அனுராத புரம் ருவன்வெலி மகா சாய பவுத்த
விகாரையில் திங்கள் கிழமை நடந்த விழாவில் ஜனாதிபதியாக பதவியேற்ற வுடன்
கோத்தபய தமது உரையில், தமிழர்களின் வாக் குகளையும் தான் எதிர்பார்த்த
போதிலும், தான் எதிர்பார்த் தளவு தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று
கூறிய அவர் இனிவரும் காலங்களிலாவது தன்னுடன் இணைந்து செயல்பட முன் வருமாறு
தமிழர்களுக்கு கோத் தபய ராஜபட்சே அழைப்பு விடுத்தார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தனது
முதலாவது திட்டம் எனவும் அவர் கூறினார். சட்டத்தின் ஆட்சியை மதிக்கிற, லஞ்ச
ஊழல் அற்ற ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார். அத்துடன்
தன்னுடன் இணைந்து செயல் பட முன்வருமாறு வெளி நாடுகளுக்கு வேண்டுகோள்
விடுத்தார்.
இலங்கையில் ஜனாதிபதி யாக கோத்தபய ராஜபக்சே
பதவியேற்றுள்ள நிலையில், ஆளும் கட்சியாக உள்ள அய்க்கிய தேசியக் கட்சி
பெரிய நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளது.
இதையடுத்து எதிர்காலத் தில் முன்னெடுக்க வேண்டிய மூன்று விஷயங்கள் தொடர் பாக சபாநாயகர் கரு ஜெய சூரிய தெளிவுபடுத்தியுள்ளார்.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி
நாடா ளுமன்றத்தைக் கலைத்து, ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை அரசியல
மைப்பின் பிரகாரம் நடத்த முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சை யாக
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி, நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத்
தேர்தல் ஒன்றை நடத்த சந்தர்ப்பத்தை வழங்க முடியும். பிரதமர் தலைமையிலான
அரசாங்கம் சுய விருப்பின் பேரில் விலகி, பொதுத் தேர்தல் ஒன்று அறி
விக்கப்படும் வரை இடைக் கால அமைச்சரவையொன்றை நடத்தி செல்ல ஜனாதிபதிக்கு
சந்தர்ப்பத்தை வழங்க வேண் டும். இந்த விஷயங்கள் குறித்து ஆராய்ந்து இந்த
வாரத் திற்குள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி தீர்மான மொன்றை எடுக்க
வேண்டும் என சபாநாயகர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment