Saturday, November 30, 2019

ஈராக் போராட்டம் எதிரொலி பதவி விலகினார் பிரதமர்

ஈராக் நாடு தொடர் போர்களால் சீரழிவை சந்தித்து வந்த நாடு ஆகும். சதாம் உசேன் ஆட்சிக்கு பிறகு அங்கு அரசியல் நிலைத் தன்மை இல்லாமல் போனது.
தொடர் போர்களால் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது. வேலை இல்லா திண்டாட் டம் தாண்டவமாடி வருகி றது. ஊழலுக்கு குறைவில்லை. இது மக்கள் மத்தியில் அர சின்மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக பிரத மர் அதெல் அப்துல் மஹ திக்கு எதிராக மக்கள் கிளர்ந் தெழுந்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின் றனர்.
இந்த போராட்டங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது. இதனால் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, ரப்பர் குண்டால் சுடுவது அதி கரித்து வருகிறது. இதுவரை அங்கு 400-க்கும் மேற்பட் டோர் போராட்டங்களில் பலியாகி உள்ளனர். ஆயிரக் கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, சமீபத்தில் தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஈராக் அதிபர் பர்ஹாம் சாலி, அதெல் அப்துல் மஹதி பிரத மர் பதவியில் இருந்து விலகு வதற்கும், பதவி விலகல் கடி தம் அளிப்பதற்கும் தயாராக உள்ளார் என குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஈராக்கில் நடைபெற்று வரும் போராட் டங்களின் எதிரொலியாக, அந்நாட்டு பிரதமர் அதெல் அப்துல் மஹதி, தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், எனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்றத் தில் சமர்ப்பித்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் கடந்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டுதான், பிரதமர் அதெல் அப்துல் மஹதி அரசு பதவி ஏற்றது என்பது நினைவு கூரத்தக்கது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் 101 வயதில் காலமானார்!


ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசூஹிரோ நகசோனே, டோக்கியோவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் வெள்ளிக் கிழமை காலை காலமானார், அவருக்கு வயது 101.
நகசோனே, 1982 முதல் 1987 வரை ஜப்பான் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலை வராகவும், பிரதமராகவும் பணியாற்றினார்.
அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனுட னான நெருங்கிய நட்புக்கு நகசோனே மிகவும் பிரபலமா னவர். இவர்களது நட்பு "ரான்-யசு" நட்பு என்று பிர பலமாக அழைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜப்பானின் மிக மூத்த முன்னாள் பிரத மராகவும், உலகின் மிகவும் மூத்த முன்னாள் அரசியல் தலைவராகவும் யசுஹிரோ நகசோனே (101) இருந்தது குறிப்பிடத்தக்கதொரு செய்தியாகும்.

அமெரிக்காவில் உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பலி

அமெரிக் காவை சேர்ந்த பிரபல மலை யேற்ற வீரர் பிராட் கோப் ரைட் (வயது 31). இவர் எந்த வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மலையேறுவதில் வல்லவர். இதனால் இவர் உலகம் முழுவதும் பிரபல மான மலையேற்ற வீரராக திகழ்ந்து வந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர் னியா மாகாணத்தில் உள்ள உலகின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான ‘எல் கேப்டன்’ சிகரத்தில் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மிக குறுகிய நேரத்தில் ஏறி சாதனை படைத்தார்.
இந்த நிலையில் பிராட் கோப்ரைட் மற்றும் அவரது நண்பரும், சக மலையேற்ற வீரருமான அய்டன் ஜேக்கப் சன் ஆகிய இருவரும் மெக் சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ‘எல் பொட் ரெரோ சிக்கோ’ மலையில் ஏறினர். அப்போது பிராட் கோப்ரைட் மலையின் உச் சியை அடைந்த நிலையில் சற் றும் எதிர்பாராத வகையில் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத் திலேயே பலியானார்.
அதே போல் அய்டன் ஜேக்கப்சனும் மலையில் இருந்து தவறி விழுந்தார். ஆனால் அவர் குறைவான உயரத்தில் இருந்து விழுந்த தால் காயங்களுடன் உயிர் தப்பினார். பிராட் கோப் ரைட் இறப்புக்கு உலகம் முழு வதிலும் உள்ள மலையேற்ற வீரர்கள் அதிர்ச்சியும், இரங் கலும் தெரிவித்துள்ளனர்.

கீழடி ஆய்வுக்கு ரூ.1 கோடி காமராஜ் பல்கலை ஒதுக்கீடு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடக்கவுள்ள ஆறாம் கட்ட அகழாய்வுக்காக மதுரை காமராஜ் பல்கலை ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல் துறை மூன்று முறை; தமிழக தொல்லியல் துறை இரண்டு முறை என அய்ந்து கட்டங் களாக அகழாய்வு செய்துள்ளன.
வரும் ஜனவரியில் தமிழக தொல்லியல் துறை ஆறாம்கட்ட அகழாய்வை தொடங்க உள்ளது.இதில் சிறந்த பல்கலைகளையும் ஈடுபடுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளது. அதில் பங்கேற்கும் வகையில் மதுரை காமராஜ் பல்கலை 'ரூசா' என்ற அமைப்பிலிருந்து ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.தொல்லியல் துறையுடன் அகழாய் வில் இணைந்து பணியாற்ற இந்த பல்கலை மத்திய மாநில அரசு களிடமும் அனுமதி கோரி உள்ளது.

Friday, November 29, 2019

தொலைத்தொடர்பு துறையில் 3 ஆண்டுகளில் ரூ.41,000 கோடி இழப்பு

கடந்த 3 ஆண்டுகளில் தொலைத் தொடர்பு துறையில் 41,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் அவர் கூறியதாவது:  கடந்த சில ஆண்டுகளாக தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக, மொபைல் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்கள் குறைக்கப்பட்டன. இதனால் இத்துறையில் வருவாய் சரிந்து வந்துள்ளது கடந்த 2016-2017 நிதியாண்டில் 2.65 லட்சம் கோடியாக இருந்த வருவாய், அடுத்த ஆண்டில் ரூ.2.46 லட்சம் கோடியாகவும். கடந்த நிதியாண்டில் 2.24 லட்சம் கோடியாகவும் சரிந்தது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த துறைக்கு  41,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வருவாய் 2016-2017 நிதியாண்டில் ரூ.11,271.95 கோடியாக இருந்தது 2018-2019இல் ரூ.4,708.63 கோடியாக சரிந்தது என்றார்.

ஜி.எஸ்.டி., "ரீஃபண்ட்" தொகை கிடைக்க முயற்சி செய்யுங்கள்! ஏற்றுமதியாளருக்கு ஏ.இ.பி.சி., அழைப்பு

நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., ரீஃபண்ட் தொகையை பெற திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என, ஏ.இ.பி.சி., அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மத்திய அரசு, ஆடை ஏற்றுமதியாளர்கள் செலுத்தும், அய்.ஜி. எஸ்.டி., வரியை, திரும்ப வழங்குகிறது.
சுங்க வரியில் ஆவணங்களை சமர்ப்பித்து, ஏற்றுமதியாளர்கள் ரீஃபண்ட் பெறுகின்றனர்.ஏற்று மதியாளர்கள், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலுக்கான ரசீதுகளில், 16 இலக்க எண் பயன்படுத்து கின்றனர். அறியாமையினால், ஏற்றுமதியாளர்கள் பலர், ரீஃபண்ட் பெறுவதற்காக ஆவணங்களில், 20 இலக்க ரசீது எண் பயன்படுத்தினர்.
ரசீது முரண்பாடுகளால், நாடுமுழுவதும் ஏராளமான ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு, ஜி.எஸ்.டி., ரீஃபண்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னலாடை நகரான திருப்பூரிலும், பெரும்பாலான ஏற்றுமதியாளர்களுக்கு ரீபண்ட் வழங்கப்பட வில்லை.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஏ.இ.பி.சி.,) கோரிக்கையை அடுத்து, கடந்த, 2018 அக்டோபர் 24ஆம் தேதி முதல், நடப்பு ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரையிலான ஏற்றுமதிகளுக்கு, படிவம் எண் 1 பூர்த்தி செய்து வழங்கி, ரீஃபண்ட் பெறலாம் என, மத்திய மறைமுக வரித்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருப்பூரில் ஏராளமான நிறுவனங்கள் இன்னும், படிவம் எண் 1 பூர்த்தி செய்து வழங்காமலும்; ரீஃபண்ட் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளாமல் உள்ளன. இதுகுறித்து ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறியதாவது: ரசீது முரண்பாடு உள்ள நிறுவனங்கள், படிவம் எண் 1 பூர்த்தி செய்து வழங்கி, நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி., ரீஃபண்ட் பெற, சங்க வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. ரீஃபண்ட் வழங்கப் படாத நிறுவனங்கள் பட்டியலையும் வழங்கியுள்ளது.அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களான நிலையில், திருப்பூரில், பட்டியலில் உள்ளவற்றில், 50 சதவீதத் துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ரீஃபண்ட் பெறு வதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது, வருத்தம் அளிக்கிறது.அத்தகைய நிறுவனத்தினரை தொடர்புகொண்டு, ஆவணங்களை சமர்ப்பித்து, ரீபண்ட் பெற அறிவுறுத்தி வருகிறோம்.
சந்தேகத்துக்கு இடமான ஏற்றுமதியாளர் (ரிஸ்கி எக்ஸ்போட்டர்) பட்டியலில் உள்ள நிறுவனங்கள், வரித்துறையை அணுகி, தங்களை அந்த பட்டிய லிலிருந்து விடுவிக்கவேண்டும்; அதன்பின், ரீஃபண்ட் பெற விண்ணப்பிக்கவேண்டும்.புதிய ஆர்டர்களை கையாளுவதற்கு, பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு அதிகளவு நிதி தேவைப் படுகிறது. கால தாமதமின்றி விண்ணப்பித்து நிலுவையில் உள்ள ரீஃபண்ட் தொகையை பெற்று, நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

வெளிநாடுகளில் வசிப்போர் : இந்தியர்கள் முதலிடம்

தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளில் வசிப்பவர்களில் உலக அளவில் இந்தியர்களே முதலிடம் பிடித்துள்ளனர்.
சொந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளில் படிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக குடியிருப்போர் குறித்த கணக்கெடுப்பை மிக்ரேஷன் எனும் சர்வதேச நிறுவனம் நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 17.5 மில்லியன் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவிலேயே வசிக்கின்றனர். இந்தியர்கள் மட்டுமின்றி, உலகின் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் முதல் தேர்வும் அமெரிக்காவாகவே உள்ளது. உலகில் இடம்பெயர்ந்து வாழ்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் வேலைக்காக சென்றுள்ளனர். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மூலம் மட்டும் கடந்த ஆண்டு, 78.6 பில்லியன் டாலர்கள் இந்தியா விற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு அடுத்தபடியாக அமெரிக் காவில் அதிகம் வசிப்ப வர்கள் சீனர்கள். மெக்சிகோ நாட்டினர் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

வெளிப்புற காற்றை விட வீட்டுக்குள் இருக்கும் மாசு காற்றால் உடலுக்கு அதிக பாதிப்புகள்


 வீட்டிற்குள் இருக்கும் மாசுக்காற்றால் கடந்த 2016ல் மட்டும் உலக அளவில் 38 லட்சம் பேர் இறந்துள்ளதாக மருத் துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
தலைநகரான டில்லியில் தற் போது காற்று மாசு பாதிப்பு அதி கரித்து காணப்படுகிறது. இதற்கு அருகில் உள்ள மாநிலங்களான அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த பிறகு தேவையற்ற வைக் கோலை எரிப்பதே காற்று மாசு அதிகரிக்க முக்கிய காரணம் என்று தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வெளிப்புற மாசுக் காற்றால் இறப்பவர்களின் எண் ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. தலைநகர் டில்லியில் ஆண்டுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே சுவாசிக்க உகந்த காற்று இருந்துள்ளது. காற்று மாசு பாட்டால் இந்தியர்களின் ஆயுள் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் வரை குறைகிறது என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மய்யத்தின் ஆய்வுகளில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் காற்று மாசு காரண மாக 8இல் ஒருவர் உயிரிழக்கின்றனர். ஒரு வருடத்திற்கு 70 லட்சம் பேர் இறக்கின்றனர். குழந்தைகள் 9 சத வீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசு காரணமாக நுரையீரல் புற்றுநோயால் 25 சதவீதம் பேரும், நுரையீரல் நோய்த்தொற்றால் 17 சதவீதம் பேரும், பக்கவாதத்தால் 16 சதவீதம் பேரும், இதயநோயால் 15 சதவீதம் பேரும், நுரையீரல் அடைப்பு நோயால் 8 சதவீதம் பேரும் இறக்கின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வெளிப்புற காற்றை விட, வீட்டிற்குள் இருக்கும் மாசு காற்றால் உடலுக்கு அதிக பாதிப் புகள் ஏற்படுகிறது என்று மருத்து வர்கள், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து சேலம் மருத்துவர்கள் கூறியதாவது:
இன்றைய சூழலில் ஒருவர் வீட் டிலும், அலுவலகத்திலும் சுவா சிக்கும் காற்றில் கூட அதிகமாசு காணப்படுகிறது. வெளிப்புற மாசுக்கு எந்த விதத்திலும் குறையாத நிலையில் உட்புற மாசு உள்ளது. உட்புற மாசுபாட்டைப் பொறுத்த வரையில், மற்றவர்களைவிட சுவாசப் பிரச்சினைகள் இருப்ப வர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பூட்டிய இடங்களில் அதிக நேரம் இருக்கக்கூடாது.
உலகளவில் வீட்டு காற்று மாசு பாடு சுற்றுச்சூழல், சுகாதார பிரச் சினையாக உள்ளது. வீட்டில் சமை யல், விளக்குகள் போன்றவற்றினால் காற்று மாசு ஏற்பட்டு குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர அளவில் உள்ள நாடுகளில் உலகின் 41 சதவீதத்தினர் மாசுபடுத்தும் எரிபொருட்களை முக்கியமாக சமையலுக்கு பயன் படுத்துகின்றனர். இதன் காரணமாக வீட்டு காற்று மாசுபாட்டால் கடந்த 2016இல் 38 லட்சம் மக்கள்  உயிரி ழந்துள்ளனர்.
இதில் 5 வயதுக்குட்பட்ட 4 லட்சம் குழந்தைகளும்  இறந்துள் ளனர். உட்புற மாசுபாட்டில் இருந்து விடுபட, அனைவரும் இயற்கையை நோக்கி திரும்ப வேண்டும். இதற் காக வீட்டை சுற்றியும், வீட்டிற் குள்ளேயும் செடிகள் வைப்பதும், வளர்ப்பதும்தான் சிறந்தது. மாசான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் மட்டுமின்றி கல்லீரல், மூளை, நரம்பு மண்டலம், இதயம், மண்ணீரல் என உடலின் அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும். மாசு காற்றை சுவாசிக்கும் போது ஆஸ் துமா போன்ற பிரச்சினைகளில் ஆரம்பித்து புற்றுநோய் வரையில் பல்வேறு தீவிர பாதிப்புகள் ஏற் படுத்த கூடும்.  இவ்வாறு மருத் துவர்கள் கூறினார்.

Sunday, November 24, 2019

மத்திய அரசின் நிர்வாகத் திறனோ திறன்!

ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளுக்காக

நிதி ஒதுக்கியதில் செலவிடப்படாத தொகை ரூ.1,009 கோடியாம்!

 நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பயணி களுக்கான அடிப்படை வசதி மேம் பாட்டு பணிகளை முடிப்பதில் தாம தம் ஏற்படுகிறது. இதனால், 2017, 2018-ஆம் ஆண்டுகளில் ரயில்வே துறை ஒதுக்கிய மொத்த தொகையில் ரூ.1,009 கோடி செலவிடப்படாமல் தேங்கியுள்ளது.
இந்திய ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில் தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். மற்ற போக்குவரத்துகளைக் காட்டி லும் ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டில் 811 கோடியாக இருந்த மொத்த பய ணிகளின் எண்ணிக்கை தற்போது 844 கோடியாக உயர்ந்துள்ளது. இத னால் ரயில் நிலையங்களில் பயணிக ளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டு, இதற்காக மத்திய நிதிநிலை அறிக்கையில் ஆண்டு தோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியைக் கொண்டு ரயில் நிலையங் களில் இருக்கைகள், மின்விளக்குகள், கழிப்பிட வசதி, லிஃப்ட், எஸ்கலேட் டர் அமைப்பது, சிசிடிவி கேமரா பொருத்துவது, ஓய்வறைகள், பயணி கள் காத்திருப்பு அறைகள், பேட்டரி வாகன வசதி, சுரங்கப்பாதைகள், நடைமேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், இப்பணிகள் ரயில்வே மண்டலங்களில் மெத்தன மாக நடப்பதால், இதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகை முழுமையாக செலவிடப்படாமல் இருக்கிறது. அந்த வகையில், கடந்த 2017 மற்றும் 2018ஆ-ம் ஆண்டுகளில் மொத்தமுள்ள 17 மண்டலங்களில் ரூ.1,009 கோடி வரை தேங்கியிருப்பதாக மத்திய அர சின் புள்ளி விவரத்தில் தெரிய வந்து உள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த ஆண்டு தோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. பயணிகளுக்கான தேவைகளைக் கருத்தில் கொண்டு திட்டப்பணிகளை நிறைவேற்றி வருகிறோம். கடந்த 2016ஆ-ம் ஆண்டு வரை ரயில்வே ஒதுக்கீடு செய்த தொகையை விட, கூடுதலாகவே செலவிட்டுள்ளோம். அதாவது, 2016இ-ல் ரூ.917 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ரூ.981 கோடிசெலவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பி னும், கடந்த சில ஆண்டுகளாக பணி யில் உள்ள சில நடைமுறை சிக்கல் களால் தொகையை முழுமையாக செலவிட முடியவில்லை.
டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, அய்தராபாத் போன்ற பெரிய நகரங்களில் ரயில்களின் இயக் கம் முக்கியமானதாக இருக்கிறது. பயணிகளைப் பாதிக்காத வகையில் இரவு நேரங்களில் அல்லது விடுமுறை நாட்களில் மட்டுமே ரயில்களின் சேவையில் சிலவற்றை ரத்து செய்து பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதனால், திட்டப்பணிகளை உடனுக்குடன் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதுதவிர, பல் வேறு அலுவலகப் பிரிவுகளில் காலிப் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பதால் பணிகளைத் துரிதப் படுத்த முடியவில்லை. இருப்பினும், இந்த பணிகளுக்காக ஒதுக்கிய தொகையை வேறு பணிகளுக்கு பயன் படுத்த மாட்டோம். பயணிகளின் அடிப்படை வசதியை மேம்படுத்த இந்த தொகையை படிப்படியாக தொடர்ந்து பயன்படுத்துவோம்’’ என்றனர்.
பயணிகளுக்கான நிதியை பெரும் பாலான ரயில்வே மண்டலங்கள் கணிசமாகப் பயன்படுத்தியுள்ளன. குறிப்பாக, மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு - கிழக்கு மண்ட லங்களில் ஒதுக்கப்பட்ட நிதியை தாண்டி கூடுதலாக நிதி பயன்படுத் தப்பட்டுள்ளது. ஆனால், தெற்கு ரயில்வேயில்தான் அதிக அளவுக்கு நிதி பயன்படுத்தாமல் இருக்கிறது.
கடந்த 2017-இல் ரூ.46 கோடியும், 2018-இல் ரூ.90 கோடியும், 2019-ஆம் ஆண்டு அக்டோபர் வரை ரூ.2,000 கோடிக்கு பயன்படுத்தாமல் இருப்ப தாக ரயில்வே துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை நித்யானந்தா ஆசிரமத்துக்கு வழங்கியது ஏன்? குஜராத் கல்வித் துறைக்கு சிபிஎஸ்இ கேள்வி

பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை அகமதாபாத்தில் உள்ள நித்யா னந்தா ஆசிரமத்திற்கு அனுமதியில்லாமல் குத்தைகைக்கு வழங்கியது குறித்து குஜராத் கல்வித்துறைக்கு சிபிஎஸ்இ விளக்கம் கேட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஎஸ்இ தனது எழுத்துப்பூர்வ தாக்கீதில், டிபிஎஸ் மணி நகர நிலத்தை அகமதாபாத்தில் உள்ள நித் யானந்தா ஆசிரமத்துக்கு தங்கள் அனுமதி யின்றி குத்தகைக்கு வழங்கியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட் டுள்ளது.
பள்ளியின் முதல்வர் ஹிதேஷ் பூரியிடம் இது தொடர்பாக ஊடகத் தரப்பினர் கேள்வி எழுப்பிய போது, குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறினார். ஆனால் அனுமதி பெறப்பட்டதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
முன்னதாக, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஜனார்த்தன் சர்மா என்பவரும், அவரது மனைவியும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் பெங்களூருவில் உள்ள நித்தியா னந்தா ஆசிரமத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் எங்கள் மகள்கள் 2013-ஆம் ஆண்டு முதல் படித்து வந்தனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் அகம தாபாத்தில் உள்ள நித்தியானந்தா கல்வி நிறுவனத்தின் கிளைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஒன்றுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அங்கு படித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு எங்கள் மகள்களை சந்திக்கச் சென்றோம். ஆனால் எங்கள் மகள்களை சந்திக்க எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பிறகு காவல் துறையிடம் புகார் அளித்தோம். அவர்கள் வந்து விசாரித்து விட்டுச் சென்றனர். ஆனால் எங்கள் மகள்களை மீட்டுத்தரவில்லை.
அந்த பள்ளியின் நிர்வாகிகள் எங்கள் மகள்கள் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை எனக் கூறுகின்றனர். எங்கள் மகள்கள் கடத்தப்பட்டு, சட்டவிரோதமாக அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். எங்கள் மகள்களை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். குஜராத் காவல்துறையினருக்கு இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண் டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 120 கைதிகள் கை, கால் முறிந்து தவிப்பு

சென்னை புழல் சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும், 700-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சமீப காலமாக குற்ற வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்படும் பல கைதிகள் கை, கால்களில் முறிவுடன் அடைக்கப்படுகின்றனர். புழல் சிறையில் தற்போது 120-க்கும் மேற்பட்ட கைதிகள் கை, கால் முறிவுடன் கழிப்பறைக்கு கூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் தப்பி ஓடும் போதும், கழிப்பறையிலும் வழுக்கி விழுவதால் இதுபோல் கை, கால்களில் முறிவு ஏற்பட்டு விடுவதாக காவல்துறைத் தரப்பில் கூறப்படுகிறது.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ரத்து விவகாரத்தில் தமிழக அரசின் மவுனம் ஆபத்தானது


இதர பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங் கிட மத்திய அரசை வலியுறுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு, எதையும் செய்யாமல் அமைதி காப்பது கண்டனத்திற்குரியது என சமூக சமத்துவத்திற்கான மருத்து வர்கள் சங்கம் விமர்சனம் செய்து உள்ளது.
இதுகுறித்து இச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் நேற்று (நவ. 22) செய்தியாளர்களிடம் கூறியதா வது:
“இளநிலை, முதுநிலை மருத் துவக் கல்வியில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற் படுத்தப்பட்டோருக்கு 27 விழுக் காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மட்டுமே, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
மாநில அரசுகள் அகில இந்தி யத் தொகுப்புக்கு வழங்கும் இடங் களில், இந்த இட ஒதுக்கீடு வழங் கப்படவில்லை. இதனால் இதர பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதர பிற் படுத்தப்பட்டோருக்கு 2007ஆ-ம் ஆண்டு முதல் கிடைத்திருக்க வேண்டிய மருத்துவக் கல்வி இடங் களில், முன்னேறிய வகுப்பினரே அதிக அளவில் சேர்ந்து வந்துள்ள னர்.
இந்நிலையில் முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு, மிக அதிகமாக 10 சதவீத இட ஒதுக் கீடு, அவசர அவசரமாக வழங்கப் படுகிறது. இதனால் இதர பிற்படுத் தப்பட்டோர் மிக மோசமான பாதிப்புக்கு, இழப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, அகில இந்தியத் தொகுப்பில், இளநிலை முதுநிலை, மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில், 27 சதவீத இட ஒதுக் கீட்டை இதர பிற்படுத்தப்பட் டோருக்கு உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும்.
இந்த ஒதுக்கீட்டை 52 சதவீத மாக, இதர பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும். கிரீமிலேயர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதை ரத்து செய்ய வேண்டும். உயர் சிறப்பு மருத்துவக் கல்வியிலும் இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்.
இதர பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோரை பாதிக் கும் மிக முக்கியப் பிரச்சினையில் தமிழக அரசு, எதையும் செய்யாமல் அமைதி காப்பது கண்டனத்திற்குரி யது.
நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்ட மைப்புத் தலைவர்களை அழைத்து, தமிழக அரசு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
போராட்டத்தைக் கைவிட் டால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். கோரிக்கைகளை கனிவோடு பரிசீலிக்கத் தயார் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் விஜயபாஸ்கர், கடந்த அக்.31 அன்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் , மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் ஏமாற்றுவது நேர்மையற்ற செயலாகும்.
வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடு பட்ட அரசு மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள், இட மாறுதல்கள் அனைத்தையும் தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும். போராட் டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை இடமாறுதல் செய்து, அந்த இடங்களில் வேறு மருத்துவர்களை நியமனம் செய்ததில், ஊழல்கள் முறைகேடுகள் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படு கிறது. இது குறித்து மத்திய புல னாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இடமாறுதல்களுக்காக லஞ்சம் பெற்றோர் மற்றும் கொடுத்தோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக் கைகளை எடுக்க வேண்டும். போராட் டத்தைக் கைவிட்டால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என, தான் அளித்த வாக்குறுதியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மீறி இருப்பது கடும் கண்ட னத்திற்குரியது”.
இவ்வாறு மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கிய கவிஞர், இலக்கிய எழுத்தாளர் விருது

திருச்சி அனைத்துலகத் தமிழ் மன்றம் சார்பில் கருநாடக மாநிலத்திராவிடர் கழக வழக்குரைஞர் பிரிவுத் தலைவர் சே.குணவேந்தன் அவர்களுக்கு "இலக்கிய கவிஞர்" என்ற விருதும், மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ அவர்களுக்கு "இலக்கிய எழுத்தாளர்" என்ற விருதும் 16.11.2019 அன்று சாந்தி யோகாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் முனைவர் வே.த.யோகநாதன் விருதினை வழங்கினார். இனிய நந்தவனம் இதழாசிரியர் த.சந்திரசேகரன், திருச்சி திராவிடர் கழக அமைப்பாளர் கனகராஜ் மற்றும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் முன்னிலையில் சிறப்பான விழாவில் நடைபெற்றது. நிகழ்வு தொடக்கத்தில் இரா.முல்லைக்கோ, சாந்தி யோகாவின் உருவப் படத்தினைத் திறந்துவைத்து அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அனைவரும் கருத்துகளை கூறிய பின்னர் மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.
பெரியார் உயராய்வு சிந்தனைகள் பட்டயப்படிப்பு சான்று வழங்கல்
கருநாடக மாநிலம் பெங்களூரு திராவிடர் கழக வழக்குரைஞர் பிரிவு தலைவர் சே.குணவேந்தன், தஞ்சை பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மய்யத்தில் "பெரியார் உயர் சிந்தனைகள்" எனும் பட்டயக்கல்வி பயின்று முதன்மையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதற் கானப் பட்டயக்கல்வி சான்றினை உதவி துணை வேந்தர் தேவராஜ் வழங்கினார். உடன் உதவிப் பேராசிரியர் முனைவர் த.ஜெயக்குமார், கருநாடக மாநிலச் செய லாளர் இரா.முல்லைக்கோ நிர்வாகத்துறை கண் காணிப்பாளர் இளவேனில், முகிலன் ஆகியோர் உடனிருந்து வாழ்த்துகளைக் கூறினர். இதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்ல குழந்தை களுக்கு இனிப்புகள் வழங்கிடும் வகையில் ரூ. 500 வழங்கி மகிழ்ந்தார்.

வேலைவாய்ப்பு பதிவு: 67 லட்சத்தை எட்டியது

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 67.97 லட்சத்தை எட்டியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்களின் விவரங்களை மாநில அரசு வெளியிட்டது. அதன் விவரம்: அக்டோபர் 31-ஆம் தேதியன்று நிலவரப்படி, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 67 லட்சத்து 97 ஆயிரத்து 634 ஆகும். இவர்களில், 18 வயதுக்குட்பட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 66 ஆயிரத்து 451 பேராகவும், கல்லூரி மாணவர்கள் 12 லட்சத்து 39 ஆயிரத்து 867 பேராகவும், 35 வயது வரையுள்ளவர்கள் 25 லட்சத்து 47 ரத்து 802 பேரும், 57 வயது வரையுள்ளவர்கள் 11 லட்சத்து 35 ஆயிரத்து 866 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 648 பேரும் என மொத்தம் 67 லட்சத்து 97 ஆயிரத்து 634 பேர் உள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப் போரில் மாற்றுத் திறனாளி பதிவாளர்களும் உள்ளனர். அவர்கள், கை, கால் குறைபாடு உடையவர்கள், பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதோரும் அடங்குவர். அவர்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 179 பேர் இருப்பதாக அந்த அறிவிப்பில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

சாலை விபத்துகளில் இறந்தவர்களில் 48 சதவிகிதம் பேர் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்: மத்திய அரசு ஆண்டறிக்கை


2018 ஆம் ஆண்டில் சாலை விபத்தில் இறந்தவர்களில்  48 சதவீதம்  பேர் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் சாலை விபத் துக்கள் தொடர்பான ஆண்டு அறிக்கையை சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- நாள் தோறும்   சராசரியாக 1,280 சாலை விபத்துக்கள்  ஏற்படுகிறது. இதில் 415 உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.  சராசரியாக மணிக்கு  53 விபத்துக்கள்,   17 உயிர் இழப்புகள் ஏற்படு கின்றன. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை போக்கு வரத்து காயங்கள்  இறப்பு களுக்கு எட்டாவது முக்கிய காரணமாக இருக்கின்றன.
2018 ஆம் ஆண்டில் சாலை விபத்தில் இறந்தவர்களில்  48 சதவீதம்  பேர் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். சாலை விபத்துகளில் பலியா னவர்கள் பெரும்பாலும் அதிக வேகமாக சென்றதால் பலியாகி உள்ளார்கள். இது  64.4 சதவீதம்  ஆகும்.
தொடர்ந்து சாலை விதி களை மதிக்காமல்  வாகனம் ஓட்டியது.  இதன் மூலம் இறப்பு  5.8 சதவீதம்  ஆகும். மொபைல் போனில்  பேசி கொண்டே சென்றதால் ஏற்பட்ட விபத்தில் இறந்த வர்கள் 2.4 சதவீதம் ஆகும்.  குடிபோதையில் வாகனம் ஓட்டுவதில்  2.8 சதவீதம் பேர் பலியாகி உள்ளனர்.
தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட்கள் அணியாமல் இருப்பது விபத்துக்கான கார ணங்கள் அல்ல, ஆனால் கடுமையான காயங்கள் மற் றும் இறப்புகளைத் தவிர்ப்ப தற்கு  இவைகள் முக்கியமான வை.
கடந்த ஆண்டு நாட்டில் 43,614 இறப்புகள் அல்லது 28.8 சதவீத  இறப்புக்கள் தலைக் கவசம் அணியாததால் ஏற் பட்டு உள்ளன.  சீட் பெல்ட் அணியாததால் 24,435 இறப் புகள் ஏற்பட்டு உள்ளது.
மாநிலங்களில், மொத்த சாலை விபத்துகளின் அடிப் படையில் தமிழகம் (13.7 சத வீதம்) முதலிடத்திலும், மத்தியப் பிரதேசம் (11 சதவீதம்), உத்தரபிரதேசம் (9.1 சதவீதம்) இரண்டாமிடத்திலும் உள்ளன.
அதிக சாலை விபத் துக்கள் உத்தரபிரதேசத்தில் (22,256), மராட்டியத்தில்  (13,261), தமிழ் நாடு (12,216)  ஏற்பட்டு உள்ளன என அதில் கூறப்பட்டு உள் ளது.
ஜெனீவாவை தளமாகக் கொண்ட உலக சாலை கூட் டமைப்பின் 2018 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின் படி  199 நாடுகளில் சாலை பயன்படுத்துபவர்களுக்கு இந்தியா மிகவும் பாதுகாப்பற்ற நாடாக உள்ளது. இதைத் தொடர்ந்து சீனா (63,000 இறப்புகள்) மற்றும் அமெ ரிக்கா  (37,000 இறப்புகள்) ஏற்படுகின்றன.

Thursday, November 21, 2019

ஒரு மணி நேரத்திற்கு 15 இந்தியர்கள் தற்கொலை தேசிய குற்றப் பதிவு தலைமை தகவல்

ஒரு மணி நேரத் திற்கு 15 இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
2016 ஆம் ஆண்டிற்கான தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டு உள்ள தகவலில்  ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு இந்தியர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று  கூறப்பட்டு உள்ளது. தற்கொலை தூண்டுதல்கள் பாலினங்களில் வேறுபடு கின்றன.  குடும்பக் கஷ்டங்களும், நோய் களும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் முக்கிய காரணங்களாக இருந்தன.
2016 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 இந்தியர்கள்  தற்கொலை செய்து கொண்டனர். அந்த ஆண்டில் மொத்தம் 131,008 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.  இது 2015 ஆம் ஆண்டில்  133,623 தற்கொலை மரணங்களிலிருந்து 2 சதவீதம்  குறைந்து விட்டது. ஒட்டுமொத்தமாக, பெண்களை விட அதிகமாக ஆண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  (தற்கொலை களில் 68 சதவீதம் ஆண்கள்).

பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் விருப்ப ஓய்வாம்!

தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் விகிதத்தை விட, 12 ஆயிரம் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளதால், விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்கப் பள்ளி கள், நடுநிலை பள்ளிகள் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில், ஆசிரியர்கள் நிய மனத்துக்கு தனித்தனி விதிகள் பின் பற்றப்படுகின்றன. தொடக்கப் பள்ளி களுக்கு, ஒவ்வொரு வகுப்பிலும், மாணவர் எண்ணிக்கைக்கு விகிதத் துக்கு ஏற்ப, ஆசிரியர்கள் நியமிக்கப் படுகின்றனர்.
நடுநிலை முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரையிலும், மாணவர் எண்ணிக்கை மட்டுமின்றி, பாட வாரியாகவும் கணக்கிட்டு, ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு பள்ளி கள் மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளி களில், நிரந்தர பணி ஆசிரியர்களின் எண் ணிக்கை குறித்து, பள்ளி கல்வித் துறை பட்டியல் தயாரித்து உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளிகள், பாட வாரியாக மற்றும் வகுப்புகள் வாரியாகவும், மாணவர் களின் எண்ணிக்கை விகிதத்தின் படியும், இந்த பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது.
அதன்படி, மாநிலம் முழுவதும், 12 ஆயிரம் ஆசிரியர்கள், தேவைக்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட் டுள்ளது.
ஒவ்வொரு கல்வி ஆண்டும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதால், ஆசிரியர்களின் தேவை குறைந்து, ஆசிரியர்கள் உபரியாக இருப்பது அதி கரித்து உள்ளது. இந்த எண்ணிக்கையால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
உபரி ஆசிரியர்களால், அரசுக்கு பல கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது.
எனவே, செலவை ஈடுகட்டும் வகையில், இந்த ஆசிரியர்களை, பள்ளிக் கல்வியின் நிர்வாக பணிகள், ஒருங் கிணைந்த கல்வி திட்டம் உள்ளிட்ட வற்றில், மாற்று பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.  அதேபோல, ஆசிரியர்கள் எண் ணிக்கையை குறைக் கும் வகையில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி யுள்ள ஆசிரியர்களுக்கு, வி.ஆர்.எஸ்., என்ற விருப்ப ஓய்வு திட்டம் வர உள்ளது. திருச்சியில், விளையாட்டு துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற, அமைச்சர் செங்கோட்டையன், இதை அறிவித்து உள்ளார்.
பள்ளி க் கல்வியில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி விட்டு, சுய விருப் பத்துடன் ஓய்வுபெற விரும்பினால், அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என, தெரிகிறது. இதற்கான உத்தரவு, விரைவில் வர உள்ளது.

உலகின் மிகச் சிறிய ஒளி உணரி!

உடலுக்குள் குழாயை செலுத்தி, அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வதற்கு துல்லியமான கேமராக்கள் தேவை. அந்த கேமராக்களில் இருக்கும் ஒளி உணரிகள் தான் உடலின் உறுப்புகளை, மருத்துவர்கள் துல்லியமாக பார்க்க உதவுகின்றன.
'இமேஜ் சென்சார்' எனப்படும் ஒளி உணரிகள் அடர்த்தியாக இருந்தால் தான், படக் காட்சிகள் துல்லியமாக இருக்கும். இதற்காக அண்மையில், உலகிலேயே மிகச் சிறிய ஒளி உணரியை தயாரித்துள்ளது ஓம்னி விஷன். இதன் ஓவி6948 என்ற கருவியை, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், உலகின் மிகச் சிறிய ஒளி உணரியாக இடம் பிடித்துள்ளது.

சமையல் கழிவில் சமையல் எரிவாயு

வீட்டு சமையலறையில் வீணாகும் உணவுக் கழிவுகளை வைத்து, சமையல் எரிவாயுவை தயாரிக்க முடியும். இதற்கான கருவியை உருவாக்கியிருக்கிறது இஸ்ரேலைச் சேர்ந்த, 'ஹோம் பயோ காஸ்!' சில ஆண்டுகளுக்கு முன், 15 உதிரி பாகங்களைக் கொண்டு இயங்கும் ஹோம் பயோ காஸ் கருவியை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தி இருந்தனர்.
அதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வரவேற்பு கிடைக்கவே, மேலும் ஆராய்ச்சிகள் செய்து, தற்போது ஹோம் பயோ காஸ் 3.0 மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
மூன்றாம் தலைமுறை கருவிக்கு, நான்கு உதிரி பாகங்கள் மட்டுமே. எனவே, இதை எவரும் எளிதில் சேர்த்து, வீட்டின் காலி இடத்தில் நிறுவிவிட முடியும்.
உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் இறைச்சி மிச்சங்களை ஒருபுறம் போட்டு, பாக்டீரியா கிருமி துகள்களையும் கொட்டிவிட வேண்டும்.
கிடைத்தால், மாடு, ஆடு போன்ற விலங்கு கழிவுகளையும் இதில் சேர்க்கலாம்.
இந்தக் கருவியின் ஜீரணப் பகுதியில் பாக்டீரியாக்கள், உணவுக் கழிவுகளை சிதைத்து, எரிவாயு வையும், திரவ வடிவில் வீட்டுத் தோட்டத் திற்கான உரத்தையும் உற்பத்தி செய்கின்றன.
தினமும் 2 கிலோ உணவுக் கழிவைப் போட்டால், இரண்டு மணி நேர சமையலுக்குத் தேவையான எரிவாயு கிடைக்கும்.
தற்போது, புதுமைகளுக்கான இணைய சந்தையான, 'கிக்ஸ்டார்ட்டர்' தளத்தில் அறிமுகமாகி யுள்ள, 'ஹோம் பயோ காஸ் 3.0' மாடல் 2020இல் சந்தைக்கு வரும்.

4520 சதுர அடியில் பூக்கள் ஓவியம் கின்னஸ் சாதனை படைத்த ஸ்காட்லாந்து கலைஞர்

ஸ்காட்லாந் தைச் சேர்ந்தவர் ஜோஹன்னா பாஸ்போர்டு. இவர், வயது வந்தோருக்கான வனவிலங் குகள் மற்றும் மலர்கள் தொடர்புடைய வண்ண புத் தகங்களின் மூலம் புகழ்பெற் றவர். இளம் வயதில் இருந்தே படம் வரையும் கலையில் ஆர்வம் கொண்ட ஜோஹன்னா கின்னஸ் சாதனையை படைக் கும் முயற்சியாக தரையில் படம் வரைந்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் அபெர் டீன்சையர் நகரில் உள்ள எல்லோன் கல்வி நிலையத்தில் பயின்ற ஜோஹன்னா தனது மகத்தான இந்த திட்டத்திற்கு அங்குள்ள ஒரு இடத்தையே தேர்வு செய்தார். 12 மணி நேரத்திற்குள் 4520 சதுர அடியில் கருப்பு வெள்ளை நிற பூக்கள் வரைந்துள்ளார்.
தனிநபர் வரைந்த மிகப் பெரிய ஓவியத்தில் திருப்பதி யைச் சேர்ந்த அமன்சிங் குலாட்டி என்ற நபர் 4416 சதுர அடியில் வரைந்ததே  இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.
அந்த ஓவியத்தின் சாத னையை இந்த படம் முறிய டித்து சாதனை படைத்துள் ளது என கின்னஸ் அமைப்பை சார்ந்த நடுவர்கள் உறுதிபடுத் தினர்.
‘நான் இதற்கு முன்பு செய்த எந்த செயலை விடவும் இது மிகவும் வித்தியாசமா னது. படைப்பாற்றலுக்கு கால எல்லை இருப்பதை நான் பொதுவாக ஆதரிக்க மாட் டேன், ஆனால் சில நேரங் களில் உங்களுடைய சிறந்த திறமையை வெளிக்கொணர அந்த கட்டுப்பாடு தேவை. ஓவியத்தை முடித்து உலக சாதனையை முறியடித்தது ஒரு பெரிய நிம்மதி, ஏனென் றால் இதற்காக நான் அதிக நேரம் செலவிட்டுள்ளேன்’, என ஜோஹன்னா செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.
காந்தியாரின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு அமன்சிங் குலாட்டி, காந்தியாரின் மிகப்பெரிய ஓவியத்தை வரைந்தவர் என் பது குறிப்பிடத்தக்க ஒன்றா கும்.

காவல்நிலையமாக மாறும் ஹிட்லர் வீடு


இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர் மனியின் நாஜி படைகளுக்கு தலைமை தாங்கி பல லட்சம் யூதர்களை கொன்று குவித்த சர்வாதிகாரி ஹிட்லர், ஆஸ் திரியா நாட்டில் பிறந்தவர். ஆஸ்திரியாவின் மேற்கு பகுதியில் ஜெர்மனியின் எல் லையையொட்டி அமைந் துள்ள பிரவ்னவ் ஆம் இன் நகரில் உள்ள ஒரு வீட்டில் 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி ஹிட்லர் பிறந்தார்.
17ஆம் நூற்றாண்டில் கட் டப்பட்ட இந்த கட்டடத்தில் ஹிட்லர் சில வாரங்களே வாழ்ந்தார். எனினும் அந்த வீடு ஹிட்லர் மற்றும் அவரது கொள்கைகளை நினைவு கூரும் இடமாகவே இருந்து வந்தது. இதனால் ஆஸ்திரியா அரசு அந்த வீட்டை கைப் பற்றி, அழிக்க முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இந்த வீட்டின் உரிமையாளர் அரசுக்கு இணங்கவில்லை.
இந்த விவகாரம் தொடர் பாக அரசுக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் பல ஆண் டுகளாக சட்டப்போராட்டம் நடந்து வந்தது. இறுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு கட் டாய விற்பனை உத்தரவின் மூலம் அந்த வீட்டை 8 லட் சத்து 10ஆயிரம் யூரோக்க ளுக்கு அரசு கையகப்படுத்தி யது.
அதன் பிறகு, வீட்டை இடித்து தரைமட்டமாக்கு வது என்பது உள்ளிட்ட பல் வேறுபட்ட கருத்துகள் முன் வைக்கப்பட்ட நிலையில் ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்ற ஆஸ்திரியா அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வோரும் தலைக்கவசம் அணிய உத்தரவு

இருசக்கர வாகனங்களில் செல்ப வர் கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநில அரசுகளும் இந்த உத்தரவை அமல் படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. கேரளாவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் தலைக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம்  அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனக்கூறி விட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கேரளாவில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மோட்டார் சைக்கிளில் பின் னால் அமர்ந்து பயணிப்போரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வருகிறது.
மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர் களும் தலைக்கவசம்  அணிய வேண்டும்
இதனை கேரள போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இனி இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்ப வர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்துதான் பயணம் செய்ய வேண்டும். இல்லையேல் அபராதம் செலுத்த வேண்டும்.
இந்த உத்தரவுப்படி மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்பவர்களில் 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்று கேரள அரசு அறிவித்து உள்ளது.
இதுபற்றிய உத்தரவுகள் போக்குவரத்து காவல்துறையினருக்கும், போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கேரள போக்குவரத்து அமைச்சர் கூறும்போது, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் வருகிற 1ஆம் தேதி முதல் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். அதே சமயம் இந்த சட்டத்தை அமல்படுத்த கடுமையான கெடுபிடிகள் எதுவும் காட்டப்படமாட்டாது என்றார்.

பாஜகவுக்கு தாவிய மேனாள் சட்டமன்ற உறுப்பினர்மீது பொதுமக்கள் செருப்பு வீச்சு!

கருநாடகத்தில் காலியாக இருக்கும் 15 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாராயண கவுடா, கே.ஆர். பேட் தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்த தொகுதியில் ஓராண்டுக்கு முன்புதான், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் நாராயண கவுடாவெற்றி பெற்றிருந்தார். ஆனால், தனது சொந்தக் கட்சியின் ஆட்சியையே கவிழ்க்கும் விதத்தில், சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து திடீரென விலகினார். அதே கையோடு பாஜகவிலும் அய்க்கியமானார். கவுடாவின் பதவி விலகல் காரணமாகவே கே.ஆர். பேட் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் வந்துள்ளது.
மக்களைப் பற்றிய எந்த பயமும் இல்லாமல், மறுபடியும் கவுடாவே வேட்பாளர் ஆகியுள்ளார். இந்நிலையில், நாராயண கவுடா திங்களன்று வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது, அவர்மீது சரமாரியாக செருப்புகள் வீசப்பட்டுள்ளன. நாராயண கவுடாவின் குடும்பத்தினர் மீதும் செருப்புகள் விழுந்துள்ளன. இதனால் வேட்புமனுத்தாக்கலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாராயண கவுடா மீதான செருப்புவீச்சையொட்டி, பாஜக சார்பில் போட்டியிடும் ‘கட்சித்தாவல்’ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, கர்நாடகத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்ற பின் கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 1,000 பேர் விரட்டியடிப்பு


ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையை ஒட்டியுள்ள மன்னார் வளை குடா, கச்சத்தீவு பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்லும்போது எல்லை தாண்டி வருவதாக கூறி அவர்கள் தாக்கி விரட் டியடிப்பதும், சில நேரங்களில் சிறைபிடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த ஓராண்டில் தமிழக மீனவர்கள் 40-க்கும் மேற் பட் டோரை இலங்கைக் கடற் படை கைது செய்துள்ளது.
இதனிடையே ராமேசு வரம், பாம்பன் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற் பட்ட மீனவர்கள் நேற்று 50 விசைப்படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர்.
இவர்கள் அதி காலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 5-க்கும் மேற்பட்ட கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டினர். மேலும் கடற்படை வீரர்கள் படகுகளில் ஏறி மீனவர்களை தாக்கி விரட்டியடித்தனர். வலை, மீன்பிடி சாதனங் களையும் சேதப்படுத்தினர்.
இதனால் உயிருக்கு பயந்து அந்தப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் அவசரமாக கரை திரும்பினர்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படை விரட் டியடித்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்ற பின் 2-ஆவது முறையாக மீனவர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் தலைவர்கள் சிறை வைப்பு தேச நலன் கருதியாம்!

தேச நலன் கருதியும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும்தான் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிருஷ்ண ரெட்டி மக்களவையில் பதில் அளித்தார்.

Wednesday, November 20, 2019

சேவை கட்டணங்களை உயர்த்துகிறது ஜியோ!

பார்தி ஏர்டெல், வோடஃபோன் அய்டியா நிறுவனங்களைத் தொடர்ந்து செல்லிடப்பேசி சேவை கட்டணங்களை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித் துள்ளது. கடந்த 3 ஆண்டு களாக ஜியோ அறிவித்த அதி ரடி சலுகைகளால் ஏராள மான வாடிக்கையாளர்க ளைப் பெற்றது.
இந்நிலையில், கடன் சுமை காரணமாக டிசம்பர் 1-ஆம் தேதி முதல் செல் லிடப்பேசி கட்டணங்களை உயர்த்துவதாக வோட ஃபோன் அய்டியா, பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து தற்போது ஜியோவும் இதே காரணத்துக்காக செல்லிடப் பேசி கட்டணத்தை உயர்த்து வதாக அறிவித்துள்ளது.
தொலைத்தொடர்புத் துறை வர்த்தகத்தை ஊக்கு விக்க இதர நிறுவனங்கள் போன்று தாங்களும் அரசின் விதிகளுக்கு கட்டுப்பட்டு சேவை கட்டணத்தை உயர்த் துவதாக ஜியோ விளக்கமளித் துள்ளது. இருப்பினும் இந்த கட்டண உயர்வு வாடிக் கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகை யில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த கட் டண உயர்வு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அந்நிறு வனங்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
வோடஃபோன் நிறுவ னம் கடந்த வாரம் வெளியிட்ட 2-ஆம் காலாண்டுக் கான நிதி நிலை அறிக்கையில் ரூ.50,921 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தது. அதே போன்று, பார்தி ஏர்டெல் நிறுவனமும் 2-ஆம் காலாண் டில் ரூ.23,045 கோடி இழப்பை சந்தித்ததாக கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு விழாவில் கோத்தபயாவின் இனவாதப் பேச்சு


அனுராத புரம் ருவன்வெலி மகா சாய பவுத்த விகாரையில் திங்கள் கிழமை நடந்த விழாவில் ஜனாதிபதியாக பதவியேற்ற வுடன் கோத்தபய தமது உரையில், தமிழர்களின் வாக் குகளையும் தான் எதிர்பார்த்த போதிலும், தான் எதிர்பார்த் தளவு தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று கூறிய அவர் இனிவரும் காலங்களிலாவது தன்னுடன் இணைந்து செயல்பட முன் வருமாறு தமிழர்களுக்கு கோத் தபய ராஜபட்சே அழைப்பு விடுத்தார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தனது முதலாவது திட்டம் எனவும் அவர் கூறினார். சட்டத்தின் ஆட்சியை மதிக்கிற, லஞ்ச ஊழல் அற்ற ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார். அத்துடன் தன்னுடன் இணைந்து செயல் பட முன்வருமாறு வெளி நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையில் ஜனாதிபதி யாக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில், ஆளும் கட்சியாக உள்ள அய்க்கிய தேசியக் கட்சி பெரிய நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளது.
இதையடுத்து எதிர்காலத் தில் முன்னெடுக்க வேண்டிய மூன்று விஷயங்கள் தொடர் பாக  சபாநாயகர் கரு ஜெய சூரிய தெளிவுபடுத்தியுள்ளார்.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி நாடா ளுமன்றத்தைக் கலைத்து, ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை அரசியல மைப்பின் பிரகாரம் நடத்த முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சை யாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி, நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த சந்தர்ப்பத்தை வழங்க முடியும்.  பிரதமர் தலைமையிலான அரசாங்கம் சுய விருப்பின் பேரில் விலகி, பொதுத் தேர்தல் ஒன்று அறி விக்கப்படும் வரை இடைக் கால அமைச்சரவையொன்றை நடத்தி செல்ல ஜனாதிபதிக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண் டும். இந்த விஷயங்கள் குறித்து ஆராய்ந்து இந்த வாரத் திற்குள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி தீர்மான மொன்றை எடுக்க வேண்டும் என சபாநாயகர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பி. முதல்வர் சாமியாரின் அடுத்த குறி தாஜ்மகால்?

உத்தரப்பிர தேசத்தில், இசுலாமிய அடையாளத்திலுள்ள நகரங்களின் பெயர்களை, ஆதித்யநாத் தலைமையி லான அம்மாநில பாஜக அரசு ஒவ்வொன்றாக மாற்றி வருகிறது.
அலகாபாத்தை ‘பிரயாக்ராஜ்’ என்றும், பைசாபாத்தை அயோத்தியா என்றும், ரயில் நிலையத்திற்கு இருந்த முகல் சராய்என்ற பெயரை, ‘தீனதயாள் உபாத்தியாயா’ என்றும் ஏற் கெனவே மாற்றி விட்டது.இதன் அடுத்தகட்டமாக, ஆக்ராவின் பெயரையும் மாற்ற முடிவு செய்துள்ளது.
தாஜ்மகால் அமைந் துள்ள ஆக்ரா-வின் உண்மையான பெயர் ‘ஆக்ராவன்’ என்றும், புராணத்தில் இந்தப்பெயர் தான் உள்ளது என்று கூறியுள்ள உத்தரப்பிரதேச பாஜக அரசு, எனினும், இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆக்ரா நகரில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழக வல்லுநர் களை கேட்டுக்கொண்டுள்ளது.
“மகாபாரத காலத்தில்‘ஆக்ராவன்’ என்று அழைக கப்பட்ட பெயர், எப்போது, எந்த சூழ்நிலையில் ‘ஆக்ரா’ வாக மாறியது?” என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.

புதிய அறக்கட்டளை உருவாக்க அரசுக்கு அதிகாரமில்லையாம்!

அயோத்தி சாமியார்கள் அடாவடி! 
 
 அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், கூடவே, அப்பணிகளை மேற் கொள்வதற்கு மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
அதனடிப்படையில், மத்திய அரசும் அறக்கட்டளை தொடர்பான ஆலோசனை யில் இறங்கியுள்ளது.
ஆனால், சிறீராமஜென்ம பூமி நியாஸ், சிறீராமஜென்ம பூமி கோயில்அறக்கட்டளை மற்றும் சிறீராமாலயா அறக்கட்டளை என அயோத்தியில் ஏற்கெனவே பல்வேறு அறக்கட்டளைகள் செயல்பட்டு வருவதால், கோயில் கட்டும் பணியை தங்களிடம்தான் வழங்கவேண்டும் என்று அந்த அமைப்பினர் போட்டா போட்டியில் இறங்கியுள்ளனர்.
கோயிலைக் கட்டுவது யார்? என்பதில் சாமியார்களுக்கு இடையே மோதலும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமாலயா அறக்கட்ட ளையின் செயலாளரும் சாமியாருமான அவிமுக் தேஷ்வரானந்த் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ராமர் கோயில் கட்டும் பணியை, ராமாலயா அறக்கட்டளையிடமே ஒப் படைக்க வேண்டும் என்று கூறியுள்ள அவிமுக் தேஷ்வரானந்த்,
“‘ராமர் கோயில் கட்டுவதற்கு புதிதாகஒரு அறக்கட்டளையை உருவாக மத்திய அரசிற்கு அதிகாரம் இல்லை” என்றும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
மற்றொரு புறத்தில், அறக்கட்டளையின் தலைவர் அல்லது செயலாளர் பதவியைத் தங்களுக்குத்தான் வழங்கவேண்டும் என்று நிர்மோகி அகாரா என்ற சாமியார்கள் கூட்டமும் அரசை வலியுறுத்தியுள்ளது.

அய்.அய்.டி. சுதர்சன் பத்மநாபன் - ஆர்.எஸ்.எஸ். கூட்டு!

அம்பலப்படுத்துகிறார் பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ.,
தி.மு.க.வை குறி வைத்து எழுப்பப்படும் இப்படியான (அவதூறு) கேள்விகளின் பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள (‘ஜூனியர் விகடன்', 24.11.2019) சட்டப்பேரவை தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், அய்.அய்.டி. சுதர்சன் பத்மநாபன் - ஆர்.எஸ்.எஸின் கூட்டை அம்பலப்படுத்தி யுள்ளார்.
பதில்: ‘‘வேறு யார்.... பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும்தான். இதற்காகவே  ‘கதிர் நியூஸ்' என்ற வெப்சைட்டை நடத்தி வருகின்றன. இதற்கு ஆலோசனை வழங்க ஒரு குழுவை ஏற்படுத்தியிருக்கின்றன. சென்னை அய்.அய்.டி.யில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும்  ஃபாத்திமா லத்தீப் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சுதர்சன் பத்மநாபன், இந்த ஆலோசனைக் குழுவிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் மூத்த உறுப்பினராக இருக்கிறார். ‘இந்துத்துவத்தை விதைப்பது, கலவரத்தைப் பரப்புவது, திராவிடத்தைத் தாக்குவது' ஆகிய வியூகங்களை வகுத்துக் கொடுப்பதே அந்தக் குழுவினர்தான்.''

Tuesday, November 19, 2019

தினமலருக்கு அந்தப் பயம் இருந்தால் சரி!

                            

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் பெயரை இழுக்கா விட்டால் 'தினமலரின்' ஆத்தில் போஜனம் கிடைக்காது போலும்.
ஜாதி ஒழிப்பு இயக்கமான திராவிடர் கழகம் ஜாதியைப் பற்றிப் பேசாமல், திரிநூல் கூட்டத்தின் அவுட்டுத் திரி இத்தனை அங்குலம் இருக்க வேண்டும் என்றா பேசும்?
தினமலர் வகையறாக்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் சர்... புர்.... சர்மா, சாஸ்திரி, அய்யர், அய்யங்கார் என்று வாலை ஒட்டிக் கொள்ள வெட்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுவதற்கு யார் காரணம்? தினமலர் எழுதியுள்ள அந்த ஈ.வெ.ரா. தானே. பார்ப்பன சங்க மாநாட்டில் ஜாதி மறுப்புத்  திருமணத்தை இனி செய்யக் கூடாது என்று போட்ட தீர்மானத்தை மட்டும் வெட்டி விட்டு, செய்தி  வெளியிடும் 'தினமலரின்' தந்திரம் புரியாதா? யாருக்குப் பயந்து அந்தத் தீர்மானத்தை வெளியிடவில்லை? தி.க.வுக்கும், அதன் தலைவர் வீரமணி அவர்களுக்கும் அஞ்சி தானே!  அந்தப் பயம் இருந்தால் சரி.

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் கோவைக்காய்!

புதர்களிலும் வீணாகக் கிடக் கும் இடங்களிலும் வளரும் செடி தான் கோவைக்காய். இதனை நாம் அன்றாடம் உணவுகளில் அதிகளவு சேர்த் துக் கொண்டால் நம் உட லுக்கு தேவையான ஆரோக் கியத்தை பெற முடியும். இது நம் உடலில் உள்ள பல வகையான நோய்க்கு மருந்தாக அமைகிறது. கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இவை தோல்நோய்களை  குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
* கோவைக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதைத்தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்டநேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.
* தண்ணீர் அதிகம் அருந்தாமல் இருப்பது, உப்பு தன்மை அதிகமான நீரை, நீண்டநேரம் சிறுநீரை அடக்கி வைப்பது, மதுப் பழக்கம் போன்ற காரணங்களால் சிறுநீரக கற்கள் உருவாகும். வாரத்தில் இருமுறை கோவைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
* உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சினை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய கோவைக்காய் பதார்த்தங்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.
* சர்க்கரை வியாதி ஒரு மனிதனின் பரம்பரை காரணமாகவும் மற்றும் அவனது தவறான உணவுப்பழக்கங்களாலும் ஏற்படும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவைக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துக்கள் வெளியேறாமல் தடுக்கிறது.
* கோவைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உணவில் அடிக்கடி கோவைக்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.
* இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர கோவைக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது.
* கோவைக்காயில் அதிகளவு ஊட்டச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சியடையவும், உறுதியாக இருக்கவும்  மற்றும் இதயம், ரத்தம், நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டு மொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

மாம்பழம், வெண் பட்டு வேட்டி, வெள்ளி கொலுசு தயாரிப்பு மட்டும் சேலத்துக்கு புகழ் சேர்க்க வில்லை... ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற்பத்தியிலும் சேலம் அகில இந்திய அளவில் முக் கிய இடம் வகிக்கிறது.
மத்திய அரசு கடந்த 1999-ஆம் ஆண்டு பல வகையான பொருள்களுக்கு புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாது காப்புச் சட்டம் கொண்டு வந்தது.
இதன் காரணமாக புவி சார் குறியீடு வழங்கப்பட்ட பொருள்களை மற்ற பகுதி யினர் விற்பனை செய்வதும், போலிகளும் தடுக்கப்படுகின் றன.
அந்த வகையில், ஜவ்வரி சிக்கு புவிசார் குறியீடு பெறும் வகையில் சேகோசர்வ் ஆர் வம் காட்டி வருகிறது.
மரவள்ளிக் கிழங்கு உல கின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு பிரதான உணவு பயிராகவும்,ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக் காவில் தொழில் துறை சார்ந்த பயிராகவும் பயிரிடப்படுகி றது.
சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை உள் ளிட்ட 21 மாவட்டங்களில் மரவள்ளிகக் கிழங்கு பயிரி டப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 85,000 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது. ஆண்டுக்கு 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி 20 லட் சம் மூட்டைகளும், ஸ்டார்ச் மாவு 7 லட்சம் மூட்டைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மரவள்ளிக் கிழங்கு உற் பத்தியில் ஹெக்டேர் ஒன் றுக்கு 27.92 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து இந்தியா உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியாவில் மிக அதிக பட்ச அளவான ஹெக்டேர் ஒன்றுக்கு 38 மெட்ரிக் டன் மரவள்ளி கிழங்கு உற்பத்தி செய்து தமிழகம் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருநாடக சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1,195 கோடியாம்

கருநாடக சட் டசபை இடைத்தேர்தலில் போட்டி யிடும் பா.ஜ.க. வேட்பாளர் எம்.டி.பி. நாகராஜிக்கு ரூ.1,195 கோடி சொத் துகள் இருப்பதாக வேட்பு மனு தாக்கலில் தெரிவித்துள்ளார். கடந்த 18 மாதத்தில் அவரின் சொத்து மதிப்பு ரூ.180 கோடி உயர்ந்துள்ளது. கருநாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, முதல்- அமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி மலர்ந்தது. கூட் டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதால் ஆட்சி கவிழ்ந்திருந்தது. அந்த எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப் பட்டனர். தற்போது அவர்கள் பா.ஜனதாவில் இணைந்து இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களில் ஒசக்கோட்டை தொகு தியில் எம்.டி.பி.நாகராஜ் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். இதையடுத்து அவர், கடந்த 14-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது பெயர் மற்றும் தன்னுடைய மனைவி சாந்தகுமாரி பெயரில் உள்ள சொத்து விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார். அதில், எம்.டி.பி.நாக ராஜிக்கு ரூ.1,195 கோடி சொத்துகள் இருப்பது தெரியவந் துள்ளது.
கடந்த ஆண்டு (2018) கருநாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலின் போது தனக்கு ரூ.1,015 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதன்மூலம் கடந்த 18 மாதத்தில் எம்.டி.பி.நாகராஜின் சொத்து மதிப்பு ரூ.180 கோடி உயர்ந்துள்ளது. குறிப்பாக கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின்பு கடந்த ஆகஸ்டு மாதம் 2-ஆம் தேதியில் இருந்து 7-ஆம் தேதி வரை மட்டும் எம்.டி.பி.நாகராஜிக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் ரூ.48 கோடியே 76 லட்சம் வைப்புச் செய்யப்பட்டுள் ளது. எம்.டி.பி.நாகராஜ், அவரது மனைவி பெயரில் மொத்தம் 193 வங்கி கணக்குகள் இருப்பதாக வேட்பு மனு தாக்கலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் தனக்கு ரூ.29 கோடியே 90 லட்சம் கடன் இருப்பதாகவும், தனது மனைவிக்கு ரூ.1 கோடியே 57 லட்சம் கடன் கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எம்.டி.பி.நாகராஜிடம் விலை உயர்ந்த பல சொகுசு கார்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எம்.டி.பி. நாகராஜிக்கு தான் அதிக சொத்துகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். எம்.டி.பி.நாகராஜ் முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசில் அமைச்சராக பதவி வகித்தவர்.

சென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகள் உயர்வு


பன்னாட்டு சந்தை யில் கச்சா எண் ணெய் விலைக் கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப் படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தி யாவில் உள்ள எண்ணெய் நிறுவனங் களுக்கு மத்திய அரசு அனுமதி வழங் கியது.
இதன்படி, சென்னையில் பெட் ரோல் விலை நேற்று லிட்டர் ஒன்றுக்கு முந்தைய நாள் விலையை விட 13 காசுகள் உயர்ந்து ரூ.76.81க்கும், டீசல் விலை 6ஆவது நாளாக எந்தவித மாற்றமின்றி ரூ.69.54க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென் னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 16 காசுகள் உயர்ந்து ரூ.76.97க்கும், டீசல் விலை 7வது நாளாக எந்தவித மாற்றமின்றி ரூ.69.54க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உ.பி.யில் பா.ஜ.க. இந்துத்துவா ஆட்சியின் ஆணவப்போக்கு! பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். கொடியை அகற்றிய பெண் அதிகாரிமீது வழக்குப்பதிவாம்

மத உணர் வுகளை அவமதித்ததாக கிரண் தாம்லே மீது உத்தரப்பிரதேச காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். கொடியை அகற்றிய காரணத்திற்காக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத் தின் மூத்த அதிகாரியை கட்டா யமாக பதவி விலக வைத்ததோடு, அவர் மீது உத்தரப்பிரதேச காவல்துறையினர் மத உணர்வு களை அவமதித்ததாக வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
மிர்சாபூரில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகமான பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் துணை தலைமைத் தலைவராக இருந்து வருபவர் கிரண் தாம்லே. இவர்,  மாண வர்கள் மத்தியில் மைதானத்தில் இருந்த ஆர்எஸ்எஸ் கொடியை அகற்றியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தாம்லேவை பதவி நீக்கம் செய்யக்கோரி மாண வர்களில் ஒரு பிரிவினர் வளா கத்தில் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இத்துடன் தாம்லேக்கு அளிக் கப்பட்ட தொந்தரவுகள் முடிந்து விடவில்லை. உள்ளூர் ஆர் எஸ்எஸ் பிரமுகர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தாம்லேமீது வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.
இதில் கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அதிகாரி கூறும் போது, தங்கள் பல்கலைக்கழக விதிமுறையையே தான் பின்பற் றியதாக தெரிவித்துள்ளார். முத லில் சாக்சா மாணவர்களையே அந்த கொடியை அப்புறப்படுத்தக் கோரி உத்தரவிட்டுள்ளார். ஆனால், கொடியை அப்புறப் படுத்த யாரும் முன்வராததால், தானே கொடியை அகற்றியுள் ளார். இதுபோன்ற பதற்றமான சூழலில் இப்படி கொடிகளை பறக்க விடக்கூடாது என்று மாண வர்களுக்கு அறிவுறுத்தியும் உள்ளார்.
எனினும், மாணவர்களில் ஒரு பிரிவினர் வற்புறுத்தி கொடியை வைக்க அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், வளாத்திற்குள் கொடியை வைக்க நிச்சயமாக அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தேன் என்றார்.

காஷ்மீர் பிரச்சினையை பன்னாட்டு மயமாக்குவது

அய்ரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் காஷ்மீர் வருகைக்குப் பிறகு,

நடுநிலைப் பேச்சுக்கான அழைப்பை இந்தியா நிராகரிப்பது முரண்பட்டதாக ஆகிவிட்டது
கரன் தாபர்
அய்ரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் காஷ்மீருக்கு வந்து விட்டுப் போன பிறகு, அதனால் செய்யப்பட்ட சாதனை என்ன என்பதை மதிப்பிடுவ தற்கான நேரமிது. அய்ரோப்பிய நாடாளுமன்றத்தில்  இந்தியாவைப் பற்றிய பேசப்படுவதை மாற்ற முயன்ற ஒரு புத்திசாலித்தனமான ஒரு செயல்பாடா அல்லது பல இந்தியர் முகங்களின் மீது வீசப்பட்ட அழுகிப்போன முட்டையா அது? அதன் பல்வேறுபட்ட ஆனால் முக்கி யத்துவம் வாய்ந்த பகுதிகளை பகுத்தாய்வு செய்வதன் மூலம் இதற்கான விடையை இப்போது நாம் காண்போம்.
சிறுபான்மைக் குரல்கள்
முதலாவதாக 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வந்தனர் என்பது. 4 பேர் வருவதை தவிர்த்து விட்டனர். டில்லியில் உள்ள அய்ரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகம் தெளிவாகத் தெரிவித்துள்ளபடி இந்த 23 பேரும் தங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் காஷ்மீருக்கு வருகை தந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தேசியப் பேரணி, ஜெர்மனி நாட்டின் ஜெர்மனிக்கான மாற்று இயக்கம், இங்கிலாந்து நாட்டின் பிரிஎக்சிட், இத்தாலி நாட்டின் போஃர்சா இத்தாலியா, போலந்து நாட்டின் சட்டம் மற்றும் நீதிக் கட்சி போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். முஸ்லிம்களுக்கு எதிரான என்ற பொருள் படும்  மக்கள் புலம் பெயர்வதற்கு எதிர்ப்பான நிலையைக் கொண்ட தீவிர வலதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் என்பதுடன், அதே அளவு முக்கியத்துவம் கொண்டதாக அந்த நாடுகளின் முக்கிய அரசியல் தேசிய நீரோட்டத்தைப் பிரதிபலிக்கும் கட்சிகள் அல்ல அவை என்றும் கூறலாம். அவர்களின் குரல்கள் சிறுபான்மைக் குரல்களே ஆகும்.
என்றாலும், காவல்துறையினரோ, ராணுவத்தினரோ இல்லாமல் சாதாரண மக்களைத் தான் சந்திக்க விரும்புவ தாக இங்கிலாந்து நாட்டு லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகிய கிறிஸ் டேவிஸ் கூறியதால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என்று கூறுகிறார். "மோடி அரசுக்காக ஒரு பொதுமக்கள் தொடர்பு பற்றிய கழைக் கூத்தில் பங்கேற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை" என்று அவர் கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் மற்றொரு அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பின ரான தெரசா கிரிபின் என்பவரும் கூட இதைப் போன்றே தனது சுட்டுரையில் செய்தி வெளியிட்டுள்ளார்.  மெல் லியதாக மறைக்கப்பட்ட இந்திய அரசின் இத்தகைய பொதுமக்கள் தொடர்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருப்பதற்கு இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் கொண்டவர்களாக இருந்தனர் என்று இந்த முரண்பட்ட குரல்கள் தெரிவிக்கின்றனவா?
இந்த நிகழ்ச்சி பற்றி கவலை அளிக்கும் இரண்டாவது விஷயம் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களைப் பற்றியது. ப்ரூசல்சைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்ற மடிசர்மா என்ற பெண்மணியால் ஏற்பாடுசெய்யப்பட்டது இந்த நிகழ்ச்சி. பெண்களின் பொருளாதாரம் மற்றும் சமூக சிந்தனை மய்யம் என்ற அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். அவர் இந்த அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுத்துள்ள அழைப் பில், காஷ்மீருக்கு வருகை தருவதற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசுவதற்கும் அழைப்பு விடுப் பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,  "முடிவுகள் எடுக்கப்படுவதில் செல்வாக்கு பெற்றுள்ள அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க இந்திய பிரதமர் விருப்பம் கொண்டுள்ளதாக" அவர் அந்த அழைப்பில் குறிப்பிட்டுள்ளார். இதில் இருந்து,  இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக நேரடியாகவோ மறைமுக மாகவோ பிரதமர் மோடியுடன் ஏதாவது ஒரு மாதிரியான தொடர்பு அவருக்கு இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறதா? இந்த மூன்று நாள் வருகைக்கான, பயண மற்றும் தங்கும் வசதிகளுக்கான செலவு முழுவதும், இதுவரை அதிகமாக அறியப்படா மலிருக்கும் டில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட, அணி சேராமை பற்றிய ஆய்வு மய்யத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டது என்று நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வு மய்யத்திற்குள் சாதாரணமாக எவரும் சென்றுவிட இயலாத அளவில் அதன் கதவுகள் காரண விளக்கம் தர இயலாத வண்ணம் பூட்டி வைக்கப் பட்டுள்ளன. மடி சர்மா  பிரதமர் மோடியிடம் இந்த அளவுக்கு செல்வாக்கை எவ்வாறு பெற்றார் என்பது பற்றியும்,  அணி சேராமை பற்றிய ஆய்வு மய்யம் எங்கிருந்து தங்கள் செலவுக்கான நிதி உதவியைப் பெறுகின்றது  என்பது பற்றியும் மேற்கொண்ட கேள்வி களை இது எழுப்புகிறது.
அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் பெற்றவர் களுடன் தொடர்பு கொள்ள இயன்றவர்களாக இருந் தனர் என்பது கவலை தரும் மூன்றாவது செய்தியாகும். பிரதமர் நரேந்திர மோடி, இந்திய குடியரசு துணைத் தலைவர், வெங்கைய நாயுடு ஆகியோரை சந்தித்துப் பேசிய அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோவாலுடன் மதிய உணவும், அயல்துறை அமைச்சருடன் இரவு உணவும் உண்டிருக்கின்றனர். காஷ்மீரில் அவர்கள் ஆளுநரையும், 15 ஆவது ராணுவப் படைப் பிரிவின் தலைமை தளபதி யையும், காஷ்மீர் அரசின் தலைமைச் செயலரையும் சந்தித்துப் பேசியும் உள்ளனர். இவற்றின் மூலம் இந்திய அரசு ஏதோ ஒரு தவறான வழியில் சென்று செயல்பட்டி ருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. மடிசர்மாவும், அணி சேராமை பற்றிய ஆய்வு மய்யமும் மோடி அரசின் முகவர்கள் என்பதைக் குறிப்ப தாக இருப்பதா அது?
நான்காவது கவலை தரும் விஷயம், காஷ்மீரில் அவர்கள் சந்தித்த மக்கள் மற்றும் சந்திக்க அனுமதிக்கப் படாத மக்கள் பற்றிய செய்திதான். வர்த்தகர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாணவர்கள், முன்னாள் ராணுவத் தினர், ஒரு பெண்கள் குழு, ஒரு சில சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட 15 குழுக்களை அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். என்றாலும், அம்மாநி லத்தின் மாநில வணிக மற்றும் தொழில் அமைப்பின் அதிகாரிகளையோ, படகுவீட்டு உரிமையாளர்களையோ அல்லது உயர் அரசியல் தலைவர்களையோ அவர்கள் சந்திக்கவில்லை.
கட்டுப்பாடுகள் கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு
அவர்களது பேச்சு வார்த்தைகள் மிகுந்த கவனத் துடன் கண்காணிக்கப்பட்டதாக ஒரு அறிவிப்பானது தெரிவிக்கிறது. "காஷ்மீரின் சிறப்பு நிலை நீக்கப்பட் டதைப் பற்றியும்,  தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்கு முறையால் ஏற்பட்ட பெருத்த வணிக இழப்புகள் பற்றியும் ஒரு வியாபாரிகள் குழு பிரச்சினை எழுப்பிய போது, அதில் குறுக்கிட்ட உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் பேச்சு வார்த் தைகளின் தலைப்பை மாற்றும்படி செய் தார்கள்" என்று 'எகனாமிக்ஸ் டைம்ஸ்' நாளிதழ் கூறு கிறது. சிறீநகருக்கும், பள்ளத்தாக்குக்கும் அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வருகை தந்தபோது, இதே போலத்தான் நடந்தது. ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு நடந்தேறிய மிகமிக மோசமான தீவிர வாதத் தாக்குதலில் குல்கம் என்ற இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 5 தொழிலாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் அறிக்கைப்படி, பெருமளவில் கல்லெறிதல் சிறீநகரில் நடைபெற்றது என்றும், தீவிரமான மோதல்கள் ஏற்பட் டன என்றும்,  பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வெடித்தனர் என்றும் தெரியவருகிறது. போராளிகள் சில தனியார் வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர் என்றும் அறிக்கைகள் தெரிவிப்பதாக அந்த செய்தியிதழ் தெரிவித்துள்ளது. முடிவில் அனைத்து கடைகளும் வியாபார நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டன. வருகை தந்திருக்கும் அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு,  இதுதான் காஷ்மீரில்  சகஜநிலை  திரும்பி விட்டது என்பதைப் பார்த்ததின்  அடையாளமா? காஷ் மீரில் நீங்கள் எதை எதிர்பார்க்க இயலும் என்று அவர் களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இதனையே கூறியிருக்கக்கூடும்.
தணிக்கை செய்யப்பட்டவைகளையே தாங்கள் காணச் செய்யப்பட்டதாக குறைந்தது அந்தக் குழுவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹெர்மன் டெர்ச் மற்றும் ஜேம்ஸ் ஹீப்பி ஒப்புக் கொண்டுள்ளனர். சில மக்களை விட்டு தாங்கள் தூரமாக வைக்கப்பட்டனர் என்று அவர்கள் கூறினர். ஜெர்மனி நாட்டு உறுப்பினர் பெர்னார்டு ஜிம்நோக் என்பவர், "இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் விரும்பினால் நடுநிலைப் பேச்சு வார்த்தை நடத்திட நான் விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். இவை யெல்லாற்றையும்தானா நரேந்திர மோடி எதிர்பார்த்தார்?
மிகுந்த கவனத்துடனும், கட்டுப்பாட்டுடனும் வருகை யின் இறுதி நாளன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  பத்திரிகையாளர் சந்திப்புக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட சில பத்திரிகையாளர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர் என்பதுடன் குழுவிடம் எத்தகைய கேள்வி களை மட்டுமே கேட்கவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டி ருந்தது. அவர்களது வருகை தோற்று வித்த முரண்பாடு களைப் பற்றி ஆழ்ந்த ஒரு மவுனத்தையே குழு உறுப் பினர்கள் கடைபிடித்தனர். உண்மைகளையும், தகவல் களையும் பெறுவதற்காகவே தாங்கள் வந்ததாகவும், இந்திய அரசியலில் தாங்கள் தலையிட வரவில்லை என்றும், எப்படியிருந்தாலும் தீவிரவாதம் என்பது ஒரு பொதுவான பிரச்சினையே என்றும் அவர்கள் கூறினர். காஷ்மீரில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களுக்கு தீவிரவாதத்தின் பாதிப்பு என்ற அளவிலேயே அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர் என்பதை சுட்டிக் காட்டுவதாக அது இருக்கிறதா? தனது செயல்பாடுகளை நியாயப் படுத்துவதற்கு அரசு தரப்பில் செய்ய இயன்றது என்னவோ அவ்வளவுதான். அரசமைப்புச் சட்ட மாற்றங்களைப் பற்றி காஷ்மீர் மக்களில் பெரும்பாலானோர்  மகிழ்ச்சி அடைந் துள்ளனர் என்ற அரசின் நிலைப்பாட்டை இக்குழுவினர் ஏற்றுக் கொண்டார்களா என்பது நமக்கும் தெரியாது. என்றாலும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி அவர் களில் சிலர் வெளிப்படையாக மோடி அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதைக் கேட்கத்தான் மோடி அரசு விரும்புகிறதா?
மேற்கத்திய நாட்டு அரசுகளுக்கும் ஊடகங்களுக்கும் கவலைப்படுவதற்கு ஒரு காரணமாக உள்ள மனித உரிமை மீறல்கள் பற்றிய முக்கியமான பிரச்சினையில், இந்த அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு எத்தகையகண்ணோட்டத்தைப் பெற்றுச் சென்றுள்ளனர் என்பதையும் நாம் அறியோம். "ரவை மற்றும் ரப்பர் குண்டுகளைப் போட்டு வெடிக்கும் துப்பாக்கிகளை பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் பயன் படுத்துகின்றனர் என்பது பற்றி பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குடிமக்களில் குறைந்தது ஆறு பேராவது கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற உறுதி செய்யப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மக்கள் சித்தரவதை செய்யப்படுவது, இழிவாக நடத்தப்படுவது பற்றி பல குற்றச்சாட்டுகள் பெறப்பட்டுள்ளன"  என்று அய்ரோப் பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்த நாளில் அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழு கூறியிருப்பது பற்றி அவர்கள் மறுக்க முடியுமா?
இறுதியாக,  உள்நாட்டு நலன் சார்ந்த மிகப் பெரிய செய்தி ஒன்று உள்ளது. காஷ்மீருக்கு வருகை தர விரும்பும் எவர் ஒருவரையும் வரவேற்க வேண்டிய ஜனநாயக நாடான இந்தியா இருக்கும்போது, இந்த  அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை இந்திய அரசின் விருப்பத்திற்கு மாறாக  காஷ்மீர் பிரச்சினையை பன்னாட்டு மயமானதாக ஆக்கிவிட்டதா?  அக்குழுவில் இருந்த நிகோலஸ் பெஸ்ட் என்ற உறுப்பினர், இந்திய நாட்டு எதிர்கட்சித் தலைவர்கள் காஷ்மீருக்கு வருவதை அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
எனவே, இப்போது, தங்களது அரசியல்வாதிகள் கூறுவதை இந்தியா குறைந் தபட்சம் வரவேற்கவாவது செய்கிறதா என்று அய் ரோப்பிய ஒன்றிய அயல்துறை அரசு கேட்குமேயானால், நமது பதில் என்னவாக இருக்க முடியும்? இக்குழுவின் வருகைக்குப் பிறகு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் காஷ்மீருக்கு செல்வதை அனுமதிப்பதில்லை என்ற நமது வழக்கமான பல்லவி முரண்பட்டதாகவோ அல்லது நிகழ்ச்சிகளால் பின்னுக்குத் தள்ளப்பட்ட தாகாவோ ஆகிவிடவில்லையா?
நன்றி: இந்து 31-10-2019

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Sunday, November 17, 2019

உலகப் பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தின் நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதல் இடத்தை பிடித்தார். 25 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் தொடங் கப்பட்டு இன்று பெரும் நிறு வனமாக உருவெடுத்துள்ளது.  ப்ளூம்பர்க் பெரும் பணக் காரர் பட்டியலில் 54 வய தாகும் அமேசான் நிறுவன ரான பெசோஸ், உலகின் 2ஆம் பெரும் பணக்காரர் ஆவார். கடந்த ஆண்டு முதல் உலகப் பணக்காரர்கள் பட் டியலில் அமேசான் நிறுவனத் தின் சிஇஒ ஜெஃப் பெசோஸ்  முதலிடத்தில் இருந்து வந் தார்.
இந்நிலையில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பங்கு கள் மதிப்பு உயர்ந்ததால் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத் திற்கு சென்றார். அமேசான் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ததால், தனது சொத்து களில்  கணிசமான பகுதியை அவருக்கு வாழ்வாதாரமாக வழங்கினார். இதன் காரண மாகவும் அவரது சொத்து மதிப்பு குறைந்து உலக பணக் காரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு இறங்க நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனைக்கு! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறு வனங்கள் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது:
நாட்டில் நிலவி வரும் பொரு ளாதார மந்த நிலையை சீரமைக்க மத்திய அரசு உரிய நேரத்தில் நட வடிக்கைகள் மேற்கொண்டு வருகி றது.
இந்த ஆண்டில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக நடவடிக்கை களை தொடங்கி இருக்கிறோம். அது பலன் தரும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்படி, இழப்பில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய இரு நிறுவனங்களை விற்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இப்போது அதை வாங்க முதலீட்டா ளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடப்பு நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி. வரி வசூலில் முன்னேற்றம் காணப் படும். விழாக் காலத்தை முன் னிட்டு வங்கிகள் மூலமாக ரூ.1.8 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டது வாடிக் கையாளர்களின் நம்பிக்கையை அதி கரித்து இருக்கிறது என்று கூறினார்.
ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், பி.எஸ்.என்.எல். போன்றவற்றை தனியாரிடம் விடும் பணி வேகமாக நடந்துகொண்டு இருக்கிறது என்று அனைவரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டு இருக்கும் போது வெளிப்படையாக விற்பனைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்களில் கழிவுநீர், நெகிழிக் கழிவுகளை கொட்டக்கூடாது


கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் கழிவுநீர் மற்றும் நெகிழிக் கழிவுகளை பொது மக்கள் கொட்டக்கூடாது என வருவாய் நிர்வாக ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடையாறு திரு.வி.க.பாலம் அருகே நடந்துவரும் இந்த பணிகளை தமிழக முதன்மைச்செயலாளரும், வருவாய் நிர் வாக ஆணையருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று அதிகாரி களுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
திருநீர்மலை பாலம் முதல் மறைமலைநகர் பாலம் வரையுள்ள அடையாறு ஆற்றை மீட்டெடுக்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மறைமலைநகர் பாலம் முதல் முகத்துவாரம் வரையுள்ள பகுதிகளில் கடலோர பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதலுடன் கடந்த அக்டோபர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அடையாறு ஆற்றை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 800 மீட்டர் வரை வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளது. மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை 5 முகத்துவாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கூடுதலாக 3 முகத்துவாரங்கள் அமைக்கப்பட உள்ளன. அடையாறு கரையோரங்களில் உள்ள 11 ஆயிரத்து 400 ஆக்கிரமிப்புகளில் இதுவரை 4 ஆயிரத்து 515 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. கோட்டூர்புரம் பாலம் முதல் திரு.வி.க. பாலம் வரை 440 மீட்டர் நீளத்துக்கான பணிகள் ரூ.14 கோடியில் நடந்து வருகிறது.
அதேபோல் கூவம் ஆற்றினை மீட்டெடுக்கும் பணியின் ஒரு பகுதியாக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் ரூ.93.57 கோடியில், பொதுப்பணித்துறையின் மூலம் பருத்திப் பட்டு பாலம் முதல் கூவம் முகத்துவாரம் வரை 27 கிலோ மீட்டர் நீளமுள்ள கூவம் ஆற்றினை தூர்வாருதல், அகலப்படுத்துதல், துணை கால்வாய் அமைத்தல், இருபுறமும் கரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்புகளாக கண்டறியப் பட்ட 16 ஆயிரத்து 598 ஆக்கிரமிப்புகளில், இதுவரை 11 ஆயிரத்து 890 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுவரை 80 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. மீதமுள்ள பணிகளை 2020ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.
பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் கழிவுநீர் மற்றும் நெகிழிக் கழிவுகளை கொட்டக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மத்திய அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவு

தீர்ப்பாயங் களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி உறவையூரி கிராமத்தில் காலணி தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவ னத்தில் பணியாற்றிய பலருக்கு கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2001-ஆம் ஆண்டு நவம்பர் வரை தொழி லாளர் வருங்கால வைப்பு நிதிக்கு தொகை செலுத்த வில்லை. இதுகுறித்து வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் தாக்கீது அனுப்பி, பணத்தை செலுத்த உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து மண்டல ஆணையரிடம் அந்நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆனால், அவர் உதவி ஆணை யரின் உத்தரவை சரி என்று கூறி உறுதி செய்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காலணி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னி லையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சம்பந் தப்பட்ட தொழிலாளர்கள் பயிற்சியாளர்கள்தான், அவர்கள் ஊழியர்கள் இல்லை என்று வாதிட்டார். இதை யடுத்து, ஊழியர்களுக்கு வருங் கால வைப்பு நிதிக்கான தொகையை செலுத்த வேண்டும் என்ற மண்டல ஆணையரின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் மேல்முறை யீட்டு தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக வழக்குரைஞர்கள் வாதத்தின்போது தெரிவித் துள்ளனர். இதுகுறித்து புகார் செய்தால், தீர்ப்பாயத்தின் நீதிபதி கண்டுகொள்வது இல்லை என் றும், மாறாக கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்த வழக்கை 2020-ஆம் ஆண்டு மே மாதத்துக்கு தள்ளிவைத்து உத் தரவிட்டதாகவும் வழக்குரை ஞர்கள் கூறினர்.
இதுபோன்ற செயல்களி னால் தொழிலாளர்கள் தான் மிகுந்த சிரமத்திற்கு உள்ளா கிறார்கள். தொழிலாளர்களின் நலனுக்காகத்தான் இதுபோன்ற தீர்ப்பாயங்களே அமைக்கப் பட்டன. வழக்குகளின் விசா ரணை தாமதம் ஏற்பட்டதால், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை கால தாமதம் ஆன காலத்துக்கு வட் டியுடன் சேர்த்து வழங்க வேண் டிய நிலை வரும் என்பதால், தொழில் நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
தங்களது வழக்குகள் முடி வுக்கு வந்தாலும், அதன் பலனை அனுபவிக்க முடியாத நிலை சில தொழிலாளர்களுக்கு ஏற்படு கிறது. எனவே, தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உரிய ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறைக்கு உத்தரவிடு கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள் ளார்.

Friday, November 8, 2019

இந்திய வரலாற்றை திருத்தி எழுத வேண்டுமாம்!

- கலி.பூங்குன்றன்
இந்தியாவின் பார்வையில்  வரலாற்றை மீண்டும் திருத்தி எழுத வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை வைத்தார். 1857ஆம் ஆண்டு கிளர்ச்சியைத்தான்  முதல் சுதந்திரப் போர் என்று  வீர் சாவர்கர் அழைத்ததாகவும்  கூறினார்.
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் குப்த்வான்ஷக்-வீர்,  ஸ்கந்தகுப்த விக்ரமாதித்யா குறித்து இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் களைப் பற்றி குறிப்பிட்டவர், “இந்திய வரலாற்றை இந்தியாவின் பார்வையில் ஆனால் யாரையும் குறை கூறாமல் இருந்து மீண்டும் திருத்தி எழுத வேண்டிய அவசியம் உள்ளது, என்று கூறியவர்,  “நமது நாட்டின் வரலாற்றை எழுதுவது நமது  பொறுப்பு. நாம்  எவ்வளவு காலம் பிரிட்டிஷாரைக் குறை கூறிக்கொண்டு இருக்கப் போகிறோம் என்றவர்,  இது குறித்து நாம் யாரையும் விமர் சிக்கப் போவதில்லை,  உண்மை என்ன என் பதை மட்டும் எழுதுங்கள், அது காலத்தின் சோதனையாக நிற்கும்” என்று கூறினார்.
ஆவணங்கள் இல்லாததால்  ஸ்கந்தகுப்த விக்ரமாதித்யாவின் பங்களிப்புகள் மற்றும் வீரம் குறித்து இன்றைய தலைமுறை அறிந் திருக்கவில்லை என்று ஷா வருத்தம் தெரி வித்தவர், வீர் சாவர்க்கர் இல்லாதிருந்தால், 1857 இல் நடந்த முதல் சுதந்திரப் போர் ஒரு கிளர்ச்சியாக கருதப்பட்டிருக்கும் என்றார்.
அப்போது, வீர் சாவர்க்கர்  இல்லாதிருந் தால், 1857 கிராந்தி (போர்) வரலாறாக மாறி யிருக்காது,  என்றவர்,  “1857 கிராந்திக்கு ‘முதல் சுதந்திரப் போர்’ என்ற பெயரைக் கொடுத்தது சாவர்க்கர் தான், இல்லை யெனில், எங்கள் குழந்தைகள் இதை ஒரு கிளர்ச்சியாக அறிந்திருப்பார்கள்,” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து நாட்டின்  எதிர்காலம் குறித்து பேசியவர்,  இந்தியாவுக்கு உலக நாடுகளி டையே மீண்டும் மீண்டும் மரியாதை பெறச் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டும் வாய்ப்பு தனக்குக் கிட்டியதாக வும், பாஜக ஆட்சியில்தான், இந்திய நாட்டின்  மீதான  மரியாதை அதிகரித்துள்ளது. உலகம் அனைத்தும் இந்தியா மீது  கவனம் செலுத்துகிறது. பன்னாட்டு முன்னேற்றங்கள் குறித்து நமது பிரதமர் பேசும்போது உலகம் கேட்கிறது”.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.
சாவர்க்கரை வரலாற்று மாந்தராக சித் தரிப்பதில் சங்பரிவார்கள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.
காந்தியார் கொலைக்கு மூல வித்தும் ‘மூளை தானமும்‘ செய்தவர் தான் இந்த சாவர்க்கர். சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தண்டனையிலிருந்து தப்பிப் பிழைத்தவரே தவிர நிரபராதியல்ல.
பெயரில் முன்னொட்டாக வீர என்று இருக்கிறதே தவிர உண்மையில் ‘முதல் மதிப்பெண் பெறத் தகுதி வாய்ந்த’ கோழைத் தனமான ஆசாமிதான் இந்த ஆசாமி.
அந்தமான் சிறையிலிருந்து வெள்ளைக் கார அரசுக்கு அவர் எழுதிய மன்னிப்புக் கடிதம் பகிரங்கமாக அவரின் கோழைத் தனத்துக்குக் கோட்டை வாசற்படியாகும்.
கடவுள் நம்பிக்கையற்றவராகக் கருதப் பட்டாலும் இந்து மத வெறியில் புடம்போட்டு எடுக்கப்பட்டவர். ‘இந்துத்துவா’ என்பதை அறிமுகப்படுத்தியவர் என்ற வகையில் பிஜேபியினரும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களும் இவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கரகாட்டம் ஆடுவார் கள்.
நாடாளுமன்றத்தில் இவர் படத்தை வைத்தாகிவிட்டது. காந்தியின் படத்துக்கு எதிர் வரிசையில் - படுகொலை செய்யப் பட்ட காந்தியாரும், அவர் படுகொலைக்குக் காரணகர்த்தாவாக இருந்த சாவர்க்கரும் ஒரே மண்டபத்தில்! இந்த மானங்கெட்டத் தனம் இந்தப் பாரத ‘புண்ணிய பூமி‘யில்தான் நடக்க முடியும் - வெட்கக்கேடு!
இந்திய வரலாற்றைத் திருத்தி திரும்ப எழுத வேண்டும் என்று திருவாய் மலர்ந் தருளியிருப்பவர் இந்தியாவின் உள்துறை அமைச்சர்.
ஏதோ அமித்ஷாதான் இப்படி சொல்லு கிறார் என்று எண்ணிவிட வேண்டாம். வரலாற்றை ஏற்கெனவே திருத்தி எழுதும் திருப்பணியைத் தொடங்கியவர்கள்தான் இவர்கள். வாஜ்பேயி பிரதமராக வந்த போதே இந்தத் திருகு தாளத்திற்குப் பந்தக் கால் நட்டுவிட்டனர்.
இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் (Indian Council For Historical Research) முற்றிலும் காவிக் கழகமாக மாற்றி அமைக் கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை கொண்ட 18 பேர் புதிதாக நியமிக்கப்பட்டார்கள். அவர்களுள் கே.எஸ்.லால், பி.பி.லால், பி.பி. சின்ஹா ஆகியோர் பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன் ராமன் கோயில் இருந்தது என்று சரித்திரம் சொன்னவர்கள்.
I. “பேராசிரியர் சுமித் சர்க்கார், பேராசிரி யர் கே.எம். பணிக்கர், உறுப்பினர் செயலா ளர் டி.கே.வி. சுப்பிரமணியம் உள்ளிட்ட 12 புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திலிருந்து (I.C.H.R.) வெளியேற்றப்பட்டார்கள். பாபர் மசூதியை இடிப்பதற்காகப் பிரச்சாரத் தில் ஈடுபட்டு கெட்ட பெயர் எடுத்த - வரலாற்றாளர் என்று கூறிக் கொள்ள வரலாற்றுத் தளத்தில் எத்தகைய தகுதியும் இல்லாதவர்கள் இந்தப் பொறுப்புக்களில் நியமிக்கப்படத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கள். பாபர் மசூதி இருந்த பகுதியில் இராமர் கோயில் இருந்தது எனப் பொய்யான ஆதாரத்தைத் தந்த வரலாற்றாளரான பி.ஆர்.குரோவர் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
II. இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக் கழகத்தின் தலைவராக (I.C.S.S.R.) பா.ஜ.க.வின் முன்னாள் டில்லி நாடாளுமன்ற உறுப்பினர் எம். சோந்தி நியமிக்கப்பட்டு உள்ளார்.
III. வரலாற்றிலும் தொல்பொருள் ஆய் விலும் பா.ஜ.க.வின் பொய்யான கண்டு பிடிப்புக்களைத் தவிடுபொடியாக்கிய புகழ் பெற்ற வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வாளரான பேராசிரியர் சுரஜ்பான் கல்வி ஆலோசனைக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ஒரு ஹிந்துத்துவா பேர் வழி அந்த நாற்காலியை அலங்கரித்தார்.
IV. கல்வி திட்டமிடும் தேசியக் குழு வின் (N.C.E.P.A.) இயக்குநரை நியமிப்ப தற்கான தேர்வுக்குழு மாற்றியமைக்கப்பட் டது  இந்தப் பதவிக்குக் காவிக் கறைபடிந்த ஒருவரை நியமிப்பதற்காக.
IV. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுவின் (N.C.E.P.A.) பேராசிரி யர்களையும், விரிவுரையாளர்களையும் தேர்வு செய்வதற்கான குழுவில் டாக்டர் கே.ஜி. ரஸ்தோகி நியமிக்கப்பட்டார். ஆர். எஸ்.எஸ்.ன் பிரச்சாரகர்களில் ஒருவரான கே.ஜி. ரஸ்தோகி 1947-இல் நடைபெற்ற மதக் கலவரத்தில் பங்கேற்றதற்கான மறைக்க முடியாத சான்றுகளை உடையவர். அவர் தனது ‘ஆப் பிடி’ (Aap biti) என்ற சுயசரிதையில் தனது சொந்த வார்த்தை களில் “அந்த இடத்தில் ஒரு விநோதமான நிகழ்ச்சி நடந்தது. தாக்குவதற்காகச் சென்ற வர்கள் (இந்துக்கள்) கொலை நடந்த வீட்டில் காணப்பட்ட ஒரு அழகான பெண் (முஸ்லீம் பெண்) தொடர்பாகத் தங்களுக்குள்ளேயே ஒருவரோடு ஒருவர் சண்டையிடத் துவங் கினார்கள். தாக்கச் சென்றவர்கள் தங்கள் நோக்கத்தை மறந்து அப்பெண்ணை உரிமை கொண்டாடப் போட்டியிட்டார்கள். நான் அவர்களை மிரட்டினேன். பின் மனதுக்குள் ஒரு தீர்வு வந்தது. நான் அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் தூக்குமரத்தில் தொங்கவிடப்பட வில்லை. சிறையில்கூட அடைக்கப்பட வில்லை. ஆனால், இந்த நாட்டின் முதன் மையான கல்வி நிறுவனத்தில் கல்வியாளர் களைத் தேர்வு செய்யும் குழுவில் நியமிக் கப்பட்டார். இவர் யாரைத் தேர்ந்தெடுப் பார்? கொந்தளிப்பான அந்த நாட்களில் தம்மைப் போலவே வளர்ந்தவர் களையோ, அல்லது தனது இணைபிரியா நண்பர் களையோ தேர்வு செய்வதுதானே அவரது முன்னுரிமையாக இருக்கும்?
VI. இந்துத்துவா என்பது ஒரு மதம் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை என்று விளக்கமளித்த ஒரு தீர்ப்பின் மூலம் பா.ஜ. க.வின் மதச்சார்பு நிலைக்குச் சட்டபூர்வ அங்கீகாரம் அளித்ததாகக் கூறப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மாவின் தலைமையில் பாடத் திட் டத்தை மறுபரிசீலனை செய்யும் குழுவை மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அமைத்துள்ளது. (அவர் கூற்று திரிக்கப் பட்டது என்பது வேறு செய்தி)
VII. நாட்டின் உயர் கல்வியைச் சீரமைக் கப் பல்கலைக் கழக மான்யக் குழுவின் செயலாளராக பா.ஜ.க. தொடர்புடைய ஹரிகவுதம் என்பவர் நியமிக்கப்பட்டார்.
‘ஸ்டேட்ஸ்மென்’ (6.11.99) ஏட்டின் தலையங்கம்.
ரஸ்தோகியின் நியமனக் காலம் முடிவ தற்குள் இந்திய வரலாறு முற்றிலும் மாற்றி எழுதப்படும். இந்துக்கள் தேசப் பக்தர்கள் எனவும் அனைத்து சிறுபான்மையினரும் மதவாத ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், நாட்டின் அனைத்துக் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கப்படும்” என்று “ஸ்டேட்ஸ் மென்” தலைப்பில் தீட்டியுள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாசிச குரூரக் கண்ணோட்டத்தோடு பாடத் திட்டங்கள் அமைக்கப் பட்டு பிஞ்சு நெஞ்சங்கள் நஞ்சுக் காடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. சரஸ்வதி, சிசுமந்திர் என்கிற பெயரிலும், வித்யாபாரதி என்கிற பெயரி லும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நாடெங்கும் கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார்கள்.
14 ஆயிரம் பள்ளிகளையும், 60 கல்லூரி களையும் நடத்தி வருகிறார்கள்; மேல் படிப்புக்கான 25 கல்வி நிறுவனங்களும் உண்டு. ஜெய்ப்பூர், அஹ்மத் நகர் ஆகிய நகரங்களில் இந்துத்துவா ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கின்றனர். 18 இலட்சம் மாணவர் கள் இவர்களின் இந்துத்துவா கோட்பாட்டுக் கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்ற னர்.
நவம்பர் 14-ஆம் நாள் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாட அரசு ஆணையிருந்தும் கோகுலாஷ்ட மியைத்தான் (கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம்) குழந்தைகள் தினமாகக் கொண் டாடுகிறார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண் டாடவேண்டும் என்பதே அரசு ஆணை. ஆனால், இவர்கள் நடத்தும் பள்ளிகளிலோ, வேதகால முனிவரான வியாசரின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகப் போற்றி வருகின்றனர். (புராண வியாசரின் பிறந்த நாளை எப்படித்தான் தேடிப் பிடித்தார் களோ?)
உத்தரப்பிரதேசத்தில் இவர்களின் சரஸ்வதி சிசுமந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்பில் இடம் பெற்றுள்ளவை:
“முலாயம் சிங் யாதவ் இக்கால இராவ ணன் என்று ஏன் அழைக்கப் படுகிறார்?”
“பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம்சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டு களால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட் டனர்?” (‘அவுட் லுக்‘ 10-5-1999)
இதுபோன்ற கேள்விகள் இடம் பெற்றால், அந்தப் பிஞ்சு உள்ளங்கள் எந்த அளவு ரத்த வெறியோடு தயாரிக்கப்பட்டு வெளியில் அனுப்பப்படும்?
கணக்குப் பாடத்தில் கூட அவர்களின் கோணல் புத்தியை விடவில்லை.
“10 கரசேவர்கள் சேர்ந்து பாபர் மசூதியை இடித்தால் இத்தனை நாளாகும்? 20 கரசேவர்கள் இடித்தால் எத்தனை நாளாகும்?” இதுதான் கணக்குப் பாடமாம்.
யூதர்கள் மீது வெறியைக் கிளப்புவதற்கு அடால்ப் ஹிட்லர் இந்த முறையைத்தான் பின்பற்றினார். யூதர் பெற்ற இலாபம் எவ்வளவு என்பதற்குப் பதிலாக யூதன் அடித்த கொள்ளை எவ்வளவு என்று கேட் கப்பட்டிருக்கும். பாசிஸ்டுகளும், நாஜிக ளும் கையாளும் அதே பாணியைத்தான் இந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சங்பரிவார் பாசிஸ்டுகளும் பின்பற்றி வருவதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
இயேசுநாதர் இமயமலைக்கு வந்து இந்து சாமியார்களிடம் உபதேசம் பெற்று தான் பைபிள் எழுதினாராம்; மெக்காவில் பச்சை துணி போட்டு மூடப்பட்டு இருப்பது சிவலிங்கம்தான் என்றும் பாடப் புத்தகத்தில் எழுதி வைத்துள்ளார்கள். கிருஷ்ணன் கடவுளிடத்திலிருந்துதான் கிறிஸ்து வந்தார் என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறவில் லையா?
இந்திய வரலாறு தலைமுறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (Bomb Factories) மாற்றப் பட்டு விட்டது பா.ஜ.க. ஆட்சியில் என் கிறார்கள், - ‘ஃபிரண்ட் லைன்’ ஏட்டின் கட்டுரையாளர்கள் பார்வதி மேனன் அவர் களும் டி.கே. இராஜலட்சுமி அவர்களும்.
பாடத் திட்டங்களை ஆய்வு செய்வதற் கென்றே உள்ள அரசு அமைப்பு தேசிய கல்வி மற்றும் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் (National Council for Educational Training and Research) என்ப தாகும்.
பா.ஜ.க. பள்ளிகளில் நடத்தும் பாடத் திட்டங்களைப் பற்றி ஆய்வு செய்த குழு தெரிவித்துள்ள கருத்து மனித மனசாட்சி யைத் தட்டி எழுப்பக் கூடியதாகும்.
“இத்தகைய கருத்துகளைக் கொண்ட நூல்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படுமேயானால், நம் நாட்டின் எதிர்காலம் சீர்குலைந்துவிடும்; நாடு பேரழி வைச் சந்திக்க நேரிடும்” என்று எச்சரித் துள்ளது.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கல்வித் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் இந்தத் தன்மைபற்றி ஃபிரண்ட். லைன்’ ஏடு (2011-1998) இவ்வாறு கூறுகிறது.
“இந்த வரலாற்றுத் தவறுகள் ஒரு பக்கம் சார்ந்த பொய்கள், மாச்சர்யங்கள் காலத் தால் உண்மைக்குப் புறம்பானவை என எடுத்து வீசப்பட்டவை, கோட்பாடுகள், கற்பனைகள் இவையெல்லாம் அப்படியே விட்டு வைக்கப் படவில்லை. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இவை அவ்வப்போது அதிகப் பொய்களைக் கொண்டு வலுவூட்டப்படுகின்றன’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா ஏதோ இப்பொழுதுதான் இந்தப் பார்ப்பனீய வெறித்தனத்தை அரங்கேற்றுவதாகக் கருதக் கூடாது.
1992-இல் உ.பி.யில் ஆட்சியில் இருக் கும்போதே திட்டமிட்டுக் கல்வித் துறை யைக் காவி மயமாக்கியது.
50 வரலாற்றுப் பேராசிரியர்கள் அப் பொழுதே அதனைக் கண்டித்துக் கருத்துத் தெரிவித்தனர்.
“பாபரின் தளபதி மீர்பாசி. அவன் அயோத்தியிலும், அதேரியிலும் இருந்த இந்துக் கோயில்களை இடித்துத் தரைமட்ட மாக்கிவிட்டு அந்த இடங்களில் மசூதியைக் கட்டினான். பாபரின் மதக் கொள்கை இதுதான்.”
“ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இந்தியாவை ஆக்கிரமித் தார்கள். இந்தியாவின் பூர்வீகக் குடிமக்களான திரா விடர்களைத் தென்பகுதிக்கு விரட்டிவிட் டார்கள் என்பது பொய். ஆரியர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிகள்.”
இவை போன்ற உண்மைக்கு மாறான வற்றை பொய்யென்று தெரிந்தே உ.பி. பா.ஜ.க. அரசு 1992 ஆம் ஆண்டிலேயே பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாடங்களாக வைத்திருந்தன.
இவற்றைக் கண்டித்து ஜவகர்லால் நேரு, ஜமியாமிலியா மற்றும் டில்லி பல் கலைக் கழகங்களைச் சேர்ந்த 50 வரலாற் றுப் பேராசிரியர்கள் கூட்டறிக்கை விடுத் தனர்.
மத்திய பிரதேசத்திலும் பா.ஜ.க. அரசு இதே பாணியைத் தான் பின்பற்றியது.
எதிர்ப்புக் குரல் கிளம்பிய நேரத்தில் அம்மாநிலக் கல்வி அமைச்சராக இருந்த விக்ரம் வர்மா என்ன கூறினார் தெரியுமா?
“வரலாற்றை எழுதும்போது அக்கால சமூக, பொருளாதார அமைப்புகளை அடிப்படையாகக் கொள்ளவேண்டுமே தவிர,ஆளுகிற மனிதர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அடிப்படையாகக் கொண்டு கருத்தை உருவாக்கக் கூடாது என்ற கருத்தை ஏற்க முடியாது. இந்தக் கண்ணோட்டத்தில் வரலாற்றை எழுதுவது, இந்திய வரலாற்றுக்குப் பெருமை சேர்ப்பது ஆகாது. ஒரு இந்து அரசரை மக்களுக்கு எதிராக நடந்தார் என்றோ, ஒடுக்கு முறைக்காரர் என்றோ குறை சொல்லக் கூடாது’’ என்றார்.
காந்தியாரும், அலி சகோதரர்களும் இணைந்து அறிவித்த கிலாபத் இயக்கத்தை சுதந்திரப் போராட்டம் என்று கூறுவது தவறு; அது பெருமைக்குரியதல்ல; பாகிஸ் தான் பிரிவினைக்கு வித்திட்டதே அந்தக் கிலாபத் இயக்கம்தான் என்றும் ம.பி. பா.ஜ.க. அமைச்சர் கூறினார் என்றால் - அவர்களைப் பிடித்து ஆட்டும் இந்துத்துவா வெறி, உண்மைகளைத் துடிக்கத் துடிக்கக் கழுவிலேற்றி ரத்தம் குடிக்கும் ஓநாய்த் தனமானது என்பது விளங்கவில்லையா?
வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது டில்லியில் நடந்த கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ்.சை சேர்ந்த சிட்டியங்லா (இவர் கல்வி நிபுணராம்) ஒரு கல்வித் திட்டத்தைத் தயாரித்து அம்மாநாட் டில் அளிப்பதாக ஏற்பாடு. கல்வித் திட்டம் என்பது வேறு ஒன்றுமல்ல, இந்திமயமாக் குதல், தேசியமயமாக்குதல் ஆன்மிகமய மாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். கடும் எதிர்ப் பின் காரணமாக கைவிடப்பட்டது.
(அந்த மாநாட்டில்தான் கடவுள் வாழ்த்து என்ற பெயரால் சரஸ்வதி வந் தனம் பாடப்பட்டபோது, அன்றைய தமிழக கல்வி அமைச்சர் இனமான பேராசிரியரும், வேறு சில மாநிலத்தைச் சேர்ந்த கல்வி அமைச்சர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர் என்பது இந்த இடத்தில் நினைவூட்டத்தக்கதாகும்)
அய்.சி.எச்.ஆர் (ICHR - Indian Council of His­torical Research) எனப் படும் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழ கத்தின்  தலைவரான சுதர்சன் ராவ்  ”மேற் கத்திய ஆய்வாளர்கள் வரலாற்றாய்வில் சான்றாதாரங்களை முதன்மையாக வைத்தே முடிவுக்கு வருகிறார்கள்”.
‘இந்தியா போன்ற தொன்மையான நாகரீகமும், கலாச்சாரமும் கொண்ட பகுதி யில் வாய்வழிக்கதைகளையும் தகவல்க ளையும் சான்றுகளாக கொள்வது தவிர்க்க இயலாதது”, “சனாதன வருணாசிரம தருமங் கள் இந்திய சமூகத்தில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டியது, அவரவர் கடமையை அவரவர் செய்வதே வருணா சிரம தருமமாகும், இது மதங்கள் தோன்றுவ தற்கு முன்பே இந்தியாவில் இருந்துவரு கிறது” என்றார்
2015ஆம் ஆண்டு ஜனவரியில் நடை பெற்ற இந்திய அறிவியல் பேராயத்தில் இந்திய பல்கலைக்கழகங்களின் சமஸ் கிருதத் துறை பேராசியர்களைக் கொண்ட ‘‘சமஸ்கிருதத்தின் வழி வேத அறிவியல்” என்ற அமர்வு நடைபெற்றது. அந்த அமர் வில் ‘‘வேத காலத்திலேயே விமானத் தொழில்நுட்பம் (வைமானிக சாஸ்திரம்), உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, குவாண் டம் இயற்பியல், அணு இயற்பியல் நம் மிடையே இருந்தது.
அதை அறிந்து கொள்ள நாம் அனை வரும் சமஸ்கிருத மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். மேற்கண்ட அறிவியல் அனைத்தும் இசுலாமிய படை யெடுப்பினாலும், காலனி ஆட்சியாளர் களாலும் அழிக்கப்பட்டது” என்று கூறினார்.
ஸ்டெம் செல் கண்டுபிடித்தது அமெ ரிக்கர்கள் அல்ல. மகாபாரதத்தில் காந்தாரிக் குக் குழந்தை பிறக்காமல் இருந்த போது, வசிஷ்டர் நூறு கவுரவர்களை ஸ்டெம் செல் முறை கொண்டு தான் உருவாக்கினார்.தொலைக்காட்சி, யோக வித்யா யோகக் கலை, விதய திருஷ்டி, ஞானக் கண் போன்ற முறைகள் நம்மிடையே இருந்தது. அதில் தான் பாரதப் போரை அஸ்தினாபுரம் அரண்மனையில் அமர்ந்து சஞ்ஜையா என்ற ஒருவன் மூலம் கண் தெரியாத திருதராஷ்டிரன் அறிந்து கொண்டார். ஆகவே, தொலைக்காட்சி என்பது நம்மி டையே முன்னரே இருந்தது. அனஸ்வரத் என்ற பெயரில் இயந்திர மோட்டார்கள் நம்மிடையே இருந்தது. புஷ்பக விமானம் என்று முன்னரே நாம் விமானங்கள் இயக்கியிருக்கிறோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை விநாயகருக்கு நாம் முன்னரே செய்திருக்கிறோம் (இதை மோடியே 25.10.2014 அன்று மும்பையின் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மருத்துவ மனை ஆராய்ச்சி மய்யத்தை திறந்து வைத்து, நாட்டின் தலைசிறந்த மருத்து வர்கள் முன்னிலையில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்)
- இவையெல்லாம் குஜராத்தின் பாடத் திட்டத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து கொண்டு இருக்கின்றது.
சுதர்சன் ராவ் ராமர், பரதர், பஞ்ச பாண்டவர்கள் வாழ்ந்த இடங்களை தொடர்ந்து ‘ஆய்வு’ செய்தவர், மகா பாரதத்தில் உள்ள அணு அறிவியல் என பல நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்களை மோடி மிகவும் விரும்பிப் படிப் பார். மோடி குஜராத் முதல்வராக இருந்த போது குஜராத் பள்ளிப் பாடத்திட்டத்தில் இவரது நூலில் உள்ள பல கதைகள் அறிவியல் பாடத்தில் சேர்க்கப்பட்டது.
இவர் அரியானாவில் உள்ள சமஸ்கி ருதப் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து ராமனின் வயதைக் கண்டுபிடித்து வெளியிட்டார். இதற்காக இவருக்கு முனைவர் பட்டத்திற்கு இணையான சிறப்பு பட்டமும் கிடைத்தது. (எப்படி இருக்கிறது!).
சுதர்சன் ராவ் பலமுறை மத்திய அரசின் ஆய்வுக்கழகம் மற்றும் தொல்லியல் துறை யில் முக்கிய பதவி கேட்டு விண்ணப்பித் திருந்தார். ஆனால் இவருக்கு தொடர்ந்து பதவிகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில் மோடி ஆட்சிப்பொறுப்பு ஏற்ற சில நாட் களில் இவருக்கு இந்திய வரலாற்று ஆராய்ச் சிக் கழகத்தின் தலைவர் பதவி வழங்கப் பட்டது அதன் பிறகு அவர் 28.6.2014-ஆம் ஆண்டு இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
சான்றுகள், ஆதாரங்கள் அடிப்படை யில் வரலாற்றை எழுதக் கூடாது. கட்டுக் கதைகளையும் வாய்வழிச் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை எழுத வேண்டும் என்று கூறுகிறார் - கூறி யும் வந்தார். இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) தலைவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா வரலாற்றை மாற்றி எழுத வேண்டும், திருத்தி எழுத வேண்டும் என்று கூறுவது எல்லாம் இவர் போன்றவர் கள் வரலாற்றுத் துறை தலைவராக இருக் கிறார்கள் என்ற தைரியத்தில்தான்!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...