சென்னை, நவ.26 திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரு மான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று (25.-11.-2017) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
தளபதி: கழக பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் அறிவிப்பின் படி, வரும் 21-.12-.2017 அன்று நடைபெற இருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக என்.மருதுகணேஷ் என்கிற என்.எம்.கணேஷ் பி.காம்., பி.எல்., அவர்கள் போட்டியிடுவார் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப் படுகிறது.
செய்தியாளர்: இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவு கேட்டு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறதா?
தளபதி: திமுக தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் எங்களு டைய வேட்பாளர் இடைத்தேர் தலில் போட்டியிடுகிறார். மேலும் பல கட்சிகள் திமுக வேட்பாளருக்கு தங்கள் ஆதரவை யும், ஒத்துழைப்பையும் தர வேண்டுமென்ற கோரிக்கையை திமுக சார்பில் எடுத்து வைப் போம்.
செய்தியாளர்: ஏற்கனவே தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லாம் பண விநியோகம் செய்த புகார் நிலுவையில் உள்ள நிலையில், இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுமா?
தளபதி: தேர்தல் நியாயமாக நடைபெறாது என்ற காரணத்தால் தான் நாங்கள் ஏற்கனவே நீதி மன்றத்தை நாடியிருக்கிறோம். இந்த நிலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக் கிறது. ஜனநாயக முறைப்படி இந்த இடைத்தேர்தலை நாங்கள் எதிர்கொள்வோம். நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம், தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு மிகப்பெரிய வெற்றி யை பெறும்.
செய்தியாளர்: இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட அடுத்த நாளே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறதே?
தளபதி: இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது குறித்து எங்களுடைய கழக முதன்மைச் செயலாளர் அவர்கள் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார். இதே இரட்டை இலை சின்னத்தை எம்.ஜி.ஆர். இருந்தபோதும் நாங்கள் தோற்கடித்து இருக் கிறோம், அதேபோல, அம்மை யார் ஜெயலலிதா இருந்தபோதும் தோற்கடித்து இருக்கிறோம். பலமுறை இரட்டை இலை சின்னத்தை தோற்கடித்து திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. எனவே, சின்னம் பற்றி துளியளவு கவலையும் இல்லை.
இவ்வாறு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment