கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி நிலவரப்படி
வேலைவாய்ப்பக பதிவுதாரர்களின் விவரங்களை மாநில அரசு வெளியிட்டது. அதன்
விவரம்: அக்டோபர் 31-ஆம் தேதியன்று நிலவரப்படி, வேலை வாய்ப்பு
அலுவலகங்களில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 67 லட்சத்து 97 ஆயிரத்து 634
ஆகும். இவர்களில், 18 வயதுக்குட்பட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 66
ஆயிரத்து 451 பேராகவும், கல்லூரி மாணவர்கள் 12 லட்சத்து 39 ஆயிரத்து 867
பேராகவும், 35 வயது வரையுள்ளவர்கள் 25 லட்சத்து 47 ரத்து 802 பேரும், 57
வயது வரையுள்ளவர்கள் 11 லட்சத்து 35 ஆயிரத்து 866 பேரும், 58 வயதுக்கு
மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 648 பேரும் என மொத்தம் 67 லட்சத்து 97 ஆயிரத்து
634 பேர் உள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து
காத்திருப் போரில் மாற்றுத் திறனாளி பதிவாளர்களும் உள்ளனர். அவர்கள், கை,
கால் குறைபாடு உடையவர்கள், பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதோரும்
அடங்குவர். அவர்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 179 பேர் இருப்பதாக அந்த
அறிவிப்பில் மாநில அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment