.தி.மு.க. வின் 20ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சென்னை ஹேமமாலினி திருமண மண் டபத்தில் முதலமைச்சர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். (7.10.1991)

இப்படிப் பல கட்டங்கள் தாண்டி வந்த நிலையிலும் சட்டம் நடைமுறைக்கு வர வில்லை என்பதுதான் கசப்பான உண்மை யாகும்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மீண்டும் ஒரு தனிச் சட்டம் (கிநீt 15 ஷீயீ 2006) நிறை வேற்றப்பட்டு, அதனைச் செயல்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் அவர் களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டு அக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் திருவண்ணாமலை, சிறீ ரங்கம் உள்ளிட்ட இடங்களில் சைவ - வைணவ ஆகமப் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு இடஒதுக்கீட்டின் அடிப் படையில் 207 பேர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டது.

பணி நியமனம் செய்யப்பட இருந்த நிலையில் இதனையும் பொறுக்கமாட்டாத உயர்ஜாதி ஆதிக்கப்புரியினர் உச்சநீதி மன்றம் சென்றனர். ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு (6.12.2015 அன்று) நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு ஒரு தீர்ப்பை அளித்தது. தமிழ்நாடு அரசின் சட்டம்  செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்து 21.12.2015 நாளிட்ட கடிதம் ஒன்று மாண்புமிகு தமிழக முதல் அமைச் சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு, திராவிடர் கழகத் தலைவரால் எழுதப்பட்டது (21.12.2015).

இதற்கிடையில் கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவசம் வாரியம் மொத்தம் 62 பேர்களை இந்துக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்துள்ளது.

தாழ்த்தப்பட்டவர்கள் 6 பேர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் 30 பேர் அர்ச்ச கர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் தந்தை பெரியார் அவர்களின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், கடந்த திராவிட இயக்க ஆட்சிகளில் (தி.மு.க., அ.இ. அ.தி.மு.க.) ஒப்புக்கொண்டு அறிவிக்கப் பட்ட நிலையில் நீதிமன்ற தீர்ப்புகளும் சாதகமாக இருக்கும் வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டும், தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும், கட்சியினரும் ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கும் சூழலைக் கவனத்தில் கொண்டும், கேரள மாநில அரசும் அனைத்து ஜாதியிலிருந்தும் அர்ச்சகர் நியமனம் செய்துள்ளதை முன் மாதிரியாகக் கொண்டும் ஏற்கெனவே தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று, நியமனங் களுக்குத் தயாராக உள்ளவர்களுக்கு அர்ச் சகர் நியமன ஆணையை உடனடியாக வழங்குமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 2

தமிழ்நாடு அரசு செயல்படுத்தாத பட்சத்தில்...

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு தழுவிய தீவிரப் பிரச்சாரத்தை கழகத் தலைவர் தலைமையில் ஒத்த கருத்து உடையோரையும் இணைத்து மக்கள் பெருந்திரள் போராட்டத்தை நடத்துவது, பல்லாயிரக்கணக்கில் சிறைச் செல்வது என்பது உட்பட பல்முனைகளிலும் போராட்டம் நடத்துவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் - 3

நீதிமன்றம் மூலம் தீர்வு

ஏற்கெனவே கலைஞர் தலைமையில் அமைந்த தி.மு.க. ஆட்சியில் அர்ச்சகருக் கான ஆகமப் பயிற்சி பெற்று பட்டயமும் பெற்ற 206 பேர் அர்ச்சகர் பணியின் ஆணைக்காக காத்திருக்கின்றனர் - பாதிக் கப்பட்டவர்கள் என்ற முறையில் அவர்கள் சார்பாக, சென்னை உயர்நீதிமன்றம், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் வரை வழக்குகளைத் தொடுத்து - சமூக நீதிக்குப் பரிகாரம் தேடும் முயற்சியையும் ஏககாலத் தில் இரு முனைகளில்  வழிவகைகளை  மேற்கொள்வது என்றும் இம்மாநாடு முடிவு செய்கிறது.

தீர்மானம் - 4

ஜாதி ஒழிப்பிற்கான

பத்து அம்ச திட்டங்கள்

1. அரசியல் சட்டத்தின் பதினேழாவது பிரிவில் உள்ள Untouchability is abolished and its practice in any form is forbidden by law  என்று இருப்பதில் Untouchability
என்பதற்குப் பதிலாக Caste including untouchability எனச் சட்டத் திருத்தம் செய்து, மத்திய அரசு ஜாதியையும், அதன் வழி தீண்டாமையையும் ஒழிக்க வழி செய்ய வேண்டும். அந்த வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

2. (அ) ஜாதிக்கு ஒரு சுடுகாடு என்று இருக்கும் அனைத்து ஊர்களிலும் அனை வருக்கும் பொதுவான ஒரே சுடுகாட்டை நவீன முறையில் அரசு ஏற்படுத்த வேண் டும். ஊராட்சி மன்றத்தின் பொறுப்பில் பிண ஊர்தி செய்து பராமரிக்க வேண்டும். எந்த ஒரு பிணத்தையும் எந்த ஒரு சாலை வழியாகவும் எடுத்துச் செல்லும் அவசியம் ஏற்படும்போது, யாரும் எதன் பெயராலும் தடுக்கக் கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும்.

(ஆ) மனிதர் மலத்தை மனிதர் சுமக்கும் அகற்றும் அவல நிலையை அடியோடு போக்க அனைத்து ஊர்களிலும் நவீனக் கழிப்பிட முறையைக் கொண்டு வரவேண் டும். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத் திறனைக் கற்றுத்தர வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குத் தரமான தொழில் கல்வி, பொறியியல், மருத்துவக் கல்வி பயின்றிட நாட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஆங்காங்கு இடமளித்து இலவசக் கல்விக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

(இ) கிராமங்களில் எங்கெங்கு தேநீர்க் கடைகளில் இரு குவளை முறை உள்ளதோ அதனை கிராம நிருவாக அதிகாரி மூலமும், காவல்துறை மூலமும் கண்டறிந்து, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் ஆகி யோர் சென்று பேசி அதனை நீக்க வேண் டும். இதில் சமூகச் சீர்திருத்தத் துறை பெரும் கவனம் செலுத்த வேண்டும்.

3. அனைத்து ஜாதியினரும் அனைத்து கோயில்களுக்கும் அர்ச்சகராவதற்கு உள்ள தடைகளை நீக்கி முறைப்படி அமல் படுத்த வேண்டும். இது ஜாதி தீண்டாமை ஒழிப்புத் திட்டத்தில் ஒரு முக்கிய வேலை யாகும்)

4. ஜாதியின் பெயரால் மறுக்கப்பட்ட கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களில் அமல்படுத்தப்படும் இடஒதுக்கீடு, சமத்துவ மடைய சிறந்த வழியாகும். இதற்காக அளிக்கப்படும் ஜாதிச் சான்று போன்ற வற்றில் Group-1 (ST), Group-2 (SC), Group-3 (MBC), Group-4 (BC), Group-5 (IC), Group-6 (FC) என்றும் குறிக்கப்பட வேண்டும். ஜாதியின் பெயர் இடம் பெறக் கூடாது. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோரின் பிள்ளைகளை  Group-5 (IC) என்று குறிப்பிட்டு, தனி இட ஒதுக்கீடும் முன்னுரிமையும் அளிக்கப்படவேண்டும். இந்தக் கருத்தினை தமிழ்நாடு அரசு 22.10.1998 அன்று கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே திராவிடர் கழகத் தின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்பது நினைவூட்டத் தக்கதாகும்.

5. (அ) ஜாதிப் பெயரைத் திரைப்படங் களுக்குச் சூட்டுவதையும், திரைப்படங் களில் ஜாதி உணர்வைத் தூண்டுவதையும் தடை செய்ய வேண்டும். ஜாதி ஒழிப்புக் கருத்துக்களை வலியுறுத்தும் திரைப்படங் களுக்கு வரிச் சலுகையை அளித்து உற்சாகப்படுத்த வேண்டும். அரசு திரைச் செய்திப்படப் பிரிவு ஜாதி ஒழிப்பை மய்யமாகக் கொண்ட செய்திப் படங்களை வெளியிட வேண்டும். வானொலி, தொலைக் காட்சி மற்றும் நாடகங்களில் ஜாதி ஒழிப்பை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளுக்கு அரசு பரிசு தந்து உற்சாகப்படுத்த வேண்டும்.

(ஆ) பள்ளிகளில் ஜாதி உணர்வுகளைத் தடுக்கும் வகையிலும், சமத்துவத்தை உரு வாக்கும் வகையிலும் பாடத் திட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

6 (அ)ஜாதிச் சங்கங்களின் உறுப்பினராக உள்ளோரும், ஜாதிச் சங்கங்களின் ஆதரவு பெற்றோரும் தேர்தலில் பங்கேற்க தேர்தல் கமிஷன் தடை விதித்து அதை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தது அய்ந்து ஆண்டுகளுக்காவது ஜாதிச் சங்கத்தில் இடம் பெறாதவராக வேட்பாளர் இருந்திருக்க வேண்டும். மாறாக நிரூபிக்கப் பட்டால் பதவியை ரத்துச் செய்ய வகை செய்ய வேண்டும்.

(ஆ) தேர்தலில் கட்சிகள் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பொழுது பெண்களுக்கு 33 விழுக்காடு கடைப்பிடிக்கப்பட வேண்டும். அந்த ஒதுக்கீட்டிலும் மீதி உள்ள இடங்களிலும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறையில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முயற்சிக்க வேண்டும். இது தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தி குறைகளை அகற்றித் திட்டமான முறையை அனைத்துக் கட்சிகளும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். இதன்மூலம் எல்லோரும் வாய்ப்புப் பெற ஏதுவாகும்.

(இ) ஊராட்சி மன்றங்களை ஆதிதிரா விடர்களுக்காக ஒதுக்கீடு செய்யும்போது அரசு சட்டப்படி மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஒதுக்கப்படும் ஊராட்சிகளில் சமூகச் சீர்திருத்தத் துறை மூலம் நல்லிணக்கத்தையும், உடன்பாட் டையும் முன்கூட்டியே ஏற்படுத்த வேண்டும்.தாழ்த்தப்பட்டோர் என்பதால் ஏற்படுத்தப் படும் இடையூறுகள் தடுக்கப்பட வேண்டும்.

(ஈ) அனைத்து அரசு ஊழியர்களும் ஜாதிச் சங்கங்களில் உறுப்பினராவதைத் தடை செய்ய வேண்டும். மேலும், ஜாதிச் சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் தடை விதிக்க வேண்டும். ஜாதி உணர் வுடன் நடந்து கொள்ளும் அரசு அதிகாரி கள்மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண் டும்.

7. அனைத்து இளைஞர்களும் ஜாதிப் பெயர்களைப் பயன்படுத்துவதை பெரும் இழிவாகக் கருதி அனைத்து நடவடிக்கை களிலும் மனத்தாலும், நடவடிக்கைகளாலும் . ஒதுக்க வேண்டும்.

8. (அ) பத்திரப் பதிவுகளிலும் மற்றும் ஆவணங்களிலும் சம்பந்தப்பட்டோரின் பெயர் மட்டுமே இடம் பெற வேண்டும். ஜாதிப் பெயர் குறிப்பிடுவதைத் தடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியல்களில் ஜாதிப் பெயர்கள் இடம் பெறக் கூடாது.

(ஆ) சமூகச் சீர்திருத்தத் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், இயக்கம், அனைத்து அரசியல் கட்சிகளில் உள்ளோர் ஜாதிச் சங்கங்களில் உறுப்பினராவதோ, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோ கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

9. (அ) ஜாதிக் கலவரங்கள் அடிக்கடி நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கு புறக்காவல் நிலையம் அமைத்து எச்சரிக்கையாக அரசு செயல்பட வேண்டும். அப்பகுதிகளில் காவல் துறை ஊழியர்களின் எண்ணிக்கையும் அதி கரிக்க வேண்டும்.

ஜாதி ஆணவக் கொலை, ஜாதி கலவரங்களைத் தடுக்கக் காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும். குற்ற வாளிகளுக்குக் காலதாமதம் செய்யாமல் தண்டனையும் பெற்றுத்தர ஆவன செய் யப்பட வேண்டும்.

(ஆ) பல ஊர்களில் கோயில் திருவிழா நடத்துவதில் ஜாதிச் சண்டை வருவதால் அவ்வூர்களில் கிராம நிர்வாக அலுவலர் மூலம் திருவிழாவை அறிவிக்க வேண்டும். காவல் துறையும், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நீதிபதியும் தலையிட்டு கலவரச் சூழல் இல்லாமல் இருந்தால் அனுமதிக்க வேண்டும். இல்லாவிடில் தடை விதிக்க வேண்டும். தேவையானால் கோயில் களைக் குறிப்பிட்ட ஆண்டுக்கு மூடவும் தயங்கக் கூடாது.

10. அரசு சமூகச் சீர்திருத்தத் துறையை உடனடியாக தொடங்குவதோடு அமைச் சகப் பொறுப்பிலிருந்து அலுவலர்கள்  வரை முற்போக்கு எண்ணமுள்ள பார்ப் பனரல்லாதார்களையே நியமிக்க வேண் டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள் கிறது.

நல்ல சமயம் இது - நழுவ விடாதீர் தமிழர்களே! ஆர்.கே. நகரில் திமுகவே வெல்ல வேண்டும்!

நல்ல சமயம் இது - நழுவ விடாதீர் தமிழர்களே!

ஆர்.கே. நகரில் திமுகவே வெல்ல வேண்டும்!

அதிமுகவுக்கும் - பிஜேபிக்கும் சேர்த்துத் தோல்வியைத் தாரீர்!

http://viduthalai.in/images/stories/dailymagazine/2017/nov/6/s8.jpg

சென்னை - ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தி.மு.க.வே வெல்ல வேண்டும் என்பதற்கான காரணங்களை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை - இராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்) சட்டமன்ற தொகுதி  இடைத் தேர்தல்  வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதி  12.4.2017 என்று அறிவிக்கப்பட்டது. அதிமுக அணியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றனர் என்பது அதிகாரிகள் திட்டவட்டமாக அறிந்த நிலையில், அத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது. தேர்தலில் 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தமிழக அமைச்சர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதும் வெளியானது.

வரும் டிசம்பர் 21ஆம் தேதி மீண்டும் அத்தொகுதியில் தேர்தலை நடத்திட ஆணையிட்டுள்ள தேர்தல் ஆணையம் கடந்த முறை எந்தக் காரணத்துக்காகத் இடைத் தேர்தலைத் தள்ளி வைத்ததோ, அந்தக் காரணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? 'சிதம்பர ரகசியமோ!'

குற்றவாளிகள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

சம்பந்தப்பட்டவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைத் தெரிவித்திருந்தால்தானே வரும் டிசம்பர் 21இல் மீண்டும் நடக்க இருக்கும் இடைத் தேர்தல் கையூட்டியின்றி நடைபெறும் என்ற நம்பிக்கையை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தும்.

அவ்வாறு எந்த அறிவிப்பும், எடுக்கப்பட்ட நடவடிக்கையும் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், நடக்க இருக்கும் இடைத் தேர்தலின் மீதான அவநம்பிக்கை நிழல் படிவதைத் தவிர்க்க முடியாது.

ஜெயலலிதா அவர்கள் முதல் அமைச்சராகவிருந்த  கால கட்டத்தில் 144 தடை உத்தரவு போட்டு பணப்பட்டுவாடா செய்ய வழி வகை செய்து கொடுத்தது தேர்தல் ஆணையம் என்பதை  தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்களே.

அது எப்படியோ போகட்டும்;  நடக்கவிருக்கும் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளார். இந்தத் தேர்தலில் ஆளும் அ.இ.அ.தி.மு.க.வின் சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அந்த வேட்பாளர் கண்டிப்பாகத் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கு கொள்கை பூர்வ, நியாயமான காரணங்கள் ஏராளம் உண்டு.

அ.தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும் - ஏன்?

குறிப்பாக ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது மத்திய அரசால் கொண்டு வரப்படவிருந்த பல திட்டங்களை, அவர் எவ்வித சந்தேகங்களுக்கும் இடமின்றித் திட்டவட்டமாக எதிர்த்தார். அவ்வாறு எதிர்க்கப்பட்ட திட்டங்களுள் ஒன்று -

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் (அந்தியோதயா அன்னயோஜனா). ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நவம்பர் (2016) முதல் தேதி முதல் தமிழ்நாட்டில் அது அமலுக்கு வந்து விட்டது.

அதேபோல தமிழகத்தின் எல்லையில்கூட உள்ளே நுழைய விட மாட்டேன் என்று முதல் அமைச்சர் ஜெயலலி தாவால் உறுதியுடன் நிராகரிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. திட்டம் ராஜநடை போட்டுத் தமிழகத்திலே வலம் வரும் நிலையை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சமூகநீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மண் - தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் வீறுநடை போட்ட பூமி தமிழ்நாடு.

நுழைவுத் தேர்வு என்பது சட்டப்படியாகவே கிடையாது என்று அறுதியிட்டு உறுதியாகத் தடுக்கப்பட்ட மாநிலமும் தமிழ்நாடே! இதன் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள், கிராமப்புற மக்கள் மருத்துவர்களாக ஏராளம் வர முடிந்தது.

'நீட்' மேல் தட்டு மக்களின் சதி

அதனைத் தடுக்க மேல் ஜாதி ஆதிக்க சதியால் திணிக் கப்படும் 'நீட்' தேர்வை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் 'நீட்' தேர்வு கூடாது என்று இரு சட்டங்கள் இயற்றப்பட்டும், அதற்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்குப் போதுமான முயற்சிகளை அளிக்க மாநிலத்தை ஆளும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி தவறிவிட்டது.

குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கே அந்தக் கோப்பு செல்லவில்லை என்பதைத் தெரிந்த பிறகும்கூட, அதில் அக்கறை காட்டாதது உயிர் நாடிப் போன்ற இந்த சமூகநீதிப் பிரச்சினையில் இந்த அரசின் அக்கறையின்மையைத் தெளிவுபடுத்தி விட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலில், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில், இந்தப் பிரச்சினையை நிபந்தனையாக வைத்திருந்தால், மத்திய அரசு நிச்சயம் பணிந்து வந்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பை  வேண்டுமென்றே தமிழக அரசு தவிர்த்து விட்டதானது - எவ்வளவுப் பெரிய துரோகம்!

மடியில் கனம் - வழியில் பயம் என்ற நிலையில் மத்திய பிஜேபி அரசின் தொங்கு சதையாக, தலையாட்டிப் பொம்மையாகிவிட்டது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. மத்தியில் பிஜேபி  ஆட்சி இருக்கும் வரை எங்களை அசைக்க முடி யாது என்று  கொஞ்சம்கூட முகம் சுழிக்காமல் ஒரு மாநில அமைச்சரால் சொல்ல முடிகிறது என்றால் இந்த ஆட்சி யார் மடியில் பத்திரமாகத் தூங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆளுநர் பிரச்சினையில்

ஜெயலலிதா எப்படி நடந்து கொண்டார்?

வேறு எந்தக் கால கட்டத்திலும் நடந்திராத வகையில் ஆளுநர் அன்றாட அரசு நடவடிக்கையில் தலையிடுவதைக் கூடத் தலை வணங்கி ஏற்றுக் கொள்ளும் பலகீனத்தை என்ன சொல்ல? மாநில உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த அண்ணாவின் பெயர் இந்தக் கட்சியில் ஒட்டிக் கொண்டு இருப்பது எத்தகைய அவலம்?

1995இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்ற அன்றைய ஆளுநர் சென்னாரெட்டி அவர்கள் மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டு சில விவரங்களைக் கேட்டார் என்பதற்காக முதல் அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்ததோடு ஆளுநருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியதை இன்றைய அதிமுக அரசு வசதியாக மறந்தது ஏனோ? இதில் மட்டும்  ஆளும் மந்திரிகள் அடிக் கொரு தரம் கூறும் அம்மாவின் 'ஆன்மா' மன்னித்து விடுமோ!

இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.விற்கு சரியான பாடம் கற்பிக்கத் தவறி விட்டால் அதைவிட தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக் கொள்வது - வேறு ஒன்றும் இருக்க முடியாது - இருக்கவே முடியாது.

தி.மு.க. வெல்ல வேண்டும் - ஏன்?

தி.மு.க.வின் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க.வில் அடி மட்டத் தொண்டராக இருந்து அந்தப் பகுதியில் தன் தொடர் பணிகளால் அறிமுகமான தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்வது தி.மு.க.வுக்காக அல்ல - நாட்டு மக்களுக்காக.

மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கக் கூடியவர்களுக்கு நல்லதோர் பாடத்தைக் கற்பிப்பதற்காகவே!

இந்தக் கால கட்டத்தில் 'உழைப்புத் தேனீ'யானதிமுகவின் செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் அயராப் பணி இல்லாவிட்டால், இன்னும் பல கடுமையான, கொடுமையான இழப்புகளைத் தமிழ்நாடு சுமக்க வேண்டியிருந்திருக்கும்.

இது ஓர் இடைத் தேர்தலாக இருந்தாலும், இதில் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தி.மு.க.வுக்குக் கொடுக்கும் வெற்றி அகில  இந்திய அளவில் பெரிய அலையை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

அ.இ.அ.தி.மு.க.வின் பின்புலத்தில் மதவாத - காவி இந்துத்துவ சக்தி இருக்கிறது என்று தெரிந்தபின்பும், (தேர்தல் அறிவிப்பும், இரட்டை இலை சின்னமும் ஒரே நேரத்தில் கைகோத்து வருவதைக் கவனித்தீர்களா?) இதில் நாம் அலட்சியமாக இருக்க முடியாது. தமிழ் மண்ணின் தன்மானம், பகுத்தறிவு, சமூகநீதி, மதச் சார்பின்மை உணர்வைப் பிரதிபலிக்கும் இடைத் தேர்தலாக ஆர்.கே.நகர் அமையட்டும் - அமையட்டும்!

ஒரே கல்லால் இரு காய்களை வீழ்த்தக் கிடைத்த சரியான, அருமையான சந்தர்ப்பம் இது - நழுவ விடலாமா வாக்காளர்களே!

தி.மு.க. வெல்லட்டும்! வெல்லட்டும்!!

தமிழ்நாடு விழித்திருக்கிறது என்பது புரிய வேண்டியவர் களுக்குப் புரியட்டும்!

திராவிடர் கழகத்தின் ஆதரவு எல்லா வகைகளிலும் உண்டு. கழகத் தோழர்கள் முழு வீச்சில் செயல்படுவார்கள்!



கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
27-11-2017

Monday, November 27, 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றி பெறும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி





சென்னை, நவ.26 திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரு மான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று (25.-11.-2017) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

தளபதி: கழக பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் அறிவிப்பின் படி, வரும் 21-.12-.2017 அன்று நடைபெற இருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக என்.மருதுகணேஷ் என்கிற என்.எம்.கணேஷ் பி.காம்., பி.எல்., அவர்கள் போட்டியிடுவார் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப் படுகிறது.

செய்தியாளர்: இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவு கேட்டு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறதா?

தளபதி: திமுக தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் எங்களு டைய வேட்பாளர் இடைத்தேர் தலில் போட்டியிடுகிறார். மேலும் பல கட்சிகள் திமுக வேட்பாளருக்கு தங்கள் ஆதரவை யும், ஒத்துழைப்பையும் தர வேண்டுமென்ற கோரிக்கையை திமுக சார்பில் எடுத்து வைப் போம்.

செய்தியாளர்: ஏற்கனவே தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லாம் பண விநியோகம் செய்த புகார் நிலுவையில் உள்ள நிலையில், இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுமா?

தளபதி: தேர்தல் நியாயமாக நடைபெறாது என்ற காரணத்தால் தான் நாங்கள் ஏற்கனவே நீதி மன்றத்தை நாடியிருக்கிறோம். இந்த நிலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக் கிறது. ஜனநாயக முறைப்படி இந்த இடைத்தேர்தலை நாங்கள் எதிர்கொள்வோம். நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம், தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு மிகப்பெரிய வெற்றி யை பெறும்.

செய்தியாளர்: இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட அடுத்த நாளே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறதே?

தளபதி: இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது குறித்து எங்களுடைய கழக முதன்மைச் செயலாளர் அவர்கள் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார். இதே இரட்டை இலை சின்னத்தை எம்.ஜி.ஆர். இருந்தபோதும் நாங்கள் தோற்கடித்து இருக் கிறோம், அதேபோல, அம்மை யார் ஜெயலலிதா இருந்தபோதும் தோற்கடித்து இருக்கிறோம். பலமுறை இரட்டை இலை சின்னத்தை தோற்கடித்து திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. எனவே, சின்னம் பற்றி துளியளவு கவலையும் இல்லை.

இவ்வாறு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடு

 

சென்னை, நவ.26 அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் இரண்டு நாள் மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு முதல் நாள் மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது.

மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக நேற்று (25.11.2017) மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத் தில் மாலை அய்ந்து மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ் விற்கு வருகை தந்தவர்களை சென்னை மண்டலச் செய லாளர் வி.பன்னீர் செல்வம் வரவேற்றார்.

தந்தை பெரியாரால் அறிவிக்கப்பட்டு நடைபெற்ற ஜாதி ஒழிப்புப் போராட் டத்தின் 60 ஆம் ஆண்டு விழா மற்றும் பட்டிமன்றம், ஜாதி, தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்க நிகழ்வுகள் அணிஅணியாக கருத்து மழையாக, உரிமைப்போர் முழக்கமாக, ஜாதி ஒழிப்பு புயலாக வெடித்துக்கிளம்பியது.

ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கு முதன்மை

பிரச்சாரமா? சட்டம் இயற்றலா? பட்டிமன்றம்


ஜாதி, தீண்டாமை ஒழிப்பில் முதன் மைக் கரணியம் பிரச்சாரமே என்கிற தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன், பா.மணியம்மை, பொன்னேரி கு.செல்வி ஆகியோர் தங்கள் வாதங்களை எடுத்துரைத் தனர். ஜாதி, தீண்டாமை ஒழிப்பில் முதன்மைக் கரணியம் சட்டம் இயற்றலே! என்ற தலைப்பில் வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா, வழக்குரைஞர் அ.அசோக், தோழர் சே.மெ.மதிவதனி ஆகியோர் தங்கள் வாதங்களை எடுத்துரைத்தனர்.

ஜாதி, தீண்டாமை ஒழிப்பில் முதன்மை யானது   பிரச்சாரமா? சட்டம் இயற்றலா? தலைப்பிலான பட்டிமன்றத்தின் நடுவரான திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் இருதரப் பினரின் வாதங்களை விளக்கி எடுத்துக் காட்டி இறுதியாக ஜாதி, தீண்டாமை ஒழிப்பில் முதன்மையானது சட்டம் இயற்றலே என்று தீர்ப்பினை வழங்கினார். பட்டிமன்றத்தில் பங்கேற்ற அனை வருக்கும் இயக்க வெளியீடுகள் அளித்து சிறப்பு செய்யப்பட்டது. தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வ நாதன் நன்றி கூறினார்.

கருத்தரங்கம்

பட்டிமன்றத்தைத் தொடர்ந்து, நீதிபதி து.அரிபரந்தாமன் ஜாதி, தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கத்தின் தலைமையில் நடைபெற்றது.

வழக்குரைஞரணிச் செயலாளர் வழக் குரைஞர் ஆ.வீரமர்த்தினி வரவேற்புரை யாற்றி, இணைப்புரை வழங்கினார். கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அறிமுகவுரையாற்றினார்.

கழகப் பொருளாளர் மருத்துவர் சு.பிறைநுதல்செல்வி`பெண்களுக்கும் அர்ச்சகர் உரிமை' என்ற தலைப்பிலும்,  எழுத்தாளர் பழ.கருப்பையா `தமிழில் வழிபாட்டுரிமை' எனும் தலைப்பிலும், முனைவர் பெ.செகதீசன் `சமூகவியலும் தந்தை பெரியாரும்' எனும் தலைப்பிலும், இதழாளர் புனித பாண்டியன்`ஜாதி ஒழிப்பும் சமூக ஜனநாயகமும்'எனும் தலைப்பிலும், தோழர் கவுசல்யாசங்கர் `ஜாதி வெறியும், ஆணவக் கொலைகளும்' எனும் தலைப்பிலும், அர்ச்சகர் பயிற்சி பெற்றவரான தோழர் வா.அரங்கநாதன் `அர்ச்சகர் பயிற்சியும் நியமனமும்' எனும் தலைப்பிலும் கருத்தரங்க உரையாற்றி னார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் பங்கேற்று பட்டிமன்றம் மற்றும் கருத்தரங்கில் உரையாற்றிய அனைவரின் உரையினையும் கேட்டு பாராட்டினார். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான தமிழகத்தின் சட்டப் போராட்டக் களங்களை விரிவாக எடுத்துரைத்து நீதிபதி து.அரிபரந்தாமன் நிறைவுரையாற்றினார். வடசென்னை மாவட்ட மகளிரணிச் செயலாளர் பொறி யாளர் ச.இன்பக்கனி நன்றி கூறினார்.

நூல் வெளியீடு


கா.சு.பிள்ளை எழுதிய தமிழ்நாட்டு இந்து சமயங்கள் வரலாறு மற்றும் மஞ்சை வசந்தன் எழுதிய தமிழா நீ ஓர் இந்துவா? ஆகிய நூல்களை மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர் எழுத்தாளர் பழ.கருப்பையா வெளியிட காங்கிரசு கட்சியின் மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர் உ.பலராமன் பெற்றுக் கொண்டார். இரண்டு நூல்களின் நன் கொடை மதிப்பு ரூ.120. மாநாட்டையொட்டி ரூ.100க்கு வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசி ரியர் அவர்களிடமிருந்து ஏராளமானவர்கள் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

நூலைப் பெற்றுக்கொண்டவர்கள்

மேனாள் மேயர் சா.கணேசன், த.கு.திவா கரன்,  சாமி.திராவிடமணி, கோ.சா.பாஸ்கர், வழக்குரைஞர் சு.குமாரதேவன், ஊமை.செய ராமன், தகடூர் தமிழ்செல்வி, தங்க.தன லட்சுமி, இறைவி, இன்பக்கனி, வேட்ட வலம் பி.பட்டாபிராமன், திண்டிவனம் க.மு.தாஸ், பாபு, தூத்துக்குடி பெரியாரடியான், புழல் த.ஆனந்தன், விழிகள் வேணுகோபால், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ் செல்வம்,  கொரட்டூர் பன்னீர்செல்வம், பழ.சேரலாதன் உள்பட ஏராளமானவர்கள் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.

விடுதலை சந்தா வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டக் கழகத்தின் சார்பில் மூன்றாவது தவணையாக விடு தலை சந்தாத் தொகை ரூ.20ஆயிரத்தை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அளித்தார்.

கலந்துகொண்டவர்கள்

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன்,  காங்கிரசு கட்சியின் முதுபெரும் தலைவர் இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், பேராசிரியர் திருக்குறள் க.பாசுகரன், தலைமை செயற் குழு உறுப்பினர் க.பார்வதி, காரைக்குடி மாவட்டச் செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சி.வெற்றிச் செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன்செந்தில்குமாரி, தாம்பரம் ப.முத்தையன், கோ.நாத்திகன், மோகன் ராஜ், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டிவீரபத்திரன், வழக்கு ரைஞர் சென் னியப்பன், விஜயலட்சுமிதாஸ், வழக் குரைஞர் ம.வீ.அருள்மொழி, தம்பி பிரபாகரன், செந்துறை இராசேந்திரன், விஜய் ஆனந்த், மருத்துவர் க.வீரமுத்து, பெரியார்மாணாக்கன், பூவைசெல்வி, கோ.வீ.ராகவன், கோ.தங்கமணி, அம் பத்தூர் ஏழுமலை, கு.தென்னவன்,

கி. இராமலிங்கம் உள்பட பலர் மாநாட்டின் முதல் நாளில் பெரிதும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நம் மக்கள் கட்டிய கோயில்களில் அவர்கள் உரிமையோடு செல்ல முடியாமல் பார்ப்பான் தடுப்பதா?

தந்தை பெரியாரவர்கள் 21.7.1969 அன்று சிதம்பரத்தில் அறிவுரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

எந்த நிலையில் பேசுகிறேன் என்றால் நீங்களெல்லாம் காலையிலிருந்து உட்கார்ந்து மிகச் சலிப்படைந்திருக் கிறீர்கள். என்னுடைய உடல் நலமானது மிக மோசமான நிலையிலிருப்பதோடு மிக வேதனையோடு இருக்கிறேன்; ஆஸ்பத்திரியில் இருந்து இந்நிகழ்ச்சிக்காகவே வந்திருக் கின்றேன்; முடிந்ததும் நேராக ஆஸ்பத்திரிக்குப் போக இருக்கின்றேன்; இது மாநாடு, என்றாலும் மாநாட்டிற்கு வரும் அளவிற்கு  மக்கள் வரவில்லை. நாளைக்கு நான் தலைமை வகிக்கும் படியான வாய்ப்பு இருப்பதால் நாளைக்கு நிறையப் பேச இருக்கின்றேன். நான் பேச வேண்டியது ஒன்றும் பாக்கியில்லை.

நீங்களும் கேட்க வேண்டிய அளவிற்குக் கேட்டிருக்கின்றீர்கள். இனி பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை, செயல் முறையில் ஈடுபட வேண்டும். அதற்கு உங்களை எல்லாம் உற்சாகப் படுத்தவே, இது போன்ற மாநாடுகள் கூட்டுக்கின்றோம். அது தான் இம்மாநாடு கூட்டுவதன் இலட்சியமாகும்.

திராவிடர் கழகம் என்றால் என்ன? அதன் கொள்ளை என்ன? அதனால் மக்கள் அடைந்த பலன் என்ன? அது எப்போது எதற்காகத் துவக்கப்பட்டது? என்பது பலருக்குத் தெரியாது. அதை முதலில் விளக்க வேண்டும். 1916-இல் முதன் முதல் தியாகராய செட்டியார், டி எம் நாயர் என்கின்ற இரு கனவான்களால் ஆரம்பிக்கப்பட்டது. காங்கிரஸ், பார்ப் பனர்களின் ஸ்தாபனமாக இருந்து வெள்ளையனுக்குத் துதி பாடியதால் அரசாங்கத்தில் பார்ப்பனர்களுக்கே, பதவி உத்தியோகங்களில் பங்கு பெறுவதைப் பார்த்துப் பார்ப்பன ரல்லாதாரும் உரிமைப் பெற வேண்டும் என்பதற்காக, பார்ப்பனரல்லாதார் இயக்கமாக ஆரம்பிக்கப் பட்டது. இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, பார்ப்பனர் அல்லாதாருக்கு, அரசாங்கம் பதவி உத்தியோகங்களில் பங்கு பெற ஆரம் பித்ததும், காங்கிரஸ் தாங்கள் மக்களின் நல்வாழ்விற்காகத் தொண்டு செய்வதற்காகப் பாடுபடுவதாகவும், பார்ப்பனரல் லாதார் கட்சி - ஜஸ்டிஸ் கட்சி பதவி வேட்டைக்காக உள்ள கட்சியாகும் என்றும், மக்களிடையே பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அதன் பலனாக காங்கிரசிற்குச் செல்வாக்கு ஏற்பட்டது. அப்போது நானும், சிலரும் அதன் நிர்மாணத் திட்டங்களை நம்பிக் காங்கிரசில் சேர்ந்து பிரசாரம் செய்து கொண்டிருந்தோம்: மக்களின் செல்வாக்கு அதிக மானதும் அதுவரை தேர்தலுக்கு நிற்பதில்லை என்றி ருந்த, காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தது.  நான் அதை எதிர்த்தேன். என் எதிர்ப்பை இலட்சியம் செய்யாமல் நிற்பது என்று தீர்மானித் தார்கள். அப்போது நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. நான் உடனே அதை விட்டு விலகி வெறியேறி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து, மக்களின் பகுத்தறிவற்ற தன்மைக்கும், மூட நம்பிக்கை - முட்டாள் தனத்திற்கும், இழிவிற்கும் அடிப்படையாக இருந்த கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பான், காங்கிரஸ் - காந்தி ஆகியவை ஒழிய வேண்டும் என்று பிரசாரம் செய்த தோடு பார்ப்பனரல்லாதார் இயக்கமான ஜஸ்டிஸ் கட்சியையும், ஆதரித்துப் பிர சாரம் செய்தேன். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோற்று ஜஸ்டிஸ் கட்சி பதவிக்கு வந்தது.

பிறகு நடைபெற்ற தேர்தலில் காங் கிரஸ்  வெற்றி பெற்று 1937-இல்  பதவிக்கு வந்ததும், 2000 பள்ளிக்கூடங்களை மூடியதோடு, இந்தியைக் கட்டாயப் பாடமாகிற்று; அத் தோடு நில்லாமல் ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்தவர்களின் ஜமீனில் சென்று தொல்லை கொடுத்தார்கள்; தொழில் செய்து கொண்டிருந்த ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களின், தொழிலாளர் களைத் தூண்டிவிட்டு ரகளை செய்யும் படிச் செய்தார்கள். ஜமீனுக்கு வரி செலுத் தக்கூடாது என்று விவசாயிகளிடையே பிரசாரம் செய்தார்கள்; இப்படிப்  பல வகையில் தொல்லை கொடுக்க ஆரம்பித்ததும்,  ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்த, பலர் அதை விட்டு விலக ஆரம்பித் தார்கள்; இப்படியே ஒவ்வொருவராக விலகிக் கொண்டி ருந்தால், கடைசியில் கட்சியே அழிந்து விட்டது என்றாகி விடும். இதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொப்பிலி முதலி யவர்கள் யோசித்து, தலைமைப் பதவியை என்னிடம் கொடுத் தால் கட்சி அழியாமல் நான் பார்த்துக் கொள்வேன் என்று தீர்மானித்து, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் காரணமாக நான் ஜெயிலிலிருந்து கொண்டி ருக்கும் போதே, என்னை ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்து விட்டார்கள்.

அதன்பின் 1944- இல் வெள்ளைக்காரன் ஆட்சி இருக்கும் போதே சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் நான், ஜஸ்டிஸ் கட்சி தேர்தலில் நிற்பது கூடாது, அரசாங்கப் பதவி- பட்டங்களை ஜஸ்டிஸ் கட்சியை சார்ந்தவர்கள் ஏற்கக்கூடாது என்கின்ற திட்டத்தைக் கொண்டு வருவது என்றிருந்தேன். இதைத் தெரிந்த படித்த பதவி ஆசை கொண்டவர்கள், எனக்குக் எதிராக கிளம்பி அந்த மாநாட்டிற்கு வேறு தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானித்து, எனக்கு எதிராக ஆட்களைத் திரட்டிக் கொண்டிருந் தார்கள். இது எனக்குத் தெரிந்ததும் நான் மாநாட்டிற்குப் போவதில்லை என்று தீர்மானித்து  ஈரோட்டிலேயே தங்கி விட்டேன். அப்போது அண்ணாதுரை அவர்கள் என்னிடம் வந்து, மாநட்டிற்கு நான் அவசியம் வர வேண்டுமென்று கேட்டார். நான் அங்குள்ள நிலைமைகளை விளக்கி என் திட்டங்களையும் சொல்லி, இவற்றை மாநாட்டில் தீர்மானமாகக் கொண்டு வருவதாக இருந்தால் நான் வருகிறேன், என்று சொன்னேன். அவர் ஒத்துக்கொண்டு வெளியூர் தோழர்கள் யாவரிடமும்  தீர்மானங்களை அனுப்பி அவர்கள் ஆதரவைப் பெற்ற தோடு, பல்லாயிரக்கணக்கான தோழர்களைச் சேர்த்து விட்டார். மாநாடு நடைபெறுகின்ற அன்று எதிரிகளைப் போல 4, 5 மடங்கு களுக்கு மேல் நம்மவர்கள் கூடிவிட் டார்கள்.  இதைக் கண்டதும் வரவேற்புக்குழுத் தலைவர் நம் பக்கம் திரும்பிவிட்டார்.  மாநாட்டுப் பந்தலில் டிக்கெட் இல்லாமலே எல்லோரும் நுழைந்து, எதிரிகளுக்கு ஒரு சிறுவாய்ப்பும் இல்லாமல் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததோடு என் தீர்மானங்கள் யாவற்றையும் அண்ணா துரை தீர் மானங்கள் என்கின்ற பெயரில் எதிர்ப் பில்லாமல் நிறைவேற்றினார்கள்.

அந்த மாநாட்டில் தான் இயக்கத்தின் பெயரைத் திராவிடர் கழகம் என்று மாற்றினார்கள்; அந்தத் திராவிடர் கழகத் தின் மாநாடுதான் அதாவது ஆதி ஜஸ்டிஸ் கட்சியின் பார்ப்பனரல்லாதாரின் மாநாடு தான் இதுவாகும்: இந்தக் கருத்துகளை 40 ஆண்டுக் காலமாக மக்களிடையே பிர சாரம் செய்ததன் காரணமாக, மக்களி டையே செல்வாக்கு அதிகரித்ததும், இதில் இருந்த சிலர் எத்தனை நாளைக்குப் பிரசாரத்தோடு மட்டும் நிற்பது, தேர்தலில் ஈடுபட்டுப் பதவிக்குப் போக வேண்டும் என்று கருதி, நம்மைப் பின்னேற்றம் என்றும், அவர்களை முன்னேற்றம் என்றும் சொல்லிக் கொண்டு, நம்மை விட்டு விலகிச் சென்றார்கள். நாம் அவர்களைக் கடுமையாக எதிர்த்தும் கூட பார்ப் பானின் முட் டுக்கட்டையால், வெற்றி பெற்றனர். காங்கிர சிலிருந்து, பார்ப்பானை வெளியேற்றி னாலும், பார்ப் பானைப் போலக் கருத்துள்ள பக்தவத்சலம், காமராசருக்குப் பின் ஆட்சிக்குவந்து காமராசர் செய்த நன்மைகள் எல்லாம் கேடாக நடந்து கொண்டதால்,  நாம் பக்தவத்சலம் ஒழிக  என்று ஒரு பக்கமும், தி.மு.கழகம் ஒழிய வேண்டும் என்றும் பிரசாரம் செய்ததால் இரண்டையும் கேட்ட மக்கள் தி.மு.கழகத்திற்கே ஓட்டுப் போட்டு அவர்களை வெற்றி பெறச் செய்து விட்டார்கள்.

வெற்றி பெற்றதும் தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நம்மைக் கேட்டுக் கொண்டார்கள்; அப்போது நாம் அவர் களை ஆதரிக்க வில்லை என்றால், அவர்கள் பார்ப்பனர்களிடமே சென்று விடுவர்; எனவே, நாம் அவர்களை ஆதரித்து வருகின் றோம். அதனால் பல நன்மைகளை நம் மக்கள் அடைந்து வருகின்றனர்.

நாமடைய வேண்டியதை நம் எண்ணிக்கைப்படி அடைய வேண்டும். பார்ப்பான் 100க்கு 3 பேர்கள்- அவர்கள் 100க்கு 100 பேர்களும் படித்திருக்கின்றார்கள்.  100க்கு 97 பேர்களாக இருக்கிற நாமும் 100க்கு 100 பேர்களும் படித்தவர்களாக வேண்டும், பதவி- உத்தியோகங்களில் நம் விகிதாசாரப் படி உரிமை பெற வேண்டும்.  100க்கு 3 பேர்களாக இருக்கிற பார்ப்பனர் தன் விகிதாசாரத்தைப் போல் 10, 15 பங்குக்கு மேல் அனுபவித்துக் கொண்டிருக்கின் றார்கள். நாம் நமக்குரிய பங்கையே இன்னமும்  பெற வில்லை, இந்த ஆட்சியின் மூலம் அதைப்பெற வேண்டும்.

கிராமம், நகரம் என்ற பிரிவு இருக்கக் கூடாது; நகரத்தைப் போலவே கிராமமு மிருக்க வேண்டும். நகரத் திலிருக்கிற வசதிகள் அத்தனையும் கிராமத்திலும் இருக்க வேண்டும். முதலாளி, தொழிலாளி என்பது தொழிலில் இருக்க வேண்டுமே தவிர, பொதுவில் இருவருக்கும் பேதம் இருக்கக்கூடாது. இருவருக்கும் சரிசமமான உரிமை இருக்க வேண்டும்.

காந்திக்குப் பின் நாட்டில் ஒழுக்கம், நாணயம், நேர்மை இவை எல்லாம் கெட்டு விட்டது. இப்போது தஞ்சாவூர் ஜில்லாவிலே கம்யூனிஸ்ட்கள் டிராக்டரைக் கொண்டு உழுவதைத் தடுக்கின்றனர்.

ஒருத்தன் சொத்திலே ஒருத்தன் போய்ப் புகுவதை அனுமதிக்கின்றான். நமக்கு உரிமையுள்ளதில் போய்ப் புகுவதில் என்ன தவறு? இந்தக் கோயிலைக் கட்டியது நாம்; அதற்கு வேண்டியவை அத்தனையையும் கொடுப்பது நாம். நமக்கு உரிமையான கோயிலுக்குள் நாம் போவது எப்படித் தவறாகும்?  நமக்கும் - கோயிலுக்கும் சிறிதும் சம்பந்தமில்லாத பார்ப்பான், உள்ளே இருந்து கொண்டு நம்மை வெளியே நில் நீ சூத்திரன் என்கின்றான். உள்ளே  வந்தால் சாமி தீட்டாகிவிடும் என்கின்றான். இன்னும் எத்தனை நாளைக்கு, நாம் இந்த இழிவைப் பொறுத்துக் கொண்டு சூத்திரனாக இருப்பது? நாம் இதை நீக்காமல் போனால் வேறு யார் வந்து நீக்குவார்கள் என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.

திராவிடர் கழகத்தின் இலட்சியம் மனிதன் மனிதத் தன்மையைப் பெற்று மனிதனாக வாழ வேண்டும் என்பது தானாகும். அதற்கு எதிராக உள்ள கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், சாதி ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும்.

நம் இழிவு பூரணமாக நீக்கப்பட்டு, மற்ற உலக மக்களைப்போல் நாமும் வாழ வேண்டுமானால்,  நாம் நம் நாட்டைப் பிரித்துக் கொள்ள வேண்டும். டில்லிக்கும், நமக்கும் சம்பந்தமில்லை என்று பிரிந்து கொள்ள வேண்டும். பிரிந்தால் நம் பிள்ளைகளும் நாளைக்குச் சந்திரனுக்குப் போவார்கள், நம் நாடும் மற்ற, நாடுகளைப் போல பல அதிசய, அற்புதங்களைச் செய்ய முடியும். மற்ற உலக நாடுகளைப் போல முன்னணியில் நிற்க முடியும்.  பிரிந்தால் எப்படி வாழ முடியும் என்று பயப்பட வேண்டிய தேவை இல்லை. துலுக்கன் 100க்கு 5 பேர்; அவன் தன் நாட்டைத் தனியாகப் பிரித்துக் கொண்டு வாழ்கின் றான், அவனுக்கு ஒன்றும் கேடு நேர்ந்து விடவில்லையே! இப்படி நமக்குப் பல இலட்சியங்கள் இருப்பதால் நாமெல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அன் போடு நண்பர்களாக இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர், நட்போடு  பழக வேண்டும்.

நாமெல்லாம், ஒருவர் என்கின்ற இன உணர்ச்சி பெற வேண்டும். நாய், நல்ல விசுவாசமுள்ள பிராணிதான் என்றாலும், அது அதை (நன்றியை) மனிதனிடம்தான் காட்டுகிறதே ஒழிய, தன் இனத்தைச் சார்ந்த வேறொரு நாயைக் கண்டால் குலைக்கும். அது போல் தான் நம் தமிழர்கள் நிலை இருக்கிறது. தங்கள் இனத்தை மாற்றானுக் குக் காட்டிக்கொடுப்பதும், தங்கள் இனத் திற்குத் துரோகம் செய்வதையுமே, கடமையாகக் கருதிக் கொண்டிருக் கின்றனர். இந்த நிலை ஒழிந்து மாற்றானுக்கு - பார்ப் பானுக்கு இருக்கிற இன உணர்ச்சியை நம் மக்கள் பெற வேண்டும். என்ன செய்தும் இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும். என்ன செய்தாலும் இது நம் ஆட்சி என்கின்ற உணர்ச்சி நம் மக்களுக்கு ஏற்பட வேண்டும்: இந்த ஆட்சி நம் இனத் தவர்கள் ஆட்சி, கண்டிப்பாய்ச் சொல்கிறேன், இவர்கள் காலத்திலேயே இந்தக் கோயில்களை எல்லாம் இடிக்கலாம். இன்னும் 10 வருஷம் இந்த ஆட்சி இருந்தால் நிச்சயம் ஒரு பார்ப்பான் இருக்க மாட்டான்; இருக்க நேர்ந்தால் பூணூலையும், குடுமியையும் வெட்டிவிட்டுக் கையிலே மண்வெட்டியோடு வந்துவிடுவானே!

பெண்களுக்கு, உரிமை கொடுக்க வேண்டுமென்று சொல்கிற, நான் ஒரு விஷயத்தில் பெண்களை ஆண்கள் கண்டிக்க வேண்டும் என்று சொல்கிறேன். எதில் என்றால், பெண்கள் கோயிலுக்குப் போவதை ஆண்கள் கண்டிக்க வேண்டும். அவர்கள் கோயிலுக்குப் போகவிடாமல் தடுக்க வேண்டும். சினிமாவிற்கும் அப்படித்தான், கண்டிப்பாய் சாம்பல், மண் பூசக் கூடாது. மத சம்பந்தமான விழாக்கள் பண்டிகைகள் கொண்டாடக்கூடாது.

நம் இயக்கத்தைப் பொறுத்தவரை நாம் அனைவரும் பகுத்தறிவு வாதிகள்; பகுத்தறிவுவாதிகள் என்பது அறிவுக்கு மட்டுமல்ல, மனித சமுதாயத் தொண்டிற்கும், முன்னேற்றத் திற்குமே ஆகும். நாம் பகுத்தறிவைப் பயன்படுத்துவது அதன் மூலம் மனிதனை முன்னேற்றமடையச் செய்யவும், மனிதனின் மூட நம்பிக்கையை ஒழித்து அவனை அறிவைக் கொண்டு சிந்திக்கச் செய்து, அறிவின்படி நடக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவுமே ஆகும்.

நம்மைச் சுற்றிலும் நம் எதிரிகள் இருக்கின்றார்கள்; எதிர் கருத்து உடையவர்கள் இருக்கின்றார்கள். நமக்கிருக்கிற மத சம்பந்தமான - அரசியல் சம்பந்தமான - ஜாதி சம்பந்தமான - கடவுள் சம்பந்தமான - பழைமை - வைதிக சம்பந்தமான எதிரிகளோடு பத்திரிகைகள் யாவுமே நம் கருத்துக்கு நேர்மாறான கருத்துகளைப் பரப்புவதாக, இருக்கின்றன என்றாலும், இவற்றை எல்லாம் எதிர்த்து நம் கருத்துகளைப் பரப்பிக்கொண்டு வருகின்றோம். இந்தப் பகுத்தறிவு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 45 வருடங்கள் ஆகின்றன. என்றாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நமது கொள்கைகளை விட்டுவிடவும் இல்லை, மாற்றவும் இல்லை. அடிக்கடி நம் திட்டங்களை மாற்றியமைத்து இருக் கின்றோமே ஒழிய, கொள்கையில் ஒரு சிறு மாற்றமும் செய்யவில்லை என்பதோடு, நம் கொள்கைகள் வளர்ச்சி யடைந்தே வந்திருக்கின்றன.

("விடுதலை", 02.08.1969)

தந்தை பெரியாரின் சமுகவியல் என்பது ஜாதி ஒழிந்த ஒன்றுபட்ட சமுதாயமே!

ஜாதி - தீண்டாமை ஒழிக்கப்படாதவரை  சமுக ஜனநாயகம் என்பது இல்லாத ஒன்றே!

தந்தை பெரியாரின் சமுகவியல் என்பது

ஜாதி ஒழிந்த ஒன்றுபட்ட சமுதாயமே!

ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கில் கொள்கைக் கொட்டுமுரசம்

- தொகுப்பு: மின்சாரம்








ஜாதி ஒழிக்கப்படாதவரை சமுக ஜனநாயகம் கிடையாது - கருவறையில் பல்லி நுழையலாம், கரப்பான்பூச்சி செல்லலாம்; தலித் ஒருவர் செல்லக் கூடாதா? தந்தை பெரியாரின் சமுகவியல் என்பது ஜாதி ஒழிந்த ஒப்புரவு சமுதாயமே என்கிற அரிய கருத்துகளின் கொட்டுமுரசமாக சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பெரு மக்கள் முழங்கினர்.

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி

ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கம் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். இராதா அரங்கத்தில் நேற்று (25.11.2017) இரவு 7 மணிக்குத் தொடங்கி நடத்தப்பட்டது. திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி வரவேற்புரை ஆற்றினார்.

அவர் தனது உரையில், 1957 நவம்பர் 26 அன்று தந்தை பெரியார் நடத்திக் காட்டிய ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப்  போராட்டத்தின் எழுச்சியை விளக்கினார். சட்டத்தை எரித்தால் மூன்றாண்டு தண்டனை என்று அவசர அவசரமாக சட்டம் கொண்டு வரப்பட்டும் அதனைப் பொருட்படுத்தாமல் 10 ஆயிரம் பேர் அந்தப் போராட்டத்தில் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொண்ட போர்க் குணத்தை விவரித்தார்.

திராவிடர் கழகப் பொருளாளர்

மருத்துவர் பிறைநுதல்செல்வி

திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் சு. பிறைநுதல் செல்வி அவர்கள் "பெண்களுக்கும் அர்ச்சகர் உரிமை" எனும் தலைப்பில் கருத்துரையாற்றினார்.

1981 மே 9 அன்று கரூரில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுவில்கூட இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுண்டு.

பெண்கள் அர்ச்சகர்களாக ஆகக் கூடாது என்று எந்த ஆகமத்திலும் சொல்லப்படவில்லை என்று கூறிய கழகப் பொருளாளர் அவர்கள்; ஆசிரியர் தலைமையிலேயே பெண்களும் அர்ச்சகர் ஆகும் உரிமையைப் பெற்றே தீருவோம் என்று சூளுரைத்தார்.

எழுத்தாளர் பழ. கருப்பையா

"தமிழில் வழிபாட்டு உரிமை" எனும் தலைப்பில் அவர் கூறியதாவது: வாழ் நாளிலேயே தனது கொள்கைகளை வென்றெடுத்தவர் தந்தை பெரியார். பெரியாரின் தேவை இன்னும் இருக்கிறது.

கடவுள் இல்லை என்பது தந்தை பெரியார் அவர்களின் இறுதி இலக்கு - அதுவரை அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, தமிழில் வழிபாட்டு உரிமை என்பது   அவரின் இடைக்கால இலக்கு என்று பளிச்சென்று பழ. கருப்பையா அவர்கள் சொன்னபோது, அதற்கு மன்றத்தில் பெரும் ஆரவாரக் கை தட்டல் கிடைத்தது.

பக்தி இயக்கம் என்பது ஜாதி எதிர்ப்பை உள்ளடக்கமாகக் கொண்டது என்றாலும் பவுத்த, சமண எதிர்ப்பைக் கொள்கையாகக் கொண்டது. பார்ப்பனர்களையும் அதன் உள்ளுக்குள் கொண்டு வந்தது. அதன் விளைவு கோயில்கள் எல்லாம் பார்ப்பனர்களின் ஆதிக்கக் கூடாரமாக ஆனதுதான் மிச்சம்.

அந்தப் பார்ப்பனர்களை அதிலிருந்து வெளியேற்ற அடுத்த பணியைத்தான் தந்தை பெரியார் செய்தார்.  அந்தப் போராட்டமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற நிலை ஏற்பட்டால் தந்தை பெரியாரின் அந்த நோக்கமும் நிறைவேறிடும் என்றார்.

கவுசல்யா சங்கர்

"ஜாதி வெறியும், ஆணவப் படுகொலையும்" என்ற தலைப்பில் அவர் கூறியதாவது: ஜாதி ஆணவம் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்ட சங்கரின்  வாழ்விணையர் கவுசல்யா சங்கரின் உரை  அவர் தெரிவித்த முறை நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

தன்னால் காதலிக்கப்பட்ட சங்கர் தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்தால், தன் கண் எதிரே தனது பெற்றோர்களின் தூண்டுதலால் படுகொலை செய்யப்பட்ட அந்தக் கொடுமையைக் குமுறும் நெஞ்சோடு அக்னிச் சொற்களைக் கொட்டினார். தானும் எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டார் என்பதை எல்லாம் விவரித்தார்.

நான் இன்னும் உயிர் வாழ்வதற்கே காரணம் இந்த ஜாதி ஆணவப் படுகொலையை எதிர்த்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே - அதற்குத் தந்தை பெரியார் என் தந்தையாக, தலைவராக, தோழராக, காதலராக இருக்கிறார் என்று நெஞ்சின் உணர்வுகளைக் கொட்டினார்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு என்ற அயோக்கியத்தனங்கள் பெண்கள்மீது திணிக்கப்பட்ட ஆண் ஆதிக்க கயமையையும் கடுமையாகச் சாடினார் வீராங்கனை கவுசல்யா.

சங்கர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றாலும், சங்கர் நினைவோடு, காதலோடுதான் நான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றது முத்தாய்ப்பான ஒன்றாகும்.

ஜாதி ஒழிப்புதான் என் காதலன் வெட்டப்பட்டபோது பீறிட்ட ரத்தத்திற்கு, நான் காட்டக் கூடிய கைம் மாறாகவும் இருக்க முடியும் என்னும் கொதி கலனாய் வெடித்தார் - வாழ்க  கவுசல்யாக்கள்!

வா. அரங்கநாதன்

"அர்ச்சகர் பயிற்சியும், நியமனமும்" எனும் தலைப்பில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற வா. அரங்கநாதன் தன் உரையில் குறிப்பிட்டதாவது:

இந்தப் போராட்டம் தந்தை பெரியார் காலத்திலிருந்து நமது ஆசிரியர் காலம் வரை  தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு  மேலாகவுமான பெரும் போராட்டத்தை நடத்தி அரசை, நீதிமன்றத்தை பணிய வைக்க வேண்டும் தலைவர் வீரமணி அவர்கள் என்று தம் உள்ளத்தைத் திறந்து காட்டினார்.

திருவண்ணாமலையில் அர்ச்சகர்களுக்கான பயிற்சி நடந்தபோது, பார்ப்பனர்கள் நடத்திய அட்டகாசங்களையும், வன்முறைகளையும் பட்டியலிட்டு, தங்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியரைப் பார்ப்பனர்கள் தாக்கியதையும் நினைவூட்டினார்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காகக் குரல் கொடுத்த - களத்தில் நின்ற தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் (செப்டம்பர் 17இல்) நாங்கள் மாலை அணிவிப்பது வழக்கம். அதை இந்து முன்னணிக்காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். எங்களுக்குப் பணத்தாசை கூடக் காட்டினார்கள் - பெரியார் சிலைக்கு நாங்கள் மாலை அணிவிக்கக் கூடாதாம் - கடைசியில் என்னைத் தாக்கவும் செய்தார்கள் என்று பார்ப்பனர்கள், இந்துத்துவாவாதிகளின் கீழ்த்தரப் போக்கை நார் நாராகக் கிழித்துத் தொங்க விட்டார்.

2006ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்த பிறகு, அதனை செயல்படுத்த தமிழக அரசுக்கு என்ன தயக்கம் என்று ஆணித்தரமான வினாவை எழுப்பினார்.

பொதுவாக அரசும் நீதிமன்றமும்கூட பார்ப்பனர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன என்பதையும் கூறத் தவறவில்லை தோழர் வா. அரங்கநாதன்.

பான்பராக்குப் போட்டுக் கொண்டு பார்ப்பனர்கள் ஹோமம் வளர்ப்பது, ஆறிப் போன காப்பியை சூடாக்க ஹோமத் தீயைப் பயன்படுத்துவதெல்லாம் பார்ப்பன அர்ச்சகர்களுக்கு சர்வ சாதாரணம் என்றும், அர்ச்சகப் பார்ப்பனர்களின்  ஆபாச சேட்டைகளையும் அக்குவேறு ஆணிவேறராகப் பிய்த்து எடுத்தார்.

மேனாள் துணைவேந்தர்

முனைவர் பெ. ஜெகதீசன்

கவுதமப் புத்தர் அரசை விட்டு வெளிவந்தார் என்றால், தந்தை பெரியாரோ அரசியலை விட்டு வெளியே வந்தார். ஆனாலும் இருவரும் சமூகப் பொருளாதார மாற்றத்திற்கான சிந்தனைகளை மக்கள் மத்தியில் வாரி இறைத்தவர்களே என்று தொடக்கத்திலேயே அழகாக விண்டுரைத்தார்.

புத்தர் ஒன்றும் போதி மரத்தில் ஞானம் பெறவில்லை. மக்களைச் சந்தித்துச் சந்தித்து நாடெங்கும் அலைந்து திரிந்து திரிந்து பெற்ற அனுபவமே அவர் பெற்ற ஞானமாகும். தந்தை பெரியாரும் அதே  நிலையினரே.

19ஆம் நூற்றாண்டினை மூன்று கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்.

ஒன்று வள்ளலார் அருளிய மனிதநேயமே அவருக்கு அடிப்படை.

இரண்டாவது மறைமலை அடிகளாரின் கருத்துகள் அவர் சமஸ்கிருதத்தை எதிர்த்தார்.

மூன்றாவது நீதிக்கட்சியின் பார்ப்பனர் அல்லாதார் கல்வி, உத்தியோகம், பதவிகளில் உரிமை என்பதுதான் அதன் நிலைப்பாடு.

நீதிக் கட்சியின் நீட்சிதான் திராவிட இயக்கம் என்று சொல்லக் கூடாது என்பதுதான் என் கருத்து. நீதிக்கட்சியிலிருந்து மிகப் பெரிய பாய்ச்சல்தான் திராவிட இயக்கம்.

நீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாதாரிடம் இருந்த ஜாதி நிலையைக் கண்டு கொள்ளவில்லை. அவையெல்லாம் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். பார்ப்பனர்களிடமிருந்து கல்வியையும், உத்தியோகத்தையும், பதவியையும் பெற்றுக் கொண்டால் மட்டும் போதும் என்கிற எல்லையோடு அவர்கள் நின்றனர்.

ஆனால் தந்தை பெரியார் அவர்களோ பார்ப்பனர்அல்லாதாரில் இருந்த ஜாதிகளின் பாகுபாடுகள் ஒழிக்கப்பட்டு அவர்கள் ஓரினம் என்ற கோட்பாட்டை நிலை நிறுத்தினார்.

சுயமரியாதை என்னும் தத்துவத்தை, அடிப்படையை தமிழர்கள் மத்தியில் ஊன்றினார்.

பார்ப்பனீயத்தால் நம்மினத்திற்கு ஏற்பட்ட தாழ்நிலையை, கீழ் நிலையை ஒழித்திட சுயமரியாதைத் தத்துவத்தைப் போதித்த தந்தை பெரியார், அத்தோடு நில்லாமல் நம்மிடையே உள்ள பாகுபாடு பேதங்கள், உயர் ஜாதி, தாழ்ஜாதி என்ற நிலை கூடாது என்பதை நிலை நிறுத்த பகுத்தறிவுச் சிந்தனையைப் புகுத்தினார் என்று மிக நேர்த்தியாக தந்தை பெரியாரியலைப் படம் பிடித்துக் காட்டினார்.

"சமூகவியலும் தந்தை பெரியாரும்" என்று அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் மேலும் பல எடுத்துக் காட்டுகளை எடுத்துக் கூறி விவரித்தார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் - திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவருமான முனைவர் பெ. ஜெகதீசன்.

இதழாளர் புனித பாண்டியன்

இதே தேதியில் இன்றைக்கு 67 ஆண்டுகளுக்கு முன் அண்ணல் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நிறைவை முடித்து வைத்து ஆற்றிய உரை ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்றாகும்.

தமிழில் வெளிவந்த அம்பேத்கர் அவர்களின் 30ஆம் தொகுதியில் அந்தவுரை வெளிவந்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து இருக்கிறது. ஒருவருக்கு ஒரு ஒட்டு என்ற உரிமை கிடைத்திருக்கிறது என்றாலும் ஜனாநயகம் இல்லாத ஒரு முரண்பாட்டு வாழ்க்கையில் நாம் நுழைகிறோம் என்று சொன்னார் - இன்று வரை அதே நிலைதான்.

2000 ஆண்டுகளாகவே மனுதர்மம் இங்கு கோலோச்சுகிறது. இடையில் முஸ்லிம்கள் வந்தனர், வெள்ளைக்காரர்கள் வந்தனர் என்றாலும் மனுதர்மம் ஒழிந்து போய்விடவில்லை.

இன்னும் பிறவிப் பேதம் ஒழிந்து போய்விடவில்லை இன்னும்  ஜாதி ஆணவக் கொலைகள் - 18 நிமிடத்திற்கு ஒரு தலித்துக்கு வன்கொடுமை இழைக்கப்படுகிறது. சட்டம் கூறும் சகோதரத்துவம் எங்கே இருக்கிறது?

அதனால்தான் அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் இந்து மதத்தின்மீது நெருப்பு மழை பெய்விக்கப்பட வேண்டும் என்றனர்.

தந்தை பெரியார் மில்லியன் டாலர் கேள்வி ஒன்றை முன் வைத்தார். வைக்கம் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்தபோது அவர் எழுப்பிய வினாதான் அது.

அய்ந்தறிவு உள்ள நாயும், பன்றியும் அந்தத் தெருக்களில் செல்லலாம். ஆனால் ஆறறிவுள்ள ஒரு தாழ்த்தப்பட்ட தோழர் ஏன் நடந்து செல்லக் கூடாது என்றார். கோயில் கருவறைக்குள் பல்லி செல்லலாம்; கரப்பான் பூச்சி செல்லலாம் -மனிதன் செல்லக் கூடாதா என்று கேட்டாரே!

நம் பயணம் பிரச்சாரம் தொடர்ந்தே தீர வேண்டும்  - மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாக வேண்டும் என்ற அரிய உரையை நிகழ்த்தினார் 'தலித் முரசு' ஆசிரியர் புனித பாண்டியன்.

கருத்தரங்கத் தலைவர் நீதிபதி து. அரிபரந்தாமன்

1925ஆம் ஆண்டில் தெருக்களில் தலித்துகள் நுழைவுப் போராட்டம், 1939இல் கோயிலுக்குள் நுழையும் போராட்டம், இப்பொழுது கோயில் கருவறைக்குள் நுழையும் போராட்டம் இந்த வளர்ச்சியைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், புதிய அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்குமுன் சொன்ன தீர்ப்புகளை எடுத்துக்காட்டி உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது யோக்கியமானதல்ல என்ற கருத்தையும் நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் குறிப்பாக எடுத்துக்காட்டினார் (முழு உரை பின்னர்).

(நேரத்தின் நெருக்கடி கருதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தன் உரையை நாளை (26.11.2017) நிகழ்த்துவதாகக் கூறி விட்டார்).

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி செயலாளர் ச. இன்பக்கனி நன்றி கூறினார். திராவிடர் கழக சட்டத்துறை அமைப்பாளர் ஆ. வீரமர்த்தினி இணைப்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மாதன், தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலரை அளித்தார்.


Saturday, November 25, 2017

பொறுப்பேற்க வேண்டியது மத்திய பிஜேபி அரசே!

மும்பை திரையுலகின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள Ôபத்மாவதிÕ திரைப்படம் டிசம்பர் முதல் நாளில் திரையிடப்பட உள்ளது. ராஜஸ்தான் ராணி பத்மாவதி கதாபாத்திரத்தை திரைப்பட நடிகை தீபிகா படுகோனே  ஏற்று நடித்துள்ளார். நடிகர்கள் ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

திரைப்படத்தில்  ராணி பத்மாவதி, அலாவுதீன் கில்ஜி ஆகியோருக்கிடையே காதல் காட்சிகள் ஏதும் கிடையாது என்று படக்குழுவினர் தரப்பில் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வந்தநிலையில், திரைப்படம் எடுக்கப்படும் போது, கடந்த மார்ச் மாதத்தில் கோல்காப்பூர் பகுதியில் திரைப்பட காட்சிப்பதிவுக்காக அமைக்கப்பட்ட அமைப் புகள் சூறையாடப்பட்டன.

கார்னி சேனா அமைப்பினர், ராஜ்புத் வகுப்புத் தலைவர்கள், ராஜஸ்தான் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் திவ்யா குமாரி உள்ளிட்டவர்களும் திரைப் படத்தை எதிர்த்து வருகிறார்கள். தற்போது வெளிப் படையாக பார்ப்பன அமைப்பும் எதிர்ப்பைத் தெரிவித் துள்ளது.

"பத்மாவதி திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்ன தாக மாநிலத்தில் உள்ள வல்லுநர்கள் 15 பேரைக் கொண்ட குழுவினர் பார்வையிட்ட பின்னரே அத்திரைப்படத்தை வெளியிட வேண்டும்" என்று ராஜஸ்தான் மாநில பார்ப்பன அமைப்பாகிய சர்வ் பிராமின் மகாசபா குறிப்பிட்டுள்ளது.

அலாவுதீன் கில்ஜி மற்றும் ராஜஸ்தான் ராணி பத்மாவதி ஆகியோரிடையே காதல் மலர்ந்ததாக அத்திரைப்படத்தில் காட்சி இடம்பெற்றுள்ளது என்று அத்திரைப்படத்துக்கு ராஜ்புத் எனப்படுகின்ற ரஜபுத்திர வகுப்பினர் மற்றும் காங்கிரசு கட்சியினர்  தரப்பில் விமர்சனம் வெளியானது.

சர்வ் பிராமின் மகாசபா மாநிலத் தலைவர் சுரேஷ் மிஸ்ரா இதுகுறித்து கூறியதாவது:

"பாலிவுட் பிரபல இயக்குநர் ஒருவர் என்னிடம் அத்திரைப்பட இயக்குநர் பன்சாலியின் சார்பில் தொடர்பு கொண்டு எங்களின் கோரிக்கைகள்குறித்து கேட்டார். மாநிலத்தில் உள்ள பல்துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் 15 பேரைக்கொண்ட குழுவினர் முன்னிலையில் அத் திரைப்படம் திரையிடப்பட வேண்டும். திரைப்படத்தைப் பார்த்த பின்னர் அக்குழு முடிவு செய்ய வேண்டும்.

கற்பனைகளின் அடிப்படையில் வரலாற்றிலுள்ள உண்மைகளை சிதைக்கக் கூடாது. அலாவுதீன் கில்ஜி, ராணி பத்மாவதி ஆகியோருக்கிடையே கற்பனையான காதல் காட்சிகள் இல்லை என்றே எண்ணுகிறோம். அப்படி இருந்தால், திரைப்படத்தை எதிர்ப்பவர்களை ஆதரிப்போம்.

திரைப்படம், குழுவினர் முன்பாக திரையிடப்பட வேண்டும். அப்படி நடைபெறவில்லை என்றால், அடுத்த கட்டம்குறித்து திட்டமிடுவோம். மாநிலத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளுக்கும் கடிதம் எழுதுவோம். அத்திரைப்படத்தைத் திரையிடக்கூடாது என்று குறிப் பிட்டு மாவட்ட அளவில் எங்கள் அமைப்பின்சார்பில் போராடுவோம்’’ என்றார்.

கார்னி சேனா மற்றும் பிற அமைப்புகள் அத்திரைப் படத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின. விரைவில் திரைப்படம் வெளியாகப்போகிறதே என்று அவர்களிடம் கேட்டதற்கு, "ராஜஸ்தான் பெருமை மற்றும் வரலாற்று நாயகர்களின் பெருமையை சிதைப்பதற்கு எதிராக இருப்பவர்களுடன் நாங்கள் இணைந்து போராடுவோம்" என்றனர்.

தற்போதும் டிவிட்டரிலும் படக்குழுவினர்  சார்பில் காதல்காட்சிகள் கிடையாது என்று தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

இருப்பினும், அத்திரைப்படத்தில் ராணிக்கும், கில்ஜிக் கும் இடையே காதல் காட்சிப்பதிவுகள் இல்லை என்று தெளிவுபடுத்திய பின்னரும், வரலாறை சிதைப்ப தாகக் கூறிக்கொண்டு, இந்துத்துவாக் கும்பல் எதிர்ப்பைத் தெரிவித்து வருவதன் உள்நோக்கம் வகுப்புவாதப் பிரச் சினைகளை உருவாக்குவதுதான்.

இந்து மதத்தைச் சேர்ந்த ராணி, முசுலீம் மதத்தைச் சேர்ந்த கில்ஜியுடன் இணக்கமாக இருப்பதாகப் படம் எடுப்பதா? அதை விட்டுவிடலாமா? என்று மதவெறிக்கு தூபம் போட்டு, கலவரத்தை ஏற்படுத்த வேண்டியதுதானே இந்துத்துவாக் கும்பலின் பணியாக இருந்து வருகிறது?

கருத்து சுதந்திரத்துக்கு தடைபோடும் பாசிச உணர் வுடன் உள்ள இந்துத்துவா கும்பல், திரைப்படத்தை எதிர்ப் பதன்மூலமாக மீண்டும் தன்னுடைய மதவெறி முகத்தை வெளிப்படுத்தத் தயங்கவில்லை.

திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகையின் தலைக்கு 5 கோடி ரூபாய் விலை பேசப்பட்டுள்ளது.

மதவாத சக்தியை அதிகாரப்பீடத்தில் அமர்த்தினால் அதன் கோர விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு இவை எல்லாம் கண் கண்ட எடுத்துக்காட்டுகள்.

வன்முறையைத் தூண்டும் பேச்சின்மீதும், அறிவிப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்காததன் விளைவுதான் நரேந்திர தபோல்கர், கோவிந்தபன்சாரே, கல்புர்கி, கவுரி லிங்கேஷ்களின் படுகொலைகள். இவற்றிற்கெல்லாம்  பொறுப்பேற்க வேண்டியது மத்திய பிஜேபி அரசே!

தந்தை பெரியார் கட்டளையை நிறைவேற்றுவோம் சென்னை மாநாட்டுக்கு வாரீர்!

ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் ஒரு மைல் கல்!

சூத்திரப் பட்டத்தை ஒழிப்போம்!

தந்தை பெரியார் கட்டளையை நிறைவேற்றுவோம்

சென்னை மாநாட்டுக்கு வாரீர்!



http://viduthalai.in/images/stories/dailymagazine/2017/nov/6/s8.jpg

25.11.2017 சனியன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருக்கும் ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கம், 26.11.2017 ஞாயிறன்று மாலை நடைபெறவிருக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வலியுறுத்தும் மாநாடு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும், அதில் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் திரண்டு வருவதன் அவசியம் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பார்ப்பனர் அல்லாத தமிழினப் பெரு மக்களே! இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நாம் எல்லாம் இந்து மதத்தில் வருண தர்மப்படி சூத்திரர்களாம், அதாவது பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாம்!

தமிழன் கட்டிய கோயில்களில்

தமிழன் அர்ச்சகனாகக் கூடாதா?

நம் தமிழ் அரசர்கள் கட்டிய கோயில்களில் தமிழர்களாகிய நாம் கர்ப்பக்கிரகம் சென்று பூஜை செய்தால் சாமி தீட்டுப்பட்டு விடுமாம் - செத்துப் போய் விடுமாம்!

நமது தமிழக அரசு பல சட்டங்களை நிறைவேற்றும் பொழுதெல்லாம் சங்கராச்சாரியார், ஜீயர் போன்றவர்களின் எல்லா வகையான ஆசீர்வாதம், பொருளாதாரங்களின் துணையோடு உச்சநீதிமன்றம் சென்று முடக்கி விடுகிறார்கள்.

உச்சநீதிமன்றம் என்ன கூறுகிறது?

ஆனால், உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று திட்டவட்டமாகத் தீர்ப்புக் கூறி விட்டது (6.12.2015).

இதன் அடிப்படையில் அ.இ.அ.தி.மு.க. அரசு நினைத்தால்  இந்து அற நிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சியை முறையாகப் பெற்றுள்ள அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்குக் கடிதங்கள் எழுதப்பட்டும் ஒரு வரி பதில்கூட இல்லை.

கேரளாவுக்கு ஒரு சட்டம்

தமிழ்நாட்டுக்கு வேறொரு சட்டமா?

இதற்கிடையே அண்டை மாநிலமான கேரளாவில் தாழ்த்தப்பட்டவர் 6 பேர் உட்பட பிற்படுத்தப்பட்டவர்களும் அடங்கிய  62 பேர்களுக்கு அர்ச்சகர்களாகப் பணியாற்றிட மாநில அரசு ஆணை பிறப்பித்து, அவர்களும் அர்ச்சகர் பணியைத் தொடங்கி விட்டார்கள்.

கேரளாவுக்கு ஒரு அரசியல் சட்டம் என்றும், தமிழ்நாட்டுக்கு வேறொரு அரசியல் சட்டம் என்றும் கிடையாது. கேரளாவை முன் மாதிரியாகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படலாம்.ஆனால் வேதனைக்குரிய நிலை என்னவென்றால், எதிலும் செயல்படாத அரசாகக் கூனிக் குறுகி விட்டது தமிழ்நாடு அரசு.

தந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவிக்கப்பட்டதுதான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கானப் போராட்டம்.

பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளோம் - பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருக்கிறோம்.

இனிமேலும் நாம் இதில் தாமதத்தை அனுமதிக்க முடியாது.

வரும் சனியன்று கருத்தரங்கம்

ஞாயிறன்று மாநாடு

அந்த வகையில் வரும் சனியன்று (25.11.2017) மாலை நடைபெறும் ஜாதி தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கமும், ஞாயிறன்று மாலை (26.11.2017) நடைபெறும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையைச் செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடும் நடைபெற உள்ளன.

சமூக நீதியில், சமத்துவச் சிந்தனையில், ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் அக்கறை உள்ள தலைவர்கள் எல்லாம் கருத்தரங்கத்திலும், மாநாட்டிலும் பங்கேற்க இருக்கிறார்கள்.

தீர்வு காண்போம் - வாரீர்!

இம்மாநாட்டின் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் வாருங்கள், சூத்திர இழிவை இன்னும் எவ்வளவுக் காலத்திற்குத் தாங்கிக் கொண்டிருப்பது?

"மானமும், அறிவும் மனிதனுக்கழகு - சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!" என்ற நமது அருமைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கோட்பாட்டை நிலை நிறுத்த வாரீர், வாரீர்! என்று அனைவரையும் அழைக்கிறோம்.

இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மனித உரிமை சமத்துவம் மட்டுமே உண்டு - வாரீர்! வாரீர்!!

 கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
24-11-2017

Wednesday, November 22, 2017

தமிழகத்தில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு இப்பொழுது நடைபெறுகின்ற தமிழக அரசினை மக்கள் வீட்டுக்கு அனுப்புவதுதான்

திருவாரூர், நவ.21 தமிழகத்தில் நிலவுகின்ற பிரச்சி னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு இப்பொழுது நடை பெறுகின்ற தமிழக அரசாங்கத்தை எவ்வளவு விரைவில் மக்கள் வீட்டுக்கு அனுப்புகிறார்களோ, அப்பொழுதுதான் இதற்கெல்லாம் விடிவு ஏற்படும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களிடையே கூறினார்.

திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூற இன்று (21.11.2017) திருவாரூருக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பவுத்திரமாணிக்கத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்..
அவரது பேட்டி வருமாறு:

தூர்வாருவதும், குடிமராமத்து செய்வது என்பது எப்பொழுது வடகிழக்குப் பருவ மழை ஆரம்பிக்கிறதோ அல்லது தென்மேற்குப் பருவ மழை ஆரம்பிக்கிறதோ அதற்கு முன்பே அதனைச் செய்யவேண்டும் என்கிற ஒரு சாதாரண நிலைப்பாட்டைக் கூட எடுக்காமல், அவ்வப்பொழுது ஏதோ நடத்தினோம் என்று அதனைக் கணக்குக் காட்டுவதற்காக அதைப் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு அரசாங்கம் இருக்கக்கூடாது.

விவசாயிகளின் குறைகளைத் தெரிந்துகொண்டு...

நாகை, திருவாரூர் பகுதிகள் எந்த ஒரு சிறு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வந்தாலும் பாதிக்கக் கூடிய பகுதிகளாகும். ஆகவே, அதனைத் தடுப்பதற்கான நிரந்தரமான தடுப்பு, அந்த ஆபத்துகளிலிருந்து குடிமக்களை, குறிப்பாக விவசாயிகளை பாதுகாக்கக் கூடிய ஏற்பாடுகளை அவர்கள் செய்யவேண்டும். அதுதான் மிக முக்கியம்.

எனவேதான், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரிடையாகச் செல்லவேண்டும் என்பதற்காக, பவுத்திர மாணிக்கம், மஞ்சக்குடி (குடவாசல்), சோழங்கநல்லூர், கொட்டாரக்குடி, ஒக்கூர், செருநல்லூர், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம் போன்ற பகுதிகளுக்குச் செல்வதற்காக வந்திருக்கின்றோம்.

நேரிடையாகச் சென்று விவசாயிகளின் குறைகளைத் தெரிந்துகொண்டு, அறிக்கைகள் எழுதவும், அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காகவும்தான் இங்கே வந்திருக்கின்றோம்.

நியாயவிலைக் கடையே கிடையாது என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

செய்தியாளர்: நியாய விலைக் கடைகளில் சர்க்கரை விலை இரண்டு மடங்காக உயர்த்தியும், உளுத்தம்பருப்பு கிடையாது என்று படிப்படியாக ஒவ்வொரு பொருளாகக் கிடையாது என்கிறார்களே,  அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர் ஆசிரியர்: கடைசியாக நியாயவிலைக் கடையே கிடையாது என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்று சொன்னால், படிப்படியாக மத்திய அரசு பொருள்களைக் குறைத்துக்கொண்டு வரும்பொழுது, நம் அரசாங்கம் தட்டிக் கேட்கக் கூடிய நிலையில்  இல்லை. மத்திய அரசாங்கம் எதைச் சொல்கிறதோ, அவர்கள் சர்க்கரை விலையை உயர்த்துகிறார்கள் என்று சொல்லும்பொழுது, தீபாவளிப் பண்டிகை நேரத்தில், எங்களுக்கு அந்தப் பண்டிகையில் உடன்பாடு இல்லை என்று சொன்னாலும், மக்கள் கொண்டாடக் கூடிய நேரத்தில், சர்க்கரை விலையை ஏற்றினார்கள். சர்க்கரை கசந்தது.

இப்பொழுது உளுத்தம் பருப்பு இல்லை என்று சொல்கிறார்கள். சிறிது நாள்களுக்குப் பிறகு அரிசி யும் இல்லை என்கிற நிலை வரலாம். காரணம் என்னவென்றால், ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டு விட்டார்கள். ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இருந்தபொழுது, அந்தத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், இன்றைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் மத்திய அரசாங்கத்தின் உணவுத் திட்டத்தை ஒப்புக் கொண்டதின் விளைவு, அவர்கள் கேட்பதற்கு முன்பே, இவர்கள் குனிந்து கொடுக்கக் கூடிய அளவிற்கு இருப்பது, சங்கடமான ஒரு சூழல். இதனையெல்லாம் கண்டிக்கக் கூடிய ஒரு அரசாங்கம் வரவேண்டும். அந்த மாற்றம் வந்தாலொழிய தனித்தனியே இதற்குப் பரிகாரம் என்பது கிடையாது.
பயந்து போயிருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம்தான்

செய்தியாளர்: தமிழக ஆளுநரின் ஆய்வுகளைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, நிர்வாகத்திற்கு ஏற்றதல்ல என்று சொன்ன பிறகும், நேற்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்வோம் என்று தெரிவித்திருப்பதுபற்றி...?

தமிழர் தலைவர் ஆசிரியர்: ஜனநாயக ரீதியாக, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அதனை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள். கண்டிக்கவேண்டிய  தமிழக அமைச்சர்கள் அதனை கண்டிக்காததோடு, அது தவறில்லை என்று, ஆளுநரின் பக்கம் சாய்ந்துகொண்டு, சரியாகத்தான் அவர் செய்கிறார் என்று சொல்கிறார்கள் என்றால், அவர்கள் எவ்வளவு பயந்து போயிருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம்தான் இது.

இந்த அரசாங்கத்தை எவ்வளவு விரைவில் மக்கள் வீட்டுக்கு அனுப்புகிறார்களோ...

செய்தியாளர்: டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வேற்று மாநிலத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்கிற ஒரு தகவல் வெளியாகியிருக்கிறதே...?

தமிழர் தலைவர் ஆசிரியர்: முதன்முதலில் அதனைக் கண்டித்து அறிக்கை விடுத்தது திராவிடர் கழகம்தான். ஏற்கெனவே பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள விரிவுரையாளர் பணிகளில் இது நடைபெற்று இருக்கிறது.

யாருக்கும் தெரியாமல், தமிழ்நாடு பப்ளிக் சர்வீசு கமிசன் ஆக்ட்டை - அந்த சட்டத்தைத் திருத்தி யிருக்கிறார்கள் என்பது வெளியில் தெரிந்திருக்கிறது. வெளி மாநிலத்தவருக்கு கதவு திறந்துவிடும் நிலை இருக்கக் கூடாது.

இன்னுங்கேட்டால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்கள் பணிக்கே வர முடியாத சூழல் இருந்தது. அதையெல்லாம் இன்றைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறக்கவிடும் பின்னணிபற்றி தெரியவில்லை.

‘நீட்' தேர்வில் வெளி மாநில மாணவர்கள் ஏராளமாக உள்ளே வந்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் போக்கவேண்டும் என்றால், இந்த அரசாங்கத்தை எவ்வளவு விரைவில் மக்கள் வீட்டுக்கு அனுப்புகிறார்களோ, அப்பொழுதுதான் இதற்கெல்லாம் விடிவு ஏற்படும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

செய்தியாளர்களிடையே கூறினார்.

கார்த்திகை தீபத்தின் கதையளந்த கதை கேளீர்! (2)

- இரா.கண்ணிமை

நேற்றைய தொடர்ச்சி...
சைவசமய விளக்கத்தின்படி - பிறந்தவன் ஒருவன் - தன் பாவம் தீர்ந்து கைலாயம் சேர்ந்து முக்தியடைய - எண்பத்து நான்கு லட்சத்து யோனி வழியாய் - மாறி மாறிப் பிறந்து அப்பிறவிகளில் செய்யும் புண்ணிய பலத்தால் - இறுதியில் கைலாயம் சேர்வது உண்மையான முறை என்றால் - இதுவரை விளக்கிக் காட்டியுள்ளதில் - சிலவற்றைக் கொண்டு - மாபெரும் தீங்கினைச் செய்தோர் - மிகச் சுலபமான முறையை அனுசரித்து - கைலாயஞ் சேர்ந்தார்கள் என்று தெளிவாக கூறி இருப்பதால் - இவற்றில் எதைத்தான் - வேதாந்த விதிமுறை என்று நம்புவதென நீங்களே தீர்ப்பிடுங்கள்.
எண்பத்து நான்கு லட்சம் யோனியுள்ள உயிர்களில் - மனிதன் மட்டுமே தெய்வ நம்பிக்கையும், பயபக்தியும் நிறைந்தவனாகவும், இருக்கிறானாம். அப்பக்தியைப்பெற விதி பிரமாணங்களும் கைக்கொண்டு நடக்கவேண்டிய நியமங்களும் உண்டாம். ஆனால் இங்கு காணும் விளக்க திருஷ்டாந்தங்களில் - சுவாமி பிரசாதத்தை திருடப் போனவன் - தனக்குப் போதுமான வெளிச்ச மில்லையென - விளக்குத்திரியைத் தூண்ட, சிவனுக்கும் வெளிச்சம் கிடைத்ததென்று சிவன் அவனை தனக்குத் தோழனும், அழகாபுரிக்கு அரசனும், திக்குப்பாலகரில் ஒருவனும் - குபேரனுமாக்கி - மேன்மைபடுத்தி முக்திய ளித்தது எத்தனை வீணான செயல்கள்?
அவ்வாறே ஆகாரம் தேடி பூமியைக் கிண்டிக் கிளரின எலிக்கும் முத்தி கிடைத்திருக்கிறதாம். தாமரை நூலால் திரியிட்டு, நெய் விளக்கேற்றுவோர்க்கு இறப்பு, பிறப்பு, இல்லாத முக்தி கிடைக்குமாம். நெய்யைத் திருடிக் குடிக்க வந்த எலி - மூவுலகையும் ஆளும் கக்கர வர்த்தியாக்கி - முக்தியும் பெற்றிருக்கிறது.
ஆனால் இதற்கு மூலகாரணமாய், நெய்விளக்கேற்றி வைத்த பக்தனுக்கு ஒரு வரமும் கொடுக்கவில்லை. எத்தனைபரிதாபம் பாருங்கள்! பாதகனான பிராமணனை (பார்ப்பனன்) புலி கொள்ள, அவன் மீண்டும் நரகத்தில் வதைபடுகையில் அவனது இடக்கால் எலும்பை கழுகு கவ்வித் தூக்கிக் காசிக்குக் கொண்டு போய் கங்கை நதியில் போட்டதால் - பிராமணன் நரகத்தை விட்டெ ழுந்து - புஷ்ப விமானத்திலேறி நாகலோகப்பதவி பெற்றான் என்பது - எப்படித் தோன்றுகிறது? இத்தனை விரைவில் முக்தி கிடைப்பது உண்மையானால் - மற்ற பூசைகள - பலிகள் எதற்கு? இவ்வகையில் முக்தி சேர முடியுமானால் - அவையொன்றும் அவசியமில்லையே! சிறு சிதம்பரமென்னும் விராடபுருடஸ்தல தரிசனை செய்வோர்க்கு - பிரம்மா, விஷ்ணு, காணா மோட்சம் கிடைக்குமாம். மும்மூர்த்திகளில் சிரேஷ்ட பதவி வகுத்து விதி எழுதும் பிர்மாவுக்கும், ரட்சிக்கும், விஷ்ணுவுக்கும் தெரியாத மோட்சம் எங்கேயிருக்கும்? சிந்தித்துப் பாருங்கள்!
விருத்தாசலத்தில் இறந்தோர் வீங்கி வெடிக்காது, பூச்சி, புழுசேராது நாற்றமின்றி செத்த பிணத்தின் வலச்செவியில் சிவன் வந்து பேசி காப்பாராம். செத்த பிணத்துடன் சிவன் பேசுவது உண்மையென்றால் - யாரோடு எப்படி பேசமுடியும்? அதற்கு உயிர் இல் லையே! இதுவல்லாது - சிதம்பர தரிசினையும், காசியில் இறப்பதும் - திருவாரூரில் பிறப்பதும் -  அருணாசலத்தை நினைப்பதும் - முக்தி தரும் என்பது முன்னுள்ள எல்லா வற்றிலும் மிக மிக சுலபமான வழியல்லவா? எங்கிருப் போரும் திருவாரூரில் போய் பிரசவித்து பிள்ளைகளைப் பெறுவதாலும், சிதம்பரத்தை தரிசிப்பதாலும், காசியில் போய் இறப்பதாலும் - அருணாசலத்தை நினைப்பதாலும் முக்தியடைந்துவிடலாமல்லவா? காலம் முழுதுமே பஞ்சமா பாதகங்களைச் செய்து கடைசியில் மேலே சொன்னபடி முக்தி பெற வழியுண்டென்றால் - பாவத்தை செய்வோரெல்லாம் புண்ணியம் செய்வோர் போலவே தங்களைத் திடப்படுத்திக் கொள்வார்களல்லவா?
இவ்வகையில் முக்தி பெறுவது முற்றும் சாத்திய மானதுதானா? தாயைப் புணர்ந்து, தந்தையைக் கொன் றோன், சகோதரனைக் கொன்றோன், தீர்த்தமாடி முக்தி சேர்ந்தான் என்றால் - இவ்வகையில் பாதகம் புரிவோரை - பின்னும் எவ்வளவு பலப்படுத்தி விடுகிறதென்று பாருங்கள். தாமிரவருணிமகத்துவ மகிமை - அதில் பத்து பணவிடை தண்ணீர் சாப்பிட்டால் சகல பாவங்களும் போய்விடுமென்றால் - அந்த ஆற்று நீரை பயன்படுத்தும் வாய்ப்புடையோர் அனைவரும் தாங்கள் செய்த பாவம் போக்கப்பட்டு நல்லவர்கள் போலவே காட்சியளிப் பார்கள் போல் தெரிகிறதே! இந்த நீர் கிடையாத எல் லையில் - இந்த நீரால் விளைந்த உணவு தானியங்களைப் புசிப்போர் பாவம் தீர்ந்து முக்தி பெறலாமென்பது - எத்தனை சுருக்கமான வழியென்று பாருங்கள்!
அந்த தானியங்களைப் புசிப்போர் நல்லவர்களாய் காண்பது மன்றி அவற்றை சேமித்து வைத்து பாதகர் களுக்கு பரிமாறி பாவங்களை களைந்து - சொர்க்கத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கலாமே! இவை அனைத்தும் பச்சைப் பொய்யும், தவறான நம்பிக்கையை ஊட்டும் - மாறாட்டமான வழியென்று இன்னும் உணர்வாரில் லையே! அப்படியே காவிரியாற்றுத் தீர்த்தமும் இக் கதையை நம்ப இடமளிக்கிறது. இவ்வாறே நாய்காலில் ஒட்டிய சாம்பல்  பிணத்தை மிதித்துக் கொண்ட கதையும். மோட்சத்திற்கு எவ்வளவு சுலபமான குறுக்கு வழி பாருங்கள். முக்திசேர விரும்புவோர்க்கு இவ்வழிகள் எவ்வளவு எளிதான வகையில் சேரும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதை பாருங்கள்.
இப்படியே நரகத்தில் வெந்து வேதனையை அனுப விப்போர் தன்மகன் மண்ணைச் சிவலிங்கமாய் கட்டி விளையாடியதால் நரகத்தை விட்டெழும்பி கைலாயம் போய் சேர்ந்தானென்பதும் மாபெரும் கேடான முறை யல்லவா?
தாமிரவருணி நீரில் குளித்தாலும், குடித்தாலும் அனைத்துப் பாவங்களும் தீரும் என்பதும், தண்ணீர் இல்லாத இடத்தில் இந்த நீரில் விளைந்த உணவுத் தானியங்களைச் சாப்பிட்டால் - சர்வ பாவங்களும் நீங்கும் என்பதும், கங்கை முதல் பதினொன்று நதிகளில் மூழ்கினால் பஞ்சமா பாதகங்களும் நீங்கி, முக்தி சேர் வார்களென்பதும் உண்மையானால் வேதம், சாத்திரம், புராண விசுவாசம் மற்றுள்ள சடங்குகள் அவசிய மில்லையே! பூசை, பலி, ஆலயம் தொழல் அவசிய மில்லையே! இவை அனைத்தும் வீண். வேத வழிபாடு களுக்குப் பொருந்தாத அஞ்ஞான செயல்கள், பொய் நம்பிக்கைகள் என்பதை ஞானிகள் விளக்கியுள்ளனர்.
அகப்பேய் சித்தர் பாடல்
தீர்த்தமாடினாலும் அகப்பேய் தீவினை போகாதே
ஊத்தை போனாலும் பேயுள்வினை போகாதே!
ஆறுகண்டாயே யகப்பேய் அந்தவினை தீர
தேரித் தெளிவதெல்லா மகப்பேய் தீர்த்தமாமாடியோ
காசிக்குப் போனாலு மகப்பேய் மந்துலையாதே
பூசித்து வந்தாலு மகப்பேய் புண்ணியங்கிட்டாதே!
சிவ வாக்கியர்
காணவேணுமென்று நீர்கடல் மலைகளேறுவீர்
ஆணவமதல்லவோ அறிவில்லாத மூடர்காள்
வேணுமென்றே ஈசர்பாத மெய்யுளே விளங்கினால்
காணலாகும் நாதனை கலந்துநின்ற ஜோதியை
தூர, தூர, தூரமென்று சொல்லியோடும் வீணரே
பாரும் விண்ணு மெங்குமாய் பரந்த மெய்பராபரம்
ஊருகாடு போயுழன்று நின்றுதேட வேண்டுமோ
நேரதாக உம்முனே நினைத்தறிந்து கொள்ளுமே!
பாம்பாட்டிச்சித்தர்
நாலுமீனை பலதரம் நல்ல தண்ணீரால்
நாளுங் கழுவினு மதன்நாற்றம் போமோ
கூறுமுடல் பலநதி யாடிக் கொண்டதால்
கொண்டமலம் நீங்காதென் றாடாய் பாம்பே!
வேறு விருத்தம்
ஒரு நாள் கடல்மூழ்கி உள்ளபாவமெல்லாம்
தீருமென்றால்
பல நாள் கடல் மூழ்கும் செம்படவர்க்கு
பாவமுண்டோ நயினாரே!
சிவ வாக்கியர்
காலை, மாலை நீரிலே முழுகுகின்ற மூடர்காள்
ஊழிகாலம் நீரிலே யுதிக்கும் தேரைக் கென்பலன்
காலமே யெழுந்திருந்து கண்கள் மூன்று தோன்றிலே
மூல, மூல மென்பீறாகில் முக்திசேர லாகுமே!
இப்பாடலின் கருத்தனைத்தும் இவ்வித நீராடல் - ஆலயம் வலம் வரல், புண்ய நதிகளில் மூழ்கி, பூசை, பலியிடல் யாவும் வீண் - வீண் என்று காட்டுகிறதே! மனிதன் முக்திபெற இதெல்லாம் தேவையில்லை. எதையும் ஆராய்ந்து மெய்யறிவை கடைபிடித்தலே நன்று. மேலும் அனைத்து பாவங்களுக்கும் அடிமைப் பட்டு - வெளிச்சடங்குகளான புண்ணியத் தீர்த்தமாடல் போன்ற நம்பிக்கையை அறவே வெறுத்துவிட்டு பொய்போதனைக்குச் செவி மடுக்காது நல்ல வழியைக் கடைப்பிடித்தலே நன்று என்னும் ஒரு மனப்பட்ட உள்ளத்தை வருவாக்குங்கள்.
கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே நாடெங்கிலு முள்ள சிவன் கோயில்களில் சிவபூஜை செய்வதும் - காடெல்லாம் - வீடெல்லாம் - காடை விளக்கேற்றுவதும் - வாடிக்கை - வேடிக்கை. குறிப்பாக அண்ணாமலையாருக் கும், உண்ணாமுலையாருக்கும் அரோகரா போட்டு மக்கள் மொட்டையடித்து - பட்டைபோட்டு திருவண் ணாமலையில் கிரிவலம் வருகிறார்கள். டன் கணக்கில் நெய்யை கொப்பரையில் ஊற்றி - மனிதசக்தியைக் கொண்டு மலைமேல் தீபம் ஏற்றுகிறார்கள்.
கார்த்திகையின் - கதையை - சிவபூஜைகளின் கதையை - அவர்கள் எழுதிவைத்தப்படியே சொல்லி விட்டோம். சிவனடியார்களே! என்ன சொல்லப் போகிறீர்கள்?

கடவுள் நம்பிக்கையும் 'தினமலர்' தலையங்கமும்

அதிகார பூர்வமற்ற சங்பரிவார் நாளேடான 'தினமலர்' தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள்ளது. "நாட் டில் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடவுள் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. நரேந்திர மோடி கோயிலுக்குச் செல்லுகிறார். பீகார் முதல் அமைச்சர் நிதீஷ்குமார் நவராத்திரி சமயத்தில் பாட்னாவில் சில கோயில்களுக்குச் சென்று சாமி கும்பிட்டார். உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் ஆதித்யநாத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்; பா.ஜ.க., தலைவர் அமித்ஷாவும் ஆத்திகக் கருத்துக் கொண்டவர்; இந்திராகாந்தி கோயிலுக்குச் சென்றார். திராவிட இயக்க அரசியல் கட்சிகளின் வீட்டைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குச் செல்கின்றனர்.

முதல்வர் பழனிச்சாமி திருப்பதி சென்று வருகிறார். கடவுள் மறுப்புப் பிரச்சாரம் தமிழ்நாட்டில் குறைந்து விட்டது" என்று, தான் ஏற்றுக் கொண்டுள்ள அல்லது தான் சார்ந்துள்ள அமைப்புகளுக்கு ஏற்ப எழுதுகோலை நீட்டியுள்ளது 'தினமலர்' ஏடு.

கடவுள் நம்பிக்கை - கடவுள் நம்பிக்கையற்ற தன்மை என்பது வெறும் எண்ணிக்கையைப் பொறுத்து முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல; மண்டைகளின் எண் ணிக்கையைவிட மண்டைக்குள்ளிருக்கும் மூளையின் வலிவை விரல் விட்டு எண்ணி முடிவு செய்திட முடியாது.

அரசியல் தலைவர்கள் கோயில்களுக்குச் செல்லு வதற்கு ஒரு காரணம் உண்டு. இது பற்றி இந்திரா காந்தி அம்மையார் சொன்னதை இவ்விடத்தில் எடுத்துக் காட்டுவது மிகவும் பொருத்தமானது.

"வழக்கமாகக் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. நான் கோயிலுக்குச் சென்றால் சிறுபான்மையினரின் நலனுக்காக நான் கூறுவதை மெஜாரிட்டி சமூகத்தினர் தயாராக ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்"  ('தினமணி' 27.3.1983).

இப்படிப்பட்ட இந்திராவை, தன் சாட்சிக்குத் 'தினமலர்' அழைப்பதுதான் வேடிக்கை!

கடவுள் பக்தி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது, தலைவர்கள் கோயிலுக்குச் செல்லுகிறார்கள் என்று மார் தட்டிக் கொள்வதில் போற்றத்தக்கப் பொருள் இருப்ப தாகக் கூற முடியுமா? என்று சவால் விட்டே கேட்க முடியும்.

இந்து மதத்தின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத் தின் ஒரு பாகமாக  இருக்கக் கூடிய உத்தர கீதை என்ன சொல்லுகிறது என்று பார்க்கலாம்.

துவி ஜாதியினருக்கு அதாவது பார்ப்பனர்களான இரு பிறவியாளர்களுக்கு (பூணூல் தரித்தபின் இரு பிறவியாளர் ஆகிறார்களாம்) கடவுள் அக்னியில், முனிவர்களுக்குக் கடவுள் இருதயத்தில், புத்தி குறைந்த வர்களுக்குக் கடவுள் சிலையில், சம பார்வை உள்ளவர் களுக்குக் கடவுள் எங்கும் என்று கூறுகிறது உத்தர கீதை.

இதில் 'தினமலர்' பெருமைப்பட்டுக் கொள்ள என்னவிருக்கிறது? கோயில்களுக்குச் சென்று கடவுள் சிலைகளைக் கும்பிடுபவர்கள் மூடர்கள் என்று ஆகி விட்ட பிறகு கோயில்களுக்குச் செல்பவர்களின் எண் ணிக்கை அதிகரித்து விட்டது என்று பெருமை பேசுவது நகைப்பிற்குரியதே!

அதைவிடக் கேவலம் ஒன்று உண்டு. இன்றைக்குக் கோயில்கள், அவற்றின்மீது செலுத்தும் பக்தி என்ப தெல்லாம் வணிகமயமாகி விட்டது என்று 'தினமலர்' வகையறாக்கள் ஜெகத் குரு என்று போற்றும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியே கூறுகிறாரே!

"மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிக பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயில்களுக்குப் போவதையும்,  மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாகக் (திணீsலீவீஷீஸீ) கருதுகின்றனர். பக் தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது" என்று காஞ்சிபுரத்தில் 1976 மே  மாதத் தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் பேசினாரே, இதற்கு என்ன பதில் தினமலராரே என்று கேட்க விரும்புகிறோம் - அறிவு நாணயத்துடன் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.

அதோடு நிற்கவில்லை. கடவுள் பக்தி இருந்தபோதும் பேராசையும், ஒழுக்கமின்மையும் அதிகமாக நம்முடைய வாழ்க்கையில் பிடித்துக் கொண்டு விட்டன" என்று சொன்ன வரும் சாட்சாத் "லோகக்குரு' சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியே! ('தினமணி' 7.9.1976). இதற்கு ஜெயேந்திரரும் விதிவிலக்கு அல்ல.

கடவுள் மறுப்பு என்பது அறிவியல் ரீதியானது. உலகம் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்ற பொய்த் திரையை முற்றிலும் கிழித்து விட்டனர் இயற்பியல் அறிஞர்கள். பிராங்கோயிஸ்  இங்கிலெர்ட் பீட்டக்ஸ் ஆகியோர் கண்டுபிடித்து அறிவித்த பெருவெடிப்பு (பிக்பேங்) தான் அது.

'தினமலர்' ஏடு கடவுள் சக்தியாலோ, சாமியார்களின் அருளாலோ அல்லது அவர்களின் அலுவலகங்கள் வாஸ்து பார்த்துக் கட்டப்பட்டதாலோ அச்சிட்டு வெளி யில் வரவில்லை.

மனிதன், தன் பகுத்தறிவைப் பயன்படுத்தி விஞ்ஞான ரீதியில் கண்டுபிடித்த சாதனங்கள் தான் 'தினமலர்' உட்பட பலவும் இயங்குவதற்குக் காரணம் என்பதை மறந்துவிட்டு பார்ப்பனர்கள் கடவுளைக் கட்டிப் பிடித்து அழுவது ஏன்? அதற்கும் முக்கியக் காரணம் இருக்கத்தான் செய்கிறது.

"கடவுள் என்ற பெயரால் கடைசிக் குழவிக்கல் உள்ளவரை பார்ப்பனர்களின்ஆதிக்கம் தொடரத்தான் செய்யும்" என்று தந்தை பெரியார் கூறும் ஆணித் தரமான கருத்தைப் புரிந்து கொண்டால் கோயில், கரு மாந்திரங்களைப் பார்ப்பனர்கள் ஏன் கட்டிக் கொண்டு அழுகிறார்கள் என்பதன் ரகசியம் விளங்குமே!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தமிழர் தலைவர் ஆறுதல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தமிழர் தலைவர் ஆறுதல்

மத்திய - மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவே இந்தச் சுற்றுப்பயணம்




திருவாரூர், நவ.21 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மத்திய - மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவே இந்தச் சுற்றுப்பயணம் என்று கூறினார்.

திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூற இன்று (21.11.2017) திருவாரூருக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொதுமக்கள், விவசாயிகளிடையே உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:
கழகத்தின் துணைத் தலைவர் மற்றும் மாநில திராவிட; விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் மோகன், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்கள், மண்டல தலைவர், அனைத்துப் பொறுப்பாளர்கள்  மற்றும் திராவிட முன்னேற்றக் கழக மற்றும் அனைத்து இயக்கங்களைச் சார்ந்த, இயக்கங்களுக்கு அப்பாற்பட்ட பெருமக்களே, பவுத்திரமாணிக்கம், இலவங்காடுகுடியைச் சார்ந்த அருமை நண்பர்களே, தோழர் காமராஜ் அவர்களே மற்றும் பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கன மழை என்றால் பாதிக்கப்படுவது

திருவாரூர், நாகை, கடலூர் பகுதிகள்தான்


வடகிழக்குப் பருவ மழையானாலும் அல்லது வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டாலும், முதலில் பாதிக்கப்படுகின்ற பகுதி என்று சொன்னால், அது திருவாரூர், நாகை, கடலூர் போன்ற பகுதிகள்தான்.

ஒவ்வொரு முறையும் சுனாமி உள்பட இந்த சங்கடங்களை நாம் அனுபவித்து வருகிறோம். பெய்கின்ற மழையை, அரசினர் சரியாகப் பயன்படுத்தி, ஆங்காங்கே தடுப்பணைகளை முன்கூட்டியே கட்டி, மழை வருவதற்கு முன்பே தூர்வாருகின்ற முயற்சியை செய்து, ஆங்காங்கே இருக்கின்ற குப்பைகளை மழை பெய்யாத காலத்தில் முறைப்படி அப்புறப்படுத்துவதை செய்யாமல், பின்னாளில், குடி மராமத்து என்று அவர்கள் ஆரம்பித்ததினுடைய விளைவு - பணம் செலவே தவிர, எண்ணெய் செலவே தவிர பிள்ளை பிழைக்கவில்லை என்கிறதாகத்தான் அமைகிறது.

இந்தப் பகுதிக்கு வரும்பொழுதெல்லாம், பவுத்திரமாணிக்கம் அண்ணன் சிவசங்கரன் அவர்களுடைய நினைவும், இலவங்காடுகுடி குஞ்சு அவர்களுடைய நினைவும், இன்னும் நம்முடைய இயக்கத் தோழர்களின் நினைவும், அதேபோல, திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும், நம் இயக்கத் தோழர்களும் ஒரு குடும்பமாக இருக்கக்கூடிய அந்த உணர்வினையும் பார்த்து நான் பூரிப்படைகிறேன்.

அரசின் கவனத்தை ஈர்க்கவேண்டும்

என்பதற்காகத்தான் இந்த சுற்றுப்பயணம்

இங்கு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, காங்கிரசு இயக்கமாக இருந்தாலும், அல்லது வெவ்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தோழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இந்தப் பகுதிகள் வளருவதற்குப் பாடுபடுபவர்கள்.

எனவே, இப்படிப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள், பாதிக்கப்பட்ட இந்த நிலையில், அதனைத் தெரிந்து, ஆறுதல் கூறவும், அரசின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயணத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.

வரிசையாக இந்தப் பகுதியிலும், அடுத்து சோழங்கநல்லூர் போன்ற பகுதிக்கும் சென்று நம்முடைய இயக்கத் தோழர்களை மட்டுமல்ல, கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களையும் சந்தித்து, விவசாயிகள் பயனடையவேண்டும் என்பதற்குரிய வாய்ப்புகளை செய்யவேண்டும். அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. மத்திய அரசை வற்புறுத்தி உதவிகளைப் பெறக்கூடிய வாய்ப்பினை தமிழக அரசு சரியாக செய்யவில்லை என்பதை நினைத்தால் வருத்தமேற்படுகிறது.

வருமுன் காப்பது என்பதுதான்

மிகவும் முக்கியமானது

பாதித்த விவசாயிகளுக்கு பேரிடர் நிதியிலிருந்து வழங்கவேண்டும் என்று கேட்டுப் பெறவேண்டும். ஆனால், வருமுன் காப்பது என்பதுதான் மிகவும் முக்கியமானது. ஆனால், அதனை அவர்கள் சரியாக செய்யவில்லை என்கிற சூழல் இருக்கிறது.

எனவேதான், நேரிடையாக மக்களை சந்திக்கவும், விவசாயிகளுடைய குறைகளைத் தெரிந்துகொண்டு, அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு அதைக் கொண்டு சென்று பரிகாரம் தேடுவதற்கும் - மழை பெய்யும்பொழுதெல்லாம் அதைப்பற்றி பேசுகிறார்கள், பிறகு அதனை மறந்துவிடுகிறார்கள். அடுத்த மழை எப்பொழுது வருகிறதோ, அதனால் பாதிப்பு ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் கவலைப்படுகிறோம் என்கிற நிலை இல்லாமல், முன்பே அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறோம்.

இங்கே கூட ஒரு நண்பர் சொன்னார், இவ்வளவு மழை பெய்தாலும், குளம் நிரம்பவில்லை என்று. பெய்கின்ற மழையை  நாம் சேமிக்கின்ற அளவிற்கு - மழை சேமிப்புத் திட்டங்களும் இல்லாமல் சென்னை போன்ற பகுதிகளில் பெய்த மழை நீர் வீணாகக் கடலில் கலந்துள்ளது. கடலூரிலும் அதேபோன்று நிலைதான்.

மக்கள் குறைகளைப்பற்றி கவலைப்படாத தமிழக அரசு
தடுப்பணைகள் மற்றவற்றை உரிய நேரத்தில் அரசாங்கம் திட்டமிட்டு செய்யவேண்டும். அதற்காக அரசு செயல்படவேண்டும். ஆனால், இப்பொழுது இருக்கிற அரசு - எந்த அணி? யார் பக்கம்? என்பதிலேயே அவர்களுடைய கவனம் இருக்கிறதே தவிர, மக்களுடைய குறைபாடுகள் என்ன என்பதுபற்றி அதிகம் கவலைப்படாதவர்களாகவே இன்றைய அரசாங்கத்தினர் இருப்பதை நினைத்தால், வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.

மத்திய - மாநில அரசின் கவனத்திற்கு அதைக் கொண்டு செலுத்துவதற்கு...

ஆகவே, அந்த நிலை மாறவேண்டும் என்பதை எங்களைப் போன்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட, வாக்கு வங்கியைப்பற்றி கவலைப்படாது இருக்கக் கூடியவர்கள், பொதுநல உணர்வோடு இருக்கக்கூடியவர்கள் இதனை செய்து கொண்டிருக்கின்றோம். ஆகவே, எங்களால் முடிந்த அளவிற்கு, மத்திய - மாநில அரசின் கவனத்திற்கு அதைக் கொண்டு செலுத்துவதற்கு, இந்த சுற்றுப்பயணத்தைப் பயன்படுத்துவோம் என்று கூறிக்கொண்டு, உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து முடிக்கிறேன்.

வாழ்க, பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...